பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 22, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 22-4-2011

டேய் இட்லி!
நல்லா இருக்கியா?
ஒரு வாரமா கடையத் தொறக்காம மூடி வெச்சுட்ட. டாஸ்மாக் இல்லாத தமிழ் நாடு மாதிரி இருந்தது. அதனால் ஒழுங்காப் போஸ்ட் போடு கடைல கல்லாக் கட்டு என்று ப்ரைவேட்டாக ஒரு வரி வார்னிங் லெட்டர் வந்தது. அதனால் உனக்கு பப்ளிக்காக இந்தக் கடிதம். தேர்தல் பணி அதனால் கொஞ்ச நாளா கடிதமோ போஸ்டோ எழுத முடியவில்லை. இப்போ தேர்தல் செய்தியோடவே லெட்டரை ஆரம்பிக்கறேன். இந்த முறை தமிழ்நாட்டில் 78% ஓட்டு பதிவாகியிருக்கிறது அதனால் பலருக்கு வயிற்ற கலங்கியிருக்கிறது. ஒரு வேளை எல்லா தொகுதியிலும் இடைத்தேர்தல் என்று மக்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ. காலை 8 மணிக்கே கூட்டம்

அலைமோதியது என்றால் பார்த்துக்கொள். மக்கள் எல்லோரும் திமுக அரசின் மீது இருக்கும் கடும் வெறுப்பில் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. கமல் போன்ற உண்மையான சிடிசன்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது கூடக் காரணமாக இருக்கலாம். தேர்தல் நாள் அன்று ஓட்டு போட்டுவிட்டு வந்த வாக்காளர்களிடம் பேச்சு கொடுத்த போது கிடைத்த தகவல் - நிறைய பேர் அதிமுகவிற்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன காரணம் திமுக வர கூடாது. சிலர் பி.ஜே.பிக்கு கூட வாக்கு போட்டிருக்கிறார்கள் - அவர்கள் சொன்ன காரணம் போன தடவை தேமுதிகவிற்கு போட்டேன் இந்த முறை அவர்கள் அதிமுகவில் சேர்ந்துவிட்டார்கள் அதனால் இவர்கள். சரி, எது எப்படியோ, என்னுடைய கணிப்பு இங்கே


அதிமுக கூட்டணிக்கு கிடைக்க கூடிய தொகுதிகள் : 186
திமுக கூட்டணிக்கு கிடைக்க கூப்ச்டிய தொகுதிகள்: 48


தமிழர்கள் மடையன்கள் என்று திட்டு வாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!.

டமிலன் என்ற இட்லிவடை வாசகர் எனக்கு சில கார்ட்டூன் அனுப்பியுள்ளார் அதை இங்கே போடுகிறேன் நல்லா இருக்கு. இதே போல 2G குறித்து ஒரு கார்ட்டூன் அனுப்பியுள்ளார், ஆனால் அது கொஞ்சம் ஓலடாக இருக்கு. ஆமாம் இப்ப கனிமொழி, தயாளு என்று நிறைய சேர்க்க வேண்டியுள்ளது அதை சில நாட்களில் போடுகிறேன். இவர் தொடர்ந்து இட்லிவடைக்கு எழுதுவார் என்று நம்புகிறேன்.
கலைஞர் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் தேர்தல் காலத்தில் ஒரு ஒற்றுமை அது - ஞாபகம் வருதே பாடல், சும்மா சொல்லக்கூடாது இந்த பாடலுக்கு இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் எப்படி புகழ்ந்துக்கொள்கிறார்கள்!

