பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 06, 2011

மீண்டும் மீண்டும் வா! வேண்டும் வேண்டும் தா!

க்ருஷ்ண பாகவதர் இந்த பேரை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறக்க முடியாது. அவருடைய லேட்டஸ்ட் சரக்கு ..


இந்த தேர்தல் மிக வித்யாசமானது. கருணாநிதியையும் திமுகவையும் வடநாட்டு பத்திரிக்கைகளும், சில தமிழ் பத்திரிக்கைகளும், இ.வ போன்ற ப்ளாக்குகளும் 2G ஊழலை மையமாக வைத்து சாட்டையை சுழற்றிக்கொண்டிருக்கின்றன. நமது emotionகளை சற்று தள்ளி வைத்து ப்ராக்டிகலாக சிந்திக்கும் முயற்சியே இக்கட்டுரை.
மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதிலிருந்தே காமம், க்ரோதம், லோபம், மோஹம், ஊழல், exploitation எல்லாமே ஆரம்பித்து விட்டது.மகாபாரதக் காலத்திலிருந்தே மனித குலத்தில் இவை இருந்ததற்க்கான சான்றுகள் பல உள்ளன. ஒரு வடமொழி பாட்டின் படி
‘யஸ்யாஸ்தி வித்தம்
ஸ் நர: குலீன:
ஆ ஏவ வக்தா ஸ ச தர்சனீயா’
யாரிடம் பணம் இருக்கிறதோ அவன்தான் மனிதன். அவனே நல்ல குலத்தில் பிறந்தவன். அவனே படித்தவன், பண்பாளன், சிறந்த பேச்சாளன், எல்லோரும் பார்த்து வணங்கக் கூடியவன். எனவே அந்த செல்வத்தை எந்த வழியிலும் அடைய மனிதன் முயற்சி செய்வான். அதில் அரசியல்வாதிகள் முன்னணியில் எப்போதுமே நிற்கின்றனர்.
இந்த களைகளை எடுக்க எடுக்க மீண்டும் மீண்டும் அவை முளைத்துக் கொண்டே இருக்கும். முடிவே கிடையாது. இந்த தேர்தலில் நாம் களையெடுக்க முயற்சித்தால் தரிசு நிலம்தான் மிஞ்சும். ஏனென்றால் இப்போது எல்லா கட்சிகளும் அரசியல்வாதிகளும் களைதான். எதை பிடுங்குவது? எதை நீர் விட்டு வளர்ப்பது. இந்த நிலையில் எந்த களை நமக்கு உபயோகமாகமானது என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு வியாதியை தீர்க்க நாம் குடிக்கும் மருந்து இன்னொரு மாபெரும் வியாதியை தோற்றுவிக்கலாம்.
என்னமோ திமுக மட்டும்தான் ஊழல் செய்வது போலவும், ஜெ வந்தால் நாட்டில் தேனும் பாலும் பெருகும் என்பது போலவும் பல படித்தவர்களால் பேசப்படுகிறது. நாம் முன்பு பார்க்காத ஜெவின் ஆட்சியா? அவர் தலைகனத்துடன் ஆட்டமாக ஆடியதும் மன்னார்குடி மாஃபியா கும்பலுடன் ஊழலின் உச்சக்கட்டத்தை அடைந்ததும் மக்கள் மறந்து விட்டார்களா என்ன? The remedy for removing the current scandalous government may result in a much worst catastrophe.

