பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 19, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 19-3-2011

அன்புள்ள கதாநாயகி முனிக்கு,
என்னடா கதாநாயகி என்று சொல்லுகிறேன் என்று பயப்பட வேண்டாம். கவர்ச்சி உடை டான்ஸ் எல்லாம் ஆட சொல்ல மாட்டேன். சும்மா கலைஞர் சொல்லுகிறாரே என்று நானும் சொன்னேன். அவ்வளவு தான். இந்த கடிதம் எழுதும் சமயம் மஞ்சள் கதாநாயகியை லைவாக ரிலீஸ் செய்துவிட்டார்.

"கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை மிக முக்கியமாக கதாநாயகன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்தது. இந்த தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்" என்று முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு என்ன அர்த்தம்? கதாநாயகி மாதிரி கவர்ச்சியாக இருக்கும் என்று அர்த்தமா? சினிமாவில் கொஞ்ச நேரம் மட்டும் வந்துவிட்டு போகும் டம்மி பீஸ் மாதிரி இருக்கும் என்று அர்த்தமா ஒன்றுமே புரியவில்லை. எது எப்படி இருந்தாலும், இந்த முறை கதாநாயகன் கூட்டணி உதிரி கட்சிகள் தான் திமுகவிற்கு காங்கிரஸ் என்றால் அதிமுகவிற்கு தேமுதிக. கொஞ்ச காலம் முன் காங்கிரஸ் மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்று இருந்தால்.....நிச்சயம் கழக ஆட்சிக்கு கொஞ்சம் ஆடி போய் தமிழகத்துக்கு நல்லது நடந்திருக்கும். ஹும். ..

கிட்டத்தட்ட நேற்று 6 மணி நேரம் உதிரிக்கட்சிகள் ஒருவர் பின் ஒருவராக போயஸ் கார்டன் சென்று திரும்பி வரும் போது அதிமுக அணி 234 தொகுதிகளிலும் ஜெயிக்கும் என்று பேட்டி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்கள். 160 தொகுதிகளில் லிஸ்ட் கொடுத்து பிரஷர் ஏற்றிய பிறகு உடனடியாக தொகுதிகளை முடிவு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். இன்று அல்லது நாளை கூட்டணி தொகுதிகள் முடிந்துவிடும். இப்போ வரை எவனும் வைக்கோவைக் கண்டுக்கல. தனக்குக் காரியம் ஆனாப் போதும் இல்லையா? தேர்தல் நாளுக்கு முதல் நாள் தான் இவர்கள் பேச்சுவார்த்தையை முடிப்பார்கள் போல.

இனி அரசியல் தெரியாத சினிமா நடிகர்கள் வாய்க்கு வந்தபடி உளற ஆரம்பிப்பார்கள். ஒரு நிகழ்ச்சியில் குஷ்பு 'வயிற்று வலியால் அவதிப்படுகிறேன்' என்று சம்பந்தம் இல்லாமல் பேசியுள்ளார். குஷ்பு தேர்தலில் சீட் கேட்டு மறுக்கப்படுள்ளதாக தகவல். அதனால் வயிற்றுவலியா என்று குஷ்பு பக்தர்களுக்கு தான் தெரியும். விஜய் அரசியலுக்கு வருவது பற்றி அவர் கருத்து என்ன என்று கேட்டதற்கு "மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது."

அம்மா வீட்டில் எல்லோரும் நாற்காலி நுனியில் பயந்துக்கொண்டு தான் உட்கார வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அ.தி.மு.க-வுக்கும் தொகுதி பங்கீடு கையெழுத்தான சமயம்... போட்டோகிராபர்கள் பேட்ச் பேட்சாகப் பிரிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டனர். முதல் முறை போட்டோகிராபர்கள் உள்ளே புகுந்தபோது, இருவரும் எழுந்து நின்று போஸ் கொடுத்தார்கள். அடுத்த பேட்ச் உள்ளே நுழைய எழுந்து நிற்க முனைந்தார் நல்லகண்ணு. ஜெயலலிதாவோ, 'நீங்க சும்மா சும்மா எந்திரிக்க வேண்டாம். அவங்க போட்டோ வாங்கிக்குவாங்க...’ என்று சொல்லி போட்டோகிராபர்களைத் திருப்பி அனுப்பினார் அம்மா! வயதுக்கு மரியாதை. இந்த செய்தி ஜூவி உபயம்