சரி சினிமா பக்கம் வரலாம், நடிகை சுஜாதா காலமான செய்தியை ஏன் இட்லிவடையில் போடவில்லை என்று ஒருவர் கேட்டிருந்தார். சரி சுஜாதாவிற்கு ஒரு அஞ்சலி குறிப்பு எழுத சொல்லி ஒரு எழுத்தாளரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் "நான் என்ன அவ்வளவு வயசானவனா? வேற ஆளைப்பாரு" என்று. சுஜாதா பற்றி எந்த ஒரு பத்திரிக்கையும் பெரிதாக ஒரு செய்தியும் போடவில்லை. ஒரு பத்திரிக்கையில் சிவகுமார் இரண்டு பக்கம் எழுதியிருந்தார், விகடனில் பொக்கிஷம் பகுதியில் அவருடைய பழைய பேட்டி ஒன்று போட்டிருந்தார்கள். இத்தனைக்கும் இவர் சிவாஜி, ரஜினி, கமல் எல்லா முன்னனி நடிகர்களுடன் நடித்துவிட்டார். சிவாஜி அழும் படங்களில் அவருடன் சேர்ந்து ஈக்வலாக அழுதிருக்கிறார். சிவாஜியின் ஓவர் ஆக்டிங்கைப் பார்த்துப் பூரித்த தமிழ்மக்கள் இவரைக் கண்டுகொள்ளாதது கொஞ்சம் வருத்தம் தான்.

வேகமாகப் பந்து எறியும் இலங்கை வீரர் மலிங்கா தனக்கு ஃபிட்நெஸ் இல்லை என்று சொல்லி இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று ஒதுங்கி இங்கே ஐபிஎல்லில் இன்னும் வேகமாக எறிகிறார். ரெண்டு நாள் முன்னாடி இலங்கை ஸ்ரீலங்கா கிரிக்கெட் போர்டு ஐபில் ஆடும் இலங்கை வீர்கள் உடனடியாக திரும்ப உத்தரவிட்டது. பிசிசிஐ பதில் மிரட்டல் விட்டதில் பணிந்த இலங்கை வாரியம் தானொரு எடுப்பார் கைப்பிள்ளை என்று நிரூபித்தது. எல்லாவற்றிலும் காமெடியாக இன்று மலிங்கா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு என்று அறிவித்து இலங்கை வாரியத்துக்கு அல்வாக் குடுத்து இருக்காரு.

அல்வா விக்கற கடைக்கே அல்வா குடுத்து இருக்காங்க திருநெல்வேலில. ராத்திரி ஆறு மணி முதல் பத்து மணி வரை நடத்தப் படும் பிரபலமான இருட்டு கடை அல்வா என்ற பேருல போலி அல்வா விக்கறதை எதிர்த்து இருட்டுக் கடைக் காரங்க கோர்ட்டுக்குப் போக, அந்தப் பேருக்கு கிட்டத்தட்ட காப்புரிமை குடுத்திருக்கு கோர்ட்டு. எனக்கு ஒரு சந்தேகம். இப்போதான் கரண்டு நாள் பூரா இருக்கறது இல்லையே. அப்போ கரண்டு இல்லாத கடையில் பகலிலும் இருட்டுல அல்வா பண்ணி இருட்டுக் கடை அல்வா என்று வித்தாத் தப்பா என்ன? வேணும் என்றால் வித்தா அதை பகலிருட்டுக் கடை அல்வா என்று போட்டுக்க இட்லிவடை சிபாரிசு செய்கிறது.