பல வருடங்கள் தென்னாட்டு, மற்றும் வடநாட்டு கார்ப்பரேஷன்களில் உயர் அதிகாரியாய் பணி புரிந்ததில் நான் கண்ட உண்மைகளை எடுத்து சொல்ல விரும்புகிறேன். கருணாநிதி குடும்பத்தினர், டிவி, சினிமா மற்றும் பல தொழில்களை வளைத்துப் போட்டு விட்டதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் வலிமை அடைவதற்க்கு முன் 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தொழில்கள் இருந்த நிலமை என்ன? மத்திய அரசாங்கத்தையும், ஊழல் காங்கிரஸ்காரர்களை கையில் போட்டுக் கொண்டும் வடநாட்டு தொழிலதிபர்கள் தமிழ்நாட்டை சுரண்டி வந்தனர். High Quality Productகளை நேர்மையோடும், நாணயத்தோடும் உற்பத்தி செய்து வந்த TVS, Ashok Leyland, மற்றும் திரு.சிவசைலத்தின் தொழில்களை வளரவிடாமல் செய்ததோடு அவற்றை நசுக்கியும் வந்தனர். Standard Motors மூடப்பட யார் காரணம்? TVS Suzuki நாட்டிலேயே உயர் நிலையை எட்டிக்கொண்டிருந்தபோது அதை அழிக்க அவர்கள் செய்த சூழ்ச்சி எத்தனை? ஸ்ட்ரைக்கை தூண்டுதல், supply chainஐ துண்டாடுதல், மத்திய அரசாங்கத்தின் மூலம் பல நெருக்கடிகள் என்று எத்தனை முயற்சிகள் செய்தார்கள்?
தமிழ்நாட்டில் Leyland அரசாங்க பேருந்துகளையே பார்த்திருந்த எனது கண்களுக்கு முதன் முறையாக பல வடநாடுகளுக்கு அலுவலில் 80களில் பயணிக்கும்போது எங்கு நோக்கினும் Tata Benzதான். KSRTC அலுவலர் ஒருவரிடம் ’ஏன் லேலண்ட் பஸ்ஸே இங்கு ஓடமாட்டெங்குது’ என்று கேட்டபோது ’அது ரொம்ப நல்ல வண்டிதான். ஆனா அரசாங்கத்துல TATA வண்டிகளை வாங்கச் சொல்லி உத்தரவு போடறாங்க. என்ன செய்யறது” என்றபோது TATA எப்படி எல்லா மாநிலங்களிலும் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கியிருக்கிறது என்பது தெரிய வந்தது. சரி உள்ளூர் மார்க்கெட் கிடைக்கலேன்னா பரவாயில்லை என்று ஐரோப்பாவில் பெரும் ஆர்டர் பெற்று கண்ணியமாக பிழைப்பு நடத்தி வந்த லேலண்டை சும்மா விட்டர்களா வடநாட்டார்? Imports Exports policyகளை தவறாக உபயோகப்படுத்தி Production & Delivery களை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்துவது, யூனியனை தவறாக தூண்டி விடுவது என்று எத்தனை தில்லு முல்லுகள் செய்தார்கள். தரமான TVS கம்பெனி High end of Value Chain ஐ அடைந்தால் நாம் அதோகதிதான் என்று அஞ்சி ‘ ஏதோ ப்ரேக்கோ, ரேடியேட்டர் மூடியோ செஞ்சு பொழச்சுக்கோ! பெரிய லெவலுக்கு ஆசைப்படாதே!!’ என்று தமிழ்நாட்டு தொழில்களை முடக்கி போட்டது யார்? திமுகவா? இல்லை காங்கிரஸ்காரகளை கையில் வைத்துகொண்டு ஆட்டம் போட்ட வடநாட்டவர்களா?
TVS உலகதரம் வாய்ந்த Whirlpool உடன் கூட்டு சேர்ந்து பாண்டிச்சேரியில் தயாரித்த washing Machines கபகபவென விற்பனையில் முன்னேறுவது கண்டு துடித்துப் போய் Videocon போன்ற வடநாட்டு கம்பெனிகள் செய்த மோசடித்தனங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு லாரி லோடுக்கு மட்டும் invoice செய்துவிட்டு அதே invoice வைத்து பத்து லாரி வாஷிங் மெஷின்களை excise ஓ மற்ற வரிகளோ செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி பல வருடங்கள் கோடிக்கணக்கில் அல்லவா வரி ஏய்ப்பு செய்தார்கள். நல்ல வேளை மக்கள் தரமான மெஷின் என்று whirlpoolக்கு ஆதரவு அளித்ததால் அந்த கம்பெனி மூழ்காமல் தப்பித்தது. இதெல்லாம் Tip of the Icebergதான். தொழில் துறையில் இருப்பவர்களை கேட்டால் கதை கதையாக இன்னும் பல கம்பெனிகள் பற்றி சொல்வார்கள்.
’நீ என்னாடா டாடாவா பிர்லாவா?’ என்று மக்கள் மத்தியில் அவர்களை விட்டால் பெரிய பணக்காரர்களோ தொழிலதிபர்களோ இந்தியாவில் இப்பொதும் எப்போதும் கிடையாது என்று மக்களுடைய sub conscience ல் பதிந்துபோய் வடநாட்டு புகழ்பாடியாகவே பல decades இருந்தோர்களே தவிர நம்மவர்கள் இந்திய அளவில் வெற்றியடைய முடியாமல் தடுப்பது என்னது என்று யோசித்ததே இல்லை. அடுத்து வந்தார் அம்பானி!. அவர் செய்த தில்லு முல்லுக்களும், சட்ட மீறல்களும், வரி ஏய்ப்புகளும் ஏராளம்! ஏராளம்! இப்போதும் அம்பானி போல் உண்டா என்றுதான் தமிழர் புகழ்கிறார்களேயொழிய இவர் அயோக்கியர், அழுகுணி, தில்லுமுல்லு கேஸ் என்று யாராவது தென்னிந்தியர் அவரை வசை பாடினார்களா. திரூபாயின் புகழ்பாடி , அவர் தவறுகளை நியாயப்படுத்தி நம் தென்னிந்திய இயக்குனர் மணிரத்தினம் திரைப்படம் வேறு எடுத்தார்.
காங்கிரஸ் பெருச்சாளிகள் பலர் கோடிக்கணக்கில் ஊழல் செய்து, கையும் களவுமாக மூட்டை மூட்டையாக பணம் பிடி பட்டபோதும், அட இது இந்தியச் சொத்துடா என்று கவலைப்படாமல் ‘அட அவன் எங்கியோ டெல்லியில கொள்ளையடிச்சான், பீகாரிலே கொள்ளையடிச்சான்’ என்று அவனை ஹீரோ ரேஞ்சுக்கு பார்த்தனரே தவிர, நம் பத்திரிக்கைகள் அதைக் கண்டுகொண்டதா! இல்லை நம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை நிறுத்திக் காட்டினரா!. என்னமோ இந்த ஊழல் recordஐ அவர் வீழ்த்தினார், இவர் வீழ்த்தினார் என்று தனது statistics மேதாவித்தனத்தை காட்டிக் கொண்டனரே தவிர உருப்படியாக என்ன செய்தார்கள். அந்த பெருச்சாளிகள் இன்றும் சகல மரியாதைகளுடன், க்ஷேமமாய், இன்றும் கவர்மெண்ட் பாதுகாப்புடன் சொகுசு காரில் உலா வருகிறார்கள். ஆனால் இன்று என்ன நடக்கிறது? ஒரு தமிழன், ஒரு தமிழ் கட்சி ஊழல் செய்ததென்றால் பாராளுமன்றமே ஸ்தம்பிக்கிறது, பத்திரிக்கைகளும், மற்ற ஊடகங்களும் சாடித் தள்ளுகின்றன. இது வடநாட்டு ஏகாதிபத்தியம் இல்லாமல் வேறென்ன?
திமுகவினர் அயோக்கியர்கள், ஊழல் பெருச்சாளிகள், தில்லு முல்லு செய்து சாட்டிலைட், டிவி, கேபிள், சினிமா இவைகளை கைப்பற்றி விட்டனர் என்று சொல்பவர்கள், டாடா, பிர்லா, அம்பானி வளர்ந்த கதையை மறந்ததேனோ! முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும், அயோக்கியர்களை வெல்ல இன்னொரு அயோக்கியனால்தான் முடியும், ஒரு ரொளடியை மிஞ்ச இன்னொரு ரொளடிதான் தேவை. இவர்கள் இப்படி செய்யவில்லையென்றால் இன்று இந்த துறைகள் zee TV, Start Tv போன்ற வடநாட்டு கம்பெனிகளால் monopolyயாக்கப்பட்டு, தமிழ்நாட்டிலிருந்து மொத்த வருமானமும் வடநாட்டிற்க்கு முன்பு போலவே மூட்டை கட்டப்பட்டிருக்கும். வடநாட்டான் ஊழல் செய்தால் எங்கோ நடக்கிறது நமக்கென்ன என்றிருப்பவர் ஒரு தமிழ் கட்சி செய்தால் சீறுவது ஏன்? தமிழ்நாட்டிலிருந்தா அந்த பணம் சுரண்டப்பட்டது? மத்திய அரசாங்கத்திடம் இருந்துதானே! We should be happy somebody is getting us our due share that was taken from us for decades. தமிழ்நாட்டு மக்களின் பாக்கெட்டிலேயெ கைவிட்டு நம்மையே சுரண்டி வந்த ஜெ கட்சிக்கு இது எவ்வளவோ மேல்தான். "கங்கை கொண்டான்", "கடாரம் வென்றான்", "இமயத்தில் கொடி நாட்டினான்", "கனக விசயரைக் கல் சுமக்க வைத்தான்" என்று சோழமன்னன் பற்றி இலக்கியம் பாடும் தமிழர் அதே சோழ மண்ணைச்சேர்ந்தவரின் கட்சி அதே conquering ஐ repeat செய்யும்போது இகழ்வது ஏனோ?
ஊழல் ஊழல் ! நமக்கு பெருமை தேடித் தரும் யோக்கியமான தலைவர் தமிழகத்தில் இல்லையா? என்பவர்களுக்கு என் பதில் இதுதான். ’ஊழல் என்பது உலக அரசியலில் கலந்துவிட்ட இணைபிரியாத ஒன்று. அமெரிக்காவில் கூட பெரிய புஷ், சின்ன புஷ் இருவருமே சவுதி ஆயில் கம்பனிகளில் சம்பந்தப்பட்டிருந்ததும், துணை ஜனாதிபதி டிக் சேனியின் ஹாலிபர்ட்டன் ஊழலும் அனைவரும் அறிந்ததே. இந்தியாவை பொருத்தவரை காங்கிரஸ் ஊழலில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சி. தமிழ்நாட்டை தவிர எல்லா மாநிலங்களிலும் அவர்கள் பல வருடங்கள் அடித்த கொள்ளை பல லட்சம் கோடிகளைத் தாண்டும். ’ஐயோ! ஊழலைக் கொண்டாடுறானே இவன், அபிஷ்டு! காமராஜர் மாதிரி ஊழலில்லாத தலைவரல்லவா தமிழ்நாட்டுக்கு தேவை. ஊழலை நியாயப்படுத்தும் பாகவதர் ஒழிக! என்று பின்னூட்டமிடப் போறவங்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் “ இப்போது உள்ள நிலையில் காமராஜை போன்ற ஊழலற்ற தலைவர் தமிழ் நாட்டை ஆண்டால் நாம் தலையில் துண்டு போட்டுக்கொண்டு கோயிலில் போய் உண்டைக்கட்டி வாங்கி தின்ன வேண்டியதுதான். எனவே தமிழ்நாட்டை காப்பாற்ற தலை சிறந்த ஊழலரசர் ஒருவரால்தான் முடியும்.” ‘ஏன் அங்க ஜெ வால் அது முடியாதா! அவங்க முன்னாடியே prove பண்ணவங்கதானே? என்று அவருக்கு ஓட்டு போடப் போகிறவர்கள் ஒன்றை நினைவு கொள்ளவேண்டும். எந்த தொழிலாக இருந்தாலும் emotional trip ல் செல்லாமல் கருமமே கண்ணாக இருப்பவர்தான் நமக்குத் தேவை. மாஃபியா கும்பலால் டைரக்ட் செய்யப்பட்டு அடிக்கடி உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டு, மத்திய அரசையும் பகைத்துக் கொண்டு கிணற்றுத் தவளையாக உள்ளூரிலேயே ஆட்டயப் போடுவர்களால் தமிழருக்கு நன்மையில்லை. ஆடி கறக்கிற மாட்டை ஆடியும், பாடிக் கறக்கற மாட்டை பாடியும் கறக்கத் தெரிந்த ஊழல் விஞ்ஞானிகளால்தான் தமிழ்நாடு செழிப்படையும். சண்டை போடுறா மாதிரி போட்டு, வேண்டும்போது ப்ரஷர் குடுத்து, பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய இடத்தில் அவர்களுடன் ’கை’ கோர்த்து பங்கு போட்டுக் கொண்டு தமிழகத்திற்கு மேலும் செழிப்பை கொண்டு வருபவர் அல்லவா நவீன கால கங்கை கொண்டான்! அவர் மீண்டும் வருவது அல்லவா தமிழரும் தமிழ் தொழில்களும் உயர வழி!
இங்கிருந்து central poolல் சேர்ந்த பணத்தை தனக்காகவும், தன் stateற்காகவும் கோடி கோடியாக காங்கிரஸ் மற்றும் பல வடநாட்டு கட்சிகள் கொள்ளையடித்து வந்த நிலை மாறி, புயலோ, வெள்ளமோ தமிழ்நாட்டிற்கு உரிய நியாயமாக வந்து சேர வேண்டிய நிவாரணத்தொகை முழுமையாக கொடுக்கப்பட்டதில்லை என்கிற நிலை மாறி ‘உன் அடிமடியிலேயே வைக்கிறேண்டா கை’ என்று சூளுரைத்து செய்து காட்டும் செயல் வீரரல்லவா தமிழருக்கு வேண்டும்!. தமிழகத்தை இன்று முக்கிய IT மையமாகவும், வடநாட்டார் வேலை தேடி இங்கு கையேந்தி வரவும், இந்தியாவின் detriot ஆகவும் மாற்றிக் காட்டியது கொள்ளையர் என்றாலும் அது ஓ.கே!. வெள்ளைக்கார கொள்ளையரை ஏற்றுக் கொண்டு அடிமையாக இருந்த நமக்கு உள்ளூர்காரன் அதையே செய்தால் என்ன வேகுது! பல வளங்களை நமக்கு கொண்டு வந்து சேர்ப்பவர் சூழ்ச்சிக்காரரோ, ஊழல் பேரரசரோ, தில்லு முல்லு விஞ்ஞானியோ எனக்கு அக்கறையில்லை. என் வீட்டிலேயே கை வைத்தாரா என்று மட்டுமே பார்ப்பேன். பகவத்கீதையில் சொல்லியிருக்கிற படி Survival of the fittest என்கிற game விளையாடப்படும்போது நாம் மட்டும் பலமில்லாமல் சோனியாக இருக்க முடியுமா? அந்த பலத்தை பெற வேண்டுமானால் நாம் ஊழலில் சிறக்கவேண்டும்! இல்லையென்றால் நம் representatives ஆவது ஊழலில் வடநாட்டானை மிஞ்சி, முடிந்தவரை நம் பங்கை மத்திய அரசிடமிருந்து பெறவேண்டும். நாம் நெடுநாளாய் வடதிசை நோக்கி கையேந்தி இருந்த நிலமை மாறி, மிரட்டல், தாஜா, partnership என்கிற பல உத்திகளை உபயோகித்து தானும், தன் குடும்பமும் பயனடைந்து, வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பொசியுமாம் என்பதாய் இவ்வளமை எல்லா தமிழ் மக்களையும் அடையவேண்டும். இந்த வேலையை கருணாநிதி & கம்பனி திறம்படவே செய்து வருகிறது. அவர்களின் இந்தப் பணி இச்சமயத்தில் தேவையானதுதான். ஆகவே
தமிழர் தலைவா! மீண்டும் மீண்டும் வா! எமக்கு வேண்டும் வேண்டும் தா!

