பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 12, 2011

England vs Bangladesh -காட்டெருமையை வேட்டையாடிய நிஜப்புலி

எனது முந்தைய உலகக்கோப்பை இடுகைகளை வாசித்தவர்களுக்கு காகிதப்புலிக்கும் நிஜப்புலிக்கும் வித்தியாசம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்! டாஸில் வென்ற பங்களாதேஷ், ஆடுகளத்தின் வேகமற்ற தன்மையை முன்னிட்டு இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதிரடி ஆட்டத்திற்கு உதவாத ஆடுகளத்தில், மட்டையாளர்கள் ஒடித் தான் ரன்களை சேர்க்க வேண்டிய நிலைமை! இங்கிலாந்து பொறுமையாக, கவனமாக ஆடினால் 240-250 ரன்கள் எடுக்க வல்ல ஆடுகளம் என்பது என் அனுமானம்.

சுழற்பந்து வீச்சுக்கு ஆதரவான ஆடுகளமாக இருந்தும், இங்கிலாந்து பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டி, காலிங்வுட்டை யார்டிக்கு பதிலாக அணியில் சேர்த்திருந்தது. 15 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்ததில், ஸ்கோர் 47/2. பெல்லும் பரிமளிக்கவில்லை. பீட்டர்சன்னுக்கு பதிலாக வந்திருக்கும் மார்கனும், டிராட்டும், ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினர் என்று தான் சொல்ல வேண்டும். 109 ரன்கள் பார்ட்னர்ஷிப். 40 ஓவர்கள் முடிவில், 169/4 (ரன் ரேட் 4.2). பங்களா சுழற்பந்து வீச்சாளர்கள் நயீம் இஸ்லாமும், அப்துர் ரசாக்கும் பின்னிய வலையில் இங்கிலாந்து பேட்ஸ்மன்கள் கட்டுண்ட்டிருந்தனர் என்றால் அது மிகையில்லை. அந்த நிலையில்

நயீம் 8-0-29-2
ரசாக் 7-2-13-1

நமது சாவ்லா இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஏன் ஹர்பஜனும் கூடத் தான்!

பவர்பிளே ஓவர்களில் (42-46) 33 ரன்களே இங்கிலாந்து எடுத்தது, 2 விக்கெட்டுகளை இழந்து, ஸ்கோர் 207-6. காலிங்வுட் இருந்ததால், மீதமுள்ள 4 ஓவர்களில் 30-32 ரன்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஓவருக்கு ஒரு விக்கெட் இழந்து, இங்கிலாந்து எடுத்த மொத்த ஸ்கோர் 225 (49.4). நயீம், ரசாக், ஷகீப் தலா 2 விக்கெட்டுகள். இவர்கள் கொடுத்த மொத்த ரன்கள், 28 ஓவர்களில் 110 ரன்கள் மட்டுமே.

பங்களாதேஷ் துவக்க ஆட்டக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் ஆடியதில், ஸ்கோர் 69/1 (12 ஓவர்கள்). This was a very positive approach to batting on a difficult pitch. அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததில், கேப்டன் ஷகீபும், இம்ருலும் கவனமாக, அதே நேரம் ரன்ரேட் 5 என்ற நிலையிலிருந்து இறங்காமலும், ஆடினர். இம்ருல் அவுட்டானபோது ஸ்கோர் 155/4 (71 runs required from 19 overs, RR: 5.00, RRR: 3.73). இந்த நிலையிலிருந்து பங்களாதேஷ் தோற்கவே முடியாது என்றெண்ணியிருந்தபோது, ஏன் கிரிக்கெட்டை The Game Of Glorious Uncertainties என்று சொன்னார்கள் என்று புரிந்தது :)

3/155 என்பதிலிருந்து, 14 ரன்களில் 4 விக்கெட்டுகள் சரிந்தன, 8/169. இங்கிலாந்து வீரர்களுக்கு சென்னையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் நினைவுக்கு வந்திருக்கலாம் :) இந்த 14 ரன்கள் எடுப்பதில், 8.4 ஓவர்கள் காலி, தேவையான ரன்ரேட் 5.6. ஷசாதும் ஸ்வானும் தலா 2 விக்கெட்டுகள். இருவருமே மிகச் சிறப்பாக பந்து வீசினர். I think Strauss should have kept 2-3 overs for these 2 bowlers for the end instead of finishing off their full quota of 10 overs each by the 43rd over !!! இது போன்ற சூழலில், பந்து வீச்சு மாற்றங்களை அதிகமாக கையாளவேண்டும். ஸ்வானின் இறுதி ஓவரில் (42வது) 16 ரன்கள், ஆட்டத்தின் போக்கும் மாறிய நேரம் இது தான்.

மஹ்மதுல்லாவும், ஷஃபியுல் இஸ்லாமும் டென்ஷன் துளியும் இன்றி பிரமாதமாக ஆடினர். அடிக்க வேண்டிய பந்துகளை தைரியமாக அடித்தனர். It was really a see-saw battle of nerves. பிரஸ்னனின் 45வது ஓவர் மெய்டன் ஓவர். ரன் ரேட் 6.6-ஐத் தொட்டது. 193/8. பந்து வீச வந்த ஆண்டர்சன் மோசமாக பந்து வீசி, 'அகல'ப் பந்துகளை வாரி வழங்கியதாலும், அதற்கு அடுத்த பிரஸ்னன் ஓவரில், இஸ்லாம் சாத்திய 2 பவுண்டரிகளாலும், வெற்றி இலக்கு பங்களாதேஷின் கைக்கெட்டிய தூரத்திற்கு வந்தது. 18 பந்துகளில் 12 ரன்கள் தேவை. Rest is history and a famous win for Bangladesh! This is by far one of the best rearguard acts I have seen against a good bowling attack (unlike the pathetic attack of world cup "favourites) on a difficult pitch!

இன்னும் 2 ஆட்டங்கள் ஆடவிருக்கும் சூழலில், அடுத்த சுற்றுக்கு செல்ல பங்களாதேஷுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்தோ, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் தோற்றால், விமானம் பிடிக்க வேண்டியது தான்! But then, England for its all round skills deserve to go to the next round !

என்றென்றும் அன்புடன்
பாலா

இருங்க மாட்ச் பார்த்துவிட்டு வருகிறேன்


6 Comments:

Speed Master said...

எக்ஸ்ராஸ் அதிகம்

Anonymous said...

dailyum yetho rendu post podanum. paavam unga nelamai.

பாலா said...

பாலா
ஒரு அருமையான எழுத்தாளர். அவரது உருவகங்கள் மிக அருமையானவை. அவர் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

இப்படிக்கு

பாலா

ஒரு வாசகன் said...

34வது ஓவரில் பந்தை மாற்றுகின்றார்களே அது புதுப் பந்தா?

cho visiri said...

//
34வது ஓவரில் பந்தை மாற்றுகின்றார்களே அது புதுப் பந்தா?//

New.........but not new(?!).Please see the relevant rule reproduced herein below;-


5.3.4 in addition, there will be a mandatory change of the ball at the
commencement of the 35th over of each innings.
5.3.5 the mandatory replacement balls for each innings are to be preselected by the captains prior to the commencement of the match
from the supply of spare balls provided by the home Board as follows:
a) the fourth umpire will supervise the process.
b) the captain who has lost the toss shall be permitted to select
two balls from the supply of cleaned and whitened used balls.
c) the other captain then chooses which of the two balls he
would like his team to bowl with.

ஒரு வாசகன் said...

//New.........but not new(?!).Please see the relevant rule reproduced herein below;//
நன்றி