பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 01, 2011

எப்ரல் பத்து

வழக்கமாக எப்ரல் 1 அன்று எதாவது பொய் சொல்லி ஏமாற்றுவார்கள். அதை போன வாரமே செய்ததால் இந்த வாரம் 10 உண்மைகள்.

1. மைலாப்பூரில் அண்ணிக்கு ஆப்பு. அண்ணாதான் டாப்பு.
2. ஒரு ரூபாய் அரிசி ஒரு ருபாய். ஒரு சிட்டிங்கில் அரிசி போட்டவரின் சொத்து 780 டைம்ஸ்.
3. விஜயகாந்திடம் அடி வாங்கி பல்லு காலியானாலும் பலன் ஜாஸ்தி. மந்திரியாக முடியாது ஆனால் மஹாராஜா ஆயிடலாம்.
4. சிங்கமுத்து வடிவேலுவின் முன்னாள் அந்தரங்க நண்பர். இரண்டு பேர் மீது கேஸ் இருக்கு, இரண்டு பேரும் திராவிட கட்சிகளில் சேர்ந்துள்ளார்கள்.
5. ஸ்டாலின்தான் முகவின் அரசியல் வாரிசு. இருந்தாலும் ஏழாவது முறையும் கலைஞர்தான் முதலமைச்சர்.
6. கொடநாட்டில் ஜெயலலிதாவிற்கு ரெஸ்ட் எடுக்க எஸ்டேட் இருக்கு.
7. முதல்வன் படத்தில் நடிக்க பயந்த ரஜினி எப்படி அரசியலுக்கு வருவார் நான் யோசிக்க வேண்டும்.
8. சோவும் மருத்துவக் குடிதாங்கியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவர்கள்.
9. நாளை ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கியத் திருப்பம் இருக்கும்.

10. சச்சினின் சொந்த ஊர் மும்பை. அவர் நூறாவது நூறு அடிப்பார், கோப்பையையும் சேர்த்து.

23 Comments:

Raja=Theking said...

Ten top10

ராஜேஷ், திருச்சி said...

super .. truth #5 is very much true.. very soon jaya will go to kodanad estate for 5 years rest

ஒரு வாசகன் said...

ஜாக்கிரதை..... சச்சின் 1000 அடித்தால் அந்த மாட்ச் தோல்வியில்தான் முடியும். இது நிரூபிக்கப்பட்ட செண்டிமண்ட்

Anonymous said...

How is it "proved" ? Can you please let us know the stats? Last time I checked we won 33 times when he hit a ton and lost 15 times. What is your theory?

R. Jagannathan said...

இங்கிலாந்தில் ப்ரின்ஸ் சார்ல்ஸ் முதலில் பதவிக்கு வருவாரா அல்லது நமது ப்ரின்ஸ் ஸ்டாலின் முதலில் பதவிக்கு வருவாரா? - ஜெ.

Anonymous said...

இவ்வார குமுதம் அரசு பதில்.

http://www.kumudam.com/magazine/Kumudam/2011-04-06/pg23.php

ஒரு ‘சிக்‘ ஜோக் சொல்லுங் களேன்?

மைனா, மேட்டூர்.

இட்லி வடையில் படித்தது இது.

மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள். அங்கு நீதி தேவன் முதல் நபரை அழைத்து, “உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்’’ என்றார். இந்த நபர் ஏன் என்று கேட்டதற்கு, ‘‘நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய் அதனால்தான்’’ என்றார்.

அதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தைக் கூறினார்.

மூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார்.

இருவரும் ஏன் என்று கேட்டதற்கு நீதிதேவன் இப்படி பதிலளித்தார், “அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றாள்’’ என்றார்.

நீச்சல்காரன் said...

@ஒரு வாசகன்
சச்சின் நூறு அடித்த மேட்சுகளில் 26% தான் இந்தியா தோல்வி கண்டது. அதனால் கவலை வேண்டாம்

Anonymous said...

ªêŒF¬ò«ò ñ…êœ èªñ‡†ì£ Ý‚A†¯«òò£!

Anonymous said...

Election result ippadi (thappu thappa) pottu udaichuteengale...

Anonymous said...

Point 5 and 6 - Original April Fool

Black said...

//ஜாக்கிரதை..... சச்சின் 1000 அடித்தால் அந்த மாட்ச் தோல்வியில்தான் முடியும். இது நிரூபிக்கப்பட்ட செண்டிமண்ட்//

ஆயிரம் ரன்னா..ரொம்ப ஆசைதான் !

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

10 தான் சூப்பர்... அது மட்டும்தான் சூப்பர் உண்மையும் கூட... அதனாலதானோ அது மஞ்சள் நிறப்பூச்சில் அமர்ந்துள்ளது?

sagamanithan.blogspot.com

Anonymous said...

