பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 30, 2011

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் -ஒரு முன்னோட்டம்

நாளை நடைபெறவிருக்கும் இந்தியா-பாக் செமிஃபைனல் ஆட்டம் பயங்கர பரபரப்பை எல்லா தளங்களிலும் ஏற்படுத்தியுள்ளது!. மீடியா இதை மூன்றாம் உலகபோருக்கு ஒரு curtain raiser அளவுக்கு ஏற்றி விட்டிருப்பது மகா கொடுமை. அது போல, பிரதமரே இந்த ஆட்டத்துக்கு வர இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், காசு கொடுத்து டிக்கட் வாங்கிய பொது மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கப் போகிறது!! இது போதாதென்று, இந்தியப்பிரதமர் பாக் பிரதமரையும், ஜனாதிபதியையும் வேறு வெத்தலை பாக்கு வைத்து அழைத்திருக்கிறார்! ஒரு பேட்டியில், சஷி தரூர் கிரிக்கெட்டை மட்டும் கிரிக்கெட்டர்கள் பார்த்துக் கொண்டால் போதும், இந்திய-பாக் பிரச்சினைகளை (இரு நாட்டு பிரதமர்கள்) Statesmen கவனித்துக் கொள்வார்கள் என்றார்! சஷி statesmen என்றால் "மாநில மனிதர்கள்" என்று அர்த்தப்படுத்திக் கொண்டாரோ என்னவோ !?!

பாக் உள்துறை அமைச்சர், பாக் அணியை fixing-ல் ஈடுபடவேண்டாம் என்று எச்சரித்திருப்பதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பாக் அணியின் fixing வரலாறு அத்தகையது! பாக் அணியினரை சத்திய சந்தர்களாக எண்ணிக் கொண்டு இம்ரான் கான் அமைச்சருக்கு எதிராக பொங்குவது சற்று அதீதமாகப் பட்டது! சரி, மேட்டருக்கு வருவோம்.

மொஹாலி ஆடுகளம் வேகத்துக்கும், bounceக்கும் சாதகமான ஒன்றாகவே இருந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே. அதோடு, ஆடுகளத்தின் கெட்டியான களிமண் காரணமாக பந்து அவ்வளவாக சுழலாது, skid ஆகும் அபாயம் உள்ளது! அதனால், அக்தர், உமர் குல், அஃப்ரிடி ஆகியோரைக் கொண்ட பாக் அணி பந்து வீச்சுக்கு இது சற்று அனுகூலமாக அமையும் என்றாலும், நமது ஜாம்பவான் மட்டையாளர்கள் அதை திறமையாக எதிர் கொள்வார்கள் என்று நம்பலாம் :) நமது தரப்பில், சாகீரும், அஷ்வினும் இந்த ஆடுகளத்தில் நிச்சயம் பரிமளிப்பார்கள்.

மொஹாலியில் இதற்கு முன் நடந்த 9 ஆட்டங்களில் 2 முறை தான் 300+ ஸ்கோர்கள் சாத்தியமாகியிருக்கிறது. டாஸில் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும், இந்தியா டாஸில் வென்று, முதல் மூவரில் ஒருவர் சதமும், மிடில் ஆர்டரில் ஒருவர் அரைச்சதமும் எடுத்தால், 300-ஐ சுலபமாக எட்டி விடலாம்! 280 என்பது ஒரு competitive இலக்காக இருக்கும் என்றும் எண்ணுகிறேன். மாலை நேரப்பனி புல்லின் மேல் தங்கும் காரணத்தால், 2வதாக பந்து வீசும் அணிக்கு ஈரம் காரணமாக பந்தை கிரிப் செய்வது சற்று கடினமாக இருக்கும். காற்று அதிகம் வீசினால், அவ்வளவு பிரச்சினை இருக்காது. மைதானத்தில் புல்லை குட்டையாக வெட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது!

முனாஃபுக்கு பதிலாக, நெஹ்ராவை சேர்ப்பது அத்தனை மோசமான ஒரு தேர்வாகத் தோன்றவில்லை. சச்சினின் 100வது international சதம் நாளை நிகழ்ந்தால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்! ஆனால், இந்தியா வெல்வது அதை விட முக்கியமானது என்பதால், அந்த நூறு பின்னாளில் காலம் தாழ்ந்து நிகழ்ந்தாலும் பிரச்சினையில்லை :)

Tail piece: Based on the performance, இந்திய அணியை விமர்சித்து எழுதுவதால், இந்தியா தோற்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதுவதாக அர்த்தமாகாது. அந்த விமர்சனத்துக்கு எதிராக கருத்துகளை முன் வைப்பதை விடுத்து, "மேரா பாரத் மஹான்", "ஸாரே ஜஹான்ஸே அச்சா" என்று பாய்ந்து பிறாண்டுவதால் யாருக்கும் பயனில்லை!

