பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 18, 2011

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா


(படம் நன்றி: விகடன் )
இது ஸ்ரீரங்கம் கோயில் யானை கிடையாது.

42 Comments:

Shankar said...

Wikileaks bomb - Azhagiri named !

http://www.youtube.com/watch?v=6G9o-Gc4WH8

ConverZ stupidity said...

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=391905&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

Anony8 said...

It's a combination of ADMKs stupidity(in the name of strategy of being more aggressive on seat selection with allies) and Oppn conspiring 2 exaggerate this mis-understanding.

THIRD FRONT CAPTAIN said...

எங்கப்பா அந்த மூன்றாவது அணி ? . கேப்டன் டிவி இல் ஒரு நியூஸ் ஐயும் காணோம்.
மானஸ்தர்கள் டெபொசிட் வாங்க அமைதி காக்கிறார்களா?

CPI CPM said...

தெ மு தி க இதுவரை விருதாச்சலத்தை தவிர ஒரு தொகுதியிலும் ஜெயிக்காத கட்சி. ஏற்கனவே சில இடங்களில் ஜெயித்து விட்டு, இது எங்கள் தொகுதி, தே மு தி க கோட்டை அதை எங்களுக்கே விட்டு விடுங்கள் என்று கேட்டால் ஞாயம் இருக்கிறது. ஆனால் கடந்த தேர்தல்களில் டெப்பாசிட்டுகள் கூட இழந்துவிட்டு இப்போது அ தி மு க விடம் தொகுதி கோரிக்கையில் பிடிவாதம் காட்டுவது ஞாயமா தெரியவில்லை.

இரண்டாவது, தெ மு தி கவிற்கு நிரந்தர சின்னம் கூட கிடையாது. தேர்தல் ஆணையம் ஒரே சின்னம் ஒதுக்கும் அளவிற்கு தெ மு தி கவிற்கு இன்னும் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் அ தி மு க கூட்டனியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று பத்து பதினைந்து எம் எல் ஏக்களை பெற்று அங்கீகாரம் கிடைக்க வழி செய்யலாம். அதை விட்டு விட்டு அ தி மு க வுடன் மல்லுக்கட்டுவது எந்த விதத்தில் தெ மு தி க விற்கு வெற்றியைக் கொடுக்கும் என்று தெரியவில்லை.

ம தி மு க கடந்த முறை அதிக தொகுதிகள் பெற்றும் ஐந்து ஆறு இடங்களைத் தவிற வேறு இடங்களில் வெற்றி பெற முடியாமல் தவித்த கட்சி. அதிலும் சில எம் எல் ஏக்கள் கட்சி மாறி விட்டார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பிருக்கும் தொகுதிகளை மட்டும் கேட்டுப் பெற்றால் கூட்டனி சுமுகமாக இருக்க வழிகிடைக்கும். கௌரவத்திற்காகவேனும் அதிக தொகுதிகள் அடம்பிடித்து கேட்டுப் பெற்று அதில் தோற்றும் போனால் கூட்டனிக்கு கிடைக்க வேண்டிய வெற்றி பலவீனப்பட வாய்ப்பிருக்கிறது.

கம்யூனிஸ்டுகள் எங்கே போனாலும் ஒட்டுன்னிகளாகத்தான் இருக்கப் போகிறார்கள். அந்த வேலையை அ தி மு க கூட்டனியிலிருந்தே செய்வதில் அவர்களுக்கு இழப்பேதும் இருக்கப்போவதில்லை. இந்த லட்ஷனத்தில் ஜெயலலிதாவை அகங்காரி என்ற முத்திரை குத்த புறப்பட்டு விட்டார்கள் மீடியாக்கள்!

REPEAT

ராஜேஷ், திருச்சி said...

side bar il irukum "pazhaya kuppai" unmaiyil kuppaiyaga poi vittadhu .. andha kanaku ini udhavaadhu.. !

மஞ்சள் ஜட்டி said...

அ.தி.மு.க., கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல், மகிழ்ச்சியளிக்கிறது,'' என, ராமதாஸ், திருமாவளவன் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

What is this????

Anonymous said...

வலுவான கூட்டணி இருந்தால் வெற்றி சுலபமாகும் என்பதோ, தொகுதிகளைப் பறித்துக்கொண்டால், கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடையும் என்பதோ ஜெயலலிதா அறியாதது அல்ல. தெளிவான திட்டம் இல்லாமல் அவர் எதையும் செய்யக்கூடியவர் அல்ல. அ.தி.மு.க.,வின் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட விசுவாசியாக, வைகோ திகழ்ந்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், ம.தி.மு.க.,வுக்கு எங்கள் தலைமை கொடுப்பதாக அறிவித்த ஒன்பது தொகுதிகள் கூட, அவரது விசுவாசத்துக்காகக் கொடுக்கப்பட்டது தான். கடந்த ஆறு ஆண்டுகளில் ம.தி.மு.க., தேய்ந்துகொண்டே வந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006 தேர்தலில் வழங்கப்பட்ட 35 தொகுதிகளில் ஆறில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறிவிட்டனர். தவிரவும், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கின்றனர்.

