பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 07, 2011

தமிழ்நாட்டுக்கு தெரியாத அன்னா !

அன்னா ஹஸாரே பற்றி ஆங்கில மீடியா ஓயாமல் பேச ஆரம்பித்திருக்கிறது ஆனால் தமிழ் மீடியாவிற்கு இது எல்லாம் என்ன என்றே தெரியவில்லை. எல்லா இடத்திலும் மக்கள் எப்படி எழுச்சியுடன் இருக்கிறார்கள் என்று காண்பிக்கிறார்கள், , ஜெய்பூர், குஜராத், பெங்களூர், கேரளா, மும்பை, டெல்லி என்று வருகிறதே தவிர சென்னை மட்டும் மிஸ்ஸிங். ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் டீவி பார்த்துக்கொண்டு செல்லமே சீரியலில் எப்ப பாம் வெடிக்கும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசாங்கம் அதிகார மற்றும் ஊழல் போதையில் திளைத்துக் கிடக்கிறது, மக்கள்தான் அதனை மங்கச் செய்ய வேண்டும்", என அன்னா ஹஸாரே தனது மூன்றாவது நாள் உண்ணா விரதத்தின் போது மக்களிடையே உரையாற்றினார்.

இவரது பேச்சைக் கேட்க ஜந்தர் மந்தரில் ஆயிரக் கணக்கில் கூடியிருந்த மக்கள் இவ்வார்த்தைகளைக் கேட்டு ஆர்ப்பணித்தனர். அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக இந்தியாவெங்கும் நடக்கும் பேரணிகளில் இதற்குமுன்பு இருந்திராத வகையில் திரளான கூட்டம் கூடுகிறது. பம்பாயில் நடைபெற்ற மாணவர் பேரணியில் அனைவருமே, "நானும் ஒரு அன்னா ஹஸாரே" என்று எழுதப்பட்ட தொப்பிகளை அணிந்திருந்தனர்.
இப்பொழுது ஹஸாரே மற்றும் குழுவினரது கோரிக்கைகள் இரண்டு. அவற்றில் ஒன்று அரசாங்கம் ஊழலுக்கெதிரான கடுமையான சட்ட மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். இரண்டாவதாக, அச்சட்டவடிவை உருவாக்குபவர்கள் குழுவில் சிவில் சொசைட்டியைச் சார்ந்தவர்களும் இடம்பெற வேண்டுமென்பதாகும். இன்றைய தினம் இக்கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இக்குழுவிற்கு யார் தலைமையேற்பது என்பதில் சிக்கல் நீடிக்கிறது. சரத் பவார் மற்றும் அழகிரி ஏற்கனவே இந்த குழுவில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.நேற்று பவார் ராஜிநாமா செய்தார். என்ன காமெடி இது ?

ஹஸாரே உண்ணாவிரதம் துவங்கிய நொடி முதலிருந்தே, பிரதமர் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டு வருகிறார். இப்பொழுது அக்கோஷ்டியில் புதிதாக சோனியா காந்தி இணைந்துள்ளார். இன்று மாலை அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஹஸாரேவை உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அவருக்கு என்ன பயமோ? ஒருவேளை சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால், குவாத்ரோச்சி மாட்டிவிடுவாரோ என்ற பயமாக இருக்கலாம்.

இந்நிலையில், அமீர் கான், ஜூஹி சாவ்லா போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் ஹஸரேவைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் அரசியல்வாதிகள் முதல் நடிகர்கள் வரை அனைவருமே கப் சிப். தமிழக முதல்வரும், விழாக்களில் அவருக்கு இருபுறமும் த்வார பாலகர்கள் போல் வீற்றிருக்கும் ரஜினிகாந்த், கமலஹாஸன் வரை அனைவருமே மெளனிகளாக இருக்கிறார்கள். ஓட்டுப் போடுங்கள், வருமானவரி கட்டுங்கள் என கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரத்திற்கு வரும் இவர்கள், ஊழலுக்கெதிரான போராட்டத்திற்க்கு குரல் கொடுத்தால், எங்கே கலைஞருக்குக் கோபம் வந்து விடுமோ என்று பயப்படுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்வது?


அன்னா பற்றிய வாழ்க்கை குறிப்பு ( இன்று டைம்ஸ் நாளிதழில் தழுவி எழுதியது நன்றி: யதிராஜ் )

அவர் தம்மை ஒரு ஃபக்கீர் என்று அழைத்துக் கொள்கிறார் - எவ்வித உடமைகளோ, குடும்பமோ,வங்கியிருப்புக்களோ இல்லாத முற்றும் துறந்தவர். புனேவிலிருந்து 110 கிமீ தொலைவிலுள்ள அஹமத் நகர் மாவட்டம், ரலேகான் சித்தி கிராமத்தில் யாதவ் பாபா கோவிலையொட்டியுள்ள 10 x 10 அளவேயுள்ள ஒரு சிறிய அறையில்தான் வசிக்கிறார். கதராடை மட்டுமே உடுத்துவார்.

