பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 20, 2011

WHY GO ?

அரசியலில் நண்பர்கள் கிடையாது என்பதை வைகோ உணர்ந்திருப்பார். கடந்த ஏழு ஆண்டுகளாக ஜெயலலிதாவிடம் நட்பு கொண்டு இருந்தவரை தேர்தலில் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த தேர்தலில் போது 35 தொகுதிகள் பெற்ற வைகோ இந்த தேர்தலில் அதை பெற முடியவில்லை. தொகுதி தகுதி அடிப்படியில் வழங்கப்படுகிறது என்று மதிமுகவிற்கு தெரியாமல் இல்லை, இருந்தாலும் தாங்கள் விஜயகாந்த் கட்சியை காட்டிலும் கீழ் இடத்தில் தான் இருக்கிறோம் என்று அவர்களுக்கு ஒத்துக்கொள்ள மனம் வரவில்லை என்பது தான் உண்மையான காரணம்.

ராஜிவ் காந்திக்கு பின் தமிழ், தமிழ் ஈழம் என்ற பஜனை பெரிய அளவில் எடுபடவில்லை என்பதை அவர் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை. தமிழ் ஈழம் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தால் கலைஞர் தன் அமைச்சர்களை வைத்துக்க்கொண்டு ராஜிநாமா நாடகம் அரங்கேற்றியிருப்பார். ஆனால் அந்த பருப்பு வேகாது என்று தெரிந்து தான் யாரும் அதை கையில் எடுக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்னரே அவர் அமெரிக்காவில் உள்ள தன் பெண் வீட்டுக்கு செல்வார் என்று பேசப்பட்டது. ஏப்ரல்-மே மாதம் வெயில் அதிகமாக இருக்கும், அம்மா வீட்டுக்கு போவதற்கு பதில் பெண் வீட்டுக்கு போவது தான் அவருக்கும் அவர் கட்சிக்கும் நல்லது. இந்த தேர்தலில் இவருடைய எழுச்சி மிகு பேச்சை கேட்க முடியாது என்பது ஒரு வருத்தமான செய்தி !


மூன்றாவது அணி என்று ஒன்று வந்தால் அது நிச்சயம் கலைஞருக்கு சாதகமாக இருக்கும் என்பதை உணர்ந்து தேர்தலிலிரிந்து ஒதுங்கியது பாராட்டுக்குறியது. இதற்காவதாவது ஜெ இவருக்கு நன்றிகடன் பட்டிருக்கிறார்.


38 Comments:

Anonymous said...

vaiko is one of the great tamil leader,please dont insult him at this sad moment.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

வைக்கோ அ தி மு க அணிக்கு வெளியிலிருந்து ஆதரவு.

Anonymous said...

பஜனை? :(

ரொம்ப insultinga இருக்கு

ராமச்சந்திரன் said...

இந்த நிமிடம் வரை கருணாநிதி தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும் என நினைத்திருந்தேன்.ஜெ..வுக்கு வைகோ என்ற உற்ற தோழன் தேவையில்லை என உறுதியாக நினைத்தாரோ, இப்போது உறுதியாக ஒன்று புரிகிறது.
ஜெ.. இன்னும் மாறவில்லை. மாறவில்லை. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெ.. மாறப்போவது இல்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் கருணாநிதி தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என நினைத்திருந்தேன்.ஆனால் வைகோ போன்ற நல்ல மனிதர்கள் அரசியலில் கூடவே கூடாது என நினைத்தபின் பன்னீர் செல்வங்களும் செங்கோட்டையன்களும் மந்திரி ஆனால் என்ன, ஆகாததால் எனக்கென்ன என்ற எண்ணம் தான் வருகிறது. ஜெ.. நாளை ஆண்ண்டால் மட்டும் பாலும் தேனுமா ஓடப்போகிறது ? போனால் போகட்டும் இந்த அகங்காரம் கொண்ட நாய் ஆட்சியில் அமரட்டும் என கருணாநிதி குடும்பமே மொத்த கொள்ளையும் அடிக்கவேண்டுமா என நினைத்தோம்.
ஆனால் ஜெ தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டி கொண்டார். யார் யாரெல்லாம் ஜெ மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைத்தார்களோ (கருணாநிதி தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று) அவர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டார்.தளபதிகள் இல்லாமல் எப்படி படையை நடத்தப்போகிறார்? ராமதாஸ் ஜெவுடன் கூட்டு சேராததற்கு ஜெவுடன் அவமானப்பட தயாரில்லை என்று கூறினார். அதைவிட ஸ்பெக்ட்ரம் ஊழலே இருந்தாலும் கருணாநிதி பரவாயில்லை என முடிவெடுத்தது சரியென ஜெ.. நிரூபித்துவிட்டார். எனக்கே இப்போது திருந்தாத ஜெவுக்கு வாக்களிக்க வேண்டுமா என்ற எண்ணமே மேலோங்குகிறது . கானா காட்டில் அடை மழை.