கிருஷ்ண பாகவதரை யாரும் திட்ட கூடாது !

மதுரை ரவுண்டப் வீடியோ கீழே ( இதே மாதிரி தான் மற்ற ஊர்களும் இருக்கும் என்று நம்புவோம் )66 Comments:

Anonymous said...

இவர் கிருஷ்ண பாகவதரா? இல்லை "நாராயணா" புகழ் பாடும் நாரதரா?

Anonymous said...

அப்போ மோடியும் நிதிஷ் குமாரும்

முட்டாள்கள்!

கருணாநிதி தான் புத்திசாலி!

திமுக விற்கு புதிய கொ ப செ கிடைத்து விட்டார்!

Anonymous said...

kali kaalam.......verenna solla

jaisankar jaganathan said...

whirlpool தரமான வாஷிங் மெஷினா? கொடுமை. எங்க வீட்டுல அடிக்கடி ரிப்பேர் ஆனது. வாங்கி 2 வருஷத்துல மண்டையை போட்டது

கானகம் said...

ஏன் இட்லிவடை இந்த ஈனப்பிழைப்பு? கருணாநிதிக்கு சாமரம் வீசும் உங்களை அவர் கதைவசனம் எழுதிய இளைஞன் படம் பார்க்கச் சொல்ல்வேண்டும்.

உடலை விற்பவளிடமே ஊழலை ஆரம்பித்தவர் என கண்ணதாசன் வனவாசத்தில் யாரைச்சொல்கிறார் எனத் தெரியுமா கிருஷ்ணபாகவதர் எனும் அடிமுட்டாளுக்கு?

சரி குடிமுழுகிய பின்னர் அங்கு ஏதுமிருக்கப்போவதில்லை.. அதுவரை அவரே இருக்கட்டும்

Aravindan said...

இட்லி வடையில் இப்படி ஒரு கட்டுரையா.?

ஆச்சர்யம்தான்..

கட்டுரை ஆசிரியர் பெயர் சொல்லமுடியுமா.?

Jayakanthan said...

