பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 03, 2011

சன்டேனா (3-4-11) இரண்டு செய்திவிமர்சனம்

இந்த வாரம்..."ஏமாற்றியவர்,ஏமாந்தவர்".
செய்தி # 1
ஒரு முறை திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடந்த சம்பவம் இது. அப்போது கடலூர் தொகுதியின் திமுக எம். எல்.ஏ ஆக இருந்த ஆதி.சங்கர் சட்டசபையில் இருந்து கருணாநிதி அவர்களால் வெளியேற்றப்பட்டார்.

கழகத்தின் கொள்கைகளுக்கு அவர் எதிராக நடந்துகொண்டார் என்று கண்டிக்கப்பட்டார். ஆதி.சங்கர், மன்னிப்பு கடிதம் தந்தே பிறகே அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இதற்க்கு காரணம் என்ன தெரியுமா?ஆதி.சங்கர், அன்று சட்டசபைக்கு வரும்போது, அவர் தனது நெற்றியில் விபுதி குங்குமம் இட்டு இருந்தார் என்பதே.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோது கருணாநிதி, இவ்வாறு பேசினார்.

"முன்பு "முந்திரா' ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். "முந்திரா' ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர்.

இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா? "ஸ்பெக்ட்ரம்' ஊழலை நிரூபிக்க தயாரா? . தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்".என்று "விளக்கம்" அளித்தார் அவர்.

ஆனால், அவர் அடிக்கடி பயன்படுத்தும் ஆர்யாள்,பார்ப்பனர் ஆகியோரிடமே இப்போது தஞ்சம் அடைந்து இருக்கிறார் "பகுத்தறிவு தந்தை".

திருநள்ளார் சனி பகவான் கோயிலில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் தரிசனம் செய்ததோடு, முதல்வர் கருணாநிதி பெயரில் சனி பகவானுக்கு தயிராபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து எள்தீபம் ஏற்றி , காக்கைக்கு அளித்தார்.

இந்த பரிகாரங்களை முன்னின்று செய்தவர்கள் ...பார்ப்பனர்கள் அல்லது ஆரியர்களே.

கும்பகோணம் அருகே அய்யாவாடி பிரிதியங்கரா காளி கோயில் இருக்கிறது. பண்டைய காலத்தில் சோழ மன்னர்கள், போர்களத்திற்கு செல்லும்முன் அங்கு சென்று யாகம் செய்துவிட்டு வருவார்கள். ஜெயலலிதா அவர்கள் இந்த யாகத்தை வெளிப்படையாக செய்து வருகிறார்.

ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒவ்வொரு தேர்தலின் போதும் அங்கு சென்று யாகம் செய்து வருகிறார்கள் ரகசியமாய். இந்த முறையும் அவ்வாறே அங்கு சென்று யாகம் செய்து இருக்கிறார்கள்.

இங்கும் யாகத்தை நடத்தியவர்கள்.....பார்ப்பனர்களே.

திராவிட கழக கி.வீரமணி ஏன் இதற்கெல்லாம் கருத்து தெரிவிக்கவில்லை. சுயமரியாதை,பகுத்தறிவு போன்றவை எல்லாம் இவர்களுக்கு அரசியல் வியாபாரம் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணங்கள் உண்டா??

சமிபத்தில், பத்திரிக்கையாளர் பேட்டியில், "ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவில் அனைவரும் ஏற்பார்களா?" என்ற கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில்,

"இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயகரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழகச் செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்".

இந்த தருணத்தில் யாராவது, சங்கர மடத்திற்கு சென்று, ஜெயேந்திரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பார் என்று ஆருடம் சொன்னால் , ராவோடு ராவாக
அதையும் செய்ய பெரியாரின் சீடர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆருடம் சொல்ல தான் ஆள் இல்லை !

செய்தி # 2
வடிவேலு, விஜயகாந்தை தண்ணி வண்டி என்று விமர்சிப்பது இருக்கட்டும். விஜயகாந்த் தான்போகும் பிரச்சார கூட்டங்களில் எல்லாம், டாக்டர் ராமதாசையும்,பாமகவையும் "அதிமுகவின் வடிவேலு" ரேஞ்சுக்கு விமர்சித்து வருகிறார்.

" சமூக நீதி காத்த போராளி (ராமதாஸ்) என்கிறார்களே, அவர் அப்படி எந்த சமூகத்தைக் காத்தார்?. எந்த சமூகத்தை அவர் காத்தார் என்பதை அறிய நான் விரும்புகிறேன்.

நீங்கள் காத்த சமுதாயம் எது என்பது மக்களுக்குத் தெரியாதா?. அவரது கூட்டணித் தலைவர் கருணாநிதி பாணியில் சொல்வதானால், இரு ஆடுகளை முட்ட விட்டு அதில் ரத்தம் குடிக்கும் ஓநாய் போன்றவர்தான் இவர்.

இரு ஜாதிகளை மோத விட்டு, அதில் ரத்தம் குடித்தவர்தான் இவர். இவர் என்னைப் பார்த்து சிறைக்குப் போனாயா என்கிறார். நீங்கள் எதற்காக சிறைக்குப் போனீர்கள். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க சிறைக்குப் போனீர்களா?. பஸ்களை எரித்து சிறைக்குப் போனீர்கள். சமூகத்தை மோத விட்டு சிறைக்குப் போனீர்கள். இது பெருமையா?."

என்று விமர்சித்து இருக்கிறார்.

"பாமகவினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கிவிட்டனர். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர்.இதேபோன்று மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம் என அன்று வீராப்புடன் முழங்கியவர்கள் இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது."

இவ்வாறு ராமதாசை ஓநாய், குரங்கு என்கிற பாணியில் விமர்சித்து வருகிறார் விஜயகாந்த்.

முன்பு, தனியாக நின்றபோது ஜெயலலிதா,கருணாநிதி என்று இருவரையும் பாரபட்சமின்றி விமர்சித்தார் விஜயகாந்த். தற்சமயம், அதிமுக கூட்டணியில் இருப்பதால், டாக்டரையும், கருணாநிதியையும் பிடித்து கொண்டு இருக்கிறார்.