ஓட்டை இல்லாத ஜட்டி இல்லை என்ற பழமொழிக்கு ஏற்றவாறு, ஊழல் இல்லாத அமைப்பு இல்லை என்ற நிலமை உருவாகியிருக்கு. தினமும் பூஷன் பூஷன் என்று ஓயாமல் மீடியா பேசி பேசி நமது சாந்தியைக் கெடுக்கிறார்கள். அமர்சிங்கை சந்தித்துப் பேசியதே கிடையாது என்கிறார்கள், ஆனால் அமர் சிங் ஒரு வழக்கில் ஆஜராக பூஷனை தனி விமானத்தில் லக்னோவுக்கு அழைத்து வந்ததாகவும் அவருக்கு வக்கீல் ஃபீஸாக 50 லட்சம் கொடுத்ததாகவும் அமர்சிங் அடித்து சொல்கிறார். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று கண்டுபிடிப்பது பெரிய சவாலாகிவிடும் போல இருக்கு. இதற்கு இடையில் அன்னா அசாரே, சோனியாவிற்கு கடிதம் எழுதி, அவர் பதில் போட்டவுடன் திருப்தி என்று சொல்லுகிறார், அவர் கடிதத்தில் குவாத்ரோச்சி பற்றி ஒரு வரி எழுதியிருக்கலாம். எழுதினாரா என்று தெரியல.
தங்கபாலுவுக்கு எதிரா தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் வரிஞ்சு கட்டி கிளம்பி இருக்கின்றன. பாவம், ரிசல்டுக்கு அப்புறம் தங்க பாலுக்கு அப்பு உறுதி ஆகிவிட்டதாம். அதற்க்கு அச்சாரமா இன்று மன்னார்குடியில் காந்தி சிலையிடம் மனு குடுத்து மொட்டை போட்டாங்களாம் காங்கிரசார். நல்ல கூத்து.

திமுக தோல்விக்கு பிறகு கலைஞர் செய்ய வேண்டிய முதல் வேலை - ஸ்டாலின் தான் வாரிசு என்று அறிவிக்க வேண்டும். இந்த தேர்தலுக்கே அவர் அதை செய்திருக்க வேண்டும், பாவம் அவருக்கும் வயசு ஆகிறது எவ்வளவு காலம் தான் அவர் சும்மா துணையாகவே இருப்பார், அவருக்கும் பேர பிள்ளைகள் எல்லாம் வந்துவிட்டது. கலைஞர் இந்த தேர்தலில் செய்த மிக பெரிய தவறு இது என்று நினைக்கிறேன். அடுத்த முதலவராக யார் வர வேண்டும் என்பது அரசியலில் மட்டும் இல்லை கார்பரேடிலும் இந்த போட்டி இருக்கிறது. இன்போசிஸ் நிறுவன இயக்குநர்கள் குழுவிலிருந்து மோகன்தாஸ் பாய் விலகியுள்ளார். நாராயண மூர்த்தி, மோகன்தாஸ் இருவரும் கடந்த ஒருவாரமாக கொடுத்த பேட்டிகளை பார்த்தாலே உள்ளே ஏதோ லடாய் என்பது விளங்கும்.

தமிழ்நாட்டில் இப்ப மூன்று மணி நேர 'பவர் கட்', ‘தமிழகத்தை ஆள்வது நானா? தேர்தல் கமிஷனா’ என்று கலைஞர் எரிச்சலை பார்த்தால் பவர் கட் ஏற்கனவே வந்துவிட்டது போல தோன்றுகிறது. துக்ளக் கேள்வி பதிலில் - கே : தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் பாராட்டும்போது, கருணாநிதி மட்டும், ‘எமர்ஜென்ஸி’, ‘எதிர்க்கட்சி’, ‘தேர்தல் முடிந்ததும் பேசிக் கொள்கிறேன்’ என்றெல்லாம் சீறுவது ஏன்?
ப : ‘தேர்தல் கமிஷன்’ என்ற பெயர் இருப்பதால், ‘கமிஷன்’ வாங்கிக் கொண்டு எதையும் செய்து விடுவார்கள் – என்று நம்பி, அந்த நம்பிக்கை பொய்த்துப் போனதில் அவருக்குக் கோபம் இருக்கலாம். நாம் என்ன கண்டோம்!

இந்த கடிதத்தையும் ( முகவின் ஆட்சியும் )
இத்துடன் முடித்துக்கொள்கிறேன்,
இப்படிக்கு முனி,

திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றால், தங்கபாலு துணை முதல்வராக வர முடியாது என்ற ஒரே வருத்தம் தான்!


30 Comments:

Vetri said...

//இந்த கடிதத்தையும் ( முகவின் ஆட்சியும் )

ததாஸ்து !

சூப்பர் முனி

ங்கொப்பன் said...

