பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 26, 2011

முக்கிய அறிவிப்பு !

இட்லிவடை வாசகர்களுக்கு வணக்கம்,

ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இட்லிவடை படித்தும், அதில் எழுதிப் பங்குகொண்டும், அதை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு நன்றிசொல்லவேண்டிய நேரம் நெருங்கியிருக்கிறது.

ஒரு சிறந்த நிறுவனத்திடம் இட்லிவடையைக் கைமாற்றுவது பற்றி கடந்த ஒரு மாத காலமாகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில நாளில் அந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். தொடர்ந்து இட்லிவடையை இதே போன்று நடத்துவோம் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். மற்றும் தேர்தல் நேரத்தில் மேலும் பல புதுமைகளைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாங்களும் அந்த நிறுவனம் தற்பொழுது வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் அச்சு இதழில் அவ்வப்போது எழுதுவோம் என்பதை வாசகர்களுக்குச் சொல்லிவைக்கிறோம்.

வாசகர்களாகிய நீங்கள் தொடந்து இட்லிவடைக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் மனபூர்வமான நன்றிகளுடனும்...

இட்லிவடை.

கவலைப்படாதீர்கள் - மஞ்சள் கமெண்ட் தொடரும்.. !

61 Comments:

கானகம் said...

//ஒரு சிறந்த நிறுவனத்திடம் // அட

//தொடர்ந்து இட்லிவடையை இதே போன்று நடத்துவோம் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள்//
அப்ப இனிமே நீங்க எழுத மாட்டீங்களா?

//வாசகர்களாகிய நீங்கள் தொடந்து இட்லிவடைக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் //

இட்லிவடை மாதிரி சுவாரசியமா இருந்தா நிச்சயம் ஆதரவு உண்டு. இல்லைனா ஊசிப்பீன இட்லிவடைய என்ன செய்யனுமோ அதான் செய்யமுடியும்..

என்ன சொல்றீங்க?

முகம் காட்டாமல் இத்தனை நாள் ஓட்டிய உங்களின் முகம் காட்டாமல் எப்படி வியாபாரத்தை முடித்தீர்கள்? அனானி அக்கவுண்ட்டிலா?

ஜெயக்குமார்

Anonymous said...

So, New Horizon is going to purchase idlyvadai.blogspot.com..... and will become pro DMK... LOL

Anonymous said...

I'm fan of IDLYVADAI which was recently introduced to me by friend & I like the present situation to continue... I afraid that change of ownership will surely lead to impose & intervention of new owner's personal liking & disliking which may change idlyvadai's style & originality. I will be happy if ongoing process stops.

Ram Vibhakar said...

April 1 தானே அந்த நிறுவனம் வாங்க போகுது ?? :)

பா. ரெங்கதுரை said...

அச்சு இதழ் ஒன்றை நடத்தும் நிறுவனம் என்பதால்,அது காலச்சுவடு தானே?

கிரி said...

வாழ்த்துக்கள் இட்லி வடை.

Anonymous said...

கடந்த சில மாதங்களாகவே ஒரிஜனல் இவ காரம் மனம் குணம் குறைவாகவே இருந்து வருவதன் காரணம் இப்போ புரிகிறது.

SAN said...

Best Wishes Idly vadai.

Is it going to be New Horizon?If so i have my own doubts.It will be sombu for DMK!!!!

If it is going to be in the present avatar with naiyandi and satire we all will definetly support.

Once again all the best.

Madhavan Srinivasagopalan said...

அட.. உங்களையும் விலை கொடுத்து வாங்க ஆளு இருக்குதா ?

Anonymous said...

ஏதோ பாப்ஸ்களுக்கு சப்போர்டா ஒரு ப்ளாக் இருத்தது! அதுவும் கை மாறுதா?

BalajiS said...

ஆனந்த விகடன் by any chance?

புதிய தலைமுறை?

R. Jagannathan said...

You have made a commercial decision and we cannot find fault with it. As another follower has said, the site can remain popular if it retains the 'original taste'! - R. J.

BalajiS said...

ஏப்ரல் 1 அன்னைக்கு அக்ரிமென்ட்
போடுறீங்களா?

இட்லிவடை-ல நிறைய கமென்ட் அடிச்சா வாசகர்களுக்கு ஷேர் உண்டா?

மானஸ்தன், மஞ்சள் ஜட்டி,
கௌதமன்???