எனக்குப் பிடிக்காத ஸ்ரீலங்கா அணி செமி ஃபைனலில் வென்றிருப்பதால், அந்த ஆட்டம் குறித்து எழுத ஆர்வம் இல்லை! ஸ்ரீலங்காவுக்கு அதிர்ஷ்டம் அதிகம், எந்த ஒரு பலமான அணியையும் வெல்லாமல், ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்று விட்டார்கள். ஸ்ரீலங்கா கென்யா, கனடா, ஜிம்பாப்வே என்று 3 மகா மொக்கை அணிகளையும், ஒரு நாள் போட்டிக்கு லாயக்கில்லாத ஒரு ஆடுகளத்தை அமைத்து, அதே ஆடுகளத்தில், சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளையும் (முறையே கால் இறுதியிலும், அரை இறுதியிலும்!) வெற்றி பெற்றுள்ளதை என்னவென்று சொல்ல :( படு சுமாரான ஒரு அணி unfair-ஆக ஃபைனல்ஸுக்கு வந்திருப்பது உலகக்கோப்பையின் துர்பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும்!!!!

கடைசியில் கிடைத்த செய்தியின்படி, மொஹாலியில் மழை பெய்திருக்கிறது. அதனால், இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்து இலக்கைத் துரத்துவது சரியான தேர்வாக இருக்குமோ என்று ஒரு சின்ன சந்தேகம் எழுந்துள்ளது :) After all, India chased a good total successfully on a difficult pitch at Motera against the formidable Aussies!

என்றென்றும் அன்புடன்
பாலா
http://balaji_ammu.blogspot.com

இந்தியா நிச்சயம் ஜெயிக்கும். இறுதி ஆட்டத்தில் அவர்கள் இருந்தால் தான் பலருக்கு வர்த்தகம் நன்றாக இருக்கும்.


27 Comments:

DAS said...

Out of 9 matches, 2 were played against Pakistan and won by Pakistan!

Madhavan Srinivasagopalan said...

@ DAS who said "Out of 9 matches, 2 were played against Pakistan and won by Pakistan!"

ஆனா உலகக் கோப்பை வரலாற்றுல பாகிஸ்தான் இந்தியாவ ஜெயிச்சதே இல்லையே.அதை மாட்டும் சொல்லி இந்தியாதான் ஜெயிக்கும்னு சொல்ல முடியுமா ?

-- அதாவது கடந்த காலத்து நிகழ்வுகள் -- வெறும் நிகழ்வுகளே.. அதை வைத்து இன்றைய போட்டி இறுகுமென்று நினைப்பது சரியானது அல்ல என்பதே எனது எண்ணம்.
-- இது வேறு டீம்.. வேறு சூழ்நிலை.. அதற்கேற்றவாறு சிறப்பாக ஆடுபவர்களே வெல்வர்.

luthfi said...

sorry bro, it is written.
this time itz for sri lanka
i do not know why you guys are being so fool as such.
and i am afraid of indian performance today. it sayz they won't do that.
let's see anyway.
you r not a good observer at all.
go and check the run rate and the way sri lanka faced the games in this series.
check the batsmen average and s.rate.
bowlers economy and avg
come on, india can even think of coming closer.

india totally sucks. only the good thing they did is beaten oz. that is it. what would hv happened if they lost that match.
would hv been killed by ur own people. (mind u, 96 semi)
indian people are such a foolish people in the world. (ian botham)
yaa, that is true, jobless people.

what do u guys have to praise ur team this time, huh?
india will never get an other world cup at all.
it is kapil who gonna be in the winning captain list forever.

this time itz,
green vs blue
blue is already in the list
so no need to say the rest ...

Anonymous said...

PM will enter the arena only after 4pm so as not to discomfort the spectators with extra security measures.

நிழற்குடை said...

எனக்கும் இலங்கை அணி பிடிக்காது‍. ஆனால் காரணம் வேறு.