This is the most comedy piece I have ever read in IV. ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? ஏன் உங்க ஊருல ஒரு நல்ல சுயேச்சை வேட்பாளர் கூட இல்லையா? Vote for the best person in your constituency. At least Don't give absolute majority to any major party. Don't vote for someone that has a pending case against them (I know they are not guilty unless proven). Are you trying to prove - 'If you are warm and comfortable under pile of shit, don't make any noise and spoil it.'

Anonymous said...

தக்காளி! இ.வ மஞ்சத் துண்டுகிட்ட துட்டு வாங்கிட்டான்யா! ரெண்டு பக்கமும் வாங்கி வாங்கி பாக்கெட் ரொம்புதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேணாம். தேர்தல் முடிஞ்சப்புறம் மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடிதான்!

பத்மநாபன் said...

வார்த்தைகளையும் பத்திகளையும் இவ்வளவு நெருக்கமாக போட்டால் படிப்பதா இல்லை ஸ்க்ரோல் மட்டும் செய்வதா ?

Anand said...

What a foolish article and idiotic arguments !!!!!!!! Krishna bhagavathar pesama DMK's unjaviruthikku jalra adika pogalam.........

SAN said...

Lopsided post by krishna bhagavather.
I am working in TVS group in chennai in a senior position and i know the difficulties we are facing in this present regime.
In fact 3 yrs back b'cas of this govt. we have opened one factory in jamshedpur,now we are in the process of opening a plant in pune and one near pant nagar.The reason being power shortage and militant trade union practised by DMK and PMK.If you go to sripermabudur belt u can see with your eyes.
I strongly disagree with this post.

Anonymous said...

India is waking up against organised corruption. But in TN we keep accepting / tolerating huge scams for the past 25 years

Wake up TN Join India to liberate from the crooks

Full text of Anna Hazare's letter to the PM: http://bit.ly/eBHHnv

தெளிவடைந்தோன் said...

பாகவதர் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. எல்லா மாநிலங்களும் முடிச்சவிழ்க்கியா இருக்கும்போது நாம ஏமாளியா தர்ம நியாயம் பார்த்துகிட்டுருந்தா ஏறி மிதிச்சிட்டு போயிடுவானுங்க.பாகவதர் சொல்லுற மாதிரி பஞ்ச பரதேசியா கையேந்தி பொழக்க வேண்டியதுதான்.
முடிவு செஞ்சுட்டேன்! என் ஓட்டு மஞ்ச துண்டுக்கே!

அப்பாதுரை said...

உளறலுக்கு அளவே இல்லையா? TVSக்கும் தரத்துக்கும் ரொம்ப தூரம் என்பது இருக்கட்டும் - கருணாநிதி குடும்பம் எல்லாவற்றையும் வளைத்துப் போடுவதை TATA BIRLA தொழில்துறை ஆதிக்கத்துக்கும் வித்தியாசம் இல்லையா? கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டில் அவசியப் பொருள்/சேவையில் எதில் ஈடுபட்டிருக்கிறது?

ஏதாவது எழுத வேண்டுமென்று எழுதி விடுவதா? படிப்பவருக்கும் அறிவு இல்லை என்ற எண்ணமா?

Sivakumar said...

super....

I think Krishna Bhagavathar would be like Virumandi "Pasupathi". He is telling the story from his angle.

Anonymous said...

இட்லி வடையை யாரும் நம்ப வேண்டாம் திமுக அதையும் விலைக்கு வாங்கிவிட்டார்கள் போன மாதமே நம்ப தகுந்த இடத்திலிருந்த வந்த தகவலை முதலில் நான் நம்பவில்லை ஆனால் இப்பொழுது நம்புகிறேன் நண்பா பாமரா நன்றி உன் தகவலுக்கு

ELANGOVAN said...

@SAN..
power shortage//
being in a high post, can you think why do we have power shortage? there are 0 projects in Jaya's regime. also pls google and find tn electrical projects started last few years. this is going to produce enough electricity from 2013.

unions//
unions are there for 100 yrs. and also if anybody says union, the first comes to mind is Communist. but you so cleverly exclude communist and put DMK/PMK.

விஷயம் தெரிந்த அனானி said...

ஆமாம் கிருஷ்ண பாகவதரே! உங்கள் வீட்டைப் பூட்டாமல் திறந்து வையுங்கள். வடநாட்டு முகமூடித் திருடர்கள் வந்து கொள்ளையடிக்கக் கூடாது, செம்மொழி பேசும் நம் ஊர்த திருடர்கள் கொள்ளையடித்து செல்லட்டும். அதைப் பெருமையாக பதிவு எழுதலாம்! கொள்ளையடிப்பவன் வடவனாக இருந்தாலும் சரி, தெற்கத்தியானாக இருந்தாலும் சரி - எவனாக இருந்தாலும் அவன் டங்குவாரை பிச்சிவிட வேண்டாம்? நாம் உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறோம் என்பதை நிரூபிக்க வேண்டாம்? அசோக் லேலண்ட் - முதலாளி தென்னிந்தியர் இல்லை. வட நாட்டவர். டி வி எஸ் கம்பெனி மீது சில வருடங்களுக்கு முன்பு, வட நாட்டு தொழில் அதிபர் ஒருவர் (Bajaj?), தங்களுடைய டிசைனை திருடியதற்காக வழக்குப் போட்டிருந்தனர்.
எனவே, ஊழல் பெருச்சாளிகளை ஆதரிப்பதற்காக, வட நாட்டவர், தென்னவர் என்றெல்லாம் வாக்காளர்கள் காதில் பூ சுத்தாதீர்கள்!

Anonymous said...

Boss.... we are very much having respect in Idlyvadai.... Dont publish these type of comments.... idiotic reasons for voting to DMK.... MK and co didnt get any rights on people interest in cauvery.... mullai periyar... etc. from central govt. He got telecom ministry and did corruption and lose it. Is it wise for Tamilian, if he says yes, he is mad.

Shri Hari said...

இந்த பதிவில் ஒரு மிக பெரிய பெருச்சாளி போகும் அளவுக்கு ஓட்டை இருக்கிறது. ஒட்டு மொத்தமாக வட நாட்டு தொழில் அதிபர்கள் என்று கூறுவது முட்டாள் தனம். உங்களை பொறுத்தவரை அம்பானி மற்றும் டாட்டா தான் வட நாடா? உங்கள் பொது அறிவு ரொம்ப மோசமாக உள்ளது.

70 கோடி மக்கள் தொகை கொண்ட வட நாட்டில் ஒரு பத்து பேர் கொண்ட பணக்கார முதலைகள் செயும் தவறுக்கு மற்றவர்கள் என்ன செய்வர்கள். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இவர்கள் எல்லாம் பண வெறி பிடித்த பேய்கள். இதில் வட நாடு என்ன? தென் நாடு என்ன?

இங்கு தொழில் அதிபர்கள் வருவது இங்குள்ள மனித மற்றும் இயற்கை வளம் தானே தவிர, வேறு எந்த கழக கம்முனாடிகளாலும் கிடையாது. இந்த குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் பதிவை படிக்கும் பொழுது நீங்கள் பகுத்தறிவு பாசறையில் இருந்து வந்தவர் என்று தெரிகிறது. ஏன் எனில் அவர்கள் தான் இந்த மாதிரி குறைந்த பட்ச அறிவு இல்லாமல் பேசுவார்கள்.

