பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 11, 2011

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - விஸ்வாமித்ரா

கடந்த நான்கு நாட்களாக மெழுகுவர்த்திகளுக்கு நாடு முழுவதும் கடும் டிமாண்ட். நாடெங்கும் ஊழலை எதிர்த்துப் புரட்சி வெடித்து விட்டதாகப் பேச்சாக இருக்கிறது. நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் உச்சபட்ச டெஸிபல்களில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜீன்ஸ் வாலாக்களும், ஜோல்னாப் பையர்களும், முதியவர்களும், இளையவர்களும் இந்தச் சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் நாட்டை ஊழல்வாதிகளில் இருந்து மீட்கக் கிளம்பி விட்டார்கள். எகிப்திலும், டுனீஷியாவிலும், ஏமனிலும் கிளம்பிய புரட்சிப் புயல் உலகக் கோப்பை முடிந்த, ஐ பி எல் ஆரம்பிக்காத சுபயோயக சுபதினத்தில் வந்து விட்டதாகவே ஊரெங்கும் பேச்சாக உள்ளது. தமிழ் நாட்டுக்காரர்களுக்கு இது வரை தெரிந்த ஒரே ஒரு அண்ணா - [ edited ]தெருவில் இருக்கும் அண்ணா சிலைகள் மட்டுமே. அவர் ஒருவரே இந்த உலகத்தில் அறிஞர். அவர்தான் அண்ணா என்று நினைத்தவர்களுக்கு அண்ணா அண்ணா என்று மண்ணாய்ப் போன தமிழர்களுக்கு இப்பொழுது திடீரென்று மஹராஷ்டிரத்தில் இருந்து ஒரு டூப்ளிக்கேட் அண்ணா கிளம்பியிருப்பது கண்டு ஒரே குழப்பம். கடற்காற்றின் தாலாட்டில் உறங்கும் அண்ணா எங்கே இப்படி காந்திக் குல்லாயுடன் கிளம்பி விட்டாரே என்றொரு மயக்கம். தென்னாட்டு காந்தி என்று அழைத்து காந்தியைக் கேவலப் படுத்தியது போக இப்பொழுது ஒரு வடநாட்டு அண்ணாவை காந்தி என்கிறார்களே காந்திக்கும் அண்ணாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்பது போன்ற சந்தேகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் காந்திக்கும் சோனியாவுக்குமே சம்பந்தம் இருக்கலாம் என்றால் காந்திக்கும் அண்ணாவுக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாதா என்று சந்தேகங்களை ஓரம் கட்டி விட்டு மெழுகுவர்த்தியுடன் கிளம்பி விட்டார்கள். இப்பொழுதுக்கு ஊழலை எதிர்த்துக் கிளம்பி விட்டார்களாம். தி மு க காரன் நான் மெழுகு வர்த்தி ஏற்றப் போற சமயமா வந்து காசு கொடுக்க வரப் போறான் கொடுத்தால் பத்திரமா வாங்கி வை என்று முன் ஜாக்கிரதையாகச் சொல்லி விட்டுக் கிளம்பியிருக்கிறார்கள் மெழுகு வர்த்தி ஏற்ற. சிறிய தீப்பொறியாகக் கிளம்பிய இந்தப் போராட்டம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களைத் தீண்டி அவர்களை வெளியே இறங்கி அவர்களுக்குத் தெரிந்த வகையில் தங்கள் ஆதரவை வெளியிட வைத்திருக்கிறது. சமீப காலங்களில் அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிகளும் கூட்டமாகச் சேர்ந்து கோஷம் போடுவதும் நம் மக்களிடமும் அதே போன்ற ஒரு ஆர்வத்தை இந்தப் போராட்டம் தூண்டியிருக்கலாம். அதை விட தொடர்ந்து இடை விடாது சோனியா காங்கிரஸ் தன் முதுகெலும்பில்லாத ஊழல் பிராணியான மன்மோகனைக் கொண்டு செய்யும் அக்கிரமமான மாபெரும் ஊழல்களும், சோனியா காங்கிரஸின் ஆணவப் போக்கும், ஊழல்களை மறைக்கும் மாய்மாலங்களும் மக்களிடம் இந்த உத்வேகத்தை அளித்திருக்கலாம். எப்படி இருந்தாலும் ஒரு சிறு பொறி வேகமாகப் பரவக் கூடும் என்பது உறுதிப் பட்டிருப்பது நல்லதொரு விளைவே.அண்ணா ஹசராவேப் பற்றி இந்நேரம் தெரியாதவர்கள் இந்தியா உலகக் கோப்பை வென்ற விஷயம் தெரியாதவர்களாக மட்டுமே இருக்க முடியும். அந்த அளவுக்கு நாலே நாட்களில் இந்த முந்நாள் ராணுவ டிரக் டிரைவரும் இந்நாள் ஜன்லோக்பால்வாதியுமான அண்ணா பற்றி ஒரு பெரிய புத்தகம் போடும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு நாலெட்ஜ் வளர்ந்து விட்டது. ”அண்ணா ஹச்சாரே வச்சாரே ஆப்பு” என்றொரு புத்தகத்தை அவர் உண்ணாவிரதத்தை முடித்து தண்ணீர் குடிக்கும் முன்னாலேயே வெளியிட்டு விடும் என்றும் நம்பலாம். சுருக்கமாக ஒரு முன்கதைச் சுருக்கம் மட்டும் கீழே:

அண்ணா ஹசாரே ஒரு காந்தியவாதி. தன் ஊரில் பல சீர்திருத்தங்கள் செய்து ஒரு மாதிரி நகரமாக மாற்றியமைத்த வல்லவர். ஊழல்களுக்கு எதிராக பல்வேறு சீர்திருத்தங்களை மாநில அளவில் கொண்டு வந்திருப்பவர் மத்திய அளவில் அதற்கான ஒரு சட்டம் வேண்டும் என்று போராடி வருபவர். இந்தியாவில் ஆளும் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு ஊழல்களைக் கற்றுக் கொடுக்கும் அதிகாரிகளும் கேள்வி கேட்ப்பார் இல்லாமல் பீரங்கி ஊழல் முதல் ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை செய்து வந்தாலும் யாரும் எதற்காகவும் தண்டிக்கப் படாமல் இருப்பது கண்டு மனம் வெதும்பி இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு தீர்மானத்துடன் இறங்கியிருக்கிறார் அண்ணா. இவர் நிஜமாகவே நம் அனைவராலும் அண்ணா என்று அழைக்கப் படுவதற்குரிய தகுதி உடையவர். கம்ப ரசம், ஆரிய மாயை எழுதிய, ஸ்பெக்ட்ரம் ஊழல்களின் ஆபாச அண்ணா அல்ல அவர். ஊழல்களின் ஆணி வேரான அண்ணா அல்ல இவர் அந்த வேரில் வெந்நீரை உற்ற வந்திருக்கும் காந்தீய அண்ணா.