BalajiS said...

யாரோ இட்லி வடையை சாப்பிட்டு ஏப்பம் விட்டாங்க!

ம்!

இத நடத்துறதுல ஏதாவது கஷ்டம் இருந்தா சொல்லி இருக்கலாமே!

Durairaj Sukumar said...

காற்றுள்ள போதே தூற்றிகொள்?

Anonymous said...

இந்த அறிவிப்பே ஒரு நாடகம் என்பதையும், இட்லிவடை குழும உறுப்பினர்கள் யார், யார் என்பது அரசல் புரசலாக அப்படி, இப்படி வெளியே தெரிந்து விட்டதால் மேலும் பல சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க முகமூடியைக் கழட்டிக் கொள்ளும் ஒரு தந்திரோபாயா ஏற்பாடுதான் என்பதையும் கிழக்கிலிருந்து ஒரு பட்சி இப்போதுதான் கூவி விட்டுப் போனது. நன்றி. தலைமுறை, தலைமுறையாகத் தொடரட்டும் நற்பணி.

பாசமுடன்
பஞ்சாபகேசன்

Anonymous said...

ஏப்ரல் ஒண்ணாம் தேதி இந்த அறிவிப்பை போட்டிருக்கலாம்.

R.Gopi said...

ஆஹா... அப்டியா சங்கதி...

எனிவே... வாழ்த்துக்கள் இட்லிவடை..

நான் கூட்டணியில் இருப்பேன்.. ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கை எதுவும் இல்லாமல், நிபந்தனையற்ற ஆதரவு தருகிறேன்..

R.Gopi said...

ஆஹா... அப்டியா சங்கதி...

எனிவே... வாழ்த்துக்கள் இட்லிவடை..

நான் கூட்டணியில் இருப்பேன்.. ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கை எதுவும் இல்லாமல், நிபந்தனையற்ற ஆதரவு தருகிறேன்..

Yurekha ! said...

Puthiya Thalaimurai Ithanal Payanperattum..! ;)

Anonymous said...

Everything, nay ! , everyone has a price and he or she who receives it sheepishly do what has been ordered.

Money and power has silencing people .

Why then u were writing on lamenting on people who receive pittances or assured pittances for votes?

Rathnavel said...

கிழக்கு?

பாரதி மணி said...

வாழ்த்துகள் இட்லிவடை!

வாசகர்களாகிய நாங்கள் விரும்புவதெல்லாம் ‘ராயர் கிளப்’ இட்லிவடை, வணிகரீதியில் ‘சரவண பவன்’ இட்லிவடையாக மாறாமல் இருக்கவேண்டும் என்பது தான்! என்ன இருந்தாலும் சரக்குமாஸ்டர் மாறினால், ருசியிலும் மாற்றமிருக்கும்!

நன்றியுடன்,

பாரதி மணி

Anonymous said...

நல்ல பதிவு, நன்றி பத்ரி

Anonymous said...

நல்ல அறிவிப்பு. நன்றி இட்லிவடை.

Anonymous said...

இவ,

முன்னாடியே வாசகர்களை ஏப்ரல் ஃபூல் ஆக்கும் திட்டமா இது? எனிவே குட்லக்.

Ratan said...

ஒரு Blog-ஆக இருப்பது மிகப்பெரிய பலம்... எழுத வேண்டுமே என்ற தேவைக்காக எழுத வேண்டிய அவசியம் இல்லை... அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது மிகப்பெரிய சுதந்திரம்...

இது ஒரு இணைய இதழ் போல் ஆகும்போது அதன் சூழலே வேறு. எல்லாம் வல்ல வாசகர்கள் அருள்புரியட்டும்...

Pradeep said...

interesting.. hope soon we will see u in different blog. all the best

BalajiS said...

I got it!
Because one of my comments was not published!

Thanks IV!

May God Bless You!

R.Gopi said...

//கவலைப்படாதீர்கள் - மஞ்சள் கமெண்ட் தொடரும்.. !//

******

மஞ்சள் துண்டு - மைனர் “தல”
மஞ்சள் கமெண்டு - இட்லிவடை

ரெண்டுமே ட்ரேட் மார்க்... இல்லேன்னா நல்லா இருக்காது...

Anonymous said...