இன்று தேர்தல் பிரச்சாரம் செய்பவர்கள் யாரிடமும் நல்ல செயல்திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை. அந்த அந்த ஊருக்கு தக்கவாறு வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். தேர்தலுக்கு பின் இதையெல்லாம் யார் நினைவில் வைத்து இருக்க போகிறார்கள் என்ற கணக்கில், ஊருக்கு ஒரு வாக்குறுதிகளை வீசி வருகிறார்கள் திமுக மற்றும் அதிமுக தலைவர்களும்.

வைகோ போன்று நன்றாக பிரச்சாரம் செய்பவர்கள் இன்று இரண்டு கூட்டணியிலும் இல்லை. இன்றைய அரசியல் டிரண்ட் படி, அரசியல் கட்சி பேச்சாளர்களுக்கு இரண்டே தகுதிகள்தான். ஒன்று, தனிப்பட்டமுறையில் எதிராளியை தாக்கி பேசவேண்டும். இரண்டு, ஆபாசமாக இரட்டை அரத்ததோடு கண்டிப்பாக பேச தெரிந்து இருக்க வேண்டும்.விந்தியா,குஷ்பூ போன்ற கவர்ச்சி நடிகைகளையும், வடிவேலு போன்ற நடிகர்களையும் நம்பியே பிரச்சாரத்தில் இருக்கின்றன இன்றைய கட்சிகள்.

ஆனால், விஜயகாந்த் மட்டும் வாய் ஓயாது குறை சொல்லிவருகிறார். முறையான செயல்திட்டங்களோ ஏன் சினிமாவில் அவர் பேசும் புள்ளிவிவரங்கள் கூட அவர் பிரச்சாரத்தில் இல்லை.வடிவேலு சொல்வது ஒரு விதத்தில் உண்மையே. விஜயகாந்துக்கு எப்படி பேசவேண்டும், பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அரசியல் அடிப்படைகள் கூட தெரியவில்லையே.

"தருமபுரியில் நான் வேட்பாளரை அடித்ததாக சில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட்டுள்ளனர். அது தவறானது. ஒருவேளை அப்படியே நான் அடித்திருந்தாலும், என்னுடைய கட்சி ஆளைத்தானே அடித்தேன். என்னைப் பற்றி என் கட்சிக்காரர்களுக்கு தெரியும். என் கையில் அடி வாங்குகிறவன் நாளை மகாராஜா ஆவான்' என்றார்.
முன்பு ஒரு முறை,திருச்சியில் ஒரு படபிடிப்புக்காக சென்றபோது, தனது கார் டிரைவரை பொதுமக்கள் முன்பாக கன்னத்தில் அறைந்தார் விஜயகாந்த்.

தர்மபுரியில் நடந்த ஒரு பிரச்சார கூட்டத்தில், தனது வேட்பாளர் பெயரே தெரியாமல் தவறான பெயரை சொல்லி பிரச்சாரம் செய்ய, அதை சுட்டிகாட்டிய வேட்பாளரை 'பப்ளிக்காக' குனியவைத்து, முதுகில் சாத்தி இருக்கிறார் விஜயகாந்த். எந்த அளவுக்கு அவர் பக்குவமோ அறிவோ இல்லாமல் இருக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

இது குறித்து தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கர் கூறியதாவது, "தர்மபுரியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தபோது அவர் வைத்திருந்த மைக்கின் பேட்டரி கழன்று கீழே விழுந்தது. அதை எடுத்துக் கொடுக்குமாறு தனது உதவியாளரை கேட்டார். அவரும் எடுத்துக் கொடுத்தார். பின்னர் மீண்டும் கீழே விழுந்தபோதும் எடுத்துக் கொடுத்தார்.

பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார். ஆனால் என்னை அடித்துவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் தான் அமர்ந்திருந்தோம்.

விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. நான் வெற்றி பெறக் கூடாது என்று இது போன்ற பொய்யான பிரசாரம் செய்கின்றனர்" என்றார்.

அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு முதல் காரணமான 'துக்ளக்' ஆசிரியர் சோ அவர்கள்,

"எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க" - என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.

"நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன். பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா."

என்று வழக்கமாக தாக்கி இருக்கிறார் திமுகவின் "பிரச்சார பீரங்கி" வடிவேலு.

விஜயகாந்தின் நடவடிக்கைகளை பார்த்தால், வடிவேலு சொல்வது ஓரளவுக்கு நியாயமாகவே படுகிறது.

பக்குவமோ பொறுப்போ கொஞ்சம் கூட இல்லாத விஜயகாந்தின் சினிமா கவர்ச்சிக்கு வரும் கூட்டத்தை நம்பி ஏமாந்துவிட்டார் ஜெயலலிதா என்று தோன்றுகிறது.

(நன்றி, இனி, அடுத்த வாரம்)

-இன்பா32 Comments:

jaisankar jaganathan said...

//பக்குவமோ பொறுப்போ கொஞ்சம் கூட இல்லாத விஜயகாந்தின் சினிமா கவர்ச்சிக்கு வரும் கூட்டத்தை நம்பி ஏமாந்துவிட்டார் ஜெயலலிதா என்று தோன்றுகிறது.
//

நூத்துல ஒரு வார்த்தை. இந்த எலக்‌ஷன் முடிஞ்சதும் தெரியும்

Anonymous said...

தினசரி அரை பாட்டில் விஸ்கி அடித்ததால் தான் நான் தொடர்ந்து காலை முதல் இரவு வரை பிரச்சாரம் செய்கிறேன் - விஜயகாந்த் ஒப்புதல். பி.கு : நான் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அரை பாட்டில் விஸ்கி இலவசம்.- விஜயகாந்த் சூசக அறிவிப்பு. ஹாய் சுப்பர்.

Anonymous said...

தேர்தல் அறிக்கையில் கடைசி பக்கம் வரை கலைழர் நிறைவேற்றுவார்- ஸ்டாலின்: ஆமாம்லே! . அதான் ஜெயா கும்பல் போன தி மு க தேர்தல் அறிக்கை பற்றி எதுவும் சொல்லல.அதான் எல்லாம் நிறைவேற்றி விட்டாரே.

பொன்மொழி said...

