பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 17, 2011

Left and Leftovers

சில நாட்களுக்கு முன் 'சோ'என்ற பெய்த மழையால் ஜெ வீட்டுப்பக்கம் ஒருவர் மழைக்கு ஒதுங்கினார். அவர் பெயர் விஜயகாந்த். அவர் ஒதுங்கிய சமயம், தமிழகத்தில் 6.3 ரிக்டர் அளவு பூகம்பம் வந்தது. பூகம்பம் வந்தால் அதை தொடர்ந்து சுனாமி வருவது தான் இயற்கை. சுனாமி நேற்று வந்தது - தா.பாண்டியனும், ஜி.ராமகிருஷ்ணனும் சந்தித்து சுனாமி நிலவரம் குறித்து பேசினர். இன்று சுனாமி மேலும் வலுபெற்றது. மூன்றாவது அணியில் விஜய்காந்தும் வந்து சேர்ந்துள்ளார். அவசர அவசரமாக வைகோவும் சென்னை திரும்புகிறார். சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பால் அதிமுக அணு உலை வெடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. இந்த வெடிப்பை அடுத்து தமிழக மக்களுக்கு 'கதிர்' வீச்சு பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இந்த கதிர் வீச்சு தொடர்ந்தால் தமிழகத்தில் மிச்சம் இருப்பது Left and Leftovers மட்டும் தான்.

67 Comments:

Flash Actionscript said...

Jeya never get away from her ego. AIADMK going to collapse soon.

Anonymous said...

மற்றவர்கள் எல்லாம் தப்பித்துக் கொள்வார்கள்.
ஆனால் அண்ணன் காப்டனுக்குதான் டெபொசிட் போகும்.

அடுத்த எலெக்சன் இல் யாரோடு கூட்டணி ? அழகிரி கட்சியோடா ? இல்லை ஸ்டாலின் கட்சியோடா?

Anonymous said...

Major blow to Pro-ADMK IV. Now IV is trying to save face by some fancy writing style.

Ganpat said...

மு.க அதிருஷ்டசாலி என்பது தெரியும் ஆனால் இவ்வளவு அதிர்ஷ்டசாலியா?
இவர்க்கும் நேர்மைக்கும் உள்ள தூரத்தை விட அதிகம் ஜெயாவிற்கும்
அரசியலுக்கும் உள்ள தூரம்.
மூன்றாவது அணியில் BJP யும் சேரலாம்

Anonymous said...

இந்த கதிர்வீச்சின்னால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடம் நோக்கி இடம் பெயர்ந்து விட்டார்கள்.
ஆண்டிகள் கூடி மேடம் கட்டும் வேலை.

அஞ்சா நஞ்சன் said...

ஆக நிரந்தர பிச்சைக்காரர்கள் என்னவோ தமிழக மக்கள்தான்...

Kayal said...

இன்னும் எவ்வளவு பட்டாலும் அந்த அம்மா திருந்தாது. ரஜினி சொன்ன மாதிரி இனி ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது. ஏற்கனவே பண பட்டுவாடாவை ஆரம்பிச்சாச்சு.........ஹ்ம்ம்

Unmai said...

மு.க அதிருஷ்டசாலி என்பது தெரியும் ஆனால் இவ்வளவு அதிர்ஷ்டசாலியா?
இவர்க்கும் நேர்மைக்கும் உள்ள தூரத்தை விட அதிகம் ஜெயாவிற்கும்
அரசியலுக்கும் உள்ள தூரம்.
மூன்றாவது அணியில் BJP யும் சேரலாம்


100% true

gopal said...

Jaya's political chapter is over for ever.She deserves it for her arrogance and high handedness. Otherwise she will not fritter away this golden opprtunity to return to power with all the scams and suicides staring at karuna&co.
Tamilians and their generations have to suffer for ever under Stalin ,Alagiri and Knaimozhi. It is their fate.

சட்னி சாம்பார் said...

பொதுவா 'கதிர்'வீச்சு பாதிப்பு மூணு நாலு தலைமுறை தாண்டியும் கூட இருக்கும்!, அதாவது 'கதர்' மற்றும் 'கதிர்'க்குடும்ப்பத்தின் தலைமுறைய சொன்னேன்! மக்களே கபர்தார்!

Anonymous said...

ஜெ ஒரு அசடா, கிறுக்கா, பைத்தியமா ?

Black said...

JJ will win and be the next chief minister..its all in the game. match on now.

Sundar said...

When we have to fight with the main enemy, we have to get full understanding with all others. It is not good time for Jeyalalitha to go by her ego. Good luck to DMK N CO. AIADMK will feel for it after the election.
sundararajan

Sundar said...

And i forget to appriciate you for your " LEft and Leftovers " which connects the last 24 hours hectic political situation in tamilnadu with the natures latest peril at Japan.
Sundararajan

Anonymous said...

’அம்மா’ ’அய்யா’ ரகசிய டீல் முடிஞ்சிருச்சின்னு ஒரு பட்சி கூவுதப்போ. தில்லையம்பல நடராசா உன் திருவிளையாடல் ரொம்ப சூப்பரப்பா...

வாழ்க வருங்கால முதல்வர் ’களை’ஞர். 300 கோயிலுக்கு கும்பாபிஷேகம் பண்ண புண்ணியம் சும்மா போகுமா? ஆயிரம் லிங்கம் மாதிரி (சகஸ்ரலிங்கம்) புது சட்டசபையை உருவாக்கிய புண்ணிய பலன் கிடைக்காமப் போயிருமான்னேன்.

Anonymous said...

Today Night Manada Mayilda dance by Namitha and Kushbu @ Goplapuram

Amarnath said...

Kadarum Kariyum # 3G vegathil mootaigal avizghpargal

ottu podum tamil makkale pannathai karaiyavaingul but vote for betterment of TN - save TN from Family Business sorry rule

Anonymous said...

ஆட்சிக்கு வராத முன்பே இவ்வளவு திமிரா? அப்புறம் வந்துட்டா எப்பா இந்த ஹிட்லருக்கு அறிவாலயமே பரவாயில்லை ;

Anonymous said...

sometime back idlyvadai put a pic of vijayakanth kicking someone and mentioned you will show the person after election.
dont have to wait long., for now you can show "Cho" there.
if possible make one more pic that jaya is kicing vijaykanth and vaiko.

Anonymous said...

//அடுத்த முதல்வர் கருணாநிதி தான் சந்தேகம் வேண்டாம்.
காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஒன்றும் பெரிய கட்சி அல்ல. மற்றும் விஜயகாந்த் கட்சி உழல் ஒழிப்பு கோஷம் போடும் கட்சி. அது ஜெயா உடன் சேர்ந்ததால் அதன் கோஷம் பொய்யாகி விட்டது. பத்திரிகைகள் அனைத்தும் ஜெயா மாயையில் உள்ளன. அவைகளுக்கு பாமர மக்களின் மன நிலை தெரிவில்லை. படித்த மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். பாமர மக்கள் கருணாநிதியை அரியணையில் அமர வைப்பார்கள்.தேர்தல் முடிவு வந்த பின்னர் இதை உணர்வீர்கள்---தஞ்சாவூர் முனியாண்டி.//

அம்மாவின் அஹங்காரத்துக்கு முழு காரணம் இட்லி வடை போன்ற மீடியாக்களும், தினசரிகளும் தமிழ் வார , வார இரு பத்திரிகைகளும் தான். தமிழ் மக்கள் எல்லாம் ஒரேயடியாக் அம்மாவை ஆதரிப்பது போல மாயையை உருவாக்கி அம்மாவை ஏமாற்றியவை அவைகள் தான் .அந்த மாயையில் ஏமாந்த அம்மாவின் தாடலடி அறிவிப்பால் ஏமாந்தவர்கள் கருப்பு எம் . ஜி. ஆர். வலது, இடது மற்றும் வைகோ மட்டுமல்ல அந்த மீடியாக்களும் தான் .இப்போதாவது அம்மாவின் உண்மை பிறவி குணத்தை புரிந்து கொண்டால் நல்லது--தஞ்சாவூர் முனியாண்டி.

rawanan said...

