பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 03, 2011

England vs Ireland -முரட்டுக்காளையை அடக்கிய குட்டிப்பூனை

இதற்கு முன் நான் எழுதிய இடுகையின் தலைப்பை கவனத்திற்கு கொண்டு வரவும் !

இந்த ஆட்டத்தைக் காண அரை நாள் லீவு போட வேண்டும் என்றிருந்தேன். என் கெட்ட நேரம், ஆபிஸில் அவசர வேலை, வீடு திரும்ப நேரமாகி விட்டது. இங்கிலாந்து 327 எடுத்தார்கள் என்று தெரியும். வீட்டுக்கு வந்து ஸ்கோர் பார்த்தால், அயர்லாந்து 34 ஓவர்களில் 205/5 (123 runs required from 16 overs, RR: 6.02, RRR: 7.68). கெவின் ஓ ப்ரயன் ஆட்டம் (62 off 34 balls) களை கட்டிக் கொண்டிருந்தது! 35வது ஓவரை, பரிதாபத்துக்குரிய ஜேம்ஸ் ஆண்டர்சன் வீச, கெவின் விளாசிய விளாசலில் (2X4, 1X6), 17 ரன்கள் குவிந்தன.

பேட்டிங் பவர் பிளே (36வதில்) முடிந்தபோது, அந்த 5 ஓவர்களில் அயர்லாந்து 62 ரன்களை குவித்திருந்தது. இங்கிலாந்தின் தோள்கள் தொங்கத் தொடங்கியிருந்தன. இங்கிலாந்து வீரர்கள் முகத்தில் தோல்வியின் பயம் அப்பியிருந்தது. 37வது ஓவரில், இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரஸ்னனை ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என்று சாத்தியதில், ஸ்கோர் 243/5. தேவையான ரன்ரேட் 6.5-க்கு குறைந்து விட்டது. கெவின் ஆடியது போல ஒரு fearless ஆட்டத்தை, Clean Hitting-ஐ அரிதாகத் தான் பார்க்க முடியும். அதே நேரம், அவருடைய பார்ட்னர் க்யூஸாக்கும் பந்துகளை வீணாக்காமல், மிக நேர்த்தியாக ஆடி, கெவினிடம் strike அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

அடுத்த காலிங்வுட் ஓவரில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 150+ அடித்து இந்தியரின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்ட இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ், கெவின் கொடுத்த கேட்ச்சை கோட்டை விட்டார்! அரங்கில் மட்டுமல்ல, டிவிட்டரில் கூட அயர்லாந்து ஆதரவு இரைச்சலை "கேட்க" முடிந்தது :) மறுபடியும் என் துரதிருஷ்டம், தொலைபேசியில் "கஷ்டமர்" அழைப்பு. வேண்டாவெறுப்பாக அதை கவனித்து, அவசரமாக முடித்துக் கொண்டு டிவி பக்கம் ஓடினால், அயர்லாந்து 308/6 (18 பந்துகளில் 20 ரன்கள் தேவை).

க்யூசாக் அவுட்டாகியிருந்தார், கெவின்-க்யூசாக் பார்டனர்ஷிப் 101 பந்துகளில் 162 ரன்கள்! கெவின் இங்கிலாந்தின் குரல்வளையில் தன் கையை வைத்து இன்னும் நெரித்துக் கொண்டிருந்தார்! "டிவி பார்க்கிறாயா?" என்று விசாரித்து 4-5 நண்பர்களிடமிருந்து தொடர்ந்து மொபைல் அழைப்பு! கிரிக்கெட் என்றால், ஏன் நம்ம ஊரில் இப்படி பாயைப் பிறாண்டுகிறார்க்ள் என்று உணர முடிகிறது அல்லவா :-)

இந்த ஓவரில் கெவின் சற்று ஜாக்கிரதை உணர்வோடு ஆடியதை புரிந்து கொள்ள முடிந்தது. கெவின் மேல் பிரஷர் ஏற்படாமல் இருக்க, 48வது ஓவரின் இறுதிப் பந்தை மூனி மிக அருமையாக, ஒரு தேர்ந்த பேட்ஸ்மென் போல, மிட் விக்கட் திசையில் பவுண்டரி அடித்தார். 12 off 12 Required!