குடிகாரர்களின் பொன்மொழிகள்... ( நல்ல போதை லே யோசிச்சு இருப்பாங்க போலே.. அம்புட்டு தெளிவா இருக்கு..!! )


நான் இதுவரை குடித்த பீர்களை எண்ணி சில சமயம் வெட்கம் அடைகிறேன். ஆனால், பீர் அருந்தும் குடுவையை (pitcher) பார்க்கும்போது, இந்த பீரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களும், அவர்களுடைய நம்பிக்கைகளும், கனவுகளும் நினைவுக்கு வந்து, நான் இந்த் பீரை அருந்தாவிடில், அவர்கள் வேலையை இழந்து விடுவார்களே என்ற கவலை ஏற்பட்டு விடுகிறது! "அத்தொழிலாளர்களின் கனவுகள் நனவுகளாக இந்த பீரை அருந்துவதை விடுத்து எனது கல்லீரலைப் பற்றி மட்டும் சுயநலமாக சிந்திப்பது தவறவல்லவா?" என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டு விடுகிறேன்!
--- Jack Handy

நான் குடிக்காதவர்களை கண்டு வருத்தமடைகிறேன்! அவர்கள் காலையில் விழிக்கும்போது எவ்விதம் உணருகிறார்களோ, அவ்விதமே நாள் முழுதும் உணரவிருப்பதைக் கண்டு!
--- Frank Sinatra

முட்டாள்களுடன் நேரம் செலவிடுவதற்காக ஒரு புத்திசாலி, சில சமயங்களில், அதிகம் குடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறான்!
--- Ernest Hemingway

குடிப்பதினால் உண்டாகும் கெடுதல்களைப் பற்றி படித்தவுடன், நான் படிப்பதையே நிறுத்தி விட்டேன்!
--- Henry Youngman

கடவுள் நம்மை விரும்புகிறார் என்பதற்கும், அவர் நாம் மகிழ்ச்சியாக இருக்க விழைகிறார் என்பதற்கும், மதுவே சிறந்த சாட்சி!
--- Benjamin Franklin

உத்தமபுத்திரன். said...

:சந்திரமண்டலத்தில் தண்ணீர் கண்டுபிடித்த்தை கேள்விப்பட்ட நம் அரசியல்வாதிகள் அதிரடியாக களத்தில் இறங்குகின்றனர்:::


சுதீஸ் : மாமா....மாமா...மாமா....தண்ணி...
விஜயகாந்த் : (தூக்க கலக்கத்தில்) எடுத்துக்க .. எடுத்துக்க... ஆனா கண்ட்ரோலா குடி....

சுதீஸ் : ஐயோ ... அதில்ல மாமா...சந்திரன்ல தண்ணி இருக்காம்...

விஜயகாந்த் : காய்ச்சினதா... காய்ச்சாததா...?
(திடீரென்று எழுந்து உட்கார்ந்து பல்லை கடித்துக்கொண்டு கையை ஆட்டி சினிமா வசனம் போல்) ஏய் பாகிஸ்தான்காரா... ஒரு சொட்டு தண்ணி கூட இந்த கேப்டன் விட்டு கொடுக்க மாட்டான். மீரனா மரத்துல கட்டி வைச்சு தோலை உறிச்சுப்புடுவான்டா... ம்ம்ம்.... போகமாட்டே... (என்று விரலை துப்பாக்கி போல காட்டி.. டிஷ்யும்.. டிஷ்யும்.. என்று சவுண்ட் கொடுக்க.. பிரேமலதா ஓடி வருகிறார்)

பிரேமலதா : (கவலையடன்) ஜயோ என்னாச்சிங்க.... படம் எதுவும் இல்லாம போனதால இப்படித்தான் திடீர்னு எழுந்திருச்சி பாக்கிஸ்தானுக்கு எதிரா அறிக்கை விட ஆரம்பிச்சிடுரார்...

விஜயகாந்த் : (புரியாமல் விழுத்தபடி) ஆமா இப்ப நான் எங்கே இருக்கேன்.. சுதீஸ் நீ எப்ப வந்த... பண்ருட்டி எங்க..?

சுதீஸ் : பண்ருட்டி கடலுர் மாவட்டத்துல இருக்கு...

விஜயகாந்த் : இந்த நக்கல்தானே வேணாங்கிறது..

சுதீஸ் : சரி... அதை விடுங்க மாமா – சந்திர மண்டலத்துல தண்ணி இருக்காம் என்ன பண்ணலாம்..

விஜயகாந்த் : தமிழ்நாட்டுல தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க எங்களால் மட்டும் தான் முடியும்.. அதாவது சந்திரன்ல ஓட்டை போட்டு பைப்பை சொருகி நேரா உங்க வீட்டு அண்டா குண்டா சட்டி பானையிலயே விழுற மாதரி செய்வோம்.. ஆனா எப்படினு வெளியில சொல்ல மாட்டோம்...ஏன்னா அப்புரம் கலைஞர் அதை காப்பி அடிச்சி பம்பும் கையுமா நிப்பாரு..

பிரேமலதா : ஐயோ ராசா.... கண்டிப்பா அடுத்த முதல்வர் நீங்கதான்... எவ்வளவு சாதுர்யம் உங்களுக்கு..

விஜயகாந்த் : அப்புறம்.. பிரேமா.. மேக்கப் போட்டு ரொம்ப நாளாச்சி... கன்னமெல்லாம் அரிக்குது.. கையேல்லாம் நடுங்குது...

பிரேமலதா : அதுக்கு என்ன இப்போ..?

விஜயகாந்த் : என்ன வெச்சி ஒரு படம் எடேன்... ”சந்திரமண்டலத்துல தண்ணிராஜா” டைட்டில் நல்லாயிருக்கா...?

(”வர்ர நாலு வோட்டுக்கும் வேட்டு வைக்க ரெடியாயிட்டாருடா ...” என்று கூறியபடியே இருவரும் தலைதெறிக்க ஓடி மறைகின்றனர்)

Anonymous said...

தமிழா...தமிழா..
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்

பத்திரிகையாளர் said...

