பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 31, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 31-3-2011

அன்புள்ள இட்லிவடை,

சம்மர் சூடு தகிக்குமுன் சும்மாத் தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. நீ எஸ்.வி.சேகர் பேட்டி எடுத்துப் போட்ட வேளை அவருக்கு சீட் கிடைக்காமல் தங்கபாலுவின் மனைவிக்குக் கிடைத்தது. ஆனால் 2B மனுக்களில் அந்தம்மா கையெழுத்துப் போடவில்லையாம். 'கை'யெழுத்து போட தெரியாதவர் எப்படிக் கை சின்னத்தில் நிற்கத் துணிந்தார் என்று தெரியல. அதனால் இப்போ அந்த தொகுதியில் தலையெழுத்தே என தங்கபாலுவே போட்டி போடுகிறாராம். என்னாமாப் பிளான் பண்ணி இருக்காரு! இந்த நேரத்தில் இளங்கோவன் எங்கே போனார் என்று தெரியவில்லை. திமுக முக்கிய தலைவர்களே பயந்துக்கொண்டு சென்னையை விட்டு ஓடி போய் படிக்க தெரியாத கிராம மக்கள் இருக்கும் இடத்தில் நிற்கிறார்கள். இதற்கு தான் நாலு எழுத்து படிக்க தெரிந்திருக்க வேண்டும். நாலு எழுத்து வேண்டாம் அட்லீஸ்ட் இரண்டு எழுத்து அதும் 2G இது படிக்க தெரிந்தால் போறும் மக்கள் புத்திசாலியாகிவிடலாம்.


கருணாநிதியின் கை சுத்தம். "கடைசியாக ஒரு ஏழை தமிழ்நாட்டில் இருக்கும் வரையில், ஏழைகளுக்கான இலவசத் திட்டங்களை நிறுத்த மாட்டேன். ஏழைக்காக நான் செய்கின்ற இந்த காரியங்களை பரம ஏழைகளுக்காக செய்யும் இந்த காரியங்களை நான் நிறுத்த மாட்டேன். என்னை இந்தப் பதவியிலே உட்கார வைத்ததற்கான காரணம் என்னை வாழவைப்பதற்காக அல்ல" என்று சொல்லுகிறார். கலைஞர் டிவிக்கு 200 கோடி, ஸ்பெக்டரம் போன்ற ஊழலில் விசாரிக்கப்படும் கட்சி இப்படி பேசுவது வேடிக்கை, கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? இப்படிக் கேட்கப் படும் கேள்விகளுக்கும் அண்ணன் ரெடியா பதில் வெச்சு இருக்காரு. கலைஞர் டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. என்னோட பெயரை மட்டும்தான் வெச்சு இருக்காங்க. எனது மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி சரத் குமார் ஆகியோருக்கு தான் அதில் பங்குகள் உள்ளன என்று தெளிவா இன்று ஒரு ஆங்கில டிவியில் பேட்டி குடுத்து இருக்காரு.


தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்து சில நாட்களே ஆன நிலையில் தேர்தல் ஆணையம் இன்று கோர்ட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க போலீஸ் அதிகாரிகளே ஜீப்பில் பணம் கடத்துகிறார்கள் என்று கூறியுள்ளது. இதில் திடுக்கிட ஒன்று இல்லை, இதுவரை வாகன சோதனை தொடர்பாக 2900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை மீறியதாக 48 ஆயிரம் வழக்குகள் பதிவாதி உள்ளன. போலீஸ் ஜீப்பில் பணம் கொண்டு சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளது. ஆனால் அந்த போலீஸ் இலாகாவுக்குத் தலைவர் "தேர்"தலில் நிற்கிறார்.


இந்த லக்ஷணத்தில் கருணாநிதி போட்டியிடுவதால் திருவாரூர் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று கனிமொழி பிரச்சாரம் செய்கிறார். ஆக இவர் 234 முறை முதலவர் ஆனால்தான் தமிழ்நாடே முன்னேற்றம் அடையும். அதுவரை ஸ்டாலின்தான் துணை முதல்வர் கவலைப்படாதீர்கள். ஆக இதுவரை திருவாரூர் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பது தெளிவாகிறது.


எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட். தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த தொகுதியில் நிற்பவர் கை கூப்பி நிற்கிறார். இரண்டு கேள்விகள். 1. அப்படி நிற்கும் போது அவர் மனநிலை எப்படி இருக்கும்? 2. அவருக்கு மூக்கு நுனியில் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்வார்? இந்த பழக்கம் எப்போது வந்தது என்று யாருக்காவது தெரியுமா?