என்ன இ.வ.? அண்ணன் அழகிரி மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை போலும்... இன்னும் வாக்குகள் எண்ணப்படவில்லையே - அப்பொழுது பார்த்துக்கொள்வார், தி.மு.க. வை ஜெயிக்க வைப்பார்.

Anonymous said...

You have mentioned as திமுக தொற்ற பிறகு. Please correct this.

Anonymous said...

மாடு நுனிப் புல்லை மேஞ்ச மாதிரி இங்க கொஞ்சம் தொட்டு அங்க கொஞ்சம் தொட்டு என்ன போஸ்டிங் இது. இதுக்கு போஸ்டிங் எதும் இல்லாமலேயே இருப்பது நல்லது.

Anonymous said...

வருடம் முழுவது கோடா நாட்டில் ஒய்வு எடுக்கும் ஜெயா தான் வேண்டுமென்றால் மக்கள் நன்கு அவதி பட வேண்டியதுதான்.
அனல் மின் நிலையம் உற்பத்தி தொடங்க ஐந்து வருடங்கள் ஆகும். கலைழர் ஆட்சி ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட மின் நிலையங்கள் இந்த ஆண்டு இறுதியில் உற்பத்தி தொடங்கும். அப்போது மின்சாரதேவை பூர்த்தியாகும். அப்போது இருக்கும் ஆட்சியாளர் மக்கள் காதில் பூ சுற்றவேண்டியது தான். ( நான் - நான் -நான் தான் நேற்று நடவடிக்கை எடுத்து இன்று கரண்ட் கொடுத்தேன் என்று . முன்பு ஜெயா ஆட்சியின் போது புது திட்டங்கள் ஆரம்பிக்காமல் விட்டாதால் தான் இந்த நிலைமை என்பது மக்களுக்கு புரியுமுன்) . வாழ்க ஒருதலை பட்ச மேல்தட்டு வர்க்கம்.

Anonymous said...

இட்லி வடைக்கு ஒரு வேண்டுகோள்:
சும்மா அரசியால் மாவை திரும்ப திரும்ப அரைக்க வேண்டாம். தேர்தல் முடிவு வரை பொறுத்திருக்கலாம்.
இந்த கடுமையான் மின் வெட்டுக்கு மூல காரணம் என்ன என்பதை ஒரு மின்துறை விற்பன்னரிடம் கேட்டு விரிவான் கட்டுரை எழுத சொல்லவும். மின் நிலையம் ஆரம்பித்து உற்பத்தி துவங்க ஆகும் காலம்.எந்த வருடத்தில் கட்ட ஆரம்பித்து இருந்தால்( வழக்கமான காலம் தாழ்தல் காலத்தையும் சேர்த்து) இப்போது மின் வெட்டு இருந்திருக்காது. இப்பொது கட்டுமானத்தில் உள்ள மின் நிலையங்கள், அவை எப்போது தொடங்க பட்டவை. இப்போது அதன் நிலவரம், எப்போது உற்பத்தி துவங்கும். என்பன போன்ற விபரங்களுடன். குறைந்த மின் கட்டணத்துக்கும் , மின் நிலையங்கள் ஆரம்பிக்க தனியார் யாரும் வராமல் இருப்பதற்கும் , கடன் எந்த வங்கிகளும் தராததற்கும் ( கட்டுபடியில்லாத மின் கட்டணம் உள்ளதால் உரிய நேரத்தில் கடன் தவணை அடைக்க முடியாது என்பதால்) உள்ளதொடர்பு.முதலிய விபரங்கள் உள்ள விரிவான கட்டுரை தேவை. சும்மா அரசியால் மாவை திரும்ப திரும்ப அரைக்க வேண்டாம். தேர்தல் முடிவு வரை பொறுத்திருக்கலாம்.அம்மா வந்தால் எங்கிருந்து ( எந்த மந்திரத்தை சொல்லி )மின்சாரம் தருவார். அவர் கடந்த ஆட்சியில் ஏன் மின் திட்டங்கள் தொடங்கவில்லை. அவை தனது ஆட்சியில் ( ஐந்து வருடங்களுக்குள்) பலன் தராது. அதன் பலன் பின் வரும் கலழர் ஆட்சிக்கு தான் , அதன் பாதகமும் அவருக்குதான் என்பதை உணர்ந்ததால்,எப்போதும் தேர்தல் கோடை காலத்தில் கடும் மின் தேவை உள்ள மாதங்களில் தான் வரும் அப்போது அதன் மூலம் மக்களை உசிப்பிவிட்டு ஓட்டு அறுவடை செய்யலாம் என்பதாலும் எந்த மின் திட்டமும் தொடங்க வில்லை என்பது உள்பட .

