பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 14, 2011

குருப்- C ஐ.சி.சி.க்கு கோரிக்கை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குருப்-A, குருப்-B என்று இரண்டு குருப் இருப்பது தெரிந்ததே. தற்போது மூன்றாவதாக குருப்-C ஒன்று வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.


அவ்வாறு அமைக்கும் அந்த குருப்-C'ல் காங்கிரஸ் கோஷ்டிகள் இடம்பெற வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். அப்படி குருப்-C உருவாகும் பட்சத்தில் சத்யமூர்த்தி பவன் மைதானத்தில் இவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கோபாலபுரத்து மக்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

கலைஞர் டெல்லி சென்று வந்த பின்னர் ஐவர் குழு என்று ஒரு வார்த்தை தமிழ் தினசரிகளில் வருகிறது. ஒரு குழுவாக இருந்தாலும், இதில் பல குழுக்கள் அடங்கியுள்ளது. தங்கபாலு, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாமக்கல் ஜெயக்குமார் இவர்கள் ஐந்து பேரும் தான் இந்த ஐவர் குழுவில் இருக்கிறார்கள். கொஞ்ச நாளாக ஜெயலலிதாவை காட்டிலும் காட்டமான விமர்சனத்தை இ.வி.கே.எஸ் இளங்கோவன் கலைஞர் மீது வைத்தார்.

ஆனால் காங்கிரஸ் - திமுக என்ற கூட்டணி வந்த பிறகு கொஞ்சம் தன் பேச்சை அடக்கியே வாசித்தார். ஆனால் இந்த ஐவர் குழுவில் தான் இல்லை என்று தெரிந்ததும் மீண்டும் மைக் பிடித்து பேச ஆரம்பித்துவிட்டார்.

போன வாரம் காங்கிரஸ் கட்சியின் உண்மைத் தொண்டர்கள் என்ற பெயரில், சத்யமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்தார்கள் இளகோவனின் தொண்டர்கள். கூட்டத்துக்கு வந்த இளங்கோவன் அங்கே கூடியிருந்த 2000த்துக்கு மேற்பட்ட தொண்டர்களை பார்த்து ஆச்சரியப்பட்டு

''கூட்டணி குறித்துப் பேச நான் இங்கே வரவில்லை. சில நேரம் கசப்​பான மருந்தைத் தேனில் கலந்து குடிப்பதைப் போல, கட்சித் தலைமை எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களைக் கட்சியில் ஒதுக்கும்போது, சிறு வருத்தம் ஏற்படுகிறது. தொகுதிப் பேச்சுக் குழுவில் சிதம்பரம், ஜி.கே.வாசனைப் போட்டிருக்கிறார்கள். ஜெயந்தி நடராஜன், சிறந்த வழக்கறிஞர். உள்ளூர் முதல் உலக விவகாரங்கள்வரை நுனிநாக்கில் ஆங்கிலத்தில் பேசும் வல்லமை கொண்டவர். நாமக்கல் ஜெயக்குமார், வளரவேண்டியவர். இவர்களைக் குழுவில் போட்டதில் தவறு இல்லை. ஆனால், எதிர் அணியில் தொகுதிப் பேச்சுக் குழுவில் இருப்பவர்கள் எல்லாம் ஜாம்பவான்கள். துரைமுருகனை எடுத்துக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் எத்தனை குளங்கள், ஏரிகள், கிணறுகள் இருக்கின்றன என்பதை விரல்நுனியில் வைத்திருப்பார். அப்படிப்பட்ட ஜாம்பவான்களிடம் பேசுவதற்கு ஏற்றவர்கள் நம் குழுவிலே இருக்கவேண்டாமா? முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கு 234 தொகுதிகளைப் பற்றியும் அக்கு அக்காகத் தெரியும். அடுத்து, சட்டமன்ற காங்கிரஸ் துணைத்தலைவர் யசோதா, 40 ஆண்டுகளாக காங்கிரஸில் தீவிரமாகச் செயலாற்றுகிறவர்...''

''மேலே சொன்னவர்கள் எல்லாம் குழுவில் இடம்பெறவேண்டும் என குலாம்நபி ஆசாத்திடம் சொன்னேன். அவர் என்னிடம், 'சீனியர் லீடரான நீங்கள் குழுவில் இருக்கிறீர்கள்’ என்றார். ஆனால், தங்கபாலுதான் என் பெயரைச் சேர்க்கவேண்டாம் என பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து கட்சியை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டுப் போனவர். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்டத்துக்கு 50 பேர் இருக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. இதைப் போல இன்னும் பல புகார்கள்... இரவு நேரத்தில் சத்யமூர்த்திபவனில் பூஜைகளைச் செய்யும் தங்கபாலுவுக்கு உண்மையான காங்கிரஸ் தொண்டனின் உணர்வு எப்படி தெரியும்? அவர் ஒரு ஜந்து. இந்த ஜந்து தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும்வரை கட்சி உருப்படாது!''

''என் வாழ்க்கையில் பெற்ற தாயும், உடன்பிறந்தவர்களும் எனக்கு எதிராகப் போனதுண்டு. ஆனால், நீங்கள் எல்லாரும் எங்கெங்கோ இருந்து எனக்காக வந்திருக்கிறீர்கள். எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன்!''

