பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 13, 2011

சன்டேனா இரண்டு (13-03-11) செய்திவிமர்சனம்

இந்த வாரம்..."சினிமா ஸ்பெஷல்".

செய்தி # 1
"இப்போதெல்லாம் தியேட்டருக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டது. சொல்வதை வித்தியாசமாகவும், புதுமையாகவும் சொல்ல வேண்டும். அதே சமயம் விரசமில்லாமல் நான் இந்த படம் செய்து இருக்கிறேன்" என்று தனது "நடுநிசி நாய்கள்" பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன்.


"விண்ணைதாண்டி வருவாயா" படத்திற்கு அவர் வித்தியாசம் என்ற பெயரில் ஒரு இப்படி ஒரு குப்பையை போடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவர் சொன்னதற்கு நேர் எதிராக படத்தின் கதைகருவே விரசமாக இருக்கிறது. அவரின் முந்தைய படங்களோடு ஒப்பிடுகையில், படுதோல்வி படமாக நிராகரிக்க பட்டுவிட்டது "நடுநிசி நாய்கள்".

கலைப்படைப்புகள் என்ற பெயரில் இந்தியாவின் வறுமையையும், அவலத்தையும் படம் எடுப்பது ஒரு பாணி என்றால், இதுபோன்று 'அறிவுஜீவித்தனம் ' என்ற பெயரில் நமது குடும்ப உறவுகளை கொச்சைபடுத்தி படம் எடுக்கும் ஒரு பாணியை சில இயக்குனர்கள் வைத்துஇருக்கிறார்கள்.

இந்த பாணியை நம் தமிழ்சினிமாவில் தொடங்கிவைத்தவர் கே.பாலசந்தர். ரஜினி அறிமுகம் ஆன, "அபூர்வ ராகங்கள்" மூலம் அம்மா வயதில் இருப்பவரை மகன் காதலிப்பதும், அப்பா வயதில் இருப்பவரை மகள் காதலிப்பதுமான அபத்தங்களை அரகேற்றியவர் அவர்.

இரண்டு பொண்டாட்டிகாரன் கதைகளை தொடர்ந்து செய்தார் கே.பி. அதை தொடர்ந்தவர் பாலுமகேந்திரா. பாலுமகேந்திராவிடம்மாவது கொஞ்சம் அழகியல் இருக்கும். ஆனால், கே.பாலசந்தர், தனது படங்களில் அறிவுஜீவித்தனம் அல்லது புதுமை என்ற பெயரில், ஆங்கில படங்களை உல்டா அடித்து, உறவுசிக்கல்களை சொல்கிறேன் என்று குப்பைகள் பல போட்டிருக்கிறார்.எதிர்நீச்சல் போன்ற காலத்தால் அழியாத காவியங்களையும் அவர் தந்து இருக்கிறார் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.

சரி. கே.பி,பாலு போன்றவர்கள் ஒதுங்கிவிட்டார்கள் என்று பார்த்தால், அண்ணியே, தனது கணவரின் சகோதரனை காதலிப்பதை, காம உணர்வோடு அணுகுவதாக கதை சொல்லி "உயிர்" படத்தில் புரட்சி(?) செய்துவிட்டார் இயக்குனர் சாமி.

இந்த புரட்சியை, அவரே மாமனாருக்கும், மருமகளுக்கும் காதல் என்று "சிந்து சமவெளி" மூலம் முறியடித்து விட்டார்.

ஒரு ரஷிய நாவலை,தமிழுக்கு அல்லது தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றதுபோல,ஜெயமோகன் நாவல் வடிவம் தந்து இருக்கிறார். பின்,அதை படமாக எடுத்திருக்கிறார் சாமி.இத்தனைக்கும்,படத்தில் ஹைலைட்டான பகுதி , கதாநாயகன் காதலித்து திருமணம் செய்கிறார்.உறவுகளோடு,காதலையும் இந்த "சிந்து சமவெளி" படத்தில் வாரிஇருக்கிறார் சாமி.