ஒவ்வொரு வாய்ப்பின் போதும் பத்திரிகையாளர்கள் விஜயகாந்திடம், ‘‘தேர்தலில் நீங்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வீர்கள்’’ என்று அரைத்த மாவையே அரைப்பது போல திருப்பித் திருப்பிக் கேட்பார்கள்.

விஜயகாந்தும் சளைக்காமல், "நான் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேரமாட்டேன். மக்களோடும், தெய்வத்தோடும்தான் எனது கூட்டணி அமையும்" - என்று கீறல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டு போல திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார்.

எனினும் பார்ப்பன ஏடுகள், அவரது பேட்டிகளை, பேச்சுகளை பக்கம் பக்கமாக வெளியிடும். என்ன காரணம்? அவர் தி.மு.க.வை எதிர்க்கிறார், அவரது தி.மு.க. எதிர்ப்பு அ.தி.மு.க.வுக்கே சாதகமாக அமையும் என்பதாக நினைத்து அந்தப் பார்ப்பன ஏடுகள் விஜயகாந்த் தும்மினாலும் இருமினாலும் உளறினாலும் ஓஹோ, ஓஹோ என்று புகழ்ந்தே எழுதும்.

இப்படி அந்த ஏடுகள் எல்லாம் தன்னை புகழ்ந்து எழுதுவதைக் கண்டு விஜயகாந்துக்கும் தலை நாளுக்கு நாள் கணத்துக் கொண்டேயிருந்தது. அவர்கள் உண்மையாகவே தன்மீது மதிப்பும், மரியாதையும் வைத்துத்தான் தன்னைப் புகழ்கிறார்கள் என்று அவர் தவறாக நினைத்துக் கொண்டார்.

அடுத்து வரும் தேர்தலில் எப்படியாவது விஜயகாந்தை ஜெயலலிதாவின் கூட்டணியில் சேர்த்து விட வேண்டும். அப்படிச் சேர்த்தால் ஜெயலலிதா வெற்றி உறுதியாகிவிடும். அவர் மீண்டும் பதவிக்கு வந்து பார்ப்பன ஆட்சியை ஸ்தாபித்து விடுவார் என்கிற பார்ப்பன ஜாதி அபிமானத்தினாலேயே அந்த ஏடுகள் தன்னை ஆதரிக்கின்றன என்பதை விஜயகாந்த் புரிந்து கொள்ளவில்லை.

டிசம்பர் மாதம் வரையில் பார்ப்பன ஏடுகள் விஜயகாந்தைத் தொடர்ந்து புகழ்ந்துதான் எழுதி வந்தன. அந்தக் கால கட்டத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் மைத்துனர் சத்தீசும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர ரகசிய பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற செய்திகள் கிசுகிசு பாணியில் கசிந்து கொண்டு இருந்தன.

ஆகவே விஜயகாந்த் ஜெயலலிதாவை ஆதரிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பிலும், மகிழ்ச்சியிலும் அவை முன்னைவிட அதிகமாக விஜயகாந்தைப் புகழ ஆரம்பித்தன.

பொன்மொழி said...

கடந்த 5 ஆண்டு கால சட்டமன்றத்தில் விஜயகாந்தின் சட்டமன்றப் பணி என்று குறிப்பிட எதுவுமில்லை. எப்போதாவது ஓரிரு தடவைகள் தான் அவர் சட்டமன்றக் கூட்டங்களிலேயே கலந்து கொண்டார். அப்போதும் கூட அவர் தமது தொகுதியின் மேன்மைக்காகவோ அல்லது மக்கள் முன்னேற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தோ பேசியது இல்லை. அவரது சட்டமன்றப் பணி என்பது குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமற்றதாகவே அமைந்து விட்டது."

- என்று விஜயகாந்தை முதன் முறையாக குற்றம்சாட்டி குறைகூறி எழுதியிருக்கிறது.


அதுவும் தவிர,

கடந்த 5 ஆண்டு காலத்தில் நடந்த சட்ட மன்றக் கூட்டங்களில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசிய மொத்த நேரமே ஒன்றரை மணி நேரம்தான் என்ற குற்றச்சாட்டும் கூடவே எழுந்துள்ளது.

இதைத்தான் நாம் கடந்த 5 ஆண்டு காலமாக விஜயகாந்துக்கு சுட்டிக்காட்டிய வண்ணமே இருந்தோம்.

பார்ப்பன ஏடுகள் உங்களைப் பாராட்டுவதையெல்லாம் நம்பி விடாதீர்கள். பார்ப்பனத்தி ஜெயலலிதா, தி.மு.க.வை தோற்கடித்து மீண்டும் ஆட்சியில் அமர நீங்கள் உதவியாக இருப்பீர்கள் என்ற ஜாதி அபிமானத்துடன் தான் அவர்கள் உங்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்கள். ஜெயலலிதாவுடன் கூட்டணியில்லை என்று நீங்கள் எப்போது அறிவித்தாலும் அந்த வினாடி முதலே பார்ப்பன ஏடுகள் உங்களை, கடுமையாகத் தாக்கி உங்கள் மதிப்பைக் குறைத்து, இகழ்ந்து விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடும்.

கறை நல்லது said...

கறை நல்லது

ஆட்காட்டி விரலில்

வைக்கப்படும்

கறை நல்லது

கறை வைக்கச் சொல்லுங்கள்

குடிமகனின்

கடமையை ஆற்றுங்கள்

Anonymous said...

அதெல்லாம் சரிதான், விஜய்காந்த் குடிகாரராகவே இருக்கட்டும், அவர் ராமதாசைக் கேட்ட கேள்விக்கு பதில் கொடுப்பாரா மருத்துவர்? பாமகா வெறும் பதவிக்காக ஒரு சமூகத்தின் பெயரில் நடத்தப்படும் ஒரு ரவுடி ஸ்தாபனம் மட்டும் தானே.. விஜய்காந்த் கூறியது போல் இவ்ங்களெல்லாம் ஜெயிலுக்கு நாட்டுக்கு விடுதலை வாங்கித்தரவா போனாய்ங்க ? எல்லாம் மரத்தை வெட்டிட்டும் போராட்டங்கிற பேர்ல ரவுடித்தனம் பண்ணிப்புட்டும் ஜெயிலுக்குப் போயி, அங்க அரசியல் கைதிங்கிற பேர்ல கொஞ்ச நாளு ரெஸ்ட் எடுத்துட்டு வருவாய்ங்க..அப்புறம் சிறைக்குச் சென்ற வீரர்னு போஸ்ட்டர் அடிச்சுக்குவாய்ங்க..மரத்துக்கு மரம் தாவுற மாதிரி கட்சி மாறுற மரம் வெட்டி கும்பல்னு சொல்றதுல எந்தத் தப்பும் இருக்கற மாதிரி தெரியலை..