ஆனால் இந்த 71 வயது இளைஞர் தனது போராட்டத்தைத் துவங்கியவுடன், பம்பாய் முதல் தில்லிவரை அனைத்து தரப்பினரும் இவரைக் கூர்ந்து நோக்கத் துவங்கினர். அரசியல்வாதிகளும், இவரை விமர்சிப்பவர்களும் கூட, இவரால் மட்டுமே தேசிய அளவில் மக்களை ஒருங்கிணைத்து அரசாங்கத்தையே அசைக்க முடியும் என்று குரோதத்துடன் கூறுகின்றனர்.1975 இல் பொதுவாழ்க்கைக்கு வந்தது முதல், இவர் சமூகப் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற போராட்டங்களையும், பயணங்களையும், உண்ணா விரதங்களையும் மேற்கொண்டுள்ளார்.

மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. என்னுடைய உயிரிழப்பால் கவலைப்பட எனக்கென்று உற்றார் எவரும் இல்லை, தவிர தேச நன்மைக்காக ஏதேனும் செய்யும்பொழுது உயிர்விடுவதையே நான் பெருமையாக நினைக்கிறேன் என்கிறார் இவர். நாட்டிலுள்ள ஊழலை ஒழிக்கவும், அரசாங்க அலுவலகங்களிலுள்ள மெத்தனத்தையும், தாமதங்களையும் அறவே ஒழிக்கவும், அதிகாரிகள் நியமனங்களில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்கவும், நேர்மையான அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்தும், நாம் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தருணம் இது என்கிறார்.

அன்னா தனது தாய் லக்ஷ்மிபாயை 2002 ஆம் ஆண்டு இழந்தார். இவருக்கு திருமணமான இரு சகோதரிகளில் ஒருவர் பம்பாயிலும் மற்றொருவர் ஸங்கம்நெரிலும் இருக்கின்றனர். அன்னா ஒவ்வொருமுறையும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பொழுதும், அவர்களுக்குக் கவலைதான். ஆனால் அன்னாவோ பந்தங்களிலிருந்து எப்பொழுதும் தள்ளியே நிற்பதென்று உறுதி பூண்டுள்ளார். தமது தமக்கைகளின் வீட்டிற்கோ மற்ற உறவினர்களின் வீட்டிற்கோ செல்வதே இல்லை. ராலேகான் சித்தியில் அவருக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கும்பொழுதிலும், கடந்த நாற்பது ஆண்டுகளில் ஒருமுறை கூட அங்கு அவர் சென்றதில்லை.
அஹமத் நகர் மாவட்டத்திலுள்ள ஃபிங்கர் கிராமத்தில் 1940 ஆம் ஆண்டு ஓர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஹஸாரே. வறுமையின் காரணமாக 1952 இல் தனது பூர்வீக கிராமமான ராலேகான் சித்தியிலுள்ள தனது வீட்டிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு மக்கட்பேறில்லாத அவரது அத்தை அவரை வளர்த்ததோடு, அவரது படிப்பிற்கும் பொருளாதார ரீதியாக உதவி செய்தார். ஆனாலும் நிரந்தரமில்லாத பொருளாதாரச் சூழ்நிலைகளால் ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு பூ வியாபாரம் செய்து வந்தார்.

விரைவிலேயே ராணுவத்தில் சேர்ந்த ஹஸாரே, அங்கு ட்ரக் ஓட்டுனராகப் பயிற்சியெடுத்தார். மஹாத்மா காந்தி, ஆசார்ய விநோபா பாவே மற்றும் விவேகானந்தர் ஆகியோரது போதனைகளைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இதுதான் இவரை சமூக சிந்தனையின் போக்கில் திருப்பியது. 1965 இல் பாகிஸ்தானுடனான போரில் நிகழ்ந்த இரு துரதிருஷ்டவசமான நிகழ்வுகள், வாழ்வைப் பற்றிய இவரது எண்ணத்தையே முற்றிலுமாக மாற்றியது. பிறகு 1975 இல் ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர் தனது சொந்த கிராமமான ராலேகான் சித்திக்குத் திரும்பினார். அப்போது அக்கிராமம் வறுமை, குற்றங்கள் மற்றும் குடி போதை போன்ற அசாதாரண சமூக விரோத நடவடிக்கைகளின் பிடியில் சிக்கியிருந்தது.

தனது சேமிப்பு அனைத்தையும் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக அற்பணித்த ஹஸாரே, மக்களிடம் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டுமென பிரமாணமெடுத்துக் கொள்ளச் செய்தததோடு மட்டுமல்லாமல், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையையு வற்புறுத்தி, சிறிய குடும்பத்தின் நன்மைகளைப் பிரச்சாரம் செய்தார்.

கிராமத்தினரை சுய தொழில் புரிய தூண்டிய ஹஸாரே, மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி கால்வாய்களையும், நீர் நிலைகளையும் ஏற்படுத்தச் செய்தார். இதன் மூலம் தண்ணீர் பிரச்சனை பெருமளவில் குறைந்ததோடு மட்டுமல்லாமல், தரிசு நிலங்கள் மேம்படவும் உதவின.

இவர் செய்த சாதனைகள் மூலம், இந்திரா ப்ரியதர்ஷினி வ்ருக்ஷமித்ரா, க்ருஷி பூஷணா, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், மகஸேசே,கேர் இண்டர்நேஷனல் ஆஃப் த யூஎஸ்ஏ, ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் போன்ற விருதுகள் இவரைத் தேடி வந்து குவிந்தன. தென் கொரிய அரசாங்கம் கூட இவரது சாதனைகளுக்காக இவரைக் கவுரவித்தது.

