பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 20, 2011

சன்டேனா (20-03-11) இரண்டு செய்திவிமர்சனம்

இந்த வாரம்...இரண்டு அரசியல் பணம் பற்றிய கதை.

செய்தி # 1

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் வந்து முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார், மகள் கனிமொழி ஆகியோரிடம் விசாரணை நடத்தியது சி.பி.ஐ.
"கலைஞர் டிவிக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்று கலைஞர் டிவி தொடங்கப்பட்ட காலத்தில், ஒரு பேட்டியில் சொன்னார் கலைஞர். ஆனால், தற்போதைய விசாரணையில், அதில் தயாளு அம்மையாரும், கனிமொழியும்தான் முக்கிய பங்குதாரர்கள் என்று தெளிவாகி உள்ளது. மேலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்,கலைஞர் டிவிக்கு சுமார் 200 கோடி ருபாய் பண பரிவர்த்தனம் நடந்து இருப்பதும் தெரிய வந்து உள்ளது.

நமது முதல்வர் இதையெல்லாம் பற்றி கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாமல், தேர்தல் பணிகளில் பிசி ஆகி விட்டார்.

அவருக்கு முன்னால் தனது தனிப்பட்ட பண்புகள் மூலம் நிமிர்ந்து இருக்கிறார் கேரள முதல்வர் திரு.அச்சுதானந்தன்.

பொதுவாக நம்மூரிலும் சரி. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் அதிகம் சொத்துக்கள் இல்லாத, எளிமையானவர்களாக இருக்கிறார்கள். கேரளாவின் முதல்வரும் அப்படியே.

இந்திய அரசியவாதிகள் குறிப்பாக தங்கள் வாரிசுகளை நாற்காலியில் உட்க்கரவைக்க துடிக்கும் அரசியல் தலைவர்களுக்கு பாடம் நடத்தி இருக்கிறார் திரு.அச்சுதானந்தன்.

அவரது மகன் வி.ஏ. அருண் குமார் மீது மொத்தம் 11 குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் சுமத்தின.

அதில், கண்ணூர் பகுதியில் அனல் மின் திட்டம் அமைக்க, தொழிலதிபர் கே.பி.பி.நம்பியாரிடம் லஞ்சம் கேட்டது, பிஎச்.டி.,பட்டம் பதிவு செய்ய போலி சான்றிதழ்கள் அளித்தது, சந்தன மரங்கள் கடத்தும் மாபியா கும்பலுக்கு ஆதரவு அளித்தது, மாநில அரசு கோரி வரும் லாட்டரிச் சீட்டு முறைகேடு குறித்தான வழக்கில் ஈடுபட்டது என்று முக்கியமானவை ஆகும்.
இதுவே, நம் கருணாநிதி ஆக இருந்து இருந்தால், இது ஆரியர்களின் சதி, ஆரிய-திராவிட யுத்தம் என்று "புரட்சிகரமாக" பேசி இருப்பார்.

ஆனால், தற்போது முதல்வராக இருக்கும் அச்சுதானந்தன், தனது மகனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி, போலீஸ் எஸ்.பி., ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும் என, மாநில உள்ளாட்சித் துறைக்கு உத்தரவிட்டார்.

தனது மகனுக்கு தொடர்பு உடைய லாட்டரிச்சீட்டு மோசடி சம்பந்தமாக, சி.பி.ஐ.,விசாரணை கோரி ஒரு கடிதம் எழுதிய முதல்வர் அச்சுதானந்தன். அத்துடன் தனது மகனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்.

மத்திய அரசுக்கு அவரே இந்த கோரிக்கையை முன் வைத்து இருக்கிறார்.

விரைவில் நடைபெறப்போகும் கேரள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அவர் செயல்படவில்லை என்று நாம் சொல்ல வலுவான காரணம்...மத்தியில் இருப்பதும், கேரளாவில் எதிர்க்கட்சிகளாக இருப்பதும் காங்கிரஸ் கட்சியே.

