பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 27, 2011

சன்டேனா (27-03-11) இரண்டு செய்திவிமர்சனம்

இந்த வாரம்..."தத்துவமும், கடவுள் சித்தாந்தமும்".

செய்தி # 1

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழுகிறாய்?

எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.

-பகவத் கீதையின் சாரம்

மாமன்னன் அலெக்சாண்டர், உலக நாடுகள் அனைத்தையும் தன் காலடியில் கொண்டுவந்த மாபெரும் அரசன். தனது வெற்றிப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினான். தன் தாயின் முகத்தை பார்க்க ஆவலுடன் விரைந்தான்.

ஆனால்,கிரீக்கு போகும் வழியிலேயே நடக்கவும் இயலாத அளவுக்கு கொடும்நோய்க்கு ஆளானான். தனது பணம்,படைகள், கொள்ளையடித்த சொத்துக்கள் யாவும் அர்த்தமற்று போனதை அவன் உணர்ந்த அந்த நிமிடம்.....

அலெக்சாண்டர் தி கிரேட் ஞானம் பெற்ற அந்த நிமிடம்...அவனது வாழ்க்கையில் மிகவும் அர்த்தமிக்கது...அவனது வெற்றிகளை காட்டிலும் மகத்தானது.

மரணத்தின் அழைப்பை உணர்ந்த அவன்,அப்போது அவனது உதவியாளர்களுக்கு தனது கடைசி ஆசைகளை மூன்று கட்டளைகளாக பிறப்பித்தான்.

ஒன்று, தான் இறந்த பின் தனது சவப்பெட்டியை தனது உடற்ப்பயிற்சியாளர்கள் மற்றும் போர்ப்பயிற்சியாளர்கள் சுமக்கவேண்டும்.

இரண்டு, கல்லறைக்கு தனது சவப்பெட்டி செல்லும் வழியெங்கும், அவன் தனது நாடுகளை வென்றதின் மூலம் சம்பாதித்த தங்கம்,வெள்ளி,வைரம் போன்ற கற்களை புதைக்க வேண்டும்.

மூன்று, அவன் தனது கடைசி ஆசையாக கூறியது "எனது திறந்திருக்கும் இரண்டு கரங்களும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு தொங்க விட படவேண்டும்".

தனது இந்த விசித்தரமான மூன்று கடைசி ஆசைகளுக்கு அவன் சொன்ன காரணங்கள்..."இவைகள்தான் இதுவரை நான் கற்ற பாடங்கள்..எனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு கிடைக்கும் படிப்பினைகள்" என்றான் அவன்.

முதலில் சொன்ன ஆசைக்கு காரணம்...."இந்த உலகில் மனிதனின் நோயை எந்த ஒரு மருத்துவனாலும் குணப்படுத்த இயலாது. சாவில் இருந்து ஒருவனை யாராலும் தடுக்க இயலாது".

இரண்டாவதாக சொன்ன ஆசைக்கு காரணம்...."எவ்வளவோ செல்வத்தை குவித்தும், நாடுகளை வென்றும் கடைசியில் எதுவும் கூட வராது".

மூன்றாவதாக சொன்ன அவன் ஆசைக்கு காரணம்...."வெறுங்கையோடு வந்தேன் வெறுங்கையோடு செல்கிறேன் என்ற எனது வாழ்வின் தத்துவத்தை உலகம் புரிந்து கொள்ளவேண்டும்".

இதே தத்துவத்தை அவன் காலத்துக்கு முன்பே பகவத்கீதையின் சாரம் சொல்லி இருப்பது இப்போது உங்களுக்கு புரிகிறதா??


மாவீரன் அலெக்ஸாண்டரின் தனது வாழ்வில் இருந்த கற்ற பாடங்களும், பகவத் கீதையின் சாரமும் ஒன்றாகவே இருக்கிறதே.


செய்தி # 2
கடவுள் ஒரு பெரும் சக்தி என்றால், அவரிடம் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று இது வேண்டும் என்று கேட்பதும் , நிறைவேற்றினால் அதற்க்கு பிரதிபலனாக நேர்த்திகள் செய்வதும் ஏன்? என்று கேட்டார் ஒரு நண்பர். கடவுளுக்குதான் எல்லாம் தெரியுமே?