Anonymous said...

வைகோ தமது ம.தி.மு.க.வை, தி.மு.க.வுக்கு மாற்றாக நினைத்தவர்; நினைப்பவர். அப்படிப்பட்டவருக்கு நேற்று பிறந்த கொங்கு முன்னேற்ற கழகம் ரேஞ்சுக்கு சீட் கொடுத்தால், எரிச்சல் வரவே செய்யும். குறைந்தபட்சம், பா.ம.க.ரேஞ்சுக்காவது மதிக்க வேண்டும்.

மேலும் இப்போது அ.தி.மு.க. கொடுப்பதாகச் சொல்லும் 12 சீட் மட்டுமே பிரச்னை இல்லை; அதையும் அவர் வாங்கிக்கொள்ளவே விரும்புவார். தம் கட்சியின் இன்றைய நிலை அவருக்குத் தெரியாதா என்ன?

பிரச்னை, தம் முகத்தை காப்பாற்றிக்கொள்வதில் இருக்கிறது. பெருமையை, கெளரவத்தை, முக்கியத்துவத்தை இழக்காமலிருப்பதில் இருக்கிறது. தான் அரசியல் அனாதை அல்ல, தம்மைச் சுற்றியும் ஓர் இளைஞர் வாக்குவங்கி காத்திருக்கிறது என்பதை மற்றவர்கள் ஏற்கவேண்டிய கட்டாயம், அதை உணர்த்த வேண்டிய தேவை வைகோவுக்கு இருக்கிறது.

வீட்டில் மூத்தவர்கள் முறைத்துக்கொண்டால், அவர்களாகத் தம் கெளரவத்தை விட்டுக்கொடுத்துவிட்டு, நேராக வந்து பேச மாட்டார்கள். தயங்குவார்கள். கெளரவம் போல் ஏதோவொன்று தடுக்கும். வைகோவும் இப்போது அதுபோன்ற ஒரு நிலையில் இருக்கிறார்.

ஜெ. இன்று மாலையோ, இரவோ, வைகோவை நேரே ஒருமுறை பார்த்தால் போது, எல்லா முறுக்கும் கோபமும் பறந்துபோய்விடும்! ‘என் அன்புச் சகோதரியே என்னை நேரே வந்து ஆதரவு கேட்டுவிட்டார். அது போதும். நீ கொடுப்பதைக் கொடும்மா. நான் உனக்காக உயிரையே கொடுக்கிறேன்’ என்று வீரவசனத்தோடு நாளை முதல் தமிழகம் எங்கும் களம் காண புறப்பட்டுவிடுவார் வைகோ!

இப்போது வைகோவுக்கு தேவை கூடுதல் சீட் அல்ல! சிதைந்துபோன கெளரவத்துக்கு மருந்து மட்டுமே!!

நேசமுடன்
வெங்கடேஷ்

Anonymous said...

அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது, முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும், எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை.

அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும், எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல--வைக்கோ .
உண்மையான-உண்மை ,முழு- உண்மை. இதுதான் ஜெயாவின் கடைசி தேர்தல்

Anonymous said...

