பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 28, 2011

இந்தியா vs இங்கிலாந்து -காகிதப்புலியை கலங்கடித்த முரட்டுக்காளை -எ.அ.பாலா

மு.கு: இந்த ஆட்டத்தை கொட்ட கொட்ட பார்த்து ஏற்பட்ட டென்ஷன் மற்றும் கை நடுக்கத்தால், உடனடியாக ரெவ்யூ எழுத முடியவில்லை. இன்று மதியம் தான் நடுக்கம் குறைந்து எழுத முடிந்தது :-)

டாஸில் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆடுகளம் batting paradise என்பதால், இந்தியா 300ஐத் தொடும் என்பதில் சந்தேகமில்லை, 300க்கு மேல் எத்தனை ரன்கள் எடுக்கும் என்பது தான் முக்கியமாகப் பட்டது! ஆண்டர்சன்னின் முதல் ஓவரில் தடுமாறிய சேவாக், பின் தன் இயல்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, 35 ரன்கள் எடுத்து விக்கெட்டிழந்தார்! சச்சின் நிதானமாக கவனமாக கம்பீருடன் ஜோடி சேர்ந்து ஆடியதில், ரன்கள் குவிந்து ஸ்கோர் 30 ஓவர்களில் (கம்பீர் விக்கெட் இழந்தபோது) 181-2. முதல் 15 ஓவர்களுக்குள் பந்து வீச வந்த ஸ்வானின் வீச்சை, கம்பீர் திறமையாக கையாண்டது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் ஆட்டம் (88 off 91 balls, 4 சிக்ஸர்கள்) குறித்து என்ன சொல்ல! Just Magnificient, Thats all !!! இத்தகைய அடித்தளம் அமைக்கப்பட்ட சூழலில், வரவிருக்கும் யுவராஜ், தோனி, கோலி, பதானை கணக்கில் கொண்டால், இந்தியா 360 ரன்களை தொட வேண்டும் என்று டோ ண்டு கூட எளிதாக சொல்லி விடுவார் :) 35வது ஓவரில் இந்தியாவே எதிர்பார்த்தது நிகழ்ந்தது, சச்சினின் மற்றுமொரு சதம் (102 off 103 balls). இதை ஒரு வார்த்தையில் விவரித்தால், "அற்புதம்"...

37வது ஓவரில் பேட்டிங் பவர் பிளே தொடங்கியது. சச்சின் (120 off 115 balls) 39வது ஓவரில் விக்கெட் இழந்ததால், P3 ஓவர்கள் அவ்வளவு சோபிக்கவில்லை. (இந்த 5 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே!) யுவராஜ் அரைச்சதமடித்து ஃபார்முக்கு வந்தது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்! நல்ல பந்து வீச்சாளரான ஆண்டர்சன் (9.5-0-91-1) இன்று மோசமாக பந்து வீசியதில் அடித்து துவைக்கப்பட்டதை பார்க்க பாவமாக இருந்தது! இறுதி 5 ஓவர்களில் கொத்தாக விக்கெட்டுகளை இழந்ததில் (பிரஸ்னன் 49வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், 10-1-48-5) இந்தியா 49.5 ஓவர்களில் 338 ரன்களில் ஆல் அவுட்.

மேலே குறிப்பிட்டபடி, இது மிக நிச்சயமாக எதிர்பார்த்ததை விட 20 ரன்கள் குறைவு! ஆனால், யுவராஜ் 338 ரன்களே இந்திய பந்து வீச்சுக்கு போதுமானது என்று டிவி பேட்டியில் திமிராக உளறியதைப் பார்க்க கடுப்பாக இருந்தது.

தன்னம்பிக்கையோடு களமிறங்கிய இங்கிலாந்து, தொடக்கத்திலேயே பீட்டர்சனை இழந்தும், 10 ஓவர்களில் 77/1. கேப்டன் ஸ்ட்ராஸ் அருமையாக ஆடிக்கொண்டிருந்தார். ஜோனாதன் ட்ராட் விக்கெட்டை சாவ்லா வீழ்த்தியபோது, ஸ்கோர் 111-2 (16.4 ஓவர்கள்). அதன் பின், ஸ்ட்ராசும், பெல்லும், இந்தியாவின் மிக மிகச் சாதாரணமான பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டு, ரன்களை குவித்து, தேவையான ரன்ரேட் 7.3 என்பதை தாண்டாத வண்ணம் பார்த்துக் கொண்டனர். அதே நேரம், 2வது இன்னிங்க்ஸில் ஆடுகளம் பேட்டிங்குக்கு இன்னும் சாதகமாக மாறியது இந்தியாவுக்கு பாதமாக அமைந்தது!

