பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 20, 2011

தொகுதி ரவுண்டப் - ஸ்ரீரங்கம்


ஸ்ரீரங்கம் வாசகர் ஜெய்சங்கர் ஜெகன்நாதன் இட்லிவடைக்காக ஸ்ரீரங்கம் தொகுதி பற்றி எழுதி தந்திருக்கும் பதிவு. அவர் பெயரிலேயே இரண்டு 'ஜெ' இருப்பதால் கூட இதை எழுதியிருக்கலாம். மற்ற ஊர் வாசகர்கள் தங்கள் தொகுதி நிலவரம் பற்றிய பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.
நன்றி
இட்லிவடை

போன ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதா இரண்டு முறை திருச்சிக்கு வந்தார். 14ஆம் தேதி பொதுக் கூட்டத்துக்கு வந்தார் பிறகு ஒரு முறை கோயிலுக்கு திடீர் என்று வந்துள்ளார். கோயிலில் அப்போது பக்தர் ஒருவர் 'நீங்கள் ஸ்ரீரங்கத்தில்தான் நிற்க வேண்டும்’ என்றதற்கு 'நான் இப்ப ஸ்ரீரங்கத்தில்தானே நின்னுக்கிட்டு இருக்கேன்’ என்று சொல்லியிருக்கார். சரி இனி ஸ்ரீரங்கம் தொகுதி நிலவரத்தை முதல்ல பார்ப்போம்.
இங்கே இது வரை நடந்த 13 தேர்தல்களில் அ.தி.மு.க. 6 தடவை வெற்றி பெற்றிருக்கிறது. 30% நகர்ப்புறமும் 70% கிராமப்புறமும் உள்ளது. இங்கே பெரும்பான்மையாக முத்தரையர்கள்(அதனால தான் தி.மு.க. ஆனந்த என்கின்ற முத்தரையர் இனத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது). அதற்க்கு இணையாக ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்கள். மூன்றாவதாக பிராம்ணர்கள்,உடையார்கள் இருக்கிறார்கள்.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,17,827
இதில் ஆண் வாக்காளர்கள் 1,08,715
பெண் வாக்காளர்கள் 1,09,111
திருநங்கை 1

கடந்த 2008ல் திருச்சி, பாராளுமன்றமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ப.குமார் எம்.பி. 4,335 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு, மேற்கு, கந்தர்வ கோட்டை, புதுக் கோட்டை, திருவெறும்பூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசை விட அ.தி.மு.க. குறைவான வாக்குகளை பெற்றிருந்தது. இதில் ஸ்ரீரங்கத்தில் மட்டும் 20,118 வாக்குகள் (சாருபாலா தொண்டைமனை விட)அதிகம் பெற்றார் ப.குமார்.

இதிலிருந்தே தெரிந்திருக்கும் ஏன் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தை தேர்ந்தெடுத்தார் என்று. ஜெயலலிதா ஆணைப்படி இந்த தொகுதியில் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணியை சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டனர்.

ஸ்ரீரங்கத்தில் எங்கு தங்குவது என்பது குறித்தும் ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும், பிராமண அக்ரஹாரத்தில் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்களாம். அதனால் ஜெயலலிதா தங்க ஒரு வீடு ஸ்ரீரங்கத்தில் தயாராக உள்ளது.

திமுக வேட்பாளர் ஆனந்த்

அனந்த் ஒரு கோடீஸ்வரர்(தேர்தல் செலவுக்கு பஞ்சமில்லை). இவரது வயது 29 தான். இவருக்கு பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், பழ மண்டிகள் உள்ளன
இவர் அமைச்சர் நேருவின் சிபாரிசு. இவரது ஜாதியினர் (முத்தரையர்) ஸ்ரீரங்கத்தில் அதிகம் என்பதால் அமைச்சர் நேருவின் சிபாரிசில் இவர் இறங்கி விடப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா பிராமண சமூகத்தினரின் ஓட்டுக்களை குறி வைக்க, தொகுதியில் அவர்களை விட அதிகம் வசிக்கும் முத்தரையர் ஜாதியினர் ஓட்டுக்களைக் குறி வைத்து ஆனந்தனை இறக்கியுள்ளார் நேரு. பிராம்ணர்கள் ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான். சுற்றியுள்ள கிராமங்களில் முத்தரையர் மற்றும் ஆதிதிராவிடர்கள் தான் அதிகம். அதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இழுப்பறி நிலவுகிறது.

