பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 04, 2011

41!
நமது சிறப்பு செய்தியாளரின் நேரடி செய்தி - போயஸ் தோட்டத்தில் இருந்து:

சில மணித் துளிகள் முன்பு தேதிமுக தலைவர் கேப்டன் என்கிற விஜயகாந்த் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ என்ற அம்மாவைச் அம்மா வீயட்டிலேயே சந்தித்தார். (மாமியார் வீடு என்றால்தான் பிரச்சினை. அம்மா வீடு என்பது எப்போதும் சந்தோஷம்தானே). அம்மா வாஞ்சையுடன் வரவேற்றதாகவும், சிறிய லெவல் குசல விசாரிப்புகளுக்குப் பின் அம்மா பெரிய மனசுடன் நாப்பத்தி அஞ்சு குடுத்ததாகவும் உறுதிப் படுத்தப் படாத செய்திகள் கசிந்தது. அம்மாவைவிட தனக்குத் தான் பெரிய மனசு என்று ஊருக்கு உணர்த்த கேப்டன் நாப்பத்தி ஒன்று போறும் என்று சொன்னதைக் கேட்டு அம்மாவின் கண்கள் பணித்ததாம். என்ன இருந்தாலும் பாமகவை விட அதிக இடங்களை வாங்கிய கேப்டன் வாழ்த்துக்கு உரியவர். இதற்கிடையே, இடதும் வலதும் பம்ம்பரம் விளையாடுபவருடன் சேர்ந்து சோகமாக சன் டிவியில் ஜெயா டிவியை முந்தி வந்த ஃபிளாஷ் நியூஸ்-ஐ வேடிக்கை பார்த்துப் பொருமியதாகவும் செய்திகள் வந்துள்ளன.

எது எப்படியோ. எதிரியின் எதிரி உன் நண்பன் என்பார்கள். இன்று எதிரியின் நண்பனும் நண்பன் என்று அம்மா உணர்த்தி இருக்கார்.


விஜயகாந்த(அழகிரியின் நண்பர்) ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது - விஜயகாந்துக்கு 41

23 Comments:

(-!-) said...

:>

(-!-) said...
This comment has been removed by the author.
(-!-) said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

41 ?

Parliamentary constituencies TN 39 + 1 puduhcheri = 40 only..

Suresh said...

எத்தனை தொகுதில நிக்குறாங்கங்கது முக்கியமில்லையே...எத்தனைல வின் பண்ணுறாங்க அப்படிங்கறது தானே முக்கியம்...எப்படினாலும் ஜெயிச்சு புட்டா சரி தான் :)

jaisankar jaganathan said...

கேப்டனுக்கு பெரிய மனசு

ஜோஸ்யதாசன் said...

அம்மாவோட ராசி கூட்டு தொகை 4+5=9. கேப்டனோட ராசி கூட்டு தொகஒ 4+1=5. என்ன பண்றது 50 கேட்டா அம்மா குடுக்க மாட்டாங்களே!

ஜோஸ்யதாசன்

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

கடைசில சோ ராமஸ்வாமியின் கண்ட கனவு நனவாக போகிறது. கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Baski said...

first alliance.. I wish Captain good luck..

Kalimiku Ganapathi said...

ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?

அல்லது

வாழும் காமராசர் பொன் ராதாகிருஷ்ணனா?

என்றால்,

பொன்ராதாவுக்கே வாக்களிப்பார்கள் தமிழர்கள். வாழ்க பாஜக.

ILA(@)இளா said...

30, 40 இடம் வாங்கவா கட்சி நடத்துறேன் - குடிகார(ர்) விஜயகாந்த் சொன்னதுதான். அதான் 41.

ஊத்திக்குடுத்து குறைச்சுப்புட்டாங்களோ?

Roaming Raman said...