பெரிசா கொள்கைகளையும் திட்டங்களையும் பத்திப் பேசினா மட்டும் மக்களுங்க எல்லாம் திருந்தி நியாயமா ஓட்டுப்போட்டுடப் போறாய்ங்களாக்கும்.. எவன் அதிகமா பிச்சை போடுறானோ அவங்கிட்ட கையேந்திப்புட்டு போட்டதை நக்கிப்புட்டு ஓட்டுப்போடுற மக்களுக்கு இந்த மாதிரி தான் தேர்தல் பிரசாரம் பண்ணனும்.. ஆடற மாட்டை ஆடிக்கறக்கணும், பாடற மாட்டை பாடிக்கறக்கணும்.. வேலை வெட்டியில்லாம பொழுது போக்க தேர்தல் பிரச்சாரம் கேக்க வர்ரவய்ங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது காரசாரமாப் பேசினாத்தானேய்ய எடுபடும்.அதை வுட்டுப்புட்டு....

cho visiri said...

To those who favour Hot drinks:

Consider what Sage Tiruvalluvar has described the opinion of great people (Saandroar) on Drunkards.

நையாண்டி said...

கடந்த சிலநாட்களாக தமிழக தேர்தல் களத்தில்..பல அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள், பேச்சாளர்கள் பேசினாலும்...முதன்முறையாக தேர்தல் மேடைகளில் பேச ஆரம்பித்துள்ள வைகைப்புயல் வடிவேலுவின் பேச்சைக் கேட்க கூடும் மக்களைக் கண்டு..கோபாலபுரமும், போயஸ் கார்டனும் வியப்பில் வாயைப் பிளக்கின்றனராம்.

தி.மு.க., தலைமையும்..தங்கள் கட்சிக்கு ஒரு தங்கச் சுரங்கம் கிடைத்துவிட்டாற்போல மகிழ்கிறார்களாம்.

தி.மு.க., ஆட்சி அமைத்தால்..வடிவேலு மேலவை உறுப்பினர் ஆகலாம் எனத் தெரிகிறது.

தவிர்த்து..அவர் ஆதரவை விடாமல் பற்றிக் கொள்ள நினைக்கும் தி.மு.க., அவரை சினிமாத் துறை அமைச்சராக ஆக்கவும் முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் செய்தியைக் கேள்விப்பட்ட விஜய்காந்த் வயிற்றெரிச்சலில்..தன் தேர்தல் பணியை நிறுத்தி வைத்துள்ளாராம்.

நையாண்டி said...

தூண்டில் புழுக்கள்
----------------

சிரிக்கும் காந்தி

லட்டுக்குள் மூக்குத்தி

பிரியாணி - தவிர்த்து

தேர்தல் தூண்டிலில் புழுக்களாய்

இலவச அரிசி

லேப்டாப்

கிரைண்டர், மிக்ஸி

ஆடு..மாடு..

பஸ் பயணம்

'குடி' மகன் said...

ஆளும்கட்சி தேர்தல் அறிக்கையில அனைத்து தமிழருக்கும் ரேஷன்ல அரிசி இலவசம்னு சொன்னதாலே..எதிர்க்கட்சி தேர்தல் அறிக்கையில என்ன சொல்லியிருக்காங்க..தெரியுமா?

என்ன சொல்லியிருக்காங்க

சிங்கப்பூர்,அமெரிக்கா ன்னு வெளிநாட்டில இருக்கற தமிழர்களுக்கும் அரிசி இலவசம்ன்னு சொல்லியிருக்காங்க


குடிமகன்- எந்தக் கட்சித் தேர்தல் அறிக்கையிலும் நம்மைக் கண்டுக்க மாட்டேன்னு சொல்றாங்களே..யாராவது நமக்கு இவ்வளவு லிட்டர் சரக்கு இலவசம்னு சொல்லலாமே

குடிமகன் said...

தி.மு.க., மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்


கூட்டணி அமையும் விதத்தையும்..கட்சிகள் சென்ற தேர்தலில் வாங்கிய ஒட்டு விகிதத்தையும் வைத்து..யாருக்கு எவ்வளவு விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என தீர்மானித்து வெற்றியை அனுமானிப்பது ஒரு வகை..இது ஒரு வகையில் சரியில்லை எனலாம்.

உதாரணமாக 119 இடங்களில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க., விற்கு விழும் வாக்குகளை விட 160 தொகுதிகளில் விழும் அ.தி.மு.க., வின் வாக்குகள் அதிகமே இருக்கும்..உடன் அ.தி.மு.க., ஆதரவு பெருகுகிறது என்று சொல்லுவது சற்று அபத்தம்.அதுபோல காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் அதற்கு விழும் தி.மு.க., வாக்ககளை கணக்கில் கொள்ளாமல் காங்கிரஸிற்கு ஆதரவு பெருகுகிறது என்பதும் அபத்தம்.

ஆனால் நடைமுறையில் சர்வே இப்படித்தான் பத்திரிகைகள் எடுக்கின்றன.அவர்கள் வாதம் மற்ற தொகுதியில் போட்டியிடும் அந்தக் கூட்டணிக் கட்சியின் ஓட்டுகளும் அதே சதவிகிதத்தில் உள்ளன ..என்பதே.

அதே முறையில் இந்த முறை சர்வே சொல்வது என்ன..

தி.மு.க., பா.ம.க., வி.சி.கே., காங்கிரஸ் இவை வாங்கும் வாக்குகளின் சதவிகிதம்..அ.தி.மு.க.,தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட்கள் வாக்கும் வாக்குகளை விட அதிகம்..இருக்கும்

ஆகவே இன்றைய நிலையில் தி.மு.க., அணிக்கு வெல்லும் வாய்ப்பு அதிகம்.

