பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 07, 2011

திரு வி.சந்தானம் - பாராட்டுக்கள்

திரு வி.சந்தானம் இந்த பேரை பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதோ அவரை பற்றிய ஒரு செய்தி....

கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474-

தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.

அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன.

அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை.

அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இது குறித்து செய்தி ஒன்று –

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.

கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.

ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!

சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.

அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?

சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி - கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?

இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)

அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?

மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.

எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?

30 Comments:

அமைதி அப்பா said...

திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவோம். அவரைப் போன்று எல்லோறும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Vijay said...

இந்த கொள்ளைக் கார கும்பலை வேறோடு அறுத்தெரிய வேண்டும்.

இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணர்வுடன் ஒரு இந்தியக்குடிமகன். அறிமுகபப்டுத்தியதற்கு ந்ன்றி.

Prakash said...

If you have an own company, do you give your advertisement to Sun TV/ Kaliger TV , which has higher viewership or to Immayam/Mega TVs?

During previous ADMK rule all Govt Ads were given to Jaya TV too.

surya said...

this is attrocious-108 understand both Central and state funded. if so have they called for tender/quotes from Podhigai
any PIL possible to stop atleast now. Mr Santhanam to be Congratulated for this

Kumaran said...

indha maadhiri ethanayo irukkalaam. aana indha vishayam kooda Jeya kku theriyaadha. idhai pathi ellam yen pracharathula pesuradhilla. (Oru velai avangalum adhayae thaan panni iruppangalo.. or panna poraangalo?)

aracha maavaya thirumba thirumba arachi... enakkum bore adichiduchu.

Anonymous said...

Dayanithi irukkum pothu BSNL Ads ellam suntv, dinakaran la thaan varum! Theriyatha?

Ev1 else as well..

suresh kumar said...

indha mattera vera engeyo padchirukkene? dinamaniyo, idly vadai aduthak kadayil irundhu sutturucha?

Anonymous said...

எப்படியெல்லாம் நம்மை சுரண்டரானுங்க!! 2G, மணல் கொள்ளை.......still not enough

பேசாம தமிழ் நாட்டை இவனுங்க வித்தரலாம்.

Anonymous said...

//கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது//

this is not today news. old one

Ganpat said...

இரண்டு நாட்களுக்கு முன் சென்னை TOI இல் வெளியான செய்தி.

சென்னை திருவல்லிக்கேணி,மயிலை தேனாம்பேட்டை பகுதிகளில் பெண்களிடம் செயின் பறிப்பு செய்து வந்த இளைஞர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு போலீசார் வசம ஒப்படைக்கப்பட்டார்.இரண்டு மாதகளுக்கு முன் முன்னாள் நடிகர் SSராஜேந்திரன் மனைவியைத்தாக்கி அவரிடம் 10 பவுன சங்கிலியை பறித்ததும் தான் தான் என அவர் ஒப்புக்கொண்டார்.
இனிமேல் வருவதுதான் செய்தி:
இவர் திருவல்லிக்கேணி DMK Councillor ராணி என்பவருடைய மகனாவார்

Ganpat said...

DMK councillor’s son arrested for chain-snatching
TIMES NEWS NETWORK

Chennai: The city police on Sunday arrested a DMK woman councillor’s son, S Kumaravel, on charges of chain-snatching at Zam Bazaar. Police said Kumaravel, who was arrested for snatching a chain from Jayanthi of Zam Bazaar, later confessed to have snatched a 10-sovereign chain from from veteran actor SS Rajendran’s wife Tamil Selvi in February last.
The police recovered seven sovereign stolen gold ingots from Kumaravel, a resident of Appu Street in Mylapore. Police said they arrested Kumaravel when he tried to flee after snatching gold chain from Jayanthi on Sunday evening. Passersby nabbed him and handed him over to the local police station.
During questioning, he confessed to having committed many crimes in Triplicane and Mylapore area. According to the police, Kumaravel had indulged in five chainsnatching incidents in the locality and several cases are pending trial at magistrate courts in the city.
Initial inquiries revealed that Kumaravel snatched the chain from Tamil Selvi while she was walking down a street off Eldams Road in Teynampet on February 23.
The police have launched a hunt for his accomplice Kishore of Nochikuppam near Marina, who has gone absconding. Kumaravel’s mother Selvi is a DMK councillor of ward 146.
Police said Kumaravel was running a fortnightly magazine called Arasu Sakthi from Puducherry. He was remanded in judicial custody after being produced before a magistrate court in the city on Monday.

Aravind NG said...

Karunanidhi's act of misusing power is a world known story. I wonder how the audit committee of TN state still allows such useless of MK Family. Who is trying to make fool of? Karunanidhi your time has come....pack up my friend.

Aravind NG said...

தமிழகம் முழுவதும் கருணாநிதி சுற்றுப்பயணம் செய்து வாக்கு பிச்சை எடுக்கும் இந்த நேரத்திலே, தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளால் பல்லாயிரம் கோடி ருபாய் கைப்பற்ற பட்டுள்ளன. பணப்பட்டுவாடா செய்து வாக்கு பெரும் அளவுக்கு தோல்வி பயம் தொற்றிக்கொண்டு விட்டது போலும், அனுதினமும் சோதனை நடத்தி சாதனை படைக்கின்றனர் தேர்தல் கமிஷன் படையினர். இதற்க்கு முதுகெலும்பாக செயல் படுவது மதுரையை ஆட்டிபடைக்கும் அழகிரி. அவரின் கண் அசைவில் பல கோடிகள் கை மாறுகிறது. இதை எல்லாம் தட்டிகேட்டால், தேர்தல் கமிஷன் என்னை அழிக்க நினைக்கிறது என்று கூசாமல் கூறுகிறார் அழகிரி. என்ன செய்வது....தமிழகத்தை பிடித்த சாபக்கேடு இன்னமும் ஓரிரு மாதம் தான், அது வரை பொறுத்திருந்து தான் ஆக வேண்டும்.

