ஜன்லோக்பால் - அண்ணாவை வைத்து செய்யப் படும் ஒரு சதி விளையாட்டா? - விஸ்வாமித்ரா
அந்நியன் சினிமாவில் ஒரு அப்பா அமெரிக்காவில் இருக்கும் தன் மகனிடம் நாடே அமைதியாகி விட்டது என்றும் லஞ்ச ஊழல் இல்லாமல் அலம்பி விட்ட மாதிரி இருப்பதாகவும் சொல்லுவார். அண்ணா தன் உண்ணாவிரதத்தை முடித்தவுடன் பல மெழுவர்த்திவாலாக்களும் ஏன் அண்ணாவும் கூட அப்படியே நினைத்து விட்டார் போலிருக்கிறது எல்லாம் நல்லபடியாக முடிந்தது இனி ஒரு பய ஐந்து பைசா வாங்கமாட்டான் என்று அனைவரும் முடிவுக்கு வந்து விட்டாற் போலத் தெரிகிறது. இதில் உச்சக் கட்ட காமெடி என்னவென்றால் இது ஊழல் எதிர்ப்பிற்கும் நம் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்று மன்மோகனும் காங்கிரஸ்காரர்களும் வெற்றி விழா கொண்டாடியதுதான். ஆக இது யாரை எதிர்த்து நடந்த போராட்டம்? மன்மோகனும் ஊழலை எதிர்க்கிறார் என்றால் ஊழலைச் செய்வதுதான் யார்? கடாஃபியா? முஷாரஃபா? யாரை எதிர்த்து மெழுகு வர்த்திகள் ஏற்றப் பட்டன? யாரை எதிர்த்து ஊர்வலங்கள் போனார்கள்? முதலில் ஆங்கோர் காட்டினின் பொந்தினில் வைக்கப் பட்டது நிஜமாகவே அக்கினிக் குஞ்சுதானா?
ஜன்லோக்பால் அமைப்பு வேண்டும் என்றும் அது எப்படி இருக்க வேண்டும்? எப்படி இயங்க வேண்டும்? அதில் யார் யார் உறுப்பினராக இருக்க வேண்டும்? அதன் எல்லைகள் என்ன? அவர்கள் யார் யாரை விசாரிக்கலாம்? எப்படி விசாரிக்கலாம்? யார் யாருக்குத் தண்டனை கொடுக்கலாம்? அதன் வரம்புக்குள் எந்த அரசியல்வாதிகள் எந்தெந்த அதிகாரிகள் வருவார்கள்? இவை அனைத்தையும் விவரிக்கும் ஒரு வரைவுத் திட்டம் ஒன்றை இந்த ஜன்லோக்பால் இயக்கத்தினர் ஏற்கனவே திட்டமிட்டு தயாரித்திருக்கிறார்கள். அது நல்ல விஷயம் தான். ஒரு போராட்டத்தை நடத்தும் முன்னால் அதைப் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். அரசாங்கம் செய்யத் தவறியதை இந்தத் தனியார்கள் செய்ய முயலும் பொழுது அரசாங்கம் எதைச் செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இவர்கள் சொல்லத் தயாராக இருக்க வேண்டும். அதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் அதை உருப்படியாகச் செய்யவில்லை என்ற குற்றசாட்டு அடுத்து எழுகிறது.
இது நாள் வரை ஒரு லோக்பால் சட்டத்தை நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் கொண்டுவரத் தயாராக இல்லாத காரணத்தினால் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் விதத்தில் இந்தப் போராட்டத்தை அண்ணா ஹசரே முன்னெடுத்து நடத்துகிறார். அதுவும் சரியானதே. இப்பொழுது ஆளும் கட்சி மூன்று உறுப்பினர்களையும் போராட்டக் குழுவில் இருந்து சில உறுப்பினர்களையும் சேர்த்து ஒரு பத்து பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. இந்தக் குழு போராட்ட இயக்கத்தினர் சமர்ப்பித்த திட்ட வரைவைப் படித்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து இறுதி வரைவு ஒன்றை உருவாக்கில் பாராளுமன்றத்தின் விவாதத்திற்கு வைப்பார்கள். அதன் பின் பாராளுமன்றம் ஓட்டெடுப்பு நடத்தி இதை சட்டமாக்கலாமா வேண்டாமா அல்லது மறுபரீசீலனை செய்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பார்கள். இதை விட அரசியல்வாதிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மகளிருக்கான 33% இட ஒதுக்கீடே இன்று வரை சட்டமாகவில்லை என்பது நினைவில் கொள்ள வேண்டும். இத்தனைக்கும் அதற்கு ஆளும் கட்சியும் பிரதான எதிர் கட்சியான பி ஜே பி யும் ஆதரவு தெரிவித்துள்ள ஒரு மசோதா. அப்படி அதற்கே ஒரு முடிவு ஏற்படாத நிலை இருக்கும் பொழுது, ஹி ஹி அரசியல்வாதிகள் ஊழல் செய்தால் உள்ளே வைப்போம் என்று சொல்லும் இந்த ஜனலோக்பாலை நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறது. ஆகவே அதற்குள் வெற்றி விழா கொண்டாடி விட வேண்டாம் கொஞ்சம் பொறுங்கள் மெழுவர்த்திவாலாக்களே. ஜன் லோக்பால் வேண்டும் என்று கேட்டிருக்கிறார், கேட்டிருக்கிறார், கேட்டிருக்கிறார் அண்ணா. தருகிறோம் என்று யாருமே இது வரைச் சொல்லவேயில்லை.