தி.மு.க.வின் பல்வேறு அறிவிப்புகளை கூடியிருந்தோர்- தோழமைக் கட்சியினர் உள்பட அனைவரும் பலத்த கைத்தட்டலுடன் உற்சாக- வெள்ளம் பொங்க வரவேற்றுப் பாராட்டி மகிழ்ந்தனர்.

சமூகப் புரட்சி, சமதர்மம் பூத்துக் குலுங்கும் திட்டமாக உள்ள தேர்தல் அறிக்கை . இதில் இல்லாதது எதுவும் இல்லை; சொல்லாததும் ஏதும் இல்லை அத்தகைய அற்புதமாக அமைந்துள்ளது

Anonymous said...

வைகோ தான் ஒரு தன்மானமுள்ள, நாகரிகமான, பண்பான அரசியால்வாதி என்பதை மறுபடியும் நிரூபித்து உள்ளார். ஜெயலலிதா தனது சுபாவமான தலைகனம், திமிர், அகம்பாவம், அடுத்தவர்களை மதிக்காமல் இருப்பது, அடுத்தவர்களை அனுசரிக்காமல் இருப்பது போன்ற குணங்கள் தன்னை விட்டு இன்னும் போக வில்லை என காட்டியுள்ளார். அவரின் அந்த கெட்ட குணங்களால் தனது கட்சியின் நீண்ட கால நட்பான, கஷ்ட நேரங்களில் துணை நின்ற, இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க விற்காக விட்டுக் கொடுத்த, நம்பிக்கைக்குரிய தோழமை கட்சியான ம.தி.மு.க வை மதிக்காமல், அலட்சியம் செய்துள்ளார். ம.தி.மு.க வை விட்டு பலர் வெளியில் போய் இருக்கலாம். ஏன்... அ.தி.மு.க வை விட்டும் பலர் சமீப காலத்தில் தி.மு.க விற்கு போய் இருக்கிறார்களே. ம.தி.மு.க வெறும் 6 தொகுதியில் தான் போன முறை வென்றது என்கிறார்கள். அ.தி.மு.க கூட போன முறை எத்தனையோ தொகுதியில் நின்று சுமார் 65 தொகுதியில் தானே வெற்றி பெற்றது. பிறகு ஏன் அ.தி.மு.க விற்கு ஒரு நியாயம், ம.தி.மு.க விற்கு ஒரு நியாயம். போன தடவை ம.தி.மு.க இல்லை என்றால் அ.தி.மு.க இந்த அளவு கூட ஜெயித்திருக்க முடியாது. தமிழ் நாடு முழுவதும் வைகோ செய்த சூடு பறக்கும், கூர்மையான மற்றும் மின்னல் வேக பிரசாரம் தான் அ.தி.மு.க இந்த அளவாவது ஜெயிக்க உதவியது. வைகோ வின் பேச்சாற்றல் ஜெயலலிதாவிற்கு இல்லை. ம.தி.மு.க வை தன கூட்டணியில் வைத்துக் கொள்ளுவது ம.தி.மு.க வை விட அ.தி.மு.க விற்கு தான் லாபம். வைகோ சுயநலமாக இல்லாமல் கூட்டணி வெற்றிக்காக பாடு படுவார். அப்படிப் பட்டவரை ஜெயலலிதா இன்று மதிக்காமல், விட்டுக் கொடுக்காமல், அலட்சிய படுத்துகிறார். ஏன்..... இன்று விஜயகாந்த் தன்னுடன் இருப்பதால். இந்த நிலையிலும் வைகோ ஜெயலலிதாவையோ, அ.தி.மு.க வையோ மரியாதை இல்லாமலோ, அநாகரீகமாகவோ பேச வில்லை. எவ்வளவு கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்கிறார். இன்று தான் மற்ற அரசியல்வாதிகளை போல் இல்லை என்று காட்டி இருக்கிறார். இன்று அவரின் நடவடிக்கையையும், அணுகு முறையையும் பார்த்து அவர் மேல் எல்லோருக்கும் ஒரு தனி மரியாதை உருவாகி இருக்கிறது. இதுவரை ம.தி.மு.க வையும், வைகோ வையும் நினைக்கதவர்களும், ஆதரிக்கதவர்களும் கூட இன்று அவரையும், ம.தி.மு.க வையும் பாராட்டுகிறார்கள், ஆதரிக்கிறார்கள்.

