பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 07, 2011

முனி மலர் 7-3-2011


இன்று போய் நாளை வா என்பது மாதிரி நாளைக்கு நாம சேர்ந்துக்கொள்ளலாம் என்று திமுகவும் காங்கிரஸும் முடிவு செய்துவிட்டது. ராமதாஸுக்கு ஒதுக்கிய 31லிருந்து 3 சீட்டை காங்கிரஸுக்கு திமுக தானம் செய்ய போகிறதாம். இனிமேல் கட்சிகள் எல்லாம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்திதுவிடும். எல்லோரும் தங்களுக்கே வெற்றி.. வெற்றி.. என்று கூவிக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி என்று செய்தி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை...
( இந்த பகுதியை இந்த முறை காங்கிரஸ்+திமுக கூட்டணி மாதிரி அநங்கன் + இட்லிவடை எழுதியது )

தி.மு.க அமோக வெற்றி

சென்னை: மே.14. போட்டியிட்ட இடங்களில் 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது தி.மு.க கூட்டணி.

ஆறாவது முறையாக முதல்வர் பதவி ஏற்கவுள்ளார் மு.கருணாநிதி. இந்த வெற்றி குறித்து அவர் கூறும் போது, ஆரியப் பதர்களின் அற்ப மாயைகளை, பொய்களை ஓரம் கட்டி தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. வாக்களித்தோர், வாக்களித்தோர் என்றில்லாமல் அனைவருக்கும் தமது நற்பணி தொடரும் என்றார். எப்போது ரிடையர் ஆவீர்கள் என்ற கேள்விக்கு ‘ரிடையர்’ என்ற வார்த்தையில் இருக்கும் டையர் போல நான் தமிழர்களுக்கு ஓயாது உழைப்பேன் என்றார். ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு உண்டா என்ற மற்றொரு கேள்விக்கு “குரங்கு அப்பம் பங்கு போட்ட கதை தெரியுமா ?” என்று பதில் கேள்வி கேட்டு நிருபர்களிடம் ஜோக் அடித்தார்.

ஸ்டாலின் துணை முதல்வர்! அழகிரி இணை முதல்வரா?
தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சியமைக்க உள்ள நிலையில் ஸ்டாலின் சென்ற முறை போலவே துணை முதல்வர் பதவி வகிப்பார் என்றும், இணை முதல்வராக அழகிரி பொறுப்பேற்க இருக்கிறார் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதுபற்றி அழகிரியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ”நானாக எதுவும் கேட்க மாட்டேன். அவ்வாறு நியமித்தால் வழக்கம் போல் மக்கள் பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார்.

டாக்டர் சுப்ரமணியன் சாமி வழக்கு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெருமளவு மோசடிகள் நடந்துள்ளது என்றும், தி.மு.கவினர் கள்ள ஓட்டு போட்டும், கருவிகளில் தில்லுமுல்லு செய்தும் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றியுமே தேர்தலில் வென்றுள்ளனர் என்றும் டாக்டர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அவர், தி.மு.க.வினர் கள்ள ஓட்டுப் போட்டதன் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதை உச்சநீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்து வழக்குப் போட இருப்பதாகவும் கூறினார்.

ஆ.ராசா விடுதலை ஆவார்!
ஆ.ராசா வழக்குகளிலிருந்து விரைவில் விடுதலை ஆவார் என்று திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி தெரிவித்தார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தமிழர்கள் இன உணர்வு மிக்கவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்த வெற்றியைத் தடுக்க ஆரிய-பார்ப்பன சக்திகள் ஒன்று சேர்ந்து பல சதிகள் செய்த போதிலும் தி.மு.க அதை முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ளது. ஆரிய சதியால் சிறைக்குப் போன இனமான கதிரவன் ஆ.ராசா விரைவில் விடுதலையாகி, மக்கள் பணி ஆற்றுவார் என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

திருமாவளவன் அதிர்ச்சித் தோல்வி
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவன் தோல்வி அடைந்தார். தனது இந்தத் தோல்விக்கு தான் காங்கிரஸை எதிர்த்து பேட்டி அளித்ததை மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கிவிட்டார்கள் என்று அவர் சோகத்துடன் தெரிவித்தார். ஆனாலும் தொடர்ந்து தான் இலங்கை தமிழர்கள் உயர்வுக்குப் பாடுபடப் போவதாகவும். தோல்வியைக் கண்டு பின்வாங்குபவன் தான் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ்.வி.சேகர் வெற்றி
மயிலை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.வி.சேகர் அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட நடிகர் விசுவை விட இவர் 9 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தனது இந்த வெற்றிக்கு மயிலை மக்களும், இட்லிவடை என்ற வலைப்பதிவருமே காரணம் என்று அவர் நன்றியுடன் குறிப்பிட்டார். என் செல் நம்பரில் எப்போது வேண்டும் என்றாலும் யார் வேண்டும் என்றாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றார். அதற்கு பில் நான் கட்ட மாட்டேன் என்றார்.