//கடைசில சோ ராமஸ்வாமியின் கண்ட கனவு நனவாக போகிறது. கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள்//

இது சோ அவர்கள் மட்டும் சொல்லவில்லை!! ஜெ கூட ஏற்கெனவே திருச்சி அல்லது கோவை கூட்டத்தில் "நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும்-காத்திருங்கள்" என்றார்..
கேப்டன் சொன்னது போல பேயோட்டும் நாளுக்காக காத்திருப்போம்!!
- ரோமிங் ராமன்
visit and comment(நம் நண்பர்)

http://rathnavel-natarajan.blogspot.com/

Anonymous said...

Cong survey: Win in WB, Kerala; Loss in TN, Puducherry; Assam dicey

http://www.rediff.com/news/slide-show/slide-show-1-congress-survey-win-in-wb-kerala-loss-in-tn-assam/20110303.htm

TN: Only 77 out of 234 seats for Cong-DMK tie-up

In Tamil Nadu, however, the situation does not look good for the Congress-DMK combine.

In a House of 234, the Congress-DMK-Pattali Makkal Katchi are pegged to get just 77 seats while Jayalalitha's AIADMK is set to increase their tally and get 152 seats, marking her return as the next chief minister. The Left will get 4 and the BJP 1 seat, according to the survey.

All India Congress Committee General Secretary-in-charge of Tamil Nadu, Ghulam Nabi Azad who was in Chennai on Wednesday night and held meetings with DMK leaders came back on Thursday morning as the DMK was offering only 58 seats and the Congress was insisting on at least 62.

The issue was discussed in the core committee on Thursday evening and sources said it will be sorted out.

Puducherry: Just 6 out of 30 seats for Cong

In Puducherry again the news is not good for the Congress.

Out of the 30 seats in the assembly, the Congress will get 6, the DMK 5 while the AIADMK is slated to get 19 seats.

Clearly the influence of Tamil Nadu is very much there with the AIADMK set to return to power in next-door Puducherry as well.

Sources say the Congress managers are studying the results of the survey and it is likely that some course correction initiatives may be on the cards as the party works to minimise its negatives in the run up to the polls.

Anonymous said...

Admk alliance will come to power on 2011.

Dmk & co will face with memorable Defeat.

Anonymous said...

and they will go to jail.. delhi tihar jai (1, 2 * 3), pune yervada jail, bombay arthur raod jail, anda cell (for karunaa & Fly), pulal jail, paalayamkottai (only for karunaa, with real snakes & hazardous Lizards) are awaiting.

Anonymous said...

@kalimuki ganapathy

அன்பரின் ஆதங்கம் புரிகிறது. பொன்ராசா என்ற பெயரே எத்தனை தமிழர்களுக்குப் பரிச்சயமோ... ஐயா, அப்துல் கலாமின் உண்மையான ஃபாலோயர் நீங்கதான். தொடர்ந்து கனவு காணுங்க.. கீப் இட் அப!

நர்மதன் said...

இதையும் படியுங்க ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்

R.Gopi said...

ஜெ.ஜெ.... விஜயகாந்த் கூட்டணி அமைத்தது ஒரு விதத்தில் நல்லதுதான்.

திருக்குவளை தீயசக்தியை விரட்டியடிக்க குறைந்தபட்சம் முயற்சியாவது நடக்கிறதே என்ற ஒரு சந்தோஷம் மக்களிடம் இருக்கும்....

ந.லோகநாதன் said...

It is all in the Game... May be in next election, Captain will join with MK ...

சீனு said...

//தேதிமுக தலைவர் கேப்டன் என்கிற விஜயகாந்த்//

என்னா குசும்பு உங்களுக்கு... :))

Anonymous said...

பாருங்கோ பாருங்கோ கப்டன் நுனி கதிரைல் இருக்கும் அழகோ தனி அழகு!! . அவர் கைகள் அதை பொத்தும் அழகோ தனி அழகு !!!. கப்டனுக்கு வேண்டும் மிடுக்கு! ***பொத்தி, பின்வாய் முன் வாய் எல்லாம் பொத்தி காலில் விழுந்து வணக்க போகும் அழகோ தனி அழகு!!!! காங்கிரசுக்கு *** அடிக்க கப்டனை அடிச்சார் ஆப்பாக தமிழகத்தின் சாணக்கியர் கருணாநிதி !!!!

