
இந்த வாரம்..."சினிமா ஸ்பெஷல்".
செய்தி # 1
அலுவலக பணிகளுக்கு இடையே வாரம்தோறும் சன்டேனா இரண்டு என்று மொக்கை போடுவதற்கே தாவு தீர்வதாக எனக்கு தோன்றுகிறது.
ஆனால், 87 வயதில் இருக்கும் ஒருவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு திரைபடத்திற்கு திரைக்கதை,வசனம் எழுதிவிடுகிறார்.
அதுவும், என்னைவிட பல ஆயிரம் மடங்கு பிஸியான, கடமைகள் நிறைந்த 'முதலமைச்சர்' பொறுப்பில் இருக்கும் ஒருவர்.
அதுமட்டுமில்லாமல், மீனவர் படுகொலை போன்று நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் எந்த ஒரு படம் பரபரப்பாக பேசப்பட்டாலும், மூன்று மணி நேரம் ஒரு கல்லூரி மாணவனைப்போல அதை உட்கார்ந்து பார்த்துவிடுகிறார் கருணாநிதி இந்த வயதிலும்.
பெண்சிங்கம்,இளைஞன் என தொடர்ந்து தற்போது, கருணாநிதி அவர்களின் ஸ்க்ரிப்டில் வெளிவந்து இருக்கும் படம்
"பொன்னர் சங்கர்".
இப்படத்தை, கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை வரவழைத்து (கட்டாயபடுத்தி?) , அவர்களோடு சேர்ந்து பார்த்து இருக்கிறார் கருணாநிதி. தேர்தல்கணிப்புகளை விட அவர் இந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்து இருக்கும் படமாகி இருக்கிறது "பொன்னர் சங்கர்".
"பொன்னர் சங்கர்" பார்க்கும் முன்பே,ரஜினிகாந்த் அதிமுகவுக்கு ஒட்டுபோட்டதாக செய்தி வெளிவந்து விட்டது. அவர் யாருக்கு ஒட்டு போட்டார் என்பது கேமராக்கள் படம்பிடித்து விட்டதாகவும், அதை ரஜினி படம் பார்க்க வரும் முன்பே கருணாநிதி அவர்களுக்கு தெரிவித்து இருக்கிறார்கள்.
ரஜினியும் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு என்று பேசியது அவர் திமுகவுக்கு ஒட்டு போடவில்லை என்று தெளிவாக காட்டிவிட்டதால், பொன்னர் சங்கர் பார்க்க போன இடத்தில், அங்கு வந்து இருந்த வைரமுத்துவிடம்
"'நீங்களெல்லாம் இந்த மனிதருக்கு (ரஜினிக்கு) எந்த அளவு பரிந்து பேசியிருக்கிறீர்கள். ஆனால் இவர் செய்திருக்கிற வேலையைப் பார்த்தீர்களா... இவரது நம்பகத்தன்மை தெரிகிறதா.. வாக்களிப்பது அவர் இஷ்டம். ஆனால் அதைப் படம்பிடிக்கவும் அனுமதித்திருக்கிறார்கள். அடுத்து அவர் அளித்த பேட்டி.. விலைவாசி நாடெங்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமது அரசு அதைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தெரியாதா.. விவசாயிகளுக்கு இந்த அரசை விட அதிகம் செய்தது யார்.... இதெல்லாம் சரிதானா?"," என்றெல்லாம் ரஜினி காதில் விழும்படி கடுமையாக பேசி இருக்கிறார் கருணாநிதி என்கிறது ஒரு செய்தி.
கடைசியாக படத்தின் இயக்குனர் தியாகராஜன் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோரை படம் பிரமாண்டமாகவும், நேர்த்தியுடனும் வந்திருப்பதாகப் பாராட்டிவிட்டு, ஒரு வழியாக தப்பிவிட்டார் ரஜினி.
அது இருக்கட்டும். இந்த பதிவின் ஹீரோக்களான "பொன்னர் சங்கர்" படம் பார்த்தேன்.
ஏற்கனவே நாவலாக வந்து, கருணாநிதி அவர்கள் எழுதிய புத்தகங்களில் அதிக பதிப்புகளாக விற்பனையில் சாதனை படித்துதான் இந்த கதை.
சும்மா சொல்லக்கூடாது.
"உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே" என்று தொடங்கி, அண்ணமார் சாமிகள் என்று அழைக்கப்படும் பொன்னர் சங்கர் என்ற கொங்கு நாட்டு வீரமைந்தர்களின் கதை உருவான விதத்தையும், அதற்க்கான குறிப்புகளையும், சிலம்பொலி செல்லப்பன் போன்றோரின் பங்களிப்பையும் கருணாநிதி அவர்கள் படத்தின் துவக்க காட்சியில் விளக்கும் பாங்கு நிஜமாகவே அருமை. அதுவும் இந்த வயதிலும் அவரது கரகரப்பான குரலில் தமிழ் கணீரென்று ஒலிக்கிறது.
திருமணம் நடப்பதற்கு முதல் நாள் இரவு தனக்கு பிடித்த நெல்லியன்கொடானுடன் வெளியேறும் தாமரை நாச்சியார், அதனால் எதிரிகளாகும் தாமரையை மணக்க இருந்த மாந்தியப்பன், காளி மன்னன் என தொடங்கும் கதை. பொன்னர் - சங்கரின் மாமன் மகள் காதல்,வழக்கமான பழிவாங்கல்கள் என்று செல்கிறது.
படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். மசாலா நெடி. நெப்போலியன்,குஷ்பூ,விஜயகுமார் போன்ற திமுக ஜால்ராக்கள் (நல்லவேளை, வடிவேலு இல்லை), படத்திற்கு பொருந்தாத அரைகுறை ஆடை கதாநாயகிகள், "பகைவர்களை வீழ்த்த யாக சாலை எதற்கு", "ஆண்டவனுக்கு வந்த அமிர்தத்தை அர்ச்சகரே சுவைப்பதா" போன்ற முற்போக்குத்தன 'அச்சுபிச்சு வசனங்கள்' (திருநள்ளாறு கோவில் அர்ச்சகர் படம் பார்த்தாரா?) என்று படத்தில் நிறைய குறைகள் இருக்கின்றன.
இருந்தாலும், இளையராஜாவின் இதமான மெலடி பாடல்கள் (குறிப்பாக, 'மலர் வில்லிலே அம்பொன்று விட்டானே தோழி'), அவருக்கே உரித்தான அவரால் மட்டுமே தரக்கூடிய மிரட்டலான பின்னணி இசை. மேலும், சரித்திர படத்துக்கு பொருத்தமான டி.முத்துராஜின் கலைவண்ணம், கனல் கண்ணனின் போர்க்கள சண்டைகாட்சிகள், ஷாஜிகுமரின் ஒளிப்பதிவு,பொன்னர் சங்கர் என்ற இரண்டு கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து இருக்கும் ஆஜானுபாவான பிரசாந்த்(கள்) என பாராட்டும் அம்சங்கள் உள்ளன.
மலையூர் மம்பட்டியான், கொம்பேறிமூக்கன் போன்ற படங்களை ஏற்கனவே இயக்கி இருக்கும் தியாகராஜன் இந்த படத்தின் காட்சியமைப்புகளிலும்,பாடல்களிலும் காட்டியிருக்கும் "ஷங்கர்" பாணி பிரமாண்டங்களை பாராட்டியே ஆகவேண்டும்.
கருணாநிதியிடம் எனக்கு பிடித்தது அவரது தமிழும்,எழுத்தும் என்று ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டது எனக்கு நினைவுக்கு வருகிறது.
கருணாநிதி அரசியலுக்கு வராமல் இருந்து இருந்தால் இன்னும் சிறந்த தமிழ் படைப்புக்களை தந்து இருப்பார் என்று தோன்றுகிறது. இன்னமும் வாய்வழி,செவிவழி என்று வாழும் பழந்தமிழர் கதைகளை, பொன்னர் சங்கர் போன்று படைப்புகளாக்கி இருப்பார் என்று தோன்றுகிறது. இனியாவது, அரசியலை விட்டு விலகி உருப்படியாக எழுத்துபணிகளை அவர் தொடரலாம்(அதான், 2G என்று 200 தலைமுறைகளுக்கு சேர்த்து விட்டாரே).
எனக்கு மிகவும் பிடித்த ஒரு இடம், படத்தின் கடைசி காட்சியில் வரும் கருணாநிதி எழுதிய வசனம்....அது,
"யாருக்கும் பணிந்து,வளைந்து,குனிந்து பதவி சுகம் அடையும் நிலையில் நாங்கள் இல்லை"
(ஹிஹிஹி!)
செய்தி # 2
எளிய கதைகளோடு கூடிய கிராமத்து படங்களின் யுகம் இது. தொடர்ந்து இத்தகைய படங்களை வெற்றி பெற செய்து, தங்களது மேம்பட்ட ரசனையை உணர்த்தி வருகிறார்கள் தமிழ் ரசிகர்கள்.