ம.தி.மு.க., அ.தி.மு.க., அணியில் இருந்திருந்தால்..இரண்டு கூட்டணிகளுக்கும் சம பலம் இருக்கும்..யார் வெல்வார்கள் என கணிப்பதும் சற்று கடினம்.

மதி.மு.க., பா.ம.க., போலவோ, வி.சி.கே.,போலவோ ஒரு சில மாவட்டங்களில் வலிமை பெற்றதல்ல.வை.கோ.வின் ஆதரவாளர்கள் தமிழம் முழுதும்..அனைத்துத் தொகுதிகளிலும் உள்ளனர்.

ம.தி.மு.க., தேர்தலை புறக்கணிப்பதாய் கூறினாலும்..அந்தக் கட்சியின் தொண்டர்கள் வாக்களிக்காமல் இருக்கப் போவதில்லை.

அவர்கள் வை.கோ.,வை உண்மையில் நேசிப்பவர்கள்.

அதனால்..தன் தலைவனுக்கு ஜெ யால் ஏற்பட்ட அவமானத்தை அவர்கள் மறக்க மாட்டார்கள்..ஆகவே அவர்கள் வாக்குகள் ஜெ க்கு எதிர் அணிக்கே விழும்..

அப்போது தி.மு.க., விற்கு வாக்குகள் விழுக்காடு அதிகமாகி வெல்லக் கூடிய தொகுதிகள் அதிகமாகும்.

தி.மு.க., வெற்றி கூட்டணியாய் இம்முறை திகழ கணிசமாய் வை.கோ., ஆதரவாளர்கள் வாக்குகள் இருக்கும் என உறுதியாய் கூறலாம்

இன்றைய நிலையில்..தி.மு.க., மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என உறுதியாய் கூறலாம்.

கருத்துக் கணிப்பு said...

தி.மு.க., மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்

பேராசிரியர் ராஜநாயகத்துக்கு சில கேள்விகள் 1. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 117 தொகுதிகள் எவை எவை? பெரும்பாலும் அதிமுக ஆதரவு தொகுதிகளா? 2. அதிமுக அணிக்கு 48.6% பேர் ஆதரவு தெரிவித்திருக்க அதிமுக அணிக்கு பெரும்பான்மை என்ற கேள்விக்கு 51.1% பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். கூடுதலாக ஆதரவு தெரிவித்த 2.5% பேர் எங்கிருந்து வந்தார்கள்? 3. திமுக அணிக்கு ஆதரவு தெரிவித்த 41.7% பேர் திமுஅ அணி பெரும்பான்மை பெரும்பான்மை பெறுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் 36.7% ஆக குறைந்து போய்விட்டார்கள். குறைந்து போன 5% பேர் அதிமுக அணிக்கு விலை போய்விட்டார்களா? 4. மதிமுக புறக்கணிப்பால் பாதிப்பு பற்றி 90% பேர்தான் பதில் அளித்துள்ளார்கள். மீதி 10% பேரின் பதில் என்ன


இந்த கருதுக்கணிப்பு என்பது குறைகள் அடிப்படையில் தவறான ஒன்று.
(0) conflicts with the fudamenals of statistics (1) 6 கோடு மக்கள் வாழும் மாநிலத்தில் 3000 பேர் கூறுவது not enough sample. (2) கடந்த 60 ஆண்டு தேர்தல்களில் எத்தனை கருத்துக் கணிப்புக்கள் சரியானதாக இருந்துள்ளது? (3) கருத்துக்கணிப்பு என்பது வானிலை அறிக்கை போன்றது. கருத்துக்கணிப்புக்கும் உண்மையான தேர்தல் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்பது தெளிவு. மேலும் லயோலா கல்லூரி கல்வி விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இப்படி தேவை இல்லாத விஷயத்தில் கவனம் செலுத்துவது வீண். மேலும் தேர்தல் நாளில் வாக்காளர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது கணிக்கக்கூடிய விஷயமல்ல. எனக்குத் தெரிந்த வரையில் இந்தியாவில் முடிவுகள் emotional அடிப்படையில் தான் இருக்கிறதே தவிர மக்கள் எல்லா விஷயங்களியும் ஆய்ந்து வாக்களிப்பதில்லை என்பது என் கருத்து. யார் வரக்கூடாது என்று வாக்களிப்பவர்களை விட யார் வரவேண்டும் என்று வாக்களிப்பவர்கள் குறைவே

அரசு ஊழியர் said...

தேர்தல் நெருங்க நெருங்க திமுக ஆதரவு அலை அதிகரிக்கத் தொடங்கும். காரணம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சீர்குலையும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். அரசு ஊழியர்கள் பழிவாங்கப்படுவார்கள். மக்கள் நலத்திட்டங்கள் செயல் இழக்கும். ஊழல் பெருகும். எதிர்கால தலைமுறை நன்றாக வாழ இந்தியாவிலேயே சிறப்பாக ஆட்சி நடத்திய கலைஞர் முதல்வர் ஆவதே தமிழ்நாட்டிற்கு நல்லது என்பதை மக்கள் புரிந்து வைத்திருப்பதால் திமுகவே இறுதிச்சுற்றில் வெற்றி பெறும்

பொன்மொழி said...

2003 துக்ளக்

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக, தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

விவசாயிகள் ஆனந்தக் கண்ணீர்
வடிப்பதால் ஏரிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து வருகிறது.

மளிகைக் கடைகளில் மளிகைப் பொருட்கள் கிடைக்கின்றன. ஜவுளிக்கடைகளில் துணிகள் கிடைக்கின்றன.
அவ்வளவு ஏன் ? நகைக் கடைகளில் கூட நகைகள் கிடைக்கின்றன. மக்களுக்குத் தேவையான அனைத்து விதிப் பொருட்கள்ளும் அந்தந்த கடைகளிலேயே கிடைக்க, அரசு ஆவன செய்துள்ளது பாராட்டுக்குரியது.

சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய
விருபினால், சபாநாயகர் உடனே அனுமதி வழங்குகிறார்.