இந்த ஜன்லோக்பாலின் ஆரம்ப திட்ட வரைவை சிவில் சொசைட்டியினர் (மற்றவர் எல்லாம் என்ன அன்சிவில் சொசைட்டியா என்ன?) என்று சொல்லப் படும் சிலர் தயார் செய்துள்ளார்கள். ஆரம்பத்திலேயே இன்னும் அது விவாதத்திற்கு வரும் முன்னரே அதன் மீது பல குற்றசாட்டுக்கள் கண்டனங்கள் எழுகின்றன. அரசியல்வாதிகள் தவிர்க்க விரும்பும் ஒரு சட்ட வரைவை உருவாக்கும் பொழுதே கூடிய மட்டும் இவை போன்ற பிரச்சினைகள் இல்லாத தெளிவான வரைவாக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இந்த வரைவின் மீது சொல்லப் படும் பிரதான குற்றச்சாட்டுக்கள் சில:
1. லோக்பால் அமைப்பில் யார் யார் இருக்க வேண்டும் என்ற விதிகளிலேயே குழப்பம் உள்ளது. அதன்படி உறுப்பினர்களில் மகசேசே விருது பெற்றவர்களும், நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவழியினரும், பாரத ரத்னா பெற்றவர்களும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. நோபல் பரிசு பெற்றவர்களுக்கும் லோக்பால் அமைப்புக்கும் என்ன சம்பந்தம்? நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் தனக்கு தேவையில்லாமல் இமெயில் அனுப்பும் ஆட்கள் மீதே எரிந்து விழுகிறார். அவர் தன் ஆராய்ச்சியைச் செய்வாரா அல்லது ஊழல் செய்யும் கழிசடைகள் எங்கெங்கு எத்தனை லட்சம் கோடி கொள்ளையடிக்கிறார்கள் என்பதைத் துப்பறிவாரா? அவருக்கு வேற வேலை இல்லை? சந்திரசேகருக்கும், வெங்கட்ராமனுக்கும், குரானாவுக்கும் இதுதான் வேலையா என்ன? ஒரு வேளை நோபல் பரிசு வாங்கிக் கொண்டு வேலை வெட்டியில்லாமல் உட்கார்ந்திருக்கும் காங்கிரஸ் ஜால்ராவும் இடது சாரியுமான அமர்த்யா சென்னை இந்திய அரசியல்வாதிகளைக் கண்காணிக்கும் ஒரு முக்கியமான இடத்தில் கொண்டு வர இந்த வெளிநாட்டுத் தொடர்புள்ள இந்த சிவில் சொசைட்டியினர் என்பவர்கள் அண்ணாவை ஏமாற்றிச் செய்த சதியோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. ஒரு முக்கியமான மசோதாவின் வரைவே இந்த லட்சணத்தில் இருந்தால் இவர்கள் மீது என்ன நம்பிக்கை வரும்? இவர்களின் அறிவு முதிர்ச்சி பற்றிய கேள்வியை இது போன்ற கேனத்தனமான ஆனால் உள்நோக்கம் கொண்ட சிபாரிசுகள் ஏற்படுத்துகின்றன. யார் இந்த சிவில் சொசைட்டியினர்? இவர்கள் பின்ணணி என்ன? இவர்கள் அமைப்பின் சொத்து விபரம் என்ன? இவர்கள் எந்த வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள்? இவர்களுக்கு எந்த நாடுகள் பணம் அனுப்புகின்றன என்பது போன்ற விபரங்களை முதலில் முழுக்க அறிந்த பின்னாலேயே அண்ணா இவர்களை ஆட்டைக்குள் சேர்த்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் நாளைக்கு அவர் பெயர்தான் கெடும். அண்ணா தன்னுடன் மேடையில் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருந்தல் லோக்பால் அமைப்பதை விட முக்கியம், அவசியம்.
அது போல மகசேசே விருது பெற்றவர்கள் இருக்க வேண்டுமாம்? ஏன்? மகசேசே பிலிப்பைன்ஸ்காரர் ஆனால் அந்த விருதை யார் கொடுக்கிறார்கள்? அமெரிக்காவின் பெரும் பணக்கார அமைப்பான ராக்கஃபெல்லர் பவுண்டேஷன். அமெரிக்க விருது பெறும் ஆட்களுக்கும் இந்தியாவில் திருடும் அரசியல்வாதிகளைப் பிடித்து தண்டனை வழங்கப் போகிறவர்களுக்கும் என்ன சம்பந்தம்? மீண்டும் இந்த சிவில் சொசைட்டிக்காரர்கள் உள்ளே வருகிறார்கள். இந்த சிவில் சொசைட்டி அமைப்பின் சில முக்கியமானவர்கள் இந்த ராக்கஃபெல்லர் அமைப்பின் மகசேசே விருது வழங்கப் பட்டிருக்கிறது. கிரண் பேடி என்ற சர்ச்சைக்குரிய போலீஸ்காரரும், சந்தீப் பாண்டே என்ற பயங்கரவாதிகள் மற்றும் நக்சல் ஆதரவாளர்களும் அந்த விருது பெற்ற இரு சிவில் சொசைட்டியினர். நக்சல் இயக்கத்தின் ஆதாரவாளர் இந்திய அரசியல்வாதிகளைத் தண்டிக்கும் இடத்திற்கு வந்தால் நாளைக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மேலும் இவர் பாராளுமன்றத் தாக்குதலை நடத்திய அப்சல் குரு, ஜீலானி ஆகியோரின் விடுதலைக்குப் போராடியவர். ஆக இவரைப் போன்றவர்களை உள்ளே நுழைக்கத்தான் இந்த மகசேசே சிபாரிசே இடம் பெற்றுள்ளது என்பது இந்த ஜன்லோக்பால் அமைப்பினர் மீதான பிராதனக் குற்றச் சாட்டு. இதெல்லாம் அண்ணாவுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. மேலும் இந்த சிவில் சொசைட்டியில் முக்கியமான நபர் சுவாமி அக்னிவேஷ் என்பவர். இவர் துறவியின் வேடத்தில் இருந்தாலும் கூட வல்சன் தம்பு மற்றும் ஹிந்து பத்திரிகையுடன் சேர்ந்து கொண்டு இவர் செய்வதெல்லாம் இந்து மத நலன்களுக்கு எதிரானதே. இப்படி ஒரு கும்பலைத் தன் மேடையில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா போராட்டத்திற்கு ஆதரவு தர வந்த உமா பாரதி போன்றோரை அவமானப் படுத்தித் திருப்பி அனுப்பினார். தேசத் துரோகிகளைத் தன் துணையாக மேடையில் வைத்துக் கொண்டு தேச நலனில் அக்கறைக் கொண்டோர்களை அவமதித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் அரசியல்வாதிகளை விசாரிக்க அமைக்கப் படும் ஒரு சக்திவாய்ந்த அமைப்பின் உறுப்பினர்கள் இந்திய நலனில் அக்கறை கொண்டோராக இருப்பதே முக்கியமே அன்றி வெளிநாட்டு அமைப்புக்களால் விருது கொடுக்கப் பட்டோரும் தேசத் துரோகிகளும் அல்லர். இதை இந்த அமைப்பினர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முதலில் இந்த லோக்பால் அமைப்பில் யார் யார் உறுப்பினராக இருக்கலாம். அவர்கள் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் அவர்களின் தகுதிகள், அவர்களை யார் பதவி விலக்க முடியும், அவர்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று அடையாளம் காணுவது எப்படி என்பது போன்ற முக்கியமான விஷயங்களை அண்ணா சிவில் சொசைட்டி என்னும் அல்லக்கைகளின் உள்கை இல்லாமல் முடிவு செய்து கொள்வது மிக மிக முக்கியமாகும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் கே ஜி பாலகிருஷ்ணன்களும், பி ஜே தாமஸ்களும், தினகரன்களும், நவீன் சாவ்லாக்களும் இந்த அமைப்பிலும் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து விடுவார்கள். முக்கியமாக அரசியல் பழிவாங்கலுக்கு இந்த அமைப்பைப் பயன் படுத்திக் கொள்ளும் அபாயம் உள்ளது. இதில் யார் யார் உறுப்பினர்கள் என்பதில் எதிர்க்கட்சியான பி ஜே பி யின் முடிவையும் கேட்க்க வேண்டியது மிக மிக அவசியம். இன்று சோனியாவின் நிழல் அமைப்பாக உருவாக்கப் படுகிறதோ என்ற சந்தேகத்துக்குள்ளாகும் அமைப்பு பின்னாளில் எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கும் அமைப்பாக மாறி விடக் கூடாது. அண்ணா இந்த விஷயத்தில் உள்நோக்கத்துடன் மகசேசே மற்றும் நோபல்களை சிபாரிசு செய்பவர்களை ஒதுக்கி வைப்பது அவருக்கும் நாட்டுக்கும் நல்லது. மேலும் இந்த வரைவுக் குழுவில் எதிர்கட்சியினர் இடம் பெறாமல் தனது சிவில் சொசைட்டி ஆட்களும் ஊழல் சோனியா காங்கிரஸின் ஊழல் மந்திரிகளும் மட்டும் உறுப்பினர்களாக இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அது பின்னாளில் இந்த வரைவு சட்டமாக்க்க ஓட்டெடுப்புக்குப் போகும் பொழுதும் விவாதத்தின் பொழுதும் கடும் சிக்கலை சந்திக்க நேரிடும். ஆகவே இப்பொழுதே அண்ணா பிரதான எதிர்க்கட்சியினரையும் இந்தக் குழுவில் சேர்க்க வேண்டும். அப்படி அவர்களை விலக்கி வைத்து விட்டு வெறும் சிவில் சொசைட்டியினரும் ஊழல் சோனியாவின் அல்லக்கைகளும் மட்டுமே சேர்ந்து ஒரு குழு அமைப்பது இவர்களின் நோக்கங்களை சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.
