பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 29, 2011

திமுக வெற்றி அறிக்கை..
சரி இது போல நடந்தால்.. அறிக்கைகள்... எந்த மாதிரி இருக்கும் ( கற்பனை - கோதண்டபாணி + இட்லிவடை )


கருணாநிதி: ஆரிய ஊடகங்களுக்கும் பதிரிகைகளிக்கும் தமிழக மக்கள் கொடுத்த மரண அடி இது. திமுகவின் இலாவச சாதனைகளுக்கு தமிழக மக்கள் கொடுத்த இலவச பரிசு இந்த வெற்றி. உடன்பிறப்புகளே (சோனியா & கோ) காலம் 'கனி'ந்து உள்ளது. தமிழ் 'மொழி'க்காக திமுக எதையும் இழக்க தயார்.

மு.க.ஸ்டாலின் : கலைஞர் தலைமையில் எங்களது செயல்பாட்டிற்கு கிடைத்ததுதான் இந்த வெற்றி. தென் தமிழகத்தைவிட வட தமிழகத்தில் அதிக அளவு வெற்றியை ஈட்டு தந்த கழக கண்மணிகளுக்கு நன்றி.

மு. க. அழகிரி : இந்ததேர்தலே திமுகவிற்கும் தேர்தல் கமிஷன் இடையே தான். மக்கள் தேர்தல் கமிஷனுக்கு மரண அடி கொடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் கமிஷன் இல்லாமலே தேர்தல் நடத்த டெல்லி சென்றவுடன் மீரகுமாரியை சந்தித்து மனு அளிப்பேன்.

தங்கபாலு : அன்னை சோனியா அறிவுரைப்படி இந்த வெற்றியை கலைஞரின் பொற்பாதங்களில் சமர்பிக்கின்றேன் .காங்கிரச்சை வீழ்த்த நினைத்த சீமான்களுக்கும் (vasan&co) கோமான்களுக்கும் (chidambaram&co) நான், அன்னையின் அறியுரைபடியும் ராகுல் காந்தி அனுமதியோடும் சொல்லிகொள்வது 'என் சுண்டு விரல் அல்ல எந்த விரல் அசைத்தாலும் தமிழகமே பற்றி எரியும் '

ராமதாஸ் : வன்னியர்களின் அணுகு முறைக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. வன்னியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இனி தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வராது. வன்னியர்கள் நமக்கு மட்டும் வோட்டு போட்டாலே அடுத்த தேர்தலில் 117 இடங்களை கைப்பற்றி வன்னியர் ஆட்சி அமைக்கலாம் .(வன்னியர் = அன்புமணி)

வீரமணி: தமிழ் இன உணர்வுக்கு கிடைத்த வெற்றி இது. ராஜபக்சேக்கு எதிர்த்து கிடைத்த இந்த வெற்றியை U.N. உற்று நோக்க வேண்டும்.

ஜெயலலிதா: (கொடநாட்டிலிருந்து அறிக்கை) தேர்தலில் தில்லுமுல்லு நடந்துள்ளது. கொட்டாம்பட்டி வோட்டு எண்ணும்
மையத்தில் இரண்டு காலி த கரபெட்டிகள் கழக கண்மணிகள் கண்டு பிடத்ததே இதற்க்கு சாட்சி. தேர்தல் கமிஷன் ஐ எதிர்த்தும் குப்பைகளை வாரத திமுமைனோரிட்டிக அரசை எதிர்த்தும்,இன்று காலை 11 மணிக்கு வேட்பாளர்கள் அந்தந்த தொகுதயில் மாபெரும் போராட்டம் ADMK சார்பில் நடுத்துவார்கள்.

விஜயகாந்த்: மக்களே , கண்ட தண்ணியை குடித்து தொண்டை கெட்டுவிட்டதால் கடைசி இரண்டு நாட்கள் பிரச்சாரம் பண்ணாததால் நமக்கு தோல்வி. நான் எப்பொழுதும் உங்களோடுதான் கூட்டணி. 2016 ல் மட்டும் கட்சிகளோடு கூட்டணி. எனது அடுத்த படம் விருத்தகிரி - பாகம் 2.

வைகோ : ஆணவம் அழிந்தது. அகங்காரம் மறைந்தது. இனி திமுக அறிவிக்கும் எல்லா போராட்டங்களிலும் மதிமுக அழைப்பு இல்லாமேலே பங்காற்றி அறிய சேவை செய்யும் . 2016 ல் அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம்.

