பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 22, 2011

regret = apology ?

வாஜ்பாயி பிரதமராக வந்தபோது, இந்தப் பதவிக்கு அத்வானி வந்திருக்க வேண்டும் என்று என்னை போல பலரும் நினைத்திருப்பார்கள். அவரது துணிச்சலான பேச்சுகள், அதிரடி நடவடிக்கைகள், கட்சியைக் கட்டுக்கோப்பாக மேலெடுத்துச் சென்றது, நேர்மை என்று பல காரணங்களால் பி.ஜே.பி என்றால் அத்வானி என்ற எண்ணம், அவரைப் பற்றி இந்திய மக்களிடம் இருந்தது. இன்னும் இருக்கிறது.

ஆனால் எல்லா அரசியல் கட்சிகளையும் போலவே அங்கும் கோஷ்டிகள் வர ஆரம்பிக்க, அத்வானி மற்றும் சில நல்ல தலைவர்கள் ஜகா வாங்கினார்கள். ஊழலுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்தார்கள். (கொள்ளைக் கூட்டமான ரெட்டி சகோதரர்களுக்கு வக்காலத்து வாங்கிய சுஷ்மா இதற்கு எடுத்துக்காட்டு ). தன் கட்சிக்காரர் தப்பு செய்யும்போது பிஜேபி ஒன்றும் செய்ய முடியாத கோழையாக பரிதாபமாக நின்றது (எடியூரப்பா நிலங்களை வளைத்துப் போட்டபோது (காங்கிரஸின் மெகா ஊழல்களைப் பார்க்கும்போது இது எறும்புக்கடி ஊழல்தான் என்றாலும்) தலைமை ஒன்று செய்ய முடியாதது இதற்கு எடுத்துக்காட்டு). அருண் ஷோரி, "2G ஊழல் சம்பந்தமாக எல்லா ஆதாரங்களும் தனக்குத் தெரியும்; ஆனால் பி.ஜெ.பி சும்மா இருந்துவிட்டது. அதிமுக மட்டும்தான் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பேசியது" என்று தொலைக்காட்சியில் சொன்னமாதிரி, பிஜேபிக்கு அதில் ஆர்வம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. மீடியா 2G-யைப் பெரிதுப்படுத்திய பின்தான் பிஜேபி JPC வேண்டும் என்று தன் பல்லவியை ஆரம்பித்தது. ஏன் 2009-லிருந்து சும்மா இருந்தது என்பது ஆராய்ச்சி செய்ய வேண்டிய கேள்வி. ஏன் அத்வானி சும்மா இருந்தார்? எது எதற்கோ ரதத்தை இழுக்கும் இவர்கள் ஏன் இதற்கு இழுக்கவில்லை? கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு அதுவே உருகி நெய்யாகியும்கூட ஏன் அதை வழுவ விட்டார்கள்?

அருண் ஷோரி நேர்காணல்

[ Arun Shourie: The BJP knows what I knew.

Karan Thapar: The BJP knows what you knew? Sushma Swaraj and Arun Jaitley know this?

Arun Shourie: I don't want to talk about BJP's internal meeting but it is certainly my assessment that they were not interested in following these things.

Karan Thapar: Even the BJP wasn't interested?

Arun Shourie: No.

Karan Thapar: The BJP had dynamite and they weren't interested in following it up?

Arun Shourie: That's true. That's unfortunately true. It is only the AIADMK MPs who were following this up.
]


இப்போது அத்வானி எழுதிய கடிதத்துக்கு வருவோம்.

எஸ்.குருமூர்த்தி, இந்திய உளவு அமைப்பின் (ஐ.பி.) முன்னாள் தலைவர் அஜீத் தோவல், பெங்களூர் ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன், பிரபல வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் அடங்கிய குழு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் தொடர்பான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டது. அதில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமாக சுவிட்சர்லாந்தின் ஸ்வீசர் இல்லஸ்ட்ரேட் இதழ் 1991-ஆம் ஆண்டு வெளியிட்ட செய்தி மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

சோனியா காந்தியின் கடிதம்

Dear Shri Advaniji,

My attention has been drawn to a publication titled 'Indian Black Money Abroad in Secret Banks and Tax Havens' purporting to be a report submitted by a Task Force appointed by the Bharatiya Janata Party.

