பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 10, 2011

சன்டேனா (10-04-11) இரண்டு செய்திவிமர்சனம்

இந்த வாரம்..."கிரிக்கெட் ஸ்பெஷல்".

செய்தி # 1

இந்திய கிரிக்கெட் அணி 28 வருடங்களுக்கு பின் உலக கோப்பையை வென்று விட்டது. ஒரு இந்தியனாக நமக்கு பெரும் மகிழ்ச்சி தரும் சம்பவம் இது. நாடே சந்தோஷ களிப்பில் கொண்டாடியது.


நம்மால் மறக்க முடியாத, ஒரு அற்புதமான தருணம்...நமது இந்திய அணி உலக கோப்பையை வென்ற தருணம்.
உலககோப்பையை வென்ற பரிசுதொகை சுமார் 46 கோடி ருபாய் வழங்கப்பட்டது. அந்த தொகை, அணியில் உள்ள அனைத்து வீரர்கள்,பயிற்சியாளர்கள்,தேர்வுக்குழுவினர் என அனைவருக்கும் வழங்கப்பட்டது.


இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஒவ்வொரு இந்திய வீரருக்கும் தலா ரூ. 1 கோடி பரிசு வழங்கப்பட்டது. தவிர, ஹுண்டாய் கார் நிறுவனம், அனைத்து வீரர்களுக்கும் தலா ஒரு கார் வழங்குகிறது.பயிற்சியாளர்களுக்கு தலா 50 லட்சமும், தேர்வுக்குழுவில் இருப்பவர்களுக்கு தலா 25 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டதும் நியாயமே.

இது நியாயமானதே. வெற்றி பெற்ற அணிக்கு, ஜனாதிபதி மாளிகையில் விருந்து வழங்கப்பட்டது. இந்திய பிரதமர் முதல் அனைவரின் பாராட்டு
மழையில் நனைந்தது இந்திய அணி.

ஆனால், உலககோப்பை பரிசுதொகை மற்றும் இந்திய கிரிக்கெட் கவுன்சில் தரும் பரிசுகள் தவிர , ஒவ்வொரு மாநிலமும்,வர்த்தக நிறுவனங்களும் கோடிகளை வீரர்களுக்கு வழங்குவது எதற்கு??

அதுவும், ஐ.பி.எல் போன்ற போட்டிகள், விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் ஏற்கனவே சம்பாதித்து கொண்டு இருக்கும் வீரர்களுக்கு இப்படி கோடிகளையும், பரிசுகளையும் தனிப்பட்ட முறையில் வழங்குவது தேவையா??

டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், கேப்டன் தோனிக்கு ரூ. 2 கோடியும், டில்லியை சேர்ந்த மற்ற நான்கு வீரர்கள் சேவக், விராத் கோஹ்லி, காம்பிர், ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோருக்கு தலா ரூ. 1 கோடி பரிசு அறிவித்துள்ளார்.

உத்தரகண்ட் அரசு சார்பில் சச்சின் மற்றும் தோனிக்கு, முசோரி பகுதியில் வீடு அல்லது ஒரு "பிளாட்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில், அனைத்து இந்திய வீரர்களுக்கும், தலா ஒரு "பிளாட்' வீட்டுமனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ராஞ்சி, "ஏர் இந்தியா' விமான நிறுவனத்தில் துணை மேனேஜராக இருந்த இந்திய அணியின் கேப்டன் தோனி, மேனேஜராக பதவி உயர்வு பெற்றுள்ளார். டில்லி, அமிர்தசரஸ் "ஏர் இந்தியா' அலுவலகத்தில் துணை மேனேஜராக இருந்த ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் மேனேஜர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். சண்டிகர் அலுவலகத்தில் மேனேஜராக இருந்த யுவராஜ் சிங், சீனியர் மேனேஜராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

டோணி தலைமையிலான அணி உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து தற்போது டோணிக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான 2900 சதுர அடியில் அமைந்துள்ள பிரமாண்ட வீட்டை பரிசாக கொடுத்துள்ளது முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான அமர்பாலி.