இதற்க்கு மேற்கத்திய தத்துவத்தில் பதில் இருக்கிறது. எம்.ஜி. காப்மேயர் அவர்கள் எழுதிய, உலகில் மிகவும் புகழ் பெற்ற "நீ விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி" என்ற புத்தகத்தில் பதில் சொல்லப்பட்டு இருக்கிறது.

அதாவது, நாம் ஒரு விஷயத்தை அல்லது ஒரு குறிக்கோளை அடைய விரும்பினால், முதலில் நமக்கு என்ன வேண்டும் என்று நாம் உணரவேண்டும். இரண்டாவதாக, நாம் அதை அடைந்துவிடுவோம் என்று முழுமையாக நம்ப வேண்டும்.

உதாரணதிற்கு, இமயமலை அடிவாரத்தில் வெற்று உடம்போடு, அந்த கடும் குளிரை எளிதாக சமாளிப்பத்தின் ரகசியம்...அவர்கள் கடவுள் உண்டு, இறை சக்தி நம்மை பாதுக்காகிறது என்று உறுதியாக நம்புவதால்தான்.

நான் இறைவன் சந்நிதியில், எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வதாக வைத்து கொள்ளுங்கள். அத்தருணம், எனக்கு வேலைக்கு செல்லவேண்டும் என்கிற ஆர்வமும், தெளிவும் இருக்கிறது. அதுவே, முயற்சி என்னும் கதவுகளை திறக்கும். தகுதிகளை வளர்க்கும் அல்லவா?

அதாவது, இறை நம்பிக்கை என்பது ஒரு மிக சிறந்த நேர்மறையான நம்பிக்கை(positive thinking). தன்னம்பிக்கைக்கான தூண்டுதல் என்று சொல்லலாம்தானே?
மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்கள், கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கை குறித்து சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 2 மார்ச் 1919 ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு உரையாற்றி இருக்கிறார். அந்த சிறப்பு மிக்க உரை இங்கே..

"‘எல்லா உயிர்களும் ஒன்று’ என்பதை அவர் முதலில் ஸ்தாபித்தார். சக்தி இல்லாமல் வஸ்து இல்லை, வஸ்து இல்லாமல் சக்தி இல்லை’ என்றார் ஹாக்கெல். இவ்வுலகை வியாபித்திருக்கும் தெய்வாம்சத்தின் - பிரபஞ்சசாரத்தின் - இரு அடிப்படையான தன்மைகள் வஸ்துவும் ஜீவனுமாம். (ஹாக்கெல் எழுதிய) ‘புதிர்’ பிரசுரமான பிறகு வேதியியலில் பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஹாக்கெல் தம் ‘புதிர்’ என்ற நூலைப் பிரசுரித்தபோது அணுக்கள், எலெக்ட்ரான்கள் பற்றிய நவீனக் கோட்பாட்டையும் அதன் முழு முக்கியத்துவத்தையும் கணக்கிலெடுத்துக்கொள்ள இயலவில்லை. வஸ்துவின் பிளவுபடாத்தன்மையை எலெக்ட்ரான் கோட்பாடு மிகத் தெளிவாக நிறுவியுள்ளது. மிக அடிப்படையான கூறு மின்தன்மை உடையது என்பது கண்டறியப்பட்டு, வஸ்து என்பது சரீரமற்ற மின்தன்மைகளின் கூட்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘சரீரமற்ற’ எனில் அலௌகீகம் எனப் பொருள்படும்.