middleclassmadhavi said...

வித்தியாசமான கலவை! இப்போது தேர்தல் பற்றி எழுதாமல் 2 மாதம் கழித்து எழுதினால் என்ன சுவாரசியம் இருக்கும்?!
சுஜாதா பற்றி அதிகம் கண்டுகொள்ளாமல் விட்டது வருத்தம் தான்!

Anonymous said...

நான் அதிமுக கட்சியை சார்ந்தவன் அல்ல. இருந்தாலும்.. ஜெ வை.. வருடம் முழுவது கோடா நாட்டில் ஒய்வு எடுக்கிறார் என்று சொல்வது எனக்கு புரியவில்லை....

கட்ந்த 5 ஆண்டுகள் ஜெயா டி.வி யை கவனித்து இருந்தால் புரியம்.மிக சீரான நுட்பமான அறிக்கைகள், தேவையான மக்கள் நல போராட்டங்கள் (கட்சி
சார்பில், சில சமயங்களில் நேரடியாக)...இதை விட என்ன செய்திருக்க வேண்டும்.

சட்ட சபைக்கு வரவில்லை என்ற பெரிய குறையை தவிர.... எதிர் கட்சியாக அரசை கண்காணித்து ,, தவறுகளை சுட்டிக் காட்ட ஜெயா தவறவில்லை.

கோடா நாடு என்ன Switzerland ஆ.... ஸ்டலின், லண்டன், மகாபலிபுரம் ரிசாட் போகலாம் அது தவறு இல்லை,, ஆனால்
ஜெயா மட்டும் விமர்சத்துக்கு உள்ளாவது புரியவில்லை......

சொல்லப்போனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சினிமா, பாராட்டு விழா என பொழுது போக்கியவர் மு.கா வே..

jaisankar jaganathan said...

//அதிமுக கூட்டணிக்கு கிடைக்க கூடிய தொகுதிகள் : 186
திமுக கூட்டணிக்கு கிடைக்க கூப்ச்டிய தொகுதிகள்: 48//

அதிமுக கூட்டணிக்கு கிடைக்க கூடிய தொகுதிகள் : 48
திமுக கூட்டணிக்கு கிடைக்க கூப்ச்டிய தொகுதிகள்: 186

Anonymous said...

//வாழ்க ஒருதலை பட்ச மேல்தட்டு வர்க்கம்//

மதிப்பிற்குரிய ஐயா அவர்களே,
இதைப் படித்துவிட்டு கமெண்ட் அடிக்கவும்.. (இன்னொரு அனானி வேறு விபரங்கள் கேட்டிருந்தார்)
Note:
ADMK rule - May 2001 to May 2006
DMK - from May 2006

http://www.tn.gov.in/deptst/electricity.pdf

Installed Capacity in Mar 2001: 7,513 MW
Installed capacity in Mar 2006: 10,031 MW
Installed capacity in Mar 2009: 10,214 MW
(Latest figures are only available for 2009)

ஆற்காட்டார் என்ன கிழித்தார் என்று நீங்கள் இந்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இட்லிவடை, தயவுசெய்து நீங்கள் இதை ஆராய்ந்து (with latest facts) ஒரு தனி ப்ளாக் இடவும். எல்லாருக்கும் புண்ணியமாய்ப் போகும்.