அதேபோல இந்திய அணி உறுப்பினர்களுக்கு தலா ரூ. 55 லட்சம் மதிப்பிலான சொகுசு வீட்டைப் பரிசாக அளித்துள்ளது. இவை 1690 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளதாம். அத்தனை வீடுகளும் டெல்லி அருகே நோய்டாவில் இந்த நிறுவனம் அமைத்துள்ள நோய்டா ட்ரீம்வேலி பகுதியில் அமைந்துள்ளன.
நமது தமிழக அரசும் மூன்று கோடி ருபாய் வழங்கி இருக்கிறது.முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வெற்றிபெற்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் அஷ்வினுக்கு ரூ 1 கோடி சிறப்புப் பரிசாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு பரிசுத் தொகை வழங்க தேர்தல் ஆணையத்தின் அனுமதியை அரசு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே கோடிஸ்வரர்களாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிகள் எதற்கு??

இந்த அளவு பரிசு தொகை, டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வழங்கப்பட்டதா??

கிரிக்கெட் வீரர்களை போன்ற, கவனிப்பும், மரியாதையும், கோடிகளும் ஏன் அவர்களுக்கு வழங்கப்படவில்லை?.அவர்களின் பெயர்கள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்??

நமது தேசிய விளையாட்டான ஹாக்கியின் கதையை கேட்டால் மனம் வெதும்பிவிடும்.

ஆசியகோப்பை போட்டிகளுக்கு விளையாட புறப்படும் முன், நமது ஹாக்கி வீரர்கள் அதை புறக்கணிப்பதாக அறிவித்தனர். காரணம், அவர்களுக்கு வர வேண்டிய தொகை வழங்கப்படவில்லை என்ற காரணத்தால்.அந்த தொகை.. சில ஆயிரங்களில் அடங்கும்.அதன்பின், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, தீர்த்து வைத்தது.

இந்திய கபடி அணியில் இடம் பெற்று இருந்த வீரர்களின் சம்பளம்..வெறும் 25 ஆயிரம் ருபாய் மட்டுமே.

கடந்த ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளுக்கு, பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் சம்பளமும் கிட்டத்தட்ட இந்த தொகைதான்.

எந்தவித பொருளாதார வளர்ச்சியும் இல்லாத கானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு கூட கால்பந்து அணி இருக்கிறது.

இத்தனை கோடி மக்கள் இருக்கும், நமது இந்திய நாட்டின் கால்பந்து அணியால் உலககோப்பைக்கு முன் நடத்தப்படும், தகுதி போட்டிகளில் கூட கலந்து கொள்ளும் திராணி இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்???

"கிரிக்கெட்டை தவிர வேறு எந்த விளையாட்டுக்கும் ஸ்பான்சர் செய்ய யாரும் முன்வரவில்லை" என்று சொல்கிறார் சென்னையை சேர்ந்த பைக் ரேஸ் வீரர் திரு.சரத்குமார்.

இங்கு கிரிக்கெட்டை தவிர வேறு எந்த விளையாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுவது இல்லை. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டியவர்கள்.

கிரிக்கெட் ஆட்டத்தின் வளர்ச்சி, மற்ற அனைத்து விளையாட்டுக்களையும் அழித்துவிட்டது என்கிற பரவலான கருத்து சரியானதே.

எந்த விளையாட்டு வீரரும் பணத்திற்காக ஆடாமல், நாட்டிற்குதான் ஆடுவதாக சொல்லிகொள்வோம்.

ஆனால், கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்புகளை வழங்கிவிட்டு, மற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு ஆயிரங்களில் வழங்கினால், அந்த வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்? இந்தியாவில், மற்ற விளையாட்டுகளில் பங்கேற்க இளைய தலைமுறையினர் எப்படி ஆர்வத்தோடு முன் வருவார்கள்??

எல்லாருக்கும் முன்னோடியாக,

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மட்டுமே உருப்படியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

"இந்திய அணி கோப்பை வென்றதன் மூலம், 121 கோடி மக்களின் கனவை நிறைவேறியுள்ளது. இந்த சாதனைக்கு உதவிய குஜராத்தின் யூசுப் பதான், முனாப் படேல் இருவருக்கும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள, மாநிலத்தின் உயர்ந்த விளையாட்டு விருது வழங்கப்படும்" என்று அறிவித்து இருக்கிறார் மோடி.

சச்சினுக்கு பரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவியுங்கள்.நமது ஜனாதிபதி அவர்கள் செய்ததை போன்று, உரிய மரியாதை செய்யுங்கள்.

அதை விடுத்து, இன்னமும் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைகோட்டிற்கு கீழே வாழும் நமது நாட்டில், ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் தலையில் மட்டும் கோடிகளை கொட்டுவது என்ன நியாயம்??