"விபச்சார தொழில் செய்யுறவங்க, திருடர்கள், கொலைக்காரங்க கூட நிம்மிதியா இருக்கணும்னுதான் நினைப்பாங்க. அவங்களே அப்படி நினைக்கும் போது நான் நினைக்க மாட்டேனா? நான் எங்க போனாலும் உயிர் மாதிரி படம் பண்ணிக் கொடுங்கன்னுதான் கேட்கிறாங்க. இந்த தயாரிப்பாளர்கிட்ட கூட நான் நாலு கதைகள் சொன்னேன். அவரு தேர்ந்தெடுத்த கதைதான் சிந்து சமவெளி " என்று விளக்கம் சொல்லி இருக்கிறார் சாமி.இப்படத்தை தனது மனைவி மற்றும் தந்தையோடு பார்ப்பாரா இயக்குனர் சாமி?.அப்போது அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

இவர்கள் எல்லோரையும் எப்படி தூக்கி சாப்பிடலாம்? என்று கௌதம் யோசித்ததின் விளைவு...."நடுநிசி நாய்கள்". கதாநாயகனிடம், மகனை போன்று எடுத்து வளர்க்கும் பெண்மணியே உறவு கொள்வதாக போகிறது கதை.

புதுமை, புரட்சி என்றால் குடும்ப உறவுகளை கேவலப்படுத்தவேண்டுமா? கேட்டால், நாட்டில் நடப்பதைதான் காட்டுகிறோம் என்று கூறிவிடுகிறார்கள். ஏன் தைரியம் இருந்தால், இன்றைய அரசியல்வாதிகளின் ஊழலை படம் எடுக்கவேண்டியதுதானே?

காண்பிக்க எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறதே. அவைகள் எல்லாம் ஏன் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை?

உதாரணமாக புரட்சி என்பதை நாம் ஒப்புக்கொள்ள கூடிய படம்...பாரதிராஜா இயக்கிய "புதுமைப்பெண்". அதில் ரேவதி, தன்னை சந்தேகப்படும் கணவனை தூக்கி எறிவதாக இருக்கும் முடிவை நாம் சொல்லலாம்.
இயக்குனர் மகேந்திரனின் "கை கொடுக்கும் கை" ஒரு வித்தியாச படம்தான். அதில், பார்வை இல்லாத ரேவதியை, வில்லன் கற்பழித்துவிட, அவரின் கணவராக இருக்கும் ரஜினி அதை பொருட்படுத்தாமல், ஏற்றுகொள்வது மனதை தொடும் மாண்பு.

ஆனால், கௌதம்மேனன், சாமி போன்ற இயக்குனர்களுக்கு ஆபாசத்தை,வக்கிரத்தை தவிர வேறு எதுவும் வித்தியாசம் இல்லை போலிருக்கிறது.

எல்லாரும் பே(ஏ)சும் அளவுக்கு சிந்து சமவெளி,நடுநிசி நாய்கள் போன்ற படங்களில் அப்படி என்னதான் இருக்கிறது என்று சர்ச்சையால் தூண்டப்பட்டு படம்பார்த்தவர்களே அதிகமாக இருந்திருக்கும் இல்லையா?.

"நடுநிசி நாய்கள்" படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலில், காலச்சார காவலர்கள் என்று சொல்லிக்கொண்டு, கௌதம் வீட்டில் செருப்புகளை வீசினார்கள் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர்.

இரண்டாவதாக, படத்தின் கதாநாயகனுடன் தகாத உறவு கொள்ளும் அவரின் வளர்ப்பு தாய்(?) கதாபாத்திரத்தின் பெயர் மீனாட்சி. ஒரு இந்து தெய்வத்தின் பெயரை இப்படிப்பட்ட இழிவான ஒரு கேரக்ட்டருக்கு கௌதம் வைத்தது உள்நோக்கமானது. அவர் ஏன் ஒரு கிறிஸ்த்துவ பெயரை சூட்டவில்லை என்று கூறி இந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. மீனாட்சி என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று அவருக்கு கேடு விதித்து இருக்கின்றன.

"நடுநிசி நாய்கள் திரைப்படம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது . படத்தில் வரும் மீனாட்சி என்ற பெண்ணின் பெயரை மேரி என்றோ பாத்திமா என்றோ பெயர் வைக்க வேண்டியதுதானே?." என்று கேள்வி எழுப்பி இருக்கிறது தமிழக சிவசேனா.

காட்சிகளை கவனிக்கும் அளவுக்கு, சென்சார் போர்டு கதைகளை கவனிக்காதது ஏன்?

தமிழில் தலைப்பு வைத்தால்போதும், வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. ஆனால், உள்ளே என்ன சரக்கு இருக்கிறது என்பது முக்கியம் இல்லையா?