- - -

இன்னொரு விஷயம் - இந்த நிலையில் நிலவரம் இன்னும் மோசம் ஆகியிருக்க வேண்டுமே என்று எண்ணுபவர்களுக்கு: திமுக ஆட்சியில் power generation இரட்டிப்பாக ஆகிவிட்டிருக்கிறது (with capacity remaining the same). அதனால் தான் ஏதோ ஒப்பேத்த முடிந்தது.

capacity பற்றி விக்கி கூறுவது இதுதான்: There are several reasons why a plant would have a capacity factor lower than 100%. The first reason is that it was out of service or operating at reduced output for part of the time due to equipment failures or routine maintenance. This accounts for most of the unused capacity of base load power plants.

அதாவது capcity அதிகரிக்காமல் output மட்டும் ஏறியிருக்கிறது. சில மாதங்கள் முன்பு இதில் ஏகப்பட்ட பழுது மீண்டும் ஏற்பட்டு output குறைந்ததால் தான் பல மின்வெட்டுக்கள் ஏற்பட்டன.

அதிமுக ஆட்சியில் ஒன்னும் செய்யவில்லை என்று பறை சாற்றுவதற்கு முன் திமுக அனுதாபிகள் இந்த ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று தெரிந்து கொண்டு பிறகு பறை சாற்றவும்.

Ganpat said...

அவசரப்படேல்...

Many a slip between the cup and the lip..

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!..

படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் -1967தேர்தலுக்கு முன் பெருந்தலைவர்

எங்களை கோட்டையில் சந்தியுங்கள்-1971தேர்தல் முடிந்து முடிவு வெளியாக சில தினங்கள் உள்ள நிலையில் அனந்தநாயகி CONG-MLA

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி -1980 தேர்தல் முடிந்து முடிவு வெளியாக சில தினங்கள் உள்ள நிலையில் மு.கருணாநிதி

எல்லாம் மறந்துபோச்சா?

Black said...

மஞ்ச கமெண்ட் சூப்பர். தங்கபாலுவூக்கு (இட்லி)வடை போச்சே கதி தான்!

Black said...

//இந்த கடுமையான் மின் வெட்டுக்கு மூல காரணம் என்ன என்பதை ஒரு மின்துறை விற்பன்னரிடம் கேட்டு விரிவான் கட்டுரை எழுத சொல்லவும். //

whatever may be the reason- the money spent for freebies could have been used for electricity purchase. Consumption of electricity in 2011 has grown like "corruption" compared to 2001 due to rapid growth in Technology and demand. Even i think idlyvadai was not there in 2001(correct me if i am wrong)and I strongly believe idlyvadai couldnot write frequently now a daysdue to Power cuts :)

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

//தேர்தல் கமிஷன்’ என்ற பெயர் இருப்பதால், ‘கமிஷன்’ வாங்கி...//

அந்த சந்தேகம் எல்லாம் கொஞ்சம் மறைவது போல இருந்த நேரத்தில் ஏனய்யா இப்படி வெறுப்பேத்துறீர்... (உம்மை அல்ல... கலைஞரைக் கேட்கிறேன்!)..எங்கள் பதிவில் இந்த சந்தேகத்துடன் நாங்கள் எழுதியதையும் ... குறிப்பாக பின்னூட்டங்களையும் படிங்க..."Election commission or commissioned .Election " எனும் கட்டுரை !! சகமனிதன்

Anonymous said...

புதுசா இட்லி வடைய வாங்கி எழுதறவரு பழைய முனி கடிதம் படிச்சிட்டு அப்பறம் எழுதட்டும். சும்மா ஏதோ ஒரு தமிழ் நியூஸ் சைட் லேந்து copy - paste அடிச்சா மாதிரி இருக்கு. செம சொதப்பல்.

Prakash said...

As usual the educated half baked middle & upper class people, are blaming DMK for power cuts , but the real culprit is pervious ADMK rule.

Power Generation Plants are long term projects, the commissioning of power plants will take many years. During ADMK rule, NO new power generation plats are built, now we are facing the effect of that.

But the present DMK Govt has taken many new power generation projects and those will yield results by 2012.