இதேபோன்ற நிலைமை அ.தி.மு.க.,விலும் இருப்பதாகக் குற்றம்சாட்ட முடியும். ஆனால், எங்களிடமிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிர்தரப்பில் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. முத்துச்சாமி போன்ற பழைய ஜாம்பவான்கள் விலகிய பிறகு தான், கோவையில் பிரமாண்ட கூட்டத்தைத் திரட்டிக் காட்டினோம். தொடர்ந்து நடந்த பிரமாண்ட ஆர்ப்பாட்டங்களில் இருந்து, அ.தி.மு.க., இன்னமும் கட்டுக் குலையாமல் இருப்பதை உணர முடியும். கடைசியாக நடந்த பேச்சில், வைகோ 21 தொகுதிகள் கேட்டார். அவற்றையும் அவரே தேர்ந்தெடுப்பேன் என்றார். அவர் நல்ல மனிதர் என்பதும், நல்ல நண்பர் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. ஆனாலும், எங்களை பலியாக்கி அவரது கட்சியை வாழ வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தங்களுக்கு 234 தொகுதிகளில் எதைக் கொடுத்தாலும் போட்டியிட முடியும் எனக் கூறியிருந்தார். அதுவே உண்மையெனில், முக்கியமான தொகுதிகள் போய்விட்டது என கவலைப்படுவது எதற்காக? இரு கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் பொறுத்தவரை, அவை 2006ம் ஆண்டு தேர்தலில் எதிரணியில் இருந்தவை. அவர்கள் வென்ற தொகுதி எல்லாம், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பறிக்கப்பட்டவையே. கட்சித் தலைவர் என்ற முறையில், அ.தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா முன்னுரிமை கொடுப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

தென்மாவட்டங்களில் அதிகமாக தேவர் சமுதாய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு புகார் எழுந்தது. கூட்டணியில் இருந்து கார்த்திக் கட்சி வெளியேறியதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக, எடுக்கப்பட்ட நடவடிக்கை அது. இவை எல்லாம் தாண்டி, குட்டிக் கட்சிகளை வளர்த்துவிடும் பணியில் ஒரு பெரிய கட்சி ஈடுபட வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல. குட்டிக் கட்சிகளிடம் உள்ள 9,000 ஓட்டு எங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பது உண்மை தான். ஆனால், 50 ஆயிரம் ஓட்டு உள்ள நாங்கள் அவர்களிடம் ஏன் செல்ல வேண்டும். கட்சியிலேயே சில முக்கிய புள்ளிகளுக்கு தொகுதி வழங்கப்படவில்லை. சில பேருக்கு, அவர்களது சொந்தத் தொகுதி மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. "வலுவான தொகுதியில் சாதாரண வேட்பாளர் கூட வெற்றி பெற்றுவிடுவார். வலுவான வேட்பாளர், சாதாரண தொகுதியில் கூட வெற்றி பெற்றுவிடுவார்' என்ற கணக்கு தான். அதுவும் தவிர, இந்தத் தேர்தலோடு முடிந்துபோவதில்லை அரசியல். அடுத்தடுத்து, உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல்கள் வரவுள்ளன. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து தான் இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் ஜெயலலிதா

Anonymous said...

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தங்களுக்கு 234 தொகுதிகளில் எதைக் கொடுத்தாலும் போட்டியிட முடியும் எனக் கூறியிருந்தார். அதுவே உண்மையெனில், முக்கியமான தொகுதிகள் போய்விட்டது என கவலைப்படுவது எதற்காக?

Anonymous said...

Good , we have 2 reconsider by vijayakanth

அஞ்சா நஞ்சன் said...

//எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து தான் இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் ஜெயலலிதா//அதை எல்லா கட்சிகளுடன் பேசி அவர்களை சம்மதிக்க வைத்து அதன் பிறகு லிஸ்டை வெளியிட்டிருக்கலாமே...

Rajarathanam said...

நீங்க எப்பவும் அரசியல் விஷயங்களை கொஞ்சம் பொறுமையாக அனுகவேணும். எப்படியும் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்பது என்னுடைய எண்ணம்.