அச்சுதானந்தன், ஒரு அரசியல் தலைவர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.

ஆனால், கேரள முதல்வர் தன் மகன் மீது இப்படி நடவடிக்கை எடுத்தும், அவரது கம்யுனிஸ்ட் கட்சியே அவரது மகன் மீதான குற்றசாட்டுகளை சுட்டிக்காட்டி, வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் அவர்க்கு மீண்டும் வாய்ப்பு தர மறுத்துவிட்டது, தேர்தலிலும் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது.

பின்னர், தனது மகன் மீதான வழக்குகளில் அவரின் நடுநிலைத்தன்மையை உறுதி செய்த பின்னரே, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் தலைமை அவர்க்கு மறுபடியும், மலம்புழா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்து இருக்கிறது.

ஆனால், நம்மூரிலோ, தனது வீட்டின் சமையலறை வரை ஸ்பெக்ட்ரம் விசாரணை வந்தும்,அது பற்றி வாயே திறக்காமல் கடந்த ஆண்டு ஜூன் மாதமே ஒய்வு பெறப்போவதாக அறிவித்து இருந்த கருணாநிதி, திமுக பொதுக்குழு(?) வற்புறுத்தல்(!) காரணமாக, தற்சமயம் மீண்டும் தேர்தலில் களம் காண, திருவாரூரில் போட்டியிட முடிவு செய்துவிட்டார்.

செய்தி # 2

தஞ்சாவூரில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சி எது தெரியுமா?

அங்கு நடக்கும் திராவிட கழக தலைவர், இரண்டாம் பெரியார்(?) திரு.கி.வீரமணியை, ஒரு பெரிய தராசின் ஒரு பக்கம் உட்காரவைத்துவிட்டு, தராசின் இன்னொரு தட்டில் அவரது எடைக்கு எடைக்கு தங்கம் அல்லது பணமுடிச்சுகள் வழங்கும் ஒரு விழாதான் அது.

என்ன ஒரு "முற்போக்குத்தனம்".
அங்குதான் அவருக்கு தங்கமுட்டை இடும் பெரியார் மணியம்மை கல்லூரிகள் இருக்கின்றன. கோடிக்கணக்கான ருபாய் சொத்துக்களை உடைய தனது டிரஸ்ட் எனப்படும் அறக்கட்டளையை காப்பாற்றவே பெரியார் தனது கடைசி காலத்தில் இன்னொரு திருமணம் செய்தார். ஆனால், தற்சமயம் அந்த பெரியார் மணியம்மை டிரஸ்ட்டை நிர்வகிப்பதிலும், அதை பெருக்குவதிலும் கி.வீரமணியை அடித்துக்கொள்ள யாரும் கிடையாது.

நமது கோவிலுக்கு முன்னால் நின்றுகொண்டு, கடவுளையும், அங்கு கோவிலுக்கு வந்த பக்தர்களையும் காட்டுமிராண்டிகள் என்று அவதூறாக பேசிவரும் திராவிட கழக பகுத்தறிவாளர்கள், இதே போன்று ஒரு மசூதிக்கு முன்னால் நின்று பகுத்தறிவை முழங்குவார்களா? நம்மை போல அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா? 'வெட்டி' விடுவார்களே.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்று விளக்கம் தருகிறார்கள் இவர்கள். முதலில், நமது மதத்தில் இருக்கும் 'களையை' எடுக்கவேண்டுமாம்.

கடவுளே இல்லை என்று சொல்பவர்களுக்கு மதம்,சிறுபான்மை,பெரும்பான்மை இவையெல்லாம் எதற்கு?