மொட்டை பாஸ் சோ தான் ஜெயலலிதாவின் இந்த நிலைக்கு காரணம். எதிர்ப்பதற்கு புலிகள் இல்லாததால் புலி ஆதரவாளர் வைகோவை ஒதுக்குவதாக நினைத்துக்கொண்டு 'ஜெ' யை தனிமைப்படுத்தி விட்டார். வாழ்க பாரப்பன சாமர்த்தியம்.

rajatheking said...

விஜய்காந்த் மீது என்ன தவறு?

விஜய்காந்த் ஆ.இ.ஆ.தி.மு.க வுடன் கூட்டணி வைததை சிலர் கிண்டல் செய்கின்றனர். அவர்களிடம் சில கேள்விகள்.

தனியாக 234 தொகுதிகலிலும் நின்று தன் பலதை நிருபித்தார். பெரிய கட்சினு மார்தட்டும் எந்த கட்சிகும் இந்த துனிவு உண்டா?

தேர்தலுக்கு, தேர்தலுக்கு கூட்டணி மாறும் பா.ம.க போலா மாறினார்?

மக்களுக்காகனு கட்சி ஆரம்பித்து தன் மகன்கலுக்காக கட்சி என வியபாரம் செய்யும் கட்சிகலுக்கு மத்தியில் மனைவி, மச்சான்னுடன் கட்சி ஆரம்பித்து அவர்கலுக்கு பதவி தந்தது என தப்பு?

கூட்டணில் இருந்தால் ஒரு பேச்சு, இல்லை என்றால் ஒரு பேச்சு பேசும் ராமதாஸ் போலவா பேசுகிறார்?

ஜெயலலிதா பற்றி தான் கூறியதை இது வரை மாறுத்ததில்லை.

மகனுக்காக, மகள் மேல் உள்ள வழக்குகாக என கூட்டணி போடும் கட்சிகளுக்கு மத்தியில் கட்சிகாக கூட்டணி சேர்ந்த்தது என தப்பு?

Anonymous said...

///மொட்டை பாஸ் சோ தான் ஜெயலலிதாவின் இந்த நிலைக்கு காரணம். எதிர்ப்பதற்கு புலிகள் இல்லாததால் புலி ஆதரவாளர் வைகோவை ஒதுக்குவதாக நினைத்துக்கொண்டு 'ஜெ' யை தனிமைப்படுத்தி விட்டார். வாழ்க பாரப்பன சாமர்த்தியம்.
///
CORRECT.

Anonymous said...

just now watched a video in nakkheeran. jaya kodumbavikku semma mathu mathirukkanga dmdk guys. summa serrupadi jayavukku.

kothandapani said...

Karunanidhi did allthings in his capacity to bring back Jaya to power.
Not to be left behind, Jaya is doing all things now to push back the people to Karunanidhi.Jaya should come to the earth and understand that she is not MGR to dictate terms to others.In the changed scenario,she should try to keep intact as many parties as possible in her front by her tactful approach.Or else she will be losing a golden opportunity.

சட்னி சாம்பார் said...

அதிமுகவுக்கு விஜய்காந்தின் 3 நிபந்தனைகள்

1. மதிமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும்
2. தேமுதிக கேட்ட தொகுதிகள் அனைத்தும் வேண்டும் -21 in ADMK list
3. கூட்டணித் தலைவர்கள் கூட்டுப் பிரச்சாரம் செய்ய வேண்டும்

விஜயகாந்த் மிக நியாயமாக பேசியிருக்கிறார்

Anonymous said...

அம்மா கடவுளுக்கு நிகரானவர்.அவரை பார்க்க செல்லும்போது விஜயகாந்த் க்ரூப் எப்படி காலில் செருப்போடு செல்லலாம். மேலும் சோபாவின் நுனியில் உட்கார மட்டுமே அனுமதி அப்படியிருக்கும்போது எப்படி சாய்ந்து அமர்ந்தார்கள் . மேலும் அவரை சந்திக்கும்போது 45 டிகிரி கோணத்தில் முதுகை வளைத்து கைகூப்பி வணக்கம் சொல்ல வேண்டும். இது அறிவிக்கப்படாத விதி ,அப்படியிருக்க கம்யுனிஸ்ட்கள் எப்படி தலை நிமிர்ந்து நின்றபடி வணக்கம் சொல்லலாம். இதனால் அம்மாவுக்கு கடுமையான கோபம். மேலும் அம்மாவின் பிரசாரத்தின் போது விஜயகாந்த் ஸ்டூலின் மீது ஏறி நின்று கைகூப்பியபடி 1 மணி நேரமெல்லாம் நிற்க மாட்டார் என்று செங்கோட்டையன் போன்றவர்கள் அம்மாவிடம் சொன்னார்களாம். இதில் அம்மா ருத்ர தாண்டவமே ஆடியதாக போயஸ் தோட்டம் பக்கம் பேச்சு உலாவுகிறது. இந்த கோபத்தினைத்தான் அம்மா வேட்பாளர் அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்தியதாக மிக நம்பகமான சோர்ஸ் சொல்கிறது.- அம்மாவின் உண்மை விசுவாசி.

hayyram said...

தெ மு தி க இதுவரை விருதாச்சலத்தை தவிர ஒரு தொகுதியிலும் ஜெயிக்காத கட்சி. ஏற்கனவே சில இடங்களில் ஜெயித்து விட்டு, இது எங்கள் தொகுதி, தே மு தி க கோட்டை அதை எங்களுக்கே விட்டு விடுங்கள் என்று கேட்டால் ஞாயம் இருக்கிறது. ஆனால் கடந்த தேர்தல்களில் டெப்பாசிட்டுகள் கூட இழந்துவிட்டு இப்போது அ தி மு க விடம் தொகுதி கோரிக்கையில் பிடிவாதம் காட்டுவது ஞாயமா தெரியவில்லை.

இரண்டாவது, தெ மு தி கவிற்கு நிரந்தர சின்னம் கூட கிடையாது. தேர்தல் ஆணையம் ஒரே சின்னம் ஒதுக்கும் அளவிற்கு தெ மு தி கவிற்கு இன்னும் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் அ தி மு க கூட்டனியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று பத்து பதினைந்து எம் எல் ஏக்களை பெற்று அங்கீகாரம் கிடைக்க வழி செய்யலாம். அதை விட்டு விட்டு அ தி மு க வுடன் மல்லுக்கட்டுவது எந்த விதத்தில் தெ மு தி க விற்கு வெற்றியைக் கொடுக்கும் என்று தெரியவில்லை.

ம தி மு க கடந்த முறை அதிக தொகுதிகள் பெற்றும் ஐந்து ஆறு இடங்களைத் தவிற வேறு இடங்களில் வெற்றி பெற முடியாமல் தவித்த கட்சி. அதிலும் சில எம் எல் ஏக்கள் கட்சி மாறி விட்டார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பிருக்கும் தொகுதிகளை மட்டும் கேட்டுப் பெற்றால் கூட்டனி சுமுகமாக இருக்க வழிகிடைக்கும். கௌரவத்திற்காகவேனும் அதிக தொகுதிகள் அடம்பிடித்து கேட்டுப் பெற்று அதில் தோற்றும் போனால் கூட்டனிக்கு கிடைக்க வேண்டிய வெற்றி பலவீனப்பட வாய்ப்பிருக்கிறது.

கம்யூனிஸ்டுகள் எங்கே போனாலும் ஒட்டுன்னிகளாகத்தான் இருக்கப் போகிறார்கள். அந்த வேலையை அ தி மு க கூட்டனியிலிருந்தே செய்வதில் அவர்களுக்கு இழப்பேதும் இருக்கப்போவதில்லை. இந்த லட்ஷனத்தில் ஜெயலலிதாவை அகங்காரி என்ற முத்திரை குத்த புறப்பட்டு விட்டார்கள் மீடியாக்கள்!