இந்த வரிசையில், வெளிவர போகும் புதிய படம்..... "அழகர்சாமியின் குதிரை".
பெயரே வித்தியாசமாக இருப்பது போல படமும் இருக்கும் என்று தெரிகிறது.
இப்படத்தின் இயக்குனர் சுசிந்திரன். "வெண்ணிலா கபடி குழு" மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். அதன் பிறகு, "நான் மகான் அல்ல" என்று கமர்ஷியல் ஹிட் தந்த சுசிந்திரன், ஒரு சிறுகதையை அடிப்படையாக வைத்து, "அழகர்சாமியின் குதிரையை" உருவாக்கி இருக்கிறார்.
"மெட்டி ஒலி" போன்ற தொடர்களின் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி எழுதிய ஒரு சிறுகதையே இப்படம்.
"தேனி அருகே உள்ள மல்லையாபுரம் கிராம மக்கள், ஊரில் உள்ள கோவில் திருவிழா நடந்தால்தான் ஊரில் மழை பெய்யும் என்று நம்புகிறார்கள். திருவிழா நடைபெறும் நேரத்தில், சாமியின் வாகனமான மரத்தினால் ஆன குதிரை காணாமல் போய்விடுகிறது.
அதேநேரத்தில், பெரியகுளம் அருகே உள்ள அகமலை என்ற மலை கிராமத்தில் குதிரையில் பொதியேற்றி பிழைக்கும் அழகர்சாமிக்கு திருமணம் நெருங்கும் நேரத்தில், குதிரை காணாமல் போய்விடுகிறது. குதிரை கிடைத்தால்தான் திருமணம் என்னும் சூழ்நிலையில், அழகர்சாமி தன் குதிரையை தேடி புறப்படுகிறான்.
மரக்குதிரை கிடைத்து கிராம மக்களின் திருவிழா நடந்ததா, இல்லையா? நிஜகுதிரை கிடைத்து அழகர்சாமியின் திருமணம் நடந்ததா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு படத்தில் விடை இருக்கிறது". என்கிறார்கள் சுசிந்திரனும், பாஸ்கர் சக்தியும்.
அழகர்சாமியாக அப்புக்குட்டி என்பவர் நடித்துள்ளார். அவருடன் சரண்யா மோகன், அழகன் தமிழ்மணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாஸ்கர் சக்தி வசனமும், சினேகன், யுகபாரதி, ஜெ.பிரான்சிஸ் கிருபா ஆகியோர் பாடல்களும் எழுதியிருக்கிறார்கள்
இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தின் தயாரிப்பாளராக மாறி, "நடுநிசி நாய்கள்" கறையை போக்கி இருக்கிறார்.
இப்படத்தில் குறிப்பிடத்தக்க விஷயம்...இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.
அழகர்சாமி குதிரை படத்தில் மொத்தம் மூன்றே பாடல்கள்.
"அடியே இவளே" என்றே ஒரு பாடல். இதை பாடலாசிரியர் சிநேகன், லெனின்பாரதி இவர்களுடன், "ஜில்லா விட்டு" புகழ் தஞ்சை செல்வி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இளையராஜா சொந்த குரலில் பாடியிருக்கும் "குதிக்கிற ". கார்த்திக், ஷேரேயா கோசல் பாடியிருக்கும் "பூவைக்கேளு" என்னும் ஒரு கிராமிய டூயட் பாடல் போன்றவை மட்டும் இடம் பெற்று உள்ளன.
ஆனால், இளையராஜாவின் பின்னணி இசை படத்தில் உலக தரத்தில் உள்ளது என்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில், இளையராஜா அவர்கள் பேசியது திரையுலகின் கவனத்தை கவர்ந்து இருக்கிறது.
"சிலநேரங்களில் கதையை கேட்கும்போது, நானே இயக்குநரிடம் சொல்லியிருக்கிறேன், என்னய்யா இதுமாதிரியான குப்பையான கதையெல்லாம் எடுத்து வந்திருக்க என்று. இசை என்பது ஒரு கதையை கேட்டதும், ஜீவனுக்கு உள் இருந்து அப்படியே வெளிவரணும், அதைத்தான் அழகர்சாமியின் குதிரையில கொட்டி வச்சுருக்காங்க. டைரக்டர் சுசீந்திரன் நல்ல கதையை டைரக்ட் பண்ணி அனைவரையும் இம்ப்ரஸ் செய்ய வைத்துள்ளார்" என்ற இளையராஜா, படத்தின் நாயகன் புதுமுக நடிகர் அப்புக்குட்டி என்பவரை முன்னிறுத்தி பேசினார்.