"நமக்குள் ஒற்றுமையும், பொறாமையற்ற கூட்டுவாழ்க்கை நடத்தும் திறனும், கட்டுப்பாடும் சுயநலமற்ற தன்மையும், பதவி மீது வேட்கையில்லா நிலையும் ஏற்பட்டு விடுமேயானால் நாம் வெற்றி காண்பது மாத்திரமல்லாமல் இந்திய நாட்டிற்கே ஒரு மாபெரும் புரட்சிக்கு வழிகாட்டியாக ஆகிவிடலாம் என்பது உறுதி"

ஜூலை 16, 1939 ஆம் அருப்புகொட்டையில் நடந்த ஒரு திராவிட கழக மாநாட்டில் இப்படி முழங்கினார் தந்தை பெரியார் அவர்கள். ஆனால், அவர் எதெல்லாம் கூடாது என்று அவர் சொன்ன நிபந்தனைகளை, வேண்டுகோள்களை அவருக்கு பின் வந்த திராவிட தலைவர்களும், கி.வீரமணி போன்றவர்களும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

"நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது." - என்கிறார் பெரியார்.

பெரியார் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை அச்சிட்டு தி.க. வெளியிட்டு வருகிறது. இவற்றை அச்சிட்டு வெளியிட பெரியார் திராவிடர் கழகமும் முன்வந்தது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தி.க. தலைவர் வீரமணி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். "பெரியாரின் படைப்புகள் மற்றும் எழுத்துக்கள் அனைத்தும் எங்களுக்கே சொந்தம். அதை வேறு யாருக்கும் தரமாட்டோம். எங்கள் உரிமையை விட்டு தரமாட்டோம்" என்று அப்போது தெரிவித்தார் கி.வீரமணி.

இந்த வழக்கை நீதிபதி சந்துரு விசாரித்து, ‘’பெரியார் படைப்புகளை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது’’ என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து வீரமணி அப்பீல் செய்தார்.அதிலும் அவர்க்கு தோல்வியே கிடைத்தது.

பெரியாரின் கொள்கைகள் பலப்பதிப்புகள் மூலம் பலருக்கு சென்று அடைவதைவிட, வீரமணிக்கு மிகவும் முக்கியம் என்ன புரிகிறதா? அந்த புத்தகங்கள் மூலம் வரும் காப்பி ரைட் வருமானமே.

தந்தை பெரியாரை,அவரது கொள்கைகளை தோற்க்கடித்தவர்கள், இவர்கள் சொல்லும் ஆரியர்களோ, பார்ப்பனர்களோ இல்லை. பெரியாருக்கு பின் வந்த பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களும், திராவிட கழகத்தினரும்தான்.

முன்பு, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அவரின் "ராஜகுரு" என்று தன்னையே அழைத்து கொண்டவர்தான் இந்த வீரமணி.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும்தான், அவருக்கு ஜெயலலிதா ஆரிய இனத்தை சேர்ந்தவர் என்கிற நினைவு வந்தது.

அதிமுக ஆட்சி ஒரு 'மனுதர்ம ஆட்சி' என்று அவர் இப்போது மட்டும் புரிந்துகொண்டு விட்டார்.

"இப்போது நமது வாக்காளர்கள் முன் உள்ள பிரச்சனை, பல்வேறு ஒப்பனைகளுடன் வரும் மனுதர்மத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா அல்லது பெரியார் அண்ணா கண்ட திராவிடர் இயக்க, சுயமரியாதை இயக்க இலக்கு நோக்கிய சமதர்ம ஆட்சியாக அனைவருக்கும் அனைத்தும் என்ற அடிப்படையில், ஐந்தாம் முறையாக பொற்கால ஆட்சியாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கலைஞர் தலைமையிலான சூத்திர பஞ்சம, மனிதத் தர்ம ஆட்சியை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்த, நடைபெற்ற சரித்திர சாதனைகளைத் தொடரச் செய்வதா என்பதேயாகும்"

-இவ்வாறு சமிபத்தில் பேசி இருக்கிறார் கி.வீரமணி.

"ஆரிய ஊடகங்கள், ஏடுகளின் பழி தூற்றல்கள், பொய்யுரைப் பரப்பல்கள், நடக்காதவைகளை ஊழல் குற்றச்சாட்டுகளாக்கிக் காட்டுதல் இவைகளையும் மீறி, முகிலைக் கிழித்து வரும் முழு மதி போல கலைஞர் ஆட்சி மீண்டும் மலரப் போவது உறுதியாகும்!