Anonymous said...

//அம்மா கடவுளுக்கு நிகரானவர்.அவரை பார்க்க செல்லும்போது விஜயகாந்த் க்ரூப் எப்படி காலில் செருப்போடு செல்லலாம். மேலும் சோபாவின் நுனியில் உட்கார மட்டுமே அனுமதி அப்படியிருக்கும்போது எப்படி சாய்ந்து அமர்ந்தார்கள் . மேலும் அவரை சந்திக்கும்போது 45 டிகிரி கோணத்தில் முதுகை வளைத்து கைகூப்பி வணக்கம் சொல்ல வேண்டும். இது அறிவிக்கப்படாத விதி ,அப்படியிருக்க கம்யுனிஸ்ட்கள் எப்படி தலை நிமிர்ந்து நின்றபடி வணக்கம் சொல்லலாம். இதனால் அம்மாவுக்கு கடுமையான கோபம். மேலும் அம்மாவின் பிரசாரத்தின் போது விஜயகாந்த் ஸ்டூலின் மீது ஏறி நின்று கைகூப்பியபடி 1 மணி நேரமெல்லாம் நிற்க மாட்டார் என்று செங்கோட்டையன் போன்றவர்கள் அம்மாவிடம் சொன்னார்களாம். இதில் அம்மா ருத்ர தாண்டவமே ஆடியதாக போயஸ் தோட்டம் பக்கம் பேச்சு உலாவுகிறது. இந்த கோபத்தினைத்தான் அம்மா வேட்பாளர் அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்தியதாக மிக நம்பகமான சோர்ஸ் சொல்கிறது.- அம்மாவின் உண்மை விசுவாசி.//


Good One.

Am I reading Idly Vadai blog ?

Anonymous said...

// இந்த லட்ஷனத்தில் ஜெயலலிதாவை அகங்காரி என்ற முத்திரை குத்த புறப்பட்டு விட்டார்கள் மீடியாக்கள்! //

pOnkadaa neengalum unga niyayamum.

சரியான முடிவு aiadmk அழிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நான் admk தொண்டன் 1977 முதல், ஆனால் மனம் வெறுத்து சொல்கிறேன் ஜெயலலிதாவின் திமிர் பிடித்த இந்த போக்கு mgr இன் உழைப்பால் உருவான இந்த இயக்கம் எங்கள் கண் முன்னால் அழிகிறதே என்ற ஆதங்கமும், விஜயகாந்த் திற்கு ஆதரவு கொடுங்கள் mgr இன் உண்மை thondargale

Anonymous said...

ஜெயலலிதா எப்பவும் அகம்பாவதிலேயே சீரழியறாங்க. இன்னமும் அவங்க திருந்தவில்லை. கூட்டணி கட்சிகளை அரவணைத்து போக முடியல்லே. மக்கள் எப்படித்தான் வோட்டு போடுவாங்க. பேசாமல் பிஜேபிக்கு வோட்டு போட்டு விடலாம்.

குன்றத்திலே கலைஞருக்கு கொண்டாட்டம்

அதை பார்த்து பார்த்து அம்மாவுக்கு திண்டாட்டம்

Anonymous said...

தேர்தல் கமிஷன் முரசு சின்னத்தை ஒதுக்காதபோது விஜயகாந்த் நிற்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சின்னம் கிடைக்கும். இதை விஜயகாந்த் நினைவில் வைத்துகொள்வதே அதிகம். இதே போல மற்ற கட்சிகளும் .

இப்படி இருக்கும்போது அம்மா மாதிரி அறிவாளிகள் இப்படித்தான் செய்வார்கள். அம்மா என்ன கருணாநிதி போன்று கணக்கு தெரியாதவரா ?

Anonymous said...

ஹயகோ, தமிழனுக உணர்ச்சி உந்துதலுக்கு அடிமை ஆனவணுக, ஒரு செண்டிமெண்ட் பெருச்சாளிங்கன்னு சொன்னது சரியா போச்சே. யேன்யா எல்லோரும் இப்படி உணர்ச்சி பிழம்பாகி அப்படியே கொந்தளிக்கிறீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்கய்யா. இப்போ அநியாயம் நடந்தது வைகோவுக்கு. அப்போ அதனால ஏற்படும் பலன் எங்க போகணும்? வைகோவுக்கு. இப்போ இவனுக எல்லாம் என்ன பண்ணுறானுக, நைசா அந்த பலனை தங்களுக்கும் சாதகமாக்கி குளிர் காஞ்சுட்டு போக வந்து இருக்கானுக. இப்போ கூடுற கூட்டதுலையே ஒரு அளவுக்கு பரவலா வைகோவுக்கு மட்டும் தான் ஆதரவு இருக்கு. அவரு பா.ஜ.க வுடன் சேர்ந்து வரணும், இல்லேனா பேசாம அந்த பச்சைக்கிட்டையே போயி போராடி இன்னும் ஒரு பத்து சீட்டை வாங்கிட்டு போகணும். இப்போ ஏற்பட்டு இருக்கிற அனுதாப அலையின் பயன்களை தாங்கள் அனுபவிச்சுக்க அவனுக பிளான் போடுராணுக.

அதுக்கு போயி இவ்வளவு பேரு உடனே குதிக்கிறீங்களே. இப்படி செஞ்சா மஞ்சத்துண்டு தான் மறுபடியும் வரும். மூணாவது அணியெல்லாம் ஒன்னும் வராது. அதை புரிஞ்சுகோங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்கய்யா. கண்டிப்பா இந்த உண்டியல் கோஷ்டி பேச்சை கேட்டு உறுமி போனா, உறுமி வீணா போய்டும். நியாபகம் வெச்சுகோங்க. இப்போ ஏற்பட்டு இருக்கிற அநியாயத்தின் பலனை தனக்கு சாதகமாக்கி கட்சியை இன்னும் பலமாக வளர்த்து கொள்ள உபயோகபடுத்த வேண்டும் உறுமி. கண்டிப்பா அடுத்த தேர்தலப்போ ஒரு பெரிய கட்சி ஆய்டலாம். அதை விட்டுட்டு பத்தோட ஒன்னு பதினொன்னா போனா அவனுக நல்லா கொண்டாடிட்டு போயடுவாணுக.

வழக்கம் போல இவரு இன்னும் கட்சி சிறிசா போயி மூஞ்ச தொங்க போட்டுட்டு உக்கார வேண்டியதுதான்.

Anonymous said...

// இந்த லட்ஷனத்தில் ஜெயலலிதாவை அகங்காரி என்ற முத்திரை குத்த புறப்பட்டு விட்டார்கள் மீடியாக்கள்! //

எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரி நல்லா நடிக்கிறீங்க ?.

அந்த அம்மா இப்போவே இவ்வளவு ஆணவமா இருக்காங்க. முதல்வர் ஆனா எப்படி இருப்பேன்னு ‘ ப்ரிவியூ’ காண்பிச்சிட்டாங்க.

ஆணவ சர்வாதிகார ஆட்சியை விட குடும்ப ஆட்சி நல்லா த் தான் இருக்கு.. என்ன தான் குடும்ப ஆட்சி என்றாலும், அவங்க கிட்ட போய் பேசறது ரொம்ப ஈசி..

அதிமுக விலே இருந்து திமுக போன சேகர்பாபு., அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி இவங்க கிட்டே கேட்டு பாருங்க.

நம்பிக்கை துரோகம், ஆணவம் இரண்டுக்கும் புதிய பெயர் ஜெயலலிதா.. இவர் தமிழ் நாட்டுக்கு மீண்டும் முதல்வரானால், ஆண்டவனே ஆடிப் போய் விடுவார்.....