Hello Sir,

Please stop this process. As long as this site belongs to a blogger we can feel that we are just communicating with a friend very personally. that's the big advantage of blogging. pls dont commercialize it then it has to compromise lot of things.. in the end, it may still have the name "idly" and "vadai" and it will look like meal waste.. hope you know better than us and will stop this process to provide the same taste for ever. all the best.. - SP

Anonymous said...

Hello Sir,

Please stop this process. As long as this site belongs to a blogger we can feel that we are just communicating with a friend very personally. that's the big advantage of blogging. pls dont commercialize it then it has to compromise lot of things.. in the end, it may still have the name "idly" and "vadai" and it will look like meal waste.. hope you know better than us and will stop this process to provide the same taste for ever. all the best.. - SP

Anonymous said...

Hello Sir,

Please stop this process. As long as this site belongs to a blogger we can feel that we are just communicating with a friend very personally. that's the big advantage of blogging. pls dont commercialize it then it has to compromise lot of things.. in the end, it may still have the name "idly" and "vadai" and it will look like meal waste.. hope you know better than us and will stop this process to provide the same taste for ever. all the best.. - SP

Anonymous said...

Hello Sir,

Please stop this process. As long as this site belongs to a blogger we can feel that we are just communicating with a friend very personally. that's the big advantage of blogging. pls dont commercialize it then it has to compromise lot of things.. in the end, it may still have the name "idly" and "vadai" and it will look like meal waste.. hope you know better than us and will stop this process to provide the same taste for ever. all the best.. - SP

Muthu said...

புது முதலாளியாவது ஹிந்துக்களுக்கு மட்டும் சொம்பு தூக்காமல் இருக்க வேண்டுகிறேன்!!

Anonymous said...

may be thukalak ...

i am sure abt it.
Nagaraj.M

Raj Chandra said...

>>இன்னும் சில நாளில் அந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்

- April 1st is still some days away, why are you posting this now? :)

Anonymous said...

Congrats Idly Vadai.
At the same time, I am also disappointed. Now we have to go through likes and dislikes of the new owner. Idly vadai wouldn't have same edge. Anyways best wishes to your future endeavors. And this will be
my last visit to your site

Steven
USA

Anonymous said...

ஏமாற்றும் தினத்திற்கு இன்னும் 1 வாரம் இருக்கிறது. அதற்குள் அவசரப்பட்டால் எப்பூடி ....???

Anonymous said...

கொஞ்ச நாளாகவே பகுத்தறிவு வாசனை, தெய்வ நிந்தனை, திமுக ஜால்ரா சத்தம் எல்லாம் ஜாஸ்தியா இருந்தப்போவே சந்தேகப்பட்டேன். இப்போது அது உறுதியாயிருச்சி. என்னத்தச் சொல்ல... வாத்துக்கள் இட்லிவடை

அஞ்சா நஞ்சன் said...

ஆக கடைசியில் இட்லி வடையும் விலை போய்விட்டதா? பரவாயில்லை.. பட்டாணி சுண்டல் என்று ஒரு புது ப்ளாக் ஆரம்பியுங்கள். நாங்கள் அதையும் சாப்டுவோம்..

rajesh.v said...

thalaiva,

i know its a april fool message. If you post this message on april-1, every one would have guessed. So, you are playing april fool one week before.

am i right?

RAJESH. V

நாஞ்சில் பிரதாப்™ said...

ஆளும் மாநில அரசை எதிர்த்து அடிக்கடி எழுதும்போதே நினைச்சேன். உங்களையும் விலைக்கு வாங்கிட்டானுங்களா? அதையும் இவ்வளவு டீசன்டா சொல்றீங்களே...:))

ப்ரியா கதிரவன் said...

ஏங்க இட்லி...

இந்த உலகம் இன்னுமா உங்களை நம்புது?

இங்க கமென்ட் பண்ணி இருக்கவங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு.

//நாங்களும் அந்த நிறுவனம் தற்பொழுது வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் அச்சு இதழில் அவ்வப்போது எழுதுவோம் என்பதை வாசகர்களுக்குச் சொல்லிவைக்கிறோம்.
//

எதை சொன்னா மக்கள் நம்புவாங்கன்னு உங்களுக்கு தெரியாதா? நீங்க செய்ங்க.

Good try anyways.

engalblog said...

How come that no one has suspected that this is April fool matter?

Anonymous said...

கல்கி

Anonymous said...

இந்த அறிவிப்பு உண்மையா? இல்லை ஏப்ரல் ஃபூல்க்கான முன்னோட்டமா?

