பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 11, 2011

எட்டு போடாத கமர்ஷியல் பைலட்

நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, பணத்தைக் கொட்டி விமானத்தில் பறக்கிறோம். ஆனால் அவர்கள் நமது நேரத்தை கோணலாக்கி, இன்னும் மேலே அனுப்பி விடுவார்கள் போலிருக்கிறது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவில், உள்நாட்டு விமான சேவையை சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அதில் பெண் விமானியாகப் பணிபுரிபவர் பர்மிந்தர் கெளர் குலாட்டி. சென்ற ஆண்டு இவர் கோவாவில் விமானத்தைத் தரையிறக்கும் போது, ரியர் வீலில் (Rear Wheels) லாண்டிங் செய்யாமல் நோஸ் வீலில் (Nose Wheel, முன்புறச் சக்கரங்கள்) லாண்ட் செய்து, பயணிகளை திகிலில் ஆழ்த்தியுள்ளார். சுமார் 160 பயணிகளின் உயிர்களுடன் விளையாடியுள்ளார். இதன்பிறகு இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் முடிவு மிகவும் அதிர்ச்சிகரமானது. DGCA நடத்தும் கமர்ஷியல் பைலட் லைஸன்ஸ் பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து, இவர் லைஸன்ஸ் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் செளஹான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி, கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து வாழ்பவர்.


விஷயம் இத்தோடு முடிந்து விடவில்லை. மேலும் விசாரணையில், இதுபோன்ற போலி பைலட்டுகள் பலர் இருப்பது அம்பலமாகி வருகிறது. வேடிக்கையாக இதில் பலர் ஒரே பாட்சில் லைஸன்ஸ் பெற்றவர்கள். ஆக மதிப்பெண் சான்றிதழ் மோசடி ஒரே இடத்திலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இன்னும் பலர் கைது செய்யப்படலாமென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக டூவீலர் லைஸன்ஸ் பெறுவதற்குத்தான் கையூட்டு கொடுத்து, எட்டு போடாமல் பெறுவது வழக்கம். விபத்தானாலும், அதிகபட்சம் ஓரிரு உயிர்ச்சேதங்களோடு முடியும். அப்படி லைஸன்ஸ் வாங்கும் நாம் இவர்களை பற்றி பேசலாமா என்பது ஒரு கேள்வி.
எப்படி இருந்தாலும் அதுவே சட்டவிரோதாம் என்ற நிலையில், பைலட் லைஸன்ஸ் பெறுவதில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்ததிருபபது விமானப் பயணிகளிடையே பெரும் திகிலை ஏற்படுத்தியுள்ளது. வெறும் பைலட்டுகள் மட்டுமே இந்த முறைகேட்டிற்க்குக் காரணமாக இருக்க முடியாது. DGCA வில் உள்ளவர்கள் உதவியில்லாமல் இது சாத்தியமே அல்ல! இந்த நேர்மையாளருடைய அரசாங்கத்தில் இந்த உண்மை மட்டுமா வெளிவரப்போகிறது? இதுவும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சமாதி கட்டப்படும் என எதிர்பார்ப்போம். பயணிகள் உயிரின் மதிப்பை விட, ஷரத் பவாரினுடைய கூட்டணி இன்னும் காஸ்ட்லியானது.
- யதிராஜ்

அடுத்த முறை விமான பயணத்தின் போது உங்கள் விமானம் எட்டு மாதிரி போனால் நிச்சயம் ஓட்டுபவர் எட்டு போடாதவர். கடைசியாக ஒரு முறை விமான பணிப்பெண்ணை பார்த்துவிட்டு கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

Moral : எட்டு போடாதவர் ஓட்டினால் உங்களுக்கு ஏழரை
11 Comments:

nagaraj said...

எட்டு போடாதவர் ஓட்டினால் உங்களுக்கு ஏழரை !

மஞ்சள் கமெண்ட் சூப்பர்.

Roaming Raman said...

போலி மருத்துவர்,போலி மாத்திரை, போலிச் சான்றிதழ்,போலி நீதி மன்றங்கள், போலி பிரதமர்..(சாரி.. ஒரு flow வில் வந்து விட்டது...) போலி பைலட் எல்லாம் வந்தாச்சு.. நான் ஒரு போலி இட்லிவடை வலைப்பூ தொடங்கவா?..

--ரோமிங் ராமன்

kggouthaman said...

அடக் கடவுளே! இப்படி எல்லாம் கூடவா நடக்குது நம்ம நாட்டுல!

Rao said...

IV,
Manjan Comment Nach!

மஞ்சள் ஜட்டி said...