Anonymous said...

ஜெயாவை பற்றி நீங்கள் புரிந்து கொண்டு இருப்பது அவ்வளவுதான். அவர் காரியவாதி.

தி மு க வை எதிர்க்க உங்களை எல்லாம் கூட வைத்துக்கொண்டார். தற்போதைய சூழ்நிலையில் தி மு க ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாட்டிகொண்டு முழிப்பதினால் அவருடைய தன் நம்பிக்கை கூடி இருக்கிறது. விஜயகாந்த்தால் தான் அ இ அ தி மு க ஓட்டுகள் பிரிக்கப்பட்டது, அவரோடு கூட்டு வைத்ததினால் அ இ அ தி மு க ஓட்டுகள் சிதறாது. அது அவருக்கு போதும். கம்யூனிஸ்ட் மற்றும் வைகோவால் அப்படி ஒன்றும் பெரிதான ஆதாயம் கிடையாது. மற்றும் கம்யூனிஸ்ட்டும் வைகோவும் இனி யாரிடமும் செல்ல முடியாது. ஆகவே இப்போதிருக்கும் மனநிலையில் வேண்டுமானால் இரு இல்லாவிட்டால் போ என்று தான் சொல்வார். வெற்றிபெற்றுவிட்டால் விஜயகாந்துக்கும் இதே கதிதான்.

Anonymous said...

வேணும். இவனுங்களுக்கு நல்லா வேணும்.


ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை தான். ஜெயா பாட்டி ஜஸ்ட் எஸ்கேப். தேவையில்லாம எதுக்கு இவனுங்கள எதுக்கு ஜெயிக்க வைக்கணும்னு நெனச்சி தான் பாட்டி இவனுங்கள கழட்டி விட்டுடுச்சி.

விஜயராசுக்கு சும்மாவே தலை கழுத்துல நிக்காது. இப்ப கேக்கவே வேணாம். நெஜமாவே கேப்டன் தான் தான்னு நெனைச்சி ஆட்டம் போட ஆரம்பிச்சிருவாரு.

வேணும். இவனுங்களுக்கு நல்லா வேணும். இந்த தேர்தலோட விஜயராஜ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், சரத்குமார், இவங்கல்லாம் காலி. இது நல்லது தானே. ஜெயா பாட்டி, தெரிஞ்சோ தெரியாமலோ, நல்லா காரியம் செஞ்சிருக்கு. வாழ்த்துகள் பாட்டி.

Anonymous said...

ஜெயலலிதாவை பெரியார் பேத்தின்னு சொல்லமுடியுமா?

‘சங்கராச்சாரியார் சரியாக பார்ப்பன தர்மத்தை கடைபிடிக்கவில்லை’ என்று சங்கராச்சாரியாருக்கே பார்ப்பன தர்மத்தைப் சுட்டிக் காட்டிய தீவிரப் பார்ப்பன உணர்வாளர்தான் சங்கரராமன் அய்யர்.

அவரையே போட்டுத் தள்ளளுனவர்தான் ஜெயேந்திரன். அப்போ ஜெயேந்திரன் என்ன பார்ப்பன எதிர்ப்பாளரா?

தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட சங்கரராமனை என்ன காரணத்திற்காக, சங்கராச்சாரி போட்டுத் தள்ளுனாரோ. அதுபோன்ற ஒரு காரணத்திற்காகத்தான், ஜெயேந்திரனை கைது பண்ணார் ஜெயாமாமி.

அதுக்காக ஜெயலலிதாவை பெரியார் பேத்தின்னு சொல்லமுடியுமா?

Anonymous said...

எல்லாவற்றையுமே சாதி, வர்க்கம் என்ற எல்லைக்குள் அடைக்க வேண்டியதில்லை. தனி நபர்களுக்குள் தனிப்பட்ட குரோதங்களும் உண்டு தானே!

ஜெயேந்திரனுக்கும், ஜெயாவுக்கும் தனிப்பட்ட குரோதங்கள் உண்டு. இரண்டு பேருமே கிரிமினல்கள் தானே!

மட்டுமல்லாமல் தனது அரசியல், அதளபாதாளத்திற்குப் போகும் போது, “எதையும்” பயன்படுத்துவார் ஜெயலலிதா. சென்ற 40/40 க்கு அப்புறம் அவர் ஜெயேந்திரனை நன்கு பயன்படுத்தி ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார்.

ஈழச்சிக்கலுக்கு முழுமுதற்காரணமே ஜெயலலிதாதான். ஆனால், இன்று தனது அரசியல் அஸ்தமனத்திலிருந்து, மீண்டும் ஒளி வீசி எழ, “தனி ஈழம் தான் ஒரே தீர்வென்று” போட்டாரே ஒரே போடு, பார்த்தீரா?

பாரப்பனீயத்திற்கு பிழைப்பு மட்டும் தான் ஒரே குறி. அதற்காக “எதையும்” செய்யும்!

Anonymous said...

எல்லாமே ஜாதி, வர்க்கம் இல்லை என்று ஒத்துக்கொண்டால் சரி. என்ன எல்லா பார்ப்பனர்களும் ஜெவுக்கேவா ஓட்டு போடுகிறார்கள்?

பார்ப்பனருக்கும் பார்ப்பனர் அல்லாதவருக்கும் பிரச்சினை வந்தால் ஜாதி உணர்வில் பார்ப்பனருக்கு தான் ஆதரவு

பணக்கார பார்ப்பனருக்கும் ஏழை பார்ப்பனருக்கும் பிரச்சினை வந்தால் வர்க்க உணர்வில் பணக்கார பார்ப்பனருக்கு தான் ஆதரவு

பணக்கார பார்ப்பனருக்கும் இன்னொரு பணக்கார பார்ப்பனருக்கும் பிரச்சினை வந்தால் அதிகார வர்க்கத்தில் இருப்பவருக்கு தான் ஆதரவு

-
இது தான் நான் புரிந்து கொண்டது

Anonymous said...

விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பார்?யாரு அவர ‘வெயிட்டா’ கவனிக்குறாங்களோ, அவுங்ககூடதான் கூட்டணி வைப்பாரு. ‘வெயிட்டா’ இருக்கிறவங்கதானே வெயிட்டா கவனிப்பாங்க.

திருவிளையாடல் படத்துல சோமநாத பாகவதரோட தொல்லை தாங்காம, ‘இது என்ன மதுரைக்கு வந்த சோதனை…’ என்று டி.ஆர். மகாலிங்கம் புலம்புவாரு. அதுபோல், விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சி, ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’ என்று நம்மள புலம்ப வைச்சிட்டாரு.

*

-நா. விசு, சென்னை.

Anonymous said...

அது என்ன இடதுசாரித்துவத்தையும் கொம்யூனிசியத்தையும் கைக்கொள்பவர்கள் ஏன் தனிய இந்து மதத்தை மட்டும் தாக்குகிறார்கள்.

இவர்களுக்குத் தெரியும் மதத்தின் படி தமக்கு ஆபத்து இல்லை என்பதுதான். மற்றய பெளத்த கிறீஸ்தவ இஸ்லாம் மதங்களை விமர்சிப்பதில்லை. இடங்கண்ட இடத்தில் மடம் கட்ட முயல்கிறார்கள். எல்லாம் இசங்கள் தான் கின்யூசியம் கிறிஸ்ரியானிசம் புத்திசத் இஸ்லாமிசம் போல் மாக்சிசமும் ஒரு இசம்தான் மதம்தான்.

இந்த மாக்கிசத்தால் கொலையுண்ட கோடானுகோடி மக்களைக் கணகெடுக்காது இந்துமத்தைத் தாக்க வந்துவிட்டார்கள். எழுதுவதற்கு வேறு எதுவும் இல்லை என்றால் வசதியானது இந்துமதம் என்று தாழிக்கிறீர்களா?

Anonymous said...