இவ்வளவு பரபரப்பாக இருக்கும் தமிழக தேர்தல் களத்தில் பி.ஜேபி காணாமல் போய்விட்டது தான் பரிதாபம். அப்படியும் வலைப்பதிவில் ஒருவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு போடுங்கள் என்று பின்னூட்டம் போடுகிறார். ( பொன் ராதாகிருஷ்ணனே கூட இருக்கலாம்) உங்களுக்கு $100,0000 பரிசு விழுந்திருக்கிறது என்று வரும் மெயிலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

நேற்று நம்ம ப்ளாகில் ஓட்டுப் பெட்டி வெச்சதப் பார்த்தாயா? ஓட்டு போடலை என்றால் சைடுல போட்டுவிட்டு மீது படிக்கவும். இங்கே விழும் ஓட்ட்டுக்கள் அனைத்தும் நகரப் பகுதியில் அல்லது வெளி நாடுகளில் பொழப்பு நடத்தும் மக்கள் போட்டதாகத்தான் இருக்கும். அதனால் உனக்கு ஒரு வேண்டுகோள். உனக்குத் தெரிந்த மக்கள் யாராவது கிராமப் பகுதிகளில் மக்களின் தேர்தல்/ஓட்டுப போடும் மன நிலையை அறிந்து சொன்னால் அதையும் வலையேற்றலாம் என்று எண்ணி இருக்கேன். யாராவது இருக்கிறார்களா ?

இன்று ஸ்டாலின் கொளத்தூரில் தேர்தல் வேலையை ஆரம்பித்தாராம். அதில் முதல் வேலை அவரின் தாய்க் கழகத்தைச் சேர்ந்த தந்தை பெரியாரின் தம்பி வீரமணியைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்கினேன் என்றார். வேண்டி இருக்கே.

முடிக்குமுன் ஒரே ஒரு செய்தி. மைலாப்பூரில் எஸ்வி சேகர் மீண்டும் நிற்க முதல் ஆளா விண்ணப்பம் கொடுத்தாராம். அவரும் மைலாப்பூரோட நிறுத்திட்டா தமிழகம் பூராவும் பிராச்சாரம் செய்ய காங்கிரசில் யார் இருக்கா என்று வருத்தமா இருக்கு.

கருணாநிதி கொஞ்ச நேரம் முன்னாடி தன்னோட கதாநாயகியை அறிமுகப்படுத்தினாரு. நாட்டை அழிக்கும் முடிவில் இருந்து மாற்றம் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை தெளிவா சொல்லிட்டாரு. காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டம், கச்சத்தீவு மீட்பு போன்ற இவை அனைத்தும் நடக்காததற்கு அவர்களின் தாமதம், அக்கறையின்மை காரணம் இல்லையாம். எவனோ முட்டுக் கட்டை போட்டானாம். எம்புட்டுத் தெளிவாப் பேசறாரு, இத விடக் காமெடி நதி நீர் இணைப்பு குறித்து தொடர்ந்து வலியுருத்துவாராம். வலிக்குது. மக்களைப் பிச்சைக் காரர்கள் ஆக்கியே ஒட்டு பெற்று விடும் திட்டம் தீட்டி அதை நல்ல முறையில் செயல் படுத்தும் இந்த அரசு, இந்த முறையும் அதை பெரிய ஸ்கேலில் தொடரும் என்று அறிவித்து இருக்காரு. தாய்மார்களின் கஷ்டம் அறிந்தவராம் அவர். அதனால் வீட்டுக்கு ஒரு கிரைண்டர் அல்லது மிக்சியாம். அதேபோல எல்லா இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் லேப்டாப் தராராம். எவன் ஊட்டுப் பணம் என்று தெரியல. அள்ளி விடறாரு. இலவச தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு வழங்குவது தொடருமாம். யாருக்கு என்று சொல்லலை. கடவுள் கூட இந்த நாட்டைக் காப்பாத்த முடியாது என்பதே உண்மை. இலவச தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு வழங்குவது தொடருமாம். யாருக்கு என்று சொல்லலை. இதைவிடுங்க உப்பு கூட இலவசமாம்.