சாந்தி பூஷன் சட்ட அமைச்சராக இருந்த பொழுது அமைச்சர்களையும அதிகாரிகளையும் விசாரிக்கும் அதிகாரம் படைத்த லோக்பால் என்றொரு சட்டத்திற்கான வரைவை உருவாக்கினார். அது கிட்டத்தட்ட 40 வருடங்களாக சட்டமாகாமல் வரைவாகவே தூங்குகிறது. சமீப காலத்தில் ஊழல்களின் அளவும் பரிமாணமும் இந்தப் பிரபஞ்சத்தை விடப் பெரிதாக வளர்வது கண்டு பொறுக்காத பல்வேறு அக்கறையுள்ள மூத்த குடிமக்களும் சேர்ந்து அரசாங்கத்திடம் அந்த லோக்பால் சட்டத்தை விடக் கடுமையான ஒரு சட்டத்தைக் கொண்டு வருமாறு வற்புறுத்தி வந்தன. ஆனால் ஆளும் கட்சியான காங்கிரஸ் அதைக் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. அண்ணா அனுப்பிய கடிதங்களையெல்லாம் மன்மோகன் [ edited ]. சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மன்மோகனும், சோனியாவும், பிரணாபும், சிதம்பரமும் கிறுக்கர்களா என்ன? கடந்த நாற்பது ஆண்டுகளில் லோக்பால் சட்டத்தை விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ள யாரும் விரும்பவில்லை. திடீரென்று பொங்கி எழுந்த அண்ணா இது குறித்து இனியும் பொறுப்பதற்கில்லை எடுத்துவா எறிதழலை என்று டெல்லியின் ஜந்தர் மந்தர் நோக்கிக் கிளம்பி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டார். சாதாரணமாக காங்கிரஸ் கட்சியின் ஜால்ராக்களான ஊடகங்களும் கூடவே பொங்கி எழுந்து அண்ணாவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பெரும் விளம்பரம் அளித்து விட்டார்கள். உலகக் கோப்பை முடிந்து போரடித்துக் கிடந்த மக்களும் கூட்டம் கூட்டமாக மெழுகுவர்த்தியும் கையுமாகக் கிளம்பி விட்டார்கள். காட்டுத் தீ போன்று பரவிய இந்த எதிர்பாராத மக்கள் எழுச்சியைக் கண்டு மிரண்ட காங்கிரஸ் அரசும் அதன் மொளனச்சாமியார் பிரதமரும் இதை எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வது என்றும் எப்படி தங்கள் மீது உள்ள ஊழல் கறைகளை இந்தப் போராட்டத்தை வைத்தே கழுவி மக்களை மறக்கடிக்கச் செய்வது என்றும் யோசித்துத் திட்டமிட்டு பணிவது போல நடித்து ஒரு கமிட்டியை அண்ணா கேட்டது போலவே அமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உலகக் கோப்பை முடிந்து விட்டது அடுத்து ஐ பி எல் வரும் வரை எதை வைத்து ஒப்பேட்த்துவது என்று முழித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் இது ஒரு இடைவெளி நிரப்பும் பொழுது போக்காக மாறி விட்டது. ஊழல் மன்மோகனின் புரோக்கர்களாகச் செயல் பட்ட சர்தேசாயும், பரக்காதத்துக்களும் ஊழலை ஒழிக்கும் அவதாரத்தை எடுத்து விட்டு அண்ணனின் தம்பி தங்கைகளாகப் போராட்டத்தில் குதித்து விட்டார்கள்.

கூட்டத்தைக் கண்டு மிரண்ட மன்மோகன் அரசும் அண்ணாவின் கோரிக்கைகள் குறித்து விவாதித்து ஒரு முடிவு எடுக்க ஒரு கூட்டுக் குழு அமைப்பதாக உறுதியளித்ததின் பேரில் அண்ணாவும் தண்ணீர் அருந்தி உண்ணாவிரதத்தை இனிதே முடித்து விட்டார். இது இதுவரை நடந்தது. சுபம்.

இந்தியாவில் ஊழல்களும், லஞ்ச லாவண்யங்களும் கட்டுக் கடங்காமல் நாடே செயல்படாத வண்ணம் அடிமட்டத்தில் இருந்து மன்மோகன் வரை வேகமாக வளரும் கேன்சர் போலப் பரவியிருப்பது ஓரளவுக்கு தர்ம நியாய அறவுணர்வுள்ள பொதுமக்களிடம் அளவு கடந்த பீதியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது உண்மையே. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இன்று மனசாட்சியுள்ள ஒவ்வொரு இந்தியனும் திக்குத் தெரியாமல் முழித்துக் கொண்டு நிற்கிறான். யாராவது தேவ தூதர் வந்து இந்த அரக்கர்களை அழிக்க மாட்டாரா? பகவான் கண்ணன் மீண்டும் அவதரிக்க மாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல்களால் பாதிக்கப் பட்டு ஊழல் சேற்றில் தானும் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சாதாரண மனிதனும் தன்னை யாராவது வந்து இந்த மலக் குழியில் இருந்து மீட்டு விட மாட்டார்களா என்று ஏங்குகிறான். சாக்கடையில் தானும் விழுந்து விட்டக் குற்ற உணர்வில் இருந்து விடுபட விரும்புகிறான். அப்படி ஏதாவது வழி திறந்தால் யாராவது துவக்கி வைத்தால் அந்த ஜோதியில் தானும் ஒரு சின்ன மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துத் தன் குற்ற உணர்வைக் குறைத்துக் கொள்ள விழைகிறான். அவன் தேடிய கிரியா ஊக்கி மற்றுமொரு அரசியல் கட்சியாக இருப்பதை விரும்புவதில்லை. நாம் தான் கறை பட்டு விட்டோம் நம்மை மீட்ட்க்க புதிதாக ஒருவர் வர வேண்டும் அவரும் கறை படியாத தூய ஆடைகளுடன் வர வேண்டும் என்று விரும்புகிறான். அவனுக்காகவே அவதரித்தது போல அண்ணா வந்ததும் அவருடன் தன்னைச் சேர்த்து மெழுகுவர்த்தி ஏற்றி விட்டால் தன் மனசாட்சியில் படிந்துள்ள கறைகள் சற்று போய் விடும், வாஷிங் பவுடர் நிர்மா போல அண்ணா கழுவி விட்டு விடுவார் என்று நினைக்கிறான் அந்த நினைப்பின் வெளிப்பாடே மெழுகுவர்த்தி ஊர்வலங்களாக வெளிப்படுகின்றன. களங்கிமிலலத ஒரு சிறு பொறி தேவைப் படுகிறது. கிட்டிய பொழுது கூடச் சேர்ந்து அதை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில் இறங்குகிறான். இந்த முயற்சியில் ஒவ்வொரு இந்தியனும் மும்முரமாக இறங்கியுள்ள பொழுதில் இந்த களேபரத்தில் தானும் தன் கறைகளை எப்படியாவது மறைத்து விட முடியாதா என்று ஆளும் சோனியா காங்கிரஸும் முயல்கிறது.