2. இவர்கள் மீது வைக்கப் பட்டுள்ள அடுத்த குற்றசாட்டு இவர்கள் இந்தியாவின் சட்டப் படி தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் அமைப்பின் உரிமையில் குறுக்கிடுகிறார்கள் என்பதாகும். அது செல்லாத ஒன்று. இது நாள் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பாராளுமன்றம் யாருக்கும் கட்டுப்படாமல் எந்த வித ஊழல்களையும் எவரது கண்காணிப்பும் இன்றி செயல் பட்டு பல லட்சம் கோடி ரூபாய்களைக் கொள்ளயடித்ததினாலும், அவர்களை ஒரு சட்டத்திற்குள் அடைத்துக் கொள்ள மறுப்பதினாலுமே இது போன்ற போராட்டங்கள் எழுகின்றன. அவர்கள் செய்யா விட்டால் அவர்களை மக்கள் செய்ய வைக்க வேண்டும், ஆகவே இந்தப் போராட்டக் குழுவினர் சட்டம் உருவாக்குவதைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டதற்கு அவர்களைக் குறை சொல்ல முடியாது. அரசியல்வாதிகளும் ஆளும் கட்சியுமே பொறுப்பு.
அண்ணா ஹசரேயின் குழுவினர் லோக்பால் அமைப்பிறு விசாரணை செய்யும் தண்டனை அளிக்கும் போலீஸ் அதிகாரம் கேட்ப்பதும் நியாயமான ஒன்றே. அப்படியாகப் பட்ட அதிகாரம் இந்த அமைப்புக்குக் கிடைக்கா விட்டால் இந்த அமைப்பு உருவாவதில் எந்தவித அர்த்தமும் இல்லாமல் போய் விடும். சி பி ஐ யின் ஊழல் விசாரிப்புப் பிரிவும் தேவைப்பட்டால் சிறப்புக் குழுவும் இதன் கீழ் வர வேண்டும். மேலும் இந்த அமைப்பு குற்றம் சாட்டும் அரசியல்வாதிகளை விசாரிக்க ஒரு சிறப்பு விரைவு நீதி மன்றமும் இந்த அமைப்பின் கீழ் வர வேண்டும். பிரதமரும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும் கூட இந்த அமைப்பின் எல்லைக்குள் வர வேண்டும். அப்படிப் பட்ட சர்வ வல்லமையுள்ள ஒரு அமைப்பாக இது உருவாகும் பொழுது இந்த அமைப்பினர் தவறு செய்தால் இவர்களை யார் விசாரிப்பது தட்டிக் கேட்ப்பது இதில் உள்ள செக் அண்ட் பாலன்ஸ் என்ன என்பது பற்றியும் மிகத் தெளிவான வழிமுறைகள் வகுக்கப் பட வேண்டும். கே ஜி பாலகிருஷ்ணன், ராமசாமி, தினகரன் போன்ற ஊழல் கறை படிந்த நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளாக ஊடுருவ முடிவதால் கருணாநிதி போன்றவர்கள் நியமிக்கும் பொறுக்கிகளும் ரவுடிகளும் அடியாட்களும் கூட அடியாட்கள் சுப்ரீம் கோர்ட் வரை நீதிபதியாக வந்து விட முடிவதால் நீதிபதிகளை விசாரிக்கும் முழு உரிமை இந்த ஜன் லோக்பால் அமைப்பிற்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை அமைப்பதில் பயனேதும் இல்லை.
அண்ணாவின் போராட்டம் நோய் முற்றிய நிலையில் செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சையினை நடத்தச் சொல்லி நடத்தப் படும் போராட்டமாகும். ஆனால் இந்தியாவின் தேவை இன்னும் பல ஆயிரம் அண்ணா ஹசரேக்கள். ஊழலின் ஊற்றுக் கண்களை அடைக்க அவர்கள் போராட வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் கொணரப் போராட வேண்டும். அரசாங்கத்தின் எந்த பிரிவிலும் எந்தவொரு லஞ்சத்திற்கும் சாத்தியமேயில்லாத சீர்திருத்தங்களைக் கொணரப் போராட வேண்டும் அதற்கு இன்னும் ஆயிரம் தலைமைகளும் அவர்களுக்கு நமது ஆதரவும் வேண்டும். ஆனால் அத்தகையப் போராட்டங்களில் சுயநலமிகளும் தேசத் துரோகிகளும் புகுந்து விடாமல் தடுக்க வேண்டிய கடமைகள் அண்ணா போன்றவர்களிடம் உண்டு. குறைகளை நீக்க வேண்டும்,. சந்தேகத்திற்கிடமானவர்களைத் தவிர்க்க வேண்டும். இரண்டும் அண்ணா உடனடியாகச் செய்ய வேண்டியவை.
இனி அண்ணாவின் போராட்டம் குறித்து ஏற்பட்டுள்ள முக்கியமான சில சந்தேகங்கள்:
1. இந்தப் போராட்டத்தை சோனியாவின் ஆதரவாளர்களும், சில என் ஜி ஓ அமைப்புகளும் திட்டமிட்டே தங்களுக்கு ஆதரவான ஒரு லோக்பால் அமைப்பை உருவாக்கிக் கொண்டு வேண்டாத அரசியல்வாதிகளை ஒழிக்கப் போடும் சதி என்றும் அதில் அண்ணாவைத் தந்திரமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள் என்பதுமாகும். சரத் பவாரை ஊழல்வாதி என்றும் அவர் விலக வேண்டும் என்று குற்றம் சாட்டிய அதே அண்ணா ஹசாரே சோனியாவை தலமை ஏற்றுக் கொள்ள அழைத்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். சரத்பவாரை விட பல்லாயிரம் மடங்கு மோசமான கொள்ளைக்காரியான சோனியாவை அண்ணா அங்கீகரிப்பதும் குழுவுக்குத் தலமையேற்கச் சொன்னதும் அவர் மீதும் இந்தப் போராட்டத்தின் மீதும் கடும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. சோனியா ஏற்கனவே நேஷனல் அட்வைசரி கவுன்சில் என்றொரு அமைப்பை ஏற்படுத்தி மன்மோகன் சிங்கின் அரசுக்குப் போட்டியாக ஒரு பாரலெல் அரசாங்கத்தை நடத்தி வருகிறார். அந்த அமைப்புக்கு இன்னும் அதிகாரம் வேண்டும் என்றும் சோனியாவின் அந்த அமைப்பு இந்த லோக்பால் சட்டத்தில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அண்ணா கோருவது இது சோனியாவிற்கு ஆதரவான ஒரு சூழலை அமைப்பைத் தோற்றுவிக்கும் சதித்திட்டமோ என்ற சந்தேகத்தை கடுமையாக ஏற்படுத்துகிறது. இதை விலக்க வேண்டியது அண்ணாவின் உடனடியான கடமையாகும்.
