பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 05, 2011

கலைஞரின் புலம்பல்

நேற்று விஜயகாந்த் - ஜெயலலிதா சந்திப்பு கலைஞருக்கு மிகுந்த எரிச்சலை தந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன் பலனாக நடுராத்திரி காங்கிரஸ் - திமுக உடன்பாடு பற்றி "காங்கிரஸ் கட்சி 60 இடங்கள் போதாது என்று, 63 இடங்கள் கேட்பதும் அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுக்க வேண்டும் என்று கேட்பதும் முறைதானா" என்று வருத்தப்பட்டு கலைஞர் அறிக்கைவிட்டுள்ளார்.

இந்த பதிவு வரும் சமயம் கலைஞர், ஸ்டாலின், பாலு மூவரும் இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

காங்கிரஸ் திமுக கூட்டணி இழுபறியில் காங்கிரஸின் ஐவர் குழுவால் எந்த ஒரு சுமூகமான முடிவும் எட்டப்படாத நிலையில், சோனியாவின் சார்பாக குலாம் நபி ஆஸாத் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தார். தேர்தல் சீட்டு பேரத்தில் குலாமிற்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டதாகவும், கழகத்திடம் சற்றே கடுமை காட்டி அதிக சீட்டுக்கள் பெற்று வருமாறு அனுப்பப்பட்டார். அவரும் வந்த அன்று இரவே கருணாநிதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, பின்பு மறுநாள் காலையும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தார். ஆனால் நடுவில் என்ன நடந்ததோ தெரியவில்லை, 60 இடங்களுக்கு ஒத்துக்கொண்டார் என்ற செய்தி பரவியது. ஆனால் டெல்லி போகும் முன் குலாம் எங்களுக்கு 63 இடங்கள் வேண்டும் என்று சொல்லிவிட்டு பிளைட் பிடித்தார் என்று சொல்லுகிறார்கள்.
கிளம்பும் தறுவாயில், சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறிச் சென்றார்.

ஆரம்பத்தில் காங்கிரஸ் தரப்பில் 90 தொகுதிகள் கேட்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னரே கருணாநிதி பாமகவிற்கு 31 தொகுதிகளை ஒதுக்கி காங்கிரஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இது திமுகவிலேயே ஸ்டாலின் போன்றோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தவிர, காங்கிரஸ் ஐவர் குழுவும் தங்களது அதிருப்தியை ஸ்டாலின், மற்றும் திமுக குழுவினரிடம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர். பிரதான கூட்டணிக் கட்சியான தமக்கு ஒதுக்கிய பின்னர், எஞ்சியவைகளையே பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்றவற்றிற்கு ஒதுக்கியிருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம், ஸ்டாலினிடம் கூறியதாகத் தெரிகிறது. துரைமுருகன் கூட ஏதோ கமெண்ட் அடிக்க பேச்சு வார்த்தை கொஞ்சம் கசந்ததாக செய்தி.

நேற்றைய தினம் நள்ளிரவு சுமார் 11.30 மணி அளவில் கருணாநிதி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, இக்கூட்டணி பற்றிய சந்தேக சர்ச்சைகளை மீண்டும் கிளப்பியுள்ளது. அதாவது காங்கிரஸ் தரப்பில் மேலும் மூன்று சீட்டுக்கள் கூடுதலாக, அதாவது 63 சீட்டுக்கள் கோருவதாகவும், தவிர எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்ற முடிவை காங்கிரஸே எடுக்குமென்றும் காங்கிரஸ் மேலிடத்திலிருந்து நேற்று சென்னைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் கருணாநிதி காங்கிரஸிடம் கோபம் கொண்டுள்ளதாகவும், 51 இல் துவங்கிய சீட்டு பேரம், 53 ஆகி பிறகு 58 ஆகிப் பின்பு 60 வதில் முடிந்துள்ளது. இன்னமும் மூன்று கேட்டால், அது நியாயமா என்று காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டுமென்றும், இதுபற்றிய கழகத்தின் நிலை சனிக்கிழமை நடைபெறும் கழக உயர்நிலைக்குழுவில் முடிவு செய்யப்படுமென்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆக
, கூட்டணியில் திரிசங்கு சொர்க்க நிலை தொடர்கிறது. காங்கிரஸிற்கு 60 ஒதுக்கிய பின்பு இப்பொழுது திமுக 122 இடங்களில் போட்டியிடுவதாக இருக்கிறது. காங்கிரஸிற்கு மேலும் 3 சீட்டுகள் ஒதுக்கும்பட்சத்தில் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 119 ஆகக் குறைந்து விடும். பெரும்பான்மை அரசாங்கம் அமைக்கப் போதுமான எண்ணிக்கை 118 என்ற நிலையில், கூட்டணி ஆட்சிதான் ஒரே முடிவு என்ற நிலைக்குத் திமுக தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தவிர, ஆட்சியில் பங்கு என்பதை தேர்தலுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் பிடிவாதம் வேறு திமுகவின் எரிச்சலுக்கு எண்ணெய் ஊற்றுகிறது. மேலும், இவர்களின் கூட்டணிச் சிக்கலுக்கு நடுவில், தேமுதிக அதிமுக பக்கம் போய்விடாதவாறு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவாம். தேமுதிகவினரின் நடவடிக்கைகள் உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு அவ்வப்போது தகவல் போய்க் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அழகிரி வேறு விஜயகாந்தை புகழ்ந்து பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார். ஆனால் அதிமுக தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்ட தகவல், திமுகவிற்கு மற்றொரு அதிர்ச்சி.

