பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 08, 2011

டீலா ? நோ டீலா !தி.மு.க., காங்கிரஸ் இடையே உடன்பாடு - 63 தொகுதிகளில் காங். போட்டி. இந்த டீலிங்கில் யார் ஜெயித்தார்கள்?

36 Comments:

(-!-) said...

:>

Anonymous said...

DMK Will win and First few months MK will be CM and after that it will be MKS... LOL

அஞ்சா நஞ்சன் said...

ராஜினாமா பண்ணிடுவோம்..டெல்லிக்கு புறப்படப்போறோம்..புறப்பட்டுட்டோம்.. டெல்லிக்கு வந்துட்டோம்.. ராஜினாமா கடிதம் கொடுக்கப்போறோம்.. .. .....முடியல....

கானகம் said...

நிச்சயமாக கருணாநிதிதான்.. சி.பி.ஐ மணைவி, துணைவி, மகள், மகன் இப்படி யாரையும் விசாரிக்காமல் சாடம் தன் கடமையைச் செய்யும். ராசாவுக்கு ராஜோபச்சாரம் ஜெயிலில் நடக்கும். அமுக்கிய துட்டெல்லாம் இனிமே அவருக்கும் அவர் குடும்பத்தாருக்குமே.. இனி ஒரு அஞ்சுவருஷத்துக்குள்ள எல்லாத்தையும் பதுக்கிட மாட்டோமா? தமிழ்நாடு எக்கேடு கெட்டா எங்களுக்கென்னா?

ஆனா இதெல்லாம் தி.மு.க கூட்டணி அள்ளித்தர்ரத வாங்கிட்டு மக்கள் ஒழுங்கா ஓட்டுப்போட்டா நடக்கும்.. இல்லைனா ஒரு மாசம் கேப்புக்குள்ள எத்தனை தகிடுதத்தம் செய்ய முடியுமோ அவ்வளவு செஞ்சு ஜெயிக்கனும்..

இல்லைனா மறுபடியும் “ அய்யோ..என்னைக் கொல்றாங்களே கதைதான்..

blogpaandi said...

Situation Song from Naan Kadavul :
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்...
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்...
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா... இருமுறையா...
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா.. பழவினையா...
கனம் கனம் தினம் எனைக் குடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே...
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே...
அருள் விழியால் நோக்குவாய்...
மலர் பதத்தால் தாங்குவாய்...
உன் திருக்கரம் எனை அரவனைத்து உனதருள் பெற
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே

Anonymous said...

இதைத்தான் irony of life என்று சொல்கிறார்களா! காங்கிரசை ஒழித்துக் கட்டி வளர்ந்த தி.மு.க இன்று தன்னை அழித்துக் கொண்டு காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் மறுவாழ்வு கொடுக்கிறது.

தமிழா உன் தன்மானம் எங்கே! தன்னையும், தன் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ள நம் இயக்கத்தையே காவு கொடுத்த மு.கவின் கட்சியில் இருப்பதற்கு நாக்கை புடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருக்கிறது.

இப்படிக்கு

தி.மு.க உண்மைத் தொண்டன்

rajatheking said...

Evanukaka sayrupala padikanum pola eruku. . .

Anonymous said...

"வின்னிங் ஃபார்முலா" என்றார் மு.க.அழகிரி.

காங்கிரஸ் 63 இடங்களில் போட்டி: மு.க.அழகிரி
புதுடெல்லி, மார்ச் 8,2011

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிடும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் கடந்த நில நாட்களாக நிலவி வந்த 'சிக்கல்'கள் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. (விரிவான செய்தி: காங்கிரஸுக்கு 63 தொகுதிகள்: முடிவுக்கு வந்தது திமுக கூட்டணிச் சிக்கல்!)

தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் - திமுக இடையே சமரசம் ஏற்பட்டதாக, டெல்லியில் நிருபர்களிடம் தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.