நாகா said...

//இந்த நிமிடம் வரை கருணாநிதி தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும் என நினைத்திருந்தேன்.ஜெ..வுக்கு வைகோ என்ற உற்ற தோழன் தேவையில்லை என உறுதியாக நினைத்தாரோ, இப்போது உறுதியாக ஒன்று புரிகிறது.
ஜெ.. இன்னும் மாறவில்லை. மாறவில்லை. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெ.. மாறப்போவது இல்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் கருணாநிதி தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என நினைத்திருந்தேன்.ஆனால் வைகோ போன்ற நல்ல மனிதர்கள் அரசியலில் கூடவே கூடாது என நினைத்தபின் பன்னீர் செல்வங்களும் செங்கோட்டையன்களும் மந்திரி ஆனால் என்ன, ஆகாததால் எனக்கென்ன என்ற எண்ணம் தான் வருகிறது. ஜெ.. நாளை ஆண்ண்டால் மட்டும் பாலும் தேனுமா ஓடப்போகிறது ? போனால் போகட்டும் இந்த அகங்காரம் கொண்ட நாய் ஆட்சியில் அமரட்டும் என கருணாநிதி குடும்பமே மொத்த கொள்ளையும் அடிக்கவேண்டுமா என நினைத்தோம்.
ஆனால் ஜெ தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டி கொண்டார். யார் யாரெல்லாம் ஜெ மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைத்தார்களோ (கருணாநிதி தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று) அவர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டார்.தளபதிகள் இல்லாமல் எப்படி படையை நடத்தப்போகிறார்? ராமதாஸ் ஜெவுடன் கூட்டு சேராததற்கு ஜெவுடன் அவமானப்பட தயாரில்லை என்று கூறினார். அதைவிட ஸ்பெக்ட்ரம் ஊழலே இருந்தாலும் கருணாநிதி பரவாயில்லை என முடிவெடுத்தது சரியென ஜெ.. நிரூபித்துவிட்டார். எனக்கே இப்போது திருந்தாத ஜெவுக்கு வாக்களிக்க வேண்டுமா என்ற எண்ணமே மேலோங்குகிறது . கானா காட்டில் அடை மழை.//

My whole family took the same decision.

அனலிஸ்ட் said...

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் ...
* தமிழ்நாட்டில் கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ தான் இந்த தேர்தலில் முதல்வர் ஆக முடியும். (அதிக இடங்களில் போட்டியிடுபவை தி மு க வும், அ தி மு க வும்.)
* விழக் கூடிய வோட்டுகள் கருணாநிதி ஆதரவு அல்லது எதிர்ப்பு வோட்டுகள்.
* மற்ற கட்சிகள் எவ்வளவு இடங்கள் பெற்றாலும், இருவரில் யாராவது ஒருவரைத் தான் ஆதரிக்க வேண்டும்.
காங்கிரஸ், பா ம க, தே மு தி க கட்சிகள் - இருவரில் யாரை வேண்டும் என்றாலும் ஆதரிப்பார்கள்.
^ ம தி மு க விற்கு விழுகின்ற ஓட்டுகள், வைக்கோவின் நல்ல இமேஜுக்கு மற்றும் கருணாநிதி எதிர்ப்பு வோட்டுகள்.
* ம தி மு க வேட்பாளர்களைத் தோற்கடிக்க தி மு க முழு மூச்சுடன் செயல் படும். அவர்கள் பாஷையில், வைக்கோ துரோகி.
* இந்த நிலைமையில், இப்போ வைக்கோ விற்கு ஆதரவாக காட்டிக் கொள்பவர்கள் / குரல் கொடுப்பவர்கள், அநேகமாக கருணாநிதி ஆதரவாளர்களாக இருப்பார்கள்.

Anonymous said...

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. உண்மையில் ஜெயலலிதாதான், வைகோவை புறக்கணித்து விட்டார்

- மத்திய ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.