நமது இந்திய அரசை, ரிலையன்ஸ் போன்ற கார்பொரேட் நிறுவனங்கள் நடத்துகின்றன என்று ஒரு முறை சொன்னார் அத்வானி.

அதை போன்று,கிரிக்கெட் என்பது வர்த்தக நிறுவனங்களின் சூதாட்டமாகி போய்விட்டது. நாடு முழுவதும், மீடியா உதவியுடன் இத்தகைய மிகப்பெரிய உள்நாட்டு,பன்னாட்டு நிறுவனங்களால் கிரிக்கெட் மோகத்தில் கட்டிப்போடப்பட்டு விட்டது.

கிரிக்கெட்டை தவிர,வேறு எந்த விளையாட்டு பற்றியும், அதன் அடிப்படைகள் மற்றும் விதிமுறைகள் பற்றியும் நமக்கு தெரியாமல் போனதற்கு நாமும் ஒரு முக்கிய காரணம். தவறு, நம் மீதும் இருக்கிறேதே.

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாடு, ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் சீனா,ஜப்பான்,அமெரிக்கா போன்று பதக்கங்களை எப்போது வாங்கி குவிக்கபோகிறது??

நமது நாட்டில்,கிரிக்கெட்டை கொண்டாடுவது போல, இதர விளையாட்டுகளையும் நாம் மதிக்கும், வரவேற்கும் காலம் சாத்தியமா??

செய்தி # 2


லாகூருக்கு தனியாக பஸ் ஒன்று சமாதான புறா போன்று விடப்பட்ட கையோடு, கார்கில் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய தீவிரவாத குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்.

அதைபோன்ற ஒரு சம்பவம், நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்து இருக்கிறது.

"இந்திய அணி சிறப்பாக ஆடியது. டோனி சிறந்த கூலான கேப்டன்" என்றெல்லாம் புகழ்ந்தார் அரையிறுதியில் தோற்ற அன்று, மொகாலியில் பேசிய பாகிஸ்தான் அணி தலைவர் ஷாஹித் அப்ரிடி.

ஆனால், பாகிஸ்தானுக்கு அவர் திரும்பி சென்றதும், தோல்வியில் இருந்து பாகிஸ்தான் மக்கள் மற்றும் மீடியாவை திசை திருப்பும் வகையில் பேட்டி அளித்தார் அப்ரிடி.

"பாகிஸ்தானியர்களுக்கு இருப்பதைப் போன்ற பெரிய மனது இந்தியர்களுக்குக் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, பாகிஸ்தானியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உள்ளதைப் போன்ற அகண்ட மனது, இந்தியர்களுக்குக் கிடையாது என்றுதான் சொல்வேன். கணிவான இதயம் இந்தியர்களுக்குக் கிடையாது. அல்லா எங்களுக்குக் கொடுத்துள்ளதைப் போன்ற சுத்தமான, கணிவான இதயம் நிச்சயம் இந்தியர்களுக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன்".

-என்று அவர் கூறினார்.

மும்பையில் அப்பாவி மக்களை கொன்று குவித்துவிட்டு, இன்னமும் மும்பையின் நிழலுலக தாதாவாக இருக்கும் தாவூத் இப்ராகிம், கனிவான மனம் படைத்தவரா? அவரை கராச்சியில் சகல வசதிகளோடு தங்க வைத்து இருப்பதும், பாகிஸ்தான் முன்னாள் காப்டன் ஜாவிட் மியான்டடின் சம்பந்தி அவர் என்பதும் அப்ரிடிக்கு தெரியாதா? அஜ்மல் கசாப், அகண்ட மனம் படைத்தவரா? காஷ்மீர் மாநில எல்லையில் நூற்றுக்கணக்கான பயங்கரவாத முகாம்கள் இயங்குவதும்,அங்கு நடைபெறும் அத்துமீறல்களும் அவர் கண்களில் தெரியவில்லையே.

பாகிஸ்தானில், தர்க்காகளிலும் , தொழுகை நடத்தும் மசூதிகளிலும் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பது பாகிஸ்தானில் இன்று சகஜம் என்கிற உண்மை தெரியாதவரா அப்ரிடி. அதுவும், ஆப்கான் எல்லையில் உள்ள பெஷாவரை சேர்ந்த அப்ரிடிக்கு.

