பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 13, 2011

India vs South Africa - Paper Tiger stands exposed


இப்பகலிரவு ஆட்டத்தில், இந்தியா டாஸில் வென்றதே பாதி வெற்றிக்கு இணையானது என்று கூறலாம். முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சேவாக் அபாயகரமாக வாழ்ந்தாலும், அவர் ஆட்டத்தின் இயல்பே அத்தகையது என்பதால், குறை கூற எதுவுமில்லை! சச்சின் சச்சின் போல விளையாடினார் :) ரன்கள் குவிந்தன! ஸ்டெயின், மார்கலின் பந்து வீச்சும் பரிமளிக்காததால், இருவரும் பந்து வீச்சை அடித்துத் துவைத்து காயப் போட்டனர்.

எப்போதும் போல, ஒரு மோசமான பந்துக்கு சேவாக் விக்கெட்டிழந்தார்! ஸ்கோர் 142/1, 17.4 ஓவர்களில், ரன்ரேட் 8.04. அடுத்து வந்த கம்பீர் முதலில் நிதானமாக ஆடினாலும், போகப் போக பிக்-அப் பண்ணிக் கொண்டு சச்சின் மேல் அனாவசிய அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். Sachin was playing in a league of his own that brooks no opposition!!

30 ஓவர்களில் ஸ்கோர் 197/1 (RR: 6.56). சச்சின் 83 (73 பந்துகள்). இதில் 3 சிக்ஸர்கள். சின்ன வயது சச்சின் போல மீண்டும் சிக்ஸர்கள் அடிக்க ஆரம்பித்துள்ளார் :) ஸ்டெயினின் பந்தை ஹூக் செய்து அடித்த சிக்ஸர் கண்ணிலேயே நிற்கிறது! பேட்டிங் பவர் பிளே எடுக்கப்படாத நிலையில், இத்தகைய பலமான அடித்தளம் அமைக்கப்பட்ட சூழலில், இந்த ஸ்கோர் இரு மடங்காகும் என்ற எதிர்பார்ப்பு இயல்பானது! இது சற்று அதிகம் என்று கொண்டாலும் கூட, மீதமுள்ள 20 ஓவர்களில் பிரதி ஓவருக்கு 7 ரன்கள் என்ற கணக்கில், 140 ரன்கள் எடுப்பதில் எந்த சிரமமும் இருந்திருக்க முடியாது! ஆக 340 ரன்கள் என்ற இலக்கை bare minimum என்று கூற வேண்டும்!!!

36வது ஓவரில் சச்சினின் மற்றொரு சதம் (99th International Ton). 38வது ஓவர் முடிவில் ஸ்கோர் 253/1. 39-ல் பவர்பிளே தேர்ந்தெடுத்தது சரியானது என்றாலும், 40வது ஓவரில் சச்சின் அவுட்டானதும், பதானை களமிறக்கியது தவறு, பதான் ஆட்டத்துக்கு பவர்பிளே தேவையில்லை என்பது என் எண்ணம்! அடுத்த ஓவரில் கம்பீரும் விக்கெட்டிழந்தார். இப்போதாவது கோலியை அனுப்பியிருக்க வேண்டும். 2வது அல்லது 3வது டவுனில் கோலி ஆடுவதே பயனளிக்கக் கூடியது. அதே ஓவரில் பதானும் அவுட்!

இப்போதும் கோலியை அனுப்பாமல், தோனி களமிறங்கினார். தோனியின் தற்போதைய திராபை ஃபார்முக்கு அவர் 5-down வருவதே சாலச் சிறந்தது! கடைசி 4-5 ஓவர்களில் "பட்டால் பாக்கியம் படாவிட்டால் லேகியம்" என்று அதிரடியாக மட்டை சுழற்றுவதற்கு அவரது புஜபராக்கிரமம் உதவலாம்! With his pathetic form, Dhoni promoting himself either to accelerate scoring OR to steady the ship is absolutely of NO USE at all. ஹெலிகாப்டர் ஷாட்டை தோனி அற்புதமாக ஆடுவதை (விளம்பரங்களில் மட்டும்!) பார்த்திருப்பீர்கள் :-)