இவ்வளவு சாதனைகளைச் செய்த ஓர் கட்சிக்கு, ஆட்சிக்கு எதிராக ஆரியம் வரிந்து கட்டி நிற்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுவதுபோல, தன்மானத்தைப் பலி கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும்கூட பொதுவாழ்வில் ஏற்படும். இனமான வேட்கையின்முன் தன்மானம் வெகுச் சாதாரணமானது என்பது அறிவுப் பூர்வமாக சிந்திப்பவர்களுக்குத் தெள்ளத் தெளிய விளங்கும்!." என்றல்லாம் இப்போது அறிக்கை விடுத்து இருக்கும் வீரமணி சென்ற வாரம் பேசியது என்ன தெரியுமா?

திமுக - காங்கிரஸ் உறவு உடைந்து திமுக அமைச்சரவையில் இருந்து வெளியேறிவிட்டதாக கருணாநிதி அறிவித்தபோது,

"இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் திமுக இல்லை. எனவே, இதுபோன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை பெறும் அளவுக்கு திமுக செயல் வீரர்- வீராங்கனைகளுக்கு அவ்வாய்ப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெரு உரு கொள்ள வேண்டும்"

"தமிழ் மானம், தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் தி.மு.க.வின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள்வரை அனைவரும் வரவேற்கும் முடிவாக அமைந்துவிட்டது.பதவிகளைவிட கொள்கைகளே முக்கியம்".

- என்று பேசினார் வீரமணி இதே வாயால்.

முதல்வர் பதவியில் யார் இருந்தாலும் , அவர் ஜெயேந்திரர் ஆக இருந்தாலும், அவரின் முடிவுகளுக்கு ஆதரவாகவே நடந்துகொள்வார் வீரமணி. காரணம், அவர் நிர்வகித்துவரும் பெரியார் மணியம்மை சொத்துக்களுக்கு எந்த வித பங்கமும் வந்துவிடக்கூடாதே என்கிற அக்கறையும், "கொள்கைபிடிப்பும்" தான்..
"நமது கழகத்தில் சுயநலக்காரர்களுக்கு இடமில்லை. கழகத்தில் தன் சொந்த லாபத்தைக் கருதியிருப்பவனுக்கு இடமில்லை. கழகத்திற்காகத் தம் சொந்தப் பணத்தை, சொந்த உழைப்பைச் செலவு செய்பவர்களுக்குத் தான் கழகத்தில் மதிப்புண்டு. கழகத்தினிடம் ஊதியம் பெற்று வேலை செய்பவன் கழகத்தின் வேலைக்காரனாகத் தான் மதிக்கப்படுவான். எவனொருவன் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு அரைக்காசாயினும் கழகத்திற்குச் செலவு செய்கிறானோ அவனைத்தான் நான் என் நண்பனாக, என் துணைவனாக, என் தலைவனாகக் கூடக் கருதுவேன்.

கழகம் பாடுபடுகிறவனுக்குத் தான் சொந்தமே ஒழிய, கழகத்தின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நினைப்பவனுக்கல்ல. கழகத்தின் பேரால் வாழ்க்கை நடத்துகிறவன் கழகத்தின் வேலைக்காரன். கழகத்திற்காகத் தன் காசைக் கொடுப்பவன் கழகத்தின் நண்பன். எவனையும் இந்த உரை கல்லைக் கொண்டு தான் நம் இளைஞர்கள் மதிப்பிட வேண்டும்".

-08.05.1948-இல் தூத்துக்குடியில் திராவிடர் கழக 18-வது மாகாண மாநாட்டில் தந்தை பெரியார்.(நன்றி..இனி,அடுத்தவாரம்).