அப்போது உடன் இருந்த மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரிடம் காங்கிரஸ் - திமுக இடையிலான சிக்கல்கள் களையப்பட்ட விதம் குறித்து நிருபர்கள் கேட்டனர்.

எந்த வகையான ஃபார்முலா கையாளப்பட்டது என நிருபர்கள் கேட்டதற்கு, "வின்னிங் ஃபார்முலா" என்றார் மு.க.அழகிரி.

Anonymous said...

"வின்னிங் ஃபார்முலா" என்றார் மு.க.அழகிரி.

Anonymous said...

"வின்னிங் ஃபார்முலா" என்றார் மு.க.அழகிரி.

யாருக்கு? ஜெயாவுக்கா? :)

kothandapani said...

Now that DMK has conceded to the demand of Congress,it becomes very clear that no. of seats was not the real issue.After getting clearance for his secret deals, CM has conceded to the demand of Congress.

rajatheking said...

Eniyathu yosithu vote podukapa

Anonymous said...

Nasty politics done by DMK.....last 4 days drama ended as-usual......already damage done......

Good for AIADMK alliance........

Anonymous said...

அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

lalitha

Anonymous said...

திமுக அதிமுக இரண்டுக்கும் மாற்று என்று சென்ற இரண்டு தேர்தலிலும் விஜயகாந்துக்கு வாக்களித்தேன்.

விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததும் இன்று மீண்டும் அதிமுக அணி, திமுக அணி என்று இரண்டுதான் இருக்கிறது.

இந்த முறை என் ஓட்டு பாஜகவுக்குத்தான்.

மத்தியில் அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் மீது ஒரு ஊழல் லஞ்ச குற்றச்சாட்டு கிடையாது. அவர் இப்போது தலைவராக இருக்கிறார். அவருக்கு ஓட்டு போட்டால் ஓட்டுக்கும் மரியாதை செய்ததாக இருக்கும்.

ஜெயாவுக்கும் கருணாவுக்கும் ஓட்டு போடுவது ஓட்டை அவமரியாதை செய்வது போன்றதுதான்.

SAN said...

Apt picture for the occasion!!!

Now that the deal is done let us all vote for semmozhi kavalar for the prosperity of his family for another 1000 etc. etc. generations.
Let us not forget that by his shrewdness he has lifted the Tamil pride to sky high.

Anonymous said...

Ayyoo Vikatan patta kashtam ellam veenaa poiduche...epdiyavathu intha alliance vanthuda koodathunnu rombave menakettanga..vithi valiyathu...I hope ADMK alliance will win this election. But who ever wins, I believe it will not be a big win... So I want to see JJ forming a "minority" Government :-) ..

Anonymous said...

அடங்கொய்யால! 63 காங்கிரஸ் வேட்பாளரும் 63 நாயன்மார்களாம்.

ஐயா! பக்தி பெருகுதையா பகுத்தறிவு பகலவன் மஞ்ச துண்டிற்கு
Karuna's Quote From THE HINDU:

I am happy that the deal has been struck between DMK and Congress. Like 63 nayanmars (Tamil saivities), you have been given the 63 seats. You should accept it with the same amount of bhakti like nayanmars,” he told Congress at a meeting where volunteers from other parties joined DMK.

Anonymous said...

பார்க்கவும்:
http://vimarisanam.wordpress.com/2011/03/07/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95/

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

நிச்சயமா ஜனங்க இல்ல!

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

நிச்சயமா ஜனங்க இல்ல!

Anonymous said...

I dont have faith on this election. Ec is going yo take more than month to announce the election result :(
I am just going 2 vote for BJP.

மஞ்சள் ஜட்டி said...

நன்பேண்டா (டி)

R.Gopi said...

யாரு ஜெயிச்சாங்கறத விடுங்க தலைவா...

வழக்கம் போல தோத்தது நாம தான்..

வாழ்க அண்ணா நாமம்...

நானும் உங்கள் அனைவருக்கும் போடுவதும் அதே தான்...

மஞ்சள் ஜட்டி said...

