ரஜினி என்ன சொல்லுகிறார் ? இவர் அரசியலுக்கு வர கூடாது என்பதற்கு இந்த வீடியோவே போறும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, April 13, 2011
ரஜினி கருத்து
Posted by IdlyVadai at 4/13/2011 01:22:00 PM
Labels: அரசியல், சினிமா, தேர்தல் 2011
Subscribe to:
Post Comments (Atom)











49 Comments:
ஒருவரின் ஒரு கருத்தை வைத்தே அவர் என்ன செய்யலாம் என்ன செய்யலாகாது எனும் இவ லாஜிக் புல்லரிக்குது
இந்த உளறலுக்கு எதுவும் பேயாம போயிருந்தா புண்ணியமா போயிருக்கும், ஆண்டவா ! பொதுவா ஊழலைப் பத்திப் பேசக் கூடவா இம்புட்டு பயம் :(
இந்த உளறலுக்கு எதுவும் பேயாம போயிருந்தா புண்ணியமா போயிருக்கும், ஆண்டவா ! பொதுவா ஊழலைப் பத்திப் பேசக் கூடவா இம்புட்டு பயம் :(
அது கருத்து அல்ல்; தத்து பித்து...என்னடா, கேள்வி கேட்டால் என்ன ப்தில் சொல்வது என்று யோசித்துத் தயார் செய்து கொண்டு வந்திருக்க வேண்டாமா? இவ்ர் நூறு தரம் சொன்னாலும் அவருக்கும் புரியாது; நமக்கும் புரியாது!--கபாலி
//இந்த உளறலுக்கு எதுவும் பேயாம போயிருந்தா புண்ணியமா போயிருக்கும், ஆண்டவா ! பொதுவா ஊழலைப் பத்திப் பேசக் கூடவா இம்புட்டு பயம் :(//
ஊழல் என்றால் அது ராஜா, ராஜா என்றால் திமுக, திமுக என்றால் கலைஞர் என்று ரஜினி நினைத்துவிட்டார் அதனல் தான் இந்த பயம்.
அவர் பொசிஷன்ல இருந்தாதான் கொஞ்சமாவது புரியும். பைதபை, மாமோய்.. போறும்னு போட்டு ஏன் கொண்டையை வெளியே காட்றேள்?!
//அவர் பொசிஷன்ல இருந்தாதான் கொஞ்சமாவது புரியும்//
என்ன பொசிஷன் அதுன்னு சொன்னா பரவாயில்லை. விஜய்காந்த் பொசிஷனா?
//அவர் பொசிஷன்ல இருந்தாதான் கொஞ்சமாவது புரியும். பைதபை, மாமோய்.. போறும்னு போட்டு ஏன் கொண்டையை வெளியே காட்றேள்?!//
உங்க பொசிஷனும் எனக்கு புரியுது.
ஏன்யா,
ஒரு மனுஷன் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த 500 கோடிய வச்சுண்டு நிம்மதியா வாழனும்னாலும் விடமாட்டீங்க!
இன்னொரு மனுஷன் கஷ்டப்பட்டு திருடி சேர்த்த 10000 கோடிய வச்சுண்டு நிம்மதியா வாழனும்னாலும் விடமாட்டீங்க!
முதல்வராக நடிக்கவே நடுங்கிய ஒரு அப்பாவியிடம் போய் ஊழல் அது இது ன்னு கொக்கி போட்டால் பாவம் என்ன செய்வார்?
பயணங்கள் படம் ப்ரித்விராஜ்,ச்சாம்ஸ்
comedy track பார்க்கலையா?
போனா போகட்டும் விடு ராணா!
நமக்கு இருக்கும் போதையில் நாம் பிலிம் ரஜினிக்கும் உண்மையான சிவாஜிராவுக்கும் (அப்படி என்று ஒன்று இருக்கிறது, இருக்கிறார் என நினைக்கிறேன், எனக்கு பிரமையாக இருக்கலாம்) இடையில் வேறுபாடுகள் இருப்பதாக நினைப்பதே இல்லை. அவர் சிங்கிளா வந்தாலும் சிங்கமாத்தான் வருவார் என்றும் (அவர் டீ ஆகத்தான் வந்தாலும்கூட), ஒரு முறை சொன்னால் 1௦௦௦ முறை பேசினார்போல (உளறினார்போல?)வும் நினைக்கிறோம். அவர் ஒரு துறையில் உயர்நிலை(!) அடைந்தால், அவருக்கு மற்ற துறைகளைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறோம் - இது தவிர, அவரே தனக்கு தகுதிக்கு மீறிய தகுதிகள், விகுதிகள் இருக்கின்றன என்று நினைத்துக்கொள்கிறார் வேறு - இதற்கு அவருடைய லட்சக் கணக்கான விசிலடிச்சான் குஞ்சுகள் காரணம். இது ஒரு தொடரும் சோகக் கதை.