49வது ஓவரின் முதல் பந்தில் கெவின் (113, 63 பந்துகளில்) ரன் அவுட்! 113 ரன்களில், 25 ரன்கள் தான் ஓடி எடுத்திருக்கிறார்! அதற்கு அடுத்து பிராட் போட்ட கேவலமான full tossஐ ஜான்ஸ்டன் கூலாக பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள். 1 ஓவர், 3 ரன்கள் தேவை, 50வது ஓவரை ஆண்டர்சன் வீசினார். Rest is History! Not only Kevin O Brien scored the fastest century (Off 50 balls) in World cup history, this run chase (328) is the highest successful chase in WC History! நண்பர் மாயவரத்தான், கெவின் ஓ ப்ரியனை IPL-இல் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு விளையாட அழைத்து வந்தால் நல்லா இருக்கும் என்று டிவிட்டியிருந்தார்!

என்றென்றும் அன்புடன்
பாலா
http://balaji_ammu.blogspot.com

வாசகர்கள் மஞ்சள் கமெண்டை பின்னூட்டதில் போடலாம்

11 Comments:

நர்மதன் said...

see this link http://kumpuduraenunka.blogspot.com/2011/03/blog-post.html

Roaming Raman said...

முரட்டுக்காளைக்கு ஞாபகபபடுத்திய குட்டிப்பூனை(சிலர் குண்டுப்பூனை என்பர்)
இட்லிவடையாரே... ReadMore பட்டன் தைக்காமல் விட்டுட்டீரே!! ஏனென்றால்,
ஒரு நல்ல கட்டுரையை முழுதாகப் படிக்காமல் விட்டு விடப் போகிறார்கள்!!
இவ வில் அடிக்கடி கமென்ட் எழுதும் ரத்னவேல் அவர்களின் முதல் பதிவை வாசிக்க வருக.

http://rathnavel-natarajan.blogspot.com/

மேலும் இதற்கு மறவாது ஒரு பின்னூட்டம் வரைக..

ரோமிங் ராமன்

மஞ்சள் ஜட்டி said...

இந்தியாவை ஆண்டு அடிமைபடுத்தி சுரண்டிய இங்கிலாந்து, இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் பாகிஸ்தான், தமிழர்களை கொன்ற இலங்கை மூவரும் உலக கோப்பையில் படு தோல்வி அடைய வேண்டும்....

venkatramanan said...

Read More... links is missing in this post!

Regards
Venkatramanan

rajatheking said...

It really super game . . India must know how to chase big score

mohan baroda said...

wil this small cat create any surprise on sunday match like they did yesterday

Flash Actionscript said...

Bangalore pitch is very worst pitch for bowlers particularly in second innings. Few months ago we have successfully chased 300+ runs against New Zealand with Yousuf Pathan great knock, England tied with India in previous match and finally Ireland defeated England. Pitch should at least help for spin bowlers.

ஒரு வாசகன் said...

// ........ தமிழர்களை கொன்ற இலங்கை மூவரும் உலக கோப்பையில் படு தோல்வி அடைய வேண்டும்....//
தமிழர்களைக் கொல்ல உதவிய இந்தியா மட்டும் கொம்பா? இந்தியா இரண்டாவது ரவுண்டுக்கே செல்லக்கூடாது (போன தடவை மாதிரி)..... :-(

டகிள் பாட்சா said...

அடுத்த தலைப்பு ‘பூனையை கடித்த கட்டெறும்பு’ ஆக இருக்கலாம்?

Kasu Sobhana said...

Well done Ireland!

soundar said...

Hi Bala, Please change Newzeland Flag....