தமிழகத்தைப் பொருத்தவரை
, காங்கிரஸ் திமுக இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று சார்ந்துதான் இருக்கவேண்டுமென்ற நிலையில், தற்போது திமுகவின் தேவைகள்தான் அதிகம். உச்சநீதிமன்றம் 2G விசாரணை அறிக்கையை மார்ச் 15 ற்குள் தாக்கல் செய்யவேண்டுமென்று கூறியுள்ள நிலையில், கனிமொழிக்கு எப்பொழுது வேண்டுமானாலும் சம்மன் வரலாம் என்ற நிலை நிலவுகிறது. தேர்தல் சமயத்தில் இப்பேற்பட்ட தர்மசங்கடத்தை திமுக விரும்பவில்லை. தவிர கலைஞர் டிவி விவகாரம், சிபிஐயின் ராசா மீதான தேசியப் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்க முயன்றதாக போடவிருக்கும் வழக்கு தொடர்பான செய்திகள் போன்றவை திமுகவிற்கு அடிமேல் அடியாக அதிர்ச்சி வைத்தியம் அளித்துக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் என்ன சொன்னாலும் கேட்டே ஆக வேண்டிய நிலையில்தான் திமுக இருக்கிறது. 2G பழியினால் கலைஞரே சென்னையில் நிற்காமல் அவர் ஏதாவது ஒதுக்குபுற கிராமத்தில் நிற்பார் என்ற பேச்சு அடிபடுகிறது.

தற்போது ராசா போன நிலையில் திமுக அமைச்சர்களை திரும்ப பெற்றுக்கொள்ளவும் தயங்க மாட்டோம் என்று பூச்சாண்டி காண்பிக்க தொடங்கியுள்ளது திமுக.

மத்திய அமைச்சரவையில் தான் கேட்டது கிடைக்க டெல்லியில் அவர் போட்ட நாடகத்தை காங்கிரஸ் சென்னையில் மறுஒளிபரப்பு செய்கிறது. கலைஞருக்கு வேறு வழியில்லை, குட்ட குட்ட குணிந்து தான் ஆகவேண்டும்



19 Comments:

Anonymous said...

Super! manjaL thuNdu mahAthmiyam

BalajiS said...

காங்கிரஸ் திமுக-வை கழட்டி விடவே இந்த தகிடு தத்தம் செய்கிறது.

போக போக தெரியும்.

இது பழி வாங்கும் படலம். திருவிளையாடல் ஆரம்பம்.

R.Gopi said...

”தல”க்கு வேற ஏதாவது கலர்ல துண்டு போட்டா, பிரச்சனை குறையுமான்னு துரைமுருகன் தன் அல்லக்கைகளுடன் ஆலோசனை...

mak said...

"IV புலம்பல்"->"கலைஞரின் King Maker Master Mind".

Anonymous said...

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும். பாவம் கலைஞர் ஒரு பக்கம் துணைவியாரை காப்பாற்ற வேண்டும், மகளை காப்பற்ற வேண்டும். மகன் (அழகிரி) மனம் நோகாமல் தொகுதி கொடுக்க வேண்டும். மகனை (ஸ்டாலின்) முதல்வராக பதவியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும், தானும் ஆறாவது முறையாக முதல்வராக வேண்டும். மத்தியிலும் பதவியில் இருக்க வேண்டும். ராஜா எதையும் சொல்லாமல் இருக்க வேண்டும்.

தான் திட்டியவர்களும், தன்னை திட்டியவர்களும் தன்னோடு கூட்டணியில் இருக்க வேண்டும். கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும். தொகுதி பிரிப்பில் கூட்டணியினர் மனம் நோகாமல் பிரித்து கொடுக்க வேண்டும். ஆட்சியில் பங்கு கொடுக்காமல் தான் மட்டுமே ஆள வேண்டும். தினமும் அறிக்கைகள் விட வேண்டும். முரசொலிக்கு கடிதம் எழுத வேண்டும். பல திருமணங்களை நடத்த வேண்டும். பேர பிள்ளைகள் கருத்து கணிப்பை வெளியிடாமல் பார்த்துகொள்ள வேண்டும். நிறைய பாராட்டு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். சினிமா பாடல் வெளியீட்டு விழா, திரையிடல் விழாவில் கலந்து கொள்ள வேண்டும். மீன்களுக்கு தினமும் இறை போடா வேண்டும். பாவம் கலைஞர்......

எவ்வளவு அடிச்சாலும் தங்கறாரு இவரு ரொம்ப நல்லவருன்னு --- காங்கிரஸ் காரங்க சொல்லுராங்க!!!!!