கம்பீர் விக்கெட்டுக்குப் பின் இந்தியர்கள் செய்தது harakiri மட்டுமல்ல, மூளையை கழட்டி வைத்து விட்டு ஆடிய middle order-ன் பேட்டிங் (அனுபவம் இல்லாத) கென்யா, கனடா பேட்டிங்குக்கு நிகராக இருந்தது! பவர் பிளே ஓவர்களில் 4 விக்கெடுகள் இழந்து 30 ரன்கள் எடுத்தது atrocious to say the least! Worse was to follow! அடுத்த 5.4 ஓவர்களில், மீதி 5 விக்கெட்டுகளும் காலி, 13 ரன்கள், மொத்தத்தில் 300 கூட தேறவில்லை! 296 ஆல் அவுட்!!!! 320 is a par score on this pitch என்று வர்ணனையில் யாரோ கூவிக் கொண்டிருந்தார்கள்!

I am pretty used to seeing the Indian middle order debacles but this one left me speechless :) Favorites என்று எல்லா தளங்களிலும் சதாசர்வகாலமும் அறிவிக்கப்படும் நம்பர் 1 அணி இது போல மகா கேவலமாக, பிசாசு உலவாத ஆடுகளத்தில் மண்ணைக் கவ்வியதை என்னவென்று சொல்ல! It was really unpardonable to have wasted such a dream start provided by the top 3 batsmen. இந்த எழவுக்குத் தான் சச்சின் இறுதி வரை ஆட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்! அவர் சென்ற பின்னர், கம்பீராவது ஒரு பக்கம் நின்று ஆட முயற்சித்திருக்க வேண்டும்.

அதே சமயம், இறுதி 10 ஓவர்களில் (முதல் 40 ஓவர்களில் அடிபட்டு சுருண்டிருந்த) தென்னாப்பிரிக்க ஹயீனா, சச்சின், கம்பீர் விக்கெட்டுகளுக்கு பின் லேசான ரத்த வாடையை முகர்ந்து விட்டது :) ஸ்டெயினின் பந்து வீச்சில் வீரியம் கூடியது. இவருக்கு 5 விக்கெட்டுகள்! This showed the exemplary character of the great fast bowler who was taken to task in his earlier spells. His last 4 overs read 4-0-9-5.

தென்னாபிரிக்கா ஆடியபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு அத்தனை சாதகமாக இல்லை. சாகீர் சிறப்பாக பந்து வீசினார். 5-0-13-1. This time around, SA played sensibly and bided its time. அம்லா, காலிஸ், டிவிலியர்ஸ் அரைச் சதங்கள் எடுத்தனர். காலிஸின் ஸ்வீப், டிவிலியர்ஸின் inside-out விளாசல்களும் அருமை. தோனியின் பந்து வீச்சு மாற்றங்கள் சரியாக அமைந்ததாலும், ஹர்பஜன் அருமையாக பந்து வீசி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியதாலும், ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்றது என்று கூறலாம். 45 ஓவர்கள் முடிவில், தெ.ஆ 251/6 (46 runs required from 30 balls, RR: 5.57, RRR: 9.20). ரென்ஷன் :)

3 ஓவர்கள், 31 ரன்கள். முனாஃப் ஓவரில் 14 ரன்கள்! 2 ஓவர்கள், 17 ரன்கள். மேலும், ரென்ஷன்! சாகீரை கடைசி ஓவருக்கு வைத்திருக்கலாம், முனாஃப் 14 ரன்கள் வாரி வழங்காமல் இருந்திருந்தால்! (49வது) சாகீரின் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே! Outstanding bowling with the old ball !! 1 ஓவர், 13 ரன்கள் தேவை. மேலும் மேலும் ரென்ஷன் :)