This so-called report contains reckless and baseless allegations against me and my family, including my late husband and my mother. These lies, energetically disseminated from time to time by sections of the media and interested parties have so far been treated by me with the contempt they deserve.

But I must let you know that I am surprised and disappointed to find a leader of your stature occupying important positions in the NDA and the BJP endorsing such scurrilous and malicious fabrications through their release at a function presided over by you.

Yours sincerely,

Sd. Sonia Gandhiஅதற்கு அத்வானியின் பதில்

Dear Smt Soniaji,

On my return from Kolkata last night, I found your letter dated 15th February awaiting me.

I am happy that you have denied the reports relating to you and your family alluded to in the Task Force's Report on Black Money.

If these had been denied earlier, the Task Force would have taken your denial into account. Even so, I deeply regret the distress caused to you.

With best regards,

Yours sincerely,

L K Advani


சோனியா காந்தி, "உங்களை போல ஒரு பெரிய தலைவர் இருக்கும் கட்சியிலிருந்து இந்த மாதிரி ஒரு கடிதம் வருகிறதே" என்று ஆச்சரியப்படுகிறார். இதற்கு அத்வானி என்ன சொல்லியிருக்க வேண்டும் ?

"I regret that you and your family members surface in the report..... you should also understand the distress caused to the Indian people because of the money launderers. I have faith in the task force, and they have taken into account sevaral evdiences and have done extensive investigations before making the report. However, I have forwarded your letter to our task force who will respond to you soon" என்று எழுதியிருந்தால் நன்றாக இருக்கும் அதை விட்டுவிட்டு "I deeply regret the distress caused to you." என்று எழுதினால் கருப்பு பணம் பற்றி அந்த அறிக்கையை சமர்பித்த அந்த குழுக்கு என்ன மரியாதை?

அரசியல் நாகரிகம் கருதி பர்சனலாக அத்வானி எழுதினார் என்று வாதிடலாம் ஆனால் இது நாட்டுப் பிரச்சினை. இதில் பர்சனலுக்கு இடமில்லை.

பத்திரிகையில் ஒருவரைப் பற்றி தப்பாக செய்தி வந்தால், அது தவறுதான் என்று பத்திரிகை தரப்பும் நினைத்தாலும்கூட, அதற்கு அடுத்த வாரம் பத்திரிகை, "உங்களைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறோம்" என்றுதான் போடுவார்கள். மன்னித்துவிடுங்கள் என்று நடைமுறையில் சொல்லுவதில்லை. ( இட்லிவடை கூட இப்படி தான் செய்கிறது :-)

இந்த இரண்டு வார்த்தைகளை ஆங்கில அகராதியில் சேர்க்க பரிந்துரைக்கிறேன்
Regret : Official sorry, Usually used by leaders.
Sorry: Unofficial sorry, Usually used by Indian common man.


இந்தக் கடிதப் போக்குவரத்தால் சில கேள்விகள் இல்லாமல் இல்லை..

அறிக்கையில் தன்னை பற்றிய அவதூறுக்கு மறுப்புத் தெரிவிப்பதை விட்டு விட்டு அம்மணி ஏன் அத்வானிக்குக் கடிதம் எழுதினார்? ஏன் பி.ஜே.பி தலைவருக்கோ அல்லது அந்தக் குழுவுக்கோ எழுதவில்லை? ஏன் அத்வானி இவ்வாறு சோனியாவிற்கு பதில் அனுப்பினார்? அவருக்கு அப்படி என்ன நெருக்கடி? இந்த 2G யுகத்தில் ஏன் கடிதப் போக்குவரத்து? பேசாமல் தொலைபேசியில் பேசியிருக்கலாமே?

