பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 06, 2011

சன்டேனா இரண்டு (6-03-11) செய்தி விமர்சனம்


இந்த வாரம்..."ஒரு பேட்டி, ஒரு உரை".

செய்தி # 1

பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் நடத்திய "பஸ் டே" கொண்டாட்டத்தின் போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு, காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதில், பெண் காவலர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதில், அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மாணவர்கள் "பஸ் டே" கொண்டாட தடை விதிக்கபட்டது.

தடையை மீறி, சென்னை பிரெசிடென்சி கல்லூரி மாணவர்கள் "பஸ் டே" கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்ஸை கல்லூரி வளாகத்திற்குள் கொண்டு செல்ல முயன்றனர். இப்போதும், அங்கு நின்று இருந்த பெண் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

போலீசின் அத்துமீறல்களை கண்டித்து, பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் மத்தியில் கடுமையான கசப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த "பஸ் டே" பற்றி மாணவர்கள் கருத்து என்ன?

எனக்கு தெரிந்த, சென்னையில் படிக்கும் பச்சையப்பா உட்பட சில கல்லூரி மாணவர்களிடம், நான் தொடர்பு கொண்டு "பஸ் டே" சம்பவங்கள் தொடர்பாக நான் கேட்ட கேள்விகளும், அவர்கள் தந்த பதில்களும் இங்கே...

கேள்வி : "பஸ் டே" என்றால் என்ன?

மாணவர்கள் : மூன்று அல்லது நான்கு வருடங்கள் கல்லூரிக்கு, இதே பேருந்தில், இதே வழித்தடத்தில் காலையும்,மாலையும் சென்றுவருகிறோம். பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும் எங்களின் நெருங்கிய நண்பர் கூட்டத்தில் ஒன்றாகவே ஆகிவிடுகின்றனர்.

கல்லூரி காலத்தின் இறுதி நாளை Farewell Party என நாங்கள் கொண்டாடும்போது ஏற்படும், 'இவர்களை மீண்டும் எப்போது சந்திப்போம்' என்ற ஏக்கமும், பிரிவுத்துயரும், "பஸ் டே" கொண்டாடும் நாளில் இருக்கிறது. இதே பேருந்து,இதே நண்பர்கள், இதே வழித்தடம் மீண்டும் இந்த நாட்கள் வருமா? அதற்காகத்தான் "பஸ் டே".

இதை, அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.

கேள்வி : "பஸ் டே" எப்படி கொண்டாடுகிறீர்கள்?

மாணவர்கள் : அந்த நாளில், பேருந்தை அலங்காரம் செய்வோம். ஆடல், பாடல் என மிகவும் சந்தோஷத்துடன், நாங்கள் தினமும் சென்று வரும் வழித்தடத்தில் செல்வோம்.

நடத்துனர்க்கும், ஓட்டுனருக்கும் புத்தாடை எடுத்து கொடுப்போம். அவர்களை கேட்டுபாருங்கள். ஏதோ ஒரே வகுப்பில் படித்ததை போன்று,அன்பை பரிமாறிக்கொள்ளும் அந்த நிமிடங்களின் அருமையை.

பஸ் முழுக்க மாணவர்களாகிய நாங்கள் மட்டுமே இருப்போம். எங்களின் வாழ்நாளில், நீங்கா இடம் பெறப்போகும் கல்லூரி கால வாழ்வில், மிகவும் முக்கியமானது "பஸ் டே".

நீங்கள் நன்கு கவனித்து கொள்ளுங்கள். "பஸ் டே" கொண்டாடும் அந்த நாளில், பேருந்துக்குள் பயணிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.

கேள்வி : பஸ் டே என்ற பெயரில், போக்குவரத்து நெரிசலை உண்டாக்குவது என்ன நியாயம்?