இ.வ., நன்றி....என் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த பதிவை வெளியிட்டமைக்கு...பொதுவாகவே விமானத்தை 5 டிகிரி க்குள் மேல்நோக்கி பின்புற சக்கரங்களால் "land" செய்ய வேண்டும் என்பது சர்வ தேச விதி.. விமானத்தின் முன்புற சக்கரங்கள் இறங்கும் போதுள்ள அதிர்வை தாங்கும்படி டிசைன் செய்யப்பட்டவை அல்ல.. இது போல "திருட்டு" பைலட்டுகள் செய்வதால் பாதிப்பு பயணிகளுக்கே... மேலும் அதிர்ச்சியூட்டும் செய்தி , பைலட்டுகள் முட்ட குடித்து விட்டு கடமைக்கு வருவது.. 80% ஜெட் ஏர்வேஸ், 12% இண்டிகோ மற்றும் மீதம் மற்ற விமான கம்பெனிகள்...இதுவும் கண்டறியப்பட்டுள்ளது...இந்திய விமான கழகமான DGCA என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று இதுவரை தெரியவில்லை...நான்கு ஆண்டுகளாக இட்லிவடை வாசகன் என்ற முறையில், சக வாசகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு...

- இவண் எம்.ஜே என்ற மஞ்சள் ஜட்டி....

Times of India said...

Air travellers would do well to say a little prayer before taking a flight. Pilots faking flying hours was bad enough, but now it turns out there's a reasonable chance of the pilot turning up drunk for duty. And getting away with it.

Between January 2009 and November 2010, as many as 57 drunk pilots were detected in random pre-flight medical tests – that is two tipsy pilots every month. Of these, only 11 lost their jobs for endangering passengers; the rest got away with mild punishments including being grounded for up to three months and a pay cut for some time.

The country's largest airline, Jet-JetLite, led the pack with as many as 23 drunk pilots, none of whom was dismissed, according to a detailed statement by aviation minister Vayalar Ravi in the Rajya Sabha on Thursday. The ranking of airlines according to number of pilots caught drunk, in fact, almost mirrored the market share hierarchy. Market leader Jet was followed by IndiGo (11), Kingfisher (8), SpiceJet (7) and Air India, including IA, AI, AI Express and Alliance Air, (6) and GoAir (2).

Jet, AI and GoAir did not terminate the service of any drunk pilot, according to the list given in Parliament though some kind of action was taken. IndiGo and SpiceJet sacked four pilots each, while Kingfisher sacked three. The rest got away with lesser punishment.

Given the weak and divergent action taken by airlines, Directorate General of Civil Aviation (DGCA) had late last year ruled that pilots would have to be compulsorily grounded for three months when caught the first time. If they reported drunk for duty a second time, they would lose the commercial flying licence forever. But, the seriousness of the DGCA in cracking down on drunken flying is not reflected by the carriers.

With the rule coming into effect, unsurprisingly, airlines reported that no pilots were found drunk in pre-flight medical tests conducted in the Yuletide month of December in 2010, when maximum such cases were detected in the past. The new rule had come into effect by then.

Before this much-required change in rules, it was up to airlines to ground pilots for whatever period they deemed fit as the matter didn't invite any regulatory action. No record was legally required to be kept of how many times the same pilot had reported drunk for duty.

Dr.Venkatesh Raj said...

- Update

DGCA is learnt to have started the process by first looking into the papers of those who the 1,700-odd pilots with desi airlines who have become commanders by claiming to have passed the mandatory airline transport pilot licence (ATPL) exam conducted by it. All the three cases detected so far have been of fake commanders.

Anonymous said...

வர வர இட்லிவடையோட கூத்து பெரிய கூத்தா இருக்குது,,,,,,,,,

Anonymous said...

இந்தியாவின் மானம் (அப்படி ஒன்று இருந்தால்) கப்பலேற்றினால் மெதுவாகப் போகுமோ என்னவோன்னு விமானமேத்தியிருக்காங்க. இதுக்குப் போயி. போய் எல்லாரும் கிரிக்கெட் பாருங்கப்பா.

ரிஷபன்Meena said...

அட்டகாசமான மஞ்சள் கமெண்ட் -ஐ “போலி பிரதமர்” ஓவர் டேக் பன்னுது.

வஜ்ரா said...

லஞ்சம் கொடுத்து டூ வீலர், 4 வீலர் லைசன்ஸ் வாங்குவதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கும் கூட்டத்துக்கு லஞ்சம் கொடுத்து விமான ஓட்டுனர் லைசன்ஸ் வாங்கினால் மட்டும் வலிக்குதோ ?

Let he who is with out sin cast the first stone.