பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 01, 2011

திமுக காங்கிரஸ் உரசல்


தமிழக சட்டசபைத் தேர்தல் தேதிகள் இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், திமுக காங்கிரஸ் இடையே இந்தியா பாக்கிஸ்தான் பேச்சு வார்த்தை மாதிரி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஸ்பெக்டரம், மற்றும் சி.பி.ஐ ரைடினால் ஏற்பட்ட சிராய்ப்பு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையால் பெரிதாகிப் புரையோடிவிட்டதே இந்த இழுபறிக்குக் காரணம்.

ஒவ்வொரு தடவையும் பேச்சு வார்த்தை முடிந்த பின்னர் எங்கள் கூட்டணி நிரந்தரக் கூட்டணி என்று திமுகவும், காங்கிரஸும் மாறி மாறிக் கூறிக் கொண்டாலும், காங்கிரஸ் ஸ்பெக்டரம் விவகாரத்தில் சிபிஐ மூலமாகக் கொடுக்கும் குடைச்சலைத் தாங்கும் சக்தியைத் திமுக அறவே இழந்து விட்டதுபோல்தான் இந்த இழுபறி நிலை தெரிவிக்கிறது.

2G விவகாரது துவங்கி, அடையாறு பூங்காவிற்கு அனுமதி மறுத்தது, ராகுல் காந்தியின் தமிழக விஜயங்களில் கலைஞரை சந்திக்காமல் தவிர்த்தது என்று பலவேறு காரணங்களால் புழுங்கிய திமுக, அதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், சென்னை வந்த பிரதமரைத் தவிர்த்து விட்டு, வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றது காங்கிரஸை அதிர்ச்சியடைய வைத்தது. மாநிலத்திற்கு வருகை தரும் பிரதமரை விமான நிலையத்தில் சென்று முதல்வர் வரவேற்பது என்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்துவரும் மரபு. இதற்கு பதிலடியாகவோ என்னவோ, தில்லி சென்ற கலைஞரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்காமல் இழுக்கடித்தார் சோனியா. இவ்வாறு மேல்மட்டத்தில் ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்க, தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள், இளங்கோவன், யுவராஜா போன்றவர்கள் திமுகவை வெளிப்படையாகவே விமர்சித்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் கூட்டணியே இருக்காது என்று நினைத்த நிலையில், திமுக, தனது கோஷமான சுயமரியாதையை அடகு வைத்து, தலித் முரசான ராசாவைத் தியாகம் செய்து கூட்டணியை ஸ்திரப் படுத்திக் கொண்டு அடுத்த கட்டமான பாகப் பிரிவினைக்குச் சென்றது. இருகட்சிகளும் பாகப்பிரிவினைப் பேச்சுவார்த்தைகளுக்காக பரஸ்பரம் குழுக்களை நியமித்துக் கொண்டன.

பிறகு ராசா கைது செய்யப்பட்டது, தொடர்ச்சியாக, திமுக எதிர்பாராத நிகழ்வுகள் பல அரங்கேறின. அதில் ஒன்று கலைஞர் தொலைக்காட்சி அலுவலகம் சிபிஐ சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதற்கடுத்தபட்சமாக கனிமொழி எந்த நேரமும் சிபிஐயால் சம்மன் செய்யப்படலாமென்ற நிலையும் எழுந்துள்ளது. அடுத்த வாரம் கனிமொழியை டெல்லியில் சி.பி.ஐ விசாரிக்கும் என்றும் சொல்லுகிறார்கள். திமுக தனது சுயமரியாதையை எவ்விதத்திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று கூறும் கி.வீரமணி போன்றோர், இதனையும் யோசிக்க வேண்டும்.

கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தை சோதனைக்குட்படுத்தியும் கூட திமுக, காங்கிரஸுடனான தனது உறவைப் பேணுவது ஏனோ? தமிழகத்தைப் பொறுத்தவரை தனது பணபலம் மற்றும் அதிகாரபலம் இவற்றைத் தாண்டி காங்கிரஸால் எதுவும் செய்து விட முடியாது என்று திமுக நினைத்தால், அதில் ஆச்சர்யப்படுவதற்கேதுமில்லை. தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் அதனைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. தனது கூட்டணியிலுள்ள உதிரிக்கட்சிகளுக்கெல்லாம் பாகப் பிரிவினையை முடித்து விட்ட நிலையில், இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் காங்கிரஸைப் பொருத்தவரை திமுக இன்னமும் ஆட்டம் காட்டிக் கொண்டிருப்பது இன்னும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், பாமக, முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றிற்கு முறையே, 31,3,10 என்று சீட்டுக்களை ஒதுக்கிவிட்ட நிலையில் இன்னம் மீதமிருப்பது 190. இவற்றில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்கத் தேவையான 108 சீட்டுக்களைப் பெறுவதற்கு திமுக எப்படியும் 140 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டுமென்ற நிலையில், மீதமிருப்பது வெறும் 50. இதற்குள்தான் காங்கிரஸ் பெற்றாக வேண்டும். இவற்றில் காங்கிரஸ் குழுவிற்கு உடன்பாடில்லாததால் கலைஞர் சோனியாவிடமே நேரடியாகப் ஹாட் லைனில் பேசப்போவதாகத் தெரிகிறது. சோனியாவிடம் சென்ற வாரம் தூது சென்ற டி.ஆர்.பாலுவிற்கு நேரம் தராமல் சோனியா அனுப்பிவிட்டார். காங்கிரஸ் மூன்றாவது அணி என்று ஆரம்பித்தால், எத்தனை கட்சிகள் தங்களது வெற்றி வாய்ப்பை அடமானம் வைக்கத் தயாராக இருக்குமென்றும் தெரியவில்லை. நிலைமை ஒரே குழம்பிய குட்டை!