-இன்பா22 Comments:

Anonymous said...

yes, Achuthananthan shd be appreciated! whereas here in Tamilnadu, see Jaya and karunanidhi!
Jaya, sasi & co looted as much as they can and try to get vaida for all the cases. now karunanihi is also doing the same.

Anonymous said...

after may he go to J Team,bcoz M K HEROINE TOTAL WASTE CONFIRM 234 = 0 dmk, VEERA GO OLD HEROINE HOME

Anonymous said...

Voting explained by Goundamani....
http://www.youtube.com/watch?v=3KWvGx-FWQc

Don said...

Great insight into this unknown chameleon's life. Even the press wouldn't have bothered to analyze this address-less person's background. This shows that his sycophantic behavior towards MK, aren't without any reasons. This guy turns out just like a tamil film villain.

அஞ்சா நஞ்சன் said...

முன்பு யாகவா முனிவர் சொன்னதையெல்லாம் ஜாலியாக படிக்கவில்லியா? அது மாதிரி வீ. சொல்வதையெல்லாம் படித்து சிரித்து விட்டு போங்களேன் இன்பா..

R.Gopi said...

”தல”ய பத்தி புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்லை...

அச்சுதானந்தன் - சூப்பர்...

வீர(மில்லா)மணி பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை...

ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கிக்கொண்டு “சமூக நீதி காத்த வீராங்கனை” என்றார்... பின்னர், இப்போதைய அவரின் நிலையை நாம் அனைவரும் அறிவோம்...

Anonymous said...

Nitish Kumar /Narendra Modi present day examples.
Nirupam Choudry Former CM of Tirupura ( hope i have got/spelt the name right)
Joythi Basu/Buudhadev Bhattachara - current CM of WB -
our own Late Ramamaurthy /Mohan Ex MP
all have showed that power will not corrupt/most communist are generally non corrupt- one cannot expect this from Kazhagams

surya said...

Nitish Kumar /Narendra Modi present day examples.
Nirupam Choudry Former CM of Tirupura ( hope i have got/spelt the name right)
Joythi Basu/Buudhadev Bhattachara - current CM of WB -
our own Late Ramamaurthy /Mohan Ex MP
all have showed that power will not corrupt/most communist are generally non corrupt- one cannot expect this from Kazhagams

ரங்கா said...

என்ன இன்பா, “வீரmoney“ அவர் பேர்லயே தெரியல.

Anonymous said...

IV: Why cant to write the same thing for JJ. She has been into many corruption cases, banned to contest in polls earlier but still she is here in politics...

Anonymous said...

Corrupt Practices were sowed in by DMK's KK and watered and fertiled by AIDMK/PMK .In the process pople are also made to become corrupt by giving freebies. you will hardly find any politicaian in the brand of Nitsh/Narendra modi/NriupamKumar ) formerCM of Tirupura/JoytiBasu/bhudhavdev for next few generations
It is very shame on TN whcih churned out leaders like kamaraj/CR/Kakkan etc. with coalition coming in TN every one will follow the Dharma and coolly blame coalition compulsion like for great PM G

surya said...

let be the people be firm and reject the corrupt practices of parties and vote for a right candidate and should give the taste of defeat to all heavyweights involved in Corruption in all the political parties. then there is a possibility of change wave catching the Politician and bureaucrats and every one. will this happen??? OR else we should all go out as happening now in middle east and Egypt.

கொடும்பாவி said...

படித்த மக்களை என்றும் நம்ப முடியாது - வாயளப்பார்கள், வம்படிப்பார்கள், பெரும்பாலனவர்கள் ஓட்டு போடவே போகமாட்டார்கள்.
படிக்காத மக்களுக்கு அனாசின், அமிர்தாஞ்சன் என இலவசம் கொடுத்து அப்பொதைக்கு அவர்கள் வாய் அடைத்து நிரந்திர ஏழையாக வைத்துக் கொள்வதில் கட்சிகளின் அக்கறை புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் இலவசங்கள் வழங்கும் கட்சிக்குதான் சோற்றிற்காக வாடும் மக்களின் ஓட்டு இருக்கும்.
'திருடானாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'

லெமூரியன்... said...