ஜெயலலிதாவுடைய கொசுக்கடியைப் பார்த்து அப்போது வீரிட்டேழுந்தாரே, என் இந்த அகிலமகா ஊழலைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்றால், இப்படி வழவழாகொழகொழாவேன்று பேசுகிறாரே என்றால் - அது நம்மை எங்கும் இட்டுச்செல்லாது என நினைக்கிறேன்.
நம் தமிழகத்தில் நாம் அளவுக்கு மீறி, பிலிம் cutout-களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என நினைக்கிறேன்...
Everyone, including film rajini (and including myself), has a right to his/her opinion - but they never have a right to be taken seriously...
கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி:
கேள்வி:- தி.மு.கழகம் தேர்தல் அறிக்கையில் என்ன கூறியிருக்கிறதோ அதை பரவலாக தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசியிருக்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதை எங்கேயும் அவர்கள் பிரச்சாரம் செய்ய வில்லையே?
பதில்:- அது தான் பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை. அவர்கள் என்னைப் பற்றித் தான் தாக்கிப் பேசினார்களே தவிர, அவர்களுடைய தேர்தல் அறிக்கையைப் பற்றி எங்கும் பேசியதாகத் தெரிய வில்லை.
கேள்வி:- வன்முறைக்கு தி.மு.க. முயற்சி செய்வதாகவும் நேற்று ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்களே?
பதில்:- அதைப்பற்றி நான் விளக்கம் அளித்திருக்கிறேன். நேற்றைக்குக் கூட விக்கிரவாண்டி தொகுதியிலே தி.மு.க. பஞ்சாயத்துத் தலைவரை அ.தி.மு.க.வினர் கொலை செய்திருக்கிறார்கள் என்று செய்தி வந்துள்ளது. யார் வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி:- வாக்காளர்கள் எதை மனதிலே கொண்டு வாக்களிக்க முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்:- தமிழகத்தின் நன்மையை - ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு வாக்களிப்பார்கள்.
//அவர் பொசிஷன்ல இருந்தாதான் கொஞ்சமாவது புரியும்.//
ரொம்ப கரெக்ட்.
ஜயலலிதாவை எதிர்த்து வேண்டுமானால் வெடிகுண்டு கலாசாரம் பரவி விட்டது, தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றெல்லாம் பேசலாம். யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
தலைய எதிர்க்க முடியுமா? அப்புறம் இங்கே தமிழ்நாட்டில் வசிக்கத்தான் முடியுமா? கன்னடக்காரா கர்நாடகாவுக்கே ஓடு என்றெல்லாம் துரத்த மாட்டார்களா? வீட்டுக்குள் புகுந்து அடிக்க வர மாட்டார்களா? கல்யாண மண்டபத்தை ஏதாவது காரணம் சொல்லி இடிக்க வர மாட்டார்களா?
இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது, குடிகாரன், மன நோயாளி பட்டங்கள். இதெல்லாம் சூட்டி அழகு பார்க்க மாட்டார்களா?
நான் சும்மா வம்பிழுப்பதற்காக இதைச் சொல்லவில்லை. ரஜினி மட்டும் அரசியலுக்கு தலையை எதிர்த்து வந்திருந்தால் இன்று விஜயகாந்திற்கு ஏற்பட்டிருக்கும் நிலைதான் அவருக்கும். அதே அவப்பெயர்கள், பட்டங்கள், ஆபாச அரங்கேற்றங்கள் தான்.
என்ன வடிவேலுக்குப் பதிலாக மனோரமா அல்லது இன்னபிற நகைச்சுவை நடிகர்கள் சொம்பு தூக்கிக் கொண்டு பிரச்சாரத்திற்குக் கிளம்பியிருப்பார்கள், அவ்வளவுதான்.
அறிவு, திறமை, ஆற்றல், மக்கள் சக்தி ஆதரவு, மீடியா பலம் எல்லாம் இருந்தும் தலைக்கு பயப்படும் ரஜினி ... சாரி, இதை ஒரு ரசிகனாகச் சொல்ல கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது - ஒரு கோழைதான். சந்தேகமே வேண்டாம், ரஜினி ஒரு கோழைதான்.
தலைவன் டயலாக் இப்படினா....
தொண்டன் டயலாக் இப்படி...