எனக்கு இன்னுமொரு பெரிய டவுட். விஜய்காந்துக்கு ஜெ பிரச்சாரம் செய்யும் போது கேப்டன் இப்படி கை கூப்பி நின்று கொண்டு இருப்பாரா? இன்று கூவத்துடனா கூட்டணி வைக்க முடியும்? நான் நேசித்த கட்சியிடந்தான் கூட்டணி என்று அவர் பேசி இருப்பதைப் பார்த்தால் நின்னாலும் நிப்பாரு என்றுதான் தோணுது.


மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லாப்டாப் என்று எல்லாம் கொடுத்தாலும் பவர் கிடைக்குமா ? பவருக்கு வருபவர்கள் இதை பற்றி பேச மாட்டார்கள். எல்லோரும் விவசாயி ஆனால் தான் இலவசமாக மின்சாரம் கிடைக்கும். பேசாமல் எல்லோருக்கும் ஒரு இன்வர்டர் கொடுத்தால் நிச்சயம் இவர்களுக்கு ஓட்டு உண்டு. இப்ப வடிவேலு பேசிவது தான் ஹாட் டாப்பிக். இவர் பேசுவது நெகடிவ், சேர்ந்திருப்பது இன்னொரு நெகடிவ். இப்படி இரண்டு நெகடிவ் சேர்ந்தால் எப்படி கரண்ட் வரும்? ஆனால் இவர்கள் பவருக்கு வந்தால் நமக்கு நிச்சயம் ஷாக் அடிக்கும்.


மரம் வெட்டி விட்டு பசுமை தாயகம் சார்பில் மரம் வைக்கிறார் என்று ஒருவர் பேச, உடனே இந்த நடிகருக்குச் சொல்கிறேன். என்னை பற்றியோ எனது கட்சியை பற்றியோ இனி பேசினால், நான் பேச மாட்டேன். எனது தொண்டன் பதில் சொல்வான். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ராஜ்ய சபா சீட், தொண்டனுக்கு அடி என்பது அரசியல் நியதி.

"நான் வேட்பாளரை அடித்துவிட்டதாக ஊரெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள். அட ஆமாய்யா... நான் என் ஆளைத்தான் அடிச்சேன். என் கையில் அடிவாங்குபவன் நாளை மகாராஜா ஆவான்" என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அப்ப ஜெயலலிதாவை தான் அவர் அடிக்கணும். அப்ப தான் அவர் முதல்வராக முடியும்.. அரசியலில் அடிவாங்குவது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்கிறார் சோ. உண்மையாக இருக்கலாம், திராவிட கட்சிகள் கூட ஆள் வைத்து தான் அடிப்பார்கள், அல்லது அவர்கள் தோட்டத்துக்கு கூப்பிட்டு அடிப்பார்கள். ஆனால் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொள்ளும் இவர் தீவிரவாதிகளை அடிக்கிறாரோ இல்லையோ தன் உடன் இருப்பவரை போட்டு சாத்துகிறார். இவரை பற்றி வடிவேலுவின் நாகரிகமற்ற பேச்சு கூட சரிதானோ என்று தோன்றுகிறது. தேமுதிக வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் இலவச ஹெல்மெட் கொடுக்க சிபாரிசு செய்கிறேன்.

இப்ப பொறுப்பு உள்ள ஒரு நியூஸை பார்க்கலாம் மதுரை அண்ணாநகர் பகுதியில் இருக்கும் ஜான் தன் வீட்டுக்கு முன் இப்படி தொங்க விட்டு இருக்கிறார். இவரை போல எவ்வளவு பேர் செய்வார்கள்?

காந்திய வழியில் நேர்மையான வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்; காந்திய பிரசார குழுவை தொடங்கி வைத்த நரேஷ்குப்தா "காந்திய கொள்கை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரவேற்க கூடியது. மக்களுக்கு காந்தி என்றதுமே ராஜீவ்காந்தி, சோனியா காந்திதான் நினைவுக்கு வருகிறார்கள். மகாத்மா காந்தி நினைவுக்கு வரவில்லை. காந்திய வழியில் நடக்க முயற்சி செய்ய வேண்டும். அவர் பாதையில் நடக்க முன்வர வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் பணம், பிரியாணி, பரிசு பொருட்களை வாங்க கூடாது. தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய வேண்டும்" என்கிறார். ஆக ராஜிவ், சோனியா எல்லாம் காந்திய வழியில் இல்லை என்கிறார்.