Ravichandran said...

There is nothing wrong in issuing Govt. Advt in Sun TV or Kalignar TV as Jaya used to issue them for Jaya TV. As a person with media contacts, I know this rate is very cheap when compared to the amount they charge for private companies. People want to make issue out of everything.

Santhanam can use that paper to clean his tongue since whatever done is legal and valid before court of law.

சந்திரமௌளீஸ்வரன் said...

Very SImple Logic; Concern Department would have obtained quotations from Three Advertisement Agencies for telecasting the Advertisements and one particular company would have given the Lowest Quote and that Advt Agency would have given this to "THose TVS". I am not advocating for this ;

எந்த டிவில விளம்பரம் கொடுத்தாலும் அரசு காசு கொடுத்துதான் விளம்பரம் தரணும்

Raja=Theking said...

இவனுங்க்க ஒழிஞ்சாத்தான் தமிழ்நாடு உருப்படும்

Anonymous said...

//Santhanam can use that paper to clean his tongue since whatever done is legal and valid before court of law.//

How is that? Like I only burnt a piece of paper and not the law!!

kothandapani said...

ஆடி காத்துலே அம்மியே பறுக்குது ........ இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா... என்ன இடை இடையே நமீதா
குஷ்பு காட்டியிருந்தால் சூப்பரா இருந்திருக்கும்

Anonymous said...

பாராட்டுக்கள் சந்தானம்.

//ndha maadhiri ethanayo irukkalaam. aana indha vishayam kooda Jeya kku theriyaadha.//

அந்த அம்மா ஒரு மக்கு. ஆவேசப்படத் தான் தெரியும். தந்திரம், குயுக்தி எல்லாம் வராது. அதுனாலதான் ஏனோ தானோன்னு பேசிட்டு போகுது. அய்யாவும் ‘அம்மாவை’த் தாக்காமக் கடிதோச்சி மெல்ல எறிந்து விஜயகாந்தை டார்கெட் பண்ணுகிறார்.

’உள்ளடி’ வேலைகள், நமக்குத் தெரியாத உள் விவரங்கள் ஏதாவது இருக்கலாம். யார் கண்டா?

அப்பாதுரை said...

பாராட்டுக்கள் சந்தானம்.
ஆனால் இவை சட்டத்துக்குப் புறம்பானவை அல்ல. அதனால் தவறில்லை - என்ன செய்ய? சட்டத்துக்கும் நியாயத்துக்கும் இடையே புலப்படாத வேலி இருக்கிறதே!

Don said...

'If you marry a dog, you've to bark', so is the case with voting.Is there really an alternative to DMK and AiADMK? Should AIADMK be given another chance? But JJ appears incorrigible. Even for a voter who follows politics, the current situation is very confusing. It'll immensely benefit the readers, if IdlyVadai helps decide the best front to vote for in the next election, backed with good analytical reasoning if possible and also can bring to light unknown parties contesting. Atleast you can say who are you planning to vote for and why?

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

//எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா? //

எங்கேயா எரியுது?? வேணும்னா எரிச்ச வீட்டில் அல்லது வீடுகளில் என்று போடுங்க.... எரிஞ்ச பேப்பர் சமாசாரத்திலேயே ஒண்ணும் நடக்கல... இதுல மூணு மாச ஊசிப்போன நியூஸ் ஒரு கேடா??


சரி சரி இங்க வந்து கமென்ட் போடுங்க நண்பர்களே!!
http://sagamanithan.blogspot.com/

Kumaran said...

//அய்யாவும் ‘அம்மாவை’த் தாக்காமக் கடிதோச்சி மெல்ல எறிந்து விஜயகாந்தை டார்கெட் பண்ணுகிறார்.
//
well said.
even i'm watching that very close.

Anonymous said...

"andha amma oru makku. aavesapadathaan theriyum". Beautiful words anony.

surya

Anonymous said...

Mothella ithe vidungayya.. Politics-la irunthum India Government-la irunthum Corruption(Lancham)-a olikkanumnu oruthar naalu nalaa unna viratha poraatam irukurare Delhi-la antha kathai theriyuma ungalukku.. avaru peru "Anna Hazare".. Avarukku ungaloda support konjam venumya.. athe seyya try pannunga ippo.. nantrigal pala..

R.Gopi said...

திரு.வி.சந்தானம் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...

//எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?//

முதலில் பற்ற வைப்பதற்கு முன் வீட்டில் உள்ள அனைத்தையும் கொள்ளை அடித்துவிட்டு, எஞ்சிய பொருட்களையும் எரியும் வீட்டிலிருந்து எடுக்கும் அவர்களிடம் இந்த கேள்வி செல்லுமா?

R. Jagannathan said...

Is this info available with the election commission? What do the opposition parties / Jaya TV / Captain TV do about this? Don't they have a right to receive government ads? Or if they have declined to accept the ads as they campaign for the DMK? - R. J.

Anand said...

Jayalalitha also seems to be a IdlyVadai fan !!!!!!........She has mentioned this issue verbatim in her campaign at Salem yesterday......:).

Anonymous said...

Intha kollaikaara kudumbathai thooki erinthu vittu veru oru kollai kobalai aatchiyil amarthuvom. Vaazhga Jana naayagam!