//ஆனால் நிச்சயம் அடுத்த 5 ஆண்டுக்குள் ஒரு மாற்றுத் தலைமை, நல்லவர் தலைமை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது!//
முட்டு சந்துல
மல்லாக்கா படுத்துகினு
மலையேற ஆசைபடுறானுங்க...
உண்மையாகவே இவனுங்க வழி... தரித்திர வழி...
ம்ம்ம்.... விஜயகாந்த பார்த்து இவனுங்களுக்கு எல்லா வழியிலையும் பொகை வருது...
தப்போ சரியோ அந்தாளு இறங்கி வேலை செய்யறாரு...
இந்தாளு படத்துலையும் சரி...
நிஜத்திலும் சரி ஒன்லி டயலாக் மட்டுத்தேன்...
Rajini was down with fever for last few days. Thats why the usual speech style is missing..
And he has to be more careful on what he says.. especially during election time..
As J.Ramki said - Avar positionla iruntha ungalukku theriyum..
<<<< சந்திரமௌளீஸ்வரன் said...
ஒருவரின் ஒரு கருத்தை வைத்தே அவர் என்ன செய்யலாம் என்ன செய்யலாகாது எனும் இவ லாஜிக் புல்லரிக்குது>>>>
அப்படிங்களா? அவர் கருத்தை ஒதுக்கிவெச்சுட்டுதான் அவரைப் பார்ககணுமா? அவர் வேறு அவர் கருத்து வேறா? -- ம்ணிகண்டன்
சரி...சரி...
தலைவர கேட்டுட்டாங்க... ஏதோ சொல்லிட்டாரு... அதை வச்சு வெளில இருக்கறவங்க அரசியல் பண்ண ரெடியா இருக்காங்க... ஓகே...
இங்க, நாம கூடவா இட்லிவடை? வேண்டாமே...
இட்லிவடை நீங்களே டூப்ளிகேட் பெயரில் தான் எழுதி வருகிறீர்கள் ஒரு பாதுகாப்புக்கு..நீங்கள் ரஜினி பயப்படுகிறார் என்று கூறுகிறீர்கள். என்னமோ போங்க ;-)
//போறும்னு போட்டு ஏன் கொண்டையை வெளியே காட்றேள்?!// கருணாநிதியை எதிர்க்கறவன் பூராவுமே கொண்டை போட்டவன் தானா? உங்க சைக்கோதனத்துக்கு அளவே இல்லையா?
http://www.youtube.com/watch?v=fbFLVtMQl5A
This one is audible.
செல்லாது செல்லாது வீடியோ வ மாத்து. இந்த லிங்க போடு.
http://www.youtube.com/watch?v=fbFLVtMQl5A
Dear Idlyvadai,
Please see this video too.
http://www.youtube.com/watch?v=fbFLVtMQl5A
I agree that Rajini is not an eloquent speaker. But remember, that he has clarity of thought and has intelligence. He will be a good choice to head the government. He can always have a good PRO.
I believe that he will join VAIKO before the next election. VAIKO can be his PRO and Delhi in charge person.
Anyways, this is my opinion. Let us wait and see.
By the way, all 4 members of my family voted today and we voted for the ADMK, not because we prefer Jaya but because we want Karunanidhi out.
ராம்கி,
//அவர் பொசிஷன்ல இருந்தாதான் கொஞ்சமாவது புரியும். பைதபை, மாமோய்.. போறும்னு போட்டு ஏன் கொண்டையை வெளியே காட்றேள்?!
//
ஆமாம், ரொம்ப 'குஷ்டமான' பொஸிஷன் தான், பாவம் ;)
இ.வ கொண்டையை காட்றது சகஜம் தானே, உமக்கு ஏன் இத்தனை ரென்ஷன்! அரசியலில் இதெல்லாம் ஜகஜமப்பா :)
ஐகாரசையும், ஹரனையும் இன்னும் காணோமே?
ivar thelivaa pesura annikku tamil nattula ooolal atra aatchi varum.... :)
Puriyatha maari pesinaathaan Thalaivan.. Rajini the great thalaivar.
எவண்டா அது! கொண்டைய வெளிய காட்டறேள்னு கிளம்பியிருக்கறது. கொண்டைய பாக்க பிடிக்கலேன்ன நீ வேணா.... ஊஹூம் .. சரி வேண்டாம்...இத்தோட போதும்
I'm sure Rajni won't enter politics, he knows he's not good at it. The interviewer maliciously tries to put the word -'corruption' into his mouth. And he escapes from her unfashionably. As someone said, he wasn't prepared with answers, which just shows he has no intention to serve people or enter politics or to maintain his own image. I never saw Rajni as a leader, he's just another actor. Simbu is a greater superstar, compared to Rajni.