மாணவர்கள் : நாங்கள் செல்லும் பேருந்து, அன்றைய தினம் மெதுவாகத்தான் செல்லும் என்பதை ஒப்புகொள்கிறோம். முடிந்தவரை, போக்குவரத்து நெரிசல் வாராமல்தான் இருக்கும். காரணம், பஸ் எங்கும் நின்று விடுவதில்லை. ஒரு ஓரமாக மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு, சென்று கொண்டுதான் இருக்கும். அப்போது, போக்குவரத்து நெரிசல் எப்படி ஏற்ப்படும்?

அப்படியே கொஞ்சம் போக்குவரத்து நெரிசல் வருவதாக வைத்துக்கொள்ளுங்கள்.எதோ, ஆண்டுக்கு ஒருமுறைதான் நாங்கள் "பஸ் டே" கொண்டாடுகிறோம்.

சவ ஊர்வலம் என்ற பெயரில், போக்குவரத்து நெரிசல்கள் இல்லாத ஒரு ஊரை சொல்லுங்கள் பார்ப்போம்.

முதல்வர்,அமைச்சர்கள்,முக்கிய அரசியல்வாதிகள் செல்லும்போதெல்லாம் தினசரி சாலையை அடைத்து விடுகிறார்களே. அதை, யார் தட்டிக்கேட்பது? அப்போது மட்டும் உங்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லையா??

கேள்வி : அன்றைய தினத்தில், பெண் பயணிகளை கிண்டல் செய்வதுண்டா?

மாணவர்கள் : கேள்வியே தவறு. எந்த கல்லூரி, எந்த மாணவர்கள் "பஸ் டே " கொண்டாடினாலும், அன்றைய தினம், பயணிகள் யாரும் பஸ்ஸில் இருக்கமாட்டார்கள். மிகவும் மெதுவாக, மாணவர்களின் உற்சாகத்தோடு செல்லும் பேருந்தில், பயணிகள் எப்படி வருவார்கள்?

கேள்வி : பஸ்சின் மேலே ஏறி நின்று சட்டையை கழற்றிவிட்டு ஆடுவது ஏன்? உயிர்க்கு உத்தரவாதம் இல்லாத இந்த ரகளைகள் ஏன்?

மாணவர்கள் : அது தவறுதான். ஆனால், எல்லா கல்லூரி மாணவர்களுமே இப்படி நடப்பதில்லையே. எதோ ஒரு காவல் நிலையத்தில், கற்பழிப்பு நடந்துவிட்டது என்பதற்காக, ஒட்டுமொத்த காவல்துறையினருமே குற்றவாளிகள் என்று கூறமுடியுமா? மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?

கேள்வி : பச்சையப்பா கல்லூரி நடத்திய "பஸ் டே" அன்று, பேருந்தில் இருந்து பீர் மற்றும் குவாட்டர் பாட்டில்கள் இருந்தது என்று கூறப்படுவது குறித்து?

மாணவர்கள் : குடிப்பது தவறு, சட்ட விரோதம், கலாச்சார கேடு,உடல்நல கேடு என்று என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.இன்றைக்கு, குடிப்பதை நமது அரசே மூலைக்கு மூலை கடை திறந்து, ஊக்குவிக்கிறதே. அது மட்டும் என்ன நியாயம்.அதை தடுக்க முடியுமா உங்களால்?

எந்த கட்சியின் அரசியல் கூட்டமாக இருந்தாலும், அதில் பேசும் அரசியல்வாதிகளும் சரி. அதில் கலந்து கொள்ளும் அடிபொடிகளும் சரி. குடித்துவிட்டுதானே வருகிறார்கள். ஏன், அவர்களை யாரும் தடுக்கவில்லை.

கேள்வி : "பஸ் டே" அன்று, நீங்கள் செல்லும் பேருந்தின் பின்னால், காவல்துறையினர் வாகனங்களில் பின்தொடர்ந்து, பாதுகாப்புக்கு வருவது...?