Anonymous said...

// எனக்கே இப்போது திருந்தாத ஜெவுக்கு வாக்களிக்க வேண்டுமா என்ற எண்ணமே மேலோங்குகிறது . கானா காட்டில் அடை மழை.//

ஆமான்ல.

ராஜரத்தினம் said...

ஜெயலலிதாவின் நோக்கம், முதலிலேயே வைகோவை அழைத்து 12 தொகுதி என்று சொல்லி அவர் இதே போன்று அப்போதே செய்திருந்தால் அது கூட்டணிக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் என்ற காரணத்தினால்தான் அவர் வைகோவுக்கு கடைசியாக சீட் ஒதுக்கினார். இதே பொன்று திமுக அடிபொடிகள் வைகோவிற்காக பொய்கண்ணீர் (முதலைக் கண்ணீர் என்று முதலையை அவமானபடுத்த விரும்பவில்லை) வடித்திருப்பார்கள். இப்போ அழகிரி பேசுவதைபோல அப்போதே பேசியிருப்பார். இதை தவிர்த்ததே ஜெயலலிதாவின் சாமர்த்தியம் புரிகிறது. எப்படியோ கருணாநிதி தோற்றால் சரி.

ELANGOVAN said...

//தொகுதி தகுதி அடிப்படியில் வழங்கப்படுகிறது என்று மதிமுகவிற்கு தெரியாமல் இல்லை,

Thaguthi adipadayil parthal DMDK def worth 20+ seats.

Jaya could have easily given 20 seats to vaiko. even after 20 seats Jaya can contest 140 seats. but she is with the same attitude, vindictive and worst character. if needed she will fall on the foot. once get benefited she will take action for that. today vaiko, tomorrow vijayakanth.

(karriyam mudindadum kalatividum mudal aall)

i hope tamilnadu wont get this lady again.

ச'தி'கலா! said...

'தூத்துக்குடி ஸ்டெர்​லைட் ஆலையை எப்படியாவது மூடிவிடவேண்டும் என்று அந்த ஆலை ஆரம்பித்த காலம் முதல், இன்று வரை போராடிக்கொண்டு இருப்பவர் வைகோ. சென்னை உயர் நீதிமன்றம் அந்த ஆலையை மூடுவ​தற்கு தீர்ப்பு அளித்துள்ளது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்​துள்ளது. அங்கும் சென்று வாதாடி வருகிறார் வைகோ. அவரை இந்த விஷயத்தில் அமைதியாக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார்கள். ஆனால் அவர் சும்மா இல்லை. இந்த நிலையில் இது சம்பந்தமான ஆட்கள் அ.தி.மு.க. தரப்பை சந்தித்தார்கள். வைகோவை உங்கள் அணியில் சேர்க்காமல் இருந்தால் நல்லது என்று சொன்னார்கள்!'' என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

''ஜெயலலிதாவுக்கும் விஜய மல்லை​யாவுக்குமான நட்பு அனைவரும் அறிந்ததுதான். விஜய மல்லையா தனது நிறு​வனத்தின் மூலமான வர்த்தகத் தொடர்புகளை இலங்கை​யில் விரிக்கிறார். இந்தப் பரிவர்த்​தனை தொடர்பாக கொழும்பு சென்ற அவரிடம் சில வாக்​குறுதி​​கள் வாங்கப்பட்டதாம். 'நீங்கள் ஜெயலலிதாவிடம் சொல்லி வைகோவை ஒதுக்கிவைக்கக் கூடாதா?’ என்று சொல்லப்​பட்டது.

அதன் மூலமாகத்தான் ஜெயலலிதா இப்படி நடந்துகொள்கிறார். தமிழகத்தில் பிரபலமான நடிகை ஒருவரின் தாயார் சிங்களத்தைச் சேர்ந்தவர்.

அவர் மூலமாகவும் ஜெயலலிதாவுக்கு சில அழுத்தங்கள் வந்தன!'' என்றும் சொல்கிறார்கள்

பிச்சைக்கார வாக்காளன் said...