இந்த முறை மக்கள் மனம் கணிக்க முடியவில்லை. 1 கிலோ அரிசி, கலர் டிவி, குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக மாற்றுதல் எல்லாம் மக்கள் மனது மாறியிருக்கும் என்றே தோன்றுகிறது. ஜெயலலிதா ஜெயித்தாலும் அது 10,000 ஓட்டு வித்தியசத்தில் தான் இருக்கும் என்ற நிலமை நிலவுகிறது
இப்ப மிக்ஸி, கிரண்டர் என்று வேறு சில ஐடங்கள் வந்துள்ளது. அதனால் ஒட்டு வித்தியாசம் இன்னும் குறையும் :-)

பிகு: உங்கள் ஊர் தொகுதி பற்றி கட்டுரை அனுப்பினால் இட்லிவடையில் பிரசுரிக்கப்படும்.

19 Comments:

Power-cut said...

மிக்சி, கிரைண்டர், லாப் டாப், எல்லாம் கொடுப்போம்.
ஆனால் இவற்றுக்குத் தேவையான மின்சாரம் மட்டும்
கொடுக்கமாட்டோம். மக்களே ஏமாறத் தயாரா?

Anonymous said...

எந்த ஒரு செயலையும் ஜோதிடர்களைக் கேட்டு விட்டே செய்யும் பழக்கம் உடையவர் ஜெயலலிதா. தான், ஸ்ரீரங்கத்தில் எங்கு தங்குவது என்பது குறித்தும் அவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும், பிராமண அக்ரஹாரத்தில் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்களாம்.

இதையடுத்து ரங்கநாதர் கோவிலைச் சுற்றிலும் நான்கு வீதிகளில் நிறைந்துள்ள அக்ரஹாரத்தை அதிமுகவினர் அலசி ஒரு வீட்டைப் பார்த்து வைத்துள்ளனராம்.

ஆனால் ஜெயலலிதா அக்ரஹாரத்தில் தங்கினால் பாதுகாப்பு தருவது சிக்கலாகும் என்று காவல்துறை கூறியுள்ளதாம். இதனால் வேறு சில இடங்களிலும் பங்களாக்களைப் பார்த்து வைத்துள்ளதாம் அதிமுக.

இருப்பினும் அக்ரஹாரத்தில் தங்கினால் நல்லது என்று ஜோதிடர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளதால் அக்ரஹாரத்தில் உள்ள ஒரு வீட்டை எடுத்து அதை தொகுதி தேர்தல் அலுவலமாக மாற்றியுள்ளனர்.வீட்டி்ல தங்காவிட்டாலும் இங்கு வந்து போனாலே சென்டிமென்ட்டாக ஒர்க்அவுட் ஆகுமே என்ற காரணத்தில்தானாம்

Saama Kodangi said...

18-ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு, மதுரையில் தேர்தல் பிரசாரம் தொடங்குவதுதான் ஜெயலலிதாவின் திட்டம். ஆனால், அவசர அவசரமாக 16-ம் தேதி இரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். 16-ம் தேதி நல்ல நாள் இல்லை. ஆயில்யம் நட்சத்திர நாள் அது. 'பாயினில் படுத்தோர் மீளார்... வழிநடை போனோர் மீளார்’ என்று ஆயில்ய நட்சத்திரத்தைப் பற்றி ஒரு பாட்டே உண்டு! அப்படிப்பட்ட நாளில் யாராவது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார்களா? கருணாநிதியும் தனது வேட்பாளர் பட்டியலை 16-ம் தேதிதான் வெளியிடப் போவதாக முதலில் அறிவித்தார். யாரோ இதைச் சுட்டிக் காட்ட... 17-ம் தேதிக்கு மாறினார்.