When Rajni foolishly clapped for Ajith's speech, I've concluded. Though it's very much apparent, that he didn't like DMK, as he spoke of people's problems in the last rule, he just refrained from voicing it openly. Rajni has cleverly avoided the slew of vengeance attacks (similar to what Vijay faced) from the political parties.
When there is a unpredictable larger crowd(TN people) who vote for quarter and biriyani, how would even the most bravest men, voice their opinion?. Won't that make them look foolish? His opinion after all doesn't matter to most of these folks, who just sells their vote. If he had said something about DMK openly,he will be the one who'll undergo problems like Vijay.
We TN people doesn't deserve to have good men like Rajini in politics.
Pathetic.. Even he doesn't want to raise / share his view about corruption, how can he be a good Leader?
விடலைப் பருவத்துக்கேயுரிய அறிவு வளர்ச்சியும் உதிரித்தனமும் கொண்ட உழைக்கும் வர்க்கத்து இளைஞர்கள்தான் ரஜினி ரசிகர்களில் ( எல்லா ரசிகர்களும்தான் ) முக்கியமானவர்கள். குழப்பமான, உதிரித்தனமான மனோபாவத்தில் வளரும் இவர்கள் ரஜினியைத் தலைவா என்றும் தெய்வமே என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த விடலைத்தனம் இத்தோடு முடிந்து விடுவதில்லை. பிழைப்புவாத அரசியலின் சமூக அடித்தளமாக இவர்கள் மாறுகிறார்கள். அதிகாரத்துக்கு வரும்போது இதே கூட்டம் அவர்களது குண்டர் படையாக மாறுகிறது. இந்தக் கொக்குகளின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடித்து விடலாம் என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகளின் கனவு.
ராஜ்குமாருக்குக் குரல் கொடுத்த ரஜினி, காவிரிக்குக் குரல் கொடுக்காதது ஏன் என்று கேட்டபோது “தேவையில்லை சார், அவர் ஒரு பிசினஸ்மேன் “என்று திமிராகப் பதில் சொன்னார் ஒரு ரசிகர் மன்றத் தலைவர். “நீங்கள் முசுலீமாக இருக்கிறீர்கள்; ரஜினியோ ஆர்.எஸ்.எஸ் சாமியார்தான் குரு என்கிறாரே” என்று கேட்டதற்கு ” எங்களுக்குத் தலைவர் அவரு. அவருக்கு யார் குரு என்று எங்களுக்குக் கவலையில்லை”என்று தெனாவெட்டாகப் பதில் சொன்னாராம் திருச்சி நகரத் தலைவர் ஷாகுல் ஹமீது.
அரசியல், சமூகப் பிரச்சினைகளில் ரஜினியின் நிலை பற்றிச் சொன்னால் ” அவர் அரசியல்வாதி கிடையாது; நடிகர்” என்கிறார்கள் ரசிகர்கள். அப்புறம் ” தலைவா, தமிழகத்தைக் காப்பாற்று என்று எழுதுகிறீர்களே “என்று கேட்டால், ” அவர் அரசிலுக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்றுவர்” என்று திருப்பிப் பேசுகின்றனர். ஓட்டுப் பொறுக்கிகளை விஞ்சுகிறது ரசிகர்களின் சந்தர்ப்பவாதமும் திமிரும். “தலைவா, காங்கிரசில் சேர்; தனிக்கட்சியாவது தொடங்கு” என்று 1995 இல் ரஜினிக்கு வேண்டுகோள் விட்டவர்கள் இந்த ரசிகர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, பிராந்திக் கடை, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை நடத்தும் ரசிகர் மன்றத் தலைவர்கள், வட்டம் மாவட்டத்துக்குரிய அனைத்துத் தகுதிகளுடனும் தலைவராக இருக்கின்றனர். பெயர்ப்பலகை மாற வேண்டியதுதான் பாக்கி.
இந்தக் கும்பல் மேலிருந்து கீழ் நோக்கி எப்படிக் கிரிமினல்மயமாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாபா டிக்கெட் விற்பனை. பாபா படத்தை விநியோகஸ்தர்கள் மூலமாக விற்காமல் நேரடியாகத் திரையரங்குகளுக்கு விற்றிருக்கிறார் ரஜினி. பத்திரிகைகளின் கணிப்புப்படி மொத்த வருமானம் 70 கோடி. பன்மடங்கு தொகை கொடுத்து படத்தை வாங்கிய தியேட்டர் அதிபர்கள் ஒவ்வொரு காட்சியையும் ஏலம் விட்டுள்ளனர். ரசிகர் மன்றத்தின் நகரத் தலைவர்களுக்கு முதல் காட்சி. திருச்சியில் ஷாகுல் ஹமீதுக்கு 4 காட்சி; கலீலுக்கு 2 காட்சி. இதை ரசிகர்களிடமே பிளாக்கில் விற்று சில லட்சங்களை இவர்கள் சுருட்டிக் கொள்வார்கள்.