ஆகஸ்டு 2003 இல் மஹராஷ்டிரத்தில் சில ஊழல் மந்திரிகளுக்கெதிராக இவர் நடத்திய காலவரையற்ற உண்ணா விரதத்தினால் அசைக்கப்பெற்ற மஹாராஷ்டிர அரசு அம்மந்திரிகளுக்கெதிரான ஊழல் புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். சாவந்த் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்தது. அக்கமிஷனின் விசாரணை அறிக்கை அம்மந்திரிகள் மீதான ஊழல் புகார்களை நிரூபிக்கவே, அம்மந்திரிகள் பதவி விலக நேர்ந்தது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்காகவும் இவர் போராட்டங்கள், பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார். இக்கோரிக்கையின் மீது மஹாராஷ்டிர அரசு பாராமுகமாக நடந்து கொள்ளவே, 1997 இல் பம்பாயின் ஆஸாத் மைதானத்தில் ஒரு பெரிய போராட்டத்தை நிகழ்த்தினார். பிறகு மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 2003 இல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கிய பிறகு, கடைசியாக ஜனாதிபதி தகவல் அறியும் உரிமைச்சட்ட மசோதா வடிவில் கையெழுத்திட்டார்.

இவை தவிர, மஹாராஷ்டிர கூட்டுறவு அமைப்பிலுள்ள முறைகேடுகளைக் களைவதற்காக இவர் தொடர்ச்சியாக எட்டு மாதங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக சுமார் 125 கோடி ரூபாய் நிலுவையிலிருந்த வாராக் கடன் வசூலிக்கப்பட்டது. இன்னும் சுமார் 400 கோடி ரூபாய்கள் வசூலிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


போன திங்கட்கிழமை வரை இவரைப் பற்றி பலருக்கும் (என்னையும் சேர்த்து) தெரியாமல், வடிவேலு விஜயகாந்த் தண்ணி பேச்சு பற்றி பேசிக்கொண்டு இருப்பது எவ்வளவு கேவலம் என்று நாம் சிந்திக்க வேண்டும்!


36 Comments:

Anonymous said...

தமிழக முதல்வரும், விழாக்களில் அவருக்கு இருபுறமும் த்வார பாலகர்கள் போல் வீற்றிருக்கும் ரஜினிகாந்த், கமலஹாஸன் வரை அனைவருமே மெளனிகளாக இருக்கிறார்கள். ஓட்டுப் போடுங்கள், வருமானவரி கட்டுங்கள் என கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரத்திற்கு வரும் இவர்கள், ஊழலுக்கெதிரான போராட்டத்திற்க்கு குரல் கொடுத்தால், எங்கே கலைஞருக்குக் கோபம் வந்து விடுமோ என்று பயப்படுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்வது?

This must be the manjaL comment!!

suresh said...

Koi Bhi Desh Perfect Nahi Hota,
Usse Perfect Banana Padta hai
Police mein Bharti Honge,
Military Join Karenge,
IAS Karenge,
Politics ka Hissa Banke Iss Desk ki Sarkar Chalyege,
Ye Desh Badle ga Hum Badle gaye Is Desh Ko.

No Country is Perfect, You’ve got to make it Perfect! Very much true indeed.
But if only we think Now or Never, who knows we could change atleast few of the politicians in the name of this Bill!!

http://crackedpots.co.in/?p=579

Anonymous said...

அந்த அன்னாவை கொஞ்சம் விடுங்கள்.நம் அண்ணாவின் அன்புதம்பியை பற்றி கொஞ்சம் பார்ப்போம்......


கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!

தி.மு.கழகத்துக்கு அறிஞர் அண்ணா தொடக்க விழா கண்டபோது, அவரைச் சுற்றி மெத்தப் படித்தவர்களுக்குப் பஞ்சம் இல்லை. இருப்பினும், கால ஓட்டத்தில் 'செயல் வீரர்’ என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டார் கருணாநிதி. பேச்சும் எழுத்துமே மூச்சாகக் கழகம் வளர்ந்தபோது, அதோடு சேர்த்து ஓய்ச்சல் இன்றி ஊர் ஊராகப் போய் நேரடியாகத் தொண்டர்களைப் பார்த்து தட்டிக் கொடுப்பதிலும் கூடுதல் நேரம் செலவிட்டார் கருணாநிதி.

ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்களைத் தாண்டி, அண்ணாவுக்கு அடுத்து தலைமை நாற்காலியைத் தனதாக்கிட கருணாநிதிக்குப் பக்கத் துணையாக நின்ற மூன்று தகுதிகள் - நிர்வாகத் திறமை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல்... இதோடு, சொல்லில் அஞ்சாமை!

ஐந்து முறை முதல்வர், பத்தாம் முறை தி.மு.க. தலைவர் என்று அரிய பெருமையுடன் திசை விலகாது தொடர்ந்த கருணாநிதியின் பொது வாழ்க்கைப் பயணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்ப முடியாத அளவுக்கு அலை பாய்ந்தது. 'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல!' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அவர், ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் குடும்பச் சொத்தாக மாற்றிக் காட்டியது இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில்தான்!

மதுரையில், ஒரு கும்பல் பத்திரிகை அலுவலகத்தைத் தீயில் பொசுக்கி, மூன்று அப்பாவி உயிர்களைச் சாம்பலாக்கியபோது, அந்த அராஜகக் கும்பலை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டியவர், 'சர்வே வேண்டாம் என்றேன். சொன்னால் கேட்டால்தானே?' என்று வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டிய விபரீதம் நிகழ்ந்தது. இலைமறை காயாக அதுவரை தென்பட்ட அவருடைய குடும்பப் பாசம், அந்தக் கணத்தில் இருந்துதான் அச்சமூட்டும் வகையில் சலங்கை கட்டி ஆடத் தொடங்கியது!