தி மு க தேர்தல் அறிக்கையில் ..
* இலவச அரிசி
* இலவச மிக்சி /
* இலவச கிரைண்டர்

'எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்!'
மக்கள் மாவாட்டிகிட்டு இருக்கும்போது அவங்க கோடி கோடியா சுருட்டிகிட்டுப் போயிடுவாங்க!

ச'தி'கலா! said...

வைகோ எனும் பொய்கோ

ஒரு சீட்டுக்காக வீராவேசமாக ஜீப்பில் பின்னால் தொங்கிக்கொண்டு போயஸ் தோட்டம் போன வைகோ எந்த முகத்தை வைத்துக்கொண்டு கருணாநிதியை சந்திப்பார்?

வைகோ எனும் பொய்கோவும், சனி நாவில் குடியிருக்கும் சம்பத்தும் உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டே என்று பாடிக்கொண்டு அப்படியே மீண்டும் ஒரு பாதயாத்திரை மேற்கொண்டு, மே 13 -ம் நாள் கோபாலபுரத்திலோ அல்லது போயஸ் தோட்டத்திலோ பாதயாத்திரையை முடித்து விடுங்கள்..

Anonymous said...

FULL CREDITS GOES TO VIJAYAMALLYA AND RAJAPAKSHAY THEY ARE THE BACK GROUND OF THIS

Durairaj Sukumar said...

வைகோ மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவு எடுத்துவிட்டார் என்று தான் நான் நினைக்கிறேன் .இது வரை தலைவர்களை இழந்த வைகோ இனி தொண்டர்களையும் இழக்க போகிறார்.ஜெ வென்றல் என்ன தோற்றால் என்ன ? ம தி மு க வின் எதிர்காலம் கருதி தொண்டர்களுக்காக
தனியா...க போட்டியிட்டு தே.மு தி. க வை விட அதிக வோட் பெற்று (கண்டிப்பாக பெறமுடியும் ) வரும் தேர்தல்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகி இருக்கலாம் .வாய்ப்பை மீண்டும் தவற விட்டு விட்டார். வைகோவுக்கு துரோகம் செய்ததில்' ஜெ' வும் சரி 'க ' வும் சரி நிகரானவர்கள்.

Durairaj Sukumar said...

MDMK will soon become Dravidar Kalagam if this trend continues. Only staunch followers will be left and not common people.Thats what DK's Veeramani is having now.Followers from general public is a must for any political party who have faith in electoral politics. . But DK is not contesting elections.So he can continue to change his colour elections after elections without contesting .He has nothing to loose. But Vaiko cant behave like Veeramani.He once again taken a sentimental and emotional decision and not a rational and political decision.This is his huge minus point which prevent him from becocoming the CM of TN ,which he really deserves when compared to people like JJ,KK,VK,PC,RD etc;

Durairaj Sukumar said...

MDMK will soon become Dravidar Kalagam if this continues. Only staunch followers will be left and not common people.Thats what DK's Veeramani is having now.Followers from general public is a must for any political party who have faith in electoral politics. . But DK is not contesting elections.VAIKO cant behave like veeramani ,a chameleon who switch over colours frequently.Vaiko once again taken a sentimental and emotional decision and not a rational and political decision.This is his huge minus point which prevent him from becocoming the CM of TN,which he really deserves.

o manitha. said...

my friend ...u r observation on ealam definitely hurts...how can u say that it has't in the tamils mind...ya it may be not in the minds but it always in the hearts

Don said...

Glad to find mature comments from fellow tamils. Nothing to add more.
Vaiko could have become the forerunner of third front in the election and it's unfortunate that he boycotts election. That'll definitely demotivate his party cadres, though his decision to move away from AiADMK is correct. I don't think AIADMK is any better than MDMK. One lesson Vaiko can learn from Vijayakanth is guts. The 41 seats for Vijayakanth is the price for the guts he had to stand alone.
Just from the above comments, it's evident that the people are fed up with both DMK and AIADMK, and the time is ripe for third front. My humble request is to avoid thinking that only DMK and AIADMK should be voted to power but instead extend your support to third front however ridiculous they may be.
The problem is with people's mentality, that if it's not DMK, it should be AIADMK. It'll be great if the people stop thinking too much about such coalition equations and instead start voting for the most eligible person in the candidacy. A coalition will fall into place naturally if the right persons are elected and we as voters need not worry too much about it. Our worry should be about whom should we cast our vote to. If people think about such coalition equations, they'll refrain from voting to the most eligible candidates in their constituency and that'll permanently bar the entry for genuine people into politics. I expected that the left fronts will join hands with MDMK and boycott the election. The TN people after all don't deserve untainted politicians like them.

