பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 06, 2011

திமுக - காங்கிரஸ் இத்தோடு கோவிந்தா? - பத்ரி

அஇஅதிமுக - தேமுதிக கூட்டணி ஏற்படும்வரை காங்கிரஸ் வேறு சில யோசனைகளை மனத்தில் வைத்திருந்திருக்கலாம். திமுகவை நெருக்குவது. திமுக உடனபடாவிட்டால், தேமுதிகவுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு மும்முனைப் போட்டியை ஏற்படுத்துவது. அப்படித்தான் விஷயம் தெரிந்த சிலர் பேசிக்கொண்டனர்.

ஆனால் ஜெயலலிதா சட்டென்று தேமுதிக விஜயகாந்துடன் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டுவிட்டார். இனி அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, காங்கிரஸுடன் தேமுதிக கூட்டணி ஏற்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லை.

உடனடியாக காங்கிரஸும் திமுகவும் சமரசம் செய்துகொண்டு இடப் பங்கீட்டை முடித்துக்கொண்டிருக்கவேண்டும். அதன்பின் யாருக்கு எந்தத் தொகுதி என்ற சண்டை வேறு உள்ளது. ஆனால் திமுக-காங்கிரஸ் உடன்படிக்கை ஏற்படவில்லை என்றவுடனேயே பிரச்னை வேறு ஏதோ என்று தோன்றிவிட்டது. என்ன பிரச்னை என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை.

முதலில் காங்கிரஸுடன் திமுக நடத்திய நெகோசியேஷனே தவறு. காங்கிரஸ் 90 சீட் என்றெல்லாம் கேட்டபோது அவர்களுடன் பேசியிருக்கவே கூடாது. 30-40-க்கு மேல் உனக்கு சக்தியே கிடையாது என்று சொல்லியிருக்கவேண்டும். ஆனால் திமுக ஏகப்பட்ட சிக்கலில் இருந்த காரணமோ, வேறு என்னவோ, காங்கிரஸை அநியாயத்துக்கு மதித்து தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததில்தான் சிக்கலே. 90-லிருந்து 60-க்கு இறங்கி வந்து காங்கிரஸ் அங்காவது முடித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் 63, ஆட்சியில் பங்கு, தங்களுக்கு வேண்டிய தொகுதிகள் என்பதில் முரட்டுப் பிடிவாதம் காட்டியுள்ளது காங்கிரஸ்.

உண்மையில் காங்கிரஸின் கேம்பிளான்தான் என்ன?

தன்னிடம் மாபெரும் சக்தி உள்ளது என்று காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிட்டால், பிகாரில் நடந்ததைவிட மோசமான முடிவையே அடையும் காங்கிரஸ்.

ராகுல் காந்தி இரண்டு மூன்று முறை ஹெலிகாப்டர் டூர் வந்துவிட்டுப் போனதால் காங்கிரஸ் வலுவடைந்துள்ளது என்று காங்கிரஸ்காரர்கள் நினைத்தால் அதைவிடக் கோமாளித்தனம் வேறு எதுவாகவும் இருக்கமுடியாது.

திமுகவை மிகவும் நெருக்கி அதன்மூலம் லாபம் சம்பாதிக்க காங்கிரஸ் நினைத்தால், விளைவு தேர்தல் முடிவுகளில் தெரியவரும். திமுக வலுவான தொண்டர்களைக் கொண்ட கட்சி. அவர்களுக்கு காங்கிரஸ்மீது எந்த மரியாதையும் கிடையாது. தலைமைக்கு மட்டும்தான் காங்கிரஸ்மீது காதல். (காங்கிரஸ் கொடுக்கும் அமைச்சர் பதவிகள்மீது ஆசை.) எனவே நாளை ஒரு பேட்ச்-அப் நடந்தாலும் திமுக தொண்டன் விரும்பி காங்கிரஸுக்காக வேலை செய்யமாட்டான். அந்த வேலை நடக்காவிட்டால் காங்கிரஸ் ஜெயிப்பது கடினம்.