Dhoni's captaincy too was pretty ordinary! பந்து வீச்சு திட்டத்துக்கு ஏற்றவாறு பந்து காப்பாளர்களை நிறுத்துவதை விடுத்து, பேட்ஸ்மன் கடைசியாக எங்கு பந்தை அடித்தாரோ, அதற்கேற்றவாறு ஃபீல்டிங்கை மாற்றியவண்ணம் இருந்தார். இப்படி தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது அபத்தமில்லையா? இதனால், பந்து வீச்சாளர்களின் line & length இன்னும் மோசமானது தான் மிச்சம்! அது போல தனது முதல் ஸ்பெல்லில் நன்றாக பந்து வீசிய சாவ்லாவை, 2வது ஸ்பெல்லில் ஒரு ஓவருடன் (34வது) நிறுத்தி, மீண்டும் தாமதமாக 40வது ஓவரில் பந்து வீச அழைத்ததிலிருந்து Captain Cool குழப்பத்தில் இருப்பது புரிந்தது! இதை "Dhoni's bad day at office" என்று ஒதுக்கிவிட முடியாது.

இங்கிலாந்து, ரிஸ்க் எதுவும் எடுக்காமல், பிரதி ஓவருக்கு 6-7 ரன்கள் எடுத்ததில், 40 ஓவர்களின் முடிவில், ஸ்கோர் 272/2, RRR 6.7 மட்டுமே! 43வது ஓவரில் பேட்டிங் பவர் பிளே தொடங்கியது, தோனியின் அதிர்ஷ்டம் என்று கூறுவேன். இதனால், தோனி விரும்பாவிட்டாலும், 3 ஆட்டக்காரர்களே உள்வட்டத்துக்கு வெளியே ஃபீல்டிங் செய்ய முடியும் என்பது தோனிக்கு சாதகமாக "தானாக" அமைந்த ஒன்று :) பேட்டிங் பவர் பிளே எடுக்கப்படாமல் இருந்திருந்தால், தோனியின் சொதப்பலான ஃபீல்டிங் அமைப்பு தொடர்ந்திருக்கும் என்று நான் உறுதியாக நம்பினேன், நம்புகிறேன்.

இப்போது இங்கிலாந்து செய்ததை Harakiri என்று கூறலாம். சாகீரின் வீசிய 43வது ஓவரில் பெல், ஸ்ட்ராஸ் இருவரும் விக்கெட் இழந்ததில், இங்கிலாந்துக்கு அனாவசிய அழுத்தம் ஏற்பட்டது. இந்த 3 ஓவர்களில் (43-45) இங்கிலாந்து தோற்க பெருமுயற்சி எடுத்தது :-) 3 விக்கெட்டுகள் இழப்பு, எடுத்தது 7 ரன்கள் மட்டுமே. தேவையான ரன்ரேட் (5 ஓவர்கள், 52 ரன்கள்) 10.4க்கு உயர்ந்தது!

ஆனால், இங்கிலாந்தின் "வால் பையன்கள்" நம்பிக்கை இழக்காமல் போராடியதில், அடுத்த 3 ஓவர்களில் (ப்ரியார், யார்டி விக்கெட்டுகளை இழந்தும்) 23 ரன்கள் எடுத்தனர். ஸ்கோர் 310/7. Tension in the Chinnaswamy stadium was palpable. 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவை. சாவ்லா ஓவரில், ஸ்வான், பிரஸ்னன் ஆளுக்கு ஒரு சிக்ஸர் சாத்தியதில், 15 ரன்கள் குவிந்தன. இந்த ஓவரின் பிரஸ்னன் Clean Bowled. வர்ணனை என்ற பெயரில் ரவி சாஸ்திரி கதறிக் கொண்டிருந்த காமடியை ரென்ஷன் காரணமாக ரசிக்க முடியவில்லை ;-)