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் – தமிழக மீனவர்களை, ஈழத் தமிழர்களை சுட்டுக்கொல்கிற, இலங்கை ராணுவத்தை கண்டித்து, அதன் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெல்லியில் ‘ஒரேஒரு வேளை’ உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த உண்ணாவிரதத்தின் போது, தமிழக மீனவர்கள் அணியும் தொப்பி என்று தலையில் நீண்ட குடுவையைப்போன்ற தொப்பியை அணிந்திருந்தார். எந்த ஊரில் மீனவத் தமிழன் இப்படி ஒரு தொப்பியை அணிந்திருக்கிறார்? இது சினிமாவில் வருகிற மீனவர் அணிகிற காஸ்டியூம்.

தமிழ் சினிமாவில் மீனவர்கள், நீண்ட தொப்பியும், லங்கோட் போன்ற உடையும் அணிந்து முழங்கைக்கு மேல் தாயத்து கட்டி, இறுக்கமான சட்டையும் அணிந்திருப்பார்கள்.

இதுபோன்ற கோமாளித்தனமான காஸ்டியூம்களோடு, தமிழக மீனவர்களை வேடிக்கைப் பொருளாக, மீனவர்கள் அல்லாத தமிழர்களிடம் இருந்து வேறுபடுத்தி, ‘தமிழ் மீனவர்கள் வேறு யாரோ’ என்பது போன்ற எண்ணத்தை சித்திரித்து பிரபலமாக்கியது, கடற்கரையை மீனவர்கள் அசுத்தப்படுத்துகிறார்கள் என்பதாக குற்றம் சாட்டி, சென்னை மெரினா கடற்கரையில், மீனவர்களை தன் ஆட்சிகாலங்களில், இன்றைய இலங்கை ராணுவம் போல் சுட்டுக்கொன்ற, ‘மீனவ நண்பன்’ எம்.ஜி.ஆர்.

நீண்ட தொப்பியும், லங்கோட் போன்ற உடையும் அணிவது ஆந்திர மீனவர்கள் வழக்கம். ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில், இயக்குநர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள், ஆந்திராவை சேர்ந்தவர்களே. படகோட்டி படமும் கூட ஆந்திராவைச் சேர்ந்த, நாகிரெட்டியின் திரைப்படம்தான்.

அதனால், அவர்கள் ஆந்திர மீனவர்கள் அணிகிற உடையை, செயற்கையான சினிமா சேர்க்கைகளோடு கொச்சைப்படுத்தி, தமிழக மீனவர்களின் அடையாளமாக காட்டினார்கள்.

தமிழர்களுக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்து கட்சி நடத்துவதாக சொல்கிற விஜயகாந்த் போன்றவர்கள், தமிழக மக்களில் மிக பெரும்பான்மையான உழைக்கும் மக்களான மீனவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கைத் தரம், முறை எப்படி இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளாமல், ‘சாவு வீட்ல பொணமாகவும்-கல்யாண வீட்ல மாப்பிளையாகவும்’ இருக்க வேண்டும் என்கிற சினிமாக்காரர்களின் விளம்பர மனோபாவதில் இருந்து வெளிவராதவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் தமிழக மீனவர்கள் அணிகிற குல்லா என்று ஒன்றை தன் தலையில் வைத்திருக்கிறார்.

உண்மையில் தமிழ் மீனவர்கள் தலையில் அவர் வைக்கும் ‘குல்லா’ அது.

Anonymous said...

நந்தவனத்து ஆண்டி ஜெயலலிதாவும், நம்பிக்கையற்ற கூட்டணித் தலைவர்களும்

வைகோவுக்கு கூட்டணியில் இடம் இல்லை என்பதை 160 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதன் மூலம் தெளிவாக அறிவித்து விட்டார் என்பது மட்டும் உறுதியானது. அதே நேரத்தில் வேறு கூட்டணிகட்சிகள் தாங்கள் வெற்றி பெற சாதகமான தொகுதிகள் என்று கேட்டிருந்தவற்றையும் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தன்னிச்சையாக அறிவித்து விட்டிருந்தார்.

இப்படி ஒரு முடிவை அரசியலில் பக்குவம் பெற்ற ஒரு நல்ல அரசியல்வாதி எடுப்பாரா? நிச்சயம் இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து. அவர் இப்படி முடிவெடுக்க என்ன விடயங்கள் தூண்டு கோலாக இருந்திருக்கலாம் என்பது பற்றி இப்படி சொல்கிறார்கள்....

அதாவது தி.மு.க மீது உள்ள தமிழக மக்களுக்கு உள்ள வெறுப்பு தனக்கு சாதகமாகி இருக்கிறது. அடுத்த முதல்வர் நாம் தான் என்ற உறுதியான முடிவுக்கு ஜெயலலிதா வந்திருக்கிறார். இந்த ஆணவத்தால் தான் அவர் கூட்டணி கட்சிகளை மதிக்க தயாராக இல்லை. கூட்டணி கட்சிகளால் தான் ஒன்றும் ஜெயிக்க போவதில்லை என்று முடிவெடுத்திருக்கலாம்.

அப்படியென்றால், ஜெயலலிதாவை ஆட்சிக்கட்டிலில் உட்கார வைக்க மக்கள் அப்படி என்ன துடிக்கிறார்களா என்று பார்த்தால் அது நிச்சயமாக இல்லை என்பதே உண்மை.

Anonymous said...

ஜெயலலிதாவை ஆட்சிக்கட்டிலில் உட்கார வைக்க மக்கள் அப்படி என்ன துடிக்கிறார்களா என்று பார்த்தால் அது நிச்சயமாக இல்லை என்பதே உண்மை. இதற்கான காரணங்களை அடுக்கலாம்.

தமிழகத்தை மிக மோசமாக ஆண்ட தி.மு.கவுக்கு மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியவர் தான் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்திலேயே தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர எம்.ஜி.ஆர் தகுதி இல்லாதவர் என்று ஜெயலலிதாசிலரிடம் சொல்லியதாக தகவல் வெளியானது. இதற்கடுத்து எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஒரு வழியாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார். வந்தவுடன் தனக்கு சொந்த உறவல்லாத ஒரு குடும்பத்தை தனக்கு தானே உருவாக்கிக் கொண்டு உடன்பிறவா சகோதரி என்ற உறவுநிலையில் உட்கார்த்தி வைத்து அழகு பார்த்தவர். கருணாநிதிக்கு சொந்த வாரிசுகள் என்றால் ஜெயலலிதாவுக்கு செயற்கை மன்னார்குடியின் செயற்கை வாரிசுகள். இது தான் வித்தியாசம்.

கான்வென்ட்டில் படித்து உலக விடயங்களில் அறிவுஜீவித்தனத்தை பெற்றிருக்கும் ஜெயலலிதாவின் அரசியல் சரிவுக்கு இந்த குடும்பமே காரணமாகவும் இருந்திருக்கிறது. வளர்ப்பு மகன் திருமணம் என்ற பெயரில் முதல் முதலாக தங்க நகைக்கடையையே அள்ளி அணிந்து கொண்டு வந்தது போல் உடன்பிறவா சகோதரியுடன் தோன்றினார். அந்த புகைப்படங்கள் இன்று வரை தமிழகத்தின் பல இடங்களில் அவ்வப்போது கைகொட்டி சிரிக்க வைக்கின்றன. சிறுதாவூர் என்ற இடத்தில் தலித் மக்களின் நிலத்தில் பங்களாவை கட்டி கடும் கண்டனத்திற்கு ஆளானவர். அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதில் நீதிமன்றத்தில் நேர்நிற்க முயலாமல் இன்னும் வாய்தாக்களை வாங்கி சாதனை படைத்து வருபவர்.