நாளை சந்திப்பு?
சென்னை; மே, 14. டாடா, நீரா ராடியா, அனில், முகேஷ் அம்பானி ஆகியோர் நாளை கருணாநிதியைச் சந்திக்கவிருக்கின்றனர். அவர்களாக கைபட எழுதிய கடிதத்தை கவனர் முன்னிலையில் தருவார்கள் என்று தெரிகிறது..


சோனியா வாழ்த்து
தி.மு.க. வெற்றிக்கு சோனியாவும், மன்மோகன் சிங்கும் நேற்று தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். ”I take complete responsibility” என்று பழக்க தோஷத்தில் சொன்னார் என்று தெரிகிறது.

விஜயகாந்த் எங்கே?
தேர்தலில் வெற்றி பெற்றாலும் தனது கூட்டணி கட்சி வெற்றி பெறாததால் சோகமான விஜயகாந்த், நிருபர்களைச் சந்திக்க விரும்பவில்லை. தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்ட நிருபர்களிடமும் தான் பின்னர் விரிவாகப் பேசுவதாகக் கூறிய விஜயகாந்த் தன் மக்களுடன் கூட்டணி அமைத்து குடும்பத்துடன் தென்னாப்பிர்க்கா சென்றுள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

மந்திரி சபையில் பங்கு கேட்க மாட்டோம். ஈ.வி.கே.எஸ்.
போட்டியிட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களைச் சந்தித்தார். கூட்டணிக்கட்சிகளின் ஆதரவில்லாமல் தி.மு.க. இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது என்று கூறிய அவர், ஆட்சியில் நிச்சயம் பங்கு கேட்க மாட்டோம். 2016 தேர்தலில் காமராஜர் ஆட்சி அமைவது உறுதி என்றும் தெரிவித்தார். பேட்டி முடிந்து விடை பெறும் முன் அவர் கலங்கிய கண்களுடன், நிருபர்கள் தங்கள் பேண்ட், சட்டை, பனியன், உள்ளாடைகளை உதறி விட்டுச் செல்லும்படிக் கொண்டது உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

தேர்தல் தோல்வி எதிரொலி : ஜெயலலிதா கொடநாடு பயணம்
தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து விரக்தியடைந்த ஜெயலலிதா நேற்று இரவோடு இரவாக கொடநாடு புறப்பட்டுச் சென்றார். சசிகலாவும் உடன் இருந்தார். நள்ளிரவு நேரத்திலும் செய்திக்காக போயஸ் கார்டன் வாசலில் காத்திருந்த நிருபர்களுக்கு “நோ கமெண்ட்ஸ்” என்ற பதிலை புன்னகையுடன் கூறிவிட்டு ஜெயலலிதாவின் கார் விரைந்து சென்றது. முன்னதாக தேர்தல் இயந்திரம் காங்கிரஸ் கையில் இருப்பதால் தனக்கு தோல்வி என்று கூறினார்.


ரஜினிகாந்த் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை கருணாநிதியை நேரில் சந்தித்து மீண்டும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதற்காக வாழ்த்துத் தெரிவித்தார். எந்திரன்-2 பட பூஜை விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தார் என்று தெரிகிறது. ஸ்விட்சர்லாந்து ராணா படப்பிட்டிப்பில் இருந்த ரஜினி இன்று அதிகாலை விமானத்தில் சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கனிமொழி - கொ.ப.செ.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கனிமொழி தி.முக.வின் புதிய கொள்கைப்பரப்புச் செயலராக நியமிக்கப்படுவார் என அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய நிருபர்களின் கேள்விக்கு வானவில் போன்று ஏழு வண்ணங்கள் கொண்ட பட்டுப் புடவை தரித்த கவிதாயினி கனிமொழி பதிலளிக்க மறுத்து விட்டார்.