Anonymous said...

என்னாத்துக்கு வை.கோ விற்காக சில பேர் இங புலம்பறாங்கன்னு தெரியல. அவர் என்னிக்கு தமிழ் நாட்டுக்கோ நம் முன்னேற்றத்துக்கோ பாடுபட்டிருக்கிறார். எங்கேயும் எப்போதும் இலங்கைத் தமிழர்கள் பற்றித்தான். பேசாமல் இவர் இலங்கைக்கு சென்று செட்டில் ஆக நேரம் இது.

Anonymous said...

அரசியலில் ரொம்ப நேர்மையானவ்ர், நாணயமானவர், நம்பத்தகுந்தவர் ஆனால் அட்ரஸ் இல்லாதவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவர் மட்டுமே. ஆகவே அவருக்காக தீவிர பிரச்சாரம் செய்ய வைகோ முன்வரவேண்டும்.

I am sorry! இ.வ விடம் சூடுபட்ட யாரோ ஒரு அனானி வழக்கம் போல பொன்.ராதாகிருஷ்ணனுக்கே என் ஓட்டு என்று இந்த முறை எழுதாததால் I have to fill it up.

ராஜேஷ், திருச்சி said...

NEWS TODAY :

•ஊரை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா : மதிமுகவினர் ஆவேசம்
•மதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. விலகல்

wrong calculations - DMK is still getting benefits out of MDMK Decision...

MDMK caders already started burning Jaya Effigy.. and raised slogan against her and ADMK..

DMK will easily add oil to fire and will benefit..

Alagiri will start to get teh list of such MDMK caders..

even if vaiko had contested, there woudl be split of votes.. but now most of them MDMK cadres will poll to DMK just to show they anger to JAYA..

wait and see...

at the end, DMK gets the benefit..

ராஜேஷ், திருச்சி said...

1 MDMK MLA joins DMK.. FLASH NEWS

geeyar(ஜீயார்) said...

"எம்ப்டி" Mk வை முதலில் தனியாக நிற்க சொல்லுங்கள் தொகுதிக்கு 1000 ஒட்டு கூட கிடைக்காது. அப்புறம் என்ன மரியாதையை வேண்டி கிடக்கு. எண்ணிக்கை தான் முக்கியம் என்றால் திருச்செந்தூர் கு கிழக்கே கன்னியாகுமரி கு தெற்கே இடம் பார்க்க வேண்டும்.

geeyar(ஜீயார்) said...

லிபியாவில் ஆட்சியாளர்களால் தாக்கப்பட்ட போரட்டகரகளுக்குக்காக ஐரோப்பிய அமெரிக்க களம் இறங்கின. இலங்கை யிலும் பெட்ரோல் இருந்திருந்தால் ஈழ தமிழர்கள் காப்பாற்ற பட்டிருப்பார்கள். என்ன செய்வது அங்கே பெட்ரோல் இல்லையே.

Anonymous said...

ஜீயார்! சும்மா திரிக்காதீங்க. எவ்வளவு வருடங்கள் இந்திய, அமெரிக்க, ஐரோப்ப அரசாங்கங்கள் பிரபாகரனுக்கு support செய்தன. அப்ப ஸ்ரீலங்காவில் பெட்ரோலா இருந்தது. சும்மா உளறக்கூடாது சொல்லிட்டேன் ஆமாம். எப்போது இந்திய மண்ணுக்கு வந்து ராஜீவை கொன்றார்களோ அப்போதே அவருக்கும் அவர் சம்பந்தப்பட்டவருக்கும் எல்லா அரசாங்கங்களும் பெரும்பாலான மக்களும் ஆதரவை நிறுத்திக் கொண்டன including வைகோ.