2. இது சோனியாவுக்கும் ஏற்கனவே நடக்கும் சோனியா காங்கிரஸின் மெகா ஊழல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தி சோனியாவுக்கு புனித அந்தஸ்தை உருவாக்கும் ஒரு சதியாகவும் சிலரால் சந்தேகிக்கப் படுகிறது. சரத் பவார் ஊழல்வாதி என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் சொல்லும் அதே அண்ணா சோனியா என்று வரும் பொழுது தன் கண்களை மூடிக் கொள்வது முரணாக உள்ளது. சோனியா ஏற்கனவே தன் நண்பர் குவட்ரோச்சியை போஃபோர்ஸ் வழக்கில் இருந்து தன் செல்வாக்கைப் பயன் படுத்தி சி பி ஐ யின் கைகளை முறுக்கி தலையிட்டு விடுதலை செய்ய்ய வைத்துள்ளது மாபெரும் குற்றமாகும். ஹசன் அலி என்னும் குதிரை வியாபாரியிடம் எப்படி 8 பில்லியன் டாலர்கள் வந்தது அது யார் பணம் என்பதை விசாரிக்க சோனியா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ஹசன் அலியை சோனியாவின் உதவியாளர்கள் அடிக்கடி சந்தித்தும் வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த பிறகும் கூட சோனியா ஹசன் அலியை விசாரிக்க விடாமல் தடுத்து வருகிறார். ஸ்விஸ் வங்கியில் சோனியா மற்றும் ராகுலின் கணக்குகளை வெளியிட சோனியாவின் அடியாள் பிரணாப் பிடிவாதமாக மறுத்து வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியாவின் சகோதரிகளுக்கும் மருமகனான ராபர்ன் வடோராவுக்கும் தொடர்பு இருப்பதாக மன்மோகனிடம் குற்றசாட்டு வைக்கப் பட்ட பின்பும் அதை சி பி ஐ விசாரிக்க மறுத்து வருகிறது. இப்படி இன்னும் பல்லாயிரம் குற்றசாட்டுக்களும் பல கோடி கோடி ரூபாய்கள் கொள்ளையடித்த ஒரு சோனியாவை அண்ணாவும் சிவில் சொசைட்டியும் அங்கீகரிப்பது ஏன் என்ற சந்தேகமும் இந்தப் போராட்ட அமைப்பின் மீது எழுப்பப் படுகிறது? இதற்கும் தெளிவான பதிலை அண்ணா பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அண்ணா மட்டும் துயவராக இருந்து பயனில்லை. அவர் யாருடன் சேர்ந்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறாரோ அவர்களது பின்ணணிகளும் சொத்து விபரமும் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் அது சிவில் சொசைட்டியா அன்சிவில் சொசைட்டியா என்பது தெரியாமல் போய் விடும்.
3. இதே போல ஊழலை எதிர்த்து இந்தியா முழுவதும் இயக்கம் நடத்திய சுவாமி பாபா ராம்தேவ் அவர்களின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்த நம் ஆங்கில மீடியாக்கள் அண்ணா ஹசராவின் போராட்டத்திற்கு மட்டும் ஒளி வட்டம் பாய்ச்சி விளம்பரம் அளித்து அதை நாடு தழுவிய ஒரு போராட்டமாக மாற்றியதும் கடும் சந்தேகத்திற்கு உள்ளாகிறது.
2008ம் வருடம் நவம்பர் 26ம் தேதியை நாம் மறந்திருக்க முடியாது. இந்தியா மீது ஒரு அறிவிக்கப் படாத யுத்தத்தை பாக்கிஸ்தான் தனது பயங்கரவாதிகள் மூலமாக நிகழ்த்திய பயங்கரமான நாள். அன்று நாடு முழுவதும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலவீனமான மக்களைப் பாதுகாக்க முடியாத கையாலாகத மன்மோகன் அரசு மீதும் அப்பொழுது இருந்த உள்துறை மந்திரி மீதும் இந்திய மக்களிடம் கடுமையான ஒரு ஆத்திரமும், கோபமும், விரக்தியும் எழும்பியது. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் இஸ்லாமிய ஓட்டு வங்கியை இழந்து விடுவோம் என்ற ஓட்டுக் கணக்கின் காரணமாக ஆளும் சோனியா காங்கிரசும் மனசாட்சியும் முதுகெலும்பும் இல்லாத மன்மோகன் சிங்கும் பொட்டா சட்டத்தை விலக்கினார்கள், அப்சல் குரு போன்ற பயங்கரவாதிகளைத் தூக்கில் போடாமல் காலம் தாழ்த்தினார்கள். ஆஸ்த்ரேலியாவில் கைது செய்யப் பட்ட பொழுது தன் தூக்கத்தை இழந்ததாக ஒப்பாரி வைத்தார் மன்மோகன். பயங்கரவாதிகளை காங்கிரஸ் மந்திரிகள் பாதுகாத்தார்கள் அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்தார்கள் விளைவு மும்பாய் தாக்குதல். உடனே மக்களின் எதிர்ப்புணர்வும் கோபமும் ஆளும் கட்சியின் மீது திரும்பி விடக் கூடாது என்பதற்காக மிகத் தந்திரமாகத் திட்டமிட்டு ஆளும் சோனியா காங்கிரஸானது தனது மீடியா பலத்தினால் பிரச்சாரத்தை டி விக்களில் முடுக்கி விட்டது. அரசியல்வாதிகள் பொத்தாம் பொதுவாகத் திட்டப் பட்டார்கள். மக்களின் கோபம் அனைத்தும் பி ஜே பி மீது திருப்பி விடும் பிரச்சாரம் மீண்டும் மீண்டும் இந்த மோசடிக்காரர்களினால் திட்டமிட்டு நடத்தப் பட்டது. மூளைச் சலவை செய்யப் பட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் மெழுகு வர்த்தி ஏந்திக் கொண்டு பிரார்த்தனைச் செய்தார்கள். தாக்குதலுக்கு எந்த விதத்திலும் ஆளும் காங்கிரஸ் காரணமல்ல என்றும் எதிர்க் கட்சியான பி ஜே பியின் மதவாதப் போக்கு மட்டுமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று மீண்டும் மீண்டும் போதனை செய்யப் பட்டு மக்கள் மூளைச் சலவை செய்யப் பட்டார்கள். எந்த சோனியா காங்கிரஸ் அந்தத் தாக்குதல்களுக்கு காரணமாக இருந்ததோ எந்த மன்மோகன் அரசு மக்களைக் காப்பாற்ற வக்கில்லாமல் இருந்ததோ அதே சோனியா காங்கிரசுக்கு அதே மும்பையின் மூளை கெட்ட மக்கள் மீண்டும் ஓட்டுப் போட்டார்கள். ஆயிரம் மெழுகு வர்த்திகள் ஏற்றி ஊர்வலம் போய் என்ன பயன்? மீண்டும் அதே பாதகர்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்தைச் செய்தனர் மெழுகுவர்த்தி வாலாக்கள். இப்பொழுது அதே மூளைகெட்ட ஜனங்கள் அதே மீடியாவினாலும் அதே சர்தேசாய் கும்பலினாலும் மீண்டும் ஒரு முறை தூண்டப் பட்டு மெழுகு வர்த்தி ஏற்றிக் கொண்டு ஊர்வலம் கிளம்பி விட்டார்கள் அடுத்த முறை ஊழல் சோனியாவின் அரசைத் தொடர வைக்க.