போஃபோர்ஸில் குவாட்ரச்சியை விடுவித்தது, அவரது கணக்கை சோனியாவின் உத்தரவின் பேரில் விடுவித்தது, ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலமாக மாபெரும் லட்சம் கோடி அளவில் தி மு கவுடன் சேர்ந்து மன்மோகன் அரசு கூட்டுக் கொள்ளை அடித்தது, காமென்வெல்த் விளையாட்டில் பல்லாயிரம் கோடி கபளீகரம் செய்தது, இஸ்ரோ, அணு ஒப்பந்தம், ஆதர்ஷ் வீட்டு ஊழல் என்று எங்கு திரும்பினாலும் அனைத்துத் துறைகளிலும் பல லட்சம் கோடிகளைத் திருடியது என்று தொடர்ந்து இந்தக் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் அடங்காமல் வெடித்துக் கொண்டேயிருக்கின்றன. இதற்கு ஒரு முடிவே இல்லை என்ற நிலை நிலவுகிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல பல டிரில்லியன் டாலர் கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வர மறுப்பதுடன் 8 பில்லியன் டாலர் கள்ளப் பணம் வைத்திருந்த ஹசன் அலி என்ற ஒரு தரகரை சோனியாவும் அவரது அடியாட்களும் காப்பாற்றி வேறு வருகின்றனர். எந்தத் திக்கில் திரும்பினாலும் ஊழல் பேய் திங்கு திங்கு என்று ஆடிக் கொண்டிருக்கிறது.


இத்தகைய ஒரு சூழலில் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் விசாரித்துத் தண்டனை வழங்க ஒரு பொது விசாரணை அமைப்பு வெளிநாடுகளில் உள்ளது போன்ற ஆம்புட்ஸ்மேன் அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள் அண்ணாவும் அவரது சிவில் சொசைட்டியினரும். இப்பொழுது மெழுகுவர்த்தி நாகரீகம் போலவே இந்த அரசு சாரா சேவை அமைப்புகளை என் ஜி ஓ என்று அழைப்பதற்குப் பதிலாக சிவில் சொசைட்டி என்று அழைக்கும் நாகரீகமும் புதிதாக முளைத்துள்ளது. சிவில் சொசைட்டியின் பெயர் காரணம் குறித்தும் அந்தப் பதத்தை உருவாக்கியவர்கள் குறித்தும் அறிந்து கொள்ள சொல்வனத்தில் அருணகிரி எழுதிய இந்த இரு கட்டுரைகளையும் அவசியம் படிக்கவும். இந்தப் போராட்டத்தில் அண்ணாவுக்குத் துணையாக சிவில் சொசைட்டி என்று அழைக்கப் படும் இன்னும் சிலரும் தீவீரமாக உள்ளார்கள். இந்த சிவில் சொசைட்டி என்ற புதிய வார்த்தைப் பயன்பாடே அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறையின் ஏற்பாடு.

அரசாங்கம் ஏற்கனவே லோக்பால் என்னும் ஒரு சட்டத்தை கொணர முயல்வதாக சொல்லி (40 ஆண்டுகளாக) ஏமாற்றி வருகிறது. மாநிலங்கள் அளவில் மாநிலங்களில் ஆளும் எதிர்க்கட்சியினரை மிரட்டும் வண்ணம் உருவாக்கப் பட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் பெயரளவில் அமுலுக்கு வந்த லோகாயுக்தா என்ற அமைப்புகள் மட்டுமே இதுவரை ஆளும் மந்திரிகளையும், அதிகாரிகளையும் விசாரிக்க அமைக்கப் பட்ட பல்லில்லாத அமைப்புக்களாகும். சி வி சி போலவே இவைகளும் யாரையும் தண்டிக்க உரிமையில்லாத அதிகாரமில்லாத காகிதப் புலி அமைப்புகளாக இயங்கி வருகின்றன. மத்திய அரசின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நீதிபதிகளையும் விசாரிக்கும் வல்லமையும் அதிகாரமும் உள்ள அமைப்பு இது வரை உருவாகவேயில்லை. அப்படி ஒரு தற்கொலைக்குச் சமமான அமைப்பை உருவாக்க இது வரை எந்த அரசியல் கட்சியும் முயலவும் இல்லை.

அரசியல்வாதிகளை நம்பாத அண்ணா இனியும் பொறுப்பதற்கில்லை நாங்கள் சொல்லும் வரைவை நீங்கள் சட்டமாக்குங்கள் அதற்காக ஒரு கூட்டுக் குழுவை அமைத்து எங்களையும் கலந்தாலோசித்து இறுதி வரைவை முடிவு செய்யுங்கள் பின்னர் அதைச் சட்டமாக்குங்கள் என்று கோருகிறார். அண்ணாவும் சிவில் சொசைட்டியினரும் சற்று கடுமையான அதிக அதிகாரம் உள்ள ஒரு லோக்பால் அமைப்பைக் கோருகிறார்கள். அப்படி அதிகாரத்தை ஒரு தன்னாட்சி அமைப்பிடம் அளிக்க அரசியல்வாதிகள் குறிப்பாக காங்கிரஸ்காரர்கள் விரும்பவில்லை. அத்தகையக் கோரிக்கைகளையே இது வரை மூர்க்கமாக எதிர்த்து வந்தார்கள். எங்களை விசாரிக்க யாருக்கும் அருகதையில்லை என்று சூளுரைத்தார்கள். மன்மோகன்சிங் உச்ச கட்ட எரிச்சலில் எமர்ஜென்சி கால நிலமையை அண்ணா உருவாக்குவதாகக் குற்றம் சாட்டினார். அதிகாரபூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி தன் வழக்கமான ஆணவத்துடன் யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுப்பது இவர்கள் யார் எங்களை ஆணையிட என்று வெளிப்படையாகவே மிரட்டினார். இவர்களின் மிரட்டல்களையும் மீறி நிலமை கை மீறிப் போவது கண்டு இப்பொழுதைக்கு ஒரு கமிட்டி போட்டு இந்தப் போராட்டத்தை நிறுத்தி விட்டால் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் அண்ணாவிடம் ஒரு கூட்டுக் குழு அமைப்பதாக உறுதி மொழி கொடுத்திருக்கிறார்கள்.