ஆனால், எல்லாவற்றுக்கும் ஜோசியம் பார்க்கும் ஜெ., இதைப் பார்க்கத் தவறியது எப்படி?''

Anonymous said...

VAIKO should not accept lesser than 21 seats. For ADMK, this is the election to come into power and enjoy earning money.

For MDMK, this is like drinking water and food. But if VAIKO accepts lesser than 21 seats, then it will become a base for all elections to come! This is a very tricky way to ruin VAIKO's political career by ADMK.Never do this mistake. It would be better VAIKO should contest alone and gain votes from neutral voters. Here the point is, whether DMK and ADMK come into power does not matter to MDMK becuase all other parties are standing at very safer positions and advising MDMK like a child. MDMK is in very danger level and should not listen to opponents party and for their benefit.

Anonymous said...

நான் கேள்விப்பட்டது பண விவகாரம் என்று. கம்யூனிஸ்டுகள், மதிமுக இருவரும் கேட்ட தொகை பேரம் முடியாததால்தான் இத்தனை களேபரம். இதுபோன்ற துக்கடா கட்சிகளின் வருமான நேரமே தேர்தல்தான். வெறும் சீட்களை வைத்துக்கொண்டு நாக்கு வழிக்கத்தான் முடியும், தொகுதிக்கு இவ்வளவு என்று பெட்டி வந்தால்தான் பொழைக்க முடியும். நம்மை எல்லோரும் ஏமாற்றுகின்றனர். இந்த முறை திமுகவிடம் நிறைய பசை இருப்பதால் அங்கு நன்கு 'ஒட்ட' முடிகிறது.

ஒய்யாரக் கொண்டை said...

எல்லாக் கட்சிகளுமே ஏதாவது இழுபறியில் சிக்கித் தவிக்கின்றனவே?''

''ஏன் பாஸ் வருத்தப்படறீங்க? இந்த பி.ஜே.பி-யைப் பாருங்க, ஏதாச்சும் சிக்கல் இருக்கா? எல்லோருக்கும் முந்தி வேட்பாளர் பட்டியலே அறிவிச்சிட்டாங்களே!''

Anonymous said...

1966-ம் ஆண்டு தமிழகத்தில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கவர்னர் பரிசு அளிப்பதாக இருந்தது.

ஆனால், 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்கும் வாய்ப்பு இல்லை. என் படத்தையே பார்க்காத கவர்னர் எனக்குச் சிறந்த நடிகர் விருது கொடுப்பதை நான் விரும்பவில்லை’ என்று எம்.ஆர்.ராதா அந்த விழாவுக்கே போக வில்லை. இத்தகைய சுயமரியாதை உள்ள கலைஞர்கள் இருந்தால், நீங்கள் சொல்லும் அந்த நிலை மாறும்!''

- ஆ.தமிழரசன், கம்பம்.

ஒய்யாரக் கொண்டை said...

வைகோ எனும் பொய்கோ

ஒரு சீட்டுக்காக வீராவேசமாக ஜீப்பில் பின்னால் தொங்கிக்கொண்டு போயஸ் தோட்டம் போன வைகோ எந்த முகத்தை வைத்துக்கொண்டு கருணாநிதியை சந்திப்பார்?

வைகோ எனும் பொய்கோவும், சனி நாவில் குடியிருக்கும் சம்பத்தும் உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டே என்று பாடிக்கொண்டு அப்படியே மீண்டும் ஒரு பாதயாத்திரை மேற்கொண்டு, மே 13 -ம் நாள் கோபாலபுரத்திலோ அல்லது போயஸ் தோட்டத்திலோ பாதயாத்திரையை முடித்து விடுங்கள்..

citizen said...

அதிமுக தேர்தல் அறிக்கை:
* படித்த மாணவர்களுக்கு அமெரிக்காவில் வேலை செய்ய இலவச H1 விசா
* படிக்காத மாணவர்களுக்கு இலவச ஊக்க தொகை - மாதம் 50 ஆயிரம் ரூபாய்
* விஜய் படத்தில் இனி 3 இலவச குத்து பாடல்கள்
* தாய்மார்கள் நலனுக்காக அவர்கள் வீட்டிற்க்கே வந்து சட்னி, சாம்பார், தோசை மாவு எல்லாம் செய்து கொடுக்க படும். சீரியல் பார்ப்பது மட்டுமே இனி அவர்கள் வேலை ( இதற்க்கு மாதம் 10 ஆயிரம் இலவச ஊக்க தொகை கொடுக்க படும்)

Citizen said...

