பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 06, 2011

அடுத்த காந்தி ?

அண்ணா ஹஸாரேவின் ஊழலுக்கெதிரான உண்ணா விரதப் போராட்டம், இதை எழுதும் தறுவாயில் மூன்றாவது நாளை எட்டிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சி அமைப்புகள், இன்ன பிற சமூக அமைப்புகளின் ஆதரவு, என பல தரப்பிலிருந்தும் அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கெதிரான முன்னெடுப்பிற்கு ஆதரவு பல்கிப் பெருகிக் கொண்டிருப்பது மத்திய சர்க்காரை ஒருவித அச்சத்திற்காட்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் நல்லதேதும் நடக்கப் பொருக்காத காங்கிரஸ் அன்னா ஹஸாரேவின் உண்ணா விரதத்திற்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும், அன்னா ஹஸாரே ஒரு ஆர் எஸ் எஸ் கைக்கூலி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த ஒரு வரிக்காகவே ஆர் எஸ் எஸ் அமைப்பு அதன் ஆயுட்காலம் முழுவதும் காங்கிரஸிற்கு கடமைப் பட்டுள்ளது. இவ்வாறு ஹஸாரெவைச் சாடியதன் மூலம், ஆர் எஸ் எஸ் அமைப்பு ஊழலுக்கெதிரான ஒரு அமைப்பு என்பதை காங்கிரஸ் மறைமுகமாக, அறிந்தோ அறியாமலோ ஒப்புக் கொண்டுள்ளது. இந்த வெற்று அரசியல் ஒருபுறம் இருக்கட்டும்.


இரண்டாம் நாளாக உண்ணா நோன்பு தொடரும் நிலையில், அன்னா ஹஸாரே, சுருக்கமாகவும், நறுக்குத் தெறித்தாற் போலும், பிரதமர் மன்மோஹன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் சாரம்..

"ஊழலைக் களைவதற்குண்டான முயற்சிகளை விடுத்து, இந்த அரசாங்கம் எங்களது நோக்கத்திலும், அமைப்பிலும் பழுது காண்பது வருத்தமளிக்கிறது. நான் உண்ணா நோன்பிறுப்பதற்காக வற்புறுத்தப்பட்டேன் என்று சில தரப்பிலிருந்து கேள்விப் படுவது என்னையும், எனது அறிவையும் அவமதிப்பது போன்றதாக இருக்கிறது.நம்மிடம் மொத்தம் எட்டு வகையான லோக்பால் மசோதாக்கள் இருக்கின்றன. ஆனால் பிரதமராகிய நீங்கள் இதில் ஒன்றைக் கூட அமல்படுத்த முனையவில்லை. தயவு செய்து தேசத்தைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் (அரசாங்கம்) இதற்கான சில முன்னெடுப்பகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் இதற்கான சட்டவடிவுகளை வடிவமைப்போரில் பெரும்பாலானோர் சிறையில் இருக்க வேண்டியவர்கள். இவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை நம்ப வேண்டுமென்று நினைக்கிறீர்களா? என்னுடைய சூழலில் நீங்கள் இருந்தால், நீங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை நம்புவீர்களா?

நான் ஒன்றும் குழந்தையல்ல, எனவே என்னுடைய அறிவின் விஸ்தீரணத்தை சந்தேகிக்க வேண்டாம். என்னுடைய முடிவுகள் அனைத்துமே சுயமானவை. என்னுடைய முந்தைய மூன்று கடிதங்களுக்கு சோனியாவிடமிருந்தோ அல்லது பிரதமரிடமிருந்தோ எவ்விதமான பதிலும் இல்லை. அதனாலேயே சாகும் வரை உண்ணா விரதம் என்ற முடிவிற்கு வர வேண்டியிருந்தது., என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
( முழு கடிதம் கீழே )

இவ்வாறு இந்த ஊழலுக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் இப்போராட்டத்தை எவ்வாறு முடக்கி மூட்டை கட்டலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறது. வீரப்ப மொய்லி கூறுகையில், ஹஸாரேவின் சில யோசனைகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். காங்கிரஸின் மழுப்பல் நாயகன் கபில் சிபல்(2G, CWG ஊழலே நடக்கவில்லை என்று சொன்னவர்), அன்னா ஹஸாரேவின் லோக்பால் மசோதாவிற்கு பற்களே இல்லை என்கிறார். டெண்டிஸ்டாகப் போயிருக்க வேண்டியவர். ஊழலை ஓழிப்போம் என்று சொல்வதற்கு இவர்களுக்கு முதலில் வாயே கிடையாது, பிறகு என்ன பற்களைப் பற்றிய பேச்சு?