Kumaran said...

//இந்தியா நிச்சயம் ஜெயிக்கும். இறுதி ஆட்டத்தில் அவர்கள் இருந்தால் தான் பலருக்கு வர்த்தகம் நன்றாக இருக்கும்.
//

adha vida periya panam indha match la invest aayirukku.. adhukku enna pannanumo adhaan seivaanga.

Anonymous said...

bala.. good writeup.. we hope we'll meet the srilankans in final.. but

//
சச்சினின் 100வது international சதம் நாளை நிகழ்ந்தால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்! ஆனால், இந்தியா வெல்வது அதை விட முக்கியமானது என்பதால், அந்த நூறு பின்னாளில் காலம் தாழ்ந்து நிகழ்ந்தாலும் பிரச்சினையில்லை :)
//

arivillatha nyana soonyangal itai pondru mattamanadothoru sinthanai'yil irupanga.. vimarsanam panra alavuku puthisaliya irukara neengalum ipdi ezhuthanuma???
-- mikka kandanathudan

ARAVIND

Anonymous said...

சிறுவர்கட்கே விளையாட்டு:

தனிமனிர்களுக்கு இடையேயும், நாடுகளுக்கிடையேயும் போட்டி, பொறாமை, பகை முதலியவற்றை இக்காலத்தில் விளையாட்டு உண்டாக்குகிறது.

வயதானவர்கள் உடலை வருத்தி விளையாடும்போது எலும்பு, தசைகள் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. எளிமையான உடற்பயிற்சியே வயதானவர்களுக்குப் போதுமானது. எனவே, விளையாட்டு என்ற திட்டத்தைப் பள்ளியில் படிக்கின்ற சிறுவர்களின் உடல் வளத்தையும், மன நலத்தையும் காக்க மாத்திரம் உரியதாகக் கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்.

Anonymous said...

இறுதி ஆட்டத்தில் அவர்கள் இருந்தால் தான் பலருக்கு வர்த்தகம் நன்றாக இருக்கும். ??????!?!?!?

ராஜேஷ், திருச்சி said...

விஜயகாந்து தன் கட்சி வேட்பாளரை செம மாத்து மாத்துனராமே விஜயகாந்து தன் கட்சி வேட்பாளரை செம மாத்து மாத்துனராமே

Anonymous said...

//
சச்சினின் 100வது international சதம் நாளை நிகழ்ந்தால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்! ஆனால், இந்தியா வெல்வது அதை விட முக்கியமானது என்பதால், அந்த நூறு பின்னாளில் காலம் தாழ்ந்து நிகழ்ந்தாலும் பிரச்சினையில்லை :)
//

மிக மிகச்சரி!! நல்ல விளையாட்டின் மீது மீது ஆசை இருப்பவர்கள் ஒப்புக்கொள்ளக் கூடிய சரியான வரிகள்.. தேசத்தின் மீது கொண்ட ஆசை என்பது கிரிக்கெட்டையும் தாண்டி அல்லவா இருக்க வேண்டும்..
--ராமன் இந்தியா!! ஐ லவ் இந்தியா!!

enRenRum-anbudan.BALA said...

Aravind,

//arivillatha nyana soonyangal itai pondru mattamanadothoru sinthanai'yil irupanga.. vimarsanam panra alavuku puthisaliya irukara neengalum ipdi ezhuthanuma???
-- mikka kandanathudan
//
That statement has no -ve connotation & it was not my intention to attribute anything to Sachin!

enRenRum-anbudan.BALA said...

//arivillatha nyana soonyangal itai pondru mattamanadothoru sinthanai'yil irupanga.. vimarsanam panra alavuku puthisaliya irukara neengalum ipdi ezhuthanuma???
-- mikka kandanathudan
//
That statement of mine has no -ve connotation! I didn't mean to attribute anything to Sachin!

DAS said...

@ Madhavan Srinivasagopalan:

//-- அதாவது கடந்த காலத்து நிகழ்வுகள் -- வெறும் நிகழ்வுகளே.. அதை வைத்து இன்றைய போட்டி இறுகுமென்று நினைப்பது சரியானது அல்ல என்பதே எனது எண்ணம்.//

I know STATS is STATS. Nobody can foretell the future EXACT. (There can't be Tendulkar - if I always look for STATS).

Its only the condition - which can be closer (that too specific to the PITCH).