49வது ஓவரை வீச சாவ்லாவை அழைப்பதற்கு முன் தோனி, மூத்த ஆட்டக்காரர்களான சச்சின், சேவாகுடன் கலந்து ஆலோசித்தாரா என்று தெரியவில்லை. 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்பதோடு, 'வால் பையன்கள்' ஆடிக் கொண்டிருந்த நிலையில் பதான் அல்லது யுவராஜ் தான் சரியான தேர்வாக இருந்திருக்கும்! இதை retrospective ஆகச் சொல்வதாக எண்ண வேண்டாம்.இந்த ஓவரில் எடுத்த 15 ரன்கள் தான் இங்கிலாந்துக்கு "We could win" என்ற ஊக்கத்தை கொடுத்தது. If using Chawla was a gamble, it was a very bad one!

கடைசி ஓவரை வீசுபவர் முனாஃப் படேல் என்பதால், 14 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்தியா தான் வெற்றி பெறும் என்று எல்லாரையும் போல நானும் நினைத்தேன். 3வது பந்தை அத்தனை அருமையாக ஷெசாத் சிக்ஸர் அடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை! இது தான் ஒரு நாள் ஆட்டத்தின் சிறப்பு. 3 பந்துகள், 5 ரன்கள்..... 2 பந்துகள் 4 ரன்கள்..... கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி.... ஒரு ரன் மட்டுமே எடுத்ததில் TIE... மயிரிழையில் இந்தியா தப்பித்தது!

சுலபமாக வென்றிருக்கு வேண்டிய ஆட்டத்தை TIE ஆக்கிய பெருமை இங்கிலாந்தைச் சாரும். ஆனால், அவ்வணியின் 'வால் பையன்கள்' மிக்க பாராட்டுக்குரியவர்கள். In the end, England gave the match in a platter to India but as gentle hosts India magnanimously refused to accept it :-) பலரும் சொல்வது போல,Tie தான் இந்த ஆட்டத்துக்கு சரியான முடிவு என்பது என்னளவில் ஏற்றுக் கொள்ள முடியாதது!

சில எண்ணங்கள்:
338 ரன்கள் எடுத்தும், சரியாக திட்டமிட்டு அதை defend பண்ண துப்பில்லாத இந்திய அணியை Favourites என்று பலரும் கூறுவது டூ மச்! பங்களாதேஷையே 280+ ரன்கள் அடிக்க விட்ட மகானுபாவர்கள் தானே நாம்! பேட்டிங்கை நம்பித் தான் நம் வெற்றி இருக்கிறது என்பது தெளிவாகவே இருந்தாலும், இத்தகைய பந்து வீச்சுக்கும், ஃபீல்டிங்குக்கும், எவ்வளவு ரன்கள் எடுத்தால் "போதும்" என்று சுத்தமாக புரியவில்லை. அது போல, இங்கிலாந்து 338-ஐ துரத்தி, ஆட்டம் "டை" ஆனதை விட, 43வது ஓவர் வரை அதை எத்தனை சுலபமாக கையாண்டது என்ற சங்கதி தான் அதிர்ச்சியாக/அயற்சியாக இருக்கிறது. தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை எதிர்கொள்ள நேரும்போது, இத்தகைய பந்து வீச்சும், ஃபீல்டிங்கும் தொடர்ந்தால், இந்தியாவின் உலகக்கோப்பை கனவு துர்சொப்பனமாக மாறி விடும் அபாயமிருக்கிறது!

அன்புடன்
பாலா

பி.கு: திருவண்ணாமலை கிளி ஜோசியர் சிவா என்பவரிடம் இருக்கும் மணி என்ற கிளியிடம் இந்தியா-இங்கிலாந்து ஆட்டத்துக்கு சீட்டு எடுத்து பார்த்தபோது, "நல்ல பாம்பு" வரைந்த சீட்டை மணி எடுத்ததில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவரே டென்ஷன் ஆயிட்டாராம். இந்தியா வெற்றி பெற தடைகள் இருப்பதையும், வெற்றி பெறுவது கடினம் என்பதையும், "நல்ல பாம்பு" உணர்த்துவதாக கிளி ஜோசியர் சிவா நிருபரிடம் கூறினாராம் :-)

மேட்சுக்கு வந்த தீபிகா படுகோனை பார்த்தோமா போனோமா என்று இல்லாமல் இந்திய கிரிக்கெட் டீம் ஆடுவதை இவ்வளவு சீரியஸாக பார்க்க கூடாது !