ஒரு விதத்தில் உங்கள் கருத்தை அமோதிக்கிறேன். காங்கிரஸ் சொம்பு தூக்கில் காலம் காலமாக மத்தியில் உள்ளவர்களுக்கு சொம்பு தூக்கியே டாட்டா, அம்பானி போன்ற கொள்ளையர்களுக்கு உதவி செய்து இங்குள்ள தொழிலை அளித்தார்கள். ஏன் எனில் காங்கிரஸ் ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. ஒரு நூறு பேர் கொண்ட கூட்டத்தை கூட பணம் செலவு செய்யாமல் ஜெயந்தி நடராசனால் கூட்டமுடியாது. ஆனால் இவருக்கு கூட காங்கிரஸ் ஒரு சில தொகுதிகளை ஒதுக்குகிறது.

இது மற்ற கட்சிகளில் நடக்காது. ஒரு சிறந்த உதாரணம் பிஜேபி. எந்த மாநிலத்தின் உள் விவகாரத்திலும் ஒரு அளவுக்கு மேல் மத்திய BJP தலையிட முடியாது. ஏன் எனில் அங்கு இருப்பது மக்கள் சக்தி / ஜனநாயகம். ஒரு சிறந்த நிர்வாகத்தை பாஜக தரும். அனைத்து மாநிலத்திலும் கர்நாடக உட்பட சிறந்த நிர்வாகத்தை கொடுக்கிறது.

BJP IS NOT BEST , BUT BETTER THAN ANY OTHER POLITICAL PARTY

Anonymous said...

We had doubt now its confirmed that Idly vadai is sold to DMK group. Now they will artfully shift the articles and people to their support. Ennatha solla.......kevalam.

Swaminathan said...

bhagavathar is thinking in line with pamaran. They also don't care about 2G , scandals etc. They only see what tangible benefit they get. Probably they are right.Instead of talking about corruption free politics and living with hunger, many people opt for corrupt politicians as long as they do something. uncorrupt people will do nothing.

neovasant said...

//

தமிழகத்தை இன்று முக்கிய IT மையமாகவும், வடநாட்டார் வேலை தேடி இங்கு கையேந்தி வரவும், இந்தியாவின் detriot ஆகவும் மாற்றிக் காட்டியது கொள்ளையர் என்றாலும் அது ஓ.கே!.

//

This is totally wrong understanding. Chennai is a port city hence automobiles, electronic manufacturers prefer Chennai for their industries. Any sensible government will use that. IT industries followed suit as the land prices(rental) were cheaper for existing industries.

Also, the author fails to understand that we had been a decent democratic society and we are in the process of total degradation. It'll be easier now to reconstruct than after total collapse.

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

அட வுட்ங்கய்யா!! அதான் யாரும் திட்டக் கூடாதுன்னு சொல்லிட்டாருல்லே! சிலருக்கு ஒரு செண்டிமெண்ட் இருக்கு.தான் சொன்னதுக்கு எதிர்மறையா நடக்கும்னு_ அந்த மாதிரி கேஸோ என்னவோ யார் கண்டது??
ஆனாலும் இந்த திருட்டு அரசியல்வியாதிகள் மாதிரி எதுக்குய்யா வடக்கு, தெற்கு என்று தேசத்தைத் துண்டாடறீர்?? உம்மாலெல்லாம் நிம்மதியா தூங்க முடியுதா??
இங்க வந்து படிச்சு கமெண்ட் போடுங்க!!

sagamanithan.blogspot.com

Anonymous said...

Aha what an imagination

Bagavathar vAl - did you meet Kapil sibal recently. May be you watched him on TV.

The biggest beneficiaries of DMK rule (apart from kazhaga family) have been tata, Adag, swan, ETA (including star health insurance), ADAG, videocon, Sterlite etc

are these not north indian companies ETA - is very north to us.

For eggample - i do not know if you have noticed Tata marco polo MTC buesses in chennai - they are a misfit for our roads as they can't turn easily - you can see the dirvers realy struggling..... Who bought these TATA buses

Ganpat said...

இதுவரை தமிழ் வலைதளத்தில் வந்த பதிவுகளில் மிகவும் முட்டாள்தனமான,அசட்டுப்பதிவு எது என்று ஒரு போட்டி வைத்தால்,
இந்த பதிவு பெருத்த சிரமம் ஏதும் இன்றி முதல இடத்தை பெற்றுவிடும்.

பிதற்றலுக்கும்,உளரலுக்கும் இந்த கட்டுரை வாயிலாக ஒரு அளவுகோல் கிட்டிவிட்டது!!

kothandapani said...

Hats off to bhagavathar. this is one way of justifying corruption.Tata birla, Ambani manipulated not being the govt. if they contest election,no body will vote for them. but here is a group who cheated the people and swindled the country like Tata with govt power.How is he going to justify the rise of cement sand brick.Is this rise affecting the northindians.While there is no doubt that jaya will be more corruptive, we need a change because we strongly believe that a new govt will take atleast two years to go high in corruption. atleast those two years reprieve will not be there if DMK comes back to power.

Anony8 said...

Sardar Joke hai kya?

Anonymous said...

-- க்ருஷ்ணாவின் கட்டுரை அபத்தம். டிவிஎஸ் நிறுவனத்தை அழித்தது வர நாட்டுக்காரர்களாமா? நல்ல கேலிக்கூத்து. அரைகுறை தகவல்களை வைத்துக் கட்டுரை எழுதினால் இப்படித்தான்.

ஒரு காலத்தில் மிகச் சரியான நேரத்திற்கு பேருந்துகளை இயக்கி, மக்கள் தொண்டனாக இருந்த டிவிஎஸ் பேருந்து நிறுவனத்தை ஒழித்தது யார்? அவர்கள் வளர்ச்சிக்கு பல்வேறு விதங்களிலும் முட்டுக்கட்டை போட்டது யார்?

அரை வேக்காட்டுத்தனமாக, கேவலமாக, திருடர்களின் திருட்டை பசப்பி நியாயப்படுத்துவதாக இருக்கிறது இந்தப் பதிவு. இதில் பாகவதரை வேற திட்டக் கூடாதாம்.

எஸ்.வி. சேகரை அந்தரமாக, ஆபாசமாக காழ்ப்புணர்ச்சியோடு எழுதியவர் தானே இந்த -- க்ருஷ்ணாம் பேட்டை பாகவதர். இதிலும் அதைத் தொடர்கிறார்.

எவ்வளவு வேண்டுமானாலும் ஆடுங்கள்.அப்படி ஆடி சம்பாரிச்சவன் எல்லாம் இன்னிக்கு மண்ணோடு மண்ணாப் போயிட்டான்.

நான் வேற என்னத்த சொல்ல? விரைவில் எல்லாம் மாறும். அப்பத் தெரியும்.

Anonymous said...