அண்ணாவின் போராட்டமும் கூட மூளை மழுங்கடிக்கப் பட்ட மூளைச் சலவை செய்யப் பட்ட மக்களை உருவாக்குவதை நோக்கியே நகர்த்தப் படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அது தெரியாமல் சதிகாரர்களின் கைப்பாவையாக தன்னையறியாமலேயே அண்ணா மாறிக் கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. அதிர்ச்சி அடையாதீர்கள் உண்மை கற்பனையை விட வினோதமானதுதான். ஊழல் சோனியா அரசை எதிர்த்தப் போராட்டம் எப்படி அவர்களுக்கே ஆதரவாகத் திரும்பும் என்கிறீர்களா? எப்படி பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான அரசின் மீது வெளிபப்ட்டிருக்க வேண்டிய கோபம் அவர்களுக்கு ஆதரவாகத் திருப்பப் பட்டதோ அதே போலவே இன்று ஆளும் காங்கிரஸின் ஊழல்களுக்கு எதிரான போராட்டம் அவர்களுக்கு ஆதரவாக மக்களைத் திசை திருப்பும் ஒரு சதித் திட்டமாக மாறி வருகிறதோ என்ற ஒரு அச்சம் ஒரு பெரும் சந்தேகம் அண்ணாவின் போராட்டம் மீது உருவாகின்றன. காரணம்?
இதைப் போலவே அறிவிக்கப் பட்ட ஊழலுக்கு எதிரான பாபா ராம்தேவ் அவர்களின் போராட்டத்திற்கு அளிக்காத ஆதரவை காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் அளித்து வருவதும், இந்த போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் சுவாமி அக்னிவேஷ் போன்றவர்களும் இந்தப் போராட்டம் ஒரு வேளை காங்கிரஸின் மீதான மக்களின் கோபத்தைத் திசை திருப்ப ஒரு சதி நடக்கிறதோ என்ற ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. மீண்டும் மீண்டும் ஊடகங்களும் மக்களும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள் என்று சொல்லவும் நம்பவும் வைக்கப் படுகிறார்களே அன்றி யார் அந்த அரசியல்வாதிகள் என்பதை அண்ணாவும் சரி, ராஜ்தீப், பர்க்காதத் போன்ற சோனியாவின் எடுபிடிகளும் சொல்லுவதேயில்லை. இங்கு ஊழல் அரசியல்வாதிகள் என்பது தெள்ளத் தெளிவாக சோனியாவின் காங்கிரசையும், மன்மோகனின் அரசையும் மட்டுமே வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கப் பட வேண்டும்.
எகிப்து, டுனிஷியா, லிபியா, ஏமன், பஹ்ரைன் பாணியில் இந்தியாவிலும் ஒரு உள்நாட்டுக் கிளர்ச்சியைத் துவக்குவது சாத்தியமா? அப்படித் துவக்கினால் சோனியா காங்கிரசுக்கு ஆதரவாக அதை மாற்ற முடியுமா? மீடியாக்களின் பிரச்சாரத் துணைக் கொண்டு மக்களின் மூளைகளை மழுங்கடித்து ஒரு மாஸ் ஹிஸ்டீரீயாவை உருவாக்கி சோனியாவைப் புனிதப் பிம்பமாக உருவாக்கி இந்தியாவை நிரந்தரமாக அடிமைப்படுத்த முடியுமா என்பதைச் சோதித்த ஒரு முயற்சியாக மீடியாக்களினால் உருவாக்கப் பட்ட ஒரு போராட்டமாக இதைக் காண்பவர்களும் உள்ளார்கள். அந்த ஐயங்களை நாம் உதாசீனப் படுத்தவும் நடை பெறும் சம்பவங்களைப் பார்க்கும் பொழுது முடியவில்லை.
அண்ணாவும், ஊடகங்களும் தெளிவாக இது ஆளும் காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் ஊழலின் ஊற்றுக் கண் காங்கிரசே என்பதை உறுதிப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? ஏதோ ஊர் பேர் தெரியாத அரசியல்வாதிகள் மட்டுமே இந்த லோக்பால் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பது மாதிரியான ஒரு பிம்பம் திட்டமிட்டு கட்டமைத்து எழுப்பப் பட்டு வருகிறது. சோனியாவையும், மன்மோகனையும், சிதம்பரத்தையும், பிரணாப்பையும், ராஜாவையும் மறைத்து விட்டு சோளக்காட்டு பொம்மை போல அரசியல்வாதி என்றொரு முகம் தெரியாத எதிரியை திட்டமிட்டு நிறுத்த முயல்கிறார்கள். இதற்கு தன்னையும் அறியாமலேயே இடம் கொடுக்க்கிறார் அண்ணா. மக்களிடம் இது நாள் வரை சோனியாவின் மன்மோகனின் ஊழல் அரசை பொங்கிக் கொண்டிருந்த ஆத்திரமும் கோபமும் திட்டமிட்டு முகம் தெரியாத அரசியல்வாதி என்னும் வில்லனின் மீது திருப்பப் படுகிறது. அதற்கு அண்ணா ஒரு கைப்பாவையாகக் கிட்டுகிறார். ஆம் மும்பைத் தாக்குதலின் பொழுது எப்படி மக்கள் மூளை மழுங்கடிக்கப் பட்டு ஒட்டு மொத்தமாக அரசியல்வாதிகளை எதிர்த்து கேண்டில் லைட் விஜில் நடத்தினார்களோ அதே முட்டாள்த்தனத்தை மீண்டும் ஒரு முறை செய்யத் தூண்டப் பட்டிருக்கிறார்கள். வெளிப்பார்வைக்கு இது ஊழலை எதிர்த்து மக்களிடம் தோன்றிய ஒரு எழுச்சியாகத் தோற்றமளித்தாலும் இறுதியில் ஆளும் காங்கிரஸ் மீதான வெறுப்பை திசை திருப்பும் ஒரு முயற்சியாகவே திட்டமிடப் பட்ட ஒரு சதித்திட்டமாகவே தெரிகிறது.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்திராவுக்கு எதிராக தன் புரட்சியை ஆரம்பித்த பொழுது அதற்கு ஆதரவு அளித்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தே போராடினார். எந்த எதிர்க்கட்சியையும் தீண்டத் தகாத கட்சியாக கருதி அவர்களை அவமானப் படுத்தி துரத்தி விடவில்லை. மாறாக இன்று பி ஜே பி கருப்புப் பணத்தை மீட்க உறுதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. மன்மோகனின் அரசு போல இல்லாமல் ஜன் லோக்பால் வரவை சட்டமாகக் கொணர முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. மன்மோகனும் காங்கிரஸ் கட்சியும் அதை ஏற்கவே மறுக்கின்றனர். ஆனால் இந்தப் போராட்டத்தில் பி ஜே பிக்கு இடமில்லை என்று சொல்லி அவர்களை அவமானப் படுத்தித் துரத்தி அடிக்கிறார் அண்ணா. ஆனால் இந்த ஊழல்களின் அன்னையான சோனியாவின் அமைப்பை பாராட்டுகிறார். சோனியா ஊழலுக்கு அப்பாற்பட்ட புனிதர் என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார். இறுதியில் ஒரு வித