காவிரிக்கும், முல்லைப் பெரியாறுக்கும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் டெல்லிக்குப் போகாத கருணாநிதி... தன்னுடைய மகன், மகள், பேரனுக்குப் பதவிகள் வாங்குவதற்காக ஒரு வார காலம் தலைநகரில் முகாமிட்டுத் தடாலடிப் பேரம் பேசியபோது... இந்திய அளவில் எழுந்த எந்த விமர்சனங்களும் அவர் காதில் விழவில்லை. நினைத்ததைச் சாதித்துக்கொண்டு திரும்பியபோது, குற்ற உணர்வுக்குப் பதிலாக, வெற்றிக் களிப்பே அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது!

Anonymous said...

ஈழத் தமிழர்கள் ஈசல் கூட்டம்போல் நசுக்கிக் கொல்லப்பட்டபோது, அவர் காட்டிய மௌனமோ, 'வீழ்வது தமிழனாக இருப்பினும்... வாழ்வது நாமாக இருக்கட்டும்!' என்று சொல்லாமல் சொல்லும்படி அமைந்தது. மேடைகளில் மட்டும் இன்றி... அச்சிலும், தொலைக்காட்சியிலும், இணைய தளங்களிலும், குறுஞ்செய்திகளிலும் இந்த அளவுக்குக் கடுமையாக ஒரு தலைவர் எங்காவது விமர்சனத்துக்கு ஆளாகி இருப்பாரா? வரலாற்றின் பக்கங்களில் தேடினாலும் விடை கிடைக்காது! அந்த விமர்சனங்களின் வலியைவிட, இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு இணக்கமாகப் போவதால் கிடைக்கும் சுகம் கூடுதலாக இருந்தது. அதுவே, கேள்விகளுக்குப் பதில் தராமல் தடுத்தது!

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நோக்கி நாடே கொந்தளித்தபோது... 'தகத்தகாய கதிரவன்' எனப் பட்டம் சூட்டி கருணாநிதி உச்சி முகர்ந்த காட்சி... குடும்பப் பாசத்தோடு சேர்ந்து 'வேறு' சில நிர்பந்தங்களுக்கும் அவர் கடன்பட்டு இருப்பதாகவே காட்டியது.

முன் ஏர் கொண்ட பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டன பின் ஏர்கள். மாநில மந்திரிகள் பலர் மீதும் இந்த ஆட்சியில் அடுக்கடுக்கான அதிர்ச்சிப் புகார்கள். குடும்பப் பாசத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், வாரிசு வளர்ச்சிக்கும், கொண்டாட்டக் குதூகலத்துக்கும் தி.மு.க-வின் மந்திரிகளும் விதிவிலக்கு அல்ல.

விலைவாசி ஏற்றத்தால் தவித்துத் தள்ளாடிய மக்களுக்கு ஆரோக்கியமான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, 'இலவசங்கள் இருக்கையில் எதிர்காலம் பற்றி ஏன் கவலை' என்று மயக்க மருந்து கொடுத்தே தன் கடமையைக் கழித்துக்கொள்ளப் பார்த்தது தி.மு.க. அரசு. 'பசித்தவனுக்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக, மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம்' என்ற பொன்மொழி தமிழ்நாட்டில் வீண் மொழியாகிப் போனதுதான் மிச்சம்! 'மீனுக்கு நாங்களே மசாலாவும் தடவி, அதை உங்கள் வீட்டுக்கே தேடி வந்து ஊட்டிவிடுகிறோம்' என்று சொல்லி... அதையே தன் சாதனையாகவும் காட்டிக்கொண்டது ஆளும் அரசு!

விவசாயம் அற்றுப்போய்விட்டது... விவசாயக் கூலிகள் நம்பிக்கை இழந்து நடுவீதிக்கு வந்துவிட்டார்கள் என்ற கதறல்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, 'வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கூலி உறுதி' என்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கவர்ச்சி காட்டி- மத்திய அரசின் நற்சான்றிதழோடு - கொடுத்தது ஒரு காசு, கணக்கிலே வேறு காசு என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்க வாய்ப்பு உண்டாக்கிக் கொடுத்தது இந்த அரசின் தனி 'சாதனை'!

உழைத்துதான் பிழைப்பேன் என்று தறி நெசவையும் மற்ற ஆலைகளையும் நம்பி இருந்த தொழிலாளர்களையும் வேலையை விட்டுத் துரத்தியது மாளாத மின்வெட்டு! விவசாயம் துவங்கி, துணி சாயம் வரை இந்த மின்வெட்டால் இருண்டுபோன குடும்பங்கள் எத்தனை எத்தனை!

Anonymous said...

இல்லாதவர்களுக்கு இலவசங்களைத் தருவதில் தவறில்லை... ஆனால், விலைவாசியை உச்சத்துக்குக் கொண்டுசென்று, உழைப்பவர்களை இலவசத்தால் வெட்டியாக வீட்டுக்குள் முடக்கிவைத்து, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளை நிரப்பி, உயர்கல்வியைக் கைக்கெட்டாத உயரத்துக்குக் கொண்டுசென்று, எதிர்காலச் சந்ததியையும் சுயமாகச் சிந்திக்க முடியாத மந்த நிலையிலேயே ஆழ்த்தி வைக்கும் தந்திரத்துக்குப் பெயரா மக்கள் நலத் திட்டம்?