'ஒரு இளைஞனின் நடுநிசி காமங்கள்' என்று தலைப்பு வைத்து, ஆபாசபடம் எடுத்தால், தூயதமிழில் பெயர் வைத்த காரணத்திற்கு தமிழக அரசு,படத்திற்கு வரி விலக்கு அளிக்குமா??

செய்தி # 2
தமிழ் சினிமாவில் "ஸ்டைலிஷ்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன படம், ரஜினி நடித்த "பில்லா".

அமிதாப்பச்சன் - ரஜினிகாந்த - ஷாருக்கான் - அஜித் என்று வரிசைப்படி அவதாரம் எடுத்த பில்லா, இப்போது பில்லா 2 என்று ஒரு புது அவதாரம் எடுத்திருக்கிறது.

அஜித் - விஷ்ணுவர்த்தன் - யுவன் ஷங்கர் ராஜா - நிரவ்ஷா - சுரேஷ் பாலாஜி என்று கலக்கிய அதே 'பில்லா - 2010 ' கூட்டணி இணையும் படமாக "பில்லா 2 " அறிவிக்கப்பட்டது.

"ஒரு சாதாரண மனிதன் ஒரு பெரிய இடத்துக்கு போய் நிற்ப்பது என்கிற இந்த சாகச கதை எனக்கும், எல்லோருக்கும் விருப்பமாக இருக்கிறது" என்று சொன்ன அஜித், தனது 50 வது படமான "மங்காத்தா" முடிந்தவுடன் செய்யப்போகும் படம் "பில்லா 2 " என்று அறிவித்தார் அஜித்.

"பில்லா 2 , பில்லா படத்தின் இரண்டாம் பாகம் இல்லை. ஆனால், பில்லாவின் கதையை வேறு ஒரு கோணத்தில் சொல்லப்போகும் கதை. இது, பில்லாவை விட மிக பிரமாண்டமாக இருக்கும்" என்று பேட்டி அளித்த இயக்குனர் விஷ்ணுவர்த்தன், இப்பேட்டி வந்த ஒரு சில நாட்களில் இப்படத்தில் இருந்தே நீக்கப்பட்டு விட்டார்.

விஷ்ணுவர்தனுக்கு பதில், "பில்லா 2 " படத்தை இயக்க போகிறவர்...சாக்ரி டோலிடி.

சாக்ரி டோலிடி.....அமெரிக்காவில் படித்தவர். ஆங்கில குறும்படங்கள் இயக்கியவர். "தசாவதாரம்" படத்தில், கமலின் நண்பராக, அவர் அமெரிக்காவில் இருந்து தப்பிக்க உதவும் நண்பராக நடித்தவர்.

மிக முக்கியமாக. இவரின் திறமையை கண்டு கமல்ஹாசன், அவரை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து தனது சொந்த படமான, "உன்னை போல் ஒருவன்" படத்தை இயக்கம் வாய்ப்பை அளித்தார். உன்னை போல் ஒருவன் படத்தின் மெகா வெற்றி அவரது தேர்வை நியாயபடுத்தி இருக்கிறது.
கமல்ஹாசன் மற்றும் எழுத்தாளர் இரா.முருகன் ஆகியோருடன் "உன்னை போல் ஒருவன்" விவாதத்திலும் முழுமையாக பங்கெடுத்தார் சாக்ரி.

"உன்னை போல் ஒருவன்"- ஹிந்தி படத்தின் ரீமேக் என்றாலும், எளிமையான கதையை , அருமையாக சொல்லி அசத்தி இருந்தார் இயக்குனர் சாக்ரி.


அவரது இரண்டாவது படமான "பில்லா 2 " அதற்க்கு நேர்மாறாக, தமிழில் முதல்முறையாக ஹாலிவுட் நடிகர்கள் சிலர் நடிக்க, அஜித் இதுவரை நடித்த படங்களிலேயே மிக பெரிய பட்ஜெட்டில் தயாராக போகிறது.அஜித் - சாக்ரி என தமிழுக்கு ஒரு ப்ரெஷ்ஷான கூட்டணி உருவாகி இருக்கிறது.

இயக்குனர் விஷ்ணுவர்த்தனுக்கு, இந்த வாய்ப்பு பறிபோனது பெரிய இழப்பு என்றாலும், சாக்ரி டோலேடி, இப்படத்தை இயக்க போவது, "பில்லா" படத்தின் சாயலில் இருந்து அஜித்துக்கு இது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

இன்னொரு விஷயம்...விஷ்ணுவர்த்தன் சொன்ன கதையை அடியோடு மாற்றிவிட்டு, இரண்டே வாரத்தில் ஒரு புதிய திரைக்கதையை தயார்படுத்தி இருக்கிறார் சாக்ரி.படத்தின் மற்ற வேலைகளையும் இவர் அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அசுரவேகத்தில் தொடங்கி இருக்கிறார்.