இந்த ஓவரை வீச நெஹ்ராவை தோனி அழைத்தது தவறு என்று டிவிட்டரில் பல எதிர்ப்புக் குரல்கள் :) With Harbajan bowling well with a good rythm, he should have been the automatic choice. நெஹ்ராவின் முதல் 2 பந்துகளில், பீட்டர்சன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என்று விளாசினார்! Match was effectively lost for India! நெஹ்ரா அல்லது முனாஃபுக்கு பதிலாக அஷ்வின் ஆடியிருந்தால், இந்த ஆடுகளத்தில் தெ.ஆ 297 என்ற இலக்கை கனவில் கூட எட்டியிருக்காது என்று உறுதியாகக் கூறுவேன்! பிரவீன் இல்லாததும் ஒரு பெரிய குறை, சாகீருக்கு நல்லதொரு பார்ட்னராக இருந்திருப்பார்.

Choking என்பதை ஒரு கலை வடிவமாக மாற்றிய பெருமை கொண்ட தென்னாபிரிக்காவை, 13 ரன்கள் தேவை, 7 விக்கெட்டுகள் இழப்பு என்ற நிலையில், பீட்டர்சன் என்ற திராபை இறுதி ஓவரை எதிர்கொண்ட சூழலில், இந்தியா எளிதில் வீழ்த்தியிருக்க வேண்டும்! அதை தவறவிட்டது தான், என்னளவில், மற்ற எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கேவலம்! As of now, India's world cup dream looks like "Nightmare on Elm street" :-)


என்றென்றும் அன்புடன்
பாலா

நேற்றைய ஆட்டத்தில் ஒரே ஆறுதல் - அடிக்கடி பிங்க் வண்ண பெண்மணியை காண்பித்துக்கொண்டு இருந்தார்கள். டென்ஷனாக பார்க்கவே பாவமாக இருந்தார், அந்த பெண்மணியை பார்த்திருந்தாலாவது ஒழுங்காக ஆடியிருப்பார்கள். மாட்ச் முடிந்த பின் தோனி "Play for the team, not the spectators" என்றார்!

22 Comments:

Anonymous said...

//இதுவரை விளையாடிய நான்கு சப்பை டீம்களிடமே சொதப்பிய இந்திய அணி , இனிவரும் அனைத்து மாட்சிலும் தோற்பது உறுதி.
குவாட்டர் பைனலில் தோற்று காலேரியில் அமர்வது உறுதி.//

அதான் சொன்னோம்லே...

மத்தபடி அந்த "பிங்க்" சூப்பர்.

mak said...

Former Australian cricketer Dean Jones feels that for Indian captain Mahendra Singh Dhoni, winning the World Cup will remain a dream.

In his column in The Age, Jones pointed out that history is very important to cricketers.

"It tells us what we did wrong and what we did right in the past. There have been nine World Cups and those World Cup champion teams do not lie about the composition and skills required to win," he said.

"The three main common denominators consistent with all World Cup champion teams are: Your top four batsmen must be of a high quality. They must have the technique to play the new ball, as well as have the power and stroke play during Powerplays. They also must have the fitness to bat through the whole 50 overs. Your top four bowlers must be of high quality, able to absorb pressure and bowl defensively in Powerplays. If you can't field, don't bother turning up!" he said.

"All this taken into account, I do not believe India will win the World Cup with its current form. Everyone here has a huge regard for the Indian team. They have the batsmen, no doubt. Tendulkar and Sehwag can rip any attack to shreds. But that alone doesn't win the World Cup," he said.

Jones asaid that Dhoni's bowling line-up comprising Zaheer Khan, Ashish Nehra, Piyush Chawla and Harbhajan Singh doesn't look as good as any of the line-ups of the previous teams.

"Dhoni wants seven specialist batsmen and four specialist bowlers. Having seven batsmen tells me that India doesn't trust its 'engine room' to make the runs required. By having four bowlers, it means that everything must go right or they are in deep trouble. What happens if one is injured? Or one gets smashed," he asked.

"India has struggled to bowl out Bangladesh and England. Ireland troubled them, but Dhoni won't budge. India's main weakness is the form of Chawla and Harbhajan. Chawla is being smashed and was brought in by the strong backing of Dhoni after two years in obscurity. There are three leg-spinners who have won World Cups: Mushtaq, Warne and Brad Hogg. Is Chawla as good as those three? No, he isn't," he said.