குடுகுடுப்பை said...

தமிழ் ஈழத்தை அவர் அரசியலுக்காக எடுத்து தமிழக முதல்வராக எடுத்தாரா? வெற்றியோ தோல்வியோ , தரிசோ அவர் அந்த நிலையை எப்போதும் மாற்றிக்கொள்ளவில்லை. அரசியலில் பிழைக்கத்தெரியாதவர். ராமதாஸ் மாதிரி இவரும் நாயுடு கட்சி நடத்தி பிழைப்பு நடத்தி இருந்தால் மதிப்பு இருந்திருக்கும்.

Anonymous said...

Vandhutangada.. cross belt kumbal... Jayalalitha & Cho... kosti... Amma enna avannu pappom..

Anonymous said...

According to a poll conducted on the eve of 2006 assembly election, MDMK was not very successful in transferring its votes to AIADMK alliance. According to that poll, about 45% of the people who had voted for MDMK in the 2004 Lok Sabha Election when it was part of the DMK alliance would not vote for the AIADMK alliance although MDMK aligned with AIADMK. This suggests that even in 2006 MDMK was not of much help to the AIADMK alliance and its exit won't have any impact this time either.
http://www.hindu.com/2006/04/14/stories/2006041413471600.htm

Bharath

neysamy said...

//லிபியாவில் ஆட்சியாளர்களால் தாக்கப்பட்ட போரட்டகரகளுக்குக்காக ஐரோப்பிய அமெரிக்க களம் இறங்கின. இலங்கை யிலும் பெட்ரோல் இருந்திருந்தால் ஈழ தமிழர்கள் காப்பாற்ற பட்டிருப்பார்கள். என்ன செய்வது அங்கே பெட்ரோல் இல்லையே.//
முழு உண்மை.
ஈராக் முதலான் எண்ணெய் வள நாடுகள் தான் வளர்ந்த நாடுகளின் குறி. இலங்கை அல்ல.

Anonymous said...

//லிபியாவில் ஆட்சியாளர்களால் தாக்கப்பட்ட போரட்டகரகளுக்குக்காக ஐரோப்பிய அமெரிக்க களம் இறங்கின. இலங்கை யிலும் பெட்ரோல் இருந்திருந்தால் ஈழ தமிழர்கள் காப்பாற்ற பட்டிருப்பார்கள். என்ன செய்வது அங்கே பெட்ரோல் இல்லையே.//
முழு உண்மை.
ஈராக் முதலான் எண்ணெய் வள நாடுகள் தான் வளர்ந்த நாடுகளின் குறி. இலங்கை அல்ல.

ConverZ stupidity said...

வைகோ-வினுடைய LTTE ஆதரவு போக்கில் நான் வேறுபடுகிறேன். ஒரு நல்ல மனிதர் என்பதில் உடன்படுகிறேன். அரசியலில் நல்லவர்கள் இருப்பதும் அவர்கள் பக்க பலமுமாக இருப்பது அபூர்வம். ஜெ. இந்த விஷயத்தில் வைகோ-வை அனுசரித்து போகலாம்.

R.Gopi said...

//மூன்றாவது அணி என்று ஒன்று வந்தால் அது நிச்சயம் கலைஞருக்கு சாதகமாக இருக்கும் என்பதை உணர்ந்து தேர்தலிலிரிந்து ஒதுங்கியது பாராட்டுக்குறியது. இதற்காவதாவது ஜெ இவருக்கு நன்றிகடன் பட்டிருக்கிறார். //

***********

அட்டகாசமான “மஞ்சள் கமெண்ட்”

Anonymous said...

வலது புறம் போட்டிருக்கும் வாக்கெடுப்பில் பாஜகவையும் சேர்த்து போட்டிருந்தால், எவ்வளவு பேர் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிந்திருக்குமே. அதன் பிறகு இன்னும் நன்றாக நக்கலடித்து பார்க்கலாமே?