Anonymous said...

yanai nambuvadhu adan thumbikkai
Amma nambuvadu thannambikkai and committed cadres

different perspective to the cartoon- why should AIADMK shoulder unnecessarily the heavy weights who are going to cause trouble in the post poll scenario
who can not win without the support a bigger allies

Anonymous said...

cpi and cpm will make a mistake by joining hands with admk again. if they form a third party, it will be the greatest turn over of tamil nadu political history and admk would become and outcast.

this is the chance for dmdk to become a better competitor. if they fail to form a third party, its a greatest loss to vijaykanth and his party will face the same future of mdmk.


ana onnu.. jayalalitha yarayum mathikama, avamana paduthinalum, namba vachu, kevala kazhutharuthalu, avanga romba nallavanga.. athu peru puthisalithanam.. ileengala??

ena koduma sir ithu.. (kalaingar's politics is pretty decent when compared to her's)

- Aravind

jaisankar jaganathan said...

// Rajarathanam said...
நீங்க எப்பவும் அரசியல் விஷயங்களை கொஞ்சம் பொறுமையாக அனுகவேணும். எப்படியும் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்பது என்னுடைய எண்ணம்.//

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே காலி பண்ணிடுவீங்க போல

Anonymous said...

செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்


கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது.ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதா’ ஆனார்.ஜெயா,ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு’. அ.தி.மு.க –வினர் அனைவருக்கும் `அம்மா’!
சர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.`எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்’ என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.
போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திரட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். ஹைதரபாத் செல்வதைச் சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர் மாதக்கணக்கில் தங்க வேண்டுமானால்..கொடநாடு!
சினிமா காலத்தில் இருந்து அவரை `வாயாடி’ என்று அழைத்தவர் எம்.ஜி.ஆர். இது பற்றி ஜெயலலிதாவிடம் ஒரு நிருபர் கேட்ட போது, சிரித்தபடி சொன்னார்...``அவர் கலகல... நான் லொடலொட!”
உடம்பை ஸ்லிம்மாகவைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறும் தேனும் கலந்து குடித்தார்.இப்போது தினமும் 35 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 13 கிலோ எடை குறைத்துள்ளார்!
ஜெயலலிதா நடித்த மொத்தப்படங்கள் 115. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த் முதல் படம் `ஆயிரத்தில் ஒருவன்’.

Anonymous said...

செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. `நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார்
முரசொலி மாறன்.
ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து,நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர், அவரது அம்மா சந்தியா. ``வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா,எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாது” என்று சொல்லி இருக்கிறாராம் ஜெயலலிதா.
எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பர் இறந்துபோனதால், அந்த நினைவுகள் இல்லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் சந்தியா, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.
எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற விழாவில் ஆறு அடி உயரமுள்ள வெள்ளிச் செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.
பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கராதேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.
தினமும் காலையில் நிஷாகந்தி எனப்படும் இருவாட்சி மலரைப் பறித்து பூஜைக் கூடையில் தயாராக வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள்.அதை எடுத்தபடியே பூஜை அறைக்குள் நுழைவார்.சமீபமாக பூஜையில் தவறாமல் இடம்பெறும் துளசி.

Makkal Thilagam said...

பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதலமைச்சராக இருந்தபோது ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதும், கடந்த ஆண்டு படுகர்களுடன் இணைந்து ஆடியதும் அடக்க முடியாத நாட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள்!.
ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று பாராட்டபட்டவர்!.
பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார். ஜெயா டிவி-யில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் அம்மாவின் விருப்பங்கள்தான்.
ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.
போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது வாக் அண்ட் டாக் பேட்டிக்கு வரவழைத்து விட்ட என்.டி.டி.வி-யால், ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்!.
ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி ரசித்து வந்தார். ஜெயலலிதா இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கியப் புத்தகங்கள் அத்தனையும் கடந்த நான் கைந்து மாதங்களாக அவர் மேஜையில் உள்ளன.
ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில் தான்.அங்கு சசிகலா மற்றும் முக்கியப் பணியாளர்கள் தவிர, யாருக்கும் அனுமதி இல்லை!.

Purattukkalaignan Vijayakanth said...

யாகம் வளர்ப்பது, ஹோமத்தில் உட்காருவதில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாகச் சொன்னாலோ, கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.
இயற்கை உணவுக்குப் பழகி வருகிறார். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி பசலை ஆகிய கீரை வகைகள் கொண்ட சூப் தினமும் இவருக்காகத் தயாராகின்றன கொடநாடு எஸ்டேட்டில் இந்த வகைக் கீரைகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.
சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் 116 ஏக்கர். அங்கு புறா,கிளி,காடை,கெளதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்திரா,சந்திரா என்ற இரண்டு ஈமுக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட... ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.
`நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால், எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்று தனது கேரக்டருக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

The last one is 100% correct.

Makkal Thilagam said...

பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதலமைச்சராக இருந்தபோது ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதும், கடந்த ஆண்டு படுகர்களுடன் இணைந்து ஆடியதும் அடக்க முடியாத நாட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள்!.
ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று பாராட்டபட்டவர்!.
பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார். ஜெயா டிவி-யில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் அம்மாவின் விருப்பங்கள்தான்.
ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.
போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது வாக் அண்ட் டாக் பேட்டிக்கு வரவழைத்து விட்ட என்.டி.டி.வி-யால், ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்!.
ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி ரசித்து வந்தார். ஜெயலலிதா இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கியப் புத்தகங்கள் அத்தனையும் கடந்த நான் கைந்து மாதங்களாக அவர் மேஜையில் உள்ளன.
ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில் தான்.அங்கு சசிகலா மற்றும் முக்கியப் பணியாளர்கள் தவிர, யாருக்கும் அனுமதி இல்லை!.

Makkal Thilagam said...

விஜயகாந்த் vs ஜெயலலிதா =மக்களின் மறதி

அண்ணா.தி.மு.க.கூட்டணில் தே.மு.தி.க- இணைந்து 41 இடங்களை பெற்றுள்ளது. ஒருகாலத்தில் குடித்துவிட்டு சட்டசபைக்கு வருகிறார் விஜயகாந்த் என்று ஜெயலலிதாவும்,
ஆமாம், ஜெயலலிதாதான் ஊற்றி கொடுத்தார் என்று விஜயகாந்தும் பரஸ்பரம் குற்றம் சாற்றியத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
அதன் பிறகு நடந்த பேச்சுக்கள் இதோ....ஒரு பிளாஷ்பேக்...

''பெண்கள் மீதும், தாய்மார்கள் மீதும் நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவன். என்னைப் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பழி சொல்லி அறிக்கை விட்டிருப்பதை நான் ச‌ற்றும் எதிர்பார்க்கவில்லை.

இரவு பகல் பாராமல் கடந்த ஓராண்டு காலமாக பொதுமக்களையும், தொண்டர்களையும் தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் நான் சந்தித்துள்ளேன். நான் எப்படிப்பட்டவன் என்பதை பொது மக்கள் நேரிலேயே பார்த்து வருகின்றனர்.
விஜயகாந்த்''அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாக சொன்னதை, தன்னைத்தான் சொன்னார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அ.தி.மு.க.வை தனது அரசின் சாதனைகளால் உலகம் முழுவதும் அறியும் வகையில், அடையாளம் காட்டிஎம்.ஜி.ஆருக்குப் புகழ் சேர்த்தவர் ஜெயலலிதா. இவையெல்லாம் நேற்று கட்சி தொடங்கிய விஜயகாந்த்துக்குதெரியாமல் இருப்பதில் வியப்பே இல்லை. எம்.ஜி.ஆரின் ரசிகன் என கூறிக் கொள்ளும் விஜயகாந்த், சோதனைக் கட்டத்தின் போது எங்கிருந்தார்?அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. விஜயகாந்த்துக்கு ஜெயலலிதாவைக் குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. வரலாறுகளை எல்லாம் இனிமேலாவது அவர் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்''
செங்கோட்டையன்தே.மு.தி.க. சாதித்து விட்டது என்கிறார்கள். அந்தக் கட்சி வெறும் 3 சதவீத இடங்களில்தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே 3 சதவீத இடங்களை நமது தோழமைக் கட்சியான ம.தி.மு.க. கூட பெற்றிருக்கிறது. ஊழலை ஒழிப்பேன், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை வழங்குவேன் என்று கூறுவதெல்லாம் குடிகாரன் பேச்சைப் போன்றதுதான். நான் யாரைச் சொல்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.
ஜெயலலிதா


இந்த சாம்பிள்கள் போதுமே.......

Anonymous said...

There is no second opinion that DMK rule should be eradicated. But already JJ has shown a preview of her behaviour. So Now we know how she will behave if she wins...

Enakkenavo Tamil Nattai, Peyidam irunthu meettu pisasidam kodukka pohiromo nu than thonuthu...

God Help us...

மன்மோகன்சிங் said...

ஜெயலலிதாவிடம் கேப்டன் சோல்ஜரான சோர வரலாறு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணியின் புண்ணியத்தில் ஒரு சுபயோக சுப தினத்தில் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்தவர் விஜயகாந்த்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கும், அன்புமணிக்கும் என்ன சம்பந்தம் என்றால்?.....
சம்பந்தம் இருக்கிறது....


ஒரு எம்.பி.-யாக கூட இல்லாத நிலையில் 2004-ஆம் ஆண்டு ,மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமையப்பெற்ற அமைச்சரவையில் சுகாதாரத்துறை கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார் அன்புமணி.
அதன் பிறகே அவசரம் அவசரமாக தி.மு.க. உதவியுடன் ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட்டார்.


