பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 07, 2011

India vs Ireland -பிரகாசிக்காத நட்சத்திரங்கள் vs மாவீரர்கள் -எ.அ.பாலா

இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை / எதிர்பார்ப்பு இல்லாமல், என் வாழ்வில் நான் பார்த்த முதல் ஆட்டமிது :) அயர்லாந்து மாவீரர்களின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் என்னை மாற்றி விட்டது போலும்.
டாஸில் வென்ற தோனி அயர்லாந்தை பேட்டிங் செய்ய அழைத்தற்கு ஒரு காரணம், இந்தியாவின் பந்து வீச்சு மீது நம்பிக்கையின்மை! மற்றொரு காரணம் பயம்! பகலிரவு ஆட்டத்தில் 250+ ரன்களை துரத்துவது சற்றே கடினம் என்று தெரிந்தும், தோனி ஃபீல்டிங் செய்ய முடிவெடுத்ததற்கு, அவசர விக்கெட்டுகள் இழந்து அனாவசிய பிரஷர் ஏற்படலாம் என்ற பயம். பேட்டிங் "ஜாம்பவான்கள்" உடைய இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்யத் தயங்கியது கொடுமை தான்.

பெங்களூர் சின்னசாமி அரங்க ஆடுகளம், இது வரை நடந்த ஆட்டங்களில் இருந்தது போல, பேட்டிங்குக்கு அத்தனை ஏதுவானதாக இல்லை. சகீர் கான் வேகத்தைக் குறைத்து, பந்தை நகர்த்துவதில் கவனம் செலுத்தி பந்து வீசியதில், உடனடி பலன் கிடைத்தது! அயர்லாந்து 9/2 (2.3 ஓவர்களில்). இன்னொரு பக்கம் யூசுஃப் பதானும் நன்றாகவே பந்து வீசீனார். அயர்லாந்து கேப்டன் போர்டர்பீல்ட்-நீல்-ஓ பிரைன் ஜோடி அதிரடியில்லாமல், பொறுமையாக ஆடி, நடுநடுவே பவுண்டரிகளும் அடித்ததில்,. பார்ட்னர்ஷிப் 100 ரன்களைத் தாண்டியது.

ஆடிய பதினோரு பேரில் மட்டுமல்ல, உலகக் கோப்பை அணியில் கூட இடம் பெறத் தகுதியில்லாத சாவ்லா, சுழற்பந்துக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் கூட சரியாக பந்து வீசவில்லை! பேட்ச்மன்கள் மேல் பிரஷர் குறைந்ததற்கு சாவ்லாவே முக்கியக் காரணம். அடுத்த ஆட்டத்தில், இவருக்கு பதிலாக அஷ்வின் ஆடினால் பரவாயில்லை. சாவ்லா தவிர மற்ற பந்து வீச்சாளர்கள், சாதகமான ஆடுகளத்தில் நன்றாகவே பந்து வீசினர். ரன் அவுட் வாயிலாக நீல்-ஓ பிரைன் விக்கெட் இழந்தார். ஸ்கோர் 122/3 (26.5).

அபாயகரமான கெவின்-ஓ பிரைன் யுவராஜ் பந்து வீச்சில் ஏமாந்து, லட்டு மாதிரியான ஒரு ரிடர்ன் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்தபோது, ஸ்கோர் 147/5 (33.4). அயர்லாந்து 225க்கு மேல் எடுக்காது என்று தோன்றியது.
ஆனால், இறுதியில் அது கூட தேறவில்லை. This was destined to be Yuvaraj's day! மனிதர் எந்த பேட்ஸ்மனையும் செட்டில் ஆக விடாமல், அபாரமாக பந்து வீசி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் (10-0-31-5). 45வது ஓவரில் தாமதமாக எடுக்கப்பட்ட பவர்பிளே, 8 விக்கெட்டுகள் இழந்த நிலையில் பயனில்லாமல் (23 ரன்களே கிடைத்தன) போயிற்று, அயர்லாந்து 47.5 ஓவர்களில் (ஒரு பவர் பிளே ஓவர் ஆடப்படவில்லை) 207 ஆல் அவுட். I was disappointed. I believe that if Ireland had scored 240+ runs, India would have really struggled batting second on a pitch that was getting increasingly lower and slower.

