பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 18, 2011

நாளைய கிரிக்கெட் - உப.வே.ஸ்ரீ. கி.ஆ.இ.அனானி

முன்குறிப்பு : மன/உடல் ரீதியாக பலகீனமான இந்திய ரசிகர்கள் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்).
உலக கோப்பை கால் இறுதிக்கு முன்னேறும் அணிகள் என்னவென்று A க்ரூபில் முடிவாகி விட்டது. ஆனால் B பிரிவில் ஜோசியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஆண்டவன் சித்தம் போல. அதனால் இந்தப் பதிவு.

உலகக் கோப்பையின் அடுத்த கட்டத்திற்குப் போகும் அணிகளை முடிவு செய்யும் இந்தப் பதிவு எழுதும் போது ராகு காலமோ, குளிகனோ, எமகண்டமோ இல்லை. எழுதுபவருக்கும் ஏழரை இல்லை. இருந்தாலும், கணிப்புகள் அப்படி இப்படி மாறலாம். அதற்காக பின்னூட்டத்தில் இட்லியும் பதிவு அனுப்பியவரையும் திட்டுவது கூடாது. சரியா? மேலே போகலாம்.

இந்திய அணியின் ஆட்டத்தை ஜோசியம் பார்ப்பது தவறு. அதிலும் தவறான ஜோசியம் பார்ப்பது மிகத் தவறு. அந்தத் தவறைப் பண்ணாமல் வேறு ஒரு ஆட்டத்தை கணிப்போம் என்று சோழி போட்டுப் பார்த்த பின் முடிவு செய்தேன். நாளை மிர்பூரில் நடக்க இருக்கும் ஆட்டம் முக்கியமானது என்பதால் அதை எடுத்தேன்.

வெள்ளி போய் சனி ஒழிந்தால்தான் சூரியன் வருவான் என்று ஒருவர் சொல்லி இருக்காரு. சனியன்று சந்திரன் பூமிக்குப் பக்கத்தில் வரானாம். ஒரு வேலை இந்த மேட்ச்சை கிட்ட இருந்து பாக்கலாம் என்றுதானோ என்னவோ. சந்திரன் புத்திகாரகன். அன்று சதயம் பூரட்டாதியில் பொறந்தவனுக்கு எல்லாம் சந்திராஷ்டமம் என்று எனக்குத் தெரிந்தாலும் இவனுக்கெல்லாம் அந்த நக்ஷத்திரம் என்று எனக்குத் தெரியாது. பௌர்ணமி என்பதால் நிறைய பௌன்சர்கள் போடப் படலாம். ஆட்டம் எப்படிப் போனாலும், பங்களாதேஷ் ஜெயிக்கவே வாய்ப்புகள் அதிகம். (50.001% பங்களாதேஷ்:49.999% சவுத் ஆப்பிரிக்கா). இந்த ஆட்டம் மேற்கூறியவாறு முடிவது ஞாயிறு அன்று நடக்கும் ஆட்டத்தில் ஆடுபவர்களை என்ட்ரோகொயனால் வாங்க வைக்கும். அப்படி சாப்பிட்டாலும், அன்று பிரதமை என்பதால், ஜாதக ரீதியாக சுமாரான அணி தோற்க வேண்டும் என்பது ஜோசிய விதி. நேற்று இந்தியர்கள் கருப்பு என்பதால் நிறவெறி என்று ஒரு டிவியில் கூவினார்கள். ஆகவே, கருப்பு இந்தியர்கள் ஜெயிக்க இந்தியர்கள் சப்போர்ட் செய்ய வேண்டும். ஜெயிப்பார்கள் என்று கட்டம் சொல்கிறது. இதன் மூலம், நம்மப் பல காலம் அடிமையாய் வைத்து இருந்த வெள்ளக்காரங்களுக்கும் மறைமுக ஆப்பு அடிக்கப்படும்.

- ஜோதிகா ரத்னா உப.வே.ஸ்ரீ. கி.ஆ.இ

மேல சொன்னது பலிச்சா, இனி வரும் நாட்களில் நியூஸ் பேர்ப்பரில் 1000 ரூபாய் நோட்டு வரலாம், ட்விட்டரில் மொக்கை போடாமல் எல்லாரும் பொழப்பைப் பாக்கலாம். நாடு முன்னேறும் என்று நம்பலாம்.

9 Comments:

(-!-) said...

:>

ராம்சுரேஷ் said...

/எழுதுபவருக்கும் ஏழரை இல்லை. /

இந்த வரி ஒன்று போதும் - இந்தப்பதிவை நிராகரிக்க.

ஏழரை இல்லாமல் யாராவது எழுதுவார்களா?

அதுவும்
.
.
.
.
.
.
.
.
.
இட்லிவடையில்?

Anonymous said...

இ.வ

ஒருத்தர ஒழிச்சு கட்டியாச்சு. இப்ப அடுத்த ஜோசியரை தீர்த்து கட்ட முயற்சி. வாழ்க வாழ்க பகுத்தறிவு பாசறையே! வளர்க உங்கள் ஜோஸிய ஸ்ரார்த்தம்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நம்ம ஆட்டம் என்னிக்குமே,
"இவன் அவனை ஜெயிச்சு,
நாம இத்தனை ரன் எடுத்து
அவனை இத்தனை ரன்னுக்குள்ள அவுட் பண்ணிட்டோம்னா
நாம அடுத்த ரவுண்டு போகலாம்"

இப்படிதான இருக்கும்? இதிலென்ன அதிசயம் இருக்கு?

ரிஷபன்Meena said...

(50.001% பங்களாதேஷ்:49.999% சவுத் ஆப்பிரிக்கா).

புது சோதிடர் என்ன தான் முன் ஜாக்கிரதையா இருந்தாலும், அவருக்கு இருக்கும் ”ஜென்ம” சனி “டிரா” ஆனாலும் ஆகலாம் என்றும் சொல்லவிடாமல் செய்து விட்டது.

R.Gopi said...

உப.வே.ஸ்ரீ.கி.ஆ.இ.அனானி

அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்...

என்னாச்சு, இந்த தடவை தேர்தல் அனாலிஸிஸ் களைக்கட்டலியே இன்னும்...

IdlyVadai said...

//என்னாச்சு, இந்த தடவை தேர்தல் அனாலிஸிஸ் களைக்கட்டலியே இன்னும்...//

முதல் அனாலிஸிஸ் ஸ்ரீரங்கத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். ஸ்ரீரங்கம் நிருபர் கொஞ்சம் பிஸி இன்று வந்துவிடும் பார்க்கலாம்.

kggouthaman said...

பங்களாதேஷ் படுத்துடுச்சு. பெருங்குளமே பரவாயில்லை - ஐ பி எல் உட்பட பலவற்றில் சரியாகக் கணித்தார்.

R.Gopi said...

//IdlyVadai said...
//என்னாச்சு, இந்த தடவை தேர்தல் அனாலிஸிஸ் களைக்கட்டலியே இன்னும்...//

முதல் அனாலிஸிஸ் ஸ்ரீரங்கத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். ஸ்ரீரங்கம் நிருபர் கொஞ்சம் பிஸி இன்று வந்துவிடும் பார்க்கலாம்.//

********

வாவ்.... பதிலளித்தமைக்கு நன்றி...

முதலில் ஸ்ரீரங்கத்தில் இருந்தா, அப்படின்னா, முதல் கச்சேரியே நல்லா களைகட்டும்...