பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 30, 2011

கலைஞரின் சினிமா அறிக்கை

( நேற்று ரஜினி டிஸ்சார்ஜ் ஆகும் முன் பார்த்துவிட்டு வந்த பின் கலைஞர் சினிமா பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள் மட்டும்.)

படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு, அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். தற்போது படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

நான் எழுதி வெளி வந்துள்ள "பொன்னர்-சங்கர்'' திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை அலையாய் அலைந்துதான் தியேட்டர்களை பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர் விட்ட நிகழ்ச்சி எல்லாம் எனக்குத் தெரியும். கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர்'' திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே 2-ம் நாளே அந்த படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்ட செய்திகள் எல்லாம் சோலைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒரு மூதாட்டி "கருணாநிதியின் பேரன் பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி'' என்று கேட்டதாக சோலை எழுதி இருக்கிறார். பாவம்; அந்தப் பாட்டிக்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும்,

ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் ரெட்டியார் சத்திரம் மூதாட்டிக்குத் தெரியாமல் போனதுதான் வேடிக்கை.

அது மாத்திரம் அல்ல, கடந்த காலத்தில் எத்தனை படத்தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதை முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள், எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாக ஆகி தெருவிலே நின்றார்கள் என்பதை எல்லாம் என் நண்பர் கவிஞர் கண்ணதாசன் எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

தொடர்புடைய சில சுட்டிகள்
சுட்டி 1
சுட்டி 2
தலைமுறை தலைமுறையாய் நம் சமூகத்தில் இருக்கும் ஒரு பழக்கம் - சனி நீராடு!.

6 Comments:

R.Gopi said...

சினிமாவுல இருக்கற எந்த குடும்பங்களோட ”தாத்தா”வும் முதலமைச்சர் பதவியில இல்லையே...

இதை யாராவது “தல”க்கு சொல்லி புரிய வைப்பீங்களா?

Sasi said...

தமிழ்நாட்டில் முதல்வரின் திரைப்படம் திரையிட தியேட்டர் கிடைக்கவில்லையாம். என்ன கருமமோ, அந்த அளவுக்கு அப்படி எத்தனை சினிமாக்கள் நாம் பார்க்கிறோமோ ??? ஏனோ, சமீபத்தில் விகடனில் படித்த அப்துல் கலாமின் கேள்வி பதில் ஞாபகத்துக்கு வருகிறது
கேள்வி -- ''நீங்கள் தமிழ் சினிமாக்கள் பார்ப்பது உண்டா? உண்டு என்றால், சமீபத்தில் பார்த்த படம் என்ன?''
கலாம் -- ''கடந்த 50 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை. அதனால் நான் இழந்தது என்று ஏதும் இல்லை!''

Sasi said...

தமிழ்நாட்டில் முதல்வரின் திரைப்படம் திரையிட தியேட்டர் கிடைக்கவில்லையாம். என்ன கருமமோ, அந்த அளவுக்கு அப்படி எத்தனை சினிமாக்கள் நாம் பார்க்கிறோமோ ??? ஏனோ, சமீபத்தில் விகடனில் படித்த அப்துல் கலாமின் கேள்வி பதில் ஞாபகத்துக்கு வருகிறது
கேள்வி -- ''நீங்கள் தமிழ் சினிமாக்கள் பார்ப்பது உண்டா? உண்டு என்றால், சமீபத்தில் பார்த்த படம் என்ன?''
கலாம் -- ''கடந்த 50 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை. அதனால் நான் இழந்தது என்று ஏதும் இல்லை!''

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பாவம் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் குடும்பம்.

art said...

ரஷ்ய புரட்சிக்கு வழிவகுத்த சினிமா, அமெரிக்காவின் அறிவுஜிவியை காட்டும் சினிமா, இத்தாலியில் சாதாரண மக்களின் வாழ்க்கையை சொன்ன சினிமா, உலக வாழ்வியலை, பண்பாட்டை பதிவு செய்யும் சினிமா இங்குதான் தடுமாறுகிறது. சினிமாவை குறை சொல்வதும் ஏளனம்படுத்துவதும் இங்கு பொழுது போக்காகி விட்டது.

லவகுசா said...

தப்பா சொல்லிட்டீங்க தலைவரே...நெஞ்செரிச்சல் இல்ல ஒங்க குடும்பத்தோட சுயநலத்தனம் .... அதான் ரெண்டு பொண்டாட்டி, இருவது சைடு இருக்கு... ஒங்க குடும்பத்துக்கே பேராசை தானே?? கல்யாண வீட்டிலே மாப்பிள்ளையா இருக்கணும், எழவு வீட்டில பொணமா இருக்கணும் ... அதானே ஒங்க குடும்ப ஆசை??