இரண்டு சினாரியோக்களை மட்டும் பார்ப்போம்:

1. காங்கிரஸ் தனித்து விடப்படும். அஇஅதிமுக-தேமுதிக-கம்யூனிஸ்ட்-மதிமுக கூட்டணி, திமுக-பாமக-விசி கூட்டணி, காங்கிரஸ் தனி, பாஜக தனி(!): விளைவு அஇஅதிமுக கூட்டணிக்கு நிச்சயமான வெற்றி.

ஜெயித்தவுடன், அஇஅதிமுக, காங்கிரஸ் கூட்டணியில் மத்தியில் சேர்ந்துகொள்ளும். சில அமைச்சர் பதவிகளைப் பெற்று திமுகவைக் கதறடிக்க முடியுமா என்று பார்க்கும். காங்கிரஸின் சில பல ரகசியங்கள் திமுகவின் கையில் சிக்கியிருந்தால் ஒழிய, திமுகவுக்கு ஹோப் கிடையாது.

2. திமுக-காங்கிரஸ் ஏதோ ஓர் விதத்தில் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். ஆனால் அடிமட்டத் தொண்டர்கள் வெறுப்பில் இருப்பதால், உள்ளடி வேலைகள் காரணமாக திமுக அணி தோற்கும். அஇஅதிமுக அணி வெற்றிபெறும்.

இந்நிலையில் ஒருவேளை காங்கிரஸ் திமுகவைக் கைவிடாமல் இருக்கலாம். மாறாக, திமுகவின் சிறகுகளை வெட்டி, உள்ள மினிஸ்டர் பதவிகளை எல்லாம் குறைக்கலாம். முக்கியமாக அழகிரியை வெட்டலாம்.

எப்படி இருந்தாலும், கருணாநிதிக்கு முதல்வர் பதவி இதுதான் கடைசி முறை என்று தோன்றுகிறது.

முதல் படம் கருப்பு வெள்ளை, அடுத்த படம் கலர்(புதிய காப்பி)

33 Comments:

(-!-) said...

நபநப. :>

R. Jagannathan said...

It seems that Congress has got 234 seats as desired by Ilangovan! Now all the factions can have enough umber of constituencies and start searching for candidates and voters in their favour! It is funny that no one believes DMK threat is serious and expect a patch up. MK could have given a deadline to Congress to accept 60 seats and left it to Congress to do the blinking. - R. J.

Anonymous said...

Congress should not budge. DMK is on a sticky wicket. Congress should hold its postition in this nerve wrecking game. MK is testing congress resolve. Congress does not have anything to loose except some prestige in TN . If DMK does not accept it has to face lots of losses.

But i dont know if congress has strong leadership to maintain its stance. It looks like it will not hold its nerve and definitely would succumb.

Anonymous said...

இப்படியே அரசியல் சாணக்கியத்தனம்,சாணக்கியத்தனம் னு உசுப்பேற்றியே நடு தெருவுக்கு கொண்டு வந்து விட்டுட்டீங்களே ...

Anonymous said...

Hello... wait and see.. India Congress will accept 60 Seats.. and tell the media as if they got all their so called chosen seats...

But, it will be a hung assembly. As usual Ramdass will switch over if AIADMK has highest (single largest party) No of Seats.

DMK has enough money and media power. And also lot of allakais (bloggers)... So, they will get atleast 80 seats.

Jayalalitha should try to keep MDMK and Communist with her by giving their due share.

As usual Government employees will cast their vote infavour of DMK...


Lot of horse tradition will take place..

நமார் said...

அட....இட்லிவடை., ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷலிஸ்ட் பத்ரிக்கு போட்டியாக இன்னுமொருவரை அதே பத்ரி என்ற பெயரில் ஒரு கண்டு பிடித்துள்ளது!! இவர் தொடர்ந்து இட்லிவடையில் தி மு க மற்றும் காங்கிரசுக்கு எதிராக எழுதுவார்... யாரும் குழம்ப வேண்டாம் ... இது வேற பத்ரி ... வேற பத்ரி... ஆமா சொல்லிப்புட்டேன்..யாராவது வரப்போகும் ஆட்சிக்கு இவர் ஜால்ரா அடிப்பதால், அதே பத்ரி என்று குழம்ப வேண்டாம்!!

jaisankar jaganathan said...