இது போல் அரசு நிறுவனமான டான்சியை வாங்குவதில் நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கும் ஆளானவர். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவாக ஒரே கையெழுத்தில் அரசு ஊழியர்களை கூண்டோடு வேலைநீக்கம் செய்ய உத்தரவிட்டவர். மக்கள் பிரச்சனைகளுக்காக நேரில் வராமல் கோடநாட்டு பங்களாவில் தங்கிக் கொண்டு அங்கிருந்தபடியே தி.மு.க ஆட்சியின் பிரச்சனைகளுக்காக போராட்டத்தை அறிவித்து கொண்டிருப்பவர், இதே போல் இலங்கையில் யுத்தம் நடந்த போது போர் என்றால் அப்பாவிகள் உயிரிழப்பதும் இயற்கை என்றவர், மீனவர்களை கொல்வதில் தமிழக அரசின் பங்கு ஒரு புறம் என்றாலும் கையாளாத காங்கிரஸ் தான் முழு காரணம் என்பது தான் உண்மை.

Anonymous said...

ஜெயலலிதாவின் சொல்லுக்கும் செயலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே எப்போதும் உண்மையாக இருந்து வந்திருக்கிறது என்பதை அவரது கடந்த கால செயல்பாடுகளை அலசிப்பார்த்தால் தெரியும். தமிழீழத்தில் அக்கறை கொண்ட கட்சிகள் எல்லாம் துரோகி தி.மு.க வை நம்புவதை விட எதிரி அ.தி.மு.கவை நம்பலாம் என்ற காரணத்தால் தான் ஜெயலலிதாவுடன் கைகோர்த்தனர். நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அ.தி.மு.க வை தான் ஆதரிக்க முடிவெடுத்த காரணத்தை சொல்லும் போது இதை தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இப்படி இயக்கங்கள் அ.தி.மு.க கூட்டணியில் சேர்வதை ஜெயலலிதாவுக்கு நம்பகமான சில ஆலோசகர்கள் சிலர் விரும்பவில்லை என்பது தான் வைகோவை கடைசி வரை கண்டுகொள்ளாமலே ஜெயலலிதா கைவிட காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தமிழ் தேசியத்தை பற்றி பேசுவதை எட்டிக்காயாக நினைக்கும் ஜெயலலிதாவின் ஆலோசகர்கள் சிலர் எக்காரணம் கொண்டும் வைகோ அ.தி.மு.க அணியில் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் மிகத்தீவிரமாக அவருக்கு எடுத்து சொன்னதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Anonymous said...

நந்தவனத்து ஆண்டி ஜெயலலிதாவும், நம்பிக்கையற்ற கூட்டணித் தலைவர்களும்


எது எப்படியோ ஜெயலலிதா ஒன்றும் தமிழ்நாட்டை கடைத்தேற்ற வந்த தலைவியில்லை என்பது மட்டும் உண்மை. ஆனால் அ.தி.மு.க வுக்கு இன்று வரை எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான அப்பாவி தொண்டர்களை கொண்ட வாக்கு வங்கி இருக்கிறது என்பது தான் மிகப்பெரிய பலம். இந்த பலத்தை நம்பி தான் கம்யூனிஸ்டுகளும், தமிழ் இயக்கங்களும் அ.தி.மு.கவின் கீழ் அணி வகுத்தன. மிகக்குறுகிய காலத்தில் உருவான இந்த கூட்டணி தி.மு.கவை கட்டாயம் வீழ்த்தி விடும் என்பதும் உறுதியானது.

இந்த கட்டத்தில் தான் ஜெயலலிதாவின் 160 இடங்களில் நிற்பதான முடிவு வந்து ஒட்டு மொத்த கூட்டணி கட்சிகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இந்த அதிருப்தி என்பது சாதாரணமானதல்ல. இது வரை ஜெயலலிதா பற்றிய அவரது சொந்த பிம்பத்தை கூட இந்த அதிருப்தி எழுச்சி சுக்கு நூறாக நொறுக்கி போட்டு விடலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அ.தி.மு.கவுடன் தற்போது நெருங்கி வந்திருக்கும் கட்சிகள் கழன்று கொள்ளும் பட்சத்தில் ஜெயலலிதா நினைப்பது போல் நிச்சயம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது.

இதற்கான காரணத்தை பார்க்கலாம். ஜெயலலிதா படித்த அறிவுஜீவி. ஆனால் அவரை மன்னார்குடி குடும்பத்தினர் ஆட்டுவிக்கிறார்கள். அவர்களின் பிடியிலிருந்து ஜெயலலிதாவால் எப்போதும் மீண்டு வரமுடியாது. நடுநிலையான தமிழக வாக்காளர்களுக்கு தேவரின ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் ஜெயலலிதாவின் போக்கு எப்போதுமே பிடிக்காது. அதனாலேயே அவருக்கு தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத பொது வாக்குகள் கிடைப்பதில்லை.

இது தவிர அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகள் கழன்று வரும் பட்சத்தில் மாற்றவே முடியாத கம்யூனிஸ்டுகளின் குறிப்பிட்ட வாக்கு வங்கியையும் ஜெயலலிதா இழக்கிறார். மேலும் விஜயகாந்தின் தே.மு.தி.க 10 சதவீதத்திற்கும் அதிமான வாக்கு வங்கியை கொண்டிருக்கிறது. இந்த வாக்குகளும் ஜெயலலிதாவுக்கு கிடைக்க போவது இல்லை.

Anonymous said...

அகங்காரமும், ஆணவமும் ஜெயலலிதாவின் இரு கண்கள். இவரது ஆட்சியில் இந்த மகாராணியை கூனி,குறுகி கும்பிட்டே முதுகு வளைந்து போன மீசை ஆசாமிகள் அதிகம். இவரை சந்திப்பவர்கள் முதுகை வளைக்காவிட்டால் பிறகு அவர்கள் அரசியல்வியாதியா கவே இருக்க முடியாது.

எல்லாம் தமிழத்தின் தல எழுத்து

Anonymous said...

Jaya is the worst politician ever, but for that reason i can not support Vijayakanth. he got a nice chance as MLA. he shd have used that as an opportunity and proved like a model MLA. But the reality is he cant even contest in viruthachalam again, bcoz the people fed up with him. so how can we expect him to be a CM? can any vijayakanth supporters answere this?

சட்னி சாம்பார் said...

பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக சூழ்நிலையை உருவாக்கியதை அடுத்து, மூன்றாவது அணி முயற்சி நேற்றிரவு முடிவுக்கு வந்தது.

மூன்றாவது அணி அமைத்தால், அது, தி.மு.க., வெற்றி பெற வழிவகுக்கும் என்பதால், அந்த முடிவை எடுக்க, தலைவர்கள் அனைவருமே தயங்கினர்.

இதற்கிடையே, அ.தி.மு.க., தரப்பில் இருந்தும், கூட்டணி கட்சித் தலைவர்களிடம், பேச்சு வார்த்தை துவங்கியது.

ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதற்கும்
புதிய தமிழகம் கேட்ட, ஒட்டப்பிடாரம், வால்பாறை ஆகிய தொகுதிகளை தரவும்,
சரத்குமார் கேட்ட, தென்காசி, நான்குநேரி தொகுதிகளை ஒதுக்கவும்,
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், வெற்றி பெற்ற தொகுதிகளை தருவதற்கும், தே.மு.தி.க.,வுக்கு அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளை ஒதுக்கவும்
அ.தி.மு.க., தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=207560

சட்னி சாம்பார் said...

http://election.dinamalar.com/election_news_detail.php?id=454

ஜெ.,வின் தடாலடி முடிவுகளுக்கு காரணம் என்ன?

வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழியை உடைத்த கதை' என்பதாக, பெரும்பாலான அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

உண்மை அது தானா?

வலுவான கூட்டணி இருந்தால் வெற்றி சுலபமாகும் என்பதோ, தொகுதிகளைப் பறித்துக்கொண்டால், கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடையும் என்பதோ ஜெயலலிதா அறியாதது அல்ல.