மஞ்சள் துண்டு விற்பனை மந்தம் நேற்றுமுதல் மஞ்சள் நைட்டி விற்பனை அமோகம...

காங்கிரஸ் தொண்டன் said...

சில தினங்களுக்கு முன் காங்கிரஸ்சுக்கு எதிராக அறிக்கை விட்ட ராமதாசு, திருமாவளவன் மற்றும் அல்லக்கை வீரமணி ஆகியோருக்கு சென்னையில் காங்கிரஸ் தலைமை இடமான சத்திய முர்த்தி பவனில் நடக்க இருக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் கலைஞர் மு. கருணாநிதி முன்னிலையில் இலவசமாக மந்தார இலையில் சூடான மலம் வழங்கப்படும் என்பதை வெற்றிக் கூட்டணி சார்பில் அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அனைவரும் வருக !! ஆதரவு தருக !!
- இவண் இ.வி.கே.எஸ். இளங்கோவன் பேரவை

chithra said...

63 நாயன்மார்களாம்ல.அய்யோ! அய்யோ!
இந்த ஆழ்(ள்)வார்கள் வழக்கம்போல் கூட
இருக்குறவங்களுக்கு 'நாமம்' போட்டுறலாம்னு
பார்த்தாங்க. ஆனால் இந்தமுறை நாயன்மார்கள்
'பட்டை'யை கிளப்பிட்டாங்க

நோ ஜட்டி மேன் said...

//மத்தியில் அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் மீது ஒரு ஊழல் லஞ்ச குற்றச்சாட்டு கிடையாது. அவர் இப்போது தலைவராக இருக்கிறார். அவருக்கு ஓட்டு போட்டால் ஓட்டுக்கும் மரியாதை செய்ததாக இருக்கும்.//

இந்த ஒரு காரணத்துக்காக

//இந்த முறை என் ஓட்டு பாஜகவுக்குத்தான்.//

நோ ஜட்டி மேன்

Anonymous said...

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne1203112G_SCAM.asp

A must read article....

ralana said...

ennathathe solli ennathathe seiya ellam en kudumbam adhu pothum karunanithikku.

Anonymous said...

தங்களை அதிமுக பொதுச் செயலாளர் ஊறுகாயாக பயன்படுத்துவதாக மதிமுக, இடதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இவர்களுக்கு மிகக் மிகக் குறைவான தொகுதிகளையே தர அதிமுக முன் வந்துள்ளது. இது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.

ஆனால், அதைவிட அவர்களை மிக மிக கோபம் கொள்ள வைத்தது ஜெயலலிதாவின் சந்தர்ப்பாதம் தான் என்கிறார்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே சண்டை வந்தவுடன், காங்கிரஸை கூட்டணியில் சேர்ப்பதற்காக தங்களுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையையே ஜெயலலிதா நிறுத்தி வைத்ததை வைகோவும் இடதுசாரிகளும் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கேவலமாகக் கருதுகின்றனர்.

சொல்படி, இவர்களை வெட்டிவிட்டுவிட்டு காங்கிரசோடு கூட்டணி சேர அதிமுக தீவிரமாக முயன்றது.

இதை உணர்ந்த மதிமுகவினரும், இடதுசாரிகளும் கடும் கோபத்துக்குள்ளாகினர். ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உறுதியானதும், இவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக. இதை இவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள்.

அதிமுக செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தங்களுக்கு மரியாதையான அளவிலான தொகுதிகளையாவது ஒதுக்கித் தர வேண்டும் என்பது தான் வைகோ மற்றும் இடதுசாரிகளின் இப்போதைய கருத்தாக உள்ளது.

ஆனால், தேமுதிக வந்துவிட்ட தைரியத்தில் இவர்களை உதாசீனப்படுத்தும் வகையில் ஜெயலலிதா நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். இதற்கு அவரது அட்வைசரான அந்த பத்திரிக்கையாளரே முக்கியமானதாகக் கருதப்படுகிறார். ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட அவருக்கு வைகோவைக் கண்டாலும் ஆகாது, இடதுசாரிகளை ஆகவே ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் மதிமுகவுக்கு சிங்கிள் டிஜிட்டில் சீட் தருவதாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக. கடந்த முறை 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக இம்முறை 36 கேட்டது. பின்னர் 30, 26 என்று இறங்கி வந்தார் வைகோ.