Pls check: http://timesofindia.indiatimes.com/City/Chennai/More-light-at-end-of-power-projects/articleshow/7839453.cms

The upcoming power projects in the state will add 6,800 MW by 2012.

TN State demand is 12,000 MW, with no new power project going on stream in the last ten years, the supply had not caught up with the demand, often falling short by 4,000 MW in the state.

For upcoming power projects pls check the below link..

http://www.tneb.in/template_3.php?tempno=3&cid=0&subcid=167

A) 1,200-MW expansion of North Chennai
B) 600-MW Expansion of Mettur thermal stations
C) 1,500-MW Vallur thermal project which is a joint venture of TNEB and the National Thermal Power Corporation (NTPC),
D) 1,600-MW TNEBBharat Heavy Electricals Ltd (BHEL) joint venture project of Udangudi super critical thermal power project
E) 1000-MW TNEB- Neyveli Lignite Corporation (NLC) joint venture at Thoothukudi.

All the above are Tamil Nadu EB's New power projects initiated during last 5 years of DMK rule.

Apart, Koodamkulam Nuclear Power plat shall start by end of 2011. This will address the present power shortage.

Anonymous said...

///http://www.tn.gov.in/deptst/electricity.pdf

Installed Capacity in Mar 2001: 7,513 MW
Installed capacity in Mar 2006: 10,031 MW
Installed capacity in Mar 2009: 10,214 MW
(Latest figures are only available for 2009)///
That installed capacity came from the projects started during 1996-2006 that have been commissioned after 36 to 48 months( Gestation period).You please see the status of projects construction from the project sanctioned date in CEA Website.

Anonymous said...

//As usual the educated half baked middle & upper class people, are blaming DMK for power cuts , but the real culprit is pervious ADMK rule.

Power Generation Plants are long term projects, the commissioning of power plants will take many years. During ADMK rule, NO new power generation plats are built, now we are facing the effect of that.

But the present DMK Govt has taken many new power generation projects and those will yield results by 2012.//
CORRECT

Anonymous said...

///ஆற்காட்டார் என்ன கிழித்தார் என்று நீங்கள் இந்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.////

1. இதில் எந்த வருடம் அப்ருவல் கிடைத்து. எப்ப கட்ட ஆரம்பித்தார்கள் என்பது இல்லை.
2. நாம் பார்க்கவேண்டியது யாரால் கட்டுமானம் தொடங்கப்பட்டது. என்பது தான்.
3. எந்த வருடம் அப்ருவல் கிடைத்து ?
4. அந்த வருடங்களில் கமிஷன் ஆன திட்டங்கள் என்ன?
5. அவை எப்போது ஆரம்பிக்க பட்டது.
6. ஜெயலிதா காலத்தில் வரவேண்டிய ஜெயம்கொண்டான்( 5000MW mega project) திட்டம் ஏன் வரவில்லை ( 7. அப்ருவல் ஆன பின்பும் அம்மாவை கண்டு ஓடி விட்டதால் ( காசு தர முடியாததால் / பேரம் படியாததால்)அம்பானி மற்றும் வீடியோகான் கட்டவிருந்த ஜெயம்கொண்டான்( 5000MW mega project) திட்டம்) என்பதை விரிவாக எழுதவும்.
8. அப்போதாவது இட்லிவடை(அம்மா) அபிமானிகளுக்கு புரியுதா என்று பாப்போம்

Prakash said...

Good analysis on the Myth of Higher Voter Turnout in Tamil Nadu Election..

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html

Anonymous said...

New Delhi: Five members of the founding family of The Hindu newspaper are considering a legal challenge to the move to oust some of them from positions they hold at the newspaper.

“In the next couple of days, we could arrive at decisions on the way forward,” said N. Ravi, a member of the board and editor of the family-run paper. “As of now, we are weighing all options; could be legal, too.”

He is among the board members of Kasturi and Sons Ltd, which owns the paper, who will have to step down if proposals made at an 18 April board meeting are approved.