29 Comments:

அப்பாதுரை said...

சுவாரசியமான விமரிசனம். முழுதும் படிக்க வைத்தீர்கள்.

ஸ்ரீதர் நாராயணன் said...

338 ரன்கள் அடித்தால் முரட்டுக் காளை. 338 ரன்கள் அடித்தாலும் பேப்பர் புலிகளா? இந்த ‘மிகை’ நையாண்டிகள் இல்லாது எப்பொழுதுதான் பாலா உருப்படியான கிரிக்கெட் கட்டுரைகள் எழுதுவார்? :)

dondu(#11168674346665545885) said...

ஆக, கடைசியில் டெண்டுல்கர் நிறைய கோல் போட்டு விட்டார் என்றுதானே கூற வருகிறீர்கள்?

என் ஆத்துக்காரியிடம் நான் அப்போதே சொன்னேன், என்றென்றும் அன்புடன் பாலா என்றென்றும் டென்ஷனுடனேயே இந்த மேட்சைப் பார்ப்பார் என.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கானகம் said...

சுவாரசியமாய் எழுதப்பட்ட தமிழ் கிரிக்கெட் விமர்சனம். நன்றாக இருந்தது.

சாதாரண கிராமத்தான் said...

good review. But why dont you write anything about the batting order. Sending Yuvraj ahead of Kholi, the inform batsman is a big mistake. You have also mentioned that Yuvraj appeared to get his form back. But this is not a practice game. Also dhoni promoting himself as an attacking option ahead of Yusuf pathan was not good. Why not send Yusuf ahead to have a go with many overs left in the game. Are they going to use Yusuf as a hitter for the last few overs. This really did not make sense to me. India should think of using Ashwin as an attacking option rather than using Harbhajan as a defensive option. Or it would be good if they use Harbhajan as an attacking option. The way Indian team is bowling only a score of 350 or above would be a safe score. God save this team too heavy in batting and wafer thin in bowling.

சாதாரண கிராமத்தான் said...

Good review of the game. Why dont you comment on the batting order. Its not a good tactic to send the out of form Yuvraj ahead of inform Kholi. Also the way Dhoni is playing he is not anymore the big hitter he used to be. Yusuf should have been in by that time. He needs some time to settle in. This remains the tactics of Sachin who used Pollard for the last couple of overs in IPL and hoping for a miracle from him everytime. I think Dhoni want to reestablish him as a hitter ahead of Yusuf and also helping his good friend Yuvraj to find some touch as if this is a practice game. Although Yuvraj played well in this game still Kholi would have been a better option. Also Ashwin has to be brought in as an attacking option for the defensive Harbhajan. God save this Indian team too heavy in batting but wafer thin in bowling.

enRenRum-anbudan.BALA said...

ஸ்ரீதர்,

//இந்த ‘மிகை’ நையாண்டிகள் இல்லாது எப்பொழுதுதான் பாலா உருப்படியான கிரிக்கெட் கட்டுரைகள் எழுதுவார்? :)
//
After I start understanding the nuances of the game of glorious uncertainties, may be ;-)

enRenRum-anbudan.BALA said...

Dondu Sir,

It is not worth watching if you dont get involved in the game and that means there is bound to be tension :)

anbudan
BALA

enRenRum-anbudan.BALA said...

Thanks, அப்பாதுரை, கானகம்...

Essex Siva said...

ஒரு விஷயம் நானும் feel செய்தேன்:
பெல்லும் ஸ்ராஸும் இவ்வளவு ஈசியாக நம் பந்து வீச்சை எதிர் கொண்ட விதம் உண்மையிலேயே அதிர்ச்சிதான்...
இத்தனைக்கும் பின்னால் ஸ்டண்டர் பேட்ஸ்மென் இல்லை - காலின்வுட் கொஞ்ச நாளாகவே சொதப்பல் தான்...
ஆனால் அந்த ஷெசாத் எதையாவது சுற்றுவார் என பயந்தேன்-படுபாவி, பயந்தமாதிரியே சுற்றிவிட்டார்! இங்கே கௌண்டி மாட்சுகளில் ஒரளவிற்கு ஆட (அடிக்க) கூட கூடியவர்தான்...
இன்று ஆபிஸில் எப்படி எதிரில் உள்ளவரின் முகத்தில் விழிப்பது என்று தயங்கிக்கொண்டுதான் போனேன் (வெள்ளியன்று, நான் ரொம்ப அலட்சியமாக "முடிவு தெரிந்ததே, at least இங்கிலாந்து முடிந்தவரை ரன் ரேட்டை ஏற்றிக்கொள்ள பார்க்கவேண்டும்" என்று டயலாக் வேறு!)
நல்லகாலம் அவர் favourite Arsenal football club FA cup finalல் தோற்றதில் முகத்தை தொங்க போட்டிருந்தார்...தப்பித்தேன்!