மாணவர்கள் : தேர்தலில் வென்றவன், தோற்றவன், ஊழல் வழக்கில் சிக்கியவன், போலி சாமியார்கள் இவர்களுக்கு எல்லாம் பின்னால் செல்லும் காவலர்கள், ஒரு நாள் மட்டும் எங்களுக்காக மாணவர்கள் பின்னால் வந்தால் என்ன சார்?

கேள்வி : "ஜேப்பியார் போன்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இப்படி நடப்பதில்லை. 'ஓசியில்' படிக்கும் மாணவர்கள்தான் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடுகிறார்கள்" என்று ஒரு பேட்டியில் எஸ்.வி.சேகர் தெரிவித்து இருப்பது பற்றி....? (நம்ம இட்லிவடை பேட்டிதாங்க)

மாணவர்கள் : அபத்தமான உளறல். ஜேப்பியார் போன்ற கல்லூரியில் படிக்கும் மாணவர்களை கேட்டுபாருங்கள். அவர்களுக்கும் இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டும் என்ற ஆசைகள் இருக்கின்றன. நிர்வாகம் அனுமதிப்பதில்லை, அவ்வளவுதான்.

அரசு கல்லூரிகள் மட்டும் இல்லாமல், அனைத்து தனியார் கலை மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களும் தங்களுக்கு என்று பயன்படுத்தும்கல்லூரி பஸ்ஸை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். எங்களுக்கு என்று அரசு பேருந்துகள்தான் இருக்கின்றன.
லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் ஜேப்பியார் போன்ற கல்லூரிகளுக்கு ஆதரவாகவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை இழிவாகவும் பேசி சாரி உளறி இருக்கும் எஸ்.வி.சேகரை வன்மையாக கண்டிக்கிறோம்.

கேள்வி : பச்சையப்பா மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள், பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்களை தாக்கியது குறித்து?

மாணவர்கள் : இதுதான் காவல்துறை எதிர்பார்த்தது. அரசியல்வாதிகளுக்கு பின்னால் சென்றால், அவர்களுக்கு பலன் இருக்கும். "பஸ் டே" அன்று எங்கள் பின்னால் வருவது அவர்களுக்கு முன்பிருந்தே விருப்பம் இல்லை.

கவனியுங்கள். ஆண் மாணவர்கள் மட்டுமே "பஸ் டே" கொண்டாடியபடி செல்லும் பேருந்துக்கு பின்னால், பெண் காவலர்கள் வரவேண்டிய தேவையும் இல்லை. அவசியமும் இல்லை.ஏன், வந்தார்கள்?

ஆண்கள் கல்லூரியில், பெண் காவலர்களை ஏன் நிறுத்தினார்கள்? ஏன், ஆண் காவலர்களே இல்லையா? இது, வேண்டுமென்றே செய்த செயல். அப்போதுதான், இந்த விவகாரத்தை பெரிது படுத்தி, எங்களின் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க முடியும்.

பெண் காவலர்களை எங்களோடு தேவையின்றி வரவழைத்து, மோதலை உண்டாக்கி, நினைத்தை சாதித்துவிட்டது தமிழக காவல்துறை.

கேள்வி : உங்கள் கொண்டாட்டத்திற்கு எதிராக, பொதுமக்களில் சிலர் பொது நல வழக்கு தொடர்ந்தது பற்றி?

மாணவர்கள் : எங்களின் இளமை,கல்லூரி கால கொண்டாட்டங்கள் ஆகியவற்றை பிடிக்காத சில பெருசுகள், பொறாமை காரணமாகவே இந்த வழக்கை போட்டு இருக்கிறார்கள். கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து ரசித்தவர்கள் கண்டிப்பாக "பஸ் டே" தினத்திற்கு எதிர்ப்பாக இருக்கமாட்டார்கள்.

இப்படிதான், மெரீனா கடற்கரையில் யாரும் கிரிக்கெட் விளையாட முடியாதபடி ஏதோ ஒரு ரிடையர்டு கேஸ் வழக்கு தொடர்ந்து, தடை வாங்கிவிட்டார். அப்பார்மென்ட் நகரத்தில், நாங்கள் எங்கே போய் விளையாடுவது? மைதானங்கள் எங்கே இருக்கின்றன? சந்தடி நிறைந்த தெருவில் விளையாட முடியுமா?

