பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 08, 2011

குளித்தலை தொகுதி ரவுண்டப் - அ. சரவணன்.

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை சட்டமன்றத் தொகுதி முதல்வர் கருணாநிதியை முதன்முதலாக சட்டசபைக்கு அனுப்பிவைத்த தொகுதியாகும். அதன் நினைவாக ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் "கலைஞர் சட்டமன்ற பொன்விழா கலைக்கல்லூரி" என்ற ஒன்றை குளித்தலையில் கொண்டுவந்து அதைத் தனது சாதனைப் பட்டியலில்(?) சேர்த்துள்ளார் சிட்டிங் எம்.எல்.ஏவும் திமுக வேட்பாளருமான திரு.மாணிக்கம்.

மொத்த மக்கள்தொகை... ஸ்பெக்ட்ரம் தொகையிலிருந்து கோடியை எடுத்துவிடவும்.. அதாவது சுமார் 1,76,000. பெரும்பாலும் விவசாயமே பிரதானமாகக் கொண்ட கிராமங்கள் நிறைந்த தொகுதி. (அதிமுக தேர்தல் அறிக்கையில் கரும்பு டன்னுக்கு ரூ2500 உள்பட விவசாயிகளுக்கான பல சிறப்பு அம்சங்கள் இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.)

தொகுதியின் பிரதான ஊர்கள்: குளித்தலை, தோகைமலை, பாதிரிப்பட்டி, RT மலை, நெய்தலூர், சூரியனூர், சிவாயம், பஞ்சப்பட்டி, கருப்பத்தூர், மருதூர், நங்கவரம்


எம்.எல்.ஏ திரு.மாணிக்கம் தொகுதிக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை என்றாலும் அவருக்கு மக்களிடையே அதிருப்தி இல்லை என்பது பலம். கே.என்.நேரு, கனிமொழி(!), செல்வராஜ், ஸ்டாலின் என அனைவரிடமும் இணக்கமாக இருந்தாலும் தொகுதிக்குள் இருக்கும் கோஷ்டிப்பூசல் அவருக்கு பலவீனம்.

அதிமுக வேட்பாளர் திரு. பாப்பாசுந்தரம் ஜெ.வின் நம்பிக்கைக்குரியவர். 1989ம் ஆண்டு சேவல் சின்னத்தில் நின்று ஜெயித்த காலந்தொட்டு இத்தொகுதியின் அதிமுக வேட்பாளர் இவர் மட்டுமே. கடந்த தேர்தலில் தொகுதிக்குள் இவருக்கு கடுமையான அதிருப்தி இருந்தது. இந்த முறை மக்கள் அதை மறந்து விட்டார்கள் என்பதும் தேமுதிக கூட்டணியில் இருப்பதும் இவருக்கு பலம்.

ஆக, போட்டி இந்தமுறை கடுமையாக இருக்கும். ஆயினும் அதிமுகவே முந்துகிறது!

(இடமிருந்தால் கீழே உள்ளவற்றையும் பதிப்பிக்கவும்.)

இத்தொகுதியின் பிரச்சினைகள்/கோரிக்கைகள்:

* காவிரியில் மணல் கொள்ளை அளவுக்கதிகமாக இருப்பதும், பெருகிவிட்ட அந்த லாரிகளால் நிறைய விபத்துகள் நடப்பதும் தலையாய பிரச்சனை.

* கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சியாக அறிவிக்கப்பட்ட குளித்தலை நகரத்திற்கு உருப்படியாக ஒரு பேருந்து நிலையம் கிடையாது.

* பாதாள சாக்கடைத்திட்டம் ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லப்படும். பின்னர் மறக்கப்படும்/மறைக்கப்படும்.

* தென்னிந்தியாவிலேயே வாழை மிக அதிக அளவில் பயிரிடப்படும் இத்தொகுதியில், ஒரு குளிர்சாதனக் கிடங்கு கூட இல்லை.

* குளித்தலை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கரூர் நகருக்கு டெக்ஸ்டெல் வேலைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் செல்கிறார்கள். அவர்கள் பயனடையும் வகையில் குளித்தலையிலேயே சிறிய அளவிலான டெக்ஸ்டெல் யூனிட்கள் இருந்தால்கூட நலம்.

* பரவிவரும் ரியல் எஸ்டேட் மோகத்திற்கு காவிரித்தாயின் அரவணைப்பில் இருக்கும் இப்பகுதி விவசாய நிலங்களும் பலியாகி வருவது வேதனை.


நன்றி.
அ. சரவணன்.

8 Comments:

Ganpat said...

http://myneta.info/tamilnadu2011/
தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள்(தொகுதிவாரியாக) இந்த தளத்தில் சீரிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை முடிந்த அளவு பிரபலப்படுத்தவும்
நன்றி

Anonymous said...

Manjal comment engae?

Karvendhan, Kulithalai said...

//அதிமுக தேர்தல் அறிக்கையில் கரும்பு டன்னுக்கு ரூ2500 உள்பட விவசாயிகளுக்கான பல சிறப்பு அம்சங்கள் இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.) .///

ஹி ஹி ஹி .. நம்பிட்டோம்.. கடந்த அம்மா ஆட்சியில வெறும் ௧௫௦௦ கேட்டு போராட்டம் பண்ண கரும்பு விவசைய்ந்களை அம்மா எப்படி ஒடுக்குனங்கனு பார்த்தோம்ல..

குளித்தலையில் தி மு க வெற்றி , எழுதி வெச்சுகோங்க. !

கணிப்பு சொல்லுங்கன , இட்லி வடைல எல்லோரும் அவங்க ஆசிய தான் சொல்றாங்கப்பா . தாங்கல

Kayal said...

இது எங்க ஊரு......

Anonymous said...

ரொம்ப மொக்கையாக ஓர் ரிப்போர்ட் ...இதற்க்கு பேசாமல் அதி மு க ஜெயிக்கும் என்று கூறி நேரத்தை மிச்சப்படுதியிருக்கலாம்.....

praveen kumar said...

super............

praveen kumar said...

super......

அப்பாதுரை said...

தொகுப்புக்கு நன்றி சரவணன்.
குளிர்ச்சாதன கிடங்கை அரசாங்கமா தர வேண்டும்?