Regret - apology பற்றி Oxford-Cambridge-லிருந்து வந்தவர்கள் விவாதிக்கலாம். உடனே அகராதி எடுத்து பார்த்த போது - apology - An expression of regret at having caused trouble for someone என்றும் regret - To feel sorry, disappointed, or distressed about என்றும் இருக்கிறது.

அத்வானியின் கடிதத்தை படிக்கும் போது ஏதோ ஒன்று தப்பாக இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. என்ன என்பதை அறிவுஜிவிகளுக்கு விட்டுவிடலாம்.இதே மாதிரி அத்வானி லெட்டர் எழுதிக்கொண்டு இருந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் silly point இடத்துக்கு இவர் சீக்கிரமே தேர்ந்தெடுக்கப்படுவார்.22 Comments:

Anonymous said...

என்னோட கேள்வியெல்லாம், இதுக்கெல்லாம் அத்வானிக்கு லெட்டர் போடற அம்மணி ஏன்

-- http://janataparty.org/sonia.html--

இதுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்? முழுமையான உண்மைகள் மேலும் பல வெளியாகிவிடும் என்றா?

கேள்விகளுடன் + சந்தேகங்களுடன்
அநங்கன்

அஞ்சா நஞ்சன் said...

ஒண்ணுமே புரியல.. அதனாலே no comments..

King Viswa said...

//இதே மாதிரி அத்வானி லெட்டர் எழுதிக்கொண்டு இருந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் silly point இடத்துக்கு இவர் சீக்கிரமே தேர்ந்தெடுக்கப்படுவார்.//

கொஞ்ச நாள் முன்னாடியே இவரை சில்லி பாயிண்டுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று முடிவாகிவிட்டதே?


கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

Roaming Raman said...

//அத்வானியின் கடிதத்தை படிக்கும் போது ஏதோ ஒன்று தப்பாக இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. என்ன என்பதை அறிவுஜிவிகளுக்கு விட்டுவிடலாம்//
அப்பாடா!! நம் வாசகர்களுக்கு இல்லை என்று எழுதாமல் விட்டீரே- அதுக்கு நன்றி!!
(அப்பவும் இவ எழுத்தாளர்களுக்கு உண்டு என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கலாம் என்பது வேறு விஷயம்!!)
-ரோமிங் ராமன்

jaisankar jaganathan said...

மஞ்ச கமெண்ட் சூப்பர்

virutcham said...

பாராளுமன்றத்தை நடக்க விடாமல் அடம் பிடித்துக் கொண்டு இருந்த பிஜேபி யோ மத்த எதிர்க்கட்சிகளோ கூட தெருவில் இறங்கி மக்களிடம் பிரச்சனைகளை கொண்டு செல்ல பெரிதாக எதுவும் செய்ததாக தெரியவில்லை. அதிமுக கொஞ்சம் தாமதம் ஆனாலும் தேர்தல் நெருங்குவதால் ஆங்காங்கே கூட்டம் போட்டது.

அதைத் தொடர்ந்து அருண் ஷோரியின் அந்த வெளிப்படையான பேட்டி ஆச்சர்யமாகவும் மக்களிடம் இந்த விஷயத்தை கொண்டு செல்வதில் பிஜேபி பெயரிய ஆர்வம் இல்லை என்பதையும் காட்டியது.

அத்வானியின் கடிதம் இந்த நேரத்தில் மன்னிப்போ வருத்தமோ இடைப்பட்ட எதுவோ, மொத்தத்தில் சரியில்லை என்பது தான் சரி.

pvr said...