அது நடக்கப் போகிறதா, அப்படியே நடந்தாலும் சிவில் சொசைட்டியினரது கோரிக்கைகளும் ஜன் லோக்பாலின் வரைவும் ஏற்றுக் கொள்ளப் படுமா அப்படியே அதில் பாதியாவது ஏற்றுக் கொள்ளப் பட்டால் அவை ஒரு சபைகளின் ஒப்புதலையும் பெறுமா தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுக்களைப் பெறுமா அப்படிப் பெற்று சட்டமாகுமா அப்படியே சட்டமானாலும் அவை ஒழுங்கான முறையில் நிறைவேற்றப் படுமா அல்லது பி ஜே தாமஸ், கே ஜி பாலகிருஷ்ணன், நவீன் சாவ்லா போன்ற ஆட்களால் நிரப்பப் படுமா என்பதெல்லாம் பெரிய பெரிய கேள்விக் குறிகள். சுப்ரீம் கோர்ட் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பொழுதும் கூட அசராமல் ஸ்பெக்ட்ரமில் எதுவுமே நடகக்வில்லை என்று சாதித்த கபில் சிபல், சி வி சி மேல் ஊழல் புகார் இருப்பதே தனக்குத் தெரியாது என்று புளுகிய மன்மோகன், எங்கும் எதிலும் ஊழலே இல்லை என்று சாதிக்கும் தியாகத் திருவுறு அன்னை சோனியா சேர்ந்து நடத்தும் ஆட்சியில் இப்படி ஒரு காந்தியவாதியின் உண்ணாவிரதப் போராட்டத்திற்குத்தானா பணியப் போகிறார்கள். எத்தனை கமிட்டி, எத்தனை கமிஷன்கள் போட்டு நாட்டை ஏமாற்றிய எத்தர்களுக்கு இந்த அண்ணாவை ஏமாற்றுவதுதானா பெரிய விஷயம்? ஆக எதுவும் நடக்கப் போவதில்லை.

அழுது முரண்டு பிடிக்கும் சிறு பிள்ளைகளுக்கு குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்து ஏமாற்றுவது போல அண்ணாவையும் அவர் பின்னால் திரண்ட சிவில் அமைப்புகளையும் மக்களையும் ஏமாற்ற மன்மோகன் சிங்கின் அரசானது ஒரு சிறிய குச்சி ஐஸை தயார் செய்துள்ளது. அதைக் கண்ட திருப்தியில் ஏதோ தாங்கள் கேட்ட ஜன் லோக்பால் அமைப்பே சட்டபூர்வமாக வந்து விட்டதாகக் கூத்தாடுகிறார்கள். அந்த குச்சி ஐஸ் விரைவில், வெகு விரைவில் உருகிக் கரையும் அப்பொழுது இந்த அமைப்புகள் என்ன செய்கிறது என்பதை நாம் நோக்க வேண்டும். இப்பொழுதைக்கு ஒரு கூட்டுக் குழு அமைத்து ஜன் லோக்பாலுக்கான சட்ட வரைவை ஜூன் 30க்குள் பூர்த்தி செய்து அதை நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கும் ஓட்டெடுப்பிற்கும் விட வேண்டும் என்று ஒரு முடிவு செய்துள்ளார்கள். தற்காலிகமாக ஒரு அமைதியை ஒரு குச்சி ஐஸ் மூலமாக மன்மோகன் வாங்கியுள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும், கருப்புப் பண ஹசன் அலி விவகாரத்திலும் ஒவ்வொரு முறை சுப்ரீம் கோர்ட் நெருக்கிய பொழுதும் இதே போன்று பல குச்சி ஐஸ்கள் செய்து கொடுத்து ஏமாற்றியவர்தான் மன்மோகன் சிங்கும், சோனியாவும், கபில் சிபலும். ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் நடக்கவேயில்லை நாங்களும் கமிட்டி போடுகிறோம் என்று உலகை ஏமாற்றிய அதே கபில் சிபலும், ஹசன் அலி தவறு செய்யவே இல்லை என்று இதுவரை அவனைப் பாதுகாத்து வரும் பிரணாப் முகர்ஜியும், [edited] சிதம்பரமும் இந்தக் கூட்டுக் குழுவில் முக்கிய உறுப்பினர்கள். இவர்கள் நிச்சயம் அண்ணாவும் பிற அமைப்பாளர்களும் கோரும் வரைவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தங்களக்கான மரணக் குழியைத் தாங்களே தோண்டிக் கொள்ள மாட்டார்கள். நிச்சயமக இந்த வரைவை நீர்த்துப் போகச் செய்வார்கள் அல்லது விரக்தியில் அண்ணாவே குழுவை விட்டு வெளிநடப்புச் செய்ய வைத்து விடுவார்கள். இது திட்டமிட்டு நேரம் வாங்கச் செய்யும் ஒரு வித ஏமாற்று வேலை மட்டுமே. ஒரு வேளை அப்படியே ஒரு அரைகுறை வரைவுக்கு இவர்கள் ஒத்துக் கொண்டாலும் கூட பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பின் பொழுது இது சட்டமாகமல் பார்த்துக் கொள்ளும் வேலையை தங்களது அல்லக்கைகளான லாலு, முலயம், மாயவதி போன்றோரை வைத்து ஓட்டெடுப்பின் பொழுது தோல்வி அடையச் செய்து விடுவார்கள். எப்படியும் இந்த ஜன் லோக்பால் அமைப்பு வெளிச்சத்தைக் காணப் போவதில்லை. அதையெல்லாம் இப்பொழுதே யோசித்து இந்தப் போராட்டக் குழு செயல் பட வேண்டியது மிக மிக அவசியம்.