"சுசீந்திரன் இயக்கி இருக்கும் இப்படம் நல்ல உணர்வையும், உறவையும் வெளிப்படுத்துகிறது. 10நிமிடம் அனைவரும் கவலையை எல்லாம் மறந்து கண்ணைமூடி இந்த படத்தின் இசையை கேட்டீங்கினா, நிச்சயமாக கண்ணுல இருந்து தண்ணீர் வரும். அப்படி வரலேனா, இசையமைப்பதையே நான் நிறுத்தி விடுகிறேன். அந்தளவுக்கு இப்படம் உணர்வுபூர்வமா வந்திருக்கு.
படத்தின் ஆடியோ ரிலீஸின்போது அப்புக்குட்டிக்குதான் அவ்வளவு பாராட்டும் கிட்டியது. உடனே அவரை சூப்பர் ஸ்டார் என்று நினைக்க கூடாது. சூப்பர் ஸ்டாரால கூட இந்த கேரக்டரை பண்ணியிருக்க முடியாது. இந்தபடத்துல உன்னை(அப்புக்குட்டி) ஹீரோவாக்கிய இயக்குநரைத்தான் பாராட்டனும். இனி உனக்கு வரும் படங்களை எல்லாம், கதை கேட்காமா ஒத்துக்கணும். ஏனென்றால் இயக்குநர் மனசுல அந்த கதையோட்டத்துடன் தான் வாழ்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும், சொல்லப்போனால் நமக்கெல்லாம் அவர்கள் தான் முதலாளி. நாட்டுல நடக்குற பிரச்சனை, குழப்பம் எல்லாம் பார்க்கும்போது நமக்கு சில நேரம் கண்ணீர் வருது. அதுக்காக என்னபண்ண முடியும், அரசியல் கட்சியை குற்றம் சொல்ல முடியுமா, எல்லாம் ஆண்டவனால் விதிக்கப்பட்டது. எது நடக்குமோ, அது நடகும், அதுபோலத்தான் ஒரு கலைஞனும் உருவாகிறான் அதை யாராலும் தடுக்க முடியாது." என்று பேசினார்.
"உலகமே தமிழ்நாட்டு படைப்பாளிகளை தான் திரும்பி பார்க்கின்றனர். நல்ல புதுபுது கதை களங்களுடன், படைப்பாளிகள் உருவாகி வருகின்றனர். டைரக்டர்கள் ஒருவருக்கொருவர் பழகுவதையும், பகிர்ந்து கொள்வதையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு" என்று ராஜா அவர்கள் பெருமையுடன் பாராட்டியதை "அழகர்சாமியின் குதிரை" மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்ப்போம்.
(நன்றி..இனி,அடுத்தவாரம்)
-இன்பா
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, April 17, 2011
சன்டேனா (17-04-11) இரண்டு செய்திவிமர்சனம்
Posted by IdlyVadai at 4/17/2011 07:08:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










20 Comments:
அருமையான விமர்சனம். கண்டிப்பாகப் பார்க்கிறோம் அழகர் சாமியின் குதிரையை.
முதல் படம் பற்றி ஒன்றும் கருத்துக் கூற விருப்பம் இல்லை.
இட்லி !! என்ன கொஞ்சம் "ஜிங் ஜாங்" அதிகமா இருக்கு ? தி(ரும்பவும்).மு.க வா?
//இட்லி !! என்ன கொஞ்சம் "ஜிங் ஜாங்" அதிகமா இருக்கு ? தி(ரும்பவும்).மு.க வா?//
ம்ம்ம்.. உங்களுக்கெல்லாம் விஷயமே தெரியாது போல். ‘இட்லி’ எப்போது ’நான்கெழுத்து’ ஆளிடமிருந்து ‘மூணெழுத்து’ ஆளுக்குக் கைமாறியதோ, அப்போதிலிருந்தே முக புராணம் தானே பாடிக் கொண்டிருக்கிறது.
பழைய இட்லியாக இருந்தால் இந்நேரம் சும்மா இருக்குமா, 2ஜி, நீரா ரடியா, தமிழ் மையம், ஸ்கேன்டல், ஆச்சாரி, ஆடிட் ரிப்போர்ட் என்று கலக்கியிருக்காதோ?