லார்மர் மற்றும் லாரெஞ்சு, தாம்சன் மற்றும் ஆலிவர் லாட்ஜ் ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மொத்த விளைவு என்னவென்றால் ‘வஸ்து’ என்பது சக்தியின் செம்மைப்படாத வடிவம் என்பதே. சக்தி என்பது மனத்தின் வெளிப்பாடே என்றும் பிரசங்கி மேலும் கூறினார். வஸ்துவின் முந்திய நிலையே சக்தி என்பதால், மனமே சக்தியின் மூல வடிவமாகும். ஒரு தனி மனம் பிரபஞ்சமாக வெளிப் படுவதில்லை; எல்லாம் தழுவிய பிரபஞ்ச மனமே எப்போதும் தன்னை வெவ்வேறு பிரபஞ்ச - பௌதீக, ஜீவாதாரமான, மனரீதியான, ஆன்மிக - மண்டலங்களாக வெளிப்படுத்திக்கொள்கின்றது. நெருப்பும் வெப்பமும் எங்கும் பொதிந்துள்ளது போலவே, உயிரும் பிரக்ஞையும் பிரபஞ்சத்தில் பொதிந்துள்ளன; ஆனால் சில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே அவை செயல்பட்டு வெளிப்படுகின்றன.

அணுவின் பிரக்ஞை பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்தவர்கள்கூட ஒரு மனிதன் அல்லது தவளைக்கு இருப்பதுபோல் ஓர் அணுவுக்குப் பிரக்ஞை உண்டு என்று கூறமாட்டார்கள். மனம் என்பது சக்தியின் ஒரு வடிவம் என்றார் ஹாக்கெல்; சக்தியே மனத்தின் வெளிப்பாடுதான் என்பதைப் பிரசங்கி நிறுவிக்காட்டினார்.

‘எல்லாம் ஒன்றே. எல்லாம் கடவுள்’ என்பதே ஸ்பினோஸா, கொய்தே, ஷொப்பன்ஹைர், ஷெல்லி ஆகியோரின் நிலைப்பாடு. வேத, உபநிஷத்துகள் மற்றும் எல்லா மதங்களின் ஞானிகள், புலவர்களின் நம்பிக்கையும் அதுவே. இக்கோட்பாட்டை உணர்த்தும் இரணியன், பிரகலாதன் பற்றிய ஒரு தமிழ்ப் பாடலையும் பிரசங்கி பாடினார். நித்தியத்தின் இன்பத்தை அறிந்தவர்க்கு அச்சம் இல்லை. எல்லா உயிர்களின் ஒருமைத் தன்மையும் தெய்வத்தன்மையும் உலக மதங்கள் எதனுடையதன் சாரத்திற்கும் பொருந்தாததன்று. இந்திய துவைதத்தில் சைவ, வைணவ வழிபாட்டு முறைகள் இதற்குப் போதுமான உதாரணங்களாகும். இவ்வுலகம் கடவுளின் வடிவமல்ல, அவனுடைய சிருஷ்டியே ஆகும் என்றாலும்கூட இவ்வுலகின் தெய்வத்தன்மையை எவரும் மறுக்க இயலாது. கடவுளின் கைவண்ணம் தெய்வீகமானதாகவே இருக்கவியலும். தந்தை கடவுளாயிருக்கும் பட்சத்தில் மைந்தன் தவளையாக இருக்க முடியாது.

எவர் ஒருவரும் கடவுளின் மைந்தனாகும் பட்சத்தில் அவனும் கடவுளேயாவான். விஷ்ணு புராணம், ‘நீயே சூரியன்; நீயே கிரஹங்களும்; வடிவம் கொண்டதும் கொள்ளாததும்; காணப்படுவதும் காணப்படாததுமான அனைத்தும் நீயே’ என்று விஷ்ணுவை நோக்கிப் பரவுகின்றது.

வசிஷ்டர் முதல் வாமதேவர்வரை, அரவிந்த கோஷ்முதல் ஸ்ரீமதி அன்னி பெசண்டுவரை ஆன்மிக தேசியவாதிகள் அனைவரும் உண்மையை அதன் தூய வடிவில் நேருக்கு நேர் கண்டனர். ‘இந்த ஒருமைத் தன்மையை அறிவது, எல்லாத் தத்துவங்களின் நோக்கம் மட்டுமல்ல, இயற்கை பற்றிய முழு ஞானத்தின் நோக்கமுமாகும். இறைவனும் உலகமும் ஒன்றே என்ற கோட்பாட்டைச் சில ஞானிகள் கண்டஞ்சியதற்குக் காரணம் பிரபஞ்சம் அழியக் கூடியது, கடவுள் அழியாதவர் என்று அவர்கள் கருதியதாலேயாகும்.

எல்லா வஸ்துக்களும் எல்லா ஜீவன்களும் ஒன்றேயாகவும் தெய்வீகமானவையாக - சமஅளவில் தெய்வீகமானவையாகையால் மனிதர்கள் தேவ, தேவதைகளை அணுகுவதைப் போலவே மக்கள் அனைவரும் எல்லா வஸ்துக்களையும் ஜீவன்களையும் அணுக வேண்டும். உலகின் பல்வேறுபட்ட தன்மையை, அதாவது கடவுளின் எண்ணற்ற வடிவங்களை அவை எதிர்ப்படும் வகையிலேயே கருத வேண்டும். எல்லா வடிவங்கள், வஸ்துக்களின் அடிப்படையான ஒருமையையும் சம தெய்வீகத்தன்மையையும் உணரும் அதே வேளையில் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாமே தெய்வீகம் என்பதால் சக மனிதரைக் கொல்வதோ ஏன் அடிப்பதோகூடத் தெய்வக் குற்றமும் பாவமுமாகும்.

ஆனால் ஒரு கல்லை உடைப்பதென்பது பாவமன்று. ஏனெனில் மனிதருள் உள்ள கடவுள் காயப்படுவார்; கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை. எந்த ஒரு சிருஷ்டியையும் தார்மீகமற்றதெனக் கூறக் கூடாது. எல்லாமே தெய்வீகமானதால், அனைவரும் கடவுளைப் போல் சிந்தித்து, பேசி, செயல்பட வேண்டும். பிரசங்கி பின்வரும் வார்த்தைகளுடன் தன் பேச்சை நிறைவு செய்தார்.

‘நாம் எல்லாரும் கடவுளராக உறுதிபூண்டு வேத தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்போம்'.

எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்மை, அன்பு, வலிமை, உறுதி, விடுதலை, அச்சமின்மை ஆகியவற்றைக் கொண்டிருப்போம். நீங்கள் உங்கள் தெய்வத்தன்மையை உணர்ந்து மற்றவர்களையும் தெய்வங்களாக நடத்தினால் அவர்களும் அவ்வாறே செய்வார்கள். ஏனெனில் அன்பு அன்பை ஈனுகிறது. எந்த உயிரையும் பறிக்காதீர். ஏனெனில் இயற்கை உங்கள் உயிரையும் பறித்துவிடும். எவரையும் துன்புறுத்தாதீர். எல்லார்மீதும் அன்பு செலுத்துக!’

-என்று மனதை தைக்கும் உரையை, சென்னையில் நிகழ்த்தினார் பாரதியார்.

இந்த உரைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.

இந்த நிகழ்ச்சியே மகாகவி பாரதி அவர்கள் கலந்துகொண்ட முதல் பொதுநிகழ்ச்சி மற்றும் இந்த உரையே அவர் ஆற்றிய முதல் சொற்ப்பொழிவு.

(நன்றி, இனி அடுத்த வாரம்)

-இன்பா

14 Comments:

Raja=Theking said...

Good post . . By www.kingraja.co.nr

Raja=Theking said...

Nanthan first

Raja=Theking said...

Neppolean matter super

Shri Hari said...

இன்பா,

ஒரு சிறு ஐயம். எனக்கு தெரிந்து இந்த "எது நடந்ததோ, அது நன்றாகவே" என்று கூறப்படும்
பகவத் கீதையின் சாரம் எப்படி வந்தது என்று எனக்கு புரியவில்லை. எனக்கு பகவத் கீதை பற்றி ஆழ்ந்த அறிவு இல்லாவிட்டாலும் இது உண்மையில் பகவத் கீதையின் சாராம்சமாக எனக்கு படவிலை. என்னை பொறுத்தவரை எந்த பலனையும் எதிர்பாராது தனது கடமையை ஒரு மகனாக, நண்பனாக , கணவனாக, தந்தையாக, குடிமகனாக இருக்க வேண்டும் என்பதே.

உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

கொசுறு செய்தி: கிருஷ்ணர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பான யாதவ வகுப்பை சேர்ந்தவர். மேலும் அவர் மன்னனாகவும் இருந்தார். இதன் படி அனைத்து சாதியினரும் இந்த நாட்டை ஆட்சி செய்து உள்ளனர் என்று தெரிகிறது.

Anonymous said...

இந்த மாதிரி ஒரு செய்தி பகவத் கீதையில் இல்லவே இல்லை. யாரோ காலண்டர் வியாபாரி ஒருவர் பிழைப்பிற்காக ”கீதாசாரம்” என்று கிருஷ்ணர், அர்ஜூனன் படம் போட்டு மேற்கண்ட செய்தியை எடுத்து விட்டிருக்கிறார். சோ அவர்கள் இதைப் பற்றி மிகத் தெளிவாக தன்னுடைய மஹாபாரதம் தொடரில் (அல்லயன்ஸில் கிடைக்கிறது) குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மையும் கூட.

கீதாசாரம் இதுவல்ல.

”உனக்குப் பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் விருப்பு, வெறுப்பற்று, பலன்களின் மீது ஆசை, நிராசையின்றி உன் அனைத்துக் கடமைகளையும் செய்து வருவாயாக” - இதை கீதாசாரத்தில் ஒரு துளியாகக் கொள்ளலாம்.

- ஞானசூன்யம் அநங்கன்

க்ருஷ்ண பாகவதர் said...

இரண்டு மோசமான கூட்டணிகளில் எதை தேர்ந்தெடுப்பது என்று மனம் குழம்பும் வேளையில் இது போன்ற தத்துவரீதியாக யோசிப்பதன் மூலம்தான் மனதுக்கு நிம்மதி கிடைக்கும் என்று இன்பா நினப்பது சரியே. எப்படியும் நாம் நினத்தது நடக்கப் போவதில்லை என்பது புரியும்போது சென்னை பாமரர்களின் ‘இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலுயா. எதுக்கு இப்படி அடிச்சுகறானுவளோ’ எனும் தத்துவத்தின் நிழலில் புகுவதே எது நடப்பினும் தமிழர்களை ஒரு வித disattached நிலையில் நிம்மதியாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனா க்ரைண்டர் இலவசமா யார் குடுத்தாலும் லைன்ல நின்னு வாங்கிக்குவோம்.. ஆமா இப்பவே சொல்லிட்டேன்.

Mahesh said...

அருமையான பதிவு ! நாம் பலரும் நினைப்பது போல் ஆன்மிகமும் விஞனமும்
வேறு வேறு அல்ல. இந்த பதிவில் கூற பட்டுலத்தை போல் “God’s Particle” என்பது “சுத்தவெளி ” . அதைதான் வேதங்களும் , மதங்களும் கடவுள் என்று கூறுகின்றன.அந்த ‘சுத்தவெளி’ ஆனது என்றுமே ஒரு sophisticated scientific instrument கொண்டு அறிய இயலாது .காரணம் மிகவும் எளிமையானது . அணைத்து வின்ன்யநிகளும் விண்ணை (atom ) கொண்டுதான் ஆராய்கிறார்கள் .இது அதனினும் நுண்ணிய மூல பொருள்.இதற்கு ஒரு கருவி உண்டென்று சொன்னால் அதுதான் மனம். அதைத்தான் வள்ளுவர் “நுன்மான்னுளைபுலன்’ என்று கூறுகிறார். அதை அறிகின்ற அறிவுதான் கடவுள் என்றும் தன் திருக்குறளை ஆரம்பிக்கின்றார்.
2 ) “Philosophy without science is blind and Science without philosophy is Lame -Einstein”
Philosophy kum science kum ulla gap இங்குதான் வருகின்றது.கீழ்க்கண்ட url பார்க்கவும்.
http://www.youtube.com/watch?v=27L11z28v8s
3 ) வேதாத்ரி மகரிஷி யின் இறை நிலை விளக்கத்தை புரிந்து கொண்டு , திருக்குறள், பகவத் கீதை , வேதம், பைபிள், குரான் ,புத்திசம், ராம கிருஷ்ணா பரமஹம்சர், விவேகனந்தர்,ரமணர், , சித்தர் பாடல்கள் என எதை படித்தாலும் அதன் உள்ளர்த்தம் நன்றாக விளங்கும்.
எல்லோருமே ஒரே விசையதைதன் சொல்லுகிரர்கள் என்பதும் எங்குமே முரண் இல்லை என்பதும் அழகாக விளங்கும்

Shri Hari said...

Mahesh, cycle கேப்பில் இப்படி முழு பூசணி காயை சோற்றில் மறைப்பது உங்களுக்கே ஓவராக தெரியவில்லை. பாரத கலாச்சாரம் என்றும், சனாதன தர்மம் என்றும், ஹிந்து மதம் என்றும் அழைக்கப்படும் கோட்பாட்டில் இருந்து உருவான திருக்குறள், பகவத் கீதை , வேதம், ராம கிருஷ்ணா பரமஹம்சர், விவேகனந்தர்,ரமணர், , சித்தர் பாடல்கள் முதலியன ஆன்மிக துகள்கள் பற்றி தெளிவாக விளக்குகிறான் என்பதை நான் முழுமையாக ஏற்று கொள்கிறேன். அதாவது, அனைத்தும் இறை வடிவத்தின் மாறுபாடே... இதற்கு ஒரு சிறந்த உதாரணம், யார் எந்த ரூபத்தில் எந்த வடிவில் வணங்கினாலும் கடைசியில் என்னையே அடைகின்றனர் என்று கிருஷ்ணரும், சிவனார் சிவனார் என்று வேறில்லை சிவத்தை உணர்ந்த பின் சிவனார் சிவன் ஆயிட்டு இருப்பர் என்ற திருமுலர் பாடலும் விளக்கும். நமது கோட்பாட்டின் படி இறைவன் வேறு மனிதன் அல்லது இயற்கை வேறு என்று ஒன்று இல்லை. அனைத்தும் ஒன்றே. அதனை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும் என்று. அதனாலேயே, இந்த பாரத கலாச்சாரம் என்றுமே எந்த பிற கோட்பாடுகள் அல்லது பிற மதங்கள் பொய் என்றும் அதன் வழியே இறைவனை அடைய முடியாது என்றும் சொன்னது கிடையாது. அதனாலேயே ஒரு தெய்வம், ஒரு புத்தகம், ஒரு கோட்பாடு என்ற முறை இங்கு இல்லை. இந்த கோட்பாட்டுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு தெய்வம், ஒரு புத்தகம் ஒரு கோட்பாடு கொண்ட பைபிள் மற்றும் குரான் எந்த இடத்தில் ஆன்மிக துகள்கள் பற்றி அதாவது அனைத்தும் ஒன்றே என்று கூறுகிறது என்று உங்களால் விளக்க முடியுமா? பிற வழிபட்டு முறையாலும் இறை நிலை அல்லது மோட்சத்தை அடையாளம் என்பதை ஏற்று கொள்கிறத. அப்படி என்றால் அதற்கு ஏதேனும் ஒரு உதாரணத்தை கூற இயலுமா? அப்படி முடியாவிட்டால், தயவு செய்து அனைத்து மார்கமும் ஒன்றே என்று கூறாதீர். ஏன் எனில் மத்தம் வேறு மதம் வேறு.

rawanan said...

ஏன் சார் எலெக்சன் நேரத்தில இப்படியா ஜோக்கடிச்சு வயித்த பதம் பாக்குறது ?

Mahesh said...

//சிவனார் சிவனார் என்று வேறில்லை சிவத்தை உணர்ந்த பின் சிவனார் சிவன் ஆயிட்டு இருப்பர்// - மிக அருமை !!
ஸ்ரீ ஹரி அவர்களே !! நான் bible அல்லது குரான் படித்தவன் இல்லை . ஆனால் என்னுடைய புரிதலின் படி இங்கு சிவம் என்று சொல்வதையே அங்கு "கர்த்தர்" என சொல்கிறார்கள் . ரமணர் பல இடங்களில் bible இல் இருந்து quotes தருகிறார்."AM That I AM" என்ற பைபிள் வாசகமும் மேலே சொல்லப்பட்ட திருமூலர் வாசகமும் வேறில்லை . இந்த பைபிள் வாசகத்தை மேற்கோளிட்டு விளகிவவர் ரமணர் . மற்றும் ஒரு கேள்விக்கு "பைபிள், கீதை இரண்டும் வேறில்லை என்று கூறி இருக்கிறார் !"
யோகானந்தரின் "ஒரு யோகியின் சுயசரிதம்" முழுவதும் பைபிள் வாசகங்களுக்கான விளக்கங்கள் உள்ளன. மேலும் யோகானந்தரின் குரு யுக்தேஸ்வரர் , பாபாஜி சொல் கேட்டு , பைபிள் மற்றும் பகவத் கீதையின் ஒட்ட்ருமைகள் மற்றும் சாரங்களை எழுதிய புத்தகம் "The Holy Science"
குரானை பொறுத்தவரை , சிவம் என்று சொல்வதையே அல்லா என்று குர்ரிகின்றனர் . முஸ்லிம் மதம் மட்டுமே உண்மையான மதம் என்று உளறிக்கொண்டு இருக்கும் ஜாகிர் நாயக் கூட ஒரு சிறுவனுக்கு அளிக்கும் பதிலில் "அல்லா சுய ஒளியாகவும் இருக்கிறார் , அவரே "reflected light" அகவும் இருக்கிறார் என குரானில் வருவதாக கூறுகிறார் .இது ரமணர்,ஆதி சங்கரர் ,விவேகனந்தர் விளக்கங்களின் சாரம் இதுவேதான்.
//பிற வழிபட்டு முறையாலும் இறை நிலை அல்லது மோட்சத்தை அடையாளம் என்பதை ஏற்று கொள்கிறத.//
இறைவனை அடைவதற்கு , பைபிள் மற்றும் குரானில் சொல்லப்பட்டுள்ள
வழிமுறைகள் எனக்கு எதுவும் தெரியாது.

Shri Hari said...

என்ன சொல்வது என்றே புரியவில்லை. கர்த்தர் என்பது கர்தவ்ய என்ற சொல்லில் இருந்து வருவது. அதாவது எல்லா செயலுக்கும் காரணமாக இருப்பது. அதாவது மரணம், ஜனனம், மகிழ்ச்சி, துக்கம், நன்மை, தீமை என சகலதிற்கும் நானே காரணமாக இருக்கிறேன். இது முழுக்க முழுக்க ஸ்ரீ ஹரிக்கு உகந்தது. ஒவ்வொரு வார்த்தைகளை பகுத்தாலும் அதன் பொருள் விளங்கும். முதல் அணு ஆயுதத்தை வடிவமைத்த
" Robert Oppenheimer " ஜப்பானில் அணு ஆயுத வெடிப்பிற்கு பிறகு, கிருஷ்ணரின் இந்த கருத்தையே மொழிகிறார். www.youtube.com/watch?v=ZuRvBoLu4t0 இந்த கர்தவ்ய என்ற கோட்பாட்டுக்கு சிறிதும் ஒவ்வாத பெயரில் jesus அவர்களை அழைப்பது எந்த விதத்தில் நியாயம்.

AM That I AM என்ற வார்த்தைக்கும் நாம் பேசும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை. நான் பொதுவாக யார் சொல்வதையும் அப்படியே நம்புவது கிடையாது. பகுத்து அறிதலே பகுத்தறிவு.

அல்லா என்ற வார்த்தைக்கும் சிவம் என்ற வார்த்தைக்கும் ஒரு சம்மந்தமே இல்லை. இதன் அர்த்தத்தை 'விக்கிபீடியா' மூலம் தெரிந்து கொள்ளுங்கள். ரமணர் அவ்வாறு எந்த வகையான கேள்விக்கு இந்த பதிலை சொன்னார் என்று எனக்கு தெரியாது. பகவத் கீதைக்கும், பைபிளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இதன் அடிப்படை கோட்பாடுகளே வேறு.

ஏற்கனவே சொன்னது போன்று மதம் வேறு மத்தம் வேறு. தயவு செய்து அனைத்து 'religion ' ஒன்று தான் என்று கூற வேண்டாம் என்று கூறி கொள்கிறேன். அரசியல் வாதிகள் தான் ஓட்டுக்காக இப்படி லூசு தனமாக உளறுவார்கள்.

பிற கோட்பாடுகள் தவறு என்று நான் இங்கு சொல்ல வரவில்லை. அப்படி சொன்னால் அது எனது அடிப்படை ஹிந்து தர்மதிருக்கு எதிரானது. அதனலேயே நமது சான்றோர்கள் பிற கோட்பாடுகளை விமர்சனம் செய்வது கிடையாது. ஆனால் சமத்துவம் என்ற பெயரில் எனது கோட்பாடுகளை கொஞ்சமும் ஓவ்வாத கோட்பாடுகளுடன் சமபடுத்தி பேசுவதை நான் ஏற்க்க இயலாது.

எலக்சன் நேரத்தில் இப்படி ஆன்மீக கருத்துக்கள் பேசுவது கொஞ்சம் ஓவர் தான் :)

படுக்காளி said...

மிக நல்ல பதிவு,

வாழ்த்துக்கள் இட்லிவடை,இன்பா...

All creations are created Twice. once in the mind and then in its physical form.

வஸ்து உருவாக்கப்படும் முன் மனம் அதை உருவாக்குகிறது.

மனம் உருவாக்கும் முன் அதை சக்தி உருவாக்குகிறது.

நாம் எந்த நிலையில் இருந்து பார்க்கிறோம் என்பதே விளைவுகளின் வித்து.

மனம் அருகிலோ, அல்லது சக்தி அருகிலோ சென்று விட்டால் எல்லாம் ஒன்றுதான்.

படர்ந்த அன்பினையே பரப்பிரம்மம் எனலாமா.... உலகெங்கும் உள்ளது ஒரு பொருள் அன்புதான்.

Mahesh said...

Ha ha ha !
Shri Hari ! You are very good of knowing the concepts, excepting that you are caught in "religion".You need not trust my words, as you said analyze things and then move on..
1."Talks with Ramanar" pdfs are free downlodable in net.Download and search for key words ,'bible','jesus'..etc.
2.Yogananthar - read about him in net. His famous book :
http://www.kriyayoga.com/free/eBooks/Autobiography_of_a_Yogi--by_Paramahansa_Yogananda_1946_edition.pdf
is downlodable on net. Defenitely read this, will throw many insights in spritualism.
3. Read about "Shri Yukteshwarar" in wikipedia. and about his book
"The Holy Science". The mention about this book is in Yogananthar's book also.It is believed that Mahavatar Babaji guided Yukteshwar to write this book.
4.As u know, Ramanar,Yogananthar,Yukteshwar,Babaji are born Hindus and have practised the Vedic ways of attaining Almighty and has also achieved it.So their words will defenitely not be a false one.
5.Quran says,
Allah = Almighty
Bhagavat Gita says,
Krihnar = Almighty
Bible says
Christ = Almighty
so,
Allah=Krishnar=Christ=Almighty !!
6.Searh for "Am that I am" words from Ramanar pdf, you will easily understand how the gyst of Thirumoolar and it is the same..
7.Still if u wanna talk more,mail me to crazyansmahesh at gmail

Balaji said...

அனைவரின் கருத்துகளும் சரிேய...காரணம் மனிதன் முதலில் கற்றதையும், முன்னனுபவங்களையும் வைத்தே அனைத்தையும் எடைபோடுகின்றான்,எவரும் தன்னை உயர்ந்தவன் என்றும் அறிவியல் நோக்குடையவன் என்றும் காட்ட முயற்சிக்க வேண்டாம்......