ஒரு கிலோ உப்பு இலவசமாம். உப்பு தின்னவன் நிச்சயம் தண்ணி குடிப்பான். அது தான் இருக்கவே இருக்கு டாஸ்மார்க்


தேர்தல் முடியும் வரை அடிக்கடி தொடர்பில் இரு.

அன்புடன்
இட்லிவடை


19 Comments:

(-!-) said...

:>

Anonymous said...

உப்பிட்டவனை உள்ளளவும் _____________

soms
vkd

hayyram said...

இலவசம் என்கிற தூண்டில் போடப்பட்டுள்ளது. எச்சரிக்கை மக்களே எச்சரிக்கை!

http://hayyram.blogspot.com/2011/03/blog-post_19.html

Anonymous said...

heroin market out

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இங்கே விழும் ஓட்ட்டுக்கள் அனைத்தும் நகரப் பகுதியில் அல்லது வெளி நாடுகளில் பொழப்பு நடத்தும் மக்கள் போட்டதாகத்தான் இருக்கும்//

அது மட்டுமில்ல, இவங்கல்லாம் ஓட்டு போடுவாங்களான்னே தெரியாது!
:)

gopal said...

If Tasmac items are free then Karuna will rule for ever.

madhuvandhan said...

side bar voting is a fun in IV.. please check the survey done during 2009 parliment election and 2006 state election.. as far i know & remember, every time ADMK will be way ahead of DMK in online survey polls... !! but the reality will be totally different.. reason is 90% of those who register their votes in online are the ones who had never seen the election polling booth at all.. !
so no use of online surveys..which is going to be 100% false.

Anonymous said...

ஹல்லோ டியர் முனி / இவ , வெளியூரில் இருப்பதாலும் நண்பரின் லேப்டாப்போயில் தமிழ் இன்புட் இல்லாதளாலும் thavurgaluku மன்னிக்கவும்...மீடியா நண்பர்களுக்கு போன் பண்ணிய வகையில் நான் அறிவது என்னவென்றால், அ தி மு க மிகவும் பலமாக இருப்பதாகவும் இலவச சுரண்டல் கட்சி அறிகிறேன். நான் இட்லி வடை சார்பாகவும்(!) தனிப்பட்ட முறையிலும் பல கிராமத்து மக்களிடம் நான் இந்த வாரம் முழுதும் பேசியதிலிருந்து .. ஸ்பெக்ட்ராம் பற்றி தெரியாவிடிலும் குடும்ப ஆதிக்கம் பற்றி நன்றாக பேசுகிறார்கள். ஜெயலலிதா பற்றி இவ போட்ட கார்டூன் பற்றி கூடஎனக்கு வருத்தம்தான். அவசர புத்தி பேசும் யாரும் தன்னிடம் உள்ள அவசர புத்தி பற்றி இவ வுட்பட யாரும் உணருவதில்லை. சரி போகட்டும் .... வைகோ வுடன் சேர்ந்து கொண்டு அ தி மு க கூட்டணி வெல்வது உறுதி என்றே என் பத்த்ரிகை நண்பர்கள் ஊர்ஜிதம் செய்கிறார்கள்.ஆனாலும் ஜோதிடர்கள் இருவருக்குமே ஜாதகப்படி, பலம் அதிகமாக உள்ளது என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு ஜெ வெல்வதே நல்லது என்று தோன்றுகிறது..(அடப்பாவி தோன்றுகிறதா என்று மனசாட்சி கத்துகிறது!! ) ... என்னுனடைய சினிமா தயாரிப்பு நண்பர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்(ரஜனி உட்பட என்று கேள்வி)- ரோமிங் ராமன்

Anonymous said...

//இங்கே விழும் ஓட்ட்டுக்கள் அனைத்தும் நகரப் பகுதியில் அல்லது வெளி நாடுகளில் பொழப்பு நடத்தும் மக்கள் போட்டதாகத்தான் இருக்கும்//

yes this correct internet users only city and samll twons there

20 % internet users(10 % voted out india tn voters) flight piduchu inga vara mudiyadhu vote poda, nan kuda bus sapre 1500 potu than vote poda poga vendum

but en tamil enatthum durgarm ponnivarkalai pali vanga kadan vankiyachum bus pidichu vote poduven appanthan nan tamilan indian

80 % non internet users there in tn voters
மொத்தத்தில் இலவசம் என்கிற தூண்டில் போடப்பட்டுள்ளது. விழுந்து விடாமல் இருப்பது மக்களின் சாமர்த்தியம்! எச்சரிக்கை! எச்சரிக்கை!