'உங்களுக்காகவே ஐந்து முறை முதல்வராக உழைத்தேன். ஆறாம் முறையும் உங்களை வைத்து வண்டியை இழுக்க வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசார மேடைகளில் வாக்கு கேட்கிறார் முதல்வர் கருணாநிதி. வண்டியை இழுக்க இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்தப் பயணம் தனக்கு அல்ல... பாதை போட்டுக் கொடுக்க மட்டுமே தன்னைப் பயன்படுத்திக்கொள்வார் என்பதைத் தமிழக வாக்காளன் மறந்துவிடலாமா?நன்றி: ஆனந்த விகடன்

Anonymous said...

Anna Hazare is our Second Gandhi who has started second Independence revolution to make India into a Zero corruption Clean India. We 100crore Indians BY THIS TIME MUST JOIN OUR HANDS TOGETHER TO TOTALLY DESTROY CORRUPTION IN INDIA......so that from now our great India can be dynamic,pure,clean,talented and happy India FREE FROM CANCER CALLED CORRUPTION always..........LET US GIVE ALL OUR VOICES TO JOIN ANNA HAZARE TO GET LOKPAL THE STRONG LAW AGAINST CORRUPTION .....BRING THESE WORDS IN MILLIONS BILLIONS OF INTERNET PAGES.....
JAIHIND
RJ.

Prasad P.N., Pondicherry said...

Pondicherry Joins India's fight against corruption: http://on.fb.me/dPE7GU

Anonymous said...

ஓ அப்படியா ரொம்ப சந்தோசம் ஆனால் இந்த அமீர் கான் சம்மான் கானுக்க்கெல்லாம் தமிழ்நாடு என்ற ஒன்று இந்தியாவில்தான் இருக்கிறது என்று தெரியாதா? ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினை இலங்கை தமிழர் பிரச்சினைகளெல்லாம் தமிழர்களுக்கு மட்டும்தானா? தமிழர்களின் பிரச்சினைகளுக்கு வட இந்தியாவில் இருந்து ஒரு குரல்கூட கேட்காது ஆனால் மும்பையில் தாக்குதல் என்றாலும் குஜராத்தில் நிலநடுக்கம் என்றாலும் இங்கிருந்து அனைவரும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு ஓடவேண்டும், சல்மான் கான் ஜாலியாக அசினுடன் சேர்ந்துகொண்டு இலங்கையில் டான்ஸ் ஆட வேண்டும் அப்படித்தானே?

தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் நான் அன்னா ஹஸாரே விசயத்தில் சொல்லவில்லை, அன்னா ஹஸாரே விசயத்தில் நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

வலைத்தளங்களில் செய்திகளை படிப்பவர்களுக்கு மட்டுமே அன்னா ஹஸாரே வை பற்றி கொஞ்சமாவது தெரியும் மற்றவர்களிடம் கேட்டால் யார் அது அண்ணாதுரையின் தம்பியா என்று கேட்பார்கள் அப்படி இருக்கிறது தமிழ்நாட்டு மீடியாக்கள் (நன்றி ‍சன், கலைஞர், ஜெயா, கேப்டன் டிவிகள்)

எந்த ஒரு சமுதாயம் எப்போதும் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் கேளிக்கையிலும் கேலு கூத்துகளிலும் உல்லசத்தில் மட்டுமே லயித்திருக்கிறதோ அந்த சமுதாயம் விழ்ச்சியை சந்திக்கும் தற்போதைய தமிழ் சமுதாயம் அந்த நிலையில்தான் இருக்கிறது. இதை நான் அன்ன ஹஸாரே விசயத்தில் மட்டும் சொல்லவில்லை இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது இலங்கையில் நடந்த இந்தியா இலங்கை கிரிக்கெட் மேட்சை கைதட்டி ரசித்துக்கொண்டிருததையும் சேர்த்து சொல்கிறேன்..... உடனே நீ யார் நீ யாருக்கு சப்போர்ட் தேசட்திற்கு எதிரானவனா என்றெல்லாம் கேட்காதீர்கள் நானும் பத்து வயதிலிருந்து நெஞ்சுக்கு நேராக கையை வைத்துக்கொண்டு பாரத் மாதாகீ ஜே சொன்னவன்தான் நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமே பாடியவன்தான்..... என்ன இனம் என்ன மொழி என்றெல்லாம் வேண்டாம் நமக்கு மிக அருகில் ( மும்பைதாக்குதலுக்காக நம் ரத்தம் கொதித்ததே அந்த மும்பையைவிட மிக அருகில்) பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் எரிந்து கரிக்கட்டைகளாக கிடந்த போதும் நம்மால் கிர்க்கெட்டை புறக்கணிக்க முடியவில்லையே (யார் மீது தவறு என்றெல்லாம் விவாதிக்க வேண்டாம் நம்மால் முடித்தது ஒரு புறக்கணிப்பு அதைக்கூட செய்யவில்லையே) இந்த தமிழ் சமுதாயத்திடமா அன்ன ஹசாரே பற்றி சொல்கிறீர்கள், அவர் உண்ணாவிரதம் இருந்து செத்தால்கூட டிவி சீரியல் இல்லத நேரம் பார்த்து சாக சொல்லுங்கள் இல்லாவிட்டால் யாருக்கும் தெரியாது

by

Kuttamuni

Simulation said...