இப்போதுள்ள ஒரே கேள்வி! இவ்வளவு அவமானம், இழுபறிக்குப் பிறகும், திமுகவை சார்ந்து செயல்பட வேண்டிய அவசியம் காங்கிரஸிற்கு என்ன? தனியாகப் போட்டியிட்டு ஜெயிக்க முடியாது என்ற தன்னம்பிக்கை குறைவா அல்லது ஊழல் விவகாரத்தில் திமுகவின் வாயை அடைக்க தாழ்ந்துதான் போக வேண்டும் என்ற கட்டாயமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

- யதிராஜ் + இட்லிவடை
விஜயகாந்த் புத்திசாலியாக இருந்தால் திமுக-காங்கிரஸ் உடன்பாட்டுக்கு பிறகு அதிமுகவுடன் பேரம் பேச வேண்டும், ஜெயலலிதா புத்திசாலியாக இருந்தால் அதற்கு முன் பேச வேண்டும். இதில் புத்திசாலி யார் என்றால் ராமதாஸ் தான்!


26 Comments:

Anonymous said...

yathiraj + idlyvadai koottani urudhi seyyapattu vittadhu pol therikirathu!

Anonymous said...

அதிமுக தேமுதிக இழுபறி பற்றி யதிராஜர் எழுதுவாரா ? அவரது ஆசை அதுவல்ல. திமுக காங்கிரஸ் கூட்டணி பிரியணும். அதுவே யதிராஜர் விருப்பம்.காங்கிரஸும் தேமுதிக கூட்டணி அமைய விரும்புவாரோ ? அதுவும் மாட்டார்.ஆனால் அப்படி அமைந்தால் உண்மையான போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நடக்கும்.

இப்போது தேமுதிக முதுகில் ஜெ-யும் திமுக முதுகில் காங்கிரஸும் ஏறி ஓட்டுக்கேட்கும்.

இட்லிவடை மஞ்சள் காமென்டில் எழுதியவாறு விஜயகாந்த் புத்திசாலியாய் இருந்தால் திமுக -காங்கிரஸ் உடன்பாட்டுக்குப்பிறகு அதிமுக வுடன் பேசுவார். ஆனால் அவர்தான் புத்திசாலி இல்லையே ! இறுதியில் ஜெ தான் புத்திசாலியாய் இருப்பார், திமுக கூட்டணியில் கருணா நிதி போல.

சோனியா பெரிய புத்திசாலி . தற்போது விட்டுப்பிடிக்கிறார். அவ்வளவே.

Anonymous said...

ஸ்தாபன காங்கிரஸுக்கு "சோ" வோட்டு கேட்ட காலத்திலேர்ந்து பிள்ளையாண்டானை நன்னாத் தெரியும். சோ ஆதரிக்கும் கட்சியும் ஆமை புகுந்த
வீடும் அமீனா நுழைஞ்ச வீடும் வெள்ங்கினதா ஸரித்திரம் கிடையாது. இதை ரஜனிகாந்த் நன்னா புரிஞ்சுண்டார்.விஜயகாந்த் மரமண்டைக்கு ஏற மாட்டேன்றது. ஊழலை ஒழிக்கப்போறேன்னுட்டு ஜெயலலிதா கூட சேர்வாரோ இந்த விஜயகாந்த்? கெட்ட நேரம் வந்துட்டா யாரயும் விடாதுன்னோ ?

கொஞ்சம் வெயிட் பண்ணா காங்க்ரஸோட கூட்டு சேரலாமோன்னோ ? பாருங்கோ இதுதான் நடக்கப்போர்றது..!

ஸ்ரீனிவாசன் அரவிந்தன்

சி.தவநெறிச்செல்வன் said...