சொன்னதுக்கு எதிராக பலித்தது - ஜோதிடருக்குப் பாராட்டு
’இட்லிவடை’ என்ற வலைப்பதிவில் பலருக்கும் ’இலவசமாக’ ஜோதிடப் பலன் சொல்லி வந்த ஒரு ஜோசியர், வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும்என்பதைக் கணித்து எழுதியிருந்தார். அதற்கு நேர் எதிராக திமுக வெற்றி பெற்றதால் அவருக்கு திட்டும், தமிழக அரசு சார்ப்பில் கலைமாமணி விருது வழங்கப்படும் என்று தெரிகிறது.

ராமதாஸ் கண்ணீர்
போட்டியிட்ட பல தொகுதிகளில் டெபாசிட் இழந்து 2 தொகுதிகளில் மட்டுமே பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது. தங்களது தோல்விக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிக் கட்சிகள் சரியாக ஒத்துழைக்காததே காரணம் மற்றும் காங்கிரஸுக்கு நாங்கள் 3 தொகுதிகள் விட்டு கொடுத்தால் தோல்வி அடைந்தோம் என்று கோபத்துடன் கூறிய ராமதாஸ், ”இனிமேல் பா.ம.கவைச் சேர்ந்தவரை முதல்வராக்கும் எனது லட்சியம் வெறும் கனவுதான். மரம் வெட்டப் போவதைத் தவிர வேறு வேலையில்லை” என்று சொல்லிக் கண்ணீர் விட்டார். காடுவெட்டி குரு உடன் இருந்தார்.

பத்ரிக்கு பத்மபூஷன்
’ஸ்பெக்ட்ரம்’ நடந்தது என்ன?’ என்ற புத்தகத்தை எழுதியதற்காக கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி அவர்களுக்குப் பாராட்டு விழா கன்னிமாரா ஹோட்டலில் நடந்தது. விழாவுக்குத் தலைமையேற்ற கி.வீரமணி, பத்ரி அவர்கள் இது போன்று பல நூல்களை எழுதி அறிவுலகிற்குச் சேவை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். சென்னை பல்கழகத்தின் தமிழ் ஆராய்ச்சி துறை, ஊழல் என்பதற்கு சர்ச்சை என்ற வார்த்தையை கண்டுபிடித்த பத்ரிக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் அடுத்த அகராதியில் இந்த புதிய விளக்கம் சேர்க்கப்படும் என்றார். திடீரென மேடை ஏறிய ஒருவர், பத்ரிக்கு மோதிரம் ஒன்றை பரிசாக அளித்தார்.தங்க மோதிரம் போட்டவர் நிச்சயம் நல்லி குப்பு சாமியாக தான் இருப்பார் என்று பலரும் நினைத்தார்கள் ஆனால் அவர் மேடையில் ஓரத்தில் இருந்ததால், இந்த விருதை யார் கொடுத்தார்கள் என்று மக்கள் குழம்ப சிலர் நிச்சயம் இது ஜெயமோகனாக தான் இருக்க வேண்டும் அவர் தான் விருது கொடுப்பவர் என்று பேசிக்கொண்டார்கள். விழாவில் கனிமொழி, ஜெகத்கஸ்பர், நல்லி குப்புசாமிச் செட்டியார், ஏ.நடராஜன், ரவிகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பத்ரி தமிழில் பேசினார் சின்னதாக ஒரு டாப்லெட் வைத்துக்கொண்டு இரண்டு நிமிஷம் பேசினார். கேட்டவர்கள் எல்லோரும் இலவசமாக வழங்கிய சாரிடான் டாப்லெட்டை விழுங்கினார்கள்.

எல்லோருக்கும் இலவச திருமணம் - கருணாநிதி அறிவிப்பு
இலவச டி.வி. உட்பட பல்வேறு சலுகைகளை கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கருணாநிதி, தற்போது மேலும் மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் வண்ணம் ”எல்லோருக்கும் இலவச திருமணம்” - திட்டத்தை அறிவித்துள்ளார். நேற்று நடந்த திருமண விழாவில் பேசிய அவர், “ ’ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று அண்ணா அவர்கள் முன்மொழிந்ததைப் போல, ராவணனின் மனைவி மண்டோதரி போல இந்தத் திருமண விழாவில் அவரது தம்பியான நான் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும், இதுவரை திருமணமே செய்து கொள்ளாதவர்களுக்கும் விரைவில் அரசு செலவில் இலவச திருமணம் - திட்டத்தை அமல் படுத்த உள்ளேன் என்று தெரிவித்தார். அதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ’சட்டசபையில் பதிலளிக்கிறேன்’ என்று புன்சிரிப்புடன் பூடகமாகத் தெரிவித்தார்.