அமைச்சர்களும் முதல்வர் பேச்சை ஆரம்பித்து முடிக்கும் வரை ஓய்வு ஒழிச்சலின்றி நாள் முழுவதும் பொறுமையாக பெஞ்சைத் தட்டிக் கொண்டே சட்டமன்றப் பணி ஆற்றுகின்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முகங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறதே -
என்ற கொதிப்புணர்வை கட்டுப்படுத்திக் கொண்டு அவர்கள் முன்னிலையில் முதல்வர் அமர்ந்துயிருப்பது
பாராட்டுக்குரியது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்தால்தான் உட்கார வைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் பேச ஆரம்பித்த உடனேயே, குறுக்கிட்டு பதில் சொல்லி, அவர்களது சட்டமன்ற பணிச் சுமையை
முதல்வர் வெகுவாக குறைத்திவிடுகிறார்.

நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் கூட கர்நாடக
முதல்வரைத் தவிர, வேறு எந்த மாநில முதல்வர் மீதும் ஜெயலலிதா கோபப்படவில்லை என்பது குறிப்பிடத்
தகுந்தது.

முதல்வர் நினைத்திருந்தால் தமிழகத்தில் நடை பெறும் கொலை கொள்ளைகளிக்கு,
மத்திய அரசுதான் காரணம் என்று ஆணித்தரமாகக் கூறியிருக்க முடியும். ஆனால், எனோ அவர்
அப்படிக் கூறவில்லை.

மெத்தத்தில் இப்படி ஒரு சட்டசபை இந்தியாவில் இருக்க முடியுமா என்ற ஆச்சரியமே எற்படுகிறது.

நன்றி - துக்ளக் - இட்லிவடை 2003

பொன்மொழி said...

DMDK leader Vijayakanth has created another flutter in Athur. While he was speaking in the campaign, he said that, If I have to tame (DMK front), will have to take a Half (mentioning half litre liquor). This speech has created another wave of flutter.

பொன்மொழி said...

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட தர்மத்துப் பட்டியில் பிரசாரம் செய்தார் விஜயகாந்த். அப்போது அவர் பேசுகையில்,

நானாவது எந்த பதவியும் வேண்டாம்னு சொல்லிவிட்டு வெய்யிலில் சுத்துறேன். அவுங்க வர்றாங்களா. 4 , 5 மணிக்கு மேல வந்து டேய் கருப்பா, டேய் மாடசாமி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிச்சாதான் சரிப்பட்டு வரும் என்றார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் இந்தப் பேச்சால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி said...

நண்பர் விஜயகாந்த் ஒரே மேடையில் நின்று வாக்குகள் கேட்க வேண்டாம். நாங்கள் அம்மாவை தான் முதல் அமைச்சராக ஆக்குவோம் என்ற துணிச்சல் உண்டா. இல்லை. ஏனென்றால் அடுத்த முதல்வர் நான்தான் என்ற எண்ணத்தில் இருப்பவர் அவர். ஆகவே அதனை அவரால் சொல்ல முடியாது.வாக்காளர் பெருமக்களே ஒப்பிட்டு பாருங்கள். யார் முதல்வர். தலைவர் கலைஞரா. கலைஞரை விமர்சிக்கும் அம்மையாரா.1984ல் அரசியலுக்கு வந்தவர் அம்மையார். ஆனால் 1938ஆம் ஆண்டிலேயே வந்தவர் கலைஞர். பெரிய தலைவர்களுடன் பழகி, அரசியல் அனுபவம் பெற்று தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும், தமிழ் மண்ணையும் பாதுகாப்பதற்காக தம் வாழ்வை அற்பணித்துக்கொண்ட இந்த 87 வயதிலும் சக்கர நாற்காலியில் சுற்றி சுழன்று வந்து, தமிழகத்தில் ஓய்வின்றி உழைத்து வந்துகொண்டிருக்கும் கலைஞர் முதல்வராக வேண்டுமா. அல்லது திட்டி தீர்ப்பதையே அரசியல் கொள்கையாக வைத்திருக்கும் அம்மையார் முதல்வராக வரவேண்டுமா. ஒப்பிட்டு பாருங்கள்.ரவுடிகள் ஆட்சியை ஒழிப்போம் என்கிறார். பொதுமக்கள் முன்னிலையில் பேசுகிறார். அரசியல் நாகரீகம் இல்லாமல், கலைஞர் அவர்களை ஒருமையில் பேசுகிற அளவுக்கு, பெயரைச் சொல்லி பேசுகிற அளவுக்கு அநாகரிகமான அரசியலுக்கு அடித்தளமிட்டவர் மீண்டும் முதல்வராக வரவேண்டுமா.சின்னஞ்சிறு பிள்ளையாக இருந்தாலும் தம்பி என்றும், அண்ணா என்றும், பெரியவர் என்றும், அய்யா என்றும் அழைக்கக் கூடிய நாகரீகம் உடைய கலைஞர் முதல்வராக வேண்டுமா. சாதாரண மக்களுக்கு சமூக நீதி வேண்டும் என்று போரடிக் கொண்டிருக்கிற கலைஞர் வேண்டுமா. அல்லது பழிவாங்குவதே ஒன்றே தன் செயல் என்ற அந்த அம்மையார் வேண்டுமா.அந்த அம்மையார் 10 ஆண்டுகாலம் முதல் அமைச்சராக இருந்தார். முதல் ஐந்து ஆண்டுகாலம் அவர் செய்த சாதனை என்ன. ஒன்றே ஒன்றை சொல்லலாம். 30 வயதுக்கு மேலே உள்ளவரை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். அந்த வளர்ப்பு மகனுக்கு உலகமே வியக்கக் கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி திருமணம் செய்தார். அடுத்த ஐந்து ஆண்டுகாலம் மக்கள் அவருக்கு வாய்ப்பை கொடுத்தார்கள். அந்த ஐந்து ஆண்டுகாலம் அவர் செய்த சாதனை, தலைவர்களை கைது செய்து பழி வாங்கினார்.கலைஞரை கைது செய்தார். மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களை கைது செய்தார். இவர்களுக்காக குரல் கொடுத்த நெடுமாறனை கைது செய்தார். தமிழ்நாட்டில் யார் யார் எல்லாம் தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களையெல்லாம் கைது செய்தார். என்னையும் கைது செய்தவர்தான் அந்த அம்மையார். பாமக நிறுவனர் ராமதாசையும் கைது செய்தார். அவர் ஆட்சிக் காலத்தின் சாதனை வளர்ப்பு மகனின் திருமணம். எதிரணி தலைவர்களை கைது செய்து பழி வாங்கிய சாதனை.