இப்பொழுதைக்கு ஒரே ஆறுதல் மந்திரிகளையும் அதிகாரிகளையும் விசாரிக்க, அவர்களை தண்டிக்க ஒரு வீரியமுள்ள அமைப்பு தேவை என்பதற்கான கோரிக்கை ஒன்று வலுவாக எழுந்துள்ளது. அதைக் கேட்டுப் போராட ஒரு குரல் எழுந்துள்ளது அதற்கு பெரும் அளவில் மக்கள் ஆதரவும் தன்னிச்சையாக கிளம்பியுள்ளது என்பது மட்டுமே. ஆனால் இந்த மக்கள் ஆதரவு என்பது எப்பொழுதுமே ஒரு மாயை மட்டுமே. பொது மக்களுக்கும் டி விக்களுக்கும் கிரிக்கெட் இல்லாத பொழுதில் சிறிது ஊழலுக்கும் ஈயப்படும் பொழுது போக்கு மட்டுமே என்றாலும் கூட எழுந்த அளவில் இந்த எழுச்சி வரவேற்கத்தக்கதே.


அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கோர் காட்டினின் பொந்தினில் வைத்தேன் வெந்து தணிந்தது காடு கனல் வீரத்தில் மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ? அண்ணாவின் போராட்டத்தில் ஒரு சிறிய அக்கினிக் குஞ்சை நாம் காண்கிறோம். ஆனால் அது ஊழலும், லஞ்சமும், அராஜகமு, கொள்ளையும், கொடூரமும் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி என்னும் அராஜகக் காட்டினை பொசுக்கி வெந்து தணிக்கப் போகிறதா அல்லது சோனியாவின் காங்கிரஸ் இந்த அக்கினிக் குஞ்சை தன் கொஞ்சி விளையாடும் குஞ்சாக, தனக்கு புனிதப் பட்டம் வாங்கிக் கொடுக்கும் குஞ்சாக மாற்றப் போகிறார்களா? இது வெந்து தணிக்கப் போகும் அக்கினிக் குஞ்சா அல்லது ஊதி அணைக்கப் படப் போகும் சிறு கனலா என்பதை நாம் பொறுத்திருந்து காண வேண்டும் சிறு சிறு பிசிறல்கள் இருந்தாலும் இந்த அக்கினிக் குஞ்சு இது வரை தன் பொறியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அடுத்து எந்த திசையில் போகப் போகிறது பொசுக்கப் போகிறதா பிசு பிசுக்கப் போகிறதா என்பதை நாம் பொறுத்திருந்து காண்போம்.

அண்ணாவின் லோக்பால் வரைவு சொல்வதென்ன, அது சாத்தியமா? அதில் உள்ள குறை நிறைகள் என்ன? இந்தப் போராட்டம் ஏழுப்பும் கேள்விகள் சந்தேகங்கள் என்ன, இது வேறு தரப்பினரால் காங்கிரசுக்குச் சாதகமான ஒன்றாகக் கடத்தப் படுகிறதா? இதைத் தவிர இவர்கள் வேறு என்ன செய்திருக்க வேண்டும், செய்யத் தவறியவை என்ன என்பவற்றை நாம் தனியாக அலசலாம். முதன் முதலில் ஒரு நல்ல காரியம் துவக்கப் பட்டிருக்கும் பொழுது அபசகுனமாக இந்த முதல் பதிவில் என் சந்தேகங்களையும் அச்சங்களையும் நான் பதிய விரும்பவில்லை அவற்றைத் தனியாக அடுத்த பதிவில் காணலாம்.


சந்தேகங்களும், சிறு சிறு குறைகள் இருந்தாலும் கூட இன்றைய அரசியல் சூழலில் ஆளும் வர்க்கத்தினரின் கட்டுபாடற்ற ஊழல்களுக்குக் கடிவாளம் போட ஒரு சிறு பல் உடைய அமைப்பாவது தேவை என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அதை இந்தப் போராட்டம் சாதிக்குமானால் அது இந்திய ஜனநாயகத்தின் மாபெரும் வெற்றியாக இருக்கும். அது தரும் நம்பிக்கையில் ஊழலை மேல் மட்டத்தில் அது முற்றிப் புரையோடி போன பின்பு அழிக்க முயலும் ஜன் லோக்பாலை போல அதன் ஆணி வேரைப் பிடுங்கக் கோரும் போராட்டங்களை நடத்தலாம். அதற்கு இதன் வெற்றி உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அண்ணா ஹசரே அவர்களின் போராட்டத்தினை நாம் நம்பிக்கையுடன் ஆதரிப்போமாக. அக்கினிக் குஞ்சு பரவட்டும்.தொடரும்...

மஞ்சள் கருத்து அடுத்த பகுதியில்..

22 Comments:

Anonymous said...

”லக்குபாய் பதக்” கதைதான் அன்னாவுக்கு சீக்கிரமே பாருங்க. லோக்பால் எல்லாம் வராது. வர விட மாட்டோம். அப்படியே வர்ற மாதிரி இருந்தால் ஆதரவு வாபஸ். என் பெயரை வேண்டுமானால் “தக்ஷிணாமூர்த்தி” என்று மாற்றி வைத்துக் கொள்கிறேன். ஒண்டிக்கு ஒண்டி வர்றியா....

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

ஒரு வார்த்தை போதும் விசுவாமித்திரா -- "சோனியா காங்கிரஸ்" ...

காந்தி வளர்த்த காங்கிரஸ் அக்கொள்கைகளோடு ஒரு எள்முனை அளவிலும் தொடர்பின்றி, நாட்டின் கொடியின் ஒரு replica வைத்துக்கொண்டு ஏமாற்றுவதை தட்டிக்கேட்க யாரே வருவார்? "சோனியா காங்கிரஸ்"-நல்ல பெயர்தான்!! மாற்றி விடலாம்!!

அப்பாதுரை said...

அடிக்குறாப்புல அடிக்கிறேன்; அழறாப்புல அழு.

Anonymous said...

(Courtesy:Kalki magazine & Mr.Gnani)

Part 1
கலைஞர் கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் நீங்கள் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளை எழுதி அனுப்புங்கள் என்று என் இணைய தள வாசகர்களைக் கேட்டிருந்தேன். நூற்றுக் கணக்கில் கேள்விகள் வந்து குவிந்துவிட்டன. அவற்றிலிருந்து தொகுத்து சில கேள்விகளை இங்கே நாகரிகமான மொழியில் தந்திருக்கிறேன். இப்போதைய ஆளும் கட்சி என்பதால் கருணாநிதிக்கு 20 கேள்விகள். ஜெயலலிதாவுக்கு 15 கேள்விகள். இருவருக்கும் பொதுவாக 8 கேள்விகள். பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட சளைக்காத இருவரும், இந்தக் கேள்விகளுக்கு நேரடியாக பதில் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

ஜெயலலிதாவுக்கு:

1. உங்களை விட்டால் கட்சியில் வேறு தலைவரே இல்லையே? இப்படி ஒரு கட்சி நடத்துவது சரியா?