ஆனால், அதிமுகவோ மதிமுகவுக்கு 5 சீட்டில் ஆரம்பித்து 6, 7, 8, 9 என்று போய் இப்போது 10 சீட்களிலேயே நின்று கொண்டுள்ளது. இதையடுத்து 18 தந்தால் உடன்பாடு செய்து கொள்ளலாம் என்ற அளவுக்கு வைகோ இப்போது இறங்கி வந்துவிட்டார். ஆனாலும் இதைக் கூடத் தர அதிமுக தயாராக இல்லாததால் தான் அவரை அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இழுத்தடித்து வருகிறது என்கிறார்கள்.

Anonymous said...

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் 35ல் போட்டியிட்டு 6ல் தானே வென்றீர்கள். அதிலும் 3 எம்எல்ஏக்கள் உங்களுடன் இல்லையே, மக்களவைத் தேர்தலில் 4 சீட் தந்து ஒரு
இடத்தில் தான் வென்றீர்கள், இதனால் இப்போது 10 தொகுதிகள் போதாதா என்று மதிமுகவிடம் அதிமுக கேள்வி எழுப்பியதாகவும் சொல்கிறார்கள். இதையடுத்து 184 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வெறும் 61 தொகுதிகளில்தானே வென்றது. இதற்காக அதிமுக 50 மட்டும் போட்டியிடுமா என்று மதிமுக தரப்பு பதில் கேள்வி கேட்டுள்ளது.

அதிமுகவின் இந்த செயல்களால் மனம் ஒடிந்து போன வைகோ, இப்போது தனது கட்சியின் மரியாதையைக் காப்பாற்ற போராடிக் கொண்டுள்ளார்.

முதலில் கடந்த 5ம் தேதி இரவு 10 மணிக்கு தாயகத்தில் வைகோ தலைமையில் நடந்த மதிமுக அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் அனல் பறந்துள்ளது.

கூட்டத்தில் பேசிய மதிமுக தொகுதி உடன்பாட்டுக் குழு உறுப்பினரான திருப்பூர் துரைசாமி, போயஸ் கார்டன் கதவை எத்தனையோ தடவை தட்டி விட்டோம். நம்மை ஒரு பொருட்டாகவே ஜெயலலிதா மதிக்கவில்லை. காங்கிரசோடு கூட்டு சேர சுப்பிரமணிய சாமி மூலம் ஜெயலலிதா முயற்சித்தார். இதனால் தான் ஸ்பெகட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிப்பதை சாமி நிறுத்தினார். ஜெயலலிதா ஒரு நம்பிக்கைத் துரோகி என்று பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதிமுக பொருளாளர் மாசிலாமணி பேசுகையில், நமக்கு மரியாதைக்குரிய அளவில் சீட் தரப்படாவிட்டால் அதிமுக கூட்டணியிலிருந்து நாம் வெளியேற வேண்டும் பேச, அடுத்தடுத்துப் பேசியவர்கள் ஜெயலலிதாவை மிகக் கடுமையான அர்ச்சித்துள்ளனர்.

இறுதியில் கலங்கிய முகத்துடன் பேசிய வைகோ, நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஜெயலலிதா துரோகிதான். துரோகச் செயல்களுக்கு அஞ்சாதவர் தான். கம்யூனிஸ்டுகள் வெளியே வந்தால் அவர்களோடு சேர்ந்து மூன்றாவது அணியை அமைக்க முயல்வோம் என்று பேசியுள்ளார்.