அது என்ன இரண்டு பாஸிபிலிட்டியிலும் திமுக தோற்க்கும் என்று எழுதியுள்ளீர்கள்

இந்த தடவை திமுக தான் ஜெயிக்கும்.

SAN said...

IV,
Surprising!!! Badri writing against DMK?Is it going to snow in chennai????Unbelievable etc. etc. etc. .......... and fill in the balnks

Anonymous said...

//எப்படி இருந்தாலும், கருணாநிதிக்கு முதல்வர் பதவி இதுதான் கடைசி முறை என்று தோன்றுகிறது.//

I hope and pray

senthils said...

idlyvadai

ninaipputhaan pozhappa kedukkuthu.

paapung gala may 13
AAPPUTHAAN.

Anonymous said...

லேட்டஸ்ட் நியூஸ்:

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல இடங்களிலும் ஏன் உலகின் பல இடங்களிலும் பக்தர்களையும், தனது வார வழிபாட்டு மன்றத்தையும் வைத்திருக்கும் ஒரு ’சாமியாரின்’ ஆன்மீக அமைப்பு பகிரங்கமாக திமுகவுக்கு ஆதரவு தர இருக்கிறது. ’அம்மா’ சொன்னா பிள்ளைங்க கேட்டுத்தானே ஆகணும், அடங்கொக்கமக்கா...எப்படியெல்லாம் காய் நகர்த்துறாங்க பாருங்கடா....

geeyar said...

தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டு. இது தேர்தல் கூட்டு அல்ல. 'தமிழகத்தை விட்டு விரைவில் வெளியேறுவதற்காக.90 சதவீதம் காலியான பாஜகவை விரைவில் முந்திச் செல்வோம். இதுவே லேட்', என்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். தே___கக்ள் களத்தில் இறங்கி வேலை செய்யத் தெரியாது. பயணம் செய்ய எவன் தோளாவது வேண்டும். இதுல பேரம் வேண்டிக்கிடக்கிறது.

திமுக அமைச்சர் பதவிக்கு பேரம் பேசியது அவர்களிடம் எம்.பிக்கள் இருந்ததால் பேரம் பேசினார்கள். உங்களிடம் என்ன மயிர் இருக்குன்னு 50,55,60,63............234 னு அலையறீங்க. தில் இருந்தா தனியா நின்னு ஒரு தொகுதியிலாவது டெபாசிட் வாங்கிடுங்க பார்க்கலாம்.

உண்மை என்னனா காங்கிரஸ் வெளியேறினால் சோர்ந்து போய் இருக்கும் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள். 'கொல பண்றாங்கப்பா' னு சொல்ல வைச்சாலும் அது கூட ஒட்டுகளாக மாறும்.

காங்கிரஸ்ன் அழிவை எதிர்நோக்கும் திமுக தொண்டர்கள் பல கோடி.

Anonymous said...

அடுத்த முதல்வர் கருணாநிதி தான் சந்தேகம் வேண்டாம்.
காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஒன்றும் பெரிய கட்சி அல்ல. மற்றும் விஜயகாந்த் கட்சி உழல் ஒழிப்பு கோஷம் போடும் கட்சி. அது ஜெயா உடன் சேர்ந்ததால் அதன் கோஷம் பொய்யாகி விட்டது. பத்திரிகைகள் அனைத்தும் ஜெயா மாயையில் உள்ளன. அவைகளுக்கு பாமர மக்களின் மன நிலை தெரிவில்லை. படித்த மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். பாமர மக்கள் கருணாநிதியை அரியணையில் அமர வைப்பார்கள்.தேர்தல் முடிவு வந்த பின்னர் இதை உணர்வீர்கள்---தஞ்சாவூர் முனியாண்டி.

Anonymous said...

அதான் திரு.குலம் நபிஆசாத் சென்னைக்கு சாயந்திரம் வந்து மறுபடியும் ஒண்ணு சேர போறாங்களே..............

Anonymous said...