2. சட்டமன்றக் கூட்டத்துக்கே நீங்கள் போகவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஒழுங்காக வேலை பார்க்காத உங்களை ஏன் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் ?

3. யாருமே நெருங்கமுடியாத தலைவராக உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களை சந்திக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாக தனியே வாழவேண்டியதுதானே?

4. அ.தி.மு.கவை சசிகலா குடும்பம்தான் ஆக்ரமித்து நடத்திக் கொண்டிருக்கிறது. இதை மாற்ற ஏதாவது திட்டம் உண்டா?

5. கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் இஷ்டப்படி கூட்டணிகளை உடைப்பது உங்கள் வழக்கம். இந்த அணுகுமுறை மாறுமா?

6. இலவசங்கள் தவிர, உங்கள் பத்தாண்டு ஆட்சியில் சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல் தொடர்பாக ஏதாவது உருப்படியான நடவடிக்கைகள் செய்தது உண்டா?

7. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகளைக் கண்டித்து எத்தனை போராட்டங்களை நீங்கள் தலைமை ஏற்று நடத்தினீh;கள்?

8. ஒரு பெண்ணாக இருந்தும் ஏன் பெண்களுக்கு 35% சீட் தரவில்லை?

9. சகமனிதனை – பெண்ணாக / ஆண்ணாக இருந்தாலும் – காலில் விழச்செய்து புகைப்படம் எடுத்து வெளியிடும், அருவருப்பான கலாச்சாரத்தை / மனநிலையை எப்போது விடப் போகிறீர்கள்?

10. காஞ்சி சங்கராசாரியார் மீதான வழக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் எவ்வாறு திசை திருப்பபட்டது ? அதை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?

11. மாதம் முழுவதும் கூலி வேலை செய்யும் வயதுவந்த பெண்களின் வலி உங்களுக்கு தெரியுமா? பள்ளி / ரேசன் கடை மூலம் வயதுவந்த ஏழைப் பெண்களுக்கு நாப்கின்களை இலவசமாக (அ) குறைந்த விலைக்கு வழங்கும் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த சிந்திக்காதது ஏன் ?

12. மக்களை பிச்சைகாரர்களாக ஆக்கும் இலவசங்களை தி.மு.க வுக்கு போட்டியாக நீங்களும் அறிவிப்பது ஏன்?

13. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது மக்களை திரட்டி போராடி ஈழ பொதுமக்களை காப்பாற்ற முயலாதது ஏன்?

14. (மக்களின் உணர்வு அறிந்தும்) இனியாவது ஊழலளற்ற ஆட்சி தருவேன் என்ற உறுதி மொழி உங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லாமல் போனது ஏன்?

15. கருணாநிதி குடும்ப அரசியலை இவ்வளவு வசைபாடும் நீங்கள் அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் கட்சியிலும் ஆட்சியிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்திரின் தலையீடு இருக்காது என உறுதி கூற முடியுமா?

Anonymous said...

Part 2
கருணாநிதிக்கு:

1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்கு பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூசைக்கு செல்வதாக செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள்,. நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

4. முதல்வராக சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லா தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பெயருக்கு ஒரு பட்டப் படிப்பு படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

6. உங்கள் குடும்ப பிரச்சனையில் 3 பேரை தீயிட்டு கொளுத்தியதை நினைத்தபோதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

7. தமிழக அரசிற்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படி திருப்பிச் செலுத்த்ப் போகிறீர்கள் ? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை அதற்கு பதில் ஏற்கனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன் ? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா ?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தமிழ்க் கலாசாரத்துக்கு விரோதமானது. தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? என்னைப் பின்பற்றவேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?

10. கூவத்தை தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்த பணம் என்னவாயிற்று ? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள் ? ஏன் ஆயிரக்கணக்கான்வர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள் ? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளி நாட்டில் வாழ்கிறேன். ஒரு அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசு கூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வொரு இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு ?.

13. மின் வெட்டை தடுக்க 5 ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?

15. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்கு சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்சினையை எப்படி கையாண்டிருப்பீh;கள்?

16. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து எடுத்தது ஏன்?

17. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவி தன் வாரிசுகளுக்கு வாங்குவதற்கு தவிர நீங்கள் டெல்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

18. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றிற்கு ஓடோடி செல்லும் நீங்கள் , எத்தனை முறை இறந்து போன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள்?

19. பல வருடங்களாக கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களை விட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி ?

20. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் , மணல் கொள்ளை, திரைப்படத்துறை முழுமையான ஆக்ரமிப்புக்கும் உள்ள தொடர்புகளை உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?

Anonymous said...

part 3
இருவருக்கும்:

1. விவசாயம் லாபமில்லா தொழிலாக போய்விட்டது. தனியார் தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. அவை சில காலம் கழித்து பிளாட்டுகளாக மாறி வருகின்றன. விவசாய கூலியும், இடுபொருட்கள் செலவும் அதிகரித்துவிட்டது. விவசாய விளைபொருட்களின் விலையை விவசாயி தீர்மானிக்க முடியவில்லை. பதுக்கல் வியாபாரிகளே அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?

2. முன்பெல்லாம் உள்கட்டமைப்பு மூலதன செலவுகளுக்கு பட்ஜெட்டிலிருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது உலக வங்கியிலிருந்தும், நபார்டிலிருந்தும் கடன் வாங்கும் வழக்கம் வந்துவிட்டது. இது ஒரு நல்ல போக்கா?

3. பத்திர பதிவு துறை, போக்குவரத்து துறை, காவல் துறை, பொது பணித்துறை இந்த நான்கு துறைகளில்தான் அதிகம் லஞ்சம் புழங்குகிறது. இதை கனிசமாக குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?

4. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ?