ஊழலுக்கெதிரான அமைச்சர்கள் குழுவில் மத்திய அமைச்சர் ஷரத் பவார் இடம்பெற்றிருப்பதை ஹஸாரே விமர்சித்ததைத் தொடர்ந்து, ஷரத் பவார் அப்பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாகத் தெரிகிறது. தவிர, ஹஸாரேவே ஊழல் புகார்களுக்காட்பட்டிருப்பவர் என்று வேறு தேசியவாத காங்கிரஸ் பதிலடியாக விமர்சித்துள்ளது.

எது எப்படியோ, ஊழலுக்கெதிராக ஒரு மசோதாவை நிறைவேற்றி, காங்கிரஸ் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள முனையாது என்றே தோன்றுகிறது. ஆனாலும் ஹஸாரேவிற்கு வலுக்கும் ஆதரவு, அசைக்க முடியாத அம்மிக்கல்லை ஆடிக் காற்று நகர்த்தியது போல, ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் உண்டு.

அன்னா ஹஸாரேவிற்க்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு அவரை சந்திக்க முயன்ற உமா பாரதி மற்றும் ஓம் பிரகாஷ் செளதாலா போன்றோர், ஹஸாரேவின் ஆதரவாளர்களால திருப்பியனுப்பப்பட்டனர். அரசியல்வாதிகளின் நிழல் பட்டாலே மக்கள் திசை திரும்பி, கொண்ட நோக்கிலிருந்து மாறிவிடுவர் என்பது ஹஸாரேவின் ஆதரவாளர்கள் இதற்கு விளக்கமளித்துள்ளனர். நல்ல முன்னேற்றம் !

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மமே வெல்லும் எனும் கீதாசாரத்திற்கிணங்க, ஹஸாரேவின் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து அவருக்கு நமது நல்லாதரவை நல்குவோமாக.

- ஸ்ரீவத்ஸன்
[ Dear Dr. Singh,

I have started my indefinite fast at Jantar mantar. I had invited you also to fast and pray for a corruption free India on 5th April. Though I did not receive any reply from you, I am hopeful that you must have done that.

I am pained to read and hear about government's reaction to my fast. I consider it my duty to clarify the points raised on behalf of Congress party and the government by their spokespersons, as they appear in media:

1. It is being alleged that I am being instigated by some people to sit on this fast. Dear Manmohan Singh ji, this is an insult to my sense of wisdom and intelligence. I am not a kid that I could be "instigated" into going on an indefinite fast. I am a fiercely independent person. I take advice from many friends and critics, but do what my conscience directs me to do. It is my experience that when cornered, governments resort to such malicious slandering. I am pained that the government, rather than addressing the issue of corruption, is trying to allege conspiracies, when there are none.

2. It is being said that I have shown impatience. Dear Prime Minister, so far, every government has shown complete insensitivity and lack of political commitment to tackling corruption. 62 years after independence, we still do not have independent and effective anti‐corruption systems. Very weak versions of Lokpal Bill were presented in Parliament eight times in last 42 years. Even these weak versions were not passed by Parliament. This means, left to themselves, the politicians and bureaucrats will never pass any law which subjects them to any kind of objective scrutiny. At a time, when the country has witnessed scams of unprecedented scale, the impatience of the entire country is justified. And we call upon you, not to look for precedents, but show courage to take unprecedented steps.

3. It is being said that I have shown impatience when the government has "initiated" the process. I would urge you to tell me - exactly what processes are underway?

a. You say that your Group of Ministers are drafting the anti‐corruption law. Many of the members of this Group of Ministers have such a shady past that if effective anticorruption systems had been in place, some of them would have been behind bars. Do you want us to have faith in a process in which some of the most corrupt people of this country should draft the anti‐corruption law?

b. NAC sub‐committee has discussed Jan Lokpal Bill. But what does that actually mean? Will the government accept the recommendations of NAC sub‐committee? So far, UPA II has shown complete contempt for even the most innocuous issues raised by NAC.