Jones also said that Harbhajan's form is also an added worry for Dhoni.

"Harbhajan has struggled in all World Cups and has only taken six wickets in eight matches against the Test countries at an average of 58. His 10 overs are going for around 50," he said.

"The team needs the attitude to get wickets and not just defend. Getting wickets always stops the run-rate. Its fieldsmen must look for run-outs and want the ball in the field."

Anonymous said...

தோனியின் பாட்டிங் ஆர்டர் பரிசோதனைகளையும், அஷ்வினை மெனக்கெட்டு ஒதுக்குவதையும், பாட்டிங் மறந்த யுவராஜை இன்னும் தலை மேல் வைத்துக்கொண்டு ஆடுவதையும், நேற்றைய ஆட்டத்தின் இறுதி ஓவர்களையும் பார்த்தால் மாட்ச் ஃபிக்ஸிங் பூதம் மறுபடியும் தலையெடுத்து விட்டதோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை...

ஶ்ரீனி

Essex Siva said...

"இந்த எழவுக்குத் தான் சச்சின் இறுதி வரை ஆட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்! "
வயத்தெரிச்சல் புரிகிறது! same blood!
நெஹ்ரா body language சுத்தமாக சரியில்லை, ஒரு அசடாகவே தெரிந்தார், பந்தையும் வீசினார். ஒரு பக்கம் சாகீர் கட்டுப்படித்த மருபக்கம், நம்மாள் தாராளம்!
அஷ்வினை சேர்க்காதற்கு டோனி சொல்லும் காரணம் சத்தியமாக புரியவில்லை, யாராவது சொல்லுங்களேன்!

Anonymous said...

bala dhora english padamellaam paarkuthu. nightmare on eelam street. ivaru periya vimarsana pudungi.

Anonymous said...

These guys are playing only for MATCH FIXING.. not for us... and we all read, write and blog ...

R.Gopi said...

எது எப்படியோ... பேட்ஸ்மென் கைவிட்டுட்டாங்கன்னு “தல” டெல்லி போய்விட்டு வந்து பொலம்புனா மாதிரி தோனி பொலம்பறாரே... இவரு என்னாத்த ஆடி கிழிச்சுட்டாரு...

வர வர விளையாட்டுல கூட எல்லாரும் “தல” மாதிரி அடுத்தவங்க மேல பழி போடறத ஒரு ஃபேஷன் மாதிரியே ஆக்கிட்டாய்ங்க...

vikram said...

\\அஷ்வினை சேர்க்காதற்கு டோனி சொல்லும் காரணம் சத்தியமாக புரியவில்லை, யாராவது சொல்லுங்களேன்!\\

maybe, dhoni is "preserving" ashwin for IPL where the big bucks are and which will start soon after the WC :(
(I cant think of any other logical reason!)

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

அட கபோதி அனானி, அது Eelam street இல்ல, Elm street
கண்ணும் தெரியலை, ஆங்கிலப்பட அறிவும் அற்புதம்.
இந்த லட்சணத்தில எ.அ.பாலா விமர்சனத்துக்கு விமர்சனம். வெளங்கிடும் :)

Anonymous said...

இ.வ
'பிங்க்' பொண்ணு பத்தி உங்க 'மஞ்ச' கமெண்ட் சூப்பர். பெண்ணிய ஆதரவாளர் எ.அ.பாலா வருத்தப்பட போறாரு பாருங்க ;-)

naarayanan said...

also sachin's straight drive was a lingering master stroke.

Anonymous said...

"இந்த எழவுக்குத் தான் சச்சின் இறுதி வரை ஆட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்! "
வயத்தெரிச்சல் புரிகிறது! same blood!
i wasted my time seeing such a lousy match and i was demoralised

Anonymous said...

Running between wickets is an art, which the so called Team India is yet to master. See the South Africans, they earned atleast some 15 to 20 runs by speedy running between the wickets. Compared to them, most indian players, particularly Dhoni himself,crawls! If only we would have earned atleast 10 runs more with quick running, the course of match would have changed favourably to India.