"இந்திய மீடியாக்கள் மிகவும் பொறாமை பிடித்தவை, பாரபட்சத்துடன் கூடியவை. இவர்களுடன் ஒப்பிடிட்டால் பாகிஸ்தான் மீடியாக்கள் நூறு மடங்கு சிறந்தவை என்பது எனது கருத்து. இவர்களால்தான் இரு நாடுகளின் உறவுகளும் கூட சீர்கெட்டுப் போயுள்ளது" என்று கருத்து கூறி இருக்கிறார் அப்ரிடி.

"பாகிஸ்தானை வென்று அந்த வெற்றியை, மும்பையில் பலியானவர்களுக்கு காணிக்கை ஆக்குவேன் என்று கெளதம் கம்பீர் கூறியதையும் நான் காட்டமாக கண்டிக்கிறேன். இதெல்லாம் அரசியல் பேச்சு. கம்பீர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது. அவரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. மும்பையில் நடந்த தாக்குதலுக்கு நானோ, அல்லது பாகிஸ்தான் வீர்ர்களா காரணம்" என்று அப்ரிடி கூறிய கருத்து மட்டுமே நியாயம் என்றாலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் வேளையில், அப்ரிடி இப்படி பேசியதும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய அரசியல் பேச்சுதானே.

"இந்தியா,பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினைகள் யாவும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட கூடியவையே" என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானியே அறிவித்து இருக்கும் வேளையில்,

"அவர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பது நமக்கு மிக மிக கஷ்டமானது. அவர்களுடன் நீண்ட கால உறவையும் நம்மால் நிச்சயம் பேண முடியாது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதால் ஒரு பயனும் ஏற்படாது என்பது எனது கருத்து. கடந்த 60 ஆண்டுகளில் நட்பை வளர்ப்பதற்காகவும், உறவுகளை வலுப்படுத்துதவற்காகவும் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏதாவது பயன் இருந்ததா. இருக்காது. அவர்களுக்கு்ததான் நல்ல உள்ளம் இல்லையே" என்று அறிவித்து இருப்பது அப்ரிடியின் குறுகிய மனதை காட்டுகிறது.

"இந்தியர்கள் குறுகிய மனசுக்காரர்களாக இருந்திருந்தால், இந்த அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடைந்திருக்காது. மேலும், இந்தியாவுக்கு அப்ரிதியும், அவரது அணியினரும் வந்திருந்தபோது, விளையாடியபோது இந்தியர்கள் இந்த அளவுக்கு அன்பு காட்டியிருக்க மாட்டார்கள்" என்று சரியான பதிலை அளித்து இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

இந்த விவகாரம் பெரியதானதும்,

"மீடியாக்கள் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி விடுகிறார்கள். இது வெட்கமாக உள்ளது. இந்திய, பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டும் என்றுதான் நான் தொடர்ந்து விரும்பி வருகிறேன். சில நேரங்களில் அதுகுறித்துக் கூறும்போது ஏதாவது வேறு அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் இப்போது நான் பேசியதையும் தவறாக கூறி வி்ட்டனர்.இதுபோன்ற சிறிய விஷயங்களைப் பெரிதாக்கி இரு நாட்டு மக்களிடையே துவேஷத்தை வளர்த்து விட மீடியாக்கள் காரணமாக அமைந்து விடக் கூடாது" என்று 'சப்பைகட்டி' இருக்கிறார் அப்ரிடி.

இந்தியர்களை பற்றி கேவலமாக பேசியது அவருக்கு சிறிய விஷயமாக தெரிகிறது போலும்.

(நன்றி..இனி,அடுத்த வாரம்)

-இன்பா

14 Comments:

அமுதா கிருஷ்ணா said...

கேடியாய் இருப்பார் போல அஃப்ரிடி..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Regarding Afridi's remarks:

It is not unbecoming of a Pakistani to say so. Leave it!

We don't need anybody's certificate on our magnanimity and religious harmony.

Anonymous said...

Gambhir did not dedicate victory against pakistan. He dedicated world cup victory to the 26/11 victims.

Also Yuvraj's response to this was funny. "They are large hearted. That's y they dropped so many catches in semifinals. May be he is right"

சாதாரண கிராமத்தான் said...