Anonymous said...

இப்போது தமிழ்நாட்டில் ஒரு கலாச்சாரம் நிலவி வருகிறது. எந்தக்கட்சி யாருடன் கூட்டணி வைத்தால் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று பேசுவதுதான் அந்தக் கலாச்சாரம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறினார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்பதற்காக உங்களிடம் ஓடோடி வந்த ஆளுங்கட்சியும், ஏற்கனவே ஆண்ட கட்சியும் 5 வருடத்திற்கு உங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

எம்பிக்களுக்கு என்று தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியைக் கூட வாக்களித்த மக்களுக்காக பயன்படுத்தாத பல எம்பிக்கள் இருக்கின்றனர்.

இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணி அமைத்து தங்கள் வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க வேண்டும். பின்னர் அவர்களை அமைச்சர்களாக்கி வசதியாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்களே தவிர மக்களை பற்றி நினைப்பதே இல்லை.

இப்போது தமிழ்நாட்டில் ஒரு கலாச்சாரம் நிலவி வருகிறது. எந்தக்கட்சி யாருடன் கூட்டணி வைத்தால் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று பேசுவதுதான் அந்தக் கலாச்சாரம்.

நம் தலைவர் (விஜயகாந்த்) மாவட்டம் தோறும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள அமைத்துள்ளார். மேலும் லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற திட்டத்தையும் அறிவித்து இதுவரை பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.

இதுபோன்று மக்களுக்கு நல்லது செய்யும் பணியை எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எந்தத் தலைவர்களாவது செய்கிறார்களா?.

ஆகவே வாக்காளர்களே நீங்கள் இந்த முறை வாக்களிக்கும்போது சிந்தித்து வாக்களியுங்கள். தேமுதிக மக்கள் கட்சி. மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.

எங்கள் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள். இந்த தொகுதியை தமிழ்நாட்டில் சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுகிறோம்

Anonymous said...

உண்மையிலேயே பாவம் நம்ம வைகோ!
--------
அதிமுக கூட்டணியில் விஜய்காந்த் நுழைந்து 41 தொகுதிகளைப் பெற்றுவிட்ட நிலையில் மதிமுகவுக்கு 17 தொகுதிகள் தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

அதிமுக கூட்டணியி்ல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 35 இடங்களில் வைகோவின் மதிமுக போட்டியி்ட்டது. அந்தக் கூட்டணி அமைவதற்கு முதல் நாள் வரை திமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. மதிமுகவுக்கு 27 இடங்கள் கொடுப்பதாக திமுக கூற, அதை ஏற்க மறுத்து திடீரென அதிமுக கூட்டணிக்கு மாறினார் வைகோ.

இதையடுத்து அவருக்கு 35 இடங்கள் தந்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆனால், அதில் 4ல் மட்டுமே வென்று ஜெயலலிதா கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார் வைகோ.

இந் நிலையில் அடுத்து வந்த மக்களவைத் தேர்தல், இப்போது நடக்கும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கு வலை விரித்துப் பார்த்தார் ஜெயலலிதா. காங்கிரசுடன் கூட்டணி அமையப் போகிறது என்று ஜெயலலிதா ஆதரவு பத்திரிக்கைகளிலும் செய்திகள் போட்டனர். ஆனால், அப்படி ஒன்று நடக்கவி்ல்லை.

இதையடுத்து யாரை குடிகாரர் என்று சொன்னாரோ அதே விஜய்காந்துடன் கூட்டணிக்கு ஜெயலலிதா முயன்றார். இரு தரப்பிலும் கடும் இழுபறிக்குப் பின்னர் யாரை ஊத்திக் கொடுத்தவர் என்று சொன்னாரோ அவருடனே கூட்டணி அமைத்தார் விஜய்காந்த். இதற்கு ஒரு பத்திரிக்கையாளர் தான் மிகவும் முயற்சி எடுத்தார்.