\\கோடிக்கணக்கான ருபாய் சொத்துக்களை உடைய தனது டிரஸ்ட் எனப்படும் அறக்கட்டளையை காப்பாற்றவே பெரியார் தனது கடைசி காலத்தில் இன்னொரு திருமணம் செய்தார்..........//
வீரமணியை பற்றியும் கருணாநிதியை பற்றியும் விளாசும் இந்த பதிவிலும்
உங்களின் சாதிவெறி வெறிகொண்டு தெறித்து விழுகிறதே????? மேற்கண்ட வரிகளில்..!

அவரொன்றும் கருவறைக்குள் காமக்களியாட்டமோ , அல்லது பீடாதிபதியை
போல உயரதிகாரிகளின் வச்செகரம் குன்றாத மனைவிகளை மயக்கி முயக்கவில்லையே????
மணம் செய்து கொண்டார்.
அதில் என்ன பெர்ர்ரிஈய்யா தவறு எதுவும் தெரியவில்லையே ????

Siraj, Kuwait. said...

Idlyvadai...your recent posts reveals that you are against Muslims. I have been reading this blogspot for the past few years and closely watching the posts. I regret to name you as one of anti-muslim activits. Sorry Idly...the side is too hot for particular people.

Anonymous said...

The Doctor who performed the autopsy of sadiq pasha is standing in elections. He is the son of DMK party official. Now we know how the pathology report will be!!!

Anonymous said...

http://www.facebook.com/notes/tamilar-thalaivan/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-an-engineers-view-on-election-manifestos/119064301504815

Shri Hari said...

லெமூரியன்,
ஒரு தவறுக்கு, இன்னொரு தவறு சரியாகாது.

\\அவரொன்றும் கருவறைக்குள் காமக்களியாட்டமோ , அல்லது பீடாதிபதியை
போல உயரதிகாரிகளின் வச்செகரம் குன்றாத மனைவிகளை மயக்கி முயக்கவில்லையே????
மணம் செய்து கொண்டார். அதில் என்ன பெர்ர்ரிஈய்யா தவறு எதுவும் தெரியவில்லையே ???? \\

செக்ஸ் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். உங்களை பொறுத்தவரை, கருவறைக்குள் இருப்பது ஒரு கல். அந்த கல் முன்பு காம காமக்களியாடம் செய்தால் உங்களுக்கு என்ன? பஜனை செய்தல் உங்களுக்கு என்ன?

எங்களை போன்ற ஹிந்துக்கள் பார்வையில் மட்டுமே கோயிலில் இச்சைக்கு அடிமையாகி புனிதத்தை கெடுக்கும் வகையில் உடல் உறவு கொள்ளுதல் தவறு. இந்த அயோகியர்கள் தண்டிக்க பட வேண்டும். நான் ஆட்சியாளனாக இருந்தால் இந்த நாயை நாட்டாமை பாணியில் இவன் சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்து ஆப்கானுக்கு நாடு கடத்தி விடுவேன்.

ஆனால் இதில் உங்களுக்கு என்ன வந்தது? கல்யாணமே தேவை இல்லாத ஆரிய சடங்கு அல்லவா? அப்படி இருக்கையில் இருவர் விருப்பத்துடன் செக்ஸ் வைத்து கொள்வது என்ன தவறு. இது போன்ற western culture பெரியாரே நேசிதாரே? பெரியாரின் வெளி நாடு சுற்று பயண அனுபவத்தை பற்றிய புத்தகத்தை நீங்கள் படிக்க வில்லையா?
செக்ஸ் என்ன ஒப்பந்தம் போட்டு கொண்டு மட்டும் தான் செய்ய வேண்டுமா என்ன?

இது போன்ற போலி சாமியார்கள் ராமாயண காலத்திலேயே (5124 BC ) உண்டு .