வாலி வாழ்த்து

மீண்டும் ஆறாவது முறையாகப் பதவியேற்க இருக்கும் கருணாநிதியை கௌரவிக்கும் வகையில் ஜெகத்ரட்சகன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. அதில் வாலி,
வைரமுத்து, பாவி.ஜய், அப்துல்ரகுமான், மு.மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாலி பாடிய வாழ்த்துப்பாவிலிருந்து...

நிதியின் கருணையே
கருணையின் நிதியே
கருணாநிதியே

நீயே தலைவன்
நீயே தமிழன்
நீயே உலகம்
நீயே வள்ளுவம்
நீயே அண்ணா
நீயே பெரியார்

உலகம் உனக்குள்
உனக்குள் உலகம்
தமிழ் நீ; தமிழகம் நீ
இயல் நீ; இசை நீ
நாட்டியம் நீ;

ராசா நீ
மந்திரி நீ
என்றும் முதல் மந்திரி நீ

என்றெல்லாம் அவர் பாடினார். பாடும்போது அவர் உணர்ச்சி வசப்பட்டு அழுதது பார்வையாளர்களை நெகிழ வைத்தது.

காணவில்லை: ( தற்போது வந்த தகவல்)
விஜய் என்ற இளைஞரை மே மாதம் 14 ஆம் தேதி முதல் காணவில்லை. இவரை நாகப்பட்டினம் கடல் அருகில் சுறா பிடித்துக்கொண்டு வருகிறேன் என்று வீட்டை விட்டு போனவர் வீடு திரும்பவில்லை. இவர் அப்பா இவரை காணவில்லை என்று அம்மாவிடம் புகார் கொடுத்துள்ளார். காவலர்கள் இவரை எங்கு தேடியும் இன்னும் கிடைக்கவில்லை. தகவல் தெரிந்தால் டெல்லியில் இவருடைய நண்பர் ராகுல் காந்திக்கு தகவல் சொல்லி அனுப்புங்கள்.



26 Comments:

(-!-) said...

:>

Anonymous said...

சுத்த பேத்தல். அடிச்சுக்கறத்துக்கு ரெண்டு கை போறலை

Baski said...

writing about Ramadoss and Kuruma are good.. ...:-D

Fayez said...

கலக்கல் பதிவு.....இது கற்பனையாகவே இருப்பதுதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது....

Anonymous said...

romba mokkaiya irukku..

Anonymous said...

//கனிமொழி - கொ.ப.செ.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கனிமொழி தி.முக.வின் புதிய கொள்கைப்பரப்புச் செயலராக நியமிக்கப்படுவார் என அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய நிருபர்களின் கேள்விக்கு வானவில் போன்று ஏழு வண்ணங்கள் கொண்ட பட்டுப் புடவை தரித்த கவிதாயினி கனிமொழி பதிலளிக்க மறுத்து விட்டார்.//

Super! Superb!!

Anonymous said...

அய்யோ.. இது கற்பனையாக் இருந்தாலும், வயிற்றைக் கலக்குகிறது. இந்தக் கட்டுரையை எழுதியவருக்கு சாகித்ய அகாடமி விருது,கலைமாமணி விருது, வாழும் ளொள்ளுவன் விருது அறிவிப்புகள் மே15-ம் தேதியில் வெளியாகப் போவதை ஏன் இருட்டிப்பு செய்து விட்டீர்கள்? -கபாலி

vignaani said...

வழக்கம் போல காங்கிரசுடனான ஊடல் சமரசம் ஆனவுடன் நாடகத்தில் ஆண்டி-கிளைமாக்ஸ்; பெரிய பின்னூட்டங்கள் தரும் மனநிலையில் இ.வ வாசகர்கள் இல்லை போலும்.
மே மாத நிகழ்வுகள் இவ்வாறு இருக்கலாம் தான். தொல்.திருமா தோல்வியைத் தவிர பிற அனைத்தும் நடக்கக் கூடியவையே
.தாங்கள் ஏனோ வைகோவை மறந்து விட்டீர்கள்! பத்ரியை இழுத்தது கொஞ்சம் ஓவர்.

Anonymous said...

Good One Idly Vadai.

Thanks for the right prediction.