அப்படிப்பட்ட அன்புமணியை எதிர்த்து கொல்லைப்புறம் வழியாக அமைச்சரவையில் நுழைந்தவர் என்று
விஜயகாந்த் கமண்ட் அடித்தார்.

இது போதாதா பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு?
சும்மாவே சினிமாக்காரர்களுக்கு எதிராக போராடும் பா.ம.க-வினர்களை அந்த பேச்சு உசுப்பேற்றியது. விஜயகாந்தை பழிவாங்க வசதியாக கொஞ்ச நாளில் விஜயகாந்த் நடித்த கஜேந்த்ரா படம் வெளியானது.

இழவு காத்த கிளியாக இருந்த பா.ம.க.வினர்களுக்கு அடித்தது யோகம். ஏற்கனவே ரஜினி நடித்த பாபா திரைப்பட பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடி அனுபவம் பெற்றவர்களுக்கு கஜேந்த்ரா படப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடுவது சிரமமாக இருக்கவில்லை.

அப்போது தி.மு.க கூட்டணியில் பா.ம.க -இருந்ததால், தி.மு.க-வும் இந்த விஷயத்தில் அலட்டிக்கொள்ளவில்லை.


இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த விஜயகாந்த்....இனிமேல் நம் படப்பெட்டி ஓடாமல் நம் படம் ஓடவேண்டுமானால் அரசியல் ரீதியாக
நமக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற உத்வேகத்தில் 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள், தான் பிறந்த மண்ணான மதுரையில்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கினார். இதுதான் விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கான முன்கதை சுருக்கம்.

முதலமைச்சர் said...

அதுவரை தி.மு.க-வின் அனுதாபியாக பார்க்கப்பட்ட விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தது தி.மு.க-தலைமையையும் அதிர வைத்தது.
எம்.ஜி.ஆர் பாதையை தனக்கான பாதையாக வகுத்துக்கொண்ட விஜயகாந்த், கருப்பு எம்.ஜி.ஆர் என்ற பெயரோடு எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் இரத்தங்களையும் கவர ஆரம்பித்தார்.
அது அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவையும் கடுப்பேற்றியது.


விஜயகாந்தின் கட்சியை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி, பாக்யராஜின் எம்.ஜி.ஆர்.மக்கள் முன்னேற்ற கழகம், விஜய டி.ராஜேந்தரின் தாயக மறுமலர்ச்சி கழகம் போன்றவற்றோடு ஒப்பிட்டு நகைத்தனர் அரசியல் பார்வையாளர்களும், மற்ற கட்சியினரும். ஆனால், நடந்ததோ வேறு....


கட்சி ஆரம்பித்த ஐந்தே மாதங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வந்தது.

அந்த தேர்தலில் 234- தொகுதிகளிலும் யாருடனும் கூட்டணியில்லாமல் சுயேட்சையாகவே அதிரடியாக வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் இரண்டு தொகுதியில் வேட்பாளர்கள் விலை போய் விட்டதால் மீதமுள்ள 232- தொகுதிகளில் கேப்டனின் படை வீரர்கள் களம் கண்டனர்.

ஆஹா....இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒருவர் வந்துவிட்டார் என்று தமிழகமே நினைத்தது. இப்போது பேசுவது போல் அதிரடியாகவெல்லாம் அந்த தேர்தலில் தி.மு.க-வை தாக்கவில்லை. இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் பிரச்சாரம் செய்தார்.

தி.மு.க.,அண்ணா.தி.மு.க என்று மாறிமாறி ஆட்சியிலமர்த்தி வஞ்சிக்கப்பட்டிருந்த மக்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும்
அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதா மீது வெறுப்பு கொண்டிருந்த மக்களுக்கும் விஜயகாந்தின் வருகை மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது.

இரு கழகங்களுக்கும் மாற்று சக்தியாக விஜயகாந்தை நினைத்து அவரின் பின்னால் அணி திரண்டனர்...

அவர் காட்டிய வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.தேர்தல் முடிவு வந்தது போட்டியிட்ட 232 தொகுதிகளில் விஜயகாந்த் தவிர மீதமுள்ள 231 தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார்கள்.

அதேநேரம் 27,64,223 வாக்குகளுடன் 8.32% சதவிகிதம் பெற்று தனிப்பெரும் சக்தியாக விளங்கி கிண்டலடித்த அரசியல் நோக்கர்களையும்,மற்ற கட்சிகளையும் வாயடைக்க வைத்தது.


அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான வாக்குகள் வாங்கினார் விஜயகாந்த்.