Giving prizes to cricketers are not bad at all after winning the world cup. This sport is more popular among all and with younger generation in particular. Yes. Cricketers are earning lot of money but not all of them. The players who are playing only state level are not earning much money. Even the cricketers in national team who are not as popular as Sachin or Dhoni are earning less. We should improve other sports but not at the expense of cricket. How much coverage the media has given (including Idlyvadai) for other sports. Any sport get coverage according to its popularity. So the necessary thing is how to make sports popular. How many houses with children/younger people you have seen hockey sticks? I remember playing baseball and hockey when I was in school now I dont think that schools have these. This is the same with individual houses. As a political example how much coverage you have given to the candidates contesting from BJP even though you seems like a supporter of Mr. Modi. Giving only the nonsense news of Jaya and Karuna and their men.
Apart from the current topic, write articles about film stars and politicians getting the doctorate again this is given just to popularize the organization which is giving the doctorate (like companies giving prizes to cricketers). We know how much difficulty it is to get a PhD degree. Although these are honorary degrees they are using it along with their name.

Anonymous said...

இந்த சாதாரண கிரிக்கெட் கிறுக்கனோட பேச்ச நாம இவ்ளோ தூரம் மதிக்க வேண்டிய அவசியமே இல்ல... அவன் தொத்து போய்த் திரும்புனதுக்கு அவங்க மீடியா வாய்லயே குத்துவாங்கன்னு இப்டி பேசிட்டான்... இத பெரிசா ஊத்தி அவனுக்கு கிரேடு ஏத்தி விடுராதீக அப்பு...

சாதாரண கிராமத்தான் said...

Please decide yourself.
List of all Bharat Ratna awardees so far:

Late Pandit Bhimsen Gururaj Joshi in 2008 : Karnataka
Kumari Lata Dinanath Mangeshkar in 2001 : Maharashtra
Late Ustad Bismillah Khan in 2001 for contribution in the field of Arts : Uttar Pradesh
Prof. Amartya Sen in1999 for Literature & Education : United Kingdom
Lokpriya Gopinath (posth.) Bordoloi in1999, for Public Affairs : Assam
Loknayak Jayprakash (Posth.) Narayan in 1999 for Public Affairs: Bihar
Pandit Ravi Shankar in 1999 for his contribution in the field of Arts : United States
Shri Chidambaram Subramaniam in 1998 for Public Affairs : Tamil Nadu
Smt. M.S. Subbulakshmi in 1998 for her contribution in the field of Arts : Tamil Nadu
Dr APJ Abdul Kalam in 1997 for his contribution in the field of Science and Engineering : Delhi
Smt. Aruna Asaf (Posth.) Ali in 1997 for her contribution in the field of Public Affairs : Delhi
Shri Gulzari Lal Nanda in 1997 for his contribution in the field of Public Affairs : Gujarat
Shri JRD Tata in 1992 for his contribution in the field of Trade & Industry : Maharashtra
Shri Maulana Abul Kalam Azad in 1992 for his contribution in Public Affairs : West Bengal
Shri Satyajit Ray in 1992 for his contribution in the field of Arts : West Bengal
Shri Morarji Ranchhodji Desai in 1991 for his contribution in Public Affairs : Gujarat
Shri Rajiv Gandhi in 1991 for his contribution in Public Affairs : Delhi
Sardar Vallabhbhai Patel in 1991 for his contribution in Public Affairs : Gujarat
Dr. Bhimrao Ramji Ambedakr in 1990 for his contribution in Public Affairs : Maharashtra
Dr. Nelson Rolihlahla Mandela in 1990 for his contribution in Public Affairs : South Africa
Shri Marudur Gopalan Ramachandran in 1988 for contribution in Public Affairs : Tamil Nadu
Khan Abdul Ghaffar Khan in 1987 for contribution in the field of Social Work : Pakistan
Shri Acharya Vinoba Bhave in 1983 for contribution in the field of Social Work : Maharashtra
Mother Teresa in 1980 for contribution in the field of Social Work : West Bengal
Shri Kumaraswamy Kamraj in 1976 for contribution in the field of Public Affairs : Tamil Nadu
Shri V.V. Giri in 1975 for contribution in the field of Public Affairs : Orissa
Smt. Indira Gandhi in 1971 for contribution in the field of Public Affairs : Uttar Pradesh
Shri Lal Bahadur Shastri in 1966 for contribution in the field of Public Affairs : Uttar Pradesh
Dr. Pandurang Vaman Kane in 1963 for contribution in the field of Social Work : Maharashtra
Dr. Zakir Hussain in 1963 for contribution in the field of Public Affairs : Andhra Pradesh
Dr. Rajendra Prasad in 1962 for contribution in the field of Public Affairs : Bihar
Dr. Bidhan Chandra Roy in 1961 for contribution in the Field of Public Affairs: West Bengal
Shri Purushottam Tandon in 1961 for contribution in the field of Public Affairs : Uttar Pradesh
Dr. Dhondo Keshav Karve in 1958 for contribution in the field of Social Work : Maharashtra
Pt. Govind Ballabh Pant in 1957 for contribution in the field of Public Affairs : Uttar Pradesh
Dr. Bhagwan Das in 1955 for contribution in Literature & Education : Uttar Pradesh
Shri Jawaharlal Nehru in 1955 for contribution in the field of Public Affairs : Uttar Pradesh
Dr. M. Vishweshwariah in 1955 for contribution in the field of Civil Service : Karnataka
Shri Chakravarti Rajagopalachari in 1954 for contribution in Public Affairs : Tamil Nadu
Dr. Chandrasekhara Venkata Raman in 1954 in Science & Engineering: Tamil Nadu
Dr. Sarvapalli Radhakrishnan in 1954 for contribution in Public Affairs : Tamil Nadu