மற்ற காட்சிகளனைத்தும் பகிரங்க ஏலம். ரசிகர்கள், ரசிகரல்லாதவர்கள் எனப் பலரும் ஏலம் எடுத்துள்ளனர். 1000 இருக்கைகள் கொண்ட அரங்கில் ரூ. 50 ( சராசரி ) வீதம் ஒரு காட்சியின் உண்øமையான விலை 50,000. கேளிக்கை வரி இதற்கு மட்டும்தான். ஒரு காட்சி ஒரு லட்சம் முதல் ஒன்றேகால் லட்சம் வரை ஏலம் விடப்பட்டிருக்கிறது. ஒரு டிக்கெட் 100, 125க்கு வாங்கி 200, 250க்கு விற்று விடலாமென்றும் ஓரே நாளில் 50, 60 ஆயிரங்களைப் பார்த்துவிடலாம் என்றும் கனவு கண்டவர்கள் ஏலமெடுத்திருக்கிறார்கள். வீடு , நகையை அடமானம் வைத்து, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியும் பலர் முதலீடு செய்திருக்கின்றனர்.
படம் தோல்வியடைந்ததால் இப்படி நூற்றுக்கணக்கான பேர் தமிழகமெங்கும் திவாலாகியிருக்கின்றனர். மனைவிக்குத் தெரியாமல் நகையை வைத்து ஒரே நாளில் சம்பாதித்து மனைவியிடம் காட்டி அவளை ஆச்சரியத்திலாழ்த்த விரும்பியவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாகச் சொன்னார் ஒரு திரையரங்க அதிபர்.
திருச்சி நகரில் ஒரே நாளில் இத்தகைய ‘ முதலீட்டாளர்கள் ‘ பத்துப் பேரைச் சந்தித்தோம். எல்லொரும் 40,000 முதல் 75,000 வரை இழந்தவர்கள். தீடீர்க் காசு பார்க்க விரும்பிய இந்தக் கூட்டம் ஏமாந்து விட்டது குறித்து நாம் வருந்தத் தேவையில்லை. ஆனால் ரஜினி அடித்த கொள்ளையில் எத்தனைத் தாலிகள் அறுந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.
இந்த அர்சத் மேத்தாவின் பெயர் பாபா!
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவரது கார்பவனிக்காக டிராபிக்கில் சிறிது நேரம் நின்றதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் உணர்வு பொங்கி எழ காரணம். கூடவே மணிரத்தினம் வீட்டுக் காம்பவுண்டில் யாரோ சிலர் நமுத்துப் போன வெங்காய வெடியை போட்டதும், “தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை” என்று வெடித்தார் ரஜினி. சோ,ஊடகங்கள் பெரு முயற்சி செய்து ரஜினியின் பலூன் இமேஜை ஊதிப்பெருக்க எது எப்படியோ கடைசியில் அண்ணாத்தேயின் அரசியல் விஜயம் காமடியாக முடிந்து விட்டது.
அரசியலுக்கு தான் வருவதாக திரைப்படங்களில் பஞ்ச் டயலாக் பேசியதெல்லாம் தனது சொந்தக் கருத்தல்ல, இயக்குநர் எழுதிக் கொடுத்ததைத்தான் பேசினேன் என்று பரமாத்மா குசேலனில் வசனம் பேசியது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது அரசியல் இமேஜ் ஒரு மாயை என்கிறார் பரமாத்மா. பக்தர்களோ அது மாயை என்று தெரிந்தாலும் தங்களை அந்த மாயையில் வைக்குமாறு வற்புறுத்துகிறார்கள். இது பக்தர்களின் பிழையல்ல. ஏனெனில் அவர்கள் அந்த மாயையை நம்பித்தான் பரமாத்மாவுக்கு சூப்பர் ஸ்டார் பட்டமும் கூடவே வட்டிக்கு வாங்கிய காணிக்கையையும் கொடுத்து பூஜை செய்கிறார்கள். காணிக்கையை வாங்கி கல்லாவை நிரப்பிவிட்டு தான் ஒரு எளிய மனிதன் என்று புரூடா விட்டால் அதை நம்புவதற்கு பக்தர்கள் என்ன மாங்காய் மடையர்களா?