அதன் பிறகு 2009-ஆம் ஆண்டு நடந்த நாடாளு மன்றதேர்தலில் 30,73,479 வாக்குகள் வாங்கி காட்டி தமிழக அரசியலில் தனக்கான இடத்தை தக்கவைத்தார்.

ஆனால், தொடர் தோல்விகளாலும், பண விரயத்தினாலும் சோர்ந்து போயிருந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும், கட்சி தொண்டர்களும் கூட்டணி முடிவை நோக்கி நகர்ந்தார்கள். விஜயகாந்த் மனதையும் கரைத்தார்கள்.

2011-நம் லட்சியம், அதை வெல்வது நிச்சயம் என்ற ஸ்லோகத்துடன் வலம் வந்த ஒரு முதலமைச்சர் வேட்பாளர், வெறும் 41-சீட்டுக்காக அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து விட்டார்.

நாளைய முதல்வர் என்ற கனவில் திரிந்த விஜயகாந்த் இனி ஜெயலலிதா முதல்வராக காவடி தூக்கி காமடி பீஸ் ஆவார்.

ஜெயலலிதா said...

முடிவுக்கு வரும் மூன்றாவது அணி நாடகம்

"அடடே வாப்பா வாசு......ரொம்ப நாளாச்சு பார்த்து? எப்படி இருக்கே....."

"இருக்கேன்பா....அரசியல் கடுமையா சூடு பிடிச்சுருச்சு போல...."

"ஆமாப்பா....ஜெயலலிதா ஏதோ தன்னிச்சையா வேட்பாளரு அறிவிச்சிட்டாங்கன்னு ஒரே ரகளையா இருக்குப்பா....ஏதோ மூணாவது அணி அமைய போகுதாம்...."

"அட நீ வேற...அப்படில்லாம் ஒன்னும் நடக்காது....."

"அப்புறம் எதுக்குப்பா..எல்லாரும் விஜயகாந்த் ஆபீசில கூடுனாங்க?"

"அதுவா அது ஒரு நாடகம்பா...."

"நாடகமா?"

"ஆமாம்....ஜெயலலிதாட்ட கேட்ட தொகுதிய அவங்க ஒதுக்கலியா? மூணாவது அணி அமைச்சா ஓட்டு பிரியும், அதனால ஜெயலலிதாவுக்குத்தான் நட்டம்.அதான் மூணாவது அணின்னு பூச்சாண்டி காட்டினா மிரண்டுருவாங்க.... கேட்ட தொகுதிய கொடுத்துருவாங்கன்னு மிரட்டி பாக்குறாங்க....."

"நான் கூட உண்மையா இருக்குமோன்னு நினைச்சேன்."

"தமிழ்நாட்டுல மூணாவது அணி அமைஞ்சா அது எடுபடாதுன்னு அவங்களுக்கே நல்லா தெரியும். அப்படி அமைஞ்சா அது கலைஞர் ருக்குத்தான் சாதகம்ன்னு தெரியாமலா இருக்கும். நீ வேண்ணா பாரு... நாளைக்கு ஜெயலலிதா நிறைய இடத்துல அண்ணா.தி.மு.க வேட்பாளர வாபஸ் வாங்க சொல்லிருவாங்க..."

"அப்படி மாத்துனா வேட்பாளருங்க அப்செட் ஆகிட மாட்டாங்களா? "

"அத பத்தி என்ன இருக்கு...வேட்பாளர மாத்துறதும் மந்திரிய மாத்துறதும், நிர்வாகிகள மாத்தறதும் ஜெயலலிதாவுக்கு ஒன்னும் புதுசில்லையே ...."

"அப்படி எல்லோரும் சமரசம் ஆகிட்டா....வைகோ கதி...."

"இங்கே அவரப்பத்தி எந்த தலைவரு கவலை படப்போறாரு....எல்லோருக்கும் அவங்க கேட்ட தொகுதி கெடைச்சா சரிதான் "

"பாவம்பா வைகோ"...

"அவர் நிலைமை இப்படி ஆகக்கூடாது.....அவரு நிலைய விட்டு இறங்கி அவருக்கு ஒரு கட்சி இருக்கதையே மறந்துட்டு எந்த நேரமும் அண்ணா தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் போல நடந்துக்கிட்டாரு....இப்ப அவருக்கு ஒரு கட்சி இருக்கதையே ஜெயலலிதாவும் மறந்துட்டாங்க....."

"அதுக்காக இப்படியா....அஞ்சு வருசமா கூடவே இருந்தாரு....இப்படி நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டாங்களே...."

"அதான் ஜெயலலிதா....நாளைக்கு இப்ப கூட்டணி வச்சிருக்க தலைவர்களுக்கும் இதுதான் கதி."

"ஒருவேளை அவரு கூட இருந்த தலைவருங்களெல்லாம் விலகிட்டதால சீட்டு கொடுக்க யோசிச்சிருப்பாங்களோ...."