ஐயா கோதண்டபாணி
நெதானத்துலதான் பேசறீங்களா இல்ல விஜய்காந்த் மீட்டிங் ஏதாச்சும் போய் வந்தீங்களா? அம்மா வந்தாலும் ஊழல் உச்சமடைய 2 வருஷமாகுமாம் அதுவரை இவர் நிம்மதியா இருப்பாராம். ஒங்களுக்கு மாறுதல் தேவை அடுத்து வர்ரது எந்த கழிசடையானாலும் சரி. அப்படித்தானே! உங்கள மாதிரி கொழம்பி போன ஆளுங்க ஓட்டு போடவே வரமாட்டிங்க. ஆனா படிக்காதவந்தான் இங்க நல்லா சிந்திச்சு ஓட்டு போடறான். நீங்க ப்ளாக் ப்ளாக்கா போயி எழுத மட்டுமே தெரிஞ்ச பேப்பர் புலி.

க்ருஷ்ணாம்பேட்டை said...

தம்பி க்ருஷ்ணா... இன்னும் நிறைய படிக்கணும்பா. இப்படியே கழகத்துக்கு ஜால்ரா தட்டிக்கிணே இருந்தேன்னு வச்சுக்கோ உனக்கு ஒருநா தட்டிருவாங்க. பார்த்து சூதனமா இருந்துக்கப்பா...

//கிருஷ்ண பாகவதரை யாரும் திட்ட கூடாது !//

அப்படின்னா நல்லா திட்டணும்னு சொல்றீங்களா? அவர் பாவம் படிச்ச முட்டாளா இருக்காரே என்ன செய்யறது. தான் ஒரு நா படும்போதுதான், தன்னை ஒரு நா தூக்கி எறியும் போது அவர் முழிச்சிக்குவாரு. அதுவரைக்கும் தூங்கட்டும் நல்லா.

நாராயண said...

இன்னும் யாருமெ இட்லி வடையை சரியக புரிந்து கொள்ள‌வில்லையென்றே கருதுகிறேன்.. ப்ஹகவதர் சொல்வதிலும் நாயம் இருக்கத்தானெ செய்கிறது.. அவர் சொல்ல வந்தது பின் வருவன தான் என்று நான் எண்ணுகிறென்..
‍‍கருணாநிதி எவளொதான் கொள்ள அடிச்சாலும்.. ஒரு சில துறைகளில் தமிழ்ஹகம் வளர்ந்துள்ளதை யாராலும் மறுக்க இயலாது.. இதுவெ அம்மா இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா எனபது பெரிய கேள்வி குறி தான்..
இங்கு இருக்கும் பெரும்பான்மையானவர்கள் "ஊழலரசர்களெ" இதில் மறுப்பேதும் இல்லை, ஒரு பழமொழி சொல்வார்கள்..
" பேயிடமிருந்து தப்பித்து , பிசாசு கையில் மாட்டினமாரி" என்று, அந்த மாதிரி எதும் நடக்காமல் இருக்க எண்ணியே இப்பதிவு என நான் நினைக்கிறேன் ..
இற‌ந்த‌ மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எழுதப்பட்டிறுக்கிறது..
சிந்திப்பொம்...!!! செயல்படுவொம்..!!!
குறிப்பு: நான் ஒன்றும் திமுக வுடைய‌ கொபசெ இல்லை.. என்னுடய கருத்தை பதிவுசெய்திருக்கிறேன்.. அவ்வளோதான்..

Roaming Raman said...

உங்கள் கட்டுரை எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை உணர, உங்கள் கட்டுரையின் முன் மற்றும் பின் கட்டுரைகளைக் காணுங்கள்!! எவ்வளவு இயல்பாக அமைந்து விட்டது பாரும் பாகவதர்!!

Venugopalan said...

Hello Roaming Raman

Hazare issue is slightly different since it focusses on Lokpal that will be the future. The article by Krishna is about selecting between devil and deep sea in the coming elections. What alternative the TamilNadu people have? Both the parties are scandalous and we are forced to pick between the two oozhal katchies. The koottani is with drunkards, Maram Vettis or opportunistic people who use caste of ethnicity. I am sure he is also frustrated and venting out from his angle which one is advantageous for the people in the given circumstances.

If a good party (so far not in sight) that is scandal free is contesting, I am sure everyone will be supporting including the writer Bhagavathar

Anonymous said...

பாகவதரே! பிச்சுபிட்டேள்!

அடேங்கப்பா எல்லாரும் திமுக பேரில வெறுப்பாயி, கொதிச்சு போய் கமெண்ட் போடறாங்கப்பா! உணர்ச்சி அதிகமாயி போயி யோஜனையே செய்ய மாட்டேங்கறாங்களே!

ஜெயிச்சா அட்டகாசம்! இல்லேன்னா மக்கள உடுங்க..கட்சிக்காரங்கள கூட சந்திக்காம சிறுதாவூர் பண்ணையில படுத்து தூங்கறது.கூடவே ஒரு மாஃபியா கும்பல்.நாளைக்கு அம்மா ஜெயிச்சு வந்து பேயாட்சி பண்ணும்போது இதே ஆட்கள் இதே ப்ளாக்குல வந்து பொலம்புவாங்க பாரு.

Karthik said...

I would say don't vote in this election. I know it's contradict to the Democracy. But we know both parties have corrupted crocodiles. If they want injustice to us, why not we do it?? Let's not vote, get the voting percentage to the lowest in the history. Just compare TN and Gujarat. Shame of being a tamilian..

Karthik said...

If everyone are corrupted crocodiles. The BOYCOTT the election.

Existentialist said...

Though I am against both DMK and ADMK, I completely agree with Krishna's Idea. Most of the people commented here dont understand the reality and the thought wat Krishina puts.

Who understood, will never comment. I and Krishna and Narayana are exceptions :)

TVS vs Northies is just an example.


Good one Krishna!

Anonymous said...

//uncorrupt people will do nothing//

Then why should Anna Hazare go on fast until death?

Ganpat said...

This is for the kind attn of all and also Mr.Venugopalan and Mr.Karthik in particular
The choice before us (TN voters) now is NOT
"Who sould come to power?"
but IS
"WHO SHOULD NOT COME TO POWER?"
If one thinks on this line then he /she would invariably get the answer as DMK and vote for any other party/individual
And Mr.Karthik pl.note that all the un-voted ballots go to DMK in the last one hr or so on the election day.
So do not abstain from voting
Thanks and Good Luck

A Heartbroken finally outspoken proud FC student said...

I have lost trust in all these so called self claimed leaders, political parties, etc. After 62 years of independence, MK is still playing the "Dalit" game as equivalent to the central's BC game. Jaya, a self-proclaimed FC supporter didn't do much when she was in power to handle this issue and Karuna being an athiest does all the rituals, worship etc, without anyones knowlege and showing himself as an rationalist for polical gains.

Every politician is only talking about increasing the reservation percentage.

Already FC community has been dug into the deep hole and what do you expect people like us to do? A collector's son comes in a/c i10 buys an application form for Rs.50, because he is BC, whereas I (a school master's son) travel 2 hours in a public transport and buy the same form for Rs.300/- because I am FC.

BC people have reservations in colleges as well as in job. If an exemption is given in college why should another exemption given at job?

This is not a good sign because instead of people from backward community developing it is encouraging more communities to fight for backward community status (ex. Gujjars, etc.)

Show me a politician or a political party who/which treats every Indian equally, provides equal opporuntity to grow and nation build I vote for with with my full support.

Otherwise my vote is either 49'O' or will vote for some independent canditate for him/her to retain the deposit.

- A Heartbroken finally outspoken proud FC student

Shan said...