சீமான் : ஈழ தமிழர்களின் குரல்வளையை பிடித்த தேர்தல் கமிஷன் யை எதிர்த்து வீதி தோறும் எங்கள் முழக்கம் தொடரும். தேர்தல் கமிஷன் ஒழியும் வரை எங்கள் போராட்டம் தொடரும் .U.N. க்கு பல்லாயிர கணக்கான தந்திகள் பறக்கட்டும். (இந்த பேச்சிற்காக அவர் கைது செய்பட்டு சிறையில் அடைக்கபடுவர் என்பது தெளிவே) சோ. இலவசங்கள் கூட ஜெயவிடமிருந்து பெறமாட்டோம் என்ற தமிழக மக்களின் போக்கு ஒரு சாபக்கேடே. தமிழக மக்களுக்கு திமுக ஆட்சியுடன் 2G scam இலவசம்.

பெப்சி : 50 மாதங்கள் கலைக்கு அறிய சேவை செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளிவிழா பிரமாண்டமாக நடத்தப்படும் . ரஜினி கமல் விஜய் அஜித் அனைவரும் கண்டிப்பாக கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து ஆசி பெறுவார்கள். சன் டிவி சார்பில் கலாநிதி மாறனுக்கு சிங்கப்பூரில் ரஜினி தலைமையில் பிரமாண்ட பாராட்டு தனியே நடைபெறும். விஜய்க்கு அழைப்பு அனுப்பியுள்ளோம் அவர் கலந்துக்கொள்வாரா என்று தெரியாது. அஜித் இந்த விழாவில் ஒன்று பேசாமல் இருப்பார்.

சந்திரசேகரன்: தேர்தல் எனக்கு தெரியும் ஆனால் தேர்தல் முடிவு தெரியாது. கோபாலபுரம் எனக்கு தெரியும் ஆனால் போஎஸ் கார்டன் எனக்கு தெரியாது. விஜய் ஷூடிங்க்லே (யே) இருப்பதால் அவரின் அனுமதியோடு இதை நான் அறிவிக்கின்றேன்

பத்திரிக்கைகள்:
விடகன்:
அடுத்த வார விகடனில் கூடுதல் பக்கம் - கலைஞர் தொடர் ஆரம்பம் ஆகிறது. பரிசு தொகை 1,00,000/= வாங்க தவராதீர்கள்.

கல்கி: ஓ-பக்கங்களில் ஞாநி 49-ஓ பற்றி விழிப்புணர்வு தேவை என்ற கட்டுரை. இந்த வார குட்டு - திமுகவை ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்திய தமிழக மக்கள்.

குமுதம்: அழகிரி பேட்டி - அடுத்த வாரம் தொடரும்...

துக்ளக்: தேர்தல் முடிவு - என் பார்வை - சோ தலையங்கம்...

கனிமொழி மந்தரிசபை பற்றி நீரா ராடியா உடன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருப்பதால் அறிக்கை பெற முடியவில்லை .

23 Comments:

ரஹீம் கஸாலி said...

pls visit:
http://ragariz.blogspot.com/2011/04/dmk-win-or-loss.html

or
pls visit:

http://ragariz.blogspot.com/2011/04/jeyalalitha-win-or-fail.html

middleclassmadhavi said...

நடந்தாலும் நடக்கும்!

Speed Master said...

ஹஹா எப்படிங்க இப்படியெல்லா,ம்

King Viswa said...

//குமுதம்: அழகிரி பேட்டி - அடுத்த வாரம் தொடரும்..//

இதுல மட்டும் ஒரு சின்ன மாற்றம் - கண்டிப்பாக கலைஞர் உடன் ஒரு சிறப்பு கவர் ஸ்டோரி இருக்கும். கலைஞர் வீட்டிற்கே சென்று காலை உணவுடன் பேட்டி இருக்கும், ரெண்டு வாரங்களுக்கு அந்த பேட்டி தொடரும்.


கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சித்திரக்கதை - சென்னை சூப்பர் கோமிக்ஸ் - பாண்டி : பாய் ஆப் தி மேட்ச்

Anonymous said...

யோவ் காலங் காத்தால ஏன்யா இப்படி? நெனச்சாலே சும்மா பதறுது.

Anonymous said...

if it happens, then God may Save Tamilnadu.

I guess admk will come to power. thats sure.

snkm said...

கற்பனையில் கூட மீண்டும் கருணாநிதி ஆட்சி அமைந்துவிடக் கூடாது. மக்கள் வாழ வழியே இல்லாமல் போய் விடும்.

jaisankar jaganathan said...

மீண்டும் கருனாநிதி ஆட்சி வரும். உங்க வார்த்தை பலிக்கும் தல

Anonymous said...

Manjal Comment - Nach!!!!

Karthik said...

shubba eppave kanna katuthe...

Kothandapani avarkale, ethu oru nalla punaivu, athuvum time magazine headlines patha, ethu unmailaye nadanthurum pola erruku.

Appdiya vedivelu enna solluvarunum konjam sollungha...

எல் கே said...

hahahah

Anonymous said...

Indiatoday's sample size taken in this post poll survey was a meagre 6000 out of a total voters of 5 crores. Not even 0.01%. This is polls is absurd and done in a hurry just to create some sensation

சாக்கடை said...

