பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 03, 2011

தேர்தல் 2011 - யாருக்கு வாய்ப்பு ?

பலகாலமாக நகர்ப்புறத்தில் படித்த ஆண்கள் திமுகவிற்கும், கிராமப்புற தலித் பெண்மணிகள் பெரும்பாலும் அதிமுகவிற்குமாக வாக்களித்து வந்தனர். ஆனால் இனி நிலைமை அப்படி இருக்காது என்று சொல்லுகிறார்க்ள். திமுகவும் இம்முறை தனது பாரம்பரிய நகர்ப்புற ஓட்டுவங்கியை விட்டு அவசர அவசரமாக வெளியேற முடிவு செய்திருக்கிறது. காரணம் நகர்ப்புற படித்த வர்க்கத்தினரிடையே 2G ஊழல் தொடர்பாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி தொடர்பான கவலைதான். இந்த முறை கர்ண பரம்பரை போல் நகரிலுள்ள 16 தொகுதிகளில் 5 தொகுதிகளை மிகவும் எளிதாக கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு தாரை வார்த்து விட்டது. இவ்வாறு நகர்ப்புற தொகுதிகளை விட்டு ஓட்டம் பிடித்ததில் முன்னோடியாக திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியே அங்கம் வகிக்கிறார். 1967 லிருந்து, நகர்ப்புறத்தை விட்டு வெளியே செல்வது கருணாநிதிக்கு இதுவே முதன்முறை.இதற்கு அதிகாரப்பூர்வமாக சொல்லப்படும் காரணம், கருணாநிதி தனது சொந்த ஊர் தொகுதியிலிருந்து போட்டியிட விரும்புகிறார் என்பது, இந்த வாதத்தை திமுக தொண்டனே ஏற்றுக்கொள்ள மாட்டான். 2G ஊழல் தொடர்பான விழிப்புணர்ச்சி சென்னை நகர மக்களிடையே அதிகமாக இருப்பதால், திமுகவின் முன்னணித் தலைவர்கள் எவரும் அங்கு போட்டியிடத் துணியவில்லை என்பது தான் நிஜம். காங்கிரஸ் கட்சியானது, திருவிக நகர், ராயபுரம், மைலாப்பூர், தி.நகர் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. திமுக தலைவரின் மகனும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினும் தனது விருப்பத் தொகுதியும், தொடர்ந்து மும்முறை வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டு, சென்னையின் எல்லைப்புறத் தொகுதியான கொளத்தூருக்கு இடம் பெயர்ந்துள்ளார். 2006 தேர்தல்களில் நேரெதிரிடையாக திமுக 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. சென்ற தேர்தலிலேயே நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் அதிமுகவிற்கு செல்வாக்கு கிட்டியது வெளிப்படையாகத் தெரிந்ததே இம்மாற்றத்திற்குக் காரணம் என்கிறார் ஸ்டாலினின் முந்தைய ஆயிரம் விளக்கு தொகுதியில் 2001 தேர்தலில் 70 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2006 தேர்தலில் அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 46 ஆகக் குறைந்தது. மற்றொரு உதாரணம் துறைமுகம் தொகுதி. இதை திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமான அன்பழகன் தனக்கு சொந்தமாகவே மாற்றியிருந்தார். 1996 இல் 70 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்ற இவர், 2006 இல் பெற்ற வாக்கு சதவிகிதம் 44. திமுகவின் மற்றொரு கோட்டையான திருவல்லிக்கேணியில் 2006 தேர்தலில் அதிமுகவின் ஃபதர் சயீத், திமுகவின் நாகநாதனை அதிர்ச்சித் தோல்விக்குள்ளாக்கினார். இவர் திமுகவின் அன்றைய தேர்தல் அறிக்கையின் சிற்பி என்று அறியப்பட்டவர். சான்ஸ் கொடுத்தால் திமுக தலைவர்கள் ஆந்திரா, கர்நாடகா எல்லையில் கூட நிற்பார்கள்.

இந்த முறை கருத்து கணிப்பு என்ன சொல்லுகிறது என்று பார்க்கலாம்.