கடந்த ஆறு ஆண்டுகளில் ம.தி.மு.க., தேய்ந்துகொண்டே வந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006 தேர்தலில் வழங்கப்பட்ட 35 தொகுதிகளில் ஆறில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறிவிட்டனர். தவிரவும், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கின்றனர்.
அவர் நல்ல மனிதர் என்பதும், நல்ல நண்பர் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. ஆனாலும், எங்களை பலியாக்கி அவரது கட்சியை வாழ வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

ஆனால், முத்துச்சாமி போன்ற பழைய ஜாம்பவான்கள் விலகிய பிறகு தான், கோவையில் பிரமாண்ட கூட்டத்தைத் திரட்டிக் காட்டினோம்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தங்களுக்கு 234 தொகுதிகளில் எதைக் கொடுத்தாலும் போட்டியிட முடியும் எனக் கூறியிருந்தார். அதுவே உண்மையெனில், முக்கியமான தொகுதிகள் போய்விட்டது என கவலைப்படுவது எதற்காக?

இரு கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் பொறுத்தவரை, அவை 2006ம் ஆண்டு தேர்தலில் எதிரணியில் இருந்தவை. அவர்கள் வென்ற தொகுதி எல்லாம், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பறிக்கப்பட்டவையே. கட்சித் தலைவர் என்ற முறையில், அ.தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா முன்னுரிமை கொடுப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

குட்டிக் கட்சிகளை வளர்த்துவிடும் பணியில் ஒரு பெரிய கட்சி ஈடுபட வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல.

கட்சியிலேயே சில முக்கிய புள்ளிகளுக்கு தொகுதி வழங்கப்படவில்லை. சில பேருக்கு, அவர்களது சொந்தத் தொகுதி மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

"வலுவான தொகுதியில் சாதாரண வேட்பாளர் கூட வெற்றி பெற்றுவிடுவார். வலுவான வேட்பாளர், சாதாரண தொகுதியில் கூட வெற்றி பெற்றுவிடுவார்' என்ற கணக்கு தான்.

அதுவும் தவிர, இந்தத் தேர்தலோடு முடிந்துபோவதில்லை அரசியல். அடுத்தடுத்து, உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல்கள் வரவுள்ளன. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து தான் இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் ஜெயலலிதா.

Anonymous said...

//பேயிடம் இருந்து பிசாசிடம் வந்தோம், பிசாசு எங்களை பிராண்டி விட்டது-- நாஞ்சில் சம்பத் //

So Sad said...

Comedy based on a real life tragedy (which is still unfolding) is crass. Impacted people may not see or correlate. Yet we can't lower our values and standards.

Anonymous said...

Top ten Quotes from Media (18.03.2011):
1.குணத்தைக் காட்டிய ஜெயலலிதா!
2.அதிமுக கூட்டணி பணால்!
3.பிசாசு எங்களை பிராண்டி விட்டது!
4.பணிந்தார் ஜெயலலிதா!
5.நீங்கள் வேண்டுமென்றால் சமரசம் செய்து கொள்ளுங்கள்.அவர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
6.ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு
7.அதிமுக கூட்டணியோடு மதிமுக சேராது!
8.கூட்டணி கட்சிகளுக்கு,அவர்கள் விரும்பியபடி,தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்!
9.விஜயகாந்த் அதிரடி : ஜெயலலிதாவிற்கு 3 நிபந்தனைகள்-1. அதிமுக அணியில் மதிமுகவிற்கு இடம் அளிக்க வேண்டும்,2.அதிமுக வேட்பாளர் அறிவித்துள்ள 21 தொகுதிகளை தேமுதிகவுக்கு தரவேண்டும்,3. தேமுதிகவுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட வேண்டும்.
10.குடவாசல் ராஜேந்திரன், இளம் வயது முதல் தைரியசாலி. எந்த பிரச்னையிலும், "கை' வைக்காமல் திரும்புவதில்லை-மா. கம்யூ., பிரமுகர் தங்கையன் அடித்து கொல்லப்பட்டார். -பா.ஜ., இளைஞரணி அமைப்பாளர் குமரனை, திருவாரூர் மேலக்கடைத்தெருவில் ஒரு கும்பல் கொலை செய்தது. -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் இனியன் கொலை வழக்கிலும் இவர் மீது வழக்கு பதிவானது -திருச்சிக்கு வந்த ஜெயலலிதா,திருச்சி மத்திய சிறைக்கு காரில் சென்று, அரை கிலோ மீட்டர் தூரம் சிறைக்குள் நடந்து சென்று இவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.SUPER.

kounda mani said...

பைசா செலவில்லாம பார்க்கிற ஒரே காமெடி இப்போதான்.. இனி 5 வருஷம் கழிச்சுதான் இப்படி பார்க்க முடியும்.. எனவே, மக்களே நல்ல என்ஜாய் பண்ணுங்கோ...

muthu said...

jaya took all the seats in chennai except karunanidhi's chepaukkam

Even a common man will never accept this.

Sreenivasan said...

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=391905&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

Only few of them in the media are interested in the welfare of the state. No doubt Dinamani is one among them

Durairaj Sukumar said...

நாய் வாலை நிமிர்த்த முடியாது ,ஜெயலலிதாவை திருத்தவும் முடியாது .எனக்கென்னவோ அழகிரி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமே 'மன்னார்குடி மாபியா வுக்கு
பணம் கொடுத்து காரியத்தை கட்சிதமாய் முடிசிட்டார்னு தான் நினைக்கிறேன்.

Anonymous said...

கூட்டணிக் கட்சியினரை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்களது அரசியல் எதிர்காலம், அந்தக் கட்சிகளின் சென்டிமெண்ட்கள், அவர்களது அரசியல் தியாகங்கள்,அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் அனைவரையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் வகையில் தனது வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.


ஜெயலலிதாவைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இது நிச்சயம் அதிர்ச்சி தந்திருக்கவே முடியாது. அவரது கடந்த கால செயல்களை மறந்து போனவர்களுக்கு மட்டுமே இது அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

வழக்கமாகவே யாரையும் மதிக்கத் தெரியாத ஜெயலலிதாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வந்த ஒரு பிரிவு மீடியாக்கள், அவர் இப்போது செய்த தவறையும் மூடி மறைக்கவே முயன்று வருகின்றனவே தவிர, அவரது தவறை சுட்டிக் காட்ட துணியவில்லை. இது நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு அவர்கள் செய்யும் நன்மை அல்ல, கெடுதல் தான் என்பதை உணர வேண்டும்.

குறிப்பாக வட இந்திய டிவி சேனல்களில் நேற்று முன்தினம் முதல் அதிமுக கூட்டணியில் நடந்து வரும் குழப்படிகள் குறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட செய்தி வெளியாகவில்லை.

இந் நிலையில் ஜெயலலிதா செய்த தவறுக்கு சசிகலா தரப்பு மீது பழி போடும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.

கூட்டணியில் ஆரம்பித்து இந்த முறை தேர்தல் தொடர்பாக ஜெயலலிதாவை இயக்கியது நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த ஒரு பத்திரிக்கையாளர் தான் என்பதை தமிழ்நாட்டில் சின்னக் குழந்தையும் சொல்லும். அவரது அட்வைஸ்படியே அனைத்து முடிவுகளையும் எடுத்த ஜெயலலிதா இந்த முறை சசிகலா தரப்பு சொன்ன எதையும் காதிலேயே வாங்கவில்லை என்று தான் தகவல்கள் வந்தன.

ஆனால், ஜெயலலிதாவின் இப்போதைய இந்த எடுத்தேன் கவிழ்த்தேன் செயலுக்கு சசிகலாவின் உறவினர் ஒருவர் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்க ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் சித்தப்பாவின் மாப்பிள்ளையான ராவணன் என்பவர் உதவினாராம். இவரது உதவியோடு ஜெயலலிதா 60 முதல் 70 இடங்களுக்கு ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தாராம்.

