பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 28, 2011

முக்கிய அறிவிப்பு - தொடர்கிறது

இட்லிவடை வாசகர்களுக்கு மீண்டும் வணக்கம்,

சனிக்கிழமை அன்று இட்லிவடை 'கை'மாற போகிறது என்ற அறிவிப்பு கேட்டு பலர் சாட்டிலும், பின்னூட்டத்திலும் தங்கள் 'ஃபிலிங்கை' தெரிவித்திருந்தார்கள். புகுந்த வீட்டை விட்டு மாமியார் வீட்டுக்கு போவது போல இருக்கு என்று ஒரு பெண் வாசகி உருகினார். இப்படி சிலர் வருத்தப்பட்டாலும், கலைஞர் குடும்பம் சந்தோஷத்தில் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்கள்.

இந்த வருடம் முட்டாள் தினம் ஏப்ரல் 13 அன்று தான் வருகிறது, நாங்கள் செய்த அறிவிப்பு சும்மா முன்னோட்டம் அவ்வளவு தான் ! கழக பெரியவர்கள் சொல்லும் பொய்யையே நம்புகிறவர்களுக்கு நான் சொன்ன இந்த சின்ன பொய்யை நம்புவதற்கு கஷ்டப்படவில்லை என்பதை பின்னூட்டங்களும், சாட் விசாரிப்புக்களும் தெரிவிக்கிறது. எனிவே வாழ்த்து சொன்ன அனைவருக்கு நன்றி, அவ்வளவு சீக்கிரம் உங்களை விடுவதாக இல்லை

உங்கள் ஆதரவை என்றும் விரும்பும்,
இட்லிவடை

பிகு: கைமாறூம் செய்தியை போட்ட கொஞ்ச நேரத்தில் இட்லிவடை பலர் நம்பினாலும் Ram Vibhakar இது ஏப்ரல் 1 ஜோக் என்று கண்டுபிடித்தார். அவருக்கு வாழ்த்துகள். உங்கள் முகவரியை எனக்கு idlyvadai2007 at gmail dot com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் புத்தகம் ஒன்று பரிசாக அனுப்புகிறேன் ( நிஜமாக தான் )

:-)

46 Comments:

(-!-) said...

:>

R.Gopi said...

// "முக்கிய அறிவிப்பு - தொடர்கிறது"//

*******

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..... யப்பா.... இன்னும் என்னென்ன வரப்போகுதோ!!!

Jayashree Govindarajan said...

ம்ம்ம்.. நான்கூட ஏதாவது கமல்ரசிகரா பார்த்து கைமாத்துங்கய்யான்னு ஒரே ஒரு நொடி கமெண்ட நினைச்சேன். அப்றம் இட்லிவடையைக்கூட வாங்கற அளவுக்கு முட்டாள் தமிழ் நிறுவனம் இருக்கான்னு யோசிச்சு கமெண்டை கைவிட்டேன்.

தொடர்ந்து உங்க தொல்லையேதாங்கறதுதான் எனக்குப் பெரிய ஏமாற்றம். :(

Utopian said...

Idly vadai ku konjam kara chutney ah post irukum nu nenacha neenga enna da na. Idly vadai ku sakarai thotum sapdalam nu solra mathiri iruku intha post. Any way pasi adungucha athu pothum. Adutha post konjam pudina chutney, kara chutney nu, idli podi, kurma,sambhar nu color color color ah post podunga. Vazhthukal. :) :)

Karthik said...

பேரம் படியவில்லையா?

Karthik

kggouthaman said...

நானும்தான் கண்டு பிடிச்சேன். பரிசு எதுவும் வேண்டாம்!

kggouthaman said...

//புகுந்த வீட்டை விட்டு மாமியார் வீட்டுக்கு போவது போல இருக்கு என்று ஒரு பெண் வாசகி உருகினார்.//
ஹி ஹி புகுந்த வீடு, மாமியார் வீடு ரெண்டுமே ஒண்ணுதாங்க!! இதுக்கு ஏன் அப்படி உருகனும்?

Prince said...

"Deala" or "No Deala"......and finally "No Deal".... Due to reasons Know only to you

Prince said...

"Deala" or "No Deala"......and finally "No Deal".... Due to reasons Know only to you

BalajiS said...

நானும் ஏப்ரல் ஏமாற்று வேலையோ
என்று கமென்ட் போட்டிருந்தேன்?

ஆனால் அந்த கமென்ட்
மட்டும் வெளியாக வில்லை?

சரி! ஏதேனும் இட்லி வடை பரிசாக (இலவசமாக) கிடைக்கும் என்று தமிழக வாக்காளர் போன்று நப்பாசையில் இருந்தேன்!

அல்வா கொடுத்து விட்டீர்கள்!

Anonymous said...

very very very very very happpppppppppppppppyyyyyyyyyyyyyyyy

Anonymous said...