c. I and many other friends from India Against Corruption movement wrote several letters to you after 1st December. I also sent you a copy of Jan Lokpal Bill on 1st December. We did not get any response. It is only when I wrote to you that I will sit on an indefinite fast, we were promptly invited for discussions on 7th March. I wonder whether the government responds only to threats of indefinite fast. Before that, representatives of India Against Corruption had been meeting various Ministers seeking their support for the Jan Lokpal Bill. They met Mr Moily also and personally handed over copy of Jan Lokpal to him. A few hours before our meeting with you, we received a phone call from Mr Moily's office that the copy of Jan Lokpal Bill had been misplaced by his office and they wanted another copy. This is the seriousness with which the government has dealt with Jan Lokpal Bill.

d. Dear Dr Manmohan Singh ji, if you were in my place, would you have any faith in the aforesaid processes? Kindly let me know if there are any other processes underway. If you still feel that I am impatient, I am happy that I am because the whole nation is feeling impatient at the lack of credible efforts from your government against corruption.

4. What are we asking for? We are not saying that you should accept the Bill drafted by us. But kindly create a credible platform for discussions - a joint committee with at least half members from civil society suggested by us. Your spokespersons are misleading the nation when they say that there is no precedent for setting up a joint committee. At least seven laws in Maharashtra were drafted by similar joint committees and presented in Maharashtra Assembly. Maharashtra RTI Act, one of the best laws of those times, was drafted by a joint committee. Even at the centre, when 25,000 tribals came to Delhi two years ago, your government set up a joint committee on land issues within 48 hours. You yourself are the Chairperson of that committee.

This means that the government is willing to set up joint committees on all other issues, but not on corruption. Why?

5. It is being said that the government wants to talk to us and we are not talking to them. This is utterly false. Tell me a single meeting when you called us and we did not come. We strongly believe in dialogue and engagement. Kindly do not mislead the country by saying that we are shunning dialogue.

We request you to take some credible steps at stemming corruption. Kindly stop finding faults and suspecting conspiracies in our movement. There are none. Even if there were, it does not absolve you of your responsibilities to stop corruption.

With warm regards,
K B Hazare
]
தொடர்ந்து இட்லிவடையில் அண்ணா ஹஸாரே பற்றி செய்திகள் வரும். இவர் நமக்காக செய்கிறார் நிச்சயம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

20 Comments:

Santhappan சாந்தப்பன் said...

"India Against Corruption" FB Page கடந்த பல மாதங்களாக இயங்கி வருகிறது. பல்வேறு நகரங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 2 நாட்களாகத் தான் ஊடகங்களின் வெளிச்சம்..

இன்று ஒரே நாளில், 20,000 Followers இதில் இணைந்திருக்கிறார்கள்..

http://www.facebook.com/IndiACor

Ananth said...

I support Anna Hazare

Roaming Raman said...

ஏற்கெனவே, முந்தைய கட்டுரையின் பின்னூட்டத்தில், நாட்டுக்கு நல்லது நடக்கத் தொடங்கி விட்டது என்று எழுதினேன்- இப்போது சரத் பவாரின் ராஜினாமா செய்தி வந்து விட்டது!! ஹசாரேவை ராம்தேவ் சந்தித்திருக்கிறார்(எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளையும் தவிர்க்கிறார்),மக்கள் எல்லாத் தரப்பிலிருந்தும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்,, சந்தோசம்... ஆனால் இக்கட்டுரையின் தலைப்பு "பாரதம் vs ஊழல்" என்று இருந்திருக்கலாம்!! மேலும் ஊடகங்கள் சரியான படி இதனை, சுட்டிக்காட்டவில்லை என்றும் நினைத்து எழுதி இருந்தேன் -ஆனால், "இங்கிலீஷ் தமிழ் சாந்தப்பன்" சொன்னது மாதிரி "ஊடகங்களின் வெளிச்சம்.. " வந்து விட்டது!! உம்ம கிருஷ்ணா பாகவதர் எழுதிய வேளை, ஊழல் குறித்த விழிப்புணாச்சி வந்து விட்டது!! நமக்கெல்லாம் இந்த நாட்டின் முன்னேற்றத்தை விட என்ன சந்தோசம் வந்து விட முடியும்!!

சிவா said...