Read more at: http://www.ndtv.com/article/india/list-of-all-bharat-ratna-award-winners-81336?cp

R.Gopi said...

அஃப்ரிடி நம்மூர்ல வந்து விளையாடினார் ... அதுவும் “தல” தேர்தல் அறிக்கை, தேர்தல் வாக்குறுதின்னு எல்லா டகால்டி வேலைகளும் செஞ்சுட்டு இருந்த நேரம் வேற...

அதான், அஃப்ரிடிக்கு “தல” காத்து அடிச்சு அவர் பாகிஸ்தான் போய் வேற மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாரு...

Anonymous said...

தலை 4 கோடி கொடுக்கப் போவுதாமே! அதை வச்சு 1 ரூவா அரிசி போட்டா 4 வருஷம் 1 கோடி மக்கள் உட்காந்து சாப்பிடலாமே. தன் பணத்தையா கொடுக்கப்போறாரு, அரசுப் பணத்தை இப்படிக் கண்டபடி செல்வழிக்கறதுக்காகவே இவருக்கு வெள்ளைத் துண்டைப் போர்த்தணும்.

Chandramouli said...

Yes, absolutely. Giving crores and crores of rupees to cricket players was sort of disgusting. Ample rewards are necessary, but where does one draw the line? Isn't it excessive now?

RedChipRobot said...

//"இந்திய மீடியாக்கள் மிகவும் பொறாமை பிடித்தவை, பாரபட்சத்துடன் கூடியவை. இவர்களுடன் ஒப்பிடிட்டால் பாகிஸ்தான் மீடியாக்கள் நூறு மடங்கு சிறந்தவை என்பது எனது கருத்து. இவர்களால்தான் இரு நாடுகளின் உறவுகளும் கூட சீர்கெட்டுப் போயுள்ளது" என்று கருத்து கூறி இருக்கிறார் அப்ரிடி.//

Ha ha ha ha. I am thankful to Afridi for this TRUE comments. Our "SICKular" media deserves this & more. I can't be happier.

// பாகிஸ்தானியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உள்ளதைப் போன்ற அகண்ட மனது, இந்தியர்களுக்குக் கிடையாது என்றுதான் சொல்வேன். கணிவான இதயம் இந்தியர்களுக்குக் கிடையாது.//

Correct. Thats why only 100s of Pakistanis get killed in daily bomb blasts in some or the other city in Pakistan. If only, Pakistani terrorists did not have a kind heart, daily killings will be 1,000s. You are right, Afridi.

BTB, if & when you come to play in India next time, Afridi, we will prove your word.

Abu Sana said...

what ever Afridi has said it is true and you know very well about our indian media, also if anyone has the proof for kasab is a reason for the attack............definitely no. Bombay attack was clearly planned by the BJP or sivasena group to kill karkare, he was the one who find the all bomb blast happend in India during last 10 years. in this only two was by muslims (Bombay and Coimbatore)other than these two all are done by non-muslims.

Brag said...

இந்தியன் மீடியாக்களை பற்றி கூறியதையும் நான் சரியாகவே நினைக்கிறன்!

- இந்தியன்

vshe said...

Few hard facts:

1. Cricket attracts the attention of millions of people.
2. The attraction of people brings in media and the associated sponsors
3. Sponsors pour money in to the sports and the sportsmen.
4. The sponsors charge the public by building the promotional cost as a part of the product/service cost.

5. We pay for what interests us.

Why cricket interests public is what needs to be researched. That will tell how other sports can also adapt themselves to the present needs of society.

vshe said...

Abu Sana'S comments are 'Absurd'sana .. sorry anna