I wish all the best for India!

krish said...

விஜயகாந்து தன் கட்சி வேட்பாளரை செம மாத்து மாத்துனராமே விஜயகாந்து தன் கட்சி வேட்பாளரை செம மாத்து மாத்துனராமே


here it is..

http://www.youtube.com/watch?v=F9NB_ulc60A

Anonymous said...

//
That statement of mine has no -ve connotation! I didn't mean to attribute anything to Sachin!
//

- it seemed so.. if it is not, im happy for it.. hoping the master is abt to reach a milestone now..

- Aravind

ஒரு வாசகன் said...

//எந்த ஒரு பலமான அணியையும் வெல்லாமல், ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்று விட்டார்கள்.//
இந்தியா மட்டும் என்னத்தை வெட்டி கிழித்ததாம்...... மேற்க்கு இந்திய அணியை மட்டுமே வென்றது, இன்று பாக்கிஸ்தானிடம் வாங்கிகட்டப் போகின்றது

Anonymous said...

"நான், எனது வேட்பாளரை அடித்ததாக தொலைக்காட்சியில் செய்தி வெளியிடுகின்றனர். என் ஆளைதானே (உதவியாளர்) அடித்தேன். என்னைப் பற்றி என் கட்சிகாரர்களுக்கு தான் தெரியும். தப்பு நடந்தால் தட்டி கேட்பது விஜயகாந்த்தின் புத்தி. என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்," என்றார் விஜயகாந்த்.வேட்பாளரும் உன்னுடைய ஆள் தானே . நன்றாக அடி. நல்ல தலைவர்.

thillana said...

தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்!
http://thillana.wordpress.com/2011/03/30/tn-bjp-will-win/
இந்த தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்! அதுதான் தமிழகத்துக்கு நல்லதாக இருக்க முடியும். இதற்கு ஒன்றல்ல பத்து காரணங்களை கூற முடியும்.

Anonymous said...

கட்டேல வக்க.. ஐ மீன் பாகிஸ்தான் பருந்துகள் எல்லாம் இந்தியப் பந்துகளுக்கு அஞ்சி போல்ட் ஆகிக் கொண்டிருப்பதைச் சொல்கிறேன். வாழ்க ஜாஹிர் அண்ட் கோ

Anonymous said...

jeyichuruche!

sant said...

vijyakanth vetpalarai adithar endru avarai kevalamaga thita terintha makkaluku
why 2g spectram muliama nearly 2 lakhs kodi kollai aditha naigailai thita vaku illai.
1 meetingla thairiamaga namaku pesavae varadhu.
adhu siru tavaru than.
thailaivaruku nanraga pesa theria vendum endru ninaipathu mutal thanam.
nalathai seiva vendum endra ennam vijakanthku iruku. thats all. inemel vijakantha.ai patri kevalama pesatheergal. dmk,pmk,admk party.ai vida dmdk thevalam

ராம கிருஷ்ணன் said...

////// கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கும் ஜெயலலிதா போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை ஏழை மக்களுக்கு அனாதை ஆசிரமமாக மாற்றிட தானமாக வழங்க முடியுமா? ஜெயலலிதாவுக்கு வாங்க மட்டும்தான் முடியும் கொடுக்க முடியாது--நடிகை குஷ்பு--ஜெயா ஆதரவாளர்கள் பதில் சொல்ல வேண்டும்.//////