This post poll survey is entirely manipulated by DMK. All the surveys, be it post poll or exit polls, banned till may 10, if it is so, how can they publish now? Moreover, the results are very dubious, how can you predict the victory with just 6000 samples across the state? 6000 samples is very very minor among 3.7 crore people voted. Even in this result, there is a 1% difference between DMK and AIADMK. In statistics, when you increase the sample size, probability may change. SO we cannot say anything for sure with this minor samples. This survey is manipulated by karunanidhi so as to avoid their party members joining victory party AIADMK. Only MAY 10 exit polls by CNN-IBN, NDTV, TimesNow and Hindu can be true. The main vote separating party DMDK is with AIADMK, Two communist are also with AIADMK. AIADMK alliance is very strong, anti incumbency votes will be directly grabbed by AIADMK, and corruption, price hike, amidst all of these, how can DMK emerge as a winner. If DMK wins, then it is formal indication of the licences of their corruptions given by people. In my personal opinion, AIADMK grabs more than 200 seats. May13 will prove this.

Shan said...

2G ஊழலில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்தாச்சு. இனிமேல் நோட்டு அடிச்சா தான் அடுத்த ஊழல்.அந்த இடைப்பட்ட நேரத்துல அண்ணா ஹசாரே மற்றும் கிரிக்கெட் பற்றி பேசி களிப்புறு மாறு இந்திய மீடியாவையும், பொது மக்களையும் வேண்டி கேட்டு கொள்கிறோம்.

Anonymous said...

இந்த போஸ்ட் மகா அறுவை. மகா தண்டம். அநங்கன் + இட்லிவடை கூட்டணி என்ன ஆச்சு? கட்சி மாறியது யாரோ?

Rajeswaran said...

romba romba payamaa irukudhu.

Shri Hari said...

கருணாநிதி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் கண்டிப்பாக சென்னையை விட்டு பெங்களூர் இடம் பெயர்ந்து சென்றுவிடுவேன். இது ஜோக் இல்லை. இது உண்மை. கருணாநிதியும் அவன் மகன் மற்றும் மகள்கள் செய்யும் அட்டுழியங்களை பார்த்து கொண்டு இருப்பதக்கு மாடு மேய்க்க போகலாம்.

Anonymous said...

SriHari Please do that.

We don't have an option here in tamil nadu is to select a Sugartho or Imelda Marcos.

Now you guys are supporting Imelda Marcos. I am sure you will be even tend to loose your kettle in the comming five years if imellda marcor will get selected. Then you will start to pick rotten bull shit because of the imellda marcos government and govenance.

Ha ha ha .... good joke...

kothandapani said...

என் பதிவை (சில மாற்றங்களுடன்) வெளியிட்டமைக்கு நன்றி. Comments எழுதிய அனைவருக்கும் including the Anonymous
நன்றி. after all ஒரு பழுத்த மரம்தான் கல்லடி படும் .

Anonymous said...

///கருணாநிதி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் கண்டிப்பாக சென்னையை விட்டு பெங்களூர் இடம் பெயர்ந்து சென்றுவிடுவேன். பார்த்து கொண்டு இருப்பதக்கு மாடு மேய்க்க போகலாம்.//

உங்களுக்காகதான் அம்மா ஒரு எருமை மாடு நாலு ஆடு தரேன்னு சொல்லி இருங்காங்க.

Art said...

பழுத்த மரம் தான் கல்லடிபடும். 2ஜி 2ஜிங்கிறிங்களே ஒரு துறை மந்திரி மட்டும் செய்யமுடியுமா? மக்களுக்கு சில நல்ல விஷ்யங்கள் நடந்திருக்கு!

sathyamorthy said...

கருணாநிதியும் அவன் மகன் மற்றும் மகள்கள் செய்யும் அட்டுழியங்களை பார்த்து கொண்டு இருப்பதக்கு மாடு மேய்க்க போகலாம்//

oh.. super.. thats why amma is giving 3 free goats and cow to all???

atleast in dmk rule we can do this business but in amma rule.. all can eat rat curry and commit suicide only.. and kanji thotti cleaning only ..


so u want to go to bangalore is it.. to take part in edhiyurappa govt? good good.. it shows who you are .. why dont u go to gujarath?

Prakash said...

Tamilnadu get's First rank in Overall Economic Growth & Freedom beating so called Highly Governed state of Gujarat..

Hope this might open the eyes of many cats..

http://www.business-standard.com/india/news/tamil-nadu-retains-top-slot-in-economic-freedom-ranking/428571/

http://www.cato.org/economic-freedom-india/AppendixIV.pdf

http://ibnlive.in.com/generalnewsfeed/news/maximum-economic-freedom-in-tamil-nadu-least-in-bihar-study/610349.html