படிப்பு,விளையாட்டு, சின்ன சின்ன ஜாலிகள், அனுபவங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக பஸ் டே, Farewell Day போன்ற கொண்டாட்டங்களால் கிடைக்கும் நினைவுகள், நட்பு இப்படி எல்லாம் சேர்ந்ததுதான் "கல்லூரி வாழ்க்கை"

படிப்பை தவிர வேறு எதுவும் தேவை இல்லை என்றால், எதற்கும் லாயக்கு இல்லாத, மற்ற எந்த அறிவும் இல்லாத ஒரு "மொக்கையான" மாணவ சமுதாயம் மட்டுமே இதனால் எதிர்காலத்தில் உருவாகும்.

அப்படிதான் வேண்டும் என்று திட்டத்தோடு செயல்படுகிறார்கள் காவல்துறையும்,அரசியல்வாதிகளும்.

(நன்றி: சென்னை பச்சையப்பா, ஹிந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் நான் படித்த கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி நண்பர்களுக்கும்)
கேள்வி(உங்களுக்கு) : பஸ் டே மற்றும் மாணவர்கள் பேட்டி பற்றி உங்கள் கருத்து என்ன?

செய்தி # 2
சதாம்,ஒசாமா பின் லேடன் ஆகியோருக்கு முன்பே, அமெரிக்காவால் பரம விரோதியாக பார்க்கப்பட்டவர் லிபிய நாட்டு அதிபர் கடாபி. அமெரிக்காவுக்கு போட்டியாக ரஷ்யா ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த காலத்தில், ரஷ்ய நாட்டின் உற்ற தோழனாக இருந்தவர் அவர். இன்றுவரை லிபியாவை கம்யுனிச நாடாக, அமெரிக்காவை எதிர்த்துக்கொண்டு காலம்தள்ளுபவர். ஆப்ரிக்கா கண்டத்தில் கொடுங்கோல் மன்னனாக அறியப்பவட்டவர்.

சுமார் நாற்பது வருடங்கள் லிபியாவை தனது முழு கட்டுபாட்டில் வைத்திருந்த வேளையில், அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து இருக்கிறது. கிளர்ச்சியாளர்களை அடக்க, அதிரடியாக லிபிய ராணுவத்தை அனுப்பிவிட்டார் கடாபி. மேலும், போராட்டங்கள் செய்பவர்கள் மீது, உலகில் வேறு எங்கும் நடக்காதவரையில், விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறார் கடாபி. அமெரிக்காவும், ஐ.நாவும் லிபியா மீது போர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதை அடுத்து அவர் லிபிய நாட்டு தொலைகாட்சியில் தோன்றி, அவர் ஆற்றிய உரைதான் இன்று உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

"நான் எக்காரணத்தை முன்னிட்டும் அதிபர் பதவியில் இருந்த விலக மாட்டேன். அவ்வாறு விலகுவதாக இருந்தால், என் உயிர் பிரிந்தபின் தான் அது நடக்கும்" என்று தெரிவித்தார் கடாபி.

"அரபு நாடுகளில் அமைதியின்மையை தூண்டிவிடுபவர்களை நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்" என்றவர், "நான் மண்ணின் மைந்தர்களான, அரேபிய இனத்து மாவீரன்" என்று முழங்கி இருக்கிறார் அவர்.

"லிபியா நாட்டில் மறுமலர்ச்சியை நான் கொண்டுவந்தேன்.ஒரு வீரதியாகியாக நான் இந்த மண்ணில் மரணமடைவேன்" என்று உறுதியுடன் அறிவித்தார் கடாபி

லிபியாவின் சில நகரங்கள் ஏற்கனவே கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக தெரிகிறது.