காங்கிரஸை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இப்போது திமுக வுக்குதான், போன முறை கொடுத்ததை பெற்றுக்கொண்ட காங்கிரஸ் இப்போது அடம்பிடிக்கிறதென்றால் பிடி காங்கிரஸ் கையில்தான் என்றல்லவா அர்த்தம், தனது எண்ணிக்கை குறைந்தாலும் காங்கிரஸை உள் இழுக்கத்தான் மு.க பார்ப்பார். அடுத்த அதிகாரத்தில் தான் இல்லாமல் போனால் அது இந்த ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க வழிசெய்ய முடியாமல் போகலாம்.

Srikanth B said...

//இவற்றில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்கத் தேவையான 108 சீட்டுக்களைப் பெறுவதற்கு திமுக எப்படியும் 140 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டுமென்ற நிலையில்

It is Not 108. To get majority, they should get 118. :)

Srikanth Bangalore

Anonymous said...

ஜெயிக்கப் போவது இத்தாலிய மாஃபியாவா, மாநில மாஃபியாவா? மக்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். கூட்டணி அமைந்தால், ராஜா வெளியில் வந்துவிடுவார்.சிபிஐ 2G ஐ குழி தோண்டி புதைக்கும். எஸ்.வி.சேகர் பூணலை வெளியே விட்டபடி தி.மு.க வேட்பாளருக்காக ப்ரச்சாரம் செய்வார்.

அஞ்சா நஞ்சன் said...

ராமதாஸ் புத்திசாலியா ? அதிர்ஷ்டசாலியா ?

Anonymous said...

//சோ ஆதரிக்கும் கட்சியும் ஆமை புகுந்த
வீடும் அமீனா நுழைஞ்ச வீடும் வெள்ங்கினதா ஸரித்திரம் கிடையாது//

1996-ல் கோமாவிலே இருந்தாராமா கமெண்ட் அடிச்சவரு?

arasu said...

"அதிமுக தேமுதிக இழுபறி பற்றி யதிராஜர் எழுதுவாரா ? அவரது ஆசை அதுவல்ல. திமுக காங்கிரஸ் கூட்டணி பிரியணும். அதுவே யதிராஜர் விருப்பம்."
ரொம்ப சரி.நடுநிலையில் எழுதுவதாகத் தெரியவில்லை.திமுக-காங்கி. கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்கிற டென்சன்ல எழுதற மாதிரி இருக்கு

R. Jagannathan said...

எலெக்‌ஷன் தேதியும் அறிவிக்கப் பட்டுவிட்டது! நாளை ஒரு ஒப்பந்த்தத்தை எதிர்பார்க்கலாம்!

விஜய்காந்த் காங்க்ரெசுடன் கூட்டணி வைக்க நிறையப் பேர் ஆவலுடன் இருக்கிறார்கள், அப்படி என்ன காங்கிரஸ் ஊழல் செய்யாத கட்சியா?!

-ஜெ.

Rajan said...

I doubt Congress will go for third front since pushing DMK to a corner will result in the Central govt. falling if DMK withdraws support.

Roaming Raman said...

தங்கபாலுவும் இட்லிவடை வாசகர் போல!! நேற்று இட்லி வடை யில் நியூஸ் படிச்சுட்டு "காங்கிரஸ் -திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை" என்று அறிவிப்பு விட்டிருக்காரே! (கொஞ்சம அவரை விஸ்வாமித்ரா வை விட்டு திட்டி எழுத வச்சா ) விரைவில் தங்கபாலுவின் மீண்டும் ஒரு நல்ல வீடியோ பேட்டி வருமே!!! கிழக்கிலிருந்து தங்கபாலு புத்தகம் வருமா என்று தெரியாது!!! _ரோமிங் ராமன்

R.Gopi said...

//சென்னை வந்த பிரதமரைத் தவிர்த்து விட்டு, வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றது//

இந்த வைரமுத்து நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கருணாநிதி தமிழறிஞர்கள் பால் தாம் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தவே பிரதமரை கூட வரவேற்க போகாமல், தான் இந்த விழாவிற்கு வந்த்தாக பொய்மூட்டையை (எப்போதும் இது தானே “தல”யின் வேலை), அரசு குறிப்பில் கண் மருத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் முன்பே வாங்கியதால் அங்கே சென்றதாக குறிப்பிட செய்தார் இந்த வீர மர தமிழன்...

ஃபோட்டோவில் சோனியா “கை”யை அப்படி முறைத்து பார்க்க வேண்டிய அவசியமென்ன “தல”க்கு?... ஒருவேளை தூரத்திலிருந்து கைரேகை பார்த்து வெற்றி வாய்ப்பை கணிக்கிறாரோ!!

Sreenivasan said...

http://expressbuzz.com/nation/court-notice-to-rahul-on-missing-woman/252405.html

venkatramanan said...

//தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்கத் தேவையான 108 சீட்டுக்களை// 108 / 117?!