ரிக்ரெட், அபாலாஜி என்ற ஆங்கில வார்த்தைகளி தாக்கம் உண்மையான அர்த்தம் ஒரு பக்கம். அடகி காங்கிரஸ் மற்றும் டி‌வி பயன் படுத்திய விதம் இன்னோர் பக்கம். இந்த விஷயம் முழுமையாக தெரிய வேண்டுமானால், நீங்கள் எஸ். குருமூர்த்தியின் கட்டுரையையும் போட்டிருக்கலாம். ஏனெனில் அவரும், அந்த அறிக்கையை தயாரித்த Task Force உறுப்பினரில் ஒருவர். இதைப் படியுங்கள்.
http://expressbuzz.com/opinion/columnists/distress-and-regret/249803.html

மேலும், ராம் ஜெத்மலானியின் கருத்துக்கள் இங்கே:
http://daily.bhaskar.com/article/NAT-TOP-gandhi-family-has-black-money-in-swiss-banks-ram-jethmalani-1871041.html?PRV=

பி.ஜே.பி என்ன சொல்லுகிறது? இங்கே:
http://www.deccanherald.com/content/139802/bjp-says-no-clean-chit.html

அத்வானி ஏன் இப்படி இப்போது எழுதினார் என்பதை விட முக்கியமானது, அன்னை சோனியா இன்னும் ஏன் இவர்கள் மேல் வழக்கு போட்டு, தான் நல்லவர் என்று நிரூபித்து, இந்தக்கெட்டவர்களை தண்டனைக்குள்ளாக்க தயங்குகிறார் என்பது தான் அதி முக்கியமான ஒன்று.

pvr said...

இப்படி ஏன் இப்போது அத்வானி எழுதினார் என்பதை விட முக்கியமானது, குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது தான்.

Regret என்பதை ஒருதலை பட்சமாக, சாதகமாக ஆக்கிக்கொள்ளும் காங்கிரஸ் மற்றும் TV-க்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நீங்கள் ஏன் அந்த அறிக்கையை தயாரித்த Task Force உறுப்பினரான குருமூர்த்தியின் கட்டுரையைப் போடக்கூடாது? இதோ அது:
http://expressbuzz.com/opinion/columnists/distress-and-regret/249803.html

அல்லது அதே கருத்தைக்கூறும் ராம்ஜெத்மலானியின் எண்ணங்களை..? இங்கே அது:
http://daily.bhaskar.com/article/NAT-TOP-gandhi-family-has-black-money-in-swiss-banks-ram-jethmalani-1871041.html?PRV=

இதோ BJP கட்சி சொல்லுவது:
http://www.deccanherald.com/content/139802/bjp-says-no-clean-chit.html

என் சந்தேகம், அன்னை சோனியா ஏன் இவர்கள் மீதெல்லாம் வழ்க்குப்போட்டு, இவர்களுக்கு நல்ல தண்டனை வாங்கித்தர கூடாது? அன்னைக்கு யாராவது, கபில் சிபலோ அல்லது ப. சிதம்பரமோ சொல்லக்கூடாதா?

Durairaj Sukumar said...

சோனியா எழுதாம விட்டது இது தான்"என் கணக்கை நீ சொன்னா உன் கணக்கை நான் சொல்லவா?"
அதனால தான் இந்த அவசர Regret கடிதம்

mak said...

"2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக பாஜக முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் அருண் ஷோரி நேற்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தார். குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய வீட்டு வேலை இருப்பதால் தன்னால் வர முடியவில்லை என்று சிபிஐக்கு அவர் தகவல் அனுப்பியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் புன்னியவான் வேடம் போட்டு வரும் பாஜகவின் ஆட்சியில் தான் முதலில் வருபவர்களுக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் என்ற முறையும், வேண்டியவர்களுக்கு அதை ஒதுக்கித் தரும் முறைகேடும் ஆரம்பித்தன.

இந்த விஷயத்தில் மறைந்த பிரமோத் மகாஜன், அருண் ஷோரி ஆகியோர் மீதும் பெரும் குற்றச்சாட்டுகள் உள்ளன" - may be this reason

kothandapani said...

These politicians all are feathers of the same bird.As in the case of swiss bank account, one day Soniaji will send a letter declining the 2G Scam and Advaniji will readily apoligise for it.And abt
the magnitude of corruption by BJP, you should remember that BJP is not in power in centre now. About Arunshourie, we dont understand why he has not perused 2G scam, having known all the details.