நேற்றைய தினம் மெரினாவில் அன்னா ஹசாரே அவர்களிண் இயக்கத்தைனை ஆதரித்து நடந்த மெழுகு வர்த்திஏந்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், எழுதாளர் சிவசங்கரி, முக்தா ஸ்ரீஇனிவாசன், இரா.முருகன் ஆகியோர் பங்கு பெற்றதாகத் தெரிகின்றது. - சிமுலேஷன்

//ஆனால் தமிழகத்தில் அரசியல்வாதிகள் முதல் நடிகர்கள் வரை அனைவருமே கப் சிப்.//

Anonymous said...

இது ஒன்றும் நமக்கு புதிதல்ல.
தமிழன் என்றோர் இனம் உண்டுதனியே அவர்க்கோர் குணம் உண்டு என்பதற்கு ஏற்ப நாம் என்றும் தேசிய நீரோட்டத்தில் இணைய மாட்டோம்.
(மற்றவர்களும் நம்மை ஆட்டத்திற்கு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பது வேறு விஷயம்!)இதற்கு முக்கிய காரணம் 45 ஆண்டுகளாக நம் மாநிலத்தில் நடைபெறும் கயவர் ஆட்சிதான்.
emergencyக்குப்பிறகு 1977 பொது தேர்தலில் இந்தியாவில் இந்திராகாந்திக்கு ஆதரவாக ஓட்டளித்த ஒரே மாநிலம் நம்முடையதுதானே

Anonymous said...

JAIHIND!

Anonymous said...

There is a movement that has gained momentum at Thakkar Baba school premises on Venkat narayana road near Nandhanam signal. All are requested to spread this message around.
subburathnam pitchai

ஊழல் ஒழிக! said...

கேரளாவில், எதிர்க் கட்சிக் கூட்டணியாகிய எல் டி எஃப் க்கு வாக்களிக்கும்படிக் கேட்டுக் கொண்டாராமே இத்தாலிய அன்னை? அப்படியா?

Anonymous said...

No doubt that Anna's movement would spark the mass revolution by youth world against corruption in India. A historical revolution has started against the corruption giant which straws the Barath Matha's blood for more than half century. Our pro-longed dream of corruption-free clean India would become true in future. Then there would be no place in governance, politics & public-life for Karunanidhies, Jayalalithas, Sonias, Lalus, Mayavathies, Stalins, Azhagiries, Kanimozhies Rasas etc...

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

நாங்க என்ன முட்டாள்களா?? யாரைப்பார்த்துய்யா கையை நீட்டிப் பேசுறே?? என்ன தைரியம் உனக்கு! நாங்கள் (தமிழ்நாடு-மாநில சுயாட்சி) எப்போதோ, இந்தியாவை விட்டுப் பிரிந்தாயிற்று. வேறு ஊருக்குப் போய் மொழி தெரியாமல் மானமிழந்தவனுக்குத் தான் தெரியும்... எங்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வெற்றி பற்றி!! எங்களுக்கு இந்தியாவும் வேண்டாம்... இந்தியும் வேண்டாம்!
(என் குடும்பத்தைப் பற்றி நீ பேசாதே!) எங்கள் நோக்கமே தமிழ்நாடு தேசிய நீரோட்டத்தில் கலந்து விடக்கூடாது என்பது தெரியுமா உனக்கு? அப்படித்தான் நாங்கள் இன்னும் பிச்சை எடுக்கும் பரதேசிகளாக இருக்கிறோம்!
அட... கனவா??? சரி ...
நீங்கள் குறிப்பிடாதது: மிகப் பெரிய அளவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹசாரே அவர்களுக்குத் தரும் ஆதரவு!
நாங்கள் "பல்லாண்டுத் தலைமை என்பது பெருமைக்குரியதா??" என்று எழுதியிருந்தோம்-அதிலும் வெ.நா.வாழ் இந்தியர்கள் குறித்து அதில் எழுதியது இன்று பெருமையாக உள்ளது!
http://sagamanithan.blogspot.com/

தமிழ்மொழி ஆண்டி said...

”விஷக்கிருமிகள்” ஆகப் பரவி இருக்கும் ”கழகங்கள்” இருக்கும் வரை இங்கே எந்த நல்லதும் நடக்காது. எனக்குக் கிடைத்தால் போதும்; நாடு எக்கேடு கெட்டால் என்ன என்ற நிலைமையில் தான் இங்கே எல்லோரும் இருக்கிறார்கள். வீட்டிலேயே பேசிப் பேசி மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. நாட்டில் எப்படி வரும்?

இந்தியாவை வேறு ஏதாவது ஒரு நாடு வந்து கைப் பற்றிக் கொண்டால் கூட மூணு வேளை சோறு, குவார்ட்டர், டிவி, இலவச வேட்டி, சேலை வாங்கிக் கொண்டு ’தமிழன்’ அவர்களுக்கு ஆதரவாக இருப்பான்.

சொந்தச் சகோதரர்கள் மந்தை மந்தையாய்ச் சாகும் போதும் சிந்தை இரங்காத மாக்களாய் இவர்களை ஆக்கி விட்டது அரசியல் கட்சிகள் தான் என்பதில் கிஞ்சித்தும் ஐயம் இல்லை.