சிங்கமுத்து தேமுதிகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருகிறார். ஓரிரு நாளில் அவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். திரையில் வடிவேலுவை காமெடியாகத்தான் பார்த்திருக்கிறீர்கள். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அதை தோலுறித்து காட்டப்போகிறேன் என்று புறப்பட்டுள்ளார் இன்னும் சில நாட்களில் ஜெயா மற்றும் கேப்டன் டிவிகளில் நாற்றம் அடிக்கத் தொடங்கிவிடும். சிங்கமுத்து அசிங்க முத்துவாக மாறிவிடுவார்.


நாடு வாழ நாம் புரிந்த சாதனைகளை சொல்லியிருக்கிறேன். அனுபவித்துவரும் தமிழக மக்கள் காட்டப்போகும் நன்றியை எதிர்பார்த்து நிற்கிறேன் என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார். இந்த நியூஸ்க்கு கீழே "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது." என்று வந்திருக்கிறது. நன்றி தமிழர்கள் பண்பாடு, டெல்லிக்காரர்களுக்கு தெரியாது.


"பொண்ணு எப்படி?" என்று ஒருவர் கேட்க "மீனாக்ஷி சேஷாத்ரி மாதிரி" என்று பதில் சொல்லுவார் இன்னொருவர். கேள்வி கேட்டவர் மீனாக்ஷி சேஷாத்ரி மாதிரி இருந்தால் பரவாயில்லை, ஆனால் சேஷாத்ரி மாதிரி இருந்தால்?" என்பார் அது மாதிரி குஷ்பு "'என்னை மாதிரி புசுபுசுன்னு குழந்தை பிறக்கணும்னா, கலைஞருக்கு ஓட்டுப் போடுங்க. கர்ப்பிணிப் பெண்களுக்கு பத்தாயிரம் கொடுக்கப் போறதா சொல்லியிருக்கார்.." என்று பேசியுள்ளார் குஷ்பு. குஷ்பு மாதிரி பிறந்தால் ஓகே வடிவேலு மாதிரி பிறந்தால்? மக்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.


இப்படிக்கு,
முனி


தேர்தல் சிறப்பு பக்தி படங்கள்(நன்றி: ஜூவி)


15 Comments:

Anonymous said...

!!!!நான் வேட்பாளரை அடித்துவிட்டதாக ஊரெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள். அட ஆமாய்யா.....!!!!!!
இவனயெல்லாம் பதவில ஒக்காரவெச்சா நாடு வெளங்குமா? என் கட்சி என் வேட்பாளர் அத்னால என்க்கு உரிமையுண்டுன்ன,நாளைக்கு பதவிக்கு வந்து ஒரு அரசு ஊழியரையோ அல்லது அதிகாரியையோ அடித்து விட்டு,என் கவர்மெண்ட் என் அதிகாரி, என் மக்கள் அதனால எனக்கு யாரையும் அடிப்பதற்கு உரிமையுண்டுன்னு பேத்துவான்போல!! இந்த நாதரிங்கெல்லாம் அரசியல்ல இருக்குறவரைக்கும் தமிழ்நாடு உருப்படாது!வேற என்னத்த சொல்ல?

Anonymous said...

dear idlyvadai, is bloging ur full time job ?

Anonymous said...

Blue comment is in poor taste.

அமுதப்ரியன் said...

/*
கிழக்கு மொட்டைமாடி மார்ச் 31 இன்று மாலை 6.30 பத்திரிகையாளர் ஞாநி தேர்தல் பற்றிப் பேசுகிறார். இட்லிவடையில் வீடியோ இன்று இரவு 10:30க்கு வரும்.
*/

இப்போது எல்லாமே புரிந்து(புரிந்து) விட்டது.

அமுதப்ரியன்.

Black said...

//காந்திய வழியில் நேர்மையான வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்; காந்திய பிரசார குழுவை தொடங்கி வைத்த நரேஷ்குப்தா "//

இங்கேயும் சன்னா ?? (SUN TRAVELS)

Roaming Raman said...