Essex சிவா

ஒரு வாசகன் said...

ஏக்கு மாக்கு என்று ஒரு தீம் பாடல் பாடுகின்றார்களே, அது என்ன மொழி? யார் இசை அமைத்தது? 2011 உலகக்கோப்பையின் தீம் பாடலா?

மஞ்சள் ஜட்டி said...

ஏக்கு மாக்கு என்று ஒரு தீம் பாடல் பாடுகின்றார்களே, அது என்ன மொழி? யார் இசை அமைத்தது? 2011 உலகக்கோப்பையின் தீம் பாடலா?

அட முண்டகலப்பை, அது "எக்கு மாக்கு" இல்ல.... "தே குமா கே" - அப்படின்னா சுழட்டி அடி ன்னு அர்த்தம்..சங்கர் மகாதேவன் இசையமைத்து பாடிய பாடல்..

vijayaragavan said...

This kind of experience is not new for Indian(s)/team.
Its difficult to accept India as a World No. 1, when compared to AUS or SA. Its highly probabilistic to say India would win this cup. Without a doubt they need favors from the Umpires, at the least to give 'out' for those are really so. UDRS as India claims is utter waste one. Courtesy : Bell's LBW and Strauss's twice nick - Connect the umpire's ear microphone with stump ones :).

சீனு said...

1. பீட்டர்சன் அடித்த ஒரு பந்து பேட்டில் பட்டிருந்தாலும் இந்தியர்கள் யாரும் ஏன் அப்பீல் செய்யவில்லை? அந்த சத்ததில் யாருக்கும் கேட்கவில்லையா? ரீப்ளேவில் கூட பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது.

2. யுவரஜ் அப்பீல் செய்த எல்.பி.டபிள்யுவுக்கு 3வது அம்பையர் ஏன் அவுட் கொடுக்கவில்லை? தெளிவாக தெரிகிறது அது அவுட் என்று. பேட்ஸ்மேனும் பெவிலியன் நோக்கி செல்கிறார். இருந்தாலும் திருபி அனுபப்படுகிறார். இதுமாதிரி நிகழ்வுகள் ஏன் வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் சாதகமாக நடக்கிறது?

3. ஸ்ட்ராஸின் ஈஸியான கெட்சை சோம்பேரித்தனத்தால் கோட்டை விட்ட "Obnoxious Little Weed" பஜ்ஜியை ஏன் செருப்பால் அடிக்கக்கூடாது?

A Simple Man said...

India badly needs a strike bowler to help along Zaheer.
more tough games awaited.
-ASM-

Anonymous said...

Very Good article. Good work ..Keep it up Bala..!

Jayadev Das said...

அருமையான விமர்சனம். நம்ம பந்து வீச்சு படு மோசம். கப்பு வாங்கும் அளவுக்கு திறமையான டீமாகத் தெரியவில்லை.

Anonymous said...

///வர்ணனை என்ற பெயரில் ரவி சாஸ்திரி கதறிக் கொண்டிருந்த காமடியை ரென்ஷன் காரணமாக ரசிக்க முடியவில்லை ;-) ///

உங்கள் "வரு"ணனையை விட நன்றாகத்தான் இருந்தது.