விஜயகாந்த் said...

எப்போதுமே வைகோவுக்கு தலைவர்களாலே ஒரு பலமும் இல்லை. இவரோட பேச்சு திறமைக்குத்தான் ஒரு கூட்டம் கட்டுண்டு இருக்கு...."

"அது தெரியாமலா இருக்கும் ஜெயலலிதாவுக்கு...."

"அதான் விஜயகாந்த் இருக்காரேன்னு நினைச்சிருக்கலாம். என்னைக்கு திருமங்கலம் இடைதேர்தல் வந்துச்சோ...அப்போதிலிருந்து இந்த அவமானம் தொடருது...."

"இனி அவரு தி.மு.க பக்கமும் போகமுடியாது "

"எப்படி போக முடியும் அங்கேருந்து ஒரே ஒரு சீட்டு பிரச்சினையில இங்கே வந்தவருதானே....இப்போ ஒண்ணுமே கிடைக்காத இடத்துக்கு எப்படி போவாரு...."

"வேறென்ன பண்ணுவாரு "

"எனக்கென்ன தெரியும் அவருக்கு ஆதரவா இருக்க தொகுதியில தனியா நின்னு ஓட்ட பிரிக்கலாம்.....அவருக்கு சீமான் நெடுமாறன்னு தமிழ் ஈழ அதவாளர்கள் அதரவு தரலாம். "

"ஜெயலலிதாவுக்கு எப்போதுமே சாதகமான தொகுதியாசே ஆண்டிப்பட்டி....அப்புறம் எதுக்கு தொகுதி மாறுறாங்க?"

"அதுவா.....எல்லாம் அழகிரி பயம்தான். 2002-ல ஜெயலலிதா போட்டியிட்டப்போ கிடைச்ச வோட்டு வித்தியாசத்தை விட 2006 தேர்தல்ல ரொம்ப கொறஞ்சிருச்சாம்...அப்புறம் 2009 நாடாளுமன்ற தேர்தல்ல அதைவிட ஒட்டு வித்தியாசம் இன்னும் கொறைச்சு போச்சாம்....அதான் இந்த தடவை அழகிரி ஏதும் அதிரடி பண்ணிருவாரோன்னு பிராமின் அதிகம் இருக்க ஸ்ரீரங்கத்துல போட்டியிடுறாங்கலாம்..."

"ஓ..இதுதான் காரணமா? அங்கே தி.மு.க-வுல வெயிட்டான கேண்டிடேட்டா போடலை போலையே"


"ஆனந்துன்னு ஒரு 29 வயசு இளைஞரை நிறுத்தியிருக்காரு கலைஞர்.பாப்போம் யானை காதுல இந்த எறும்பும் புகுதான்னு....."

"கலைஞர் தொகுதி மாறியதுக்கும் பயம்தான் காரணமா?"

"ஏற்கனவே தமிழ்நாட்டுல பல்வேறு தொகுதியில போட்டியிட்டு ஜெயித்த பெருமை கலைஞருக்கு இருக்கு....இப்போ அவரோட சொந்த தொகுதியில நிக்கறார் அவ்வளவுதான்....ஓகேப்பா நான் கிளம்பறேன்...."

"போன தடவை மாதிரி இல்லாமல் அடிக்கடி வாப்பா....."

"அதான் தேர்தல் வந்துடுச்சுல்ல இனி அடிக்கடி வருவேன்....."

"ஏன்பா....பிரச்சாரத்துக்கு வர்ற தலைவருங்க மாதிரியா?"

"அப்படித்தான் வச்சுக்கவே....."

அகங்காரி said...

// இந்த லட்ஷனத்தில் ஜெயலலிதாவை அகங்காரி என்ற முத்திரை குத்த புறப்பட்டு விட்டார்கள் மீடியாக்கள்! //

எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரி நல்லா நடிக்கிறீங்க ?.

அந்த அம்மா இப்போவே இவ்வளவு ஆணவமா இருக்காங்க. முதல்வர் ஆனா எப்படி இருப்பேன்னு ‘ ப்ரிவியூ’ காண்பிச்சிட்டாங்க.

ஆணவ சர்வாதிகார ஆட்சியை விட குடும்ப ஆட்சி நல்லா த் தான் இருக்கு.. என்ன தான் குடும்ப ஆட்சி என்றாலும், அவங்க கிட்ட போய் பேசறது ரொம்ப ஈசி..

அதிமுக விலே இருந்து திமுக போன சேகர்பாபு., அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி இவங்க கிட்டே கேட்டு பாருங்க.

நம்பிக்கை துரோகம், ஆணவம் இரண்டுக்கும் புதிய பெயர் ஜெயலலிதா.. இவர் தமிழ் நாட்டுக்கு மீண்டும் முதல்வரானால், ஆண்டவனே ஆடிப் போய் விடுவார்.....