எல்லோரும் middle east புரட்சிய நெனச்சுகிட்டு கற்பனையில மெதக்கறாங்க, அவல நெனச்சுகிட்டு உரல இடிக்கறா மாதிரி. ஊழல்ங்கறது இங்க எல்லா அரசியல்வாதிகிட்டயும், மக்களிடமும் எலும்பு, சதை, ரத்தம் எல்லாவற்றிலும் ஊறிப்போய் இருக்கிறது. அதை மாத்த 1000 ஹசாரே வந்தாலும் முடியாதுங்கறேன். நல்ல, பாராட்டத்தக்க முயற்சிதான். ஆனா ஊழல் அரசியல்வாதிங்க இத அழகா ஹாண்டில் பன்ணி ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாங்க. பாத்துகிட்டே இருங்க. ஊழல் பெருச்சாளி காங்கிரஸ்கிட்ட பாச்சா பலிக்குமா?

Anonymous said...

ராசா இந்த இயக்கித்தில் சேரப் போகிறராம்! அதற்குமுன் அவரும் கல்மாடியும் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வருகிறார்களாம்!-கபாலி

குமரப்பன் said...

அன்னா ஹஸாரேவிற்குப் பின்னிருக்கும் இயக்கம் என்று காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்ஸைக் குற்றம் சாட்டி இருப்பதில் உண்மை உண்டு.

அன்னா ஹஸாரேவைத் தூண்டி விட்ட ஆர்.எஸ்.எஸ் மீது பாஜகவின் ஊழல் புள்ளிகளும் கடுப்புடன் இருக்கிறார்களாம்.

நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லும் செய்தி இது.

Anonymous said...

சிவா, முடிஞ்சா நல்ல விஷயத்திற்கு ஆதரவு தெரிவியுங்கள். இங்கு உங்கள் ஆருடம்/அதி மேதாவித்தனம் தேவையில்லை .

எங்கள் ப்ளாக் said...

அன்னா ஹஸாரே அவர்களின் முயற்சி வெற்றி பெறவேண்டும். ஊழல ஒழிந்தால்தான் இந்தியா வல்லரசாகும். ஹஸாரே அவர்களுக்கு நம் மாரல் சப்போர்ட் அளிப்போம். இன்று மாலை அன்னா ஹஸாரே அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து காந்தி சிலை அருகே மெழுவர்த்தி - மௌன ஊர்வலம் நடைபெறுகின்றது என்று படித்தோம்.

Anonymous said...

GOD is GREAT. ALL THE BEST. Vazhga India.

Sridharan said...

With so much 'cash' being recovered and no body claiming ownership leads to the suspicion whether the money is 'genuine'...No I am not suggesting whether this is karruppu panam (black money - which any way it is) but whether this cash is kalla panam (counterfeit)?

So voters beware.....accepting cash for voting is an offence but the much more serious offence is possessing the counterfeit/fake currency

Sridharan said...

With so much 'cash' being recovered and no body claiming ownership leads to the suspicion whether the money is 'genuine'...No I am not suggesting whether this is karruppu panam (black money - which any way it is) but whether this cash is kalla panam (counterfeit)?

So voters beware.....accepting cash for voting is an offence but the much more serious offence is possessing the counterfeit/fake currency

R.Gopi said...

அன்னா ஹஸாரே அவர்களுக்கு நம் அனைவரின் ஆதரவை வழங்குவோம்..

ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க நாம் இணைந்தால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்...

Chandramouli said...

Somewhere I read that Alagiri is also one of the ministers in GOM for studying the lokpal bill.

R. Jagannathan said...

Hazare is hazardous to Politicians.

From Hazare's letter to PM: "I had invited you also to fast and pray for a corruption free India on 5th April. Though I did not receive any reply from you, I am hopeful that you must have done that. " - How sarcastic! Hazare knows very well that our PM needs permission from Sonia even to talk to his wife or open his mouth to eat.
-R. J.

Palani said...

All blog readers, please vote for anna hazare. Spend atleast 5 mins to vote. http://www.indiaagainstcorruption.org
http://www.voteforindia.org/
Thanks in advance.

Anonymous said...

Before supporting Anna Hazare (all respect to him), make sure you don't submit fake rent/medical receipts to save Income Tax.

Anonymous said...

Its Going to be BIG-HIT....Each and every sec...FACEBOOK COUNTS are hitting like any thing.......

Anonymous said...

http://www.youtube.com/watch?v=Nxpahtj0n1Q

Listen to what Mr.Vishwabandhu Gupta talks about Mr. P Chidambaram

Anonymous said...

@Sridharan

is it "karruppu panam" or "kar(rupp)u panam"?

Anonymous said...

வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.

இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்