Anonymous said...

சோனியா எழுதாம விட்டது இது தான்"என் கணக்கை நீ சொன்னா உன் கணக்கை நான் சொல்லவா?"
அதனால தான் இந்த அவசர Regret கடிதம்

This sounds perfect !!!!

Anonymous said...

please read...article in rememberence of famous riter sujatha

Anonymous said...

http://www.tamilmagan.in/2010/11/blog-post.html

Anony8 said...

சோனியா எழுதாம விட்டது இது தான்"என் கணக்கை நீ சொன்னா உன் கணக்கை நான் சொல்லவா?"
அதனால தான் இந்த அவசர Regret கடிதம்

-----------
ha ha ha
Advani protecting his little 10s of Crores is more important than exposing Sonia Family's Lakhs of Crores.

Anonymous said...

நீங்கள் பாராமுகம் கொண்டவர் என்பதனை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். நெருங்கி விட்டோம் சீக்கிரமே உங்களை பிடிப்போம்.

இவண்,
அகில இந்திய தேசிய பாரத ஐக்கிய அனைத்திந்திய அனைத்துலக இட்லிவடை ரசிகர்கள் சங்கம், சென்னை.

Anonymous said...

The article about this isssue in Tamilhindu is more interesting.

அத்வானியின் கடிதம் - படிக்கத் தெரிந்தவரின் பதவுரை


It says the usage of the word "regret" in the letter actually means "pity".

Anonymous said...

//ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் புன்னியவான் வேடம் போட்டு வரும் பாஜகவின் ஆட்சியில் தான் முதலில் வருபவர்களுக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் என்ற முறையும், வேண்டியவர்களுக்கு அதை ஒதுக்கித் தரும் முறைகேடும் ஆரம்பித்தன.//
முதலில் வருபவருக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் என்ற என்ற திட்டத்தால் தான் மொபைல் போனை மிக குறைந்த கட்டணத்தில் (ஏழை மக்களும்) பயன்படுதுகின்றனர்.

வியாபார முறையில் ஏல முறைகள் விட்டிருந்தால் அரசுக்கு வருமானம் அதிகம் கிடைத்திருந்திருக்கும். ஆனால் அந்த பணம் கட்டனமாக் மக்களிடமிருந்து பெற்ற பணமாக இருக்கும். எனவே இப்போது பின்பற்றிய முறை ஏழை மக்களுக்கானது. பயன் பெறுவது மக்கள் தான் .அரசாங்கத்துக்கு இழப்பு என்பது மக்களின் லாபம்.

டகிள் பாட்சா said...

ஐயா அனானி
தவறுகளை எப்படியெல்லாம் நியாயப்படுத்தப் பாக்கிறிங்களய்யா! நீங்க என்ன தி.மு.க கொள்கை பரப்பு செயலார் போலிருக்கு! ஏலம் விடாதது மக்களுக்கு கட்டண குறைப்புங்கிறீங்க! கொஞ்சம் விட்டா பல்லாயிரம் கோடி ஊழல் பணமும் மக்களுக்கு எலக்‌ஷன் சமயத்துல போய் சேர்ரதுதானே! அதனால ஊழல் தப்பில்லன்னு சொல்லுவீங்க போலிருக்கே!

கால்கரி சிவா said...

65 வயதிற்கு மேல் ஆனவர்கள் அரசியலிருந்து ஓய்வு பெறவேண்டும். இல்லாவிட்டால் இந்த மாதிரி உளற நேரிடும்.

kailash said...

Arun Shorie is not a holy cow . He dint appear beofre CBI when asked to appear

SAN said...

Hi IV,
Have look at this news item wherein Arun Shourie is directly accusing Dayanidhi Maran.

http://www.dailypioneer.com/320350/2G-scam-Shourie-blames-Maran-for-key-policy-manipulation.html