’கிழக்கு’ வெளுக்க நாமும் காத்திருப்போம். அதைத் தவிர வேறு வழியில்லை.
//மீனவர் படுகொலை போன்று நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் எந்த ஒரு படம் பரபரப்பாக பேசப்பட்டாலும், மூன்று மணி நேரம் ஒரு கல்லூரி மாணவனைப்போல அதை உட்கார்ந்து பார்த்துவிடுகிறார் கருணாநிதி இந்த வயதிலும்.
//
Well said Inba
/ஆனால், 87 வயதில் இருக்கும் ஒருவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு திரைபடத்திற்கு திரைக்கதை,வசனம் எழுதிவிடுகிறார்.// அவர் தான் பேனா பிடிச்சி எழுதறாராக்கும். நீங்களும் நம்புறீங்க பச்ச புள்ள மாதிரி
சினிமாவை பார்த்தோமா விமரிசனம் எழுதினோமா என்று இருக்க வேண்டும் . முன்பு எந்திரன் படத்துக்கு எழுதியது போல வீண் அரசியல் , ரஜனி கதைகள் எழுதியது நன்றாக இல்லை. படம் நன்றாக இருக்கிறதா அல்லது இல்லையா என்று எழுதினால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.அதை விட்டு விட்டு கருணாநிதி எழுதியால் சொட்டை சண் டிவி எடுத்தால் படுத்து விடும் என்று எழுதுவது நன்றாக இல்லை.
நீங்கள் சேர்த்திருக்கும் விளம்பரப்படத்தில், பெக்க்ரௌண்டில் ஆங்கில வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன? காப்பி அடிக்கும்பொழுது அதை கவனிக்கவில்லையோ? மூலப்படத்திர்க்கு இங்கே செல்லவும்: http://troymovie.warnerbros.com/index_noflash.html
//
நீங்கள் சேர்த்திருக்கும் விளம்பரப்படத்தில், பெக்க்ரௌண்டில் ஆங்கில வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன? காப்பி அடிக்கும்பொழுது அதை கவனிக்கவில்லையோ? மூலப்படத்திர்க்கு இங்கே செல்லவும்: http://troymovie.warnerbros.com/index_noflash.html
//
Very true.... heheheh
இந்த சண்டேன்னா ரெண்டுக்கு ஏதாவது போட்டாகனுமேன்னு வந்திருக்கு!!
//கருணாநிதி அரசியலுக்கு வராமல் இருந்து இருந்தால் இன்னும் சிறந்த தமிழ் படைப்புக்களை தந்து இருப்பார் என்று தோன்றுகிறது//
அவர் அரசியலுக்கு(அதுவும் ஆட்சிக்கு) வரலேன்னா, இந்த மாதிரி முத்தமிழ், பொத்தமிழ்,வாழும் வள்ளு,அழியா லொள்ளு அப்படின்னு யாருய்யா பட்டம் குடுப்பாங்க? இல்ல அவர்தான் பெரிய தமிழ் சாதனையாளரா?? கருணா ஒரு அரசியல் நடிகர் மற்றும் சினிமா வசனகர்த்தா அவ்வளவுதான்!! அவரால் தொல்காப்பியம் எல்லாம் எவ்வளவு தப்பு தப்பா எழுதப் பட்டிருக்கிறது என்று தெரியுமா உமக்கு?
அழகர் சாமியின் குதிரை விமர்சனம், பரவா இல்லை, ஆனாலும்,
//(நன்றி..இனி,அடுத்தவாரம்)//
இந்த வரி எங்கே இருக்குன்னு தேடற அளவுக்கு மொக்கையான பதிவு..(யார் கண்டது இன்பாவுக்கே மண்டபத்தில் வைத்து யாராவது எழுதிக் கொடுத்ததோ என்னவோ?)
இன்னொரு ‘ அக்ரஹாரத்தில் கழுதை ‘ யாக இல்லாமல் இருந்தால் சரி! - ஜெ.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை கோடநாடு வருகிறார். கோடநாட்டில் அடுத்த தேர்தல் வரை தங்கி ஓய்வு எடுப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ம்ம்ம்.. உங்களுக்கெல்லாம் விஷயமே தெரியாது போல். ‘இட்லி’ எப்போது ’நான்கெழுத்து’ ஆளிடமிருந்து ‘மூணெழுத்து’ ஆளுக்குக் கைமாறியதோ, அப்போதிலிருந்தே முக புராணம் தானே பாடிக் கொண்டிருக்கிறது.