தி மு க எடுத்த முடிவு பல மாதங்களாக பரிசீலித்து பிரிவதற்கு மக்கள் நம்பும் காரணங்களை ஏற்படுத்தி சரியான நேரத்தில் எடுத்த முடிவு. இப்போது ராஜா விட பெரிய காரணம் கிடைத்து விட்டது. என்னதான் பத்திரிகைகள் எழுதினாலும் ஒரு லட்சம் கோடியை உழல் செய்து சம்பாரித்து விட்டார்கள் என்பதை யாரும் நம்ப வில்லை. அவளவு பெரிய தொகை ஜெயாவின் ( வளர்ப்பு மகன்) ஆடம்பர திருமண சடங்கு, கிலோ கணக்கில் போட்டுக்கொண்ட நகைகளை மக்கள் உணர்ந்தது போல மக்கள் உணர போவதில்லை. அரசாங்கத்துக்கு இழப்பு என்பது பல ரூபங்களில் உள்ளது. பணக்காரர்கள் பயன்படுத்தும் காஸ், பெட்ரோல்,வேலை பார்பவர்கள் தினமும் பயன் படுத்தும் பஸ் கட்டணம் மானியம் உதாரணமாகும்.தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கு பெட்ரோல் வாங்க பணம் இல்லை. பெட்ரோல் கம்பனிகளுக்கு எண்ணை வாங்க பணம் இல்லை. எல்லாம் அரசாங்க வருமான இழப்பு தான். அவைகள் ஏற்படுத்திய வசதியை விட மொபைல் போன் ஏற்படுத்திய வசதி அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. இதனால் பயணங்கள் குறைந்துள்ளன. எண்ணை மிச்சமாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது. தமிழக பாமர மக்கள் தான் இந்தியாவில் வசதியாக் இருக்கிறார்கள். உணவு , உடை , வீடு ஆகிய மூன்றும் தன நிறைவு அடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை. தமிழக மக்களிடம் இல்லாத வசதிகள் இல்லை என்ற நிலை வரும் ( கிரைண்டரும், மிக்சியும் கொடுத்த பின்பு). நாடு சுதந்திரம் அடைந்து 73 வருடங்களில் இந்த சமீப வருடங்களில் மக்கள் வசதி பெருகி உள்ளதற்கு காரணம் கருணாநிதிதான். பணக்காரர்கள் வீடுகளில் தான் தொலைக்காட்சி , மின்சாரம் என்ற நிலை மாறிவிட்டது. புதிய மின் நிலையங்கள் வருவதால் இன்னும் ஐந்து வருடங்களில் மின் வெட்டு முற்றிலும் நீங்கும் அனைத்து ரோடுகளும் நல்ல ரோடுகளாக மாறி வருகின்றன.இவை தொடர கருணாநிதி தேவை

வழிப்போக்கன் said...

புதிய ஜோசியர் பத்ரிக்கு நல்வரவு!

Anonymous said...

Result of 1st scenario is wrong; DMK will win in that situation. Majority of DMDK votes shall go to Cong as they oppose both DMK & ADMK. In the past elections, the vote got by DMDK was those who didn't like DMK & ADMK. Now that vote may go to Cong. Resulting split in DMK against votes and thus DMK shall win.

அப்பாதுரை said...

அத்தனை கழங்களை விட காங்கிரஸ் மோசமென்று தோன்றவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தலையைக் காட்டுவதால் மக்கள் கட்சியை மறந்தே விட்டார்கள் என்று தோன்றுகிறது. காங்கிரசுக்கு இருக்கும் பணம் செல்வாக்கு இவற்றை வைத்து தமிழ்நாட்டில் கட்சியை ஏன் வளர்க்க முன்வரவில்லை?

Anonymous said...

sv.sekar raasi congressuku nalla workout aguthu.
win or loose doesnt matter... it is a good decision by DMK.

jj & captain nethu fulla vuthi koduthu enjoy panni irupanga!

Mohammed said...

IV,
Feel pity for DMK anudabigal.This will be the last election for Manjal Thundu and right time to teach lesson for his family politics.

Vivek said...

if jaya ditch mdmk, cpi, cpm and join wid congress...then that's end of her...DMK will win...but if she leaves congress behind and hold hands wid dmdk+mdmk+CPI+CPM...then for sure she'll win...I think this is karuna's plan...that is the reason issue based support....he is a master mind...but this time people should wake up...as well as jaya should also....

Anonymous said...