Thanks Boss....

thillai said...

idly vadai appadiyey write ur comments on the vadivelu campaigns for DMK this time,its getting worse with personnel attacks

Anonymous said...

super samalipication...

Anonymous said...

யோவ், கருணாநிதியை திட்டி திட்டி உங்களுக்கும் அவர் மாதிரி மாத்தி பேசற புத்தி வந்துடுச்சா...? கொஞ்ச நேரம் ஒன்னும் புரியலை... சரி, சரி... இத்தனை பேரை முட்டாளாக்கினதுக்கு ஏதாவது பிராயச்சித்தம் பண்ணிட்டு போங்க... இலவசமா...

கானகம் said...

போய்யா டுபுக்கு...

Anonymous said...

If this is really true I will be very happy. I'm a great fan of your blog. Please contiue your service.

Anonymous said...

Really? Unbelievable! Which of the postings will make us fool? 'முக்கிய அறிவிப்பு' or 'முக்கிய அறிவிப்பு - தொடர்கிறது'? How much credit u get just for selling a password?

Anonymous said...

Edhu Unmai Edhu Poi!
Ore confusion.

But with these messages (or rumours) (or April fool pranks), our affinity with idly vadai has come down a little for sure.

All you political and social posts will be seen with magnifying glass, hence forth.

Anonymous said...

என்னது இட்லிவடைய ”சேகர்” வாங்கிட்டாரா......

அந்த க்ருஷ்ணபாகவதர் எங்கப்பா ?

SAN said...

மஞ்ச துண்டு மற்றும் அம்மாவின் இலவசங்கள் உங்களை இப்படி
மாற்றிவிடும் என்று கனவிலும் நினகவில்லே.தேர்தல் முடிவர்துகுள்
இன்னும் என்ன என்ன சந்திகவேண்டுமோ?

வடிவேலு said...

அப்புறம் நா வெளயாட்டுக்குச் சென்னாத நீங்க எல்லோரும் நம்பீட்டிங்க!!!!!!!!
ஹய்யோ! ஹய்யோ!

ramanans said...

ஏன் சார், நானும் கூடத்தான் இது “ஏப்ரல் ஃபூல்” விவகாரம் என்று பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன். நீங்கள் அதை வெளியிடவில்லை என்பதில் இருந்தே என் சந்தேகம் உறுதியானது. சரி எனக்கு ஏதாவது உண்டா... ஐ மீன் பரிசு, ஹி... ஹி... :-)

Nilofer Anbarasu said...

"Ramya"மான முடிவு
:-)

virutcham said...

இந்தப் பதிவு தான் ஏப்ரல் பூல் பண்ணும் பதிவு மாதிரி தெரியுது. சில நாட்கள் முன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாக கூறிய நீங்கள் வெளிப்படையாக வெளிப்படுத்துக் கொள்ளாமல் இருக்க செய்யும் சில அகட பிகடங்கள் தான் இது.

சிலர் கடைசியில் நீங்களும் விலை போய் விட்டீர்களா என்றெல்லாம் பின்னூட்டியது உங்களின் உக்திக்கு கிடைத்த வெற்றி தான். இப்போதைக்கு இட்லி வடை கிழக்கு அடுப்பிலிருந்தா இல்லையானு தெரியாது. சரி பரவாயில்லை.

R.Subramanian said...

What is the problem? Whether the negotiaitons are not properly setle? the consideration (Price)is not settled upto your expectatons ?

But nicely withdrawn without the sand in the musatacahe? Keep it up

We the tamilian would believe even more since we are casting our votes to either to AIADMK OR DMK since the last four or five decades; So this is not new to us; Keept it up: Good;


SYPPAMANI

Anonymous said...

புரிஞ்சுது... புரிஞ்சுது.. விலை படியவில்லை என்று! -கபாலி

Anonymous said...

உளறல்!!
ஏப்ரல் ஃபூல் என்பது ஏப்ரல் ஒன்றாம் தேதி மட்டும் செய்யப்படும் குறும்பு இதை அன்று நள்ளிரவு 12மணிக்கு மேல் செய்தாலே தண்டனை உண்டு.
நீரோ 10 நாட்கள் முன்னதாக செய்கிறீர்!
கஷ்டம் கஷ்டம்

Anonymous said...

கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கும் ஜெயலலிதா போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை ஏழை மக்களுக்கு அனாதை ஆசிரமமாக மாற்றிட தானமாக வழங்க முடியுமா? ஜெயலலிதாவுக்கு வாங்க மட்டும்தான் முடியும் கொடுக்க முடியாது--நடிகை குஷ்பு--ஜெயா ஆதரவாளர்கள் பதில் சொல்ல வேண்டும்.

cho visiri said...

Have n't you heard of the story " wolf! Wolf!" ?

Many a fan ( read, "follower") of your Blogspot may not believe easily in any of your posts in the future! Why did you opt to present the previous post ?

பாலாஜி said...