N. Ram, editor-in-chief of The Hindu and Ravi’s brother, and board members who support him have proposed the appointment of Siddharth Varadarajan in his place. Varadarajan is the national bureau chief of The Hindu. At the same meeting, seven members of the 12-member board voted in favour of the current editorial directors stepping down from their posts.

The five board members opposing the board resolution are Ravi; N. Murali, managing director; Nirmala Lakshman, joint editor; Malini Parthasarathy, executive editor; and Nalini Krishnan. Murali said the board members could “contemplate taking whatever course of action that is possible in the case”. He refused to elaborate.

Parthasarathy declined to comment, but expressed her views on microblogging site Twitter: “Last word has not been said on the Hindu story. A wafer-thin majority cannot hustle substantive structural change in an organization.”

Board members or shareholders against the proposal have the option of seeking legal relief. “If they can prove that there is some mismanagement or oppression, they can get an injunction from the Company Law Board,” said Gauri Rasgotra, a partner at law firm Khaitan and Co., adding that company law protects the rights of minority stakeholders.

“They can also state that the resolution is void and seek an injunction to restrain the company from passing the said resolution,” Rasgotra said, referring to the 18 April resolution that drove Ravi to make the matter public in an email addressed to The Hindu’s 870 journalists on Thursday.

Ram defended himself against the accusations of bias that Ravi made in his letter. It was unfair to make such allegations as it involved the reputation of the newspaper, Ram told reporters in Delhi on Friday. A telecom ministry advertisement, which Ravi had cited in his letter as an example of the paper’s independence being undermined, was carried by 14 other papers as well, Ram said.

An EGM of 50 shareholders is to be convened on 20 May to discuss issues related to corporate governance and succession planning. “The meeting will also discuss the new editorial appointment,” said Ravi, referring to Varadarajan’s new position.

Anonymous said...

Installed Capacity in Mar 2001: 7,513 MW
Installed capacity in Mar 2006: 10,031 MW
Installed capacity in Mar 2009: 10,214 MW
when this man can construct oil tanker secrateriate for his own use within one year, why not power stations. Where there is a will there is a way

Anonymous said...

Installed Capacity in Mar 2001: 7,513 MW
Installed capacity in Mar 2006: 10,031 MW
Installed capacity in Mar 2009: 10,214 MW
when this man can construct oil tanker secrateriate for his own use within one year, why not power stations. Where there is a will there is a way

SAN said...

IV,
Pl don't publish trolls like prakash and anons its really suffocating!!!

Anonymous said...

There is something wrong in the post. doesnt look like a typical idlyvadai post.looks somenone else have written. there are a lot of mistakes and the usual punch is not there ??????

SHRINI
KOCHI

RAJESH V said...

கமல் போன்ற உண்மையான சிடிசன்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது கூடக் காரணமாக இருக்கலாம்

----------------------------------
CHILDISH COMMENT.

cho visiri said...

//சொல்லப்போனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சினிமா, பாராட்டு விழா என பொழுது போக்கியவர் மு.கா வே..//

Wellsaid.

Kodumpavi said...

முனி சத்ய சாய் பாபா காலமானார்.
அவரது ஆன்மா சாந்தி அடைய ‘இறைவனை’ ப்ரார்த்திக்கிறேன்.
- கொடும்பாவி.

tommoy said...

//அதிமுக கூட்டணிக்கு கிடைக்க கூடிய தொகுதிகள் : 186
//
aiyoo paavam IV arasiyal arivu pullarikudhu.. verum JV and thuklag padithu arasiyal gnanam peruvadhal varum problem idhu..

wait and see..

I will come back and comment here on May 13th and 12:00 noon for sure..

Kayal said...

ஜெயம்கொண்டம் மின் நிலையம் ப்ராஜெக்ட் நா குழந்தைய இருக்கறப்போ இருந்து ரெண்டு ஆட்சியையும் சொல்லிகிட்டு இருக்கிற பழைய நியூஸ். ரெண்டு பேருமே இதில் எதுவும் செய்யல.