இந்தியா பேட்டிங்: ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகள் (சேவாக், கம்பீர்) இழந்ததில், ஸ்கோர் 24/2. சச்சின் மேல் சற்று பிரஷர், அதனால் அவர் கவனமாக ஆடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஜான்ஸ்டனின் பந்து வீச்சில் அனுபவம் மிளிர்ந்தது. சேவாக் விக்கெட்டை caught & bowled வாயிலாக கைப்பற்றிய பின், அவர் ஆடிய கொண்டாட்ட நடனம் (Irish Jig!) பார்க்க அற்புதமாக இருந்தது :-) அயர்லாந்து கேப்டன் பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங் அமைப்பு மாற்றங்களை அருமையாக கையாண்டதில், Indian batsmen were forced to earn every run. Potterfield is an intelligent and attacking captain.

டாக்ரெல் சுழற்பந்து வீச்சில் சச்சின் விக்கெட் இழந்தார்! ஸ்கோர் 87/3 (20.1). சச்சின் தனது முதல் உலகக்கோப்பை ஆட்டத்தை ஆடிய பிறகு தான் "சிறுவன்" டாக்ரெல் பிறந்தார் என்பது கூடுதல் தகவல் :) டாக்ரெல்லின் பந்து வீச்சு நேர்த்தியான ஆக்ஷனுடன் சிறப்பாக இருந்தது. சாவ்லாவை விட மிக நன்றாக பந்து வீசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது! கோலி அவுட்டானபோது ஸ்கோர் 100/4 (23.4). தேவையான ரன்ரேட் (4.07) பிரச்சினையில்லாவிட்டாலும், பேட்டிங் சற்று சிரமமாக இருந்த சூழலில், இன்னொரு விக்கெட் இழந்திருந்தால், பிரஷர் கூடியிருக்கும்.

Enter Captain Cool ! தோனியின் பேட்டிங்கை attractive என்று கூற முடியாது, ஆனால் effective. யுவராஜும் தோனியும் டென்ஷனைக் காட்டிக் கொள்ளாமல், நிதானமாக ஆடியதில் 40 ஓவர்களில் ஸ்கோர் 160. மீண்டும் சிறுவன் டாக்ரெல்லுக்கு விக்கெட், தோனி அவுட்! யூசுஃப் பதான் களமிறங்கி சுழற்பந்து வீச்சை எப்படி கையாள வேண்டும் என்று ஒரு Demo கொடுத்தார் :) 2 பிரம்மாண்டமான சிக்ஸர்கள், 1 பவுண்டரி ! பதானைத் தவிர மற்ற பேட்ஸ்மன்கள் சுழற்பந்து வீச்சை நம்பிக்கையோடு கையாளவில்லை, தடவித்தடவித் தான் ஆடினர். No one used the feet well against the Irish spinners.

பதான் அடித்து ஆடுவதற்காக, யுவராஜ் strike-ஐ விட்டுக் கொடுத்தது சற்று வித்தியாசமாக இருந்தது! சில வருடங்களூக்கு முன், மற்ற பேட்ஸ்மன்கள் தான், இறுதி ஓவர்களில் யுவராஜ் அதிகம் பந்து வீச்சை எதிர்கொள்ளும்படி பார்த்துக் கொள்வது வழக்கம். Changing Times :) யுவராஜ் 50 ரன்கள். தலையில் உள்ள கனத்தை இது போல பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் யுவராஜ் காட்டினால், இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியை நோக்கிய பயணத்திற்கு பேருதவியாக இருக்கும்!

46 ஓவர்களில் இந்தியா வெற்றி பெற்றாலும், இதை convincing win என்று கூற முடியவில்லை! Moral Victory goes to the Irish who fought like Lions defending such a low total so admirably. அடுத்து வரும் ஆட்டங்களில் நமது பேட்டிங், பந்துவீச்சு இரண்டுமே இன்னும் மேம்பட வேண்டும். நம்புவோம்!