Anonymous said...

Vijayakanth tried for coalition with Congress, before joining hands with ADMK. There's nothing to blame him. Congress & communists are the biggest loosers in my view. Their problem is they aren't daring as Vijayakanth once was. Congress could have tried for a 3rd front this time, I'm sure lot of small parties(including communists and even BJP) would have supported that move. The move by Congress to stick with DMK is the worst move ever. Congress wouldn't get a more opportune moment than this, with DMK's face tarnished with bribery cases. Inspite of all this, the party has given up it's morality to win a election - what a shame?. I would be happy to call myself a Tamilian if DMK&Congress lost this election. JJ lost b'coz she didn't conjure the govt employees with bonuses, instead she sent them home - which is what we want now.
It's a shame for DMK, everytime it gets it's face tarnished near the election- and this time it's for looting the nation. I would recommend that DMK be added to terrorist organisations list.

Anonymous said...

ப்ரம்மஹத்தி பிடித்திருக்கும் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகவே முடியாது. அப்படி ஆனால் நான் இட்லி வடை படிப்பதை நிறுத்தி விடுகிறேன்

Anonymous said...

இது என்னாங்கடா புதுசு புதுசா கெளப்பறாய்ங்க! தூக்குல தொங்கினது சாதிக் பாட்ஷா இல்லயாமே! யாரோ ஒருத்தர தொங்கவிட்டு ஆசாமி எங்கியோ எஸ்கே....ப்

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws1703112GSPECTRUM.asp

Anonymous said...

News about thala:

http://ibnlive.in.com/news/cbi-to-file-chargesheet-against-karuna-family/146414-37-64.html

Where is R.Gopi?

Anonymous said...

ஜெயாவின் திமிர் அடங்கியது.
விஜயகாந்துக்கும் இடதுசாரிகளுக்கும் அந்த பெருமை சேரும்.

R.Gopi said...

திருக்குவளை தீயசக்தியின் லேசான சிரிப்பு கூட இப்போது காணாமல் போயிருக்குமே!!

ஸ்ரீராம். said...

இந்த மாதிரி பதிவுகளுக்கு அனானியாகவே எல்லோரும் எழுதுவது படிக்கும் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. சொல்வது யாரென்று தெரியாத கருத்தை படிப்பதில் என்ன பயன்?

ராமன் said...

கமெண்ட் அடிக்கிறேன் என்று அவரவர் பாரா பாராவாக பக்கம் பக்கமாக எழுதுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிளாக் என்றால் சுருக்கமாக சுவையாக இருக்க வேண்டும. சவ சவ வள வள என்றிருந்தால் சலிப்புதான்.

தேர்தல் முடிவு பொறுத்த்வரை அவரவர் அபிலாஷை தெரிகிறது. அல்லது அச்சம் புலப் படுகிறது.

அனானியாகச் சொல்வதால் ஒருவரே பலமுறை பலவிதமாக அபிப்பிராயம் சொல்ல வசதிப் படும்.

Anonymous said...

சொல்வது யாரென்பதை விட சொல்லப் படுவது என்ன என்று புரிந்தாலே போதுமே. அனானியாக இருந்தால் என்ன யாரையும் வசை பாடாமல் ஒரு கருத்தைத் தானே முன் வைக்க முயற்சிக்கிறார் ?

Anonymous said...

வீட்டுக்கு ஒரு கிரைண்டர் அல்லது மிக்ஸ்சி -அனைத்து தாய்மார்களும் மகிஷ்சி

Anonymous said...

திமுக அறிக்கை உண்மையான கதாநாயகி தான்.

Anonymous said...

திமுக அறிக்கை உண்மையான கதாநாயகி தான்:
1. தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி. இரண்டில் ஒன்று விருப்பம் போல் வழங்கப்படும்.
2. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரம் மானியம் இனி ரூ.1 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்.
3. தமிழகத்தில் பல்கலைக்கழகமே இல்லாத மாவட்டம் இல்லை என்ற நிலையை எட்டுவோம்.
4. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்

Sri said...

grinder mixix irukkatum.... veetukku oru tv kuduthacha ellarukkum???????????????

ராஜரத்தினம் said...

என் வீட்டு துணி துவக்கும் பெண்மணி (இந்தியாவில்தான்) சொல்கிறார் இந்த முறை கருணாநிதி தோற்பார் என்று. இது இவர் அறிக்கை விட்ட பின்பு நான் கேட்டது.

Anonymous said...

அப்பா ஒரு வாஷிங் மெஷின் கொடுத்திட்டா போச்சு.வேலைக்காரிய வீட்டுக்கு அனுப்பி விடலாம்.