This is how the matured satire should be.

Muni + Idly Vadai ( one and the same) combination provided a good article after a long time.

Anonymous said...

Everything is very good... But, I do not know why are you dragging Badri into the picture... Any blog politics... LOL

cho visiri said...

Like Ondrarai Pakka Naalledu in Thuklak.

By the way, the article may have touched Cho's Reaction to Election Results,too, in this imaginary satire.

Any way, enjoyed the joke.If, for any reason, the results are alike, then May God save TN.(Myself sitting in the comfort of Narendra Mody's Gujarat - The real State where Development is at its peak)

Anonymous said...

Ellam super anna kannakkula kotai vitutingale IV.
PMK - lost 29
VCK - lost 3
Congress - lost 40 (1/3 of 60).
Total loss 72. So at the most total seats won will be only 162 right unless and until some miracle happens how can it be 180+. Konjam Muni thaan solanum

saji said...

படிக்கறப்பவே கண்ண கட்டுதே.இது நடந்துட்டா தமிழ் நாடு என்னதுக்காகுறது.நடக்க கூடாதுன்னு ஸ்பெஷல் பிரார்த்தனை பன்னனுவோம்.மக்களே என் மக்களே ஒழுங்கா யோசிச்சு வோட்டு போடுங்கப்பா.

Roaming Raman said...

அட ஆண்டவா!!! கார்த்தால எழுந்து திறந்தால், இப்படியெல்லாமா வாசகர்களை பயமுறுத்துவது?? ஒரு வேளை இப்படியெல்லாம் நிஜமாகவே நடந்து விட்டால்... கற்பனைக்கே பயமாக இருக்கே..இது கற்பனையாகவே இருப்பதுதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது...
(ஏற்கெனவே நாங்குநேரி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாட தொடங்கியாசாமே??)

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

கற்பனை கற்பனைதான்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

(எனக்கு கலைமாமணி வேண்டாம். ஏனென்றால் எனக்கு ஜால்ரா அடித்து பழக்கமில்லை)

:-))))

Anonymous said...

sema kadi post

சுத்த பேத்தல். அடிச்சுக்கறத்துக்கு ரெண்டு கை போறலை

repeattu

Anonymous said...

Ithellaam kanavilum nadandhuda koodaadhuyaaa

Anonymous said...

Super post. It Will not happen. But I enjoyed reading this.

Anonymous said...

yuvakrishna will be very happy.
cable shankar will also be happy.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் said...

//பாவி.ஜய்//

இதில் ஏதும் உள்குத்து இருக்காது என நம்புகிறேன்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

Anonymous said...

IV very good sattire. Why South Africa for Vijayakanth and family?
So effectively if nothing is going to change may be the government must stop the election and re-elect this gang again. Atleast public money will be saved and students can study peacefully....

This is the worst nightmare lets dream for a better tomorrow though.....

Anonymous said...

/// Congress, DMK seal deal on seat-sharing in Tamil Nadu
TNN | Mar 8, 2011, 06.16pm IST:
According to sources, Congress will get the 63 seats it had wanted. The DMK had earlier walked out after refusing to give in to the Congress demand.///
VERY GOOD.

Arun Ambie said...

முனிக்கு இப்படி ஒரு பயங்கரமான மலரா! நீங்கள் முனியாண்டி விலாஸில் ஆடாகக் கடவது!!!
அழகிரி இணைமுதல்வர், இசுடாலின் துணை முதல்வர், கனிமொழியை ஒரு கல்லூரி முதல்வராகவாவது ஆக்கியிருக்கலாம். கொள்கைப் பரப்புச் செயலாளராம்.... அவர் மீது ஏன் இப்படி ஒரு வெறுப்பு உங்களுக்கு??

//அவரது தம்பியான நான் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும், இதுவரை திருமணமே செய்து கொள்ளாதவர்களுக்கும் விரைவில் அரசு செலவில் இலவச திருமணம்//
அர்த்தம் எங்கோ பலமாக இடிக்கிறதே ஐயா!!! இதுவும் ஒரு விதமான புரட்சியோ??

kothandapani said...

Very fine imagination. Only one thing is missing.. Rahuls reaction.
Rahul will confine himself to UP hereafter

Anonymous said...

Nice thinking! Epadiyo konjam yosichu vote podunga. Yaaruku venalum vote podunga aana DMK ku podatheenga.

Anonymous said...

If DMK wins, everything mentioned in the post will happen.