என்றென்றும் அன்புடன்
பாலா


19 Comments:

மணிகண்டன் said...

Bala, Read your report for the first time. And it is good.

Chawla did win a match for india against australia in warm up !

Ireland played good but generally moral victories are morale-sapping :-)

Till now, the only team that has fully impressed me is Australia. I have not given up hopes as i see mohandoss starting to say "Go Aussie Go" again. His unwavering support of Aussies usually end up in tears for Aussies. Thanks to him, other teams still have a chance.

மணிகண்டன் said...

WC Finals at Wankhade.

India is chasing the Australian target. A ball to go. 3 runs to score. Australia has no reviews pending with UDRS. India has got one review left.

Ponting with his muddled thinking brings in the fine leg to the circle.

Brett Lee delivers a searing leg stump yorker. Ball takes the edge of Sachin's bat hits the toe and runs into fine leg boundary.

Australians appeal ferociously for Leg before. Aleem dhar is not sure. As india has got a review left, he decides to give it out.

Sachin calls for a review. TV replays show the edge in the big screen. Umpires reverses the decision. And as per the current ICC rules, Australia lifts the trophy.

இட்லிவடை, இதுபோன்று பல அதிபுதிசாலித்தனமான scenario தமிழில் எழுதி அனுப்பட்டுமா ? உங்களுடைய தளத்தில் வெளியிடுவீர்களா ? :-)

Kumaran said...

Enakkum chawla effective illannu thaan thonichu. but felt he was better against right handers. leg spin against right handers was no use. he was struggling where to pitch the ball and too many wides/noballs because of that. adhukkaga right handers kku super a bowl panniruvaannu ellam solla varalappa..

Kumaran said...

Enakkum chawla effective illannu thaan thonichu. but felt he was better against right handers. leg spin against right handers was no use. he was struggling where to pitch the ball and too many wides/noballs because of that. adhukkaga right handers kku super a bowl panniruvaannu ellam solla varalappa..

Anonymous said...

Dear bala
You should review the other thrilling match eng vs sa

Raja Subramanian said...

@ Manikandan

Let me change Ponting to Dhoni.

"Dhoni with his muddled, sorry, brilliant thinking brings in the fine leg to the circle."

Let me change Brett Lee to Zaheer, and change Sachin to Ponting in your next para.

Let me change Sachin in your next para to Ponting, calling for a review.

In the last para, let me change Australia to India --- and as per the current ICC rules, India lifts the trophy.

Tell me, Manikandan, how many of Indian fans like me and you (athi buddhisali) would voice our protest in such a scenerio? Would you write a blog then?

These "current ICC rules" were formed months ago, with the active consultations and discussions between experts and members of all the Boards - that includes INDIA. These rules were approved by all Committee Members and were available for public months ago.

Every captain and the coach/manager of every team participating in World Cup 2011, that includes MS DHONI, were given the book of complete Rules months before the start of WC.

So, please do not ridicule ICC or the rules; if the rules were "silly" these should have been discussed by the Indian Experts in the Committee months ago and got them scrapped or modified.

ancient said...

Thanks, Manikandan, Kumaran, Raja Subramanian, Anony for your comments!

Anony,

Unfortunately, I did not see that amazing match between Eng-SA fully ! I switched over to India vs Ireland match when SA were cruising and then just saw the last 3 overs. SA lived up to its reputation of Chokers ;-)

anbudan
BALA

(-!-) said...

அன்புள்ள (?) அன்புடன் பாலா,
போன மேட்சை மட்டும் அரை குறையாப் பாத்தாலும் எழுதினீங்க? இப்போ ஆங்கிலேயர் ஜெயிச்சதும் எழுதாம த்வேஷமா? :-P ஏன் அய்யா இந்த ஓர வஞ்சனை. :>

இங்கென்னைத் திட்ட மாட்டீர் என்ற நம்பிக்கையில் தமாஷாக இந்தக் கமெண்ட். :> புரிதலுக்கு நன்றி³.