படபிடிப்பை தொடங்கி வைக்கபோகிறவர்....வேறு யார்... பில்லா ஸ்டார் ரஜினிதான்.

(நன்றி..இனி,அடுத்தவாரம்)

-இன்பா
Yellow


29 Comments:

Anonymous said...

It is a shame for Gautham Menon. He should have been another Manirathnam...But now he has gone into another wrong track... Time will tell/teach him a lesson.

rajatheking said...

தல காட்டுல மழைதான்

rajatheking said...

தல காட்டுல மழைதான் ....தல காட்டுல மழைதான்

ரிஷபன்Meena said...

சிந்து சமவெளி-ங்கர பேரில படம் வந்ததே இப்பதான் தெரியுது.

'துர்வாசர்” ஸ்டைலில் முதல் கட்டுரை இருப்பதால் துக்ளக் போல ஒரு எச்சரிக்கை:

சாக்ரி மற்றும் அஜித் ஜாதகம் கிடைத்தால் யாராவது இவ-க்கு அனுப்பி வைக்கவும்.

Anonymous said...

இட்லி வடை ..,

அந்த சாக்ரி டோலேடி தான் சலங்கை ஒலி படத்துல போட்டோ பிடிக்கும் பையனாக வந்தது என்று கேள்வி பட்டேன் ? உண்மையா

rajatheking said...

Pls see NAKKERAN dtd Feb 12-15 edition page 28

Anonymous said...

Start the criticism with your own breed ( Tamil bloggers')before you take up the tamil film directors.
Have you read...

CharuNivedita (http://charuonline.com/blog)

or

Saravana Karthikeyan?(http://www.writercsk.com/)

Full of vulgarity and foul language!The latter for his passion for the female genitals is fondly called Cunt Karthikeyan

Shri Hari said...

இவனுங்க குடும்பம் இல்லாம கெட்டு அழிஞ்சி போறது பத்தாதுன்னு நாடோட கலாச்சாரத்தையும் கெடுத்து எல்லா குடும்பத்தையும் கலை மற்றும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாசமாக்க பாக்குரனுங்க....

\\ ஏன் தைரியம் இருந்தால், இன்றைய அரசியல்வாதிகளின் ஊழலை படம் எடுக்கவேண்டியதுதானே? \\


செருப்பால அடிச்ச மாதிரி சரியான கேள்வி... எவ்வளவு அடிச்சாலும் திட்டினாலும் இந்த பொறுக்கிகளுக்கு புத்தி வராது.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

கௌதம் மேனனின் அடுத்த படம் என்ன? பட்டப்பகல் பன்னிகள்?

naarayanan said...

inba, you have written exactly my thoughts, maybe the thoughts of every common man.

there are so many good things happening around us, why not make stories about them?

this is only an outlet of their own cheap psyche.

Roaming Raman said...

கேள்வி ://"இப்போதெல்லாம் தியேட்டருக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டது// ஏன்?

ஏனென்றால்,

பதில் :://காண்பிக்க எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறதே. அவைகள் எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை?//

சரிதானே!!
//தமிழில் தலைப்பு வைத்தால்போதும், வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது//

எங்களுக்கு அது போதுமே!!!

ரங்கா said...

இந்த படங்கள் கொச்சையென்றால் நமது புராணங்களில் கூட பல கொச்சையான விசயங்கள் இருக்கின்றன. ஏன் பேத்தி வயசிலிருக்கும் ஒரு பெண்ணை நம் தலைவர்களில் ஒருவரே திருமணம் செய்துகொண்டாரே. உன்னைப்போல் ஒருவன் சிறந்த படம் தான். அதன் மூலத்தை பார்க்காதவரை.

R.Gopi said...

இன்பா...

எப்படியோ நம்மூரு அரசியல் “தல” அடிச்ச தொடர் கொள்ளைகளால் கதிகலங்கி போயிருக்கற சமயத்துல நீங்க உங்களுக்கு பிடிச்ச சினிமா “தல”ய பத்தி எழுது தலை ரசிகர்களின் உற்சாகத்தை கிளறி விட்டுட்டீங்க!!