சந்தேகத்துடன்

Anonymous said...

idly vadai viraivil uusi poyidum.

jp said...

நான் நம்ப மாட்டேன் .this is April fool.கண்டுபிடிச்சிட்டேன் :)

kggouthaman said...

எனக்கு ஏற்கெனவே காது குத்திவிட்டார்கள். ஏப்ரல் ஒன்றாம் தேதி நீங்கள் மீண்டும் குத்தவேண்டிய அவசியம் இருக்காது! தேர்தல் வாக்குறுதிகளை நம்புகின்ற தமிழக வாக்காள பெருமக்கள் பலர் இதை நம்பிவிட்டதில் ஒன்றும் அதிசயம் இல்லை!

Anonymous said...

தமிழ் பேப்பர் புதிய உருவெடுத்து வரும் என்று அதில் வந்த அறிவிப்பிற்கும் இட்லிவடையின் அறிவிர்புக்கும் தொடர்பு உண்டோ?----
பணிவரையன்

cho visiri said...

It is a sad and news, for, no new management is known to have retained the characteristics of the erstwhile management.

Anonymous said...

(idly) vada pocche !!

virutcham said...

இட்லிவடை இனி கிழக்கிலிருந்து பரிமாரப்படுமா?

ப்ரியா கதிரவன் said...

ஆனா ஒன்னு சொல்றேன் இட்லி...
மே பதிமூணு அன்னைக்கு "எல்லாரும் ஸ்பெக்ட்ரம் மேட்டரை மறந்துட்டாங்களே...இலவசத்தை நம்பி வோட்டை
போட்டுடாங்களே"ன்னெல்லாம் பொலம்பாதீங்க.

ஏழு வருஷமா நீங்க பண்ண வில்லத்தனத்தை எல்லாம் மறந்துட்டு, உங்களை நம்பி இங்க இத்தனை பேரு பீல் பண்றாங்களே...வேற என்னத்தை சொல்ல...
:-(
:-)

Anonymous said...

april fool april fool april fool april fool april fool april fool april fool april fool april fool april fool april fool april fool april fool april fool april fool april fool april fool april fool

Roaming Raman said...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்!!! (எது / அது என்பதை இட்லிவடை என்று திருத்தியும் படிக்கலாம்)... நம்பிக்கை ஒன்றே சந்தோஷம்... இத்தனை நாட்களில், எனக்கு பல பத்திரிகை நண்பர்கள் இருந்தும், சுவாரஸ்யம் கருதி இட்லிவடை புறப்படும் இடம் அறிய நான் முயற்சிக்கவில்லை ... இனியும் அவ்வாறே.. ... வாழ்த்துகள்.. ஆனால் தேர்தல் காலத்தில் இது நடப்பதால், நாடகமோ அல்லது மிரட்டலோ என்பது மட்டும் சந்தேகமாக உள்ளது.. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்!!!வாழ்த்துகள்...வாழ்த்துகள் அன்புடன் ரோமிங் ராமன்

surya said...

i got lured to the taste of I V after reading ur the interview with anonymous in a weekly magazine.--???
it is Kaliyug- IV has proved-money and power is more important to survive.as one said if master changes customer will also slowly drop out.
wish u all the best

Anonymous said...

மக்கள் கருத்தை துணிவுடன் இட்லி வடை வெளியிட்டு வந்தது. அது அன்னானி இருந்தது அதன் பலம். இனி அந்த பலம் இருக்காது என்பதால், யார் எப்போது ஆட்டோவில் வந்து இறங்குவார்களோ, என்ற பயத்துடன் ஜன்னல் வழியாக் எட்டிப்பார்த்துக் கொண்டே பதிவுகளைப் போடவேண்டி வரும். ஆகவே இட்லி வடையில் மிளகாய்ப் பொடி இருப்பது சந்தேகமே.
--கபாலி

ஏஜண்ட் NJ said...

இதுவும் கடந்து போகும்...

வேறென்ன சொல்ல..!

ஏஜண்ட் ஞான்ஸ்

உண்மைத்தமிழன் said...

ஆமாமாம்.. எவ்ளோவ் பெரிய பில்டப்பு..

ஒரு டேபிள்ல இருந்து பக்கத்து டேபிளுக்கு தள்ளிவிடுறதுக்கு இத்தனை முஸ்தீபா..?

என்னமோ போங்க..! நல்லாயிருங்க மக்களே..!