லயோலா கல்லூரி கருத்து கணிப்பு இவ்வாறு சொல்லுகிறது "5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக 105 தொகுதிகள் வரை உள்ளன. தி.முக. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும், மீதமுள்ள 59 தொகுதிகளில் கடுமையான போட்டியும் நிலவுகிறது"

இந்தியா டுடே

அவுட் லுக்Lens on the news

[TruthDive]


இட்லிவடை சர்வே

இரண்டு கழகங்களும் ஒரே மாதிரி தேர்தல் அறிக்கை, ஒரே மாதிரி ஊழல் என்று இருக்க கடுமையான போட்டி நிலவப்போகிறது. பேசாம தேர்தல் கமிஷன் டாஸ் போட்டு முடிவுகளை அறிவிக்கலாம். செலவு மிச்சம்!

12 Comments:

cho visiri said...

Toss!?

Once (normal), or Twice (like CWC Final)?

In any case JJ will be the next CM!

Raja=Theking said...

Srilanka Vs india
Dmk vs Admk
So result is . . . . .

Anonymous said...

ஓ... அப்போ “தலை” தலைக்கு. ”பூ” அம்மாவுக்கா? யார் காதுல “பூ” சுத்தப் போறாங்களோ, போங்க. எனிவே...

எதிர்கால முதல்வர் வை.கோ. வாழ்க

இட்லிவடை முன்னேற்றக்கழகம் said...

இட்லிவடை சர்வே மாதிரித்தானே மற்ற சர்வேக்களும். இப்படி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சர்வேக்களை கவிழ்ப்பதில் இட்லிவடைக்கு நிகர் இட்லிவடையேதான்

Anonymous said...

True that urban Peoples are supporting Jayalalitha, but only because of no other option. They know very well that Jayalalitha may behave even worse than Karunanidhi. But anyway DMK shouldn't be allowed to come again as it may create image that peoples not bother about corruption - as same as it created in last Parliament election regarding the issue of TN fishermen.

Anonymous said...

The election will be tough as of now on 02.03.2011.
DMK Front: 120 to 134
ADMK Front: 100 to 114
Nearing the election date DMK Front will get lead in about 150 places as the people will be comparing DMK Govt( people frontly) from 2006 to 2011 with Jeya's Govt (suppressed all peoples in all areas)from 2001 to 2006.

R.Gopi said...

தேர்தல் கருத்து கணிப்பு தி.மு.க.விற்கு சாதகமாக வந்தால் :

மக்கள் சரியான திசையில் சரியான கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி இருப்பது வெளிவந்துள்ள கருத்து கணிப்பில் இருந்து தெரிகிறது... (தல)

தேர்தல் கருத்து கணிப்பு தி.மு.க.விற்கு இப்போதுள்ளது போல், பாதகமாக வந்தால் :

இது போன்ற விஷம் பரப்பும் செய்திகளை தூண்டி விடும் சக்திகள் யாரென்று எனக்கு தெரியும்.. இது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு (அதே “தல”...)

ஹா...ஹா...ஹா... இவரை இன்னமும் நம் நாடும், பெரிய அளவிலான நாட்டு மக்களும் நம்புகிறார்களே, இது ஏதாவது கின்னஸ் சாதனையில் வருமா?

Mahesh said...

Or can have a Cricket match between the two MLA teams.Winners can form Govt. We can have good entertainment.

Anonymous said...

Just as free TV was assured and given, this time, the ordinary voter will vote only for that party which assures him one quarter of TASMAC every day, for the next five years, with door delivery. It is disappointing no party has offered it so far.

Anonymous said...

//But anyway DMK shouldn't be allowed to come again as it may create image that peoples not bother about corruption//

EXACTLY!

tommoy said...

ஓவொரு கணிப்பிலும் முன்னுக்கு பின் முரண் நிறைய உள்ளது..
பொறுத்திருந்து பார்க்கலாம் .
அதிலும் சில சர்வே வெறும் 12 - 13 தொகுதி , 1000 - 2000 வாக்களர் என்ற எண்ணிக்கை எந்த அளவு நம்பலாம் என்று தெரியவில்லை .
ஹீ ஹீ இட்லி வடை சர்வே எப்போதும் சரியாக வந்தது இல்லை.. குறிப்பாக இட்லி வடை ஓட்டுக்கள். பெரும்பாலும் வெளிநாட்டவர் , வெளி மாநிலத்தில் வாழ்பவர் , வாக்கு சாவடி செல்லாதவர் போடும் ஒட்டு

Anonymous said...

waste