"நீங்கள் முயம்மர் கடாபியை விரும்புவதாக இருந்தால், உடனே சென்று, லிபியாவின் தெருக்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்".

"லிபியா பெருமையை,புகழை விரும்புகிறது. உலகமே நிமிர்ந்து நோக்கும் சிகரமாக விளங்க போகிறது. நான் போராளி. புரட்சி கூடாரத்தில் இருந்த வந்து, இறுதியில் ஒரு பெரும் தியாகியாக மரணமடைய போகிறேன் " என்ற அவரது உணர்ச்சிகரமான உரையை கேட்டு, கிளர்ச்சியாளர்களும், அரபு நாடுகளின் மன்னர்களும் கூட திகைத்து போய்விட்டனர் என்கிறது அல்ஜசிரா தொலைகாட்சி.
ஆண்டாண்டு காலமாக மன்னர்கள்,அவரது வாரிசுகள் ஆகியோரின் ஆட்சியே அரபு நாடுகளில் நடந்து வருகிறது( இங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்?).

முதலில், துனிசியாவில் மன்னருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்தது. அதன் வெற்றியை தொடர்ந்து, எகிப்தில் பெரும் புரட்சி ஏற்ப்பட்டு, அதுவும் வெற்றி அடைய, தொடர்ந்து தற்சமயம் லிபியா,பஹ்ரைன், ஓமன், ஈரான், ஈராக்,கத்தார் என ஒட்டுமொத்த அரபு நாடுகளிலும் பெரும் போராட்டங்கள் வெடித்து இருக்கின்றன மன்னர் ஆட்சிக்கு எதிராக.

இவை எல்லாமே அமெரிக்காவின் சதிவேலை என்கின்றன அரபு நாட்டு பத்திரிக்கைகள்.

லிபியாவில் இருக்கும் சுமார் 16 , 000 இந்தியர்களை அழைத்துவர தனி விமானங்கள் மற்றும் கப்பல்களை இயக்கிவருகிறது நமது அரசு.
கப்பல் எப்போது அங்கு சென்று அடையும் என்று தெரியவில்லை. ஏற்கனவே, அங்கு நடக்கும் உள்நாட்டு கலவரத்தில் சிக்கி, நெல்லை மாவட்ட தமிழர் ஒருவர் இறந்துவிட்டார்.

அங்கு இருந்து வந்த முதல் விமானத்தில் இறங்கியவர்கள் எல்லாருமே, அங்கு நன்கு சம்பாதிக்கும், மேனேஜர் போன்ற பணியில் இருப்பவர்களாக தெரிகிறார்கள். அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில்,ஒரு சிலர் மட்டுமே அந்த விமானத்தில் இருந்தார்கள். இதிலும், பாரபட்சமா என்று தெரியவில்லை.


(நன்றி, இனி,அடுத்த வாரம்).

-இன்பா

15 Comments:

Madhavan Srinivasagopalan said...

இன்றைய விலைவாசி நிலைமையில் பசங்களை படிக்க வெக்கிறதே கஷ்டம்.. அதுல அவனுக பஸ் டெ, டிரைன் டெ கொண்டாடுறதுக்கு தேவையில்லாம பெற்றோர்கள் செலவு செய்யணுமா ? அபத்தம்..

ஒழுங்கா படிச்சி முடிச்சிட்டு வேலைக்கு போனப்புறம்.. அந்த டிரைவர் கண்டக்டரோட இருப்பிடம் தெரிந்தால் உங்க சம்பாத்யத்துல டிரெஸ் வாங்கி.. கொடுங்க.. அதுதான் நீங்க நன்றி செலுத்தும் சரியான விதமாகும்...

ஒன்னோட பையன் நாளைக்கு பஸ் மேலே நின்னுகிட்டு பஸ் டெ கொந்டாடும்போது ஒரு பெற்றோரா, உங்க பெற்றோரோட மன நிலை தெரியும்....