பேர் ஊர் தெரியாத புலி
விஜயகாந்த் மட்டும் தான் குடிகாரன் மட்டவெரல்லாம் மகாத்மா என்று புரிய வைத்ததிற்கு நன்றி . 2 வருடம் என்று நான் சொன்னது ஒரு ஊகம் தான் 2 மாதம் ஊழல் இல்லாமல் இருந்தாலே சந்தோஷம்தான் சிந்தித்து ஓட்டு போடும் மக்களுக்காகத்தான் கட்டு கட்டாக பணம் பட்டுவாடா நடகின்றதோ வரபோவது ஒரு காப்பர் சிங்க் அல்லது பூலன் தேவிதான்
எந்த கழிசடை என்பது மே 13th தெரிந்துவிடும்

Anonymous said...

the author of this article is mr luckylook
he write in the pseudo name கிருஷ்ண பாகவதr

vijayaragavan said...

I think IV has joined Mr.Karthik's party :)

virutcham said...

இப்படி எல்லாம் கூட ஊழலுக்கு ஆதரவு கொடுக்க முடியுமா. வாரிக் கொண்டு போகிற போக்கிலே புல்லுக்கும் பூண்டுக்கும் நீர் தெளித்துப் போனால் போதுமென்பதற்கு நாமெல்லாம் புல் பூண்டா?

மக்களை புல் பூண்டாக வைத்திருக்கும் வரை தான் அரசியல் கட்சிகள் வாழ முடியும். அடுத்த முறை எங்களைத் தேர்ந்தெடுத்தால் உரமிடுவோம் என்று சொல்லியே எதையும் எதிர்காலத்தில் வைத்திருக்கும் வரை தான் இந்த ஊழல் கட்சிகள் பிழைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தி ஊக்கபடத்துவது போல் இருக்கு.

vshe said...

surprise! parpana/aryaal dvesham is missing in bhagavathar's post that blatantly supports dmk.

One of the worst written blog in Idly vadai. sutha time waste. :(

Anna Hazare vaazhga said...

Uncast votes - going - in favor of DMK - in the last one hour of polling. This happened on the days of ballot papers. With EVM - these things will not happen. The poll booth party agents will not allow these things.
After the elections are over, the election commission must publish on the net, the Voter ID and the data - whether the vote was polled by that ID or not. This must be done for each constituency. This will definitely help to reduce corrupt practces in polling. Can the election commission of India do this?

சட்னி சாம்பார் said...

சிறுதாவூர் கொடநாடு பங்களாவில் படுத்து தூங்குவதாக ஜெயலலிதா மேல் குற்றம் சொல்பவர்களே, 2001 முதல் 2004 வரை மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி எந்த பவரும் இல்லாதபோது திமுக கருணாநிதி மட்டும் என்ன கிழித்தார் என சொல்லுங்களேன்?!?

ஓர் கட்சி தலைமை அதிகாரத்தில் இருந்தபோதே ஒன்றும் கிழிக்காதபோது சும்மா இருந்தபோது என்ன செய்தார் என கேட்பது எதற்கு? நமக்கெல்லாம் கிடைக்கும் சனி ஞாயிறு போலத்தான் அவர்களுக்கு பதவியில்லா காலம்.

பதவியில் இருக்கும்போதே வெள்ளம் வரும்போது நமீதா நடனம் பார்க்கச்செல்லும் வீணர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

வழிப்போக்கன் said...

கிருஷ்ண பாகவதரின் மெய்யிடையிட்ட பொய்க்கதாகாலட்சேபம் நன்றாகவே இருக்கிறது. பத்து நிமிஷம் நன்றாகவே பொழுது போயிற்று.
அவர் குறிப்பிட்டுள்ள அல்லது குறிப்பிடாத வடநாட்டுத் தொழிலதிபர்கள் அரசியலிலோ ஆட்சியிலே பங்குகொள்ளவில்லை. தமிழ்நாட்டு முதல்குடும்பம், இரண்டாம் குடும்பம், இன்னும் கழகக் குடும்பத்தின் கிளைக் குடும்பங்கள் அரசியல், அதிகாரம், தொழில் மூன்றையும் வளைத்துக் கொண்டுவிட்டனரே.
அ. நாமதேயம்

பின்னோக்கி said...

திசை திருப்ப அப்பொழுது ஹிந்தி. இப்பொழுது தமிழ்நாடு - வடநாடு.

இந்தக் கட்டுரை திமுகாவை சப்போர்ட் செய்யவேண்டும் ஒரே நோக்கில் எழுதப்பட்டுள்ளது. thatstamil மாதிரி இட்லிவடையும் ஆகிவிட்டது. ஏமாற்றமே.

Chandramouli said...

We have to give it to Krishna Bhavathar. Nobody could have thought this issue from such a totally different, and may I add,
an atrocious, angle. Brilliant analysis but sadly, a self-defeating exercise. After reading his article, we can only hang our heads in shame, frustrated at our inability to do anything but to blame our fate! Only God can help Tamil Nadu.

Anonymous said...

There is a lot of truth in Krishna Bagavathar's analysis. Though MK comments sarcastically against Brahmins, he does not do that much of damage like ADMK. during Amma's rule the brahmins were the worst affected as the BC reservation % was increased to astronomical levels. I shudder to think what will happen now to Tamil Nadu when she comes back. I agree with Bagavathar.

மதிவாணன் said...

இங்க வந்து கூவுற பாப்ஸ் களினால் அரசு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. பாகவதர் போன்ற பார்ப்பணர்கள் மட்டுமே நியாயமாக பேசுகிறார்கள். என்னைப் போல பல பிற்படுத்தப்பட்ட மக்கள் நன்கு படித்து முன்னேற வசதி செய்தது எங்கள் தமிழ் தலைவர் கலைஞர் ஐயா அவர்கள்தான். அவர் இல்லேன்னா தமிழ்நாடு பீகாரா இன்னேரம் ஆகியிருக்கும். எங்க வளர்ச்சிய பாத்து உங்களுக்கு வயிற்றெரிச்சல். நீங்க கூவிகிட்டே இருங்க. மறுபடி எங்கள் கலைஞர் ஐயாதான் முதலமச்சராவார். இது உறுதி.

பாலாஜி said...

//இப்போது உள்ள நிலையில் காமராஜை போன்ற ஊழலற்ற தலைவர் தமிழ் நாட்டை ஆண்டால் நாம் தலையில் துண்டு போட்டுக்கொண்டு கோயிலில் போய் உண்டைக்கட்டி வாங்கி தின்ன வேண்டியதுதான்//
இந்த வாக்கியத்துக்கு ஏதாவது வலுவான ஆதாரம் இருக்கிறதா. ஊழல் செய்யறவன் ஆட்சி செஞ்சாதான் உருப்படும்ன்ற மனநிலையே ஒரு மனப்பிறழ்வுதான். ஜெ ஆட்சில பாலும் தேனும் ஓடாதுன்னா கருணா ஆட்சில ஓடுமா.

கருணாவும் குடும்பமும் செய்யும் தொழில்கள் கேளிக்கையும் கும்மாளாமுமாக சமுதாயத்தை சீரழிப்பது. அந்த கேளிக்கைகளுக்கு வரி ரத்து செய்வது தமிழனுக்கு இழப்பா வடநட்டானுக்கு இழப்பா.