அதிமுக தேர்தல் அறிக்கை:
* படித்த மாணவர்களுக்கு அமெரிக்காவில் வேலை செய்ய இலவச H1 விசா
* படிக்காத மாணவர்களுக்கு இலவச ஊக்க தொகை - மாதம் 50 ஆயிரம் ரூபாய்
* விஜய் படத்தில் இனி 3 இலவச குத்து பாடல்கள்
* தாய்மார்கள் நலனுக்காக அவர்கள் வீட்டிற்க்கே வந்து சட்னி, சாம்பார், தோசை மாவு எல்லாம் செய்து கொடுக்க படும். சீரியல் பார்ப்பது மட்டுமே இனி அவர்கள் வேலை ( இதற்க்கு மாதம் 10 ஆயிரம் இலவச ஊக்க தொகை கொடுக்க படும்)

ராஜேஷ், திருச்சி said...

Jayalalitha should lose.. though ADMK gets more seats, jaya shud lose for her recent arrogance against coilation leaders

Anonymous said...

Jaylalitha has not changed at all.She still keeps her arrogance to treat VAIKO like a child.She has damaged a very good opportunity by her misbehavior once again.Definitely she is going to reap what she has sowed.This is a stupid activity at a crucial time.This has once again proved that she has not enough maturity to face Karunanidhi.

R.Gopi said...

கட்டுரை வெகு சுமார்....

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....

Govindaraj.K said...

உங்கள் கணிப்பு எல்லாம் வேஸ்ட். அதிக தொகுதிகள் வேட்பாளர்கள் தொகுதிக்கு சம்பதம் இல்லாதவர்களை நிறுத்தி உள்ளது கட்சிகள் . இதனால் போட்டி வேட்பாளர்கள் களம் இர்ர்ந்க ரெடி , வேட்பு மனு தாக்கல் அப்புறம் பாருங்கள் ,சிட்டு கிடைக்காத தொகுதிகளின் மண்ணின் மைதகர்கர் சுயட்சைகள் ரெடி இவர்கள் வெற்றி வாய்ப்பு இருக்கு .....

Anonymous said...

//உங்கள் கணிப்பு எல்லாம் வேஸ்ட்//

அமர் said...

ஸ்ரீரங்கத்தில் எங்கு தங்குவது என்பது குறித்தும் ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும், பிராமண அக்ரஹாரத்தில் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்களாம். அதனால் ஜெயலலிதா தங்க ஒரு வீடு ஸ்ரீரங்கத்தில் தயாராக உள்ளது.

நல்ல இருக்கே உங்கள் கதை. சேரியில் தங்கி வாக்குகள் கேட்டால் எந்த பிராமணனாவது வோட்டு போடுவனா ?

cho visiri said...

//16-ம் தேதி நல்ல நாள் இல்லை. ஆயில்யம் நட்சத்திர நாள் அது. 'பாயினில் படுத்தோர் மீளார்... வழிநடை போனோர் மீளார்’ என்று ஆயில்ய நட்சத்திரத்தைப் பற்றி ஒரு பாட்டே உண்டு! அப்படிப்பட்ட நாளில் யாராவது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார்களா?//

On 16th of March 2011, Panguni 2nd date fell. On that day, (approximately) upto 1400 Hrs (2 pm) Pushyam fell. Pushyam is considered a very good star. (Mahalakshmi- refer to Serthi Utsavam in SriRangam.)
Therefore, I donot find any inaspicious act in JJ's announcement of List on 16th instant.

Anonymous said...

appadiye oru ayiram unit power supplyum ovvoru mathamum koduppomnu sonnanganna ella vottum avangalukkuththan

Anonymous said...

as per the law you're not suppose to publish opinion poll / similar till day of election. We expect you abide by the law.