சமரசப் படுத்தப் பட்ட லோக்பால் சட்டம் அமுலாக்கும் பொழுது அனைத்துமே புனித அன்னை சோனியாவின் அருளால் மட்டுமே நிறைவேற்றப் பட்டது ஊழலை ஒழித்த கட்சி காங்கிரஸ் மட்டுமே என்ற பெயர் ஏற்படுத்த நடக்கும் சதித் திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகமும் அண்ணாவின் ஒரு சில நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் தன் போராட்டத்தை அறிவித்த பொழுது அது இந்திராகாந்தியின் அடக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டம் என்பதையும் இந்திராகாந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியுமே எதிரிகள் என்பதைத் தெளிவாக உணர்த்தினார். இந்திராவின் எந்த நடவடிக்கைகளையுமே அவர் ஆதரிக்கவில்லை பாராட்டவில்லை. இருபது அம்சத் திட்டம் போன்ற மோசடிகளை அவர் அங்கீகரிக்கவில்லை. தன் பின்னால் தன் போராட்டத்தினை ஆதரிக்கும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்தார். மாறாக அண்ணா தனக்குப் பின்னால் சந்தேகமான காங்கிரஸ் ஆதரவு போக்கு கொண்டவர்களைக் கொண்டுள்ளார். சோனியாவின் என் ஏ சி மற்றும் என் ஆர் இ ஜி ஏ போன்ற திட்டங்களை ஆதரிக்கிறார். ஆளும் காங்கிரஸ் கட்சியும் அதன் தலமையும் அதன் பிரதமருமே ஊழலின் ஊற்றுக்கண் இந்த தேசத்தின் எதிரிகள், நாட்டைப் பாழாக்கும் அயோக்கியர்கள் என்பதைத் தெளிவாக வரையறுக்க மறுக்கிறார். பொத்தாம் பொதுவாக அரசியல்வாதிகளைக் குற்றம் சாட்டுகிறார். கண் முன்னால் ஸ்பெக்ட்ரமும், காமென் வெல்த் விளையாட்டு ஊழலும், ஹசன் அலி ஊழல்களும் நிறைந்திருக்க அவர்களையெல்லாம் குற்றம் சாட்டாமல் அரசியல்வாதிகள் என்னும் நிழலை மட்டுமே ஊழல்வாதிகளாகச் சித்தரிக்கிறார். அப்படியானல் நாளைக்கு ஊழலை எதிர்க்கிறேன் என்று கல்மாடியும், ராஜாவும், மன்மோகனும் கூட இவருடன் உண்ணாவிரதம் இருக்கலாம் மெழுகுவர்த்தி ஏற்றலாம்.
எதிர்க்கட்சியினரைத் துரத்திய அதே அண்ணா கூட்டுக் குழுவின் தலைவராக கருப்புப் பண ஊழலை மறைக்கும் பிரணாப் முகர்ஜியையும், ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடக்கவில்லை, ஜீரோ லாஸ் என்று சாதித்த கபில் சிபலையும் ஏற்றுக் கொள்கிறார். மாறாக அந்தக் குழுவில் பா ஜ க முற்றிலும் தவிர்க்கப் படுகிறது
அண்ணா ஹசாரே அவர்களின் நோக்கமும் போராட்டமும் தூய்மையானவையாகவே உயர்ந்த நோக்கம் கொண்டவையாகவே இருக்கலாம். ஆனால் அவரை இயக்கும் சிவில் சொசைட்டி அமைப்பினர் மீதும் அவருக்கு விளம்பரம் கொடுக்கும் மீடியாக்கள் மீதும் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்க வேண்டிய கடமை நாம் நம்பி ஆதரிக்கும் அண்ணா அவர்களுக்கு இருக்கிறது.
அண்ணா ஹசாரே துவங்கியுள்ள இந்தப் போராட்டம் அவர் வாழ்நாளில் ஏன் நம் அனைவரின் வாழ்நாளுக்குள்ளாகவாவது ஒரு முடிவை அடையுமா என்பதைச் சொல்ல முடியாது. இருந்தாலும் நாட்டைக் கொள்ளையடித்து வரும் அரசியல்வாதிகளை விசாரிக்க ஒரு சக்தி வாய்ந்த, அதிகாரம் உள்ள நேர்மையான அமைப்பு உருவாக வேண்டும் என்ற அண்ணாவின் கோரிக்கையையும் போராட்டத்தையும் நாட்டின் நலம் விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் ஆதரிக்க வேண்டும். நம் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி நாமும் அரசை இந்த விஷயத்தில் வற்புறுத்த வேண்டியது மிக மிக அவசியம். ஆனால் அதே நேரத்தில் ஒரு காந்தியவாதியின் நேர்மையைப் பயன் படுத்தி அவரைக் கைப்பாவையாக வைத்துக் கொண்டு இந்தியாவின் நலன்களுக்கு எதிரான அமைப்புகள் இந்தப் போராட்டத்தினை தங்கள் சுயநலன்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளாத வண்ணம் நாம் எச்சரிக்கையாக இருத்தலும் அவசியம். இந்தப் போராட்டம் சோனியாவைப் புனிதப் படுத்துவதற்காகவோ, வெளிநாட்டு அமைப்புகளின் நலன்களுக்காகவோ செயல் படுமானால் அதில் இருந்து அண்ணாவை மீட்க்கவும் நாட்டை மீட்க்கவும் நாம் விழிப்புணர்வுடன் இருத்தலும் அவசியம். அண்ணாவையும் அவரது சிவில் சொசைட்டியினரையும் நாம் தாராளமாக நம்பலாம் ஆனால் அதே சமயத்தில் நாம் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் பரிசோதிப்பதும் கூட அதை விட அவசியமானதாகும். டிரஸ்ட் பட் வெரிஃபை என்று ரீகன் சொன்னதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்
மீடியாக்களினால் தூண்டப் பட்டு எதைப் பற்றியும் ஆராயாமல் கண்களை மூடிக் கொண்டு நான் ஊழலை எதிர்க்கிறேன் என்று முட்டாள்த்தனமான நம் நவநாகரீக இளைனஞர்களைப் போல மூளையை அடகு வைத்து விட்டுக் கிளம்பாமல் எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அதைக் கடவுளே வந்து நடத்தினாலும் கூட அதன் உள்நோக்கங்களை, விளைவுகளைப் புரிந்து கொண்டு ஆதரிப்பதும் அவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்ப்பதும் நமது விழிப்புணர்வுள்ள உரிமையாக இருக்கட்டும். அடுத்த முறை தொலைகாட்சியைப் பார்த்து விட்டு மெழுகுவர்த்திகளைத் தேடி ஓடும் முன்னால் ஒரு நிமிடம் சிந்தித்து விட்டுப் புறப்படுங்கள். ஊழல் அரசியல்வாதிகளைத் தண்டிக்க அமைப்பும் சட்டமும் கோரும் அண்ணாவை ஆதரித்து மெழுகுவர்த்தி ஏற்றக் கிளம்பும் முன்னால் நாம் அனைவரும் அவசியம் செய்ய வேண்டிய மிக மிக அவசியமான மிக மிக முக்கியமான ஒரு கடமை நாளைக்கு நம்மை எதிர் நோக்கியுள்ளது. முதலில் அந்தக் கடமையை நாம் செய்வோமாக. அந்தக் கடமையைச் செய்து முடிப்பது மெழுவர்த்தி ஏற்றுவதை விட மிக முக்கியமானது.