அன்புடன்
வெங்கட்ரமணன்

Anonymous said...

The shameless congress would accept the 50 seats offered by DMK and sign the pact.This announcement would come very shortly

ConverZ stupidity said...

http://savukku.net/index.php?option=com_content&view=article&id=467:2011-03-02-03-47-36&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

R. Jagannathan said...

I request readers to visit the comments to the latest review of WC match by 'Anbudan' (?) Bala! - R. J.

ஜெ.சதீஷ் குமார் said...

தேமுதிக கடந்த தேர்தல்களில் தனித்து நின்று தான் தன் பலத்தை நிரூபித்தது,அதுதான் தற்போது அதன் வெற்றி வாய்பிற்கு கூட்டணி தேவை என்ற பரஸ்பர அரசியல் சாணக்கியதனதில் செயல்படுகிறது.இந்த முறை தேர்தல் தேமுதிக வை மையப் படுதியே இருக்கும் . தேமுதிக அதிக ஓட்டுகள் பெற்றால் அதிமுக (அ) குறைந்த ஓட்டுகள் பெற்றால் திமுக வும் வெற்றி பெறும்.இதுதான் இன்றைய நிலை . என் முகவரிக்கும் வந்து செல்லுங்கள் ......... இது தான் ஸ்ட்ரோக் http://jskpondy.blogspot.com/2011/02/blog-post_25.html

Rahul Gandhi said...

DMK has been cornered.. and have to do as per Sonia's interest.

I see both DMK and ADMK begged to Congress leadership for an alliance.

MK the lucky guy this time.

gopal said...

mu.ka kaila oru tiruvodu vaichu paarunga... :-)

eppadi irundha aal ippadi aagitaaru.

geeyar said...

இதுக்கப்புறம் இவங்க கூட்டணி வச்சா திமுககாரன் காங் கு ஓட்டு போடமாட்டான். காங் எப்பவுமுமே திமுகவுக்கு ஓட்டு போடமாட்டான்.

Anonymous said...

///"அதிமுக தேமுதிக இழுபறி பற்றி யதிராஜர் எழுதுவாரா ? அவரது ஆசை அதுவல்ல. திமுக காங்கிரஸ் கூட்டணி பிரியணும். அதுவே யதிராஜர் விருப்பம்."
ரொம்ப சரி.நடுநிலையில் எழுதுவதாகத் தெரியவில்லை.திமுக-காங்கி. கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்கிற டென்சன்ல எழுதற மாதிரி இருக்கு
///

You are correct.

Anonymous said...

இன்றைக்குக் காலையில் வெளிவந்த ஒரு வார ஏடு, அண்ணா அறிவாலயத்திற்கு தேர்தல் கூட்டணி பற்றி பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் குழுவினர் வந்த போது, துரைமுருகன் ஏதோ கிண்டலாகப் பேசியதாகவும், அதனால் காங்கிரஸ் தலைவர்கள் கோபமடைந்ததாகவும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதுபோல எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. துரைமுருகன் பேசியதாக அந்த ஏடு எழுதியிருப்பதைப் போல துரைமுருகன் பேசவும் இல்லை.

இதனை அந்தக் கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நன்கறிவார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்தக் குழுவினரைத் தவிர பேச்சுவார்த்தை நடைபெற்ற அறைக்குள் யாருமே வரவில்லை.

அப்படியிருக்க இந்தச் செய்தியாளர், உள்ளே நடைபெறாத சம்பவங்களையெல்லாம் நடைபெற்றதைப் போல கற்பனையாக ஒரு உரையாடலை எழுதி எப்படியாவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முனையாதா, அதனால் அம்மையாரின் ஜென்மம் சாபல்யம் அடையாதா என்று எண்ணுகின்றார்கள்.

அந்தச் செய்திகளைப் படித்து விட்டு அது உண்மையாக இருக்குமோ என்று யாரும் எண்ணி விடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

காங்கிரஸ் குழுவினர் அண்ணா அறிவாலயம் வந்தபோது அந்த ஏட்டிலே எழுதியிருப்பது போன்ற வார்த்தைகளைப் பேசவும் இல்லை, கிண்டலும் செய்ய வில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்."

-இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Thyagi said...

// Rajan said...
I doubt Congress will go for third front since pushing DMK to a corner will result in the Central govt. falling if DMK withdraws support.//

This is wrong. Cong has majority in the house even if all the DMK MPs withdraw support. If not so, DMK can threaten Cong now itself withdrawing the support - for all the harassment it is suffering on the spectrum issue.

Kalimiku Ganapathi said...

ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?

அல்லது

வாழும் காமராசர் பொன் ராதாகிருஷ்ணனா?

என்றால்,

பொன்ராதாவுக்கே வாக்களிப்பார்கள் தமிழர்கள். வாழ்க பாஜக.