கன்னாநிதியை வீட்டை தானமாக தரசொல்லி யாரும் நிர்பந்திக்கவில்லை.அப்படியே கொடுத்துருந்தாலும் அது உங்களாலும் பொதுமக்களாலும் நம்மாலும் நிர்வகிக்கப்படவில்லை.எப்படி திமுகவின் சொத்துக்கள் ட்ரஸ்ட் என்ற பெயரில் கண்ணாநிதி குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு விழுங்கப்படுகிறதோ அது போலதான் கன்னாநிதியின் மருமகன்களில் ஒரு சொந்தக்காரரான சிக் ஷாம்பு மற்றும் மீரா சீயக்காய் ஓனரான ரங்கநாதனை கொண்டு வழக்கம் போல ட்ரஸ்ட் பராமரிக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களால் பாதுகாக்கப்படும். ஜெவின் போயஸ் கார்டன் வீடு டிரஸ்ட் ஆக்கப்படுமா என கேட்பவர்களுக்கு எம்ஜியாரின் சொத்துக்கள் என்ன நிலைக்கு ஆளானதோ அந்த நிலைதான் ஜெவுக்கும்.ஏனெனில் அவருக்கு எந்த சொந்தங்களோ வாரிசுகளுமோ கிடையாது.நாளை ஜெவும் கூட தன அந்திம காலங்களில் செய்யலாம்.யார் கண்டது ..?( இப்போ எழுதி வைக்கலாமே என கேட்பவர்கள், வாரிசுகளே இல்லாதவர்களிடம்- இன்றும் உழைத்துவருபவர்களிடம் , இதே கேள்வியை கேட்டுப்பாருங்கள்..!).சரி.. கண்ணாநிதி கொடுத்ததாகவே வாதத்துக்கு வைத்துகொள்வோம். அப்படியே நம்ம வெடிவேலு அண்ணன் சொன்னமாதிரி நம்ம முப்படை தளபதி( எந்த..?) ஸ்டாலினின் வீடு மற்றும் சொத்துக்களையும் அதே போல மருதை சிங்கம் அழகிரி யின் வீடு மற்றும் சொத்துக்களையும் அப்புறம் அப்படியே தலைவரின் அந்தப்புரகளில் பிறந்த வாரிசுகளின் வீடு மற்றும் சொத்துகளையும் அப்டியே இந்நாள் சொந்தமான குஷ்புவையும் நாட்டுடமை ஆக்கி அதன்மூலம் மக்கள் பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

Kodumpavi said...

INDIA will win..
this is absolutely Match Fixing..
no doubt Sachin is the Star.. he deserve to be called like that..
but..
Since it is his last world cup..
our PM, Sonia ... I mean rulling party would have spend some money on this .. to get the CuPu.. too many scandal.. giving money is some few thousand crores is not a big deal for them... is not?
India is a great team... I mean cricket.. apart from that.. our Politics Team is also super great..!

Kodumpavi.

சாதாரண கிராமத்தான் said...

bala not impressed with your comments on Sachin's 100. You sound more like if Sachin scores his 100 India will lose. If you also say so, you are not a good cricket follower or a good analyst. Can you give the stats showing how many times India lose after Sachin's 100?
Before this match I also felt Pakistan would win the match. But somehow Pakistan did not play well today and lose the match. Hopefully India will win against Srilanka. Dhoni made a big mistake today by not including Ashwin who would have been more effective in this pitch. Srilanka's top 4 are difficult to dislodge especially Tharanga and Sanga. Being left handers and considering India's traditional weakness against LH they are more dangerous. But I still feel Sehwag is the key for the final. If he starts off with his normal ways that would help settle the nerves of the rest.

Anonymous said...

இந்தியா தோக்கும்னு சொன்ன பயலுங்க எல்லாம் எங்கேடா போனீங்க?

சச்சின், ரஜினி ரெண்டு பேருக்கும் ஒரு ராசி. என்னா தான் மக்கள் பேரபிமானம் வெச்சிருந்து தொடர்ந்து ஹிட்டடிச்சாலும், சில நொல்லக்கைகள் பெரிய லார்டு லபக்குகள் மாதிரி கமெண்ட் அடிக்கும். புள்ளியாவது, விபரமாவது.

புள்ளையார் கோயிலில் புளியோதரை மாதிரி கேவலமான கூட்டணி இ.வ. மற்றும் பாலா கமெண்டரி.

Anonymous said...

//INDIA will win..
this is absolutely Match Fixing..
no doubt Sachin is the Star.. he deserve to be called like that..
but..
Since it is his last world cup..
our PM, Sonia ... I mean rulling party would have spend some money on this .. to get the CuPu.. too many scandal.. giving money is some few thousand crores is not a big deal for them... is not?
India is a great team... I mean cricket.. apart from that.. our Politics Team is also super great..!

Kodumpavi.//

shabba.. unga veetu bathroom'la thanni varalanalum, athu aalungatchiyin thittamita sathi'nu than soluveenga..ungala mathiri butthisaalinga'la yen ya match pakareenga..

avan avan uyira koduthu match aadi win panran... tv'la verkadala saptukitu match pakira allakaai'ku nakkala paru, lolla paaru..

unga peruketha mathiri neenga kodumpavi than..

whole india is feeling happy about the win.. and ppl like you couldnt digest the fact that everyone are happy..

- Aravind