இது தவிர சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், அக்காள் மகன் டி.டி.வி. தினகரன், உறவினர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் சிபாரிசுடன் கூடிய ஒரு பட்டியலையும் தயாரித்து வைத்திருந்தாராம் ராவணன். இந்தப் பட்டியலில் இடம் பெற்ற தொகுதிகளில் பல கூட்டணிக் கட்சிகளுக்குத் தரப்பட்டவையாம்.

இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு 'பட்டியலை வெளியிடுங்கள்' என்று ஜெயலலிதாவிடமிருந்து உத்தரவு வந்ததாம்.

உடனே, ஜெயலலிதா தயாரித்து வைத்திருந்த பட்டியலை வெளியிடாமல், சசிகலா உறவினர்கள் சிபாரிசுடன் உருவாக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டுவிட்டார்களாம். இதனால் தான் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்களாம். அதாவது ஜெயலலிதாவுக்கே தெரியாத ஒரு பட்டியலை அதிமுக வெளியிட்டுவிட்டது என்பது தான் இப்போது அதிமுக தரப்பு கசிய விட்டுள்ள செய்திகளின் சாரம்சம்.

இந்தத் தகவலை கூட்டணிக் கட்சிகள் நம்பி, ''அடடா.. அப்படியாம்மா நடந்துச்சு.. நாங்க உங்க மேல போயி சந்தேகப்பட்டுட்டோமே'' என்று உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர்விட்டு, அப்படியே சமாதானமாகி தங்களுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது என்பதைத் தான் இந்த செய்தி தெரிவிக்கிறது.

அப்படியே கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு காதுக்கு இரண்டு முழம் பூவை 'மாபெரும் தலைவர்களான' ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் மூலம் அதிமுக அனுப்பி வைக்கலாம்.

இப்போது கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளதால் பெரும் குழப்பத்தில் உள்ளவர்கள் அதிமுக வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்கள் தான். 3வது அணி அமையாதபட்சத்தில் இவர்களில் எத்தனை பேருக்கு உண்மையிலேயே சீட் கிடைக்குமோ.. எத்தனை பேரின் பெயர்கள் காணாமல் போகுமோ.. எத்தனை பேர் தொகுதி மாற வேண்டியிருக்குமோ என்பது தெரியவில்லை.

kothandapani said...

MDMK could not keep its MLAs in tact.Accepted. What about ADMK. when such a big party can not hold its flock together, we should actually pity MDMK.Then DMDK .. It has only one MLA.Accepted. When the ADMK formed the alliance with DMDK,were they not aware of this.If Jayalalitha does not recognize the reality, ADMK will lose deposit in many constituencies, leave alone forming the Govt.

Prakash said...

ஊற்றிக் கொடுத்தவருக்கு
போதை ஏறிக்கிச்சி
வாங்கிக் குடித்தவருக்கு
போதை கலைஞ்சிருச்சி
From : http://writersuryakumaran.blogspot.com/2011/03/3.html

Anonymous said...

jaya's arrogance and ego is known t0 all & KK ways of Idhyathil Idam instead of Seat.
who/what helped Vaiko to get birth in TN Assembly- Vaiko should rewind.he does have more time and energy for Srilanka than TN.he couldn't keep his flocks together
Ore Kuttaiyl ooriaya 2 mattaigal has now more mattaigal-thought provoking statement from the Great who lived for people /state welfare.
Now all the fight is for Self Power (Money and Ministry)

Anonymous said...

I was not aware is Jaya is so stupid and also still keeping Saisikala and company , this will be good turning point for "Yellow Yellow dirty fellow"

Anonymous said...

///உடனே, ஜெயலலிதா தயாரித்து வைத்திருந்த பட்டியலை வெளியிடாமல், சசிகலா உறவினர்கள் சிபாரிசுடன் உருவாக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டுவிட்டார்களாம். இதனால் தான் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்களாம். அதாவது ஜெயலலிதாவுக்கே தெரியாத ஒரு பட்டியலை அதிமுக வெளியிட்டுவிட்டது என்பது தான் இப்போது அதிமுக தரப்பு கசிய விட்டுள்ள செய்திகளின் சாரம்சம்.///


சுப்பர் விளக்கம் !!!

Anonymous said...

திமுகவிலும் அதிமுகவிலும் தொடர்ந்து நடந்துவரும் கூத்துக்களில் பலனடையப்போவது பாஜகதான்.

சென்ற முறை விஜயகாந்துக்கு கிடைத்த ஓட்டுக்கள் அவருக்கு கிடைத்தவை அல்ல.

திமுகவாலும் அதிமுகவாலும் வெறுத்துப்போனவர்கள் போட்டு ஓட்டுத்தான் அது.

இன்று மீண்டும் ஜெயாவும் கருணாநிதியும் காங்கிரஸும் விஜயகாந்தும் அடிக்கும் கூத்துக்களை பார்த்துகொண்டிருக்கும் மக்கள் மீண்டும் இதே எழவுகளுக்குத்தான் ஓட்டு போடவேண்டுமா என்ற எரிச்சலுக்குத்தான் வருவார்கள்.

பாஜக வெட்பாளர்கள் சற்று முயன்றாலே இந்த வெறுப்பலையை தங்களுக்கு சாதகமாக ஆக்கிகொள்ளலாம்.

பாஜக தனியாக நிற்க வேண்டி வந்ததற்கு பாஜக காரணமல்ல. ஒரு பக்கம் அணியில் காங்கிரஸ் மற்றொரு பக்க அணியில் கம்யூனிஸ்டு என்றால் தனியாகத்தான் நிற்க வேண்டிவரும்.

இது அவர்களுக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு.

பாஜக வெல்ல முடியாவிட்டாலும் திமுக அதிமுக கட்சிகளை வெறுப்பவர்களுக்கு ஒரு மாற்று இருக்கிறது என்பதே உண்மை.

R.Gopi said...

எஸ்.ஏ.சந்திரசேகர் தனியா கட்சி, கிட்சி ஒண்ணும் ஆரம்பிக்கவில்லையா!!?

களிமிகு கணபதி said...

.


ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?

அல்லது

வாழும் காமராசர் பொன் ராதாகிருஷ்ணனா?

என்றால்,

பொன்ராதாவுக்கே வாக்களிப்பார்கள் தமிழர்கள். வாழ்க பாஜக.


.

Anonymous said...

இன்று மதியம் admk தலைவர்கள்(!! ?) பன்னீரும் ,செங்கோட்டையனும் வைகோவை அவரது அலுவலகத்தில் சந்தித்து அம்மா 9 seat தருவதாகவும் அதற்கு வைகோ சம்மதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்கள்.கட்சி தொண்டர்களை வெளியே அனுப்பி விட்டு தனியறையில் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. வைகோ அவரது பாணியில் கண்களை மூடி ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருந்தார் ;அப்போது அவரது பாதங்களை யாரோ பிடித்து இழுப்பதாக உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தார். எதிரே அமர்ந்திருந்த இருவரையும் காணாமல் அதிர்ச்சியில் உறைந்தார். மேஜைக்கு அடியில் பார்த்த போது இருவரும் அவரது கால்களை பிடித்துகொண்டு கண்ணீருடன் " அண்ணே ! தயவு செய்து நல்ல முடிவு சொல்லுங்கள் 5 வருடத்திற்கு பிறகு அமைச்சர்களாக ஆகலாம் என்று ஆசையாக இருந்தோம் ,அதில் இந்த பிசாசு மண்ணை போட்டுவிடும் போலிருக்கிறது.' என்று கதறினார்கள் .வைகோவும் நல்ல முடிவு எடுப்பதாக சொல்லியனுப்பினார்.( பி.கு. நேற்று இதே கதைதான் விஜயகாந்த் அலுவலகத்திலும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது)