பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 20, 2011

உ.கோப்பை 2011 கால் இறுதிச் சுற்று குறித்து - எ.அ.பாலா

நேற்று நடந்த முக்கியமான 2 ஆட்டங்களில், தெ.ஆ வும், unpredictable பாகிஸ்தானும் வெற்றி பெற்றதில், குரூப் A இடங்கள் நிச்சயிக்கப்பட்டதுடன், க்ரூப் Bயில் தெ.ஆ, இந்தியா, வெ.இ, இங்கிலாந்து என்று 4 அணிகள் தகுதி பெற்று விட்டன. நிஜப்புலி என்று நான் வர்ணித்திருந்த பங்களாதேஷ் புலித்தோல் போர்த்திய சுண்டெலி என்பது எனக்கு சற்று லேட்டாக தெரிய வந்தமைக்கு மாப்பு கேட்டுக் கொள்கிறேன் :)

இன்று நடக்கவிருக்கும் இந்தியா-வெ.இ சேப்பாக்க ஆட்டம் is only of academic interest. அதாவது, இரண்டாவது இடத்தில் இந்தியாவா அல்லது வெஸ்ட் இண்டீஸா என்பதை இந்த ஆட்டம் தீர்மானிக்கும், அதாவது, இந்தியா கால் இறுதிச் சுற்றில் எந்த அணியுடன் விளையாடும் என்பதை. இந்தியா தோற்றால், நமது லட்சணம் தெரிந்து போய் விடும்! ஆனாலும், ever hopeful இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், டிக்கெட்டுக்காக போலீஸ் அடி வாங்கியதை மறந்து விட்டு, எப்போதும் போல பேராதரவு தருவது தொடரும்! இன்றைய ஆட்டத்தில், வெற்றி என்பது இந்திய அணிக்கு ஒரு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும் என்பது நிச்சயம்.

சரி, கால் இறுதிச் சுற்றில் யார் யாரை எதிர்த்து ஆடப் போகிறார்கள் என்று பார்க்கலாம்! இந்தியா இன்று வெற்றி பெற்றால், இந்தியா கால் இறுதியிலேயே, ஆஸ்திரேலியாவை சந்திக்க வேண்டிய (துர்பாக்கிய) நிலை ஏற்படும். சுழற்பந்து வீச்சுக்கு தோதான ஆடுகளம் அமைந்தாலொ மட்டுமே, நாம் அடுத்த சுற்றில் பிழைத்து முன்னேற முடியும். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான எந்த விஷயமும் ஆடுகளத்தில் இல்லாதவாறு இருத்தல் அவசியம்! இவ்வாட்டம், மிர்பூரில் நடைபெறுவதாலும், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலும், ஆடுகள மேட்டர் குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை :)

கால் இறுதி pairings இப்படி இருக்கும்:

பாகிஸ்தான் - வெ.இ
ஸ்ரீலங்கா - இங்கிலாந்து (இந்த ஆட்டம் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்!)
ஆஸ்திரேலியா - இந்தியா
நியூசிலாந்து - தெ.ஆ

இந்தியா வெ.இ யுடன் "சாதாரணமாக" தோற்றால், இந்தியா ஸ்ரீலங்காவை சந்திக்க நேரிடும்! இந்த ஆட்டத்துக்கு சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் அமைப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஈடானது :) ஒரு advantage உள்ளது, இந்தியாவில் நடைபெறும் ஆட்டமிது என்பதால்! சர்தார் படேல் (மோடேரா, அகமதமாத்) தான் காப்பற்ற வேண்டும் :-)

கால் இறுதி pairings இப்படி இருக்கும்:

பாகிஸ்தான் - இங்கிலாந்து (இந்த ஆட்டமும் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்!)
ஸ்ரீலங்கா - இந்தியா
ஆஸ்திரேலியா - வெ.இ
நியூசிலாந்து - தெ.ஆ

இறுதியாக, இந்தியா மகா மோசமாக இன்று தோற்றால், B குரூப்பில் நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, பாகிஸ்தானை சந்திக்க வேண்டிய அதி துர்பாக்கிய நிலையும் வரலாம். அதுவும், நம்மூரில் இல்லை, மிர்பூரில்! இந்த ஆட்டத்தில், எந்த அணிக்கு பங்களாதேஷ் மக்கள் ஆதரவு இருக்கும் என்று மிக எளிதில் சொல்லி விடலாம் தானே :)

என்றென்றும் அன்புடன்
பாலா

17 Comments:

enRenRum-anbudan.BALA said...