Anonymous said...

ஜெயலலிதா எந்த கூட்டணி கட்சித் தலைவரோடும் சேர்ந்து எந்த இடத்திலும், பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. புதிதாக
ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்துள்ள முன்னாள் கதாநாயகன், நான் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியுடன் தான் கூட்டு வைத்துள்ளேன் என்று தெரிவித்து வருகிறார்.


ஆனால், ஜெயலலிதா அ.தி.மு.க மேடையில், அந்த முன்னாள் கதாநாயகனை ஒரு முறையாவது ஏற்றுவாரா? இப்படி அந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தலைவரிடையேயும், முரண்பாடுகள் மேலோங்கி இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்துவிடுவார்கள்

R.Subramanian@R.S.Mani said...

Kalaignar asked the DMK member only not to have religious symbol on his forehead. It is correct and right as per the Policy of his Party But Mrs.Rajathi Ammal or Mrs. Stalin may not even be a basic member of the DMK party. Then Kalaignar has no right to ask them about their worship and folowing the religious sentiments. Therefore no necessity arises there to write such a big article as some secret has been found out;
SUPPAMANI

கலைக்கோவன் said...

//ஒரு முறை திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடந்த சம்பவம் இது. அப்போது கடலூர் தொகுதியின் திமுக எம். எல்.ஏ ஆக இருந்த ஆதி.சங்கர் சட்டசபையில் இருந்து கருணாநிதி அவர்களால் வெளியேற்றப்பட்டார்.

கழகத்தின் கொள்கைகளுக்கு அவர் எதிராக நடந்துகொண்டார் என்று கண்டிக்கப்பட்டார். ஆதி.சங்கர், மன்னிப்பு கடிதம் தந்தே பிறகே அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இதற்க்கு காரணம் என்ன தெரியுமா?ஆதி.சங்கர், அன்று சட்டசபைக்கு வரும்போது, அவர் தனது நெற்றியில் விபுதி குங்குமம் இட்டு இருந்தார் என்பதே.//
ஓரு சின்ன Correction..,
ஆதிசங்கரை கலைஞர் கடிந்து கொண்டது...ஓரு பொதுக்கூட்டதில்
(நெற்றியில் என்ன ரத்தமா வடிகிறது எனக்கேட்டராம்).மேலும் இந்த சம்பவத்திற்க்கு பிறகு தான் ஆதிசங்கர் கடலூரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார், MLA ஆக அல்ல.

kothandapani said...

tamilnadu people are happy without any problem at all. the only problem to be solved is vijayakanths drinking habit.if they can overcome that, they will be much more happy.so thats the success of DMKs propaganda machinery. About vadivelus crowd pulling capacity... tamilnadu people are very clever. they have one yardstick for entertainment and another for voting. we will wait and see what happens on May 13th.

Anonymous said...

I feel Vijayakanth is personally lot better than his counterparts in DMK and AIADMK. I need not remind you of JJ's tactics of bringing people to her garden and giving them slipper treatment. Even MGR had that practice. Atleast they leave the men alive, in contrast to DMK group.

I feel, we Indians have lost the moral right to denounce someone as drunkards, since a long time. How many of you here have never tasted alcohol?. Look at the facts, the ruling party has got nothing to blame at Vijayakanth except his drinking habit. But the ruling party has mired themselves with corruption,violence, scams and what not? - are these noble qualities. What's the point in being a personally good person with all such qualities?. I'd rather prefer having a fool or a mentally ill person to be ruler than having such a treacherous thief.
Even people of national importance, have the habit of smoking in private - you'll be surprised to know. Reminds me of Kamal's dialogue - Don't try to peek into my toilet.

Anonymous said...

விஜயகாந்த் வாக்கு வங்கி வெறும் 4% தான் என்று இந்த தேர்தல் முடிந்த பின் தெரியும் .

Anonymous said...

இட்லி வடை எதாவது சென்சார் பண்ணுதா ? அனைத்து பின்னுட்டங்களும் அப்படியே உல்டாவாகி விட்டது. எல்லோரும் கலைழரை ஆதரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதைதான் நான் அப்பவே சொன்னேன். பாமர மக்கள் என்றும் கலைழரை கைவிட மாட்டார்கள். அரசு உழியர்களும் அம்மாவின் ஆணவத்தை மறக்க மாட்டார்கள் என்று. அனைவரும் கலைழரால் நன்மை அடைய பெற்றவர்கள். படித்த இளவட்டங்களும் கம்பியுடர் கம்பனியில் சேர்ந்து கை நிறைய சமப்பால் வாங்குவதற்கும் அந்த நிறுவனங்களை தமிழ் நாட்டுக்கு கொண்டுவந்தது கலைழர் தான். எனவே புது இளவட்டங்களும் கலைழரை ஆதரிப்பார்கள். நன்றி கடன் செலுத்த.

SAN said...

IV
Why are u giving importance to trolls

Chandramouli said...

Alas, People of India are forced to elect the best among the worst.

Anonymous said...

விஜயகாந்த் குடித்து விட்டு உளறுவதால் அவருக்கு பாட்டில் சின்னம் ஒதுக்கலாம் என ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி கிண்டல் அடித்திருக்கிறார்.


ஊட்டியில் பேட்டியளித்த சுப்பிரமணிய சுவாமி, விஜயகாந்த் தனது கட்சியின் கொள்கைகள் பற்றி கூறாமல் பாட்டில்கள் பற்றி குறிப்பிடுகிறார் என்றுவிமர்சித்தார். முன்னதாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்துக்கு பாட்டில் சின்னம் கொடுக்கலாம் என்றார்

senthil said...

ஆப்புக்கும் halfக்கும் வித்தியாசம் தெரியாத தமிழ் தொலைகாட்சி முதலாளிகள் உள்ளவரையில் உங்கள்ளுக்கு ஜாலி தான்.