Selva said...

" Sachin calls for a review. TV replays show the edge in the big screen. Umpires reverses the decision. And as per the current ICC rules, Australia lifts the trophy.
"
If Sachin is declared not out, how will Australia lift the trophy? will the leg bye 4 runs not counted to the score? Can Manikandan explain me? Please do not ask me to read the ICC rule book. I am a learner in cricket.

ஸ்ரீதர் நாராயணன் said...

//இட்லிவடை, இதுபோன்று பல அதிபுதிசாலித்தனமான scenario தமிழில் எழுதி அனுப்பட்டுமா ? உங்களுடைய தளத்தில் வெளியிடுவீர்களா ? //

இம்மாதிரி விஷயங்களை வெளியிடத்தானே இட்லிவடை இருக்கிறது. கண்டிப்பாக வெளியிடுவார் :))

மணிகண்டன் said...

Raja Subramanian, I was not one of the expert who was present in the committee. So, i don't know on why this scenario was not thought out. And if the scenario is changed, it is not interesting. So, i would not really comment on things that is not interesting to me.

But there exists an easy solution to this problem which is explained in i-mpertinent.blogspot.com

மணிகண்டன் said...

Selva, As you have seen from other idlyvadai's posts, this is a forum for experts and not for learners :-)

Selva said...

"
As you have seen from other idlyvadai's posts, this is a forum for experts and not for learners "

இட்லி வடை, அப்படியா?
அப்ப மணிகண்டன் எப்படி இந்த forum வந்தீங்க?

மணிகண்டன் said...

Selva, As i am part of idlyvadai's team, we are excluded (me and idlyvadai) :-)

I have explained it in i-mpertinent.blogspot.com

enRenRum-anbudan.BALA said...

//இங்கென்னைத் திட்ட மாட்டீர் என்ற நம்பிக்கையில் தமாஷாக இந்தக் கமெண்ட். :> புரிதலுக்கு நன்றி³.
//
நான் வடிவேலு பாஷையில் 'ரொம்ப நல்லவன்', ஐயா ;-) எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன்!

enRenRum-anbudan.BALA said...

//இம்மாதிரி விஷயங்களை வெளியிடத்தானே இட்லிவடை இருக்கிறது. கண்டிப்பாக வெளியிடுவார் :))
//
இதில் எனக்கு பிரத்யேகமான உள்குத்து ஏதாவது உள்ளதா :-)

enRenRum-anbudan.BALA said...

Manikandan,
//Selva, As you have seen from other idlyvadai's posts, this is a forum for experts and not for learners :-)
//

This is 3-much :-) But then, I enjoyed Selva's retort and your response too !

ஸ்ரீதர் நாராயணன் said...

// இதில் எனக்கு பிரத்யேகமான உள்குத்து ஏதாவது உள்ளதா :-) //

ஐயோ பாலா சார்! ஏன் இப்படி? உங்களை அப்படியெல்லாம் சொல்லுவேனா... அதுவும் வெளிப்படையா? :))

Jokes apart - உங்க கட்டுரைகள் தரமானவை. உங்கள் கிரிக்கெட் ஆர்வம் அதன் சுவையை கூட்டி மெருகு சேர்க்கிறது.

ஆனால், சின்ன தவறுக்கும் இந்திய அணிக்கு பெரிய பனிஷ்மெண்ட் கொடுத்து விடுகிறீர்கள். அதுதான் அலர்ஜியாக இருக்கிறது :)

enRenRum-anbudan.BALA said...

Sridhar,
//ஆனால், சின்ன தவறுக்கும் இந்திய அணிக்கு பெரிய பனிஷ்மெண்ட் கொடுத்து விடுகிறீர்கள். அதுதான் அலர்ஜியாக
//
அதற்குக் காரணம் ஆத்திகம்! "கடவுள்" இடம் பெற்றுள்ள ஒரு அணியின் மேல் எனக்கிருக்கும் பெரும்பற்று :-) கடவுள் தோற்கலாமா என்ற ஆதங்கம்!