இப்போது விஜய்காந்த்தின் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் தரப்பட்டுவிட்ட நிலையில் எல்லோராலும் மிகவும் பாவமாகப் பார்க்கப்படுகிறார் வைகோ. தன்னை பொடாவில் கைது செய்தவர் என்றாலும், புலிகளின் தீவிரமான எதிர்ப்பாளர் என்றாலும் கூட திமுகவின் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் அதிமுக கூட்டணியிலேயே வைகோ தொடர வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.

மதிமுகவை ஒழித்துக் கட்ட திமுக தீவிரமாக உள்ள நிலையில் வைகோவுக்கு ஜெயலலிதாவை விட்டால் வேறு வழியும் இல்லை.

இப்போது அதிமுக கூட்டணியில் 15 கட்சிகள் உள்ளன. இதில் மனித நேய மக்கள் கட்சிக்கு 3, புதிய தமிழகம் கட்சிக்கு 2, சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு 1 என சின்ன சின்ன கட்சிகள் சிலவற்றுக்கும் தேமுதிகவுக்கும் ஒதுக்கப்பட்டது தவிர முக்கிய கட்சிகளான மதிமுக, இடதுசாரிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு ஏற்ற கூட்டுத் தொகையான 9 வரும் வகையில் அதிமுக 144 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. மிச்சமுள்ள இடங்களி்ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் மட்டுமே தர அதிமுக முடிவு செய்துள்ளது. நாளை மதிமுக, இடதுசாரிகளுடன் அதிமுக தொகுதி உடன்பாட்டை இறுதி செய்யலாம் என்று தெரிகிறது. இது தவிர பார்வர்டு ப்ளாக் 1, சரத்குமார் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, கொங்கு கட்சியின் ஒரு பிரிவுக்கு என சில இடங்கள் ஒதுக்க வேண்டியுள்ளது.

இதனால் மதிமுகவுக்கு அதிகபட்சமே 17 இடங்கள் தான் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதில் சரத்குமாரும் கார்த்திக்கும் ஓரிரு இடங்களுக்கு எல்லாம் நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இடங்கள் போதவில்லை வைகோவோ, கார்த்திக்கோ, சரத்குமாரோ, இடதுசாரிகளோ முரண்டு பிடித்தால் விஜய்காந்த் உள்ள தைரியத்தில் அவர்களை வெட்டிவிடவும் அதிமுக தயங்காது என்கிறார்கள்.

இதனால் கொடுப்பதை வாங்கிக் கொண்டு போக வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தான் சமீபத்தில் நடந்த தனது கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய வைகோ, நிலைமை மாறிவிட்டது. நாமும் அதற்கேற்ப மாறிக் கொள்ள வேண்டும் என்று கட்சியினருக்கு பொடி வைத்தார்.

கடந்த ஒரு மாதமாக அதிமுகவுடன் நடத்திய தொகுதி்ப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் மதிமுக 36 இடங்கள் கோரி வந்தது. அதாவது கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட ஒரு சீட் அதிகம் வேண்டும் என்று கோரியது.

மதிமுகவுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் சீட் தர முடியும் என்று ஆரம்பித்த அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக 17க்கு வந்துள்ளது. ஆனால், 36 இல்லாவிட்டாலும் பரவாயில்லை 27 இடங்களாவது வேண்டும் என்று வைகோ கோரி வருகிறார். ஆனால், கடந்த தேர்தலில் தரப்பட்டதில் பாதியைத் தான் இம்முறை அதிமுக தரவுள்ளது. மிக அதிகபட்சம் என்றால் 20 சீட் தான் என்கிறார்கள்.

உண்மையிலேயே பாவம் நம்ம வைகோ!