ஏன் பத்ரி கூப்பிட்டு `இதை மாதரியெல்லாம் அறிவிப்பு போட்டா...நாங்க வாங்க மாட்டோம்`ன்னு சொன்னாரா...ஏன் பாஸ் எங்களுக்கு காது எப்பவோ ம்....ஆமா தமிழ்பேப்பர மூடிட்டு இட்லிவடைல தொடர போறாங்களா கிழக்கு. அதான் அவசர அவசரமா எல்லா தொடர்களயும் முடிக்கறாங்களா பாஸ்...

அஞ்சா நஞ்சன் said...

நாங்க எல்லாம் ஏமாறுவது மாதிரி நடிச்சோம்... நீங்கள்தான் அதை உண்மை என்று நம்பி பரிசு எல்லாம் கொடுக்க கிளம்பி விட்டர்கள். ஆகவே பரிசை எங்கள் எல்லோருக்கும் கொடுப்பதுதான் முறை.

க்ருஷ்ண பாகவதர் said...

அதானே பார்த்தேன்! சனியனை யாராச்சும் வெல குடுத்து வாங்குவாங்களா?

Shri Hari said...

கொடும முடியல?

Anonymous said...

so finally you also become a politician..no one will feel that this an April fool message. you wanted to know the feedback from the readers and after you got lot of negative comments you changed your mind. I mean the deal is true but you don't want to disclose it. anyway, its your blog, you always have the rights to make your own decision. - SP

தமிழ்மொழி ஆண்டி said...

//"முக்கிய அறிவிப்பு - தொடர்கிறது"//

முக்காமத் தான் அறிவிங்களேன், யாருங்க வேண்டாம்னாக? தேர்தல் அறிக்கையெல்லாம் படிச்சு ரொம்ப குழம்பிப் போயிட்டங்கீன்னு தெரியுது. ஒரு வாரம் லீவ் போட்டுட்டு திருநெல்வேலி (புரியுதா?) கன்யாகுமரின்னு போயிட்டு வாங்க. வரும்போது ’இட்லிவடை’ வாசகர்களுக்கு ’அல்வா’ வாங்கி வர மறக்காதீங்க.

டகிள் பாட்சா said...

ஐயோ அனானி!
மஞ்சத்துண்டு தமிழ் புத்தாண்டை 3 மாசம் முன்னாடி மாத்தினதுக்கு வாய மூடிக்கிட்டு இருந்தீங்க, இ.வ. கேவலம் முட்டாள்கள் தினத்தை 3 நாள் முன்னாடி மாத்தினதுக்கு தண்டனைங்கறீங்க. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறி மாறி ஓட்டு போடற தமிழ்நாட்டுக்காரங்களுக்காக வருஷம் பூரா முட்டாள்கள் தினம் கொண்டாடலாமே!

அப்பாதுரை said...

cheap stunt!

Ramkumar said...

Hello IdlyVadai,

I know now you are making fun and making us fool. Enna vangura party unga "manjal" aa pitukittana unmaiya sonnathukku...

Ennomo ponga... sinna pullla thanma vilaytikittu.

jp said...

இது கூட எப்படி பொய்யின்னு தெரியாம போகும்? சிரிப்பா வருது.

பாலாஜி said...

சரி இப்ப சிறந்த திட்டு கமண்டுக்கு ஒரு புக்கு அனுப்புங்க...அப்பதான் பிராயசித்தம் செஞ்ச மாதாரியாகும்.

Anonymous said...

அதானே!!! blogspot போய் யாரு விலை குடுத்து வாங்குவாங்க ?

Anonymous said...

. இ.வ். கை மாறிவிடுகிறது என்று சந்தோஷப்பட்டோம்.. அது இல்லை என்று ஆகிவிட்டது. இது தான் எங்களை உண்மையான் ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டது!- டில்லி பல்லி

ஹரன்பிரசன்னா said...

சனியன் தொல்லை விட்டதுன்னு நினைச்சேனா, இல்லையா அப்ப?

Anonymous said...

"நான், எனது வேட்பாளரை அடித்ததாக தொலைக்காட்சியில் செய்தி வெளியிடுகின்றனர். என் ஆளைதானே (உதவியாளர்) அடித்தேன். என்னைப் பற்றி என் கட்சிகாரர்களுக்கு தான் தெரியும். தப்பு நடந்தால் தட்டி கேட்பது விஜயகாந்த்தின் புத்தி. என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்," என்றார் விஜயகாந்த்.

SUPPER.

R.Gopi said...

இட்லிவடை...

உங்களை நம்புகிற ஆயிரக்கணக்கான “வாக்காளர்”களில்” ஒருவனான நான் கூட வாழ்த்து செய்தி அனுப்பினேன்...

அப்டின்னா, உங்கள நம்பின எங்களுக்கு எல்லாம் இலவசம் (அதாங்க ஏதோ புத்தகம்னு சொன்னீங்களே!!), கிடையாதா?