பழைய இட்லியாக இருந்தால் இந்நேரம் சும்மா இருக்குமா, 2ஜி, நீரா ரடியா, தமிழ் மையம், ஸ்கேன்டல், ஆச்சாரி, ஆடிட் ரிப்போர்ட் என்று கலக்கியிருக்காதோ?
’கிழக்கு’ வெளுக்க நாமும் காத்திருப்போம். அதைத் தவிர வேறு வழியில்லை.
I have not seen the film 'Ponnar-Sankar', though i have heard about the legendary story through those people who worship the brothers as their 'family deities' and have read about the story of them. Their sister 'Arukkani' is an equally important phenomenon in the tale of them.
I have seen some footage of the film on television. What i am going to comment is only based on those footage. The dwelling places of the brothers are shown as exotic places in the film trailer, that makes the setting of the film exotic and far away from nativity. The stunt sequences also alienate the audience from the happenings. The brothers' story is a true tamil-story happened in the true land of Tamils. I get a feeling after seeing the footage that the depiction of them puts them in an alien land. I may be wrong.
Isnt there a law that govt officials shouldnt do any business? If that is the case how come a CM is earning money thru this screenplay writing business?
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் ஓய்வெடுக்க இன்று கொடநாடு சென்றார். - செய்தி
எந்நேரமும் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் , இந்த வயதிலும் சுறுசுறுப்பாக திரைக் கதை வசனம் எழுதிக்கொண்டு ரெண்டு பொண்டாட்டிகளையும் வாரிசுகளையும் "நல்லபடி" கவனித்துக் கொண்டு, இவனை ஒன்றும் செய்யமுடியவில்லையே, இவனாக செத்தொழிந்தால் தான் நமக்கு பதவி என்று எதிர்கட்சிகளை புலம்பவைதுக்கொண்டிருக்கும் இந்நாள் முதல்வர்.
என்னுடைய வீணாப்போன ஒட்டு முன்னாள் முதல்வருக்கே விழுந்தது. எங்கே பொய் முட்டிக் கொள்ள?
அடுத்த பதிவு எப்ப தல
அரிசி 1 ருபாய்
இட்லி எவ்வளவு ருபாய் ??
வடை பிரியா ?
இவனை ஒன்றும் செய்யமுடியவில்லையே, இவனாக செத்தொழிந்தால் தான் நமக்கு பதவி என்று எதிர்கட்சிகளை...
Sir ippadi polambuvathu ethir katchi illai avanga vitula irukaravanga than.
It is far better to take rest instead of claiming other people's work. Everyone knows that these screenplays are written by someone else but MK puts his name on it.
//அடுத்த பதிவு எப்ப தல//
அடுத்த சண்டே!! "சினிமாவிமர்சனம்"
///என்னுடைய வீணாப்போன ஒட்டு முன்னாள் முதல்வருக்கே விழுந்தது. எங்கே பொய் முட்டிக் கொள்ள?///
கடைசியில் கலைழர் மற்றும் பாமர மக்கள் வெற்றி. ஆனால் மெத்த படித்த மேதாவிகள் பத்திரிகைகள் , மீடியாக்கள் தோல்வி என்று வரபோகிறது.
படத்த பார்த்தேன்யா யோவ்!
தல வால் எதுக்குமே சம்பந்தம் இல்லாம, டைரக்ஷன் படு மொக்க!!
நாத்திகம் பேசுறேன்னு அங்கங்க நுழைச்சி இருக்காரு!
என்ன கொடுமைன்னா, நாசர் முதல்ல வர காட்சில, அந்த கிழவிகிட்ட "என்ன என்னை பார்ததும் ஈரோட்டுகாரரோன்னு நினைச்சுட்டியா?" அப்டினு கேட்குறது கேனத்தனமா இருக்கு!! சோழர் ஆட்சி அப்போ எங்கேயா இருந்தாரு ஈரோட்டுகாரர்? தலைவர மறக்கல அப்டினு காமிக்க முட்டாள் தனமா ஒரு டையலாக்!!
நெப்போலியனும் பிரகாஷ் ராஜும் 25 வருஷத்துக்கு அப்புறமும் அப்படியே இருக்காங்க!
ஒரே ஒரு புண்ணியம்: உண்டு காட்டி அப்டினு ஒரு வார்த்தை தெரிஞ்சுகிட்டேன்!!
-பூபாலன்
Post a Comment