எல்லாரும் வாங்கியாச்சு, இன்னமும் உங்க சினிமா “தல” ஏன் டாக்டர் பட்டம் வாங்கல?

Aaryan66 said...

கொசுறு செய்தி;ச்லங்கை ஒலி படத்தில் கமலை அந்தரத்தில் பறப்பது போல் படம் எடுக்கிறேன் என்று காமெடி செய்யும் அந்த சிறுவன் தான் இந்த சாக்ரி டோலிடி.

Anony8 said...

I liked NNN. Comeon we cry and crib for repeated same formula Commercial Movies like Vijay's and when someone like Gautham gives it a TRY on a different script we abuse him. It's not fair.

Making it a Flop is OKAY but appreciate his Attempt

Anonymous said...

Thala Thala than

Guru Prasath said...

பனங்காட்டு நரி & Aaryan66:

You are right. Also he acted in Bhagyaraj's "Chinna veedu" as Kalpana's younger brother.

பூ said...

கேவலமான பதிவு. நம் மக்களுக்கு நாம் செய்யும் தவறுகளை பற்றி பொதுப்படையாக பேச தைரியம் இல்லை.

Anonymous said...

a kind note for idlyvadai...
The story of aboorva raagangal is a enlarged version of "vidai theriyadha kadhai" from vikramadithan story. It is the last story that vedhalam tells vikramadithan and it is the story for which the answer is not known.

Neenga konjam historya nondi paarthu vittu idhai ellam pathi pesalam...

oruvanukku oruthi ellam "ramayana" kaalathoda pochu...
adhula kooda dasaradhanukku yegathukku pondattigal.

idhellam namma kalaacharathula ille nnu solli thappichukka vendam.

kalacharaathula illadhadhu onnu dhaan...murai thavariya uravugal... adhai edhirpadhu miga sariyana nadavadikkai..

rk said...

"ஒரு இளைஞனின் நடுநிசி காமங்கள்' என்று தலைப்பு வைத்து, ஆபாசபடம் எடுத்தால், தூயதமிழில் பெயர் வைத்த காரணத்திற்கு தமிழக அரசு,படத்திற்கு வரி விலக்கு அளிக்குமா??"
Kama is a Sanskrit word!!

மஞ்சள் ஜட்டி said...

ரஜினி கமல் இருவரும் கடைசியாக ஒரு விஷயத்திற்கு வேறு வழியில்லாமல் சம்மதம் சொல்ல வேண்டியிருந்தது.பாலசந்தர் இயக்கத்தில் உருவாகும் பத்து நிமிட படம் ஒன்றில் இருவரையும் நடிக்க வைக்க நடந்த முயற்சிக்கு முதலில் சம்மதம் சொல்லியிருந்தார்கள் இருவரும். இதற்கு முதல்வர் கலைஞர் கதை வசனம் எழுதுவதாக இருந்ததுதான் இன்னொரு முக்கிய காரணம்.

திரையுலகத்தினருக்கு அரசு சார்பாக ஒதுக்கப்பட்ட நிலமான பையனு£ரில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்பட ஸ்டுடியோவின் திறப்பு விழாவில் இந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் என்றெல்லாம் கூறப்பட்டது. இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படாத நிலையில் திடீரென்று இந்த வியத்தகு முயற்சியிலிருந்து பின்வாங்கி விட்டார்களாம் இருவரும். தேர்தல் கமிஷன் தேதியை அறிவிச்சுட்டாங்க. இந்த நேரத்தில் நாங்க அந்த படத்தில் நடிச்சு கொடுத்தா நல்லாயிருக்காது என்று கோரஸாக ஒரே பதிலை கூறிவிட்டதாக தகவல் பரவிக்கிடக்கிறது.

சட்னி சாம்பார் said...

"இவரின் திறமையை கண்டு கமல்ஹாசன், அவரை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து தனது சொந்த படமான, "உன்னை போல் ஒருவன்" படத்தை இயக்கம் வாய்ப்பை அளித்தார். உன்னை போல் ஒருவன் படத்தின் மெகா வெற்றி அவரது தேர்வை நியாயபடுத்தி இருக்கிறது."

அடப்பாவி இட்லிவடை!!! கமலை எங்கெல்லாம் பாராட்டனுமோ அங்கெல்லாம் நல்லா திட்டிட்டு கூடவே ரஜினிக்கு ஜால்ரா போடுவீர்!

உ.போ.ஒருவன் ஒண்ணும் பெரிய வெற்றியெல்லாம் கிடையாது!! உமக்கு அது எப்படி மெகா வெற்றியாச்சு?!?