இனி அ தி மு க வின் தேர்தல் அறிக்கை என்னவாக இருக்கப் போகிறதோ என்கிற பேச்சுக்கள் அதிகரிக்கும். அ தி மு க வின் தேர்தல் அறிக்கை என்னவாக இருந்தாலும் தி மு க விற்கு ஓட்டில்லை என்பதில் மக்கள் (இலவசங்களுக்கு ஆசைப்படாமல்) தீர்மானமாக இருந்தால் நல்ல மாற்றம் மாநிலத்தில் நடக்கலாம்.


இல்லையேகாலம் ஒரு விதிசெய்யும்!ல்

வெங்கட் said...

ஓட்டளித்த அனைவரும் நகர்பகுதியினர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் நான் கிராமத்தான் என்பதை தெரிவித்து கொள்கிறேன். கிராமத்தான் அனைவரும் தினத்தந்தி மட்டுமே படிப்பவன் என நினைத்து கொள்ளகூடாது. கருத்துகணிப்பில் ஏதோ கோல்மால் நடந்துள்ளது.(கவனிக்கவும்).

Anonymous said...

எஸ்.வி.சேகரின் பொய்கள் மெள்ள அம்பலத்துக்கு வருகிறது. இ.வ. பேட்டியில் நான் எம்.எல்.ஏ சீட் கேட்க மாட்டேன் என்றார். இப்பொது அவர் வரிசையில் முதலாக நின்று விண்ணப்பித்திருந்தார் என்று சொல்லி இருக்கிறீர்கள். போகப் போக தெரியும் இவரது புளுகுகள் அத்தனையும்

Anonymous said...

பாவம் கலைஞர், சாதிக் பாஷா ‘தற்கொலைக்கு; அனுதாபக் கவிதை கூட எழுதாமல், சி பி ஐ ரெய்ட் வழக்கமான ஒன்றுதான்னு சொல்லி சாதிக்கிற்கு ஆதரவு தரக்கூட நேரமில்லாமல், அவர் தயாரித்த கதாநாயகியை துகிலுரித்ததைக் கண்டு
வருத்தம் அடைகிறேன்.- டில்லி பல்லி

R.Gopi said...

மாசம் ரூ.2,000/- ப்ரீ லோடட் டாஸ்மாக் கூப்பன்....

இலவச கேபிள் இணைப்பு...

இதெல்லாம் இல்லையா?

ராஜரத்தினம் said...