ரஜினி, கமல் போன்றவர்கள் எந்திரன் 2, மருத நாயகம் என்று ஆசை வார்த்தைக் காட்டப்பட்டு பம்மித் திரிகிறார்கள். கேவலமாக இருக்கிறது.

அன்று மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்ததை “வெடிகுண்டு கலாசாரம்” என்றவர் இன்று எத்தனையோ வன்முறை, கொலை, கொள்ளைகள் நிகழ்ந்தும் வாய் திறக்கவில்லை. வாய் மூடி மௌனமாய் இருக்கிறார்.

எதற்கு பயப்பட வேண்டும்? யாருக்கு பயப்பட வேண்டும். மக்கள் ஆதரவு ரஜினிக்கு இல்லையா? இன்று அவர் மட்டும் தமிழகத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாகக் கிளம்பட்டும். அப்புறம் பாருங்கள், நிலைமை என்ன ஆகிறது என்று.

செய்வாரா ரஜினி? இந்த வாய்ப்பையாவது பயன்படுத்திக் கொள்வாரா? இல்லை... நான் ஜெயலலிதாவுக்கு மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்தேன். அவர் வரவில்லை. அதனால் அவருக்கு ஆதரவாகப் பேச மாட்டேன் என்று ’நெருக்கமானவர்களிடம்’ சுயநலமாகப் பேசிக் கவலைப்படுவாரா? இல்லை, ‘கலைஞரை’ பகைத்துக் கொள்ள முடியாது; அவர் பெரியவர். அவர் பார்த்து வளர்ந்தவன் நான். ஆகவே அவர் இருக்கும் வரை அவரை எதிர்த்து நான் அரசியல் செய்ய மாட்டேன் என்றெல்லாம் “சகா”க்களிடம் ரகசியம் பேசித் திரிவாரா?

இறைவா, இந்தத் தமிழ்நாட்டை வழிநடத்த சுயநலமற்ற, நல்ல நேர்மையான, உண்மையான ஒரு தலைவனை எப்போது அடையாளம் காட்டப் போகிறாய்?

வருத்தத்துடன்,
கேள்விகளுடன்,
கோபத்துடன்

தமிழ்மொழி ஆண்டி

Ram Kumar said...

http://epaper.dinamalar.com/DM/DINAMALAR/2011/04/08/ArticleHtmls/08_04_2011_012_006.shtml?Mode=1

Prabu said...

தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா!!!

Prabu said...

தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா!!!

Prabu said...

தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா!!!

சட்னி சாம்பார் said...

http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=3726&cat=32

அன்னா ஹசாரே அலை தமிழகத்திலும் எழுச்சி

Kumaran said...

thanks for the info. endha oru prachnai naalum. nadigargal , arasiyal vaadhigal kitta comment kekka odi porava tamilnattu media, idhai pathi ellam kekka maattaangala. illa kettalum eludha maataangala. innum oru maasathukku tamil channels pakkuradha avoid panna vendiyadhu thaan. except vijay tv. avanga thaan . raaman aandalum raavanan aandalum enakkoru kavalayilla nnu irukkangalae.

vishytheking said...

சென்னையிலும் அன்னா ஹசாரே வின் போராட்டத்துக்கு சென்னையிலும் ஆதரவு இருக்கிறது . 5th பில்லர் என்ற அமைப்பு லஞ்சத்தை ஒழிக்க பாடு பட்டு வருகிறது
இன்று காலை காந்தி சிலை அருகில் ஒரு கூட்டம் நடந்தது. மேலதிக விவரங்களுக்கு 044 - 65273056 என்ற எண்ணில் திரு சுப்ரமணியன் ஐத் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

நெய்வேலி விச்சு
neyvelivichu blogspot com

vishytheking said...

சென்னையிலும் அன்னா ஹசாரே வின் போராட்டத்துக்கு சென்னையிலும் ஆதரவு இருக்கிறது . 5th பில்லர் என்ற அமைப்பு லஞ்சத்தை ஒழிக்க பாடு பட்டு வருகிறது
இன்று காலை காந்தி சிலை அருகில் ஒரு கூட்டம் நடந்தது. மேலதிக விவரங்களுக்கு 044 - 65273056 என்ற எண்ணில் திரு சுப்ரமணியன் ஐத் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

நெய்வேலி விச்சு
neyvelivichu blogspot com

Balaji said...

திரு அண்ணா ஹசாரே பற்றி கலைஞர் டிவி செய்தியில் சொல்வது என்ன வென்றால், இவர் அஹிம்சையை ஒரு ஆயுதமாக்கி அரசாங்கத்துக்கு எதிராக செயல் படுவதாக மனசாட்சியே இல்லாமல் கூறுகிறார்கள் , இந்த கலைஞர்க்கு மற்றும் அவர் குடும்பத்தினற்கும் பெரிய ஆப்பு காத்து கொண்டு இருக்கிறது இவர்களை நிச்சயமாய் தெய்வம் நின்று கொல்லும்

வந்தியத்தேவன் said...

பாலாஜி அவர்களே...

காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் நம் தமிழின தலைவர்(மண்ணிக்கவும்..) உண்ணாவிரதம்
இருந்தால் நம் கலைஞர் டிவி செய்தியில் நான்கு நாட்களுக்கு நிமிடத்திற்கு நான்கு முறை காண்பிப்பார்கள்.