Free Traffic said...

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

Aravind said...

Fielding setup mosam.. since dhoni was standing close behind the stumps anythng that takes past him would be a four.. he never realised it even at the last over..

Dhoni tells the batsmen not to play for the gallery.. how else should they play in final overs.. aim for a big hit or taking singles like what he does..

The difference between ganguly and dhoni.. ganguly never complain abt team members in press meet.. he used to say we made a mistake.. but dhoni is trying to save his ass..

he is indeed a captain cool.. but its time he has to take things seriously..

antha oru vizhayathuku intha match tholvi uthavum..

Aravind said...

Fielding setup mosam.. since dhoni was standing close behind the stumps anythng that takes past him would be a four.. he never realised it even at the last over..

Dhoni tells the batsmen not to play for the gallery.. how else should they play in final overs.. aim for a big hit or taking singles like what he does..

The difference between ganguly and dhoni.. ganguly never complain abt team members in press meet.. he used to say we made a mistake.. but dhoni is trying to save his ass..

he is indeed a captain cool.. but its time he has to take things seriously..

antha oru vizhayathuku intha match tholvi uthavum..

Aravind said...

Fielding setup mosam.. since dhoni was standing close behind the stumps anythng that takes past him would be a four.. he never realised it even at the last over..

Dhoni tells the batsmen not to play for the gallery.. how else should they play in final overs.. aim for a big hit or taking singles like what he does..

The difference between ganguly and dhoni.. ganguly never complain abt team members in press meet.. he used to say we made a mistake.. but dhoni is trying to save his ass..

he is indeed a captain cool.. but its time he has to take things seriously..

antha oru vizhayathuku intha match tholvi uthavum..

ஒரு வாசகன் said...

நம்ம ஆளுங்க எப்பவும் பேட்டிங் பவர் பிளேயில் சொதப்புகிறார்கள். பேட்டிங் பவர் பிளேயை 30வது ஓவரின் பின் எடுத்து ஆடத்தெரியால் ஆடி அவுட் ஆகின்றார்கள். இவர்கள் செய்யவேண்டியது, போளீங் பவர் பிளே முடிந்தவுடன் (10 அல்லது 15) பேட்டிங் பவர் பிளேயை எடுக்கவேண்டும்

Sathish said...

Its better for India to take batting powerplay after 15 overs where they will not feel like being in Powerplay and they will exhibit normal batting...

gtr said...

if you ever have seen before Nehra's bowling? i've been watching him since his debute.The captain would have made fielding arrangements for offside. Nehra would have done run up to the stumps and delivered the ball on the leg side. the batsman should not take any risk or even not to make contact with the ball,it will automatically touch the boundary line without finding a fielder on the thirdman.the next is the amazing thing ,yes its nehra's reaction.he would touching his chin by his finger,expressing his agony about not fielding the ball and walk back for his next delivery.- Nehra's fan

Gana said...

Considering that your bowling's so weak, you should at-least prepare wickets to one's strength and back oneself to deliver. India's strength traditionally has been its spin bowling which is rather spineless these days. But with someone like R Aswhin this listless attack can turn lethal, on a turning track. But I don't know why MS doesn't trust his Super Kings team mate, and Chawla has managed to put pressure more on the Indian fans rather than the opposition batsmen! God knows how anyone expects this team to reach the semis leave alone win the world-cup. On Hindsite even if they do do you think they deserve to win?

Gana
http://www.augustsara.com/7-things-to-do-to-make-indian-cricket-team-better

Anonymous said...

//அட கபோதி அனானி, அது Eelam street இல்ல, Elm street
கண்ணும் தெரியலை, ஆங்கிலப்பட அறிவும் அற்புதம்.
இந்த லட்சணத்தில எ.அ.பாலா விமர்சனத்துக்கு விமர்சனம். வெளங்கிடும் :)
//
Bala rasigar mandram is also ANANI.
Bala's Rasigar mandram is as cheap and mindless as Bala's commentary.