ராணா பட விளம்பரத்துக்கு இட்டிலி வடை காசு வாங்கிட்டாங்களா? தகவல் அறியும் சட்டத்துல தெரிஞ்சுக்க எதுனா வாய்ப்பு இருந்தா விஜயகாந்த, விஜய் போன்றவர்களிடம் கேட்டு சொல்லுங்க.
ஆக்ச்ச்சுவலி இந்த ஊழல் நான் கூட ஆக்ச்சுவலி அதைப் பத்தி பேசறதா இருந்தேன் ஆக்ச்சுவலி எனக்கு ஊழல்னோன்னியே ஆக்ச்சுவலி ஜன்னி வந்திட்டதாலே ஆக்ச்சுவலி பேச முடியல. ஆக்ச்சுவலி மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னா ஆக்ச்சுவலி அது ரொம்ப கஷ்டம் ஆக்ச்சுவலி நான் என்ன நினைக்கிறேன்னா ஆக்ச்சுவலி அது எனக்கே ஆக்ச்சுவலி தெரியாது. அன்னா ஹசராவுக்குக் கூட ஆக்ச்சுவலி நான் ஆதரவு தெரிவிக்கலாமான்னு ஆக்ச்சுவலி அண்ணன் அழகிரி கிட்ட கேட்டப்ப அவர் தான் ஆக்ச்சுவலி ஏனுங்க ரிஸ்க் எடுக்கிறீங்கன்னு ஆக்ச்சுவலி சொன்னதினாலே நான் ஆக்ச்சுவலி போக முடியல. இப்பப் பாத்திங்கன்னா ஆக்ச்சுவலி விலை வாசி எல்லாம் ஏறிட்டதா ஆக்ச்சுவலி சொல்றாங்க ஆனா நான் அதப் பத்திப் பேசினா ஆக்ச்சுவலி என் கல்யாண மண்டபம் எஸ்ட்டேட் எல்லாம் ஆக்ச்சுவலி காணாமா போயிரும் அதனால் நான் ஆக்ச்சுவலி வாயப் பொத்திக் கிட்டுப் போவதுதான் ஆக்ச்சுவலி எனக்கு நல்லது.
இவர் பேசும் பொழுது எத்தன முறை ஆக்ச்சுவலி சொன்னார் என்று எண்ணியவர்களுக்கு ஆக்ச்சுவலி மூளை வலி வந்துடும். அதென்ன அசட்டுத்தனமான பேச்சோட அசட்டுத்தனமா ஒரு கூலிங் க்ளாஸ் வேற. உலக நாயகன் முத்தமிழ் வித்தவன் கூட உக்காந்து சினிமா பாக்குறாரு இவரு ஆக்ச்சுவலி மென்று விழுங்குகிறார். இப்படி மானம் கெட்டப் பிழைப்புக்களுக்கு எல்லாம் ஊருக்குள்ள உலக்க நாயகன், சூப்பர் ஸ்டார்னு வெட்க்கம் கெட்ட பேரு வேற. இவிங்கிளியும் நம்புறதுக்கு இன்னும் நாலு கேனயங்க இருக்கும்ப் போது இதுவும் பேசுவாய்க ஆக்ச்சுவலி இன்னமும் பேசுவாய்ங்க
Ha...Ha....What Silly Guys........You peoples are (Including the author of this article) even you don't have a guts to come publicly and talk this same statements.........But you are giving the yellow colour comments too......with the support of algates......
mr. idly vadai,
i am a member of rss and also a fan of rajini.
RSS has many sister organisations like bms (world largest trade union), abvp (world largest students union)and many more. But, they cant get rid of yediyurappa from the cm post.
When RSS cant do this? how can you expect rajini who is a single man can do this.
In our country, its very difficult to open mouth or act against corruption.
rajesh. v
தொடர்ந்து தான் ஒரு லூசு நிருபித்துக்கொண்டே இருக்கிறார்.. இவர் கிட்ட எதுக்கு போய் கருத்து கேட்கிறாங்க... இவர் எந்த பொது பிரச்சினைக்காக போராடியிருக்கிறார்.. ஒரு அன்னா ஹாசரே விடம் கருத்து கேட்டால் கூட நியாயம் என்று சொல்லலாம்.. இவர் என்ன பிடுங்கினார்...? இவரது காரை வழிமறித்த ஒரே காரணத்துக்கா வே ஜெ விரட்டும் வேண்டும் என்று சொன்னார் ஊழலுக்காக அல்ல...
இப்படி வெட்டி பேச்சு பேசி பேசி, யாராச்சும் இலவசமா குடுப்பாங்களா? ஓட்டுக்கு எவ்ளோ தருவேன்னு? வெட்கமே இல்லாம பிச்சை கேட்குற வாக்காளர்கள் இருக்குற வரைக்கும், ரஜினி மட்டும் இல்ல யாருமே அரசியலுக்குள்ள வர பயப்படுவார்கள். அவர் என்ன சொல்றாரு? என்ன செய்றாரு? ன்னு அடுத்தவன பார்த்து அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு விட்ட நம்மை போல மக்கள் இருக்குற வரைக்கும் அவர மாதிரி இருக்குறதுதான் நல்லது. இன்னிக்கு அவரை கோழை ன்னு சொல்றவங்க, தான் எவ்ளோ பெரிய வீரன் ன்னு சுய பரிசோதனை செய்தால் தெரியும். படம் பார்த்தோமா, கை தட்டி, விசில் அடிச்சோமா ன்னு போகணும். யார பார்த்தாலும் நீங்க அரசியலுக்கு வருவீங்களா? உங்க ஆதரவு யாருக்கு? ன்னு வெட்கமே இல்லாம மீடியா, reporters கேட்க வேண்டியது. இலங்கை பிரச்சனையில் எல்லா பத்திரிக்கைகளும் நடுநிலமையாகவா நடந்து கொண்டன? எல்லா தப்பும் நம் மீது வைத்துக்கொண்டு அவர் சரி இல்லை. இவர் சரி இல்லை ன்னு நாமளும் கொஞ்சம் கூட சொரணை இல்லாம சொல்றது தப்பு. நம்மை யாராச்சும் தப்பு சொல்லி விட்டால் உடனே அதை திருத்தி கொள்ளாமல் தவறை சொன்னவனை எப்படிடா தப்பு சொல்றது ன்னு நெனைக்கும் மனப் பக்குவம் இல்லாதவர்களிடம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று அவர் தெளிவாக இருக்கிறார். 2 பெண்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டார். பேரன், பேத்தி பார்த்துட்டார்.லைப் ல பக்காவா செட்டில் ஆயிட்டார். இன்னும் மத்தவங்கள பார்த்து வாய பொளக்காம, உங்கள பாருங்க. அவர் உளறினால் என்ன? அரசியலுக்கு வந்தால் என்ன? வரலேன்னா என்ன? மக்கள் தான் பயங்கரமான அரசியல்வாதிகள்.
//ஜெயலலிதாவுடைய கொசுக்கடி//
Supar adimai.
ஏப் 20-ல் ரஜினியின் ராணா பூஜை - அப்படின்னு சினிமா செய்தி வருது. உடனேயே, "2 ஆண்டுகளில் ரஜினி அரசியல் பிரவேசம்!" என்று அரசியல் செய்தி வருது. 1+1=2!!
அவரை நம்புறாங்களே! அவர் பாக்கட் நிறையுதான்னு தான் பார்ப்பார்!
வருங்கால முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க
வருங்கால முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க
காமராசரை தோற்கடித்ததற்கு
இதுவும் வேண்டும்! இன்னமும் வேண்டும்!
ஏன் சினிமாவில் முதல்வனை, தலைவனை தேடுகிறீர்கள்?
ஒரு குடும்பம் நாட்டையே கொள்ளை அடித்தும் காசு வாங்கி ஒட்டுபோடும் உங்களுக்கு எதற்கு தேர்தல், தலைவன்?
அப்படி ரஜினி தான் வர வேண்டும் என்று நினைத்தால் ப்ளாக்-ல் கமென்ட் அடிக்காமல் ஒன்று திரண்டு அவர் வீடு முன் போராட்டம் செய்யுங்கள். இல்லை என்றால் உங்கள் வேலையை பாருங்கள்.
இந்த தேர்தலில் திமுகஜெயிக்க வேண்டும்.
அடுத்த நாள் தேர்தல் கமிஷன் ஆபிசே கொளுத்தப்படும்.
அதன் பிறகு தமிழ் நாட்டில் தேர்தலே நடக்காது!
இட்லிவடையே இட்லிவடைதான்!! துப்பறியும் சாம்பு கதை மாதிரி எதோ செய்யப் போய் ஒரு நல்லது நடக்குது ... ஒற்றை வரி இடுகைய்ல்,,, ரஜனி இந்த தேர்தல்ல குரல் வுட்டுருந்தா என்ன ரி-ஆக்ஷன் வந்திருக்கும்னு தெரிஞ்சு போச்சு பாருங்க!! நல்ல வேளை...ரஜனி முன்னாடியே தெளிவா எதுவும் உளறித் தொலைக்கவில்லை!!