மணல் கொள்ளையால் தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்கள் குறைந்து விவசாயம் பாதித்தால் அது தமிழனுக்கு இழப்பா அல்லது ஒரு வேளை சோத்துக்கு வடநாட்டானிடம் கையேந்தி நிற்க்கப்போகிறோமே அவனுக்கு இழப்பா.

ஏதோ மாடு சாணிபோட்டாபோல எழுதி நடுவுல மானே, தேனேன்னு போட்டு ஒரு போஸ்ட்டு.ம்....

Sundaresan Natarajan said...

The ulterior motive of making the profit is not merely to declare a dividend or bonus shares. As JRD Tata said, what came from the people must go back to the people. Who does the company earn its profits from? It earns from the capital given by shareholders, from consumers, by trade with vendors, from using transport contractors and so on. If it has some surplus, who does that surplus belong to? Not just to the shareholders, it belongs to whole community, the whole society.

Let Krishna Bhagavadhar confine himself in commenting Politicians and make the topic more interesting to do Time pass and not drag TATA into this.

Natarajan, a proud TATA employee

Sundaresan Natarajan said...

The ulterior motive of making the profit is not merely to declare a dividend or bonus shares. As JRD Tata said, what came from the people must go back to the people. Who does the company earn its profits from? It earns from the capital given by shareholders, from consumers, by trade with vendors, from using transport contractors and so on. If it has some surplus, who does that surplus belong to? Not just to the shareholders, it belongs to whole community, the whole society.

Let the writer restrict himself in commenting about politicians and not TATA

Anonymous said...

இந்த பின்னூட்டம் போட வரவங்க எல்லாம் எப்படா யாரை போட்டு சாத்தலாம்ங்கற நெனப்போடவே வராங்க. அன்னா ஹசாரேவ பாராட்டனும்னு வந்த பின்னூட்டம் 20 தான். இந்த மாதிரி தாக்கற பின்னூட்டங்கள பாருங்க 50 தாண்டி இன்னும் போய்க்கிட்டிருக்கு. உண்மையா நாடு முன்னேறனும்ற நோக்கம் இருந்தா ஏன் இவ்வளவு பேரு போய் ஹசாரே கூட்டதுல கலந்துக்கறது, இல்ல அவருக்கு ஆதரவான செயல்கள்ல எறங்கறது. அதெல்லாம் செய்ய மாட்டாங்க. இதெல்லாம் வேலைக்காகத கேஸ். கம்ப்ளெயிண்டு செய்யவும், இகழ்ந்து பேசவும்தான் தெரியும்.
போங்கையா போங்க! நாட்ட திருத்தறதுக்கு முன்னால உங்கள திருத்திக்குங்கய்யா!

Anonymous said...

சுந்தரேசன் சார்! JRD யோட Mission Statement ஐ எடுத்து வாசிக்கிறீங்க. அதெல்லாம் படிக்கறதுக்கு. ஒவ்வொரு பணக்காரனை பத்தியும் பல Fairy tales உருவாக்கி அவனை ஒரு Legend ஆ create பன்ணிடுவாங்க. நானும் பல வருஷம் TATA Empireல் மிக மிக உயர்ந்த பதவியில் Corporate Officeல் இருந்து வந்தவன்தான். அங்க எவ்வளவு ஊழல், கோல்மாலுன்னு தெரியுமா? பக்கம் பக்கமா எடுத்து சொல்லலாம். சும்மா fairy tale எல்லாம் எடுத்து உடாதீங்க! TATA கம்பனி பத்தின உண்மைகளை எடுத்து உட்டா ஊரே நாறிடும். இப்ப ராடியா டேப்புல நாறிப்போனா மாதிரி.

TATA policy படி Profit எல்லாம் ஷேர் ஹோல்டருக்கு வேலைக்காரங்களுக்கு share பண்ணது போக society க்குங்கிறீங்க. பாகவதர் சொன்னா மாதிரி மு.க & Co விற்க்கும் அதே policy தான். பங்குதாரர்களான தன் குடும்பத்திற்கு போக மக்களுக்குதானே ஒட்டு போட குடுக்கறாங்க! அவங்க business empire னால எவ்வளவு பேருக்கு நல்ல வேலை வாய்ப்பு கெடச்சிருக்கு தெரியுமா? TATA கம்பெனியில south Indiansக்கு இருக்கிற glass ceiling பற்றி உங்களுக்கு தெரியுமா! தெரியலன்னா மூடிக்கிட்டு இருக்கனும். டாடாவுக்கு ஜால்ரா தட்டக் கூடாது. கொஞ்சம் வெள்ளத் தோலா இருந்தா அவர் உயர்ந்த மனிதர், கருப்பா இருந்தா அவன் மட்டமா? வெள்ளக்காரனுக்கு சலாம் போட்டுகிட்டு இருந்தீங்க! இப்ப இன்னமும் வடநாட்டானுக்கு போடறீங்க. தன்மான உணர்வ கொஞ்சம் வளர்த்துக்குங்க!

Manjal Thundu said...

வந்துட்டாருய்யா வாந்தி எடுக்க ! அக்மார்க் உளறல். அசட்டு அம்பிகிட்ட வாங்கி கட்டிகிட்டது பத்தல போல.

ஊசின இட்லி வடை சாப்பிட்ட தான் வாந்தி வரும். இங்க ஓசில வந்ததெல்லாம் வாந்தி எடுக்குறாங்க

பொய் புத்தி கொள்முதல் செய்து வாரும் பாகவதரே.

நல்லதந்தி said...

இந்த முட்டாள்தானமானக் கட்டுரையை படித்து விட்டு, இது நகைச்சுவைக் கட்டுரை என நினைத்து சிரிப்பதா! அல்லது சீரியஸான கட்டுரை என நினைத்து தலையில் அடித்துக் கொள்வதா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. இவர் கருணாநிதிக்கு மேடை பேச்சு உரை எழுதிக்கொடுக்கப் போகலாம், கருணாநிதி பேசுவதைப் போல, அவ்வளவு உளறல்கள்!

Anonymous said...

CORRECT

Anonymous said...

ஜெயிச்சா அட்டகாசம்! இல்லேன்னா மக்கள உடுங்க..கட்சிக்காரங்கள கூட சந்திக்காம சிறுதாவூர் பண்ணையில படுத்து தூங்கறது.கூடவே ஒரு மாஃபியா கும்பல்.நாளைக்கு அம்மா ஜெயிச்சு வந்து பேயாட்சி பண்ணும்போது இதே ஆட்கள் இதே ப்ளாக்குல வந்து பொலம்புவாங்க பாரு.

Anonymous said...

" TATA கம்பெனியில south Indiansக்கு இருக்கிற glass ceiling பற்றி உங்களுக்கு தெரியுமா"


TCS ல எனக்கு தெரிஞ்சு தமிழ் தலைமை தான் ..... ராமதுரை இப்போ சந்திரசேகரன் அப்புறம் CFO மகாலிங்கம்

டாட்டா ஸ்டீல் ல முத்துராமன்


இவுங்க எல்லாம் தமிழ் இல்லையா

RVK said...

வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பொசியுமாம்

RVK said...

வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பொசியுமாம்

நிழற்குடை said...

ஒன்னுமே புரியல, ஒலகத்துல