குறிப்பு: பாட்டு ஹீரோயின் இல்லாம இதே படம் ரஜினி நடிச்சிருந்தா இந்தளவு கூட தேறியிருக்காது! பாட்டெல்லாம் வெச்சு நடிச்ச குசேலனே இந்தப்படத்தை விட வசூல் கம்மிதான், அந்தவகையில் இது பெரிய வெற்றிதான், ஆனா அது முற்றிலும் வேறு விஷயம் இல்லையா?!?

Anonymous said...

To all the people who support Gautham Menon's effort, please watch the movie with your mom & sister. And if you enjoy the movie i will pay for the movie ticket.

சீனு said...

//சாக்ரி டோலிடி.....அமெரிக்காவில் படித்தவர். ஆங்கில குறும்படங்கள் இயக்கியவர். "தசாவதாரம்" படத்தில், கமலின் நண்பராக, அவர் அமெரிக்காவில் இருந்து தப்பிக்க உதவும் நண்பராக நடித்தவர்.//

இவர் தான் சலங்கைஒலியில் சிறுவனாக நடித்தவர். கமல் கூட காமெராவுடன் வருவானே அந்த பையன்...

பூ said...

/////To all the people who support Gautham Menon's effort, please watch the movie with your mom & sister. And if you enjoy the movie i will pay for the movie ticket.////

Why should I go with my mom and sister? You go with them everywhere? What a stupid comment?

rajiniraja said...

//Anonymous said...
To all the people who support Gautham Menon's effort, please watch the movie with your mom & sister. And if you enjoy the movie i will pay for the movie ticket.//

well said anony

repeattu

Anonymous said...

Nonsense! you see the subject of the movie and decide if you want to watch it with your family or not. Did the movie not get an "A"? The "A" is to inform you about the content, just pay attention to it and act accordingly.

Dont threaten the director, ask the censor board to create may be an "AA" or "AAA" or whatever and then just dont go watch anything that is rated "AA".

Anonymous said...

//Nonsense! you see the subject of the movie and decide if you want to watch it with your family or not. Did the movie not get an "A"? The "A" is to inform you about the content, just pay attention to it and act accordingly.

Dont threaten the director, ask the censor board to create may be an "AA" or "AAA" or whatever and then just dont go watch anything that is rated "AA".//

வெளக்கெண்ணை அவர்களுக்கு,
A Adults Only Only adults are admitted.
Nobody younger than 18 may rent or buy an 18-rated VHS, DVD, Blu-ray Disc, UMD or game, or watch a film in the cinema with this rating. Films under this category do not have limitation on the bad language that is used. Hard drugs are generally allowed, and strong violence/sex references along with non-detailed sexual activity is also allowed. This rating is similar to the MPAA's R and NC-17, the BBFC's 18, and the OFLC's MA and R ratings.

"A" கொடுத்தாலும் அதற்கும் எல்லை உண்டு. கண்ணா பிண்ணான்னு உறவுகளை இனைப்பதும் இதுவும் ஒன்றல்ல தம்பி.

மஞ்சள் பத்திரிக்கை மாதிரி படம் எடுத்தாலும் அதை தாங்கி பிடிக்க சில அல்லக்கைகள் வருதே என்ன கருமம் இது.

//Why should I go with my mom and sister? You go with them everywhere? What a stupid comment?//

லூசா இல்லை லூசாடா நீ.

அம்மா, சகோ, கூட படம் பார்க்க போக வேண்டியே வராதா ? அப்படி வந்தா எவ்வளவு அசிங்கம் இதுங்கற அங்கலாய்பு தான் இது.

படம் ஓடலையாமே! இந்தியத் தொலைக் காட்சிகளில் முதல் முறையா போட்டு தொலைச்சா என்ன பண்ணுவ இல்லை என்ன பண்ணுவ.
javascript:void(0)

Anonymous said...

I havent seen the movie, am not planning on seeing, definitely not with my mother. But I dont get this:

"அம்மா, சகோ, கூட படம் பார்க்க போக வேண்டியே வராதா ? அப்படி வந்தா எவ்வளவு அசிங்கம் இதுங்கற அங்கலாய்பு தான் இது."

Its just a movie. Appadi enna thevai? its your choice to watch it or not. We see posters for all sorts of movies everything from devotional to action to porn, its not like we go see everything. Why cant you just ignore this one? If it doesnt make money, they wont make movies like this.