-- சகமனிதன்
It's not possible to voice our opinion all the time,it may get us into trouble and moreover rightnow Rajini is just an actor and not a political or a social worker.Even if he has said something about corruption,then whether the things around will take a change? He was struggling with the voice as he was not well,Even if we get cold,our voice will be like that only!!!! There are lot of people who are causing problems to the people.Spaek about them rather than speaking about a person who just does his duty like u and me...
A RK fan:
ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த முதல்வர்!
தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.
ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவரும், ஏதோ ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடமாட்டாரா என ரசிகர்களால் நம்பப்படும் (இன்னமும்) ரஜினிகாந்த், இந்த விஷயத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சறுக்கியிருக்கிறார்.
நேற்று அவர் வாக்களித்த போது, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போது, ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது.
அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை. அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ளனர் புகைப்படக்காரர்களும் தொலைக்காட்சி கேமராமேன்களும். அவர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை!
ஓட்டுப் போட்ட கையோடு, வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரை, ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்க, அவரும் ஊழல், விலைவாசி, விவசாயிகள் நலன், அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார்.
விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்கும், முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேர, ஆட்சி மேலிடம் ஏக அப்செட்.
இந்த நிலையில், நேற்று மாலையே முதல்வர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்க்க வேண்டிய சூழல் ரஜினிக்கு. ரஜினி ஓட்டுப் போட்ட விவகாரம் முதல்வருக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள்.
முதல்வருடன் இருந்த ஒரு முக்கிய அதிகாரி நம்மிடம் இப்படிச் சொன்னார்: "படம் ஆரம்பிக்குமுன், அங்கு நின்றிருந்த வைரமுத்துவிடம், 'நீங்களெல்லாம் இந்த மனிதருக்கு (ரஜினிக்கு) எந்த அளவு பரிந்து பேசியிருக்கிறீர்கள். ஆனால் இவர் செய்திருக்கிற வேலையைப் பார்த்தீர்களா... இவரது நம்பகத்தன்மை தெரிகிறதா.. வாக்களிப்பது அவர் இஷ்டம். ஆனால் அதைப் படம்பிடிக்கவும் அனுமதித்திருக்கிறார்கள். அடுத்து அவர் அளித்த பேட்டி.. விலைவாசி நாடெங்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமது அரசு அதைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தெரியாதா.. விவசாயிகளுக்கு இந்த அரசை விட அதிகம் செய்தது யார்.... இதெல்லாம் சரிதானா?", என்று முதல்வர் கேட்க, இருக்கையில் உட்கார முடியாமல் நெளிந்த ரஜினி, படம் முடிந்த கையோடு, காரில் ஏறிப் பறந்தாராம்!
ஆட்சியாளர்களிடம் மிகுந்த நெருக்கமாக இருந்த ரஜினியின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், அந்த 'பத்திரிக்கை ஆசிரியரான அரசியல் தரகர்' கம் விமர்சகர்தான் என்றும் உடன் படம் பார்த்தவர்களிடம் கமெண்ட் அடித்தாராம் முதல்வர்!
ஏற்கெனவே 2004ம் ஆண்டு தேர்தலில் பாமக மீதான கோபத்தில், அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களித்தேன் என வெளிப்படையாகக் கூறி ரஜினி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
http://thatstamil.oneindia.in/movies/gossip/2011/04/14-karunanidhi-slams-rajini-ponnar-shankar-show-aid0136.html
Whether ENDHIRAN 2 will possible in sun picture production?
வாக்க பதிவு என்பது தனி மனித உரிமை ரஜினி வாக்கு போடும் போது அவரை சுற்றி எத்தனை மீடியா கேமரா !! இது மிகவும் தவறு அவர் யாருக்கு வாக்கு பதிவு செய்தார் என்று அனைவரும் பார்க்க கூடாது !!
He said, Actually Actually 14 times in this 15 seconds clip, Iiyooo Haiyooo..Poonga Basu..
இதற்கு தானே ஆசைப்பட்டாய் இட்லிவடை!!??
//ரஜனி முன்னாடியே தெளிவா எதுவும் உளறித் தொலைக்கவில்லை// ஓஹோ அப்போ தெளிவாப் பேசுறதே இப்டியா. இன்னும் உளறினா எப்படி இருக்குமோ.. :)))))
-ஶ்ரீனி
THis link is bogus... Rajini's speach as clear in following link... but we can see he is not ready to comment on any politician directly...
http://www.youtube.com/watch?v=fbFLVtMQl5A
If IV intention is to spoil rajini's image, he can use honest means.. not by sharing dubbed video links..
Post a Comment