இந்தத் தகவல் அதிமுக தரப்புக்குக் கிடைக்க, நள்ளிரவில் மதிமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், அவசரப்பட வேண்டாம், கம்யூனிஸ்டுகளுக்கும், உங்களுக்கும் உரிய இடங்கள் தரப்படும் என்று சமாதானம் சொன்னதோடு சரத்குமார், கார்த்திக் கட்சிகளுக்கும் அம்மா சீட் தரப் போகிறார் என்று சொல்லிவிட்டுச் சென்றார் என்கிறார்கள்.

ஆனாலும் அதைத் தொடர்ந்து 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதிமுகவிடமிருந்து எந்த அழைப்பும் இல்லாததால் அந்தக் கூட்டணியிலிருந்து கழன்றுவிட வைகோ திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து தனியாக 3வது அணியை உருவாக்க வைகோ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய மூன்று கட்சிகளையும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பேச்சுவார்த்தைக்கு அழைத்து தொகுதிகளின் எண்ணிக்கையை ஜெயலலிதா அறிவிப்பார் என்று இந்தக் கட்சிகள் கருதின.

ஆனால், இதில் எந்தக் கட்சியுடனும் ஜெயலலிதா இதுவரை தொகுதி உடன்பாடு செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் கடந்த திங்கள்கிழமை அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்து டீ, வடை தந்து அனுப்பிவிட்டனர்.

அப்போது மார்க்சிஸ்டுகளுக்கு அதிகபட்சம் 11 தான் என்று அதிமுக கூறியதால் பேச்சில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

அட்லீஸ்ட் இவர்களை அதிமுக அழைத்தாவது பேசியது. ஆனால், சசிகலா மூலம் அதிமுகவுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை இன்னும் அடுத்த சுற்று பேசக் கூட அதிமுக அழைக்கவில்லை. சசிகலாவின் பேச்சு இம்முறை போயஸ் கார்டனில் எடுபடவில்லை என்றும், ஜெயலலிதாவை அவரது சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் தான் வழிநடத்து வருகின்றனர் என்பதும் தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இதில் ஒருவரான அந்த பத்திரிக்கையாளர் தான் படாதபாடுபட்டு தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anonymous said...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 சீட் தான் என்று அதிமுக தேர்தல் குழுவினர் முன்பு கூறியிருந்தனர். இப்போதும் அதே எண்ணிக்கையில் தான் அதிமுக நிற்கிறது என்கிறார்கள்.

இதனால் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு மதிமுக,
இடதுசாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி தனியாக களத்தை சந்திக்கலாம் என்பதே இந்தக் கட்சிகளின் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. ஆனால், தா.பாண்டியன் மட்டும் பொறுத்திருக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

தனியாகக் களமிறங்கி ஓட்டுக்களைப் பிரித்து தங்களை கேவலப்படுத்தும் அதிமுகவை திமுக கூட்டணியிடம் தோற்கச் செய்வதே சரியான பதிலடியாக இருக்கும் என்று இவர்கள் கருதுகின்றனர்.

இந் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மதிமுக-இடதுசாரிகள் தனியாக மூன்றாவது அணி அமைக்க மாட்டார்களா என்ற நப்பாசையுடன் திமுகவும் எதிர் முகாமை பார்த்துக் கொண்டு காத்துக் கொண்டுள்ளது. அப்படி ஒன்று நடந்தால் அது தங்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தரும் என்பது திமுகவின் கணக்கு.

இதனால் அந்தக் கூட்டணியை உடைக்க நாம் ஏதாவது செய்ய முடியுமா என்ற வியூகங்களையும் யோசித்துக் கொண்டுள்ளது திமுக.