மீடியாக்களின் அனைத்து சதிகளையும் முறியடித்து கலைழர் ஆட்சி அமைப்பார்.

Anonymous said...

1. மதுரையில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் தொடங்கியது. அணைத்து பெட்டிகளும் காலியாக இருந்தது.-- காரணம்- தேர்தல் ஆணையம் ( விளம்பரம் )

2.ஊழல் ராணிதான் முதல்வர் - கேப்டன். -- வெட்கமா இல்லை. மக்கள் எல்லாம் முட்டாளுன்னு நினைப்பா.
3. அரசு பணியாளர்களுக்கு நன்மை செய்வேன்-ஜெயா - அப்படியா அம்மா. நாங்கள் எல்லாம் முட்டாளுன்னு நினைப்பா.
4. அம்மாவுக்கு வோட்டு போடுங்கள்- பாண்டியன்- பேசாம் உங்க கட்சியை கலைத்து விடுங்கள்.

Anonymous said...

நச்சுனு கேள்வி ஒன்று :
ஜெயா: எப்படி தொடந்து பொய்யா சொல்ல முடியுது.
வைகோ: அம்மா நல்லவரா,கெட்டவரா
கலைழர்: மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டாலாவது ஓய்வு எடுப்பீர்களா.
சசிகலா: யாரு உன்மையான் அம்மா.
இடது சாரிகள் : அம்மா தொழிலாளர்களின் நண்பனா. நெஞ்ழை தொட்டு சொல்லுங்கள்.
காங்கிரஸ்:63 தொகுதிகள் ஒரு கேடா உங்களுக்கு.யாரை நம்பி வாங்கினீர்கள்.
பிஜே பி : ஒரு தேசிய கட்சி இப்படியா இருக்கும் .

cho visiri said...

//8. சோவும் மருத்துவக் குடிதாங்கியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவர்கள்//

Trustme - I am Cho visiri only and not a "மருத்துவக் குடிதாங்கி visiri".

R.Gopi said...

மத்த தொகுதி நிலவரம் எதுவும் வரலியே... ஒரு வேளை அடுத்த தேர்தலுக்கு எதிர் பார்க்கலாமோ!!

Anonymous said...

idlyvadai site is very poor in updating election campagin news

IdlyVadai said...

//idlyvadai site is very poor in updating election campagin news//

point noted will improve..

Anonymous said...

//சச்சினின் சொந்த ஊர் மும்பை. அவர் நூறாவது நூறு அடிப்பார்//

டெண்டுல்கர் அவுட் இட்லி வடை கணிப்பே தப்பு. ( தேர்தலிலும் தான்) கலைழர் தான் முதல்வர்.

Anonymous said...

ஜெயாவை ஆதரிப்பவர்களுக்கு ஐந்து கேள்விகள்.
1. ஜெயா வந்தால் மின்சாரம் தொடர்ந்து எப்படி கிடைக்கும்?
(கருணாநிதி அரசாங்கம் தொடங்கிய திட்டங்கள் நான்கு, ஐந்து ஆண்டுகள் கட்டுமானம் முடிந்து மின்சாரம் உற்பத்தி செய்ய ஆரம்பித்ததுடன். ஜெயா எந்த திட்டமும் தொடங்காததால் இந்த ஐந்து வருடமும் கடுமையான் மின் வெட்டு ஏற்பட்டது.இதை பத்திரிகைகள் சரியாக மக்கள் முன் வெளியிடவில்லை. ).
2. அரசு உழியர்களுக்கு சம்பளம், போனஸ் உண்டா?
3. பஸ் கட்டணம், மின்சார கட்டணம் உயராதா?
4.நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுமா?
5. அணைத்து மளிகை பொருட்களும் கிலோ பத்து ரூபாய்க்கு கிடைக்குமா

Anonymous said...

விஜயகாந்துக்கு சில கேள்விகள்
1. குடும்பம் என்பது என்ன . அதில் மனைவி மச்சான் உண்டா?
2. பள்ளி மாணவர்களை அடிக்க தடை சட்டம் வேண்டுமா?
3. யாரை வேண்டுமானாலும் ( யாரும்)அடித்து திருத்தலாமா?
4. விருத்தாசலம் எங்கே உள்ளது?
5. அம்மா நல்லவரா கெட்டவரா?அம்மா ஊழல் செய்தவரா?அம்மா ஆணவம் இல்லாதவரா?அம்மாவை ஆட்டிபடைப்பது யார்?அம்மாவின் காலில் விழுந்து கும்பிட்டது உண்மையா?

Anonymous said...

//ªêŒF¬ò«ò ñ…êœ èªñ‡†ì£ Ý‚A†¯«òò£!// How to type in Tamil?