இப்ப, பெற்றோரின் மனநிலையை உங்களால் அறிய முடியாது..
ஆனால், பெற்றோர் (உங்க பாஷையில 'பெரிசு') உங்க வயது மாணவ பருவத்தை கடந்து வந்தவர்கள்.. அந்த பருவத்தினருக்கு எது நல்லது எது கேட்டது என்பது இப்போது கண்டிப்பாக தெரியும் அவர்களுக்கு (பெரிசு)

saravana said...

கத்தார்//// தவறான தகவல் . இங்கே மக்களே இல்லை வேற எப்படி போராட்டம் நடக்கும்.

Anonymous said...

ஆஹா! எப்படிப்பட்ட தலைவர்கள் வரும் காலத்தில் வரப்போகிறார்கள்!(எப்படி 'திறமையாக' பதில் அளிக்கிறார்கள் பாருங்கள்!)உடல் புல்லரிக்கிறது.---
ஒரு "பெருசு"

Anonymous said...

மாணவருடைய இந்த கொக்கரிப்பெல்லாம் ஒண்ணுக்கும் லாயக்கில்லாத தொடைநடுங்கி இட்லிவடை கிட்டதான். தைரியமிருந்தால் எங்கள் அண்ணன் SV சேகர் வீட்டுக்கு முன்னால் மாணவர்கள் வந்து ஆர்பாட்டம் செய்யமுடியுமா! நறுக்கிடுவோம்ல.

S V சேகர் காங்கிரஸ் அணி, மந்தைவெளி.

Anonymous said...

If Jeppiyar can do it. Govt can do the same.but they dont want to.
since govt always looks for a minority voting block... be it based on caste, relegion, profession, etc.

it's just against law and if police can be given free hand, they can stop this.

hayyram said...

//பஸ் டே மற்றும் மாணவர்கள் பேட்டி பற்றி உங்கள் கருத்து என்ன?// சுத்த ரௌடித்தனம்!

hayyram said...

இதேபச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவன் அதே பஸ்டே கொண்டாட்டட்த்தில் கலந்து கொண்டு அதை மொபைலில் படம் பிடித்து காட்டி கூறிய விஷயங்கள்...

1. பேருந்தில் நெரிசலின் போது சிக்கிய ஒரு இளம் பெண்ணை மோசமாக தொட்டுத்தடவி ஆடை கிழித்து அனுப்பினார்கள்.

2.வழியில் தென்பட்ட ஐஸ் விற்பவரின் தள்ளுவண்டியை மறித்து முழு அந்த வண்டி நிறைய இருந்த ஐஸ்க்ரீமை காலி செய்தது.

3. அதே போல ஒரு கூழ்விற்கும் தள்ளுவண்டிக்காரரை அப்படியே அப்புறப்படுத்தி கூழை காலி செய்தது.

4. ரோட்டில் செல்லும் வண்டிகளுக்கு முன்னால் நின்று செல்லவிடாமல் ஆட்டம் போடுவார்கள். அவர்கள் கோபப்பட்டால் வண்டிகளின் மீது பலமாக தட்டி உடைத்துவிடுவோம் என்று பயமுறுத்துவது..

இப்படி பல இத்யாதிகள். இதற்கு பெயர் முழு ரௌடித்தனம்.

R.Gopi said...

பஸ் டே என்ற அராஜக கொண்டாட்டம் சம்பந்தமான என் பதிவு இதோ :

"பஸ் டே” - அராஜக கொண்டாட்டங்கள்
http://jokkiri.blogspot.com/2011/02/blog-post_23.html

Anonymous said...

ஆண்டாண்டு காலமாக மன்னர்கள்,அவரது வாரிசுகள் ஆகியோரின் ஆட்சியே அரபு நாடுகளில் நடந்து வருகிறது( இங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்?).

Anonymous said...

ஆண்டாண்டு காலமாக மன்னர்கள்,அவரது வாரிசுகள் ஆகியோரின் ஆட்சியே அரபு நாடுகளில் நடந்து வருகிறது( இங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்?).

super

ஷண்முகா said...