தேமுதிக, பிற கட்சிகளுக்கு 49 இடங்கள் தந்துவிட்ட நிலையில் மீதமிருக்கும் 185 இடங்களில் மதிமுக, சிபிஎம், சிபிஐக்கு மொத்தமாக 30 இடங்களை மட்டும் ஒதுக்கிவிட்டு, சரத்குமார் கட்சிக்கு இரு தொகுதிகளைத் தந்துவிட்டு மீதியுள்ள 153 இடங்களில் (கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு உகந்த 9) போட்டியிட அதிமுக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதை மதிமுக-இடதுசாரிகள் ஏற்காவிட்டால் கூட்டணி உடைவதை தவிர்க்க முடியாது என்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு திமுக 27 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் கடைசி நேரத்தில் 35 இடங்கள் தந்த அதிமுக கூட்டணிக்கு வைகோ இடம் மாறியது குறிப்பிடத்தக்கது. இம்முறை அவர் திமுக கூட்டணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதால், இடதுசாரிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைப்பது ஒன்றே அவருக்குரிய ஒரே வழியாகும.

Anonymous said...

திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டதால் திமுகவை விட மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பது மதிமுகவும் இடதுசாரிக் கட்சிகளும் தான்.

திமுகவுடன் மோதலில் உள்ள காங்கிரஸை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் இழுக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முயன்றார். அவருக்காக ஒரு பத்திரிக்கையாளரும், நீதிமன்ற வழக்குகள் மூலமே அரசியல் நடத்தி வரும் ஒருவரும் டெல்லியில் கடும் முயற்சிகள் மேற்கொண்டனர்.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த 6ம் தேதியே தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிட்டிருந்த அதிமுக அதை கிடப்பில் போட்டது.

காங்கிரசுக்கு சிக்னல் கொடுக்கும் வகையில் மதிமுகவுடன் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்தது அதிமுக. அதே போல இடதுசாரிகளை தனது கட்சி தலைமையகத்துக்கு அழைத்து வெளிப்படையாக பேச்சு நடத்துவதை நிறுத்திவிட்டு, சென்னை தியாகராயர் நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ரகசிய பேச்சில் மட்டும் ஈடுபட்டது அதிமுக.

இதனால் மதிமுகவும் இடதுசாரிகளும் பெரும் கவலையில் இருந்தன. இரு தினங்களுக்கு முன் திமுக-காங்கிரஸ் கூட்டணி சரியாகிவிடும் என்பது போன்ற நிலை ஏற்பட்டவுடன் அதிமுகவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் அழைத்துப் பேச்சு நடத்தியது அதிமுக தேர்தல் பணிக் குழு. ஆனால், அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவி்ல்லை.

மீண்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்ற நிலைமை உருவானபோது, இடதுசாரிகள்-மதிமுகவை மீண்டும் தொங்கலில் விட்டது அதிமுக.

இந் நிலையில் இப்போது திமுகவும் காங்கிரசும் கூட்டணியை இறுதி செய்து தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்டதால், இப்போது மீண்டும் மதிமுக, இடதுசாரிகளுடன் அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவுள்ளது.

Anonymous said...

கலைஞர் ஆட்சி செய்தால் தமிழனுக்குத்தானே நல்லது. மன்னிக்கவும், ஒன்று மறந்துவிட்டேன். தமிழன் = கலைஞர் + அவர் குடும்பத்தினர், அவ்வளவுதான். தமிழகம் அவர்களின் சொத்து. இந்திய கஜானா அவர்களின் வங்கி.
அம்மா ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன சும்மாவா? சுதாகரன் கல்யாணம் போல வேறு எதாவது திட்டம் கட்டாயம் வைத்திருப்பார்கள். வேறு யார் இருக்கிறார் தமிழகத்தை காப்பாற்ற?? இதை பற்றி பேசினால் தலை குழம்பி போய் விடுகிறது!!! நடுநிலையாக பார்த்தல் யாருக்கும் ஆட்சி செய்ய தகுதியே இல்லை. சில காலம் ஆங்கிலேயர் ஆட்சி செய்திருந்தால் இன்று நம் நாடு ஹாங்காங் போன்று இருந்திருக்கும். காந்தி செய்த தவறு நாம் இன்று வருந்தி அனுபவிக்கிறோம்.

Anonymous said...

Anna Naamam !! Anna Naama nu solli ella dravida katchigalum, naaamaam pottute irukkanga...

Endru Thaniyum intha kollayar vetkai !!