ஒரு போலி சாமியாரை ராமனே (அரசு பதிவு ஏட்டின் படி ராமர் OBC , இரிஸ் நாட்டு கிறித்துவ மத போதகரால் உருவாக்கபட்ட திராவிட கொள்கைப்படி கருப்பு நிறத்தில் இருப்பதால் ராமர் ஒரு திராவிடர்) கொன்று இருக்கிறார் என்று ராமாயணம் சொல்கிறது.

அவ்வளவு ஏன்? இராவணன் ( அரசு பதிவு ஏட்டின் படி இராவணன் ஒரு பார்பனன், FC , இரிஸ் நாட்டு கிறித்துவ மத போதகரால் உருவாக்கபட்ட திராவிட கொள்கைப்படி இராவணன் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அவர் ஆரியன்) போலி சாமியார் வேஷம் போட்டு தான் சீதா பிராட்டியை கடத்தி சென்றான்.

எல்லா காலத்திலும் நல்லவர்களும் உண்டு. அந்த நல்லவர்கள் வேஷத்தில் போலிகளும் உண்டு. இதற்கு ஆன்மிகம் ஒரு விதி விலக்கு அல்ல.

ஊரில் ஒருத்தன் மனைவி எவனுடனோ ஓடி போய்விட்டால் என்பதற்காக தன் மனைவியை பூட்டி வைத்தானாம் ஒரு முட்டாள். ஒரு போலி சாமியார் தவறு செய்தான் என்பதற்காக ஊரில் உள்ள எல்லா சாமியாரும் தவறு செய்தவர்கள் ஆவார்களா?

குறிப்பு: ஹிந்து மதத்தில் செக்ஸ் தவறான விஷயம் அல்ல. ஆனால் அது முறையானதாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தனது மனம் மட்டும் உடலை அடுத்தவரோடு வகிர்தல் தவறு.

இது போன்ற வரை முறைகள் பகுத்தறிவு வாதிகளுக்கு கிடையாதே. அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை. உண்மையில் நாங்கள் தான் கவலை பட வேண்டும்.

For example, நித்தியானந்த உங்கள் பார்வையில் ரஞ்சிதா உடன் உடல் உறவு கொண்டது வன் புணர்வு அல்லவே. இருவர் விருப்ப பட்டு செக்ஸ் வைத்து கொள்வது எந்த விதத்தில் தவறு. ஹிந்து தர்மத்தின் எந்த புத்தகத்திலும் செக்ஸ் ஒரு தவறான விஷயமாகவோ அல்லது மாடத்தி பதிகள் திருமணம் செய்து கொள்வது பாவம் என்றோ சொன்னது கிடையாது. அப்படியே செய்தலும் அது மடத்தின் விதி முறை படி தான் தவறே அன்றி, மனித சட்டப்படி என்ன தவறு? இப்படி இருக்கையில் உங்களை போன்ற பகுத்தறிவை குத்தகைக்கு எடுத்தவர்கள் ஏன் சண்டைக்கு வருகிறிர்கள்?

ஹிந்துக்கள் பார்வையில் செக்ஸ் ஒப்பற்ற மனித பிறவிக்கு ஆரம்பம். அதனால் புனிதமாகவே மதிக்க படுகிறது. ஆனால் அப்ரகமிய மத கோட்பாட்டின் படி செக்ஸ் ஒரு தவறான விசயமே. மனித பிறவிய அவர்கள் பார்வையில் ஒரு பாவி.

ஹிந்து கலாச்சாரத்தில் தான் காம சுத்ரா என்ற உலகின் பழமையான பாலியல் சம்பந்தப்பட்ட புத்தகம் எழுத பட்டது. அந்த காலத்தில் முனிவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

Anonymous said...

எளவு பொன முனிமலர்ல அநங்கனும் இட்லியும் சொன்னது பலிச்சிடும் போல இருக்கே. அநங்கன் வாயில ஆசிட்ட ஊத்து. இட்லி வாயில ஈயத்தை ஊத்துங்க.

சி.தவநெறிச்செல்வன் said...