Sorry for the incorrect info. on the venue for India's QF match. India will play in Motera irrespective of who the opponent is!

karthik said...

hello boss...please update yourself before you start to criticize the games. It's been announced long back that India will play it's Q/F match in Ahmedabad irrespective of the opposition and the rankings in the table. Also, remember that Aussie's are even not playing a great game. They didn't even have a close game against the stronger teams as like India did. Please think before you write your scrap.

Anonymous said...

/Please think before you write your scrap./
karthik,
you really meant scrap? or one 's' extra?

Anonymous said...

And I totally miss Ram Josiyar's percentage josiyam today

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

அறிவாளி கார்த்திக் அவர்களே
எ.அ.பாலா செய்த தவறுக்கு பிராயசித்தமாக ஒரு கமெண்ட்டில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். குற்றம் கண்டுபிடிப்பதில் நீர் நக்கீரன் பரம்பரையோ :) இன்றைய ஆட்டத்தில் 50 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்த இந்தியாவுக்கு நீர் ஏன் இப்படி குடை பிடிக்க வேண்டும் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. எந்த அணியுடன் ஆடினாலும் கால் இறுதியில் நிச்சயம் இந்தியா ஊத்திக் கொள்ளும்.

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

குசும்பு அனானி
//you really meant scrap? or one 's' extra?
//
ஆங்கில அறிவு சற்று மேம்பட்டிருக்கிறது போல் தெரிகிறதே ;-)

M.G.ரவிக்குமார்™..., said...

//எந்த அணியுடன் ஆடினாலும் கால் இறுதியில் நிச்சயம் இந்தியா ஊத்திக் கொள்ளும்.//....அப்படி நடந்தா நீங்களும் விமர்சனம் எழுதுறத நிப்பாட்டிருங்க!..
அட்லீஸ்ட் அந்த சந்தோசமாவது எங்களுக்குக் கிடைக்கட்டும்.

Anonymous said...

எப்புடியும் இந்தியாக்கு ஆப்பு confirm .....
கண்ணுல இப்பவே கலக்கம் தெரிதே யா ....
confident confident ... just believe in dhoni's luck guides India to the cup ..

என்ன பண்ணுறது இப்புடி எதாவது சொல்லி தான் மனச தேத்திக்க வேண்டி இருக்கு ....

R.Gopi said...

இந்தியா - ஆஸ்திரேலியா காலிறுதி போட்டி பொறிபறக்கும் என்று எதிர்பார்க்கலாம்...

சேவாக் திரும்பி விடுவார்...

Anonymous said...

தலிவா வெ.இ ஜெயிச்சதுக்கு அப்பறமும் உனக்கு சந்தேகம்? don't under estimate our team

Anonymous said...

வெஸ்.இ எதிரான இந்தியாவின் ஆட்டத்தை பற்றி பதிவு ஒன்னும் போடலயே ஏன் ஸ்வாமி? ஒரு வேளை தோற்றால் தான் எழுதுவிங்களா?

Omsri JayaPrakash said...

வெஸ்.இ எதிரான இந்தியாவின் ஆட்டத்தை பற்றி பதிவு ஒன்னும் போடலயே ஏன் ஸ்வாமி? ஒரு வேளை தோற்றால் தான் எழுதுவிங்களா?

Anonymous said...

Comparing to the Anand Vs Tapalov Chess commentary posts by Lalitha Ram, The Cricket world cup coverage by Bala is just rubbish in terms of content, quality and thought process of the posts.

Idly Vadai should be careful in selecting bloggers in future.

Anonymous said...

The ICC CWC commentary posts by Bala are pathetic.

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

Congress working committee (CWC) பத்தி எ.அ.பாலா ஒண்ணும் எழுதினா மாதிரி தெரியலையே. அனாமத்தா கமெண்ட் போட்ட அனானி ஏன் இப்படி patheticஆ பேத்தறாரு ;-)

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

//
The Cricket world cup coverage by Bala is just rubbish
//

இட்லிவடையே Rubbishஆன இடம் என்று இன்னும் இந்த அனானி ஞானிக்கு வெளங்கலையே. எ.கொ.இ.இ.வ :-)

Anonymous said...

People like Bala's rasigar mandram are making idly vadai rubbish.