டி வி பார்த்து பதிவு எழுதி என்ன சாதிக்க நினைக்கிறீர்களோ.கிரிக்கெட் ரசனை கொஞ்சமேனும் உள்ளவர்கள் அனேகமாக இந்த போட்டியைப் பார்த்திருப்பார்கள்.அதனால் உங்களுடைய மறு வாந்தி அவர்களுக்கு எந்த உபயோகமும் இல்லை. கிரிக்கெட் ஆர்வமில்லாதவர்கள் இந்தப் பதிவு(கள்) பக்கம் ககூட வர மாட்டார்கள். டி வி பார்த்து பார்த்ததை அப்படியே வாந்தி எடுத்து ஒப்பேற்றாமால் அலசல் மற்றும் சுவாரசியம் சேர்த்து எழுதப் பார்க்கவும்.இல்லையேல் இட்லிவடையில் பதிவு எண்ணிக்கை கூடியதைத் தவிர யாருக்கும் " சுயமாக சொரிந்து கொண்டால் வரும் அல்ப சுகத்தைக் கூட" படிக்கும் போது இந்தப் பதிவு கொடுக்கப் போவதில்லை .

R. Jagannathan said...

கடைசி அனானிமஸ் எழுதியிருப்பதுபோல் இந்த / இவரின் பதிவு தேவையற்றது என்பதுதான் என் கருத்தும். (என்னுடைய பின்னோட்டம் இதற்கு முந்தைய பதிவிலும் இட்டிருந்ததால், இதுவரை இந்த பதிவிற்கு கம்மென்ட் போடாமலிருந்தேன்.) செஸ் ஆட்டத்திற்கு முந்தி ஒரு தடவை ஒரு விமர்சன பதிவு வெளியிட்டிருந்தீர்கள், அதை முன் மாதிரியாகக் கொண்டு பாலாவை எழுதச் சொல்லவும்). - ஜெ.

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

ரவிசாஸ்திரி வர்ணனை பிரமாதம் என்று கூறுவதால், அரைகுறை அனானிக்கு ஆங்கிலம் சுத்தம் என்று விளங்குகிறது.

//டி வி பார்த்து பார்த்ததை அப்படியே வாந்தி எடுத்து ஒப்பேற்றாமால் அலசல் மற்றும் சுவாரசியம் சேர்த்து எழுதப் பார்க்கவும்.
//
இப்படி எழுதியவுடன் தமிழும் சிலாக்கியமில்லை என்று புரிகிறது :>

எ.அ.பாலா வாந்தி எடுத்ததாகத் தெரியவில்லை, அலசியிருக்கிறார். குருட்டு அனானிக்காக சில எ.கா.

1. முதல் 15 ஓவர்களுக்குள் பந்து வீச வந்த ஸ்வானின் வீச்சை, கம்பீர் திறமையாக கையாண்டது குறிப்பிடத்தக்கது.
2. இத்தகைய அடித்தளம் அமைக்கப்பட்ட சூழலில், வரவிருக்கும் யுவராஜ், தோனி, கோலி, பதானை கணக்கில் கொண்டால், இந்தியா 360 ரன்களை தொட வேண்டும்
3.இந்தியாவின் மிக மிகச் சாதாரணமான பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டு, ரன்களை குவித்து, தேவையான ரன்ரேட் 7.3 என்பதை தாண்டாத வண்ணம் பார்த்துக் கொண்டனர்.
4.பந்து வீச்சு திட்டத்துக்கு ஏற்றவாறு பந்து காப்பாளர்களை நிறுத்துவதை விடுத்து, பேட்ஸ்மன் கடைசியாக எங்கு பந்தை அடித்தாரோ, அதற்கேற்றவாறு ஃபீல்டிங்கை மாற்றியவண்ணம் இருந்தார். இப்படி தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது அபத்தமில்லையா?

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

ஜெ என்கிற ஜாம்பஜார் ஜக்குவுக்கு

எ.அ.பாலா பதிவு தேவையா இல்லையா என்பதை இ.வ தீர்மானிப்பார். முடிந்தால் ஆட்டத்தை விமர்சித்து நீர் ஏதாவது எழுதி இட்லிவடைக்கு அனுப்பி அது தேறுமா என்று பாரும். உமது திண்ணை தாத்தா அறிவுரையை உடைப்பில் போடவும்

டக்கால்டி said...

Super..I like your usage of english words in between and some blogger names...

R. Jagannathan said...

I think Bala is taking the place of late Vetrikondaan and S.S.Chandran. Better try for a seat in either of the Kazhagams.

When an article is published in the blogsite it gets commented. You may like it or not as the reader likes your 'expert' writing or not.

You might have heard that critic need not know to sing / cook / write. As I know my limitations, I am not venturing into 'writing bla..bla..'.