Anonymous said...

Now, Indira Congress is placing a check on DMK. Now, DMK Can not use the CD of Karthik Chidambaram.
It is likely Mr. MNS will step down in May and Mr. PC will become PM of India. After that CD might have some value for DMK.....

Anonymous said...

மஞ்சள் கமெண்ட் முழுக்க முழுக்க உண்மை

Rajanand said...

intha thadava congress+dmk koottani irukadhu nu neneikeran...

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

மஞ்சள் கமெண்ட் அருமை...

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

Anonymous said...

பேசாம "அம்மாவின் இட்லி வடை" ன்னு பெயரை மாற்றி விடலாம். கேப்டனின் மனைவியாரும் மைத்துனனும் தேர்தலில் நிற்க போகிறார்கள். அப்புறம் என்ன வெண்டைக்காய் குடும்ப ஆட்சி கோஷம்.அம்மாவின் மக்கள் மற்றும் தொழிலாளர் பாசமெல்லாம் வெளி வேஷம் .( இலங்கை தமிழர் மீது போன தேர்தலின் போது ஏற்பட்ட பாசம் போல) எல்லாம் தேர்தல் பிரசாரத்தின் போதும் தேர்தல் முடிந்த பின்னும் தெரியும். ( அம்மா ரெஸ்ட் எடுக்க கோட நாடு போயாச்சா ?)

Anonymous said...

விஜயகாந்தை கடந்த காலங்களில் அம்மா விமர்சித்ததை ஏன் ஒரு கழுதையும் பிரசுரிக்க வில்லை ( மருத்துவர் மற்றும் கலைழர் விமரிசனம் மறு நினைவுட்டல் போல )
Blood is thickker than water!!!

Anonymous said...

மத்திய அரசியல் இருந்து விலகுவதாக திமுக அறிவிப்பு

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=49748

Is that true? Can you confirm?

Anonymous said...

Flash news

DMK withdraws from Govt in Centre...

krish said...

Flash news:

DMK Withdraws Support From Centre..

Anonymous said...

/*2G பழியினால் கலைஞரே சென்னையில் நிற்காமல் அவர் ஏதாவது ஒதுக்குபுற கிராமத்தில் நிற்பார் என்ற பேச்சு அடிபடுகிறது.*/ LOL....

Anonymous said...

கொள்ளையர்கள் சண்டையிட்டு கொண்டால் நாட்டுக்கு நல்லதுதானே !!!!!

Anonymous said...

i don't think anyone has understood the real effects of this move by DMK...i think this is a master stroke by Karuna..i am very sure knowing Karuna that this was decided a month or two earlier.. CHO and camp are reading this completely wrong. It's imperative that JJ doesn't take any rash decisions based on this. she has to wait and watch and carefully decide. let me try to explain why this is a master stroke...

First - in a way it is good -- if the national parties get hold of states, then states get neglected (reason why congress was chucked out of TN in the first place)this is the main intention of DMK - that is not to allow central parties to get a strong hold here..

second-Karuna has actually waited for JJ to allocate seats to Vijaykanth..(i think JJ was waiting for congress -DMK alliance to break up so that she can accommodate congress, but it isjust a day late for her now. )so if congress wants to leave DMK and join JJ, they will have to settle for less seats or JJ will have to plan to pull out some seats back from Vijayakanth, and other parties..if that happens this will go on for a week or two with JJ and alliance partners thus loosing out on precious time for campaign..


Third- DMK has now a chance to win on it's own.

Four - i am sure this was decided long back. thus this gives the impression that 2G has nothing to do with this withdrawal of support. also if centre applies more pressure on CBI, DMK can withdraw complete support and the government can fall at the centre. also as this was decided much earlier (announcing was a matter of timing)PMK was given less seats and this creates uneasiness among opposition camps. i think even CHO is reading this completely wrong. any insights by JJ or CHO will be knowledge at hindsight as no one in JJ's camp or congress expected this. IN total this is a Master stroke by Karuna. also he shows Sonia who knows more politics (Sonia is nothing when compared to Karuna) and has put her in a spot. she has to pay for it for making him wait recently in Delhi. no body messes with Karuna (note that i am not a karuna support, but the thought that has gone in this is amazing. Chanakyathanam at it's best)

-Kannan

ராஜரத்தினம் said...

I must say now that the agreement can change anytime to suit congress as well. See the drama in coming days

Anonymous said...

Kannan,

You have missed only one point in the whole equation...

If congress is also playing this game then DMK will comeback to power with the support of kalla votes...

If not i strongly believe that the EC will force a decent election which is not good for DMK

I believe never there is an increase in their vote bank for the past many years...
I thought this time there was no scandal till 2G came in to picture [ADMK/ BJP did not use it properly in the lok sabha polls ] :-)

They won in 2006 and 2009 because of the ego of Jaya as she drove out alliance parties and the split of ADMK votes to Vijaykanth....

1996 - Everyone was opposing amma including Cho

1989 - ADMK was split with Jaya and Janaki with no symbol..