குறிப்பு: (மண்ணிக்கவும்..) : தகாத சொற்க்ளை பயன்படுத்தியதற்காக
தகாத சொல் : தமிழின தலைவர்

வந்தியத்தேவன் said...

பாலாஜி அவர்களே...

காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் நம் தமிழின தலைவர்(மண்ணிக்கவும்..) உண்ணாவிரதம்
இருந்தால் நம் கலைஞர் டிவி செய்தியில் நான்கு நாட்களுக்கு நிமிடத்திற்கு நான்கு முறை காண்பிப்பார்கள்.

குறிப்பு: (மண்ணிக்கவும்..) : தகாத சொற்க்ளை பயன்படுத்தியதற்காக
தகாத சொல் : தமிழின தலைவர்

வெட்டிப்பேச்சு said...

// Balaji said...
திரு அண்ணா ஹசாரே பற்றி கலைஞர் டிவி செய்தியில் சொல்வது என்ன வென்றால், இவர் அஹிம்சையை ஒரு ஆயுதமாக்கி அரசாங்கத்துக்கு எதிராக செயல் படுவதாக மனசாட்சியே இல்லாமல் கூறுகிறார்கள் , இந்த கலைஞர்க்கு மற்றும் அவர் குடும்பத்தினற்கும் பெரிய ஆப்பு காத்து கொண்டு இருக்கிறது இவர்களை நிச்சயமாய் தெய்வம் நின்று கொல்லும்//

புரியாமல் பேசுகிறீர்களே.. தமிழ்நாட்டில் ஊழலை எடுத்துவிட்டால் அரசியலே இல்லை.. அப்புறம் எப்படி..?

பார்க்க:
ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு நன்றிகள்…
http://vettipaechchu.blogspot.com/2011/04/blog-post.html

Gopal said...

Where did 2G scam start? The source of 2G loot is 3C. What is
3C? Country's Corruption Capital.
Who is owner of 3C? TMK of DMK . That is Thiru M.Karunanidgi of Dillu Mullu Kazhakam .

rawanan said...

Week-end தேசபக்தியாளர்களுக்கு,

http://www.vinavu.com/2011/04/08/anna-hazare-fast/

பாலாஜி said...

நான் வசிக்கும் ஆப்ரிக்கா நாடு, உலகிலேயே ஊழலில் 3 வது இடத்தை பிடித்திருப்பது. வளமான நாடு ஊழல் அரசியல்வியாதிகளால் நாடு சுரண்டப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கிவைக்கப்பட்டு அந்த நாட்டை வளமடைய செய்கிறது. சொந்த நாட்டு மக்கள் பணக்காரர்கள் அல்லது பரம ஏழைகள். இந்த பாகுபாட்டால் உறவுகள் மலிந்து நாட்டில் எப்போதும் சண்டை, கொலை, கொள்ளை, சமுதாய சீர்கேடு இன்னும் பல.

இதைப்போல் ஒரு நிலையை நான் இந்தியாவிலும் காண்கிறேன். கூடிய சீக்கிரம் மக்களை பிச்சைகாரர்களாகவும் கொலைகாரர்களாகவும் அரசியல்வியாதிகள் மாற்றிவிடுவார்கள்.

இந்த நிலை மாற லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அதை நிச்சயமாக இந்த அரசியல்வியாதிகள் அனுமதிக்கப் போவதில்லை. பார்க்கலாம்.

அண்ணாவுக்கு என் நமஸ்காரங்கள், போராட்டம் நிறைவேற வாழ்த்துக்கள்.

Anonymous said...

It is very clear that most of the tamil media houses are operating under the shadow of political parties.

Most media houses are biased to ruling government since it gets revenue through government advertisements publishing. Nowadays, media houses are money minded and don't act as a real 4th pillar of a democracy.

rawanan said...

எல்லாரும் தமிழர்களையும் தமிழ் நடிகர்களையும் திட்டியாகிவிட்டது. ஹிந்தி முதலாளிகளை பாராட்டியாகிவிட்டது (இன்னுமா அடிமைப்புத்தி போகல). TV முன்னால IPL பாக்க உக்காந்தாச்சு. இனி என்ன 2வது காந்தி என்ன ஆனா நமக்கென்ன. இங்கே பின்னூட்டத்தில் பொங்கிய தேசபக்தர்கள் அனைவரும் நாளை போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

ஆமா காந்தியவாதிக்கும் பகத்சிங்குக்கும் என்ன சம்பந்தம் ?

Anonymous said...

//தமிழர்களின் பிரச்சினைகளுக்கு வட இந்தியாவில் இருந்து ஒரு குரல்கூட கேட்காது//
After Tsunami, several individuals, NGOs attempted rescue work: Vivek Oberoi is one among them

sethupathy said...

நன்கு விவரித்து எழுதியுள்ளீர்கள்.. நன்று. நன்றி :) :)

SUPRAJA KALYANARAMAN said...

Arumai.... Arumai....!!! prachaarangalil karagosham ezhuppa vizhayum makkal, idhupondra vishayangal naatil nadandhu kondirukkiradhu endru adharku gosham poda aarambithirundhaal dhan nadu endraikko munnaeri irukkumae...!!arindhirundhum avargal thalayida virumbuvadhillai...ilaignaragal idhanai unarndhalandri munnaetra nilai adaivadhu kaelvikkuriyae!!!