I hope IV can moderate comments by readers as well as reaction from the contributors. Bala's reaction leaves a very bad taste in the mouth.

-R. J.

Anonymous said...

/// எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...////
மேற்படி பின்னூட்டத்திற்கு எனது தாழ்மையான பதில் கடிதம்

முட்டாள்(க)ளுக்கு,

இந்தப் பதிவை விட சாஸ்திரியின் வர்ணனை பரவாயில்லை என்றுதான் சொல்லியிருக்கிறோம். அதாவது ரவிசாஸ்திரி வர்ணனை "சடை" என்றால் இந்தப் பதிவு "கழிசடை" என்று அர்த்தம். "ரவிசாஸ்திரி வர்ணனை பிரமாதம் " என்று எங்கே சொல்லப் பட்டிருக்கிறது ? எனது அரைகுறைத்தனம்...ஆங்கில சுத்தம் இதெல்லாவற்றையும் அலசுமுன் சொன்னதின் அர்த்தத்தையாவது புரிந்து கொண்டு பதில் மொழிதல் உசிதம்.

எனது குருட்டுத்தனத்தைப் போக்க அருமையாக எடுத்துக் காட்டப் பட்டிருக்கும் "அலசல்களை " நான் கிளறப் போவதில்லை " குப்பையைக் கிளறினால் கோழிக்கு வேண்டுமானால் தீனி கிடைக்கலாம்" எனவே "எ.அ.பாலா ரசிகர் மன்றம்" என்று சுற்றித் திரியும் கோழி(களே) தாராளமாக இந்தப் பதிவுகளை வயிறு நிரம்ப கிளறித் தின்னட்டும்.

இந்த மாதிரிப் பதிவுகளிலிருந்து இட்லி வடையையும், இப்படிப்பட்ட பதிவுகளை வாங்கிப் போட்டு ஒப்பேற்றும் இட்லி வடையிடமிருந்து தமிழ்ப் பதிவுலகையும், என்ன சொன்னாலும் எகிறிக் குதித்துக் கொண்டு சண்டைக்கு நிற்கும் தமிழ்ப் பதிவுலக பதிவர் /ஜால்ரா கூட்டத்திடமிருந்து ப்ளாக் உலகத்தையும் (முடிந்தால்) பாடிகாட் முனி காப்பாற்றட்டும்

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

//என்ன சொன்னாலும் எகிறிக் குதித்துக் கொண்டு சண்டைக்கு நிற்கும் தமிழ்ப் பதிவுலக பதிவர் /ஜால்ரா கூட்டத்திடமிருந்து ப்ளாக் உலகத்தையும் (முடிந்தால்) பாடிகாட் முனி காப்பாற்றட்டும்
//
அரைகுறை அனானி அவர்களுக்கு

யாரப்பா எகிறி குதித்தது? நீர் *வாந்தி* *சொரிந்து கொண்டால்* *கழிசடை* என்று மிகவும் நாகரிகமாக சொற்பொழிவாற்றியது எகிறி குதிப்பதில் அடங்காதா :> உமக்கு புரியும் யோக்கியவான் பாஷையில் பதில் வழங்கப்பட்டது. நீர் கிரிக்கெட் ஞானசூன்யம் என்பதும் தெளிவு. போய் பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கும் வழியைப் பாரும்.

Anonymous said...

///" குப்பையைக் கிளறினால் கோழிக்கு வேண்டுமானால் தீனி கிடைக்கலாம்" எனவே "எ.அ.பாலா ரசிகர் மன்றம்" என்று சுற்றித் திரியும் கோழி(களே) தாராளமாக இந்தப் பதிவுகளை வயிறு நிரம்ப கிளறித் தின்னட்டும்.///

பின்னூட்டங்களையும் சேர்த்து.

I made my point. Bye

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

அரைகுறை அனானி

Thank God there wont be anymore stupid comments from you. Bye

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுவராசியமான கிரிக்கெட் விமர்சனம். இப்போது உள்ள பாய்ண்ட்ஸ் டேபிளை வைத்து யார், யார் அடுத்த ரவுண்டிற்கு செல்வார்கள் என்று ஒரு அலசல் போடலாமே?

Anonymous said...

Hey! Do you use Twitter? I'd like to follow you if that would be okay. I'm definitely enjoying
your blog and look forward to new updates.

My web site: personal injury claims