Congress is smart to get out of losing combination. Pl read the survey it has conducted http://www.rediff.com/news/slide-show/slide-show-1-congress-survey-win-in-wb-kerala-loss-in-tn-assam/20110303.htm

To get 77 seats you do not need a poll alliance. Time to go it alone and build it stronger and take credit for DMK rout.

Anonymous said...

உங்களுக்கு தமிழ் நட விட்ட வேற எங்கு ? பட் காங்கிரஸ் கு வேற மாநிலம் நெறியா இருக்கு அரசியல் பண்ண , நீ இங்கு மட்டும் தான் குண்டு சட்டியில் குதிரை ஓட வேண்டியது தான் , சிக்கிரம் உன் வண்டி ஓட வண்டி ஆயரும் , ungalada serthu en thamil entakhu durgam sencha congiresskum un nilamai varum , baliku bali vanga congress unnai use pannichu, athu unaku thereyala, tamil ena thalivar thamilna dugari aki vita congress odu serthu - tamilan

Anonymous said...

// தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல இடங்களிலும் ஏன் உலகின் பல இடங்களிலும் பக்தர்களையும், தனது வார வழிபாட்டு மன்றத்தையும் வைத்திருக்கும் ஒரு ’சாமியாரின்’ ஆன்மீக அமைப்பு பகிரங்கமாக திமுகவுக்கு ஆதரவு தர இருக்கிறது. ’அம்மா’ சொன்னா பிள்ளைங்க கேட்டுத்தானே ஆகணும்,

அடங்கொக்கமக்கா...எப்படியெல்லாம் காய் நகர்த்துறாங்க பாருங்கடா....
//

சங்கராச்சாரியார் பி ஜே பி க்கும் , ஜெயா-வுக்கும் லாபி பண்ணியதை ,லாபி பண்ணி பின்னாளில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததைபோல
பெரியவர் கஷ்டப்பட்டதையும் இட்லி வடை மறந்திருக்கலாமா ?

அப்போது இனித்ததா ?

அடங்கொக்கமக்கா...எப்படியெல்லாம் காய் நகர்த்துறாங்க பாருங்கடா....

Anonymous said...

Congress made a clear way to DMK to win with High Majority.

People like Rahul and EVkS Elangovan will realize the real strength of Congress , then.

Ramaswamy

Anonymous said...

Idly Vadai's favorite party AIADMK kept its seat-sharing talks with the Left in suspension, prompting speculation of an alliance with the Congress.

The AIADMK-Left agreement was to be announced on Sunday. "The call from Jayalalitha did not come," said a Left leader. If the Congress joins the AIADMK, the Left will be pushed out.

AIADMK supremo J Jayalalithaa had in November 2010 offered to support the Congress in the Lok Sabha if it were to dump a "corrupt DMK". The AIADMK has nine MPs in the Lok Sabha.

However, sources in the Congress said an alliance with the AIADMK was unlikely.

While the DMK maintained that if the Congress scales down its demand for seats — the party is demanding 63 seats of its choice — a reunion is possible. But the Congress ruled out such a possibility.

Can only Idly Vadai copy from other NEWS papers (like Ju Vi) ?

Yes we can also do ...!

Poomaraang Paamaran

Venkat said...

Sir,
I wonder,how a voter remains clear about the various coalitions and their compositions ..?!

Gopal said...

This is drama.The greatest robbery of Independent India in 2G loot is not cariied out by A. Raja alone . This is known to all sane people of our country . Of course lunatics like zero sibal can have a different idea. That being the reason Congress can never afford to part ways from karuna & co. That will be suicidal. This is well known to Karuna&co,.So they will demand anything and get it. Even Rahul can not do anything, leave alone Sonia.As usual this high drama by Karuna has yielded the expected results. He is Kalaignar , the artist who has scripted so many dramas and cinemas.So the show goes on.

Anonymous said...

Kandipaka DMK win pannum

Anonymous said...

DMK will win...no doubts

Anonymous said...

DMK - 110
Con - 28
PMK - 17
VC - 7
KMK - 5
ML -2
MMK - 1

Anonymous said...

dmk will win

Anonymous said...

ADMK - 58 - 73

DMK 162 to 178