கேரள முதல்வர் பற்றிய செய்தி இந்த நேரத்தில் குறிப்பிட்டது சரியானதுதான், ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டதற்கு காரணம் வயதும் ஆரோக்கியமும் என்று முதலில் கூறினார்கள். பின்னர் எழுந்த மக்கள் அலையால் பயந்து போய் திரும்ப கொடுத்தார்கள். இது எல்லா தேர்தலிலும் நடக்கும் ஒரு கூத்து. கேரள முதல்வர் ஒரு மக்கள் தலைவர், கட்சி தலைவர் இல்லை, கேரள மார்ஸ்சிட் தலைவர் பிரணாய் விஜயன் எதிர் கோஷ்டி என்பதால் ஏற்பட்ட பிரச்சினை இது. நாம் அச்சுதானந்தன் போன்ற தலைவர்களைப்பார்த்து ஏங்க மட்டுமே முடியும். இந்த தேர்தல் எந்த முடிவைக்கொடுத்தாலும் அது நல்லதாக மட்டும் இருக்கப்போவதில்லை என்பதால் வைகோவின் முடிவு தான் எல்லோருக்கும் நல்லது.

Anonymous said...

என்னடா கொடுமை இது! பின்னூட்டத்துல எது எதுக்கோ சண்டை பொட்டுக்கறாங்க. நானே திருட்டு கூட்டத்துகிட்ட சாவிய கொடுப்பதா குடிகார கூத்தாடி மாஃபியா கும்பல்கிட்ட குடுப்பதான்னு மண்ட காஞ்சி போயிருக்கேன். இவனுங்க வேற!

Anonymous said...

// லெமூரியன்... said...

அவரொன்றும் கருவறைக்குள் காமக்களியாட்டமோ , அல்லது பீடாதிபதியை
போல உயரதிகாரிகளின் வச்செகரம் குன்றாத மனைவிகளை மயக்கி முயக்கவில்லையே????
மணம் செய்து கொண்டார்.
அதில் என்ன பெர்ர்ரிஈய்யா தவறு எதுவும் தெரியவில்லையே ???//

அப்படிங்களா.. தப்பு ஏதும் இல்லீங்களா? சரி, விஷயத்துக்கு வாரேன். --- “’சொத்தைப் பாதுகாக்கவோ, வாரிசுக்காகவோ தான் ஒரு ஏற்பாடு தேவை’ என்றால் எதற்காக சின்னப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்? இயக்கத்திலே இருந்து வரும் என்னைப் போன்ற கிழவிகளை திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே?” --- கேட்டவரு யாரு தெரியுமாங்க... மூவலூர் ராமிர்தம் அம்மையாருங்கோ... அப்போ அவருக்கு வயது 67ங்கோ. பெரியாருக்கு 70ங்கோ. அந்த மாதிரி வயசான ஆள், வயசான பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்காம, குமரிப் பெண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டது ஏனுங்க? அதுக்காக நண்பர் “குல்லுகப் பட்டர்” (உங்க மொழிப்படி) கிட்ட ஆலோசனை செஞ்சது ஏங்கோ? அவர் சொன்னதையும் மீறி கல்யாணம் கட்டிக்கிட்டது ஏனுங்கோ? இது தாங்கோ கேள்வி.

ஆனா, இதுக்கு பதிலா நீங்க என்ன சப்பக் கட்டு கட்டினாலும் தலைவர் கண்டுக்கற மாட்டாருங்க. ஏன்னா, அவர்தான் தன்னோட (தி.மு.க) ஆட்சியில் அரசின் பெண்களுக்கான திருமண உறவு திட்டத்திற்கு ராமாமிர்தம் அம்மையார் பெயரைச் சூட்டி கௌரவிச்சவருங்க.

எதுக்கும் எதுக்கும் முடிச்சிப் பொடுறீங்க நீங்க? வரலாறு ரொம்ப முக்கியமுங்க, சரிங்களா.

- ஞானசூன்யம் அநங்கன்