அந்தக் கடமை நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் நமது வாக்குரிமையை அழிவு கொள்ளைத் கொலைத் தீமைக் கழகங்களான தி மு கவின் குடும்ப மாஃபியா மற்றும் சோனியாவின் இண்ட்டர்நேஷனல் மாஃபியாவை எதிர்த்து நமது வாக்குகளைப் பதிவு செய்வோமாக. கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் தேசத் துரோகிகளையும் நாம் இந்தத் தேர்தலில் அழிப்போம். சிறு திருடர்களையும் பிக்பாக்கெட்காரர்களையும் நாம் சமாளித்துக் கொள்ளலாம் ஆனால் இந்தக் கொலைகார நாசகாரக் கும்பலை இந்தத் தேர்தலில் நாம் அப்புறப் படுத்தா விட்டால் நாம் நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் கடுமையான துரோகத்தைச் செய்தவர்களாவோம். நாசகார சக்திகளை அகற்ற உங்களது ஓட்டுரிமையை நாளைக்குத் தவறாமல் பயன் படுத்துங்கள். மறந்து விடாதீர்கள்.
விஸ்வாமித்ரா
எல்லோரும் உங்கள் மனசாட்சி படி நாளை ஓட்டு போடுங்கள். அது முக்கியம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, April 12, 2011
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் (பாகம் -2)- விஸ்வாமித்ரா
Posted by IdlyVadai at 4/12/2011 12:56:00 PM
Labels: அரசியல், விஸ்வாமித்ரா
Subscribe to:
Post Comments (Atom)











30 Comments:
லோக்பால் மசோதா இப்படி இருக்க வேண்டும் என நிர்பந்திக்கலாம். ஆனால் மசோதா கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியே ஆக வேண்டும் என எப்படி நிர்பந்திப்பது ; இந்த சங்கதி அண்ணாவுக்கு புரிந்திருக்குமா
அண்ணாவின் உண்ணாவிரதம் ஒரு டிராமா என்பதை சீக்கிரமே புரிந்து கொண்டுவிடுவோம்
Too lo..........................ng post!
i will read it later at leisure!
இது இட்லிவடை தளம் தானா! பதிவை படித்தால் வினவு தளத்தை படித்தது போன்ற ஒரு எபஃக்ட் :-) கண்ணை கட்டுகிறது
you may also like to read this
http://kafila.org/2011/04/09/at-the-risk-of-heresy-why-i-am-not-celebrating-with-anna-hazare/
நீட்ட்ட்ட்ட்ட்ட்டி முழக்கி, படு மொக்கையான கட்டுரை, 2 பத்தி படிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது...!!
இட்லிவடை வினவு தளத்தில் வேலை செய்யும் ஆட்களையெல்லாம் வைத்து கட்டுரை எழுதாமலிருந்தால் நல்லது. அய்யா சாமி, நீங்க இருக்கிற திசை நோக்கி கோடி கும்புடு
உமாபாரதி தேச நலன் வேண்டுபவராம்...!! வாழ்க உமது சான்றிதழ்...
அப்போ, அந்த போராட்டத்தில் பங்கு பெற்ற சில நூறு இளைஞர்கள், உண்ணாவிரதமிருந்த பெங்களூரை சேர்ந்த இளைஞர்களெல்லாம் தேசத் துரோகிகளா?
This article looks like a well researched article, but unfortunately its not.
"அதன்படி உறுப்பினர்களில் மகசேசே விருது பெற்றவர்களும், நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவழியினரும், பாரத ரத்னா பெற்றவர்களும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது"
Where? This is what I see from the draft:
"4. A selection committee consisting of the following shall be set up:
a. Two senior most judges of Supreme Court
b. Two senior most Chief Justices of High Courts.
c. All Nobel Laureates of Indian Origin
d. Last three Magsaysay Award winners
e. Comptroller and Auditor General of India
f. Chief Election Commissioner
g. After the first set of selection process, the outgoing members and Chairperson of Lokpal."
So all these form the committee to select the members - they are not members themselves. This diversity of the committee ensure that the committee is not driven by a single person/group.
Most of the other points are also baseless like this. Lokpal bill is not 200% right, but its not as bad as this article says.
Didn't expect to see this on idlyvadai :-(
அண்ணா செக்குலர்களால் “ஹை ஜாக்” செய்யப்பட்டது போலத் தோன்றுகிறது.
அ. நாமதேயன்
நம்மூர்ல “தல” திருந்திட்டாராம்...
அவரே நேத்து ஒரு மீட்டிங்ல சொன்னாரு...
பெரீஈஈஈய கட்டுரை
Though this article by Viswamithra tries to be alarming - he states his reasons by quoting 26/11 and aftermath - I do have hope in the members of the drafting committee from the non-Govt. side particularly Karnataka's Lok Ayukta Justice Santosh Hegde ex-Justice of SC), Mr. Shanti Bhushan (former Law Minister), who drafted & tabled the Lok Pal Bill for the first time in Parliament 40 years ago and his son and Advocate Mr. Prashath Bhushan, who is the one who is arguing in SC and brought the 2G Scam probe under the SC monitoring - apart from Mr. Anna Hazare himself & Mr. Kezriwal. I have confidence all these people can't be brow-beaten or "seduced" (so to say) to toe the official (read Sonia) line.
Nice article, read these columns as well:
http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1721
http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1723
vote poda solli manmohansingai yarum canvas pannliya....nadu vilngum...valgha jannaygham..
விஸ்வாமித்ரரின் கருத்துக்கள் மிகவும் பாராட்டத்தக்கது. அவரது கோபமும், சந்தேகங்களும் சரியானவையே. ஜனங்கள் எப்போதுமே ஆட்டு மந்தைக் கூட்டம்தான். யாரும் சிந்திப்பதே கிடையாது. ட்வீட்களும், மீடியாவும் இந்த ஹசாரே போராட்டத்தினால் நாட்டுக்கே விடிவு காலம் வந்துவிடப் போகிறது என்ற ரீதியில் பிரச்சாரம் செய்தன. அத்தகைய மாற்றம் வர எவ்வளவு நேர்மையானவர்கள் தமது வேலையை விட்டுவிட்டு பல வருடங்கள் போராட வேண்டும் தெரியுமா! சுகம் விரும்பிகளாய் போன இந்தியர்கள் இதற்கு முன்வருவார்களா என்ன?
இதனால் frustrate ஆகித்தான் க்ருஷ்ணபாகவதர் பேசாமல் ஏதாவது ஒரு திருட்டு கும்பலிடம் சாவியைக் கொடு என்று எழுதினார் போலிருக்கு.