//"நான் வேட்பாளரை அடித்துவிட்டதாக ஊரெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள். அட ஆமாய்யா... நான் என் ஆளைத்தான் அடிச்சேன்//
அந்தக் காலத்தில் தன் எம் எல் ஏ வோ,அமைச்சரோ தப்பு பண்ணினால், எம்.ஜி.ஆர் தோட்டத்துக்கு வரவழைத்து BELT எடுத்து பின்ன்னுவார் என்று சொல்வார்கள்..இவர்தான் கருப்பு எம்.ஜி.ஆர் ஆச்சே..அதே பாணியோ என்னவோ தெரியல.
//இருக்கும் ஜான் தன் வீட்டுக்கு முன் இப்படி தொங்க விட்டு இருக்கிறார். இவரை போல எவ்வளவு பேர் செய்வார்கள்?//
இப்போதான் சென்னை அம்பத்தூரில் ஒரு மாருதி கார் பின்னால் ஒரு வேட்பாளர், எனக்கு விசில் சின்னத்தில் ஓட்டு "போடாதீர்கள்" என்று விளம்பரம் செய்து கொண்டு சுற்றுகிறார்!!தேர்தல் பற்றி இதில் விச்சித்திரமாக யாரோ எழுதியிருக்காரு பாருங்க!

http://sagamanithan.blogspot.com/

Anonymous said...

//கவலைப்படாதீர்கள் - மஞ்சள் கமெண்ட் தொடரும்.. !??//


என்னய்யா?? சொல்லாததையும் செய்கிறீரா.. வண்ண மாற்றத்திக்கு உள்குத்து ஏதாவது காரணமா??

க்ருஷ்ண பாகவதர் said...

சினிமாக்காரங்க அரசியல்வாதியானா இப்படித்தான்.

ஜெவுக்கு முன்னாடி சேர் போட்டு உக்கார முடியாது, காலில் விழுந்து எந்திரிக்கனும்னு குறை சொன்னாங்க. அது பரவாயில்லைன்னு ஆக்கிட்டார் விஜய்காந்த். நாகரீகமில்லா காட்டான் கட்சியில வேட்பாளரா நின்னா தலைவர்கிட்ட அடி உதை வேற வாங்கனுமா! இப்போதே இப்படின்னா இவரு முதலமைச்சர் சட்டசபையில தினசரி ஸ்டண்ட் காட்சிதான். கனல் கண்ணன், மற்றும் இதர சினிமா ஸ்டண்ட் டைரக்டர்களும் இனி அரசியலுக்கு வர வேண்டியதுதான்.
பாக்கிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த பேசாமல் விஜய்காந்தை அனுப்பலாம்

Anonymous said...

///இந்த நேரத்தில் இளங்கோவன் எங்கே போனார் என்று தெரியவில்லை. ///
இப்போது ( 9pm) இளங்கோவன் ஈரோடு மீடிங்கில் பேசுகிறார். (அதுவும் கலைழர் அரசை பாராட்டி)
பாமர மக்கள் புத்திசாலிகள்( மெத்த படித்த பட்டணத்து மேதாவிகளை விட) தி. மு. க. அணி அமோக வெற்றி அடைய போகிறது.

Anonymous said...

இ.வ

ப்ளு கமெண்ட்தான் இருக்கறதுலேயே டாப். மஞ்சளுடன் இனி ப்ளூ கமெண்டும் தொடரட்டும்.

G.Annamalai murugan said...

'என்னை மாதிரி புசுபுசுன்னு குழந்தை பிறக்கணும்னா, கலைஞருக்கு ஓட்டுப் போடுங்க. ---குஷ்பு(Tamilnattu kannaki)

பாரதசாரி said...

கருணாநிதி- ஜெயலலிதா மோதலுக்கு வடிவேலும் - சிங்கமுத்துவும் காமெடி ட்ராக் போடறாங்களா? வெளங்கிடும் நாடு...

பாரதசாரி said...

//'என்னை மாதிரி புசுபுசுன்னு குழந்தை பிறக்கணும்னா, கலைஞருக்கு ஓட்டுப் போடுங்க//
ஓ இப்போ பணத்துக்கு பதிலா இப்படி எறங்கிட்டாரா கலைஞர்?

cho visiri said...

//இரண்டு எழுத்து அதும் 2G....//
2G is not "இரண்டு எழுத்து".It is Alpha-numeric.
'eNNum Ezhuththum kNNenath Thagum'.

cho visiri said...

//இரண்டு எழுத்து அதும் 2G....//
2G is not "இரண்டு எழுத்து".It is Alpha-numeric.
'eNNum Ezhuththum kNNenath Thagum'.