மக்கள் கருத்து யாருக்கு சாதகமாக இருக்கும்? கதாநாயகியை பார்த்தற்கப்புறம்?
ஜெயலலிதா ஒரு முன்னாள் கதாநாயகி. அவரிடம் இந்த கதாநாயகி எடுபடாது என்றே தோன்றுகிறது.
வீட்டிற்கு ஒரு மிக்ஸி, கிரைண்டர் என்கிறார்கள். மிக்ஸி எல்லாம் குறைந்த வசதி நடுத்தர மக்களுக்கான ஒன்று. அவர்கள் தான் அதை அதிகம் பயன்படுத்துவர்களாக இருக்கிறார்கள்.
கலர் டீவி என்றால் அதற்காக வேறு எதுவும் தேவையில்லை. ஆனால் மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் வசதியில்லாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மாதத்தில் ஒரு நாள் என்றுதான் பயன்படுத்துவார்கள். அவர்கள் இதில் மயங்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.
மத்திய தர வாசிகள் நிச்சயமாக் தங்கள் வாக்குகளை நிச்சயம் இதற்காக விற்க மாட்டார்கள்.
முதியவர்களுக்கு உள்ளூர் பயணம் இலவசம் என்கிறார்கள். இது சென்னை போன்ற நகரங்களுக்கு வேண்டுமானால் பயன் இருக்கும். அப்ப கூட நடத்துநர்களின் கமிஷன் குறைவு காரணத்தால் அவர்கள் இதை மறுக்க, அல்லது முதியவர்களை அவமான படுத்தவும் தயங்க மாட்டார்கள். ஏற்கனவே மத்திய அரசின் மாத 15ரூ ரயில் பாஸ் வைத்திருந்து பரிசோதகரிடம் பயணிகள் பட்ட அவமானத்தை நேரில் பார்த்தவன் /அனுபவித்தவன்.மற்ற ஊர்களில் உள்ளூர் அரசு பேருந்துகளின் சேவைகள் குறைவு. இதிலும் பெரிய மாற்றம் வராது என்றே நான் சொல்லுவேன்.
அரசு கல்லூரிகளின் மாணவர்களுக்கு லேப்டாப் என்கிறார்கள். இதற்கு கல்லூரி கட்டணத்தை நீக்கிவிடலாமே? அதில் தான் இன்னும் நன்மை. இதை செய்ய மாட்டார்கள். எனக்கென்னமே மாறன் சகோதரர்கள் இந்த தொழிலிலும் இறங்க நினைத்திருக்கிறார்களோ? அப்படியே கொடுத்தாலும் அரசு கல்லூரிகளின் வசதி குறைந்த மாணவர்களூக்கு இதனால் வரக்கூடிய உப செலவுகள் அதிகம்.
கைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணம் 300யூனிட் இலவசமாம். இந்த மின் இலவசங்களை ஆரம்பித்ததே கருணாநிதி தான். எம்.ஜி.ஆர் 10 பைசா வசூலித்தார். அதை அவர்கள் எதிக்கவில்லையே? இவருக்கு இந்த மின்சாரத்தின் மீது அப்படி என்ன வருத்தமோ? அது நம் வீட்டிற்குள் தொடர்ந்து வராமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்.
35கிலோ அரிசி இலவசம் என்கிறார்கள். இதை யாரும் உணவிற்கு பயன்படுத்துவதை நான் இந்தியா போனபோது பார்கவில்லை. விலை வாசி உயர்வை கட்டுபடுத்த எந்த நடைமுறை செயல்களும் காணோம்.

நோட்டுக்கு வோட்டு நாட்டுக்கு வேட்டு said...

// இந்த கடிதம் எழுதும் சமயம் மஞ்சள் கதாநாயகியை லைவாக ரிலீஸ் செய்துவிட்டார்.//
மனைவி ஆச்சு, துணைவி ஆச்சு! இப்போ கதாநாயகி - இதன் மூலம் எவ்வளவு கோடி லபக்குவாரோ?

சட்னி சாம்பார் said...

அன்புள்ள முதல்வருக்கு, ஆனந்தி எழுதும் கடிதம்! அழகான மிக்ஸிக்கு நன்றி, அதிலே, அரைக்கின்ற சட்னிக்கு நன்றி

மு.க: - உரல் அம்மிகளே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற நான் கண்ட கனவு தான் இந்த இலவச மிக்ஸி / கிரைண்டர் திட்டம்

தமிழர்களே தமிழர்களே லட்சம் கோடி ஊழல் புரிந்த கரைபடிந்த கைகளாக இருந்தாலும் மிக்ஸி கிரைண்டர் கொடுத்தாவது ஆட்சியை பிடிக்க முயலுவோம். அதில் இட்லிவடை சட்னிசாம்பார் அரைத்து நீங்கள் உண்டு மகிழலாம்!

கள்ள வோட்டு said...

ஓசி இல மிக்சி / கிரைண்டர்
பெற்றிடணும்,
எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும் ...
மக்கள் எல்லாம் மாவரைத்து
சில்லறை சேர்த்துக்கணும்
மந்திரி எல்லாம் ஊழலடித்து
கோடி கோடி பார்க்கணும் !

Anonymous said...

இனி தமிழக இல்லத்து "கதாநாயகிகள்" பின்வரும் பாடலை பாட முடியாதா?

// கை வலிக்குது கை வலிக்குது மாமா
ஒரு கை கொடுக்கணும் அம்மி அரைக்கலாம் மாமா//

:-)

rksrini said...

I am also come from rural base only.I have voted behalf of rural peoples only (aiadmk).in rural power cut,labor problem(100 days free job)have reflected in ruaral.other than that formers have been affected due to low rates in the market only brokers earning well.if aiadmk this is not possible.

So aiadmk aliance going to be rock well.