எப்போது அமெரிக்க மெட்டீரியலிசம் நம் சொசைட்டியில் ஆழப் பதிந்து விட்டதோ, இனி ஆண்டவனே வந்தாலும் இந்த நிலமையை மாற்றமுடியாது
Welcome to India!
It looks like Congress' conspiracy. Otherwise media will not support this to this much
அண்ணா செக்குலர்களால் “ஹை ஜாக்” செய்யப்பட்டது போலத் தோன்றுகிறது.
repeat!!!
Part I takes Anna to the top of Everest and Part II pushes him down to the bottom. What happened in between? Only because BJP is not in the panel, Annas effort looks fruitless, otherwise it will turn the entire nation upside down.Great... The proven fact is that our set up so strong, that it can swallow hundreds of Anna in one
stroke.Look at the people supporting Anna ..Amirkhan Pappu Yadhav the great...At least from now onwards let Amirkhan pay his taxes honestly. that itself will be a great service to the nation.
IV,
please stop this kind of nonsense articles
payankara mokkai post.
viswamithraa..
oru
kadi "kosu"vaamithraa
படிக்க ஆள் இருக்காங்க என்பதற்காக ....எனக்கு நல்ல எழுத வரும் என்பதை நிருபிக்க இது போன்ற அரைகுறை செய்தியை எழுதுவது நல்லது இல்லை!
Anna Hazare ji , பற்றி நீங்கள் எழுதும் போது எந்த கலப்படம் இல்லாத செய்தியாக இருக்க வேண்டும். உங்கள் கற்பன்னை கதை அல்லது வலத்தை சேர்த்து விடவேண்டாம் ! எனக்கு இட்லி வடை blog மீது மிகுந்த மரியாதை உண்டு ...:) அதை கெடுக்கும் வகையில் உங்கள் பதிவு இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் ...:)
ஜனலோக்பால் அமைப்பு உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒருவராவது இடம் பெறுதல் நல்லது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக எண்ணிக்கை வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு எம் பி - அல்லது மாநில அளவில் வோட்டு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்ற ஒரு கட்சி சாராத பிரதிநிதியை உறுப்பினர் ஆக்கலாம்.
சட்ட முன் வரைவு இறுதி வடிவம் பெற்றவுடன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல், இதை சட்டமாக்கலாமா அல்லது வேண்டாமா என்று நாடு தழுவிய வோட்டெடுப்பு நடத்தலாம். டும் - டாம் வாக்கெடுப்பு. டும் என்றால் சட்டமாக்கப் படவேண்டும். டாம் என்றால் - சட்ட முன்வரைவில் மாற்றங்கள் செய்து மறு வாக்குப் பதிவு. இந்த வகையில், மக்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற வகையில் ஊழல் எதிர்ப்பு சட்டம் கொண்டு வரலாம்.
இந்த சட்டத்தில் இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம் என்று ஒரு அம்சமும் சேர்க்கப் படவேண்டும். அப்பொழுதுதான் கால மாற்றங்களுக்கு ஒத்துவரும் வகையில் சட்டம் உயிருடன் இருக்கும்.
WASTE
ஆயிரம் அன்னாக்கள் வந்தாலும் எங்கள் அருமை அண்ணாவுக்கு ஈடாக முடியுமா? மாற்றான் தோட்டத்து மல்லிகையையும் முகர்ந்து பார்க்கத் துடித்த பெருந்தகையாளர் அவர். விஷமத்தனமாக வேண்டுமென்றே அவரை கம்ப ரசம் அது இதுவென்று சீண்டுகிறார் விஸ்வாமித்ரர். உங்களுக்கு கம்ப ரசத்தை குடிக்கத் தெரியவில்லை என்றாள் நங்கள் என்ன செய்வது? மீண்டும் ஒரு முறை எங்கள் அண்ணாவை வம்புக்கிழுக்காதே விசு.
Too pessimistic, though sounds logical. People of India should commend themselves that they now have a self-less person in Anna Hazare who could give a clarion call for unity to take on the corruption monster. Let us not bring down this movement at the initial stage itself. It is a small step only, but the journey is long. There could be problems at every stage in future, but if we stand united, there is every chance that corruption can be reduced to some extent. Crooks' greed can't be eradicated overnight. It takes sustained efforts and a watch-dog institution like Lok Pal to at least make people aware so they act sensibly to keep away corrupt people in power.
லோக்பால் மசோதா ஒரு மிக சிறந்த காமெடி. திருடன் கையிலேயே சாவி கொடுப்பது போல, பல் லட்சம் கோடி ஊழலுக்கு உற்றுக்கண் சோனியாவை அன்ன ஹசாரே புகழ்வது ஒன்றே போதும் இந்த போராட்டம் ஒரு திட்ட மிட்ட நாடகம் என்று. காங்கிரஸ் அடிவருடி 24 x 7 ஆங்கில தொலைகட்சிகலான NDTV , CNN - IBN மற்றும் times now போன்றே தொலைகாட்சிகள் பேய் மாதிரி கத்தும் பொழுது எனது சந்தேகம் உறுதி படுத்தப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியின் திட்ட மிட்ட சதி.
இப்பதாம்பா யாரோ சொன்னாங்க! மொத்தமா மெழுகுவத்தி வாங்கற காண்ட்ராக்ட்டிலேயே ஊழல் நடந்து போச்சாம்!
நன்றி!
சினிமா விரும்பி
கிருஸ்துவ மதத்தின் மெழுகுவர்த்தி கலாசாரத்தை இது போன்ற இந்திய போராட்டங்களில் திணிப்பது யார்? இந்து மத கோட்பாடுகளின் படி ஏன் தீ வளர்த்து வேள்வி நடத்தி இருக்கக் கூடாது? பஜ்ரங்தள் எதற்க்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?
Too late, இந்து மதவாதிகளுக்கு மூளை தாமதமாகத்தான் வேலை செய்கிறது. சுஜாதா தனது கதைகளில் அடிக்கடி பயன்படுத்துவார், " MISTRUST THE OBVIOUS "
திரு.விஸ்வாமித்ரா ஜன் லோக்பால் மசோதாவல் சோனியா காங்கிரஸ்க்கு ஏற்படப்போகும் நன்மைகளையும், பிஜேபி க்கு ஏற்பட போகும் துன்பங்களையும் விரிவாக விவரித்ததற்க்காக வாழ்த்துக்கள். மோடியை பாராட்டியதற்க்காக அண்ணாவுடன் மேடை ஏறிய அல்லக்கைகளில் சில நொள்ளக் கைகள் விலகுவதாக அறிவித்திருக்கின்றன. சாதாரண நிர்வாகரீதியான பாராட்டையே எடுத்துக் கொள்ள முடியாத இவர்கள் எதிர்கட்சியான பிஜெபியை கூட்டிக்கொள்வார்கள் என்பது கனவிலும் நடவாத செயல். இந்தியர்கள் உணர்ச்சிக்கு ஆட்பட்டவர்கள், கரைந்து போன மெழுகுவர்த்திகளும் உணர்ச்சி பிழம்பினால்தான். நீங்கள் எழுதியதை பத்ரி கூட ஒத்துக்கொள்ள மாட்டார்.
Post a Comment