5. சட்டமன்றத்தில் ஜால்ரா பேச்சுகளை அடியோடு ஒழித்துவிட்டு அசல் பிரச்சினைகளைப் பற்றி ஆழமான விவாதங்களை நடக்கச் செய்யாமல் உங்கள் கட்சியினரைக் கெடுத்து வைத்திருப்பதை எப்போது மாற்றுவீர்கள் /

6. தலைமையை வைத்துத்தான் தொண்டர்கள் இருப்பார்கள். அப்பழுக்கற்ற அரசியல்வாதி, கண்ணியமான அரசியல்வாதி என்ற நற்பெயரை சம்பாதிக்க ஏன் இதுவரை முயற்சிக்க வில்லை?

7. ஆயிரக்கணக்கான குடும்பங்களை அரசு மதுக்கடைகள் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி உங்களுக்கு அக்கறையே கிடையாதா?

8. இவ்வளவு தவறையும் பண்ணிட்டு மறுபடியும் மறுபடியும் மக்கள் முன்னாடி வந்து நிக்கிறதுக்கு
உங்களுக்கு வெட்கமாவே இருக்காதா?

Chandramouli said...

Pessimistic yet realistic assessment. But, this is a movement long overdue. Even if it stops corruption to some degree, it should still be welcome. The one question pointedly raised by RKB in Lemon TV needs to be honestly answered by every Indian - "will you personally refuse to pay a bribe under any circumstance?" OK, if we say yes, the consequences can be severe especially for the common man. Read today's Infosys story narrated by its HR Chief - even a company of such size and prominence can't escape the repurcussions when refusing to pay bribe. What about small fries like us? Anna Hazare has started to empty out an ocean of corruption, but his move is akin to take out the water bucket by bucket - but stop and think, if 1.2 billion people attempt to drain out the water by various means, one can be sure that at least some part of the sea can be drained out. Every drop counts for purifying our motherland. The battle is won, but the war has to go on.

Anonymous said...

இது ஒரு காங்கிரஸ் கட்சி நடத்திய திட்ட மிட்ட நாடகம். இதை கண்டு ஏமாற நான் ஒன்றும் இன வான இல்லை.

இந்த லோக்பால் கமிட்டி தானே போலீஸ், தானே நீதிமன்றம் என்ற அளவு தனக்கு அதிகாரங்களை கோருவதைக் கோடிட்டுக் காட்டி, இந்த அளப்பரிய அதிகாரங்களைப் பெறப் போகும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் உள்ள ஓட்டைகளையும் சுட்டிக் காட்டுகிறது -

நோபல் கமிட்டியும் மகசேசே விருது கமிட்டியும் நினைத்தால் அவர்கள் விரும்புவோருக்கு இந்திய அரசியலில் அதிக பலம் தர முடியும் போலிருக்கிறது! நாளைக்கு அருந்ததி ராய்க்கும் அரவிந்த் அடிகாவுக்கும் நோபல் பரிசும், ராஜ்தீப் சர்தேசாய்க்கு மகசேசே விருதும், இந்திய கிறிஸ்தவ கவுன்சில் தலைவர் & ”மனித உரிமைப் போராளி” ஜான் தயாலுக்கு பாரத ரத்னாவும் கொடுக்கப்பட்டால், இவர்கள் எல்லாரும் சேர்ந்து இந்திய அரசாங்கத்தையே பணால் ஆக்கிவிட மாட்டார்களா?

Anonymous said...

ஹசாரே என் ஆர் ஜி இக்கும் (NREGS), என் ஏ சி க்கும் (NAC) போடும் ஜால்ரா அவரது போராட்டத்தின் நோக்கம் மீது குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. போராட்டம் என்றால் யாரை எதிர்த்து, எத்ற்காக என்ற தெளிவு வேண்டும். நான் ஊழலை எதிர்த்துப் போராடப் போகிறேன் என்று சொல்லி விட்டு சோனியாஜி வாங்க, என் ஏ சி வாழ்க என்றெல்லாம் சொன்னால் பின்னால் போகும் ஜீன்ஸ்வாலாக்கள் ஜே போடலாமே அன்றி என்னைப் போன்றவர்கள் கேள்வி எழுப்புவார்கள். பதில் தெளிவாகத் தேவை. குப்பாச்சு குழப்பாச்சு போராட்டமாக இருத்தல் கூடாது என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.

அவர் என்றுமே ஒரு மீடியா டார்லிங்காக இல்லாமல் இன்று திடீரென்று மீடியாவின் டார்லிங்குகள் அவர் பின்னால் வருவதினால் நான் அந்த மீடியா டார்லிங்குகளைத் தான் சந்தேகிக்கிறேன். இதே மீடியா டார்லிங்குகள் நாளைக்கு இதே ஜீன்ஸ் வாலாக்களை அன்னை சோனியாதான் லோக்பால் கொண்டு வந்தார் என்று நம்ப வைத்து அன்னையின் ஓட்டு வங்கியாக மாற்றி விடக் கூடிய அபாயமும் உள்ளது!

Shri Hari said...

மும்பையில் காங்கிரஸ் கட்சியின் தவறால், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்த தாக்குதலை, NDTV barka dutt மற்றும் CNN IBN ராஜ்தீப் ஆகியோர் சிறப்பாக ஒளிபரப்பி, காங்கிரஸ் மீது எந்த தவறும் இல்லை இது ஒட்டு மொத்த அரசியல் வாதிகள் தவறாக ஒளிபரப்பியது. காங்கிரஸ் கட்சிக்கு NDTV barka dutt செய்த இந்த அளற்பரிய சேவைக்காக அவருக்கு பத்ம பூசன் விருதும் கிடைத்தது. அது மட்டும் இன்றி காங்கிரஸ் கட்சியின் ஆஸ்தான தரகராகவும் ( 2G specturm neera radia tape) பதவி உயர்வு பெற்றார்கள் இந்த அடிவருடிகள்.

சோனியா அடிவருடி தொலை கட்சிகள் மற்றும் அமெரிக்க போடும் எலும்பு துண்டுக்காக சொந்த நாட்டையே அழிக்க துணைபோகும் NGO ஐயோகியர்கள் காஷ்மீர் பிரிவினை வாதிகளுக்கு மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு எப்படி ஆதரவு தந்தார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை. இந்த கபோதிகளுக்கு இலங்கை தமிழர்கள் படும் வேதனை தெரியாத? நமது மீனவர்கள் இலங்கை இராணுவதால் கொள்ளபடுவது தெரியாத? இதை பற்றி பேசினால் இவர்களின் சோனியாவுக்கு அல்லவா பிரச்சனை

இது அண்ணா ஹசாரே என்ற மனிதரை வைத்து, மக்களின் கோபத்தை திசை திருப்ப செயயும் காங்கிரஸ் கட்சியின் ஒரு திட்ட மிட்ட நாடகம்.