நீங்கள் செய்தது தவறல்லவா? என்று கேள்வி கேட்டால் அவர்கள் தவறு செய்கிறார்கள் இவர்கள் தவறு செய்கிறார்கள்...அவர்களை எல்லாம் கேட்பதில்லை எங்களை மட்டும் ஏன் கேட்கிறீர்கள் - என்று பதில் சொல்வதில் இருந்து ஒன்று தெளிவாகப் புரிகிறது, செய்வது தவறு என்று இவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. ஒரு தமிழ் சினிமா வசனம் நினைவிற்கு வருகிறது - அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன். இது அறிவுள்ளோர் செய்யும் செயலா? ஒருவன் தவறு செய்தால் அதைப் பார்த்து அந்த தவறைத் தான் செய்யாமல் திருத்திக் கொள்வதுதான் பண்பட்ட மனித குணம். மாணவர்களுக்கு மட்டுமல்ல எல்லா மக்களுக்கும் படிப்பு பணம் இவற்றை விட ஒழுக்கம் மிகவும் முக்கியம்

சீனு said...

பொருக்கித்தனம்...

Anonymous said...

இன்பா இது முழுக்க முழுக்க கற்பனைப் பேட்டி. இன்பாவின் கற்பனை வளத்திற்கு வாழ்த்துக்க>

அமுதப்ரியன்

Anonymous said...

// பஸ் டே மற்றும் மாணவர்கள் பேட்டி பற்றி உங்கள் கருத்து என்ன? //

இருவத்தி ஐந்து வருசத்துக்கு முண்ணாடி நாங்களும் கொண்டாடினோம் ஆனா இவ்வளவு அராஜகம் இல்லை. பஸ்க்கு மேல இல்ல, பஸ்க்குலுள்ள தான் இருப்போம் ஆனா விசுலும் பாட்டு சத்தமும் தூள் பறக்கும். யாரும் குடிபதில்லை பெண் பயணிகளை தொல்லை பண்ணுவதும் இல்லை.

Harish said...

இது மாணவர்களின் ஒழிங்கீனமான நடத்தை என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது. ஆனால் குடிப்பது பற்றி இவர்கள் பகிர்ந்ததை ஒதுக்கிவிடமுடியாது. குடித்துவிட்டு வண்டி ஒட்டுவது தவறு என்பது எல்லோருக்கும் தெரியும். போலிஸ்க்கு நன்றாகவே தெரியும். திருனீர்மலை ரோட்டில் ஒரு போலிஸ் ஸ்டேஷசன் இருக்கிறது. எதிர்புறம் ஒரு ஒயின் ஷாப். பெரிய கடை பக்கத்தில் ஒரு சிறிய கடை. இரண்டிற்கும் மத்தியில் தான் போலிஸ் ஸ்டேஷசன் இருக்கிறது. ஒயின் ஷாப் வாசலில் எப்பொழுதும் ஒரே வாகன மயம்தான். two wheeler, four wheeler எப்பொழுதும் வியாபாரம் ஓகோ ஓகோ தான். நற்றாக குடித்து விட்டுதான் வண்டியை எடுப்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த போலிஸ் ஸ்டேஷசன் சாலை விபத்துக்களுக்கு என்று இயங்குவது போலிருக்கிறது. குடித்துவிட்டு வண்டி ஒட்டி பீஸ் ரோட்டில் மாணவி மரணம். கல்லூரி மாணவியர் சாலை மறியல் என்று படிக்கும் பொழுது நம் வயிறு பற்றி எரிகிறது. என்ன பொறுப்பு காவல் துறைக்கும் இந்த அரசுக்கும்? முனி மலர், சனிமலர் என்று எதிலாவது..திமுக ஜெயித்தது என்று கற்பனை செய்தியை படிக்கும் நமக்கு கலக்குகிறது...இன்னும் என்னவெல்லாம் பார்க்கவேண்டுமோ..இந்த திருநாட்டில்...