இது ஒரு மாயை... மக்களே காங்கிரஸ் கட்சியை நம்பி ஏமாரதிர்.

Anonymous said...

where is muni malar?

செல்வா said...

விசுவாமித்திரருக்கு அண்ணா மற்றும் திராவிட இயக்கங்கள் மீது உள்ள காழ்புணர்ச்சி தெரிகிறது. மற்ற இயக்கங்களை போலவே நல்ல நோக்கத்துக்காகவே இவையும் ஆரம்பிக்கபட்டன. கால போக்கில் மற்ற இயக்கங்களை போலவே திராவிட இயக்கங்களும் தரமற்றவையாய் போய்விட்டன.
இது போன்ற காழ்புணர்ச்சிகளை காட்டுவது அன்னா ஹசாரேவை தமிழ் மக்களிடம் அந்நிய படுத்தவே உதவும்.

middleclassmadhavi said...

ஆகஸ்ட் 15 வரை பார்ப்போம்!!

Ravi said...

Extremely well made movie this one..

Movie Plot - Deceptive ways to push hidden agenda by effectively diverting and fooling people in a democratic way

Main Story and Direction by Sonia Gandhi

Assistant Director - NGOs

Screenplay - Again by NGOs

Lead Actor - Anna Hazare

Supporting Role - Kiran Bedi, Swami Agnivesh et al

Photography - Indian Media

and the Academy Award for this year goes to Anna Hazare for an emotional performance that put entire audience into a state of hysteria and emotional meltdown

Anonymous said...

கலைஞரை ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்புகிறேன்.
கடனாக(?)கிட்டத்தட்ட் 270 கோடியை பாலவாவிற்குத் திருப்பிக் கொடுத்தீர்களே, அது எப்படி? அவ்வளவு லாபம் வந்ததா? அல்லது யாரிடமாவது கடனா/அட்ஜஸ்ட்மென்டா?
-கபாலி

Anonymous said...

அன்னா ஹஸாரேவின் வெற்றிக்@குக காரணம்: HEADLINES TODAY, TIMES TV ஆகியவற்றின் NON STOP ஒளிபரப்புதான்,

Anonymous said...

திரு விசுவாமித்திரா அவர்களே,
உங்களுக்கு பிடித்தவரை பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள் அது உங்கள் உரிமை,
அத விட்டுட்டு பேரறிஞர் அண்ணாவை பற்றி தவறாக எழுத உங்களுக்கு மட்டும் அல்ல ,எவருக்கும் உரிமை இல்லை.
பேரறிஞர் அண்ணா ஊழல் செய்தார் என்பதை நிருபிக்க முடியுமா??

kothandapani said...

அண்ணாவை ஏன் வம்புக்கு இழுகிறீர்கல் என்ன பண்ணினாலும் அண்ணா அண்ணாதான்.People in Egypt and Tunisia revolt to have democracy in their country.What doyou want our people revolt for..... autocratic rule.Dont expect too much of Hazares struggle. Corruption has spread like cancer in our country.Anacin can not cure cancer. It needs major surgery.

kothandapani said...

Anonymous can reproduce the answers sent by a reader to the questions directed to Jaya and Karuna in Kalki

எங்கள் ப்ளாக் said...

பதிவு ஆழமாகவும், அகலமாகவும் கருத்துகளை அலசி ஆராய்ந்துள்ளது. சமீப கால அன்னா ஹசாரே விவகாரங்களை உன்னிப்பாக கவனித்த, படித்தவர்களின் மனதில் எழுகின்ற நியாயமான சந்தேகங்கள் இந்தப் பதிவில் தென்படுகின்றது. No doubt Anna Hazare has made a dent in the political field of India. The magnitude of the dent is the question for debate.

Premkumar said...

Logic in ur words get hidden by the attack on Arignar Anna.. very cheap ..

Anonymous said...

இங்கு தமிழ் நாட்டின் அறிஞர் அண்ணா என்று அழைக்கப் படும் அண்ணாத்துரையை விஸ்வாமித்ரா கேவலமாக எழுதி விட்டார் என்று பல அண்ணா குஞ்சுகள் துள்ளுகின்றன. அவர்களுக்கு அண்ணாத்துரை யார் என்ற உண்மை தெரியவில்லை. தமிழ் நாட்டில் இரு தலைமுறைகளை நாசமாக்கிய ஒரு ஆபாச சரோஜா தேவி ஸ்டைல் கொக்கோக எழுத்தாளர் மட்டுமே இந்த அண்ணாத்துரை. அண்ணாத்துரையை பற்றிய அறிவு ஏதும் இல்லாவிட்டால் கொஞ்சம் தெரிந்து கொண்டு வந்து பேசணும். பொதுவில் உங்கள் கூமுட்டத்தனத்தை அவிழ்க்கக் கூடாது.

அண்ணாத்துரை யோக்கியமான ஆள் கிடையாது. அவருக்கு முழு வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரும் ஊழல் நிறைந்த ஒரு ஆட்சியைத்தான் கொடுத்திருந்திருப்பார். வனவாசம் புத்தகத்தில் அவரது வண்டவாளங்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். இல்லாவிட்டால் நடிகை பானுமதியின் ஆத்மாவிடம் கேளுங்கள் கண்ணீர் கதைகளைச் சொல்லும். சரி வேண்டாம் நம்பிக்கை இல்லையெனில் திராவிடக் குஞ்சுகள் எல்லாம் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு புரட்சிக் கவி என்று புகழ் பாடும் புண்ணாக்குக் கவிஞன் பாரதிதாசன் அண்ணாத்துரை பற்றி என்ன சொல்லியுள்ளார் என்றாவது படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் அது பாரதிதாசனின் குயில் பத்திரிகையில் வந்த பாரதிதாசனின் வரிகளை ஆதாரமாக இங்கே http://www.tamilhindu.com/2011/02/vulgar-castiest-writings-of-bharatidasan/ படியுங்கள்

கேவலம் பாரதிதாசனுக்கு விழா எடுக்கிறேன் பேர்வழி என்று நோட்டீஸ் அடித்து அந்தக் காசைக் கூடக் களவாண்டிருக்கிறார் இந்த யோக்கிய சிகாமணி அண்ணாத்துரை. ஆபாச புத்தகம் எழுதிய இவரையெல்லாம் ஒரு சமூகம் அறிஞர் என்று அழைத்தால் அந்த சமூகம் எப்படி வெளங்கும்? எப்பொழுது திருந்தும்?