''எல்லாரும் இங்கிருந்து போகும்போது, வேட்டி, சேலையை நன்றாக உதறிய பிறகு கட்டிக்கொண்டு போங்கள். இல்லாவிட்டால், சத்யமூர்த்திபவனில் உள்ள மண்ணை இளங்கோவன் ஆதரவாளர்கள் எடுத்துக்கொண்டு போய்விட்டதாகச் சொல்வார்கள். விரைவில் இந்த மண் இருக்கும் வளாகமே நம்மிடம் வரும்!''

இன்று ஐவர் குழு ஆலோசனையில் 8 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்(இளங்கோவனின் ஆதரவாளர்கள்) ஐவர் குழுவில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் எந்த கிரிக்கெட் போட்டியை பார்ப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு குருப்-C(ongress) என்ற ஒரு குழுவை அமைத்து உலக அரங்கில் இவர்களை விளையாட வைப்பது தான்!

14 Comments:

sakthistudycentre-கருன் said...

இதெல்லாம் அரசியல்ல சாதாரனமப்பா...

King Viswa said...

நான்கூட டைட்டில பார்த்தது விட்டு என்னமோ ஏதோ என்று வந்தேன். கடைசில நம்ம ஆளுங்கள பத்திதானா? சென்றவாரம் அந்த குறிப்பிட்ட உண்ணாவிரத போராட்டம் நடக்கும்போது அந்த வழியாக கிராஸ் செய்து கொண்டிருந்தேன். ஒரே ரகளை.

ஐவர் அணி குழுவில் ஐந்து குழுக்கள் என்று இருப்பதுதானே காங்கிரசுக்கு அழகு?கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

Speed Master said...

சாக்கடைப்பேச்சு


அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

Black said...

Enga thalaivar S.Ve Sekar ghosti enge...

kggouthaman said...

அப்படியே, பங்கு சந்தையில், கீழ்க்கண்ட கம்பெனிகளின் ஷேர்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றேன்:

AIADMK
BJP
Congress (N)
Congress (TN)
Congress (G1, G2, .....GN)
DMDK
DMK
PMK
....
.....
எல்லா கம்பெனிகளுக்கும் ஷேர் ஃபேஸ் வால்யூ ஒரு ரூபாய். தற்போதைய மார்க்கெட் வால்யூ மாறிக் கொண்டிருக்கும்.

ராம்ஜோதிடர் said...

/*

AIADMK
BJP
Congress (N)
Congress (TN)
Congress (G1, G2, .....GN)
DMDK
DMK
PMK
....
.....

*/

எங்கள் கட்சியான லட்சிய திராவிட முன்னேற்ற கழகக் கட்சியை சொல்லாததற்க்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்


பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

பூ said...

எல்லாரும் இங்கிருந்து போகும்போது, வேட்டி, சேலையை நன்றாக உதறிய பிறகு கட்டிக்கொண்டு போங்.....

typical Elango Nakkal!

R.Gopi said...

”தல”யோட லேட்டஸ்ட் டகால்டி விளையாட்டும், டயலாக்கும்... (இது நிச்சயமாக தேர்தலை முன்னிட்டு தான்)

**************

மிலாடி நபித் திருநாளுக்கு 1969ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை: கலைஞர்

மிலாடி நபித் திருநாளை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த திருநாள் மிலாடி நபி நன்னாளாக இஸ்லாம் சமுதாய மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.

நபிகள் நாயகம் அவர்கள் அன்பை, அமைதியைப் போதித்தார்; அறத்தை வலியுறுத்தினார். அடுத்தவர்க்கு உதவிகள் புரிவதை உயர்ந்த பண்பாகக் கருதினார். “சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்துவைப்பது தர்மமாகும்; ஒருவரை, அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன்மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும்; நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும்; இடையூறு அளிப்பவைகளைப் பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும் எனக் கூறி, அடுத்தவர் நலன்கருதி ஆற்றும் அருட்பணிகளையே அறம் என வலியுறுத்தினர்.

இத்தகைய அறநெறிகளைப் போதித்த நபிகள் பெருமான் பிறந்த நாளை இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமெனக் கருதி மிலாடி நபித் திருநாளுக்கு 1969ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்கி ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

2001இல் ஏற்பட்ட அ.தி.மு.க. அரசு மிலாடி நபித் திருநாள் விடுமுறையை இரத்து செய்ததையும், 2006இல் இந்த அரசு மீண்டும் அமைந்தபோது, மிலாடி நபித் திருநாளுக்கு மறுபடியும் அரசு விடுமுறை வழங்கி இஸ்லாம் சமுதாய மக்களுக்கு உற்ற நண்பனாகத் திகழ்வதையும் சுட்டிக் காட்டி; மிலாடி நபித் திருநாள் கொண்டாடும் இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவர்க்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

kothandapani said...

Tamilnadu is getting ready for a changeover in rule.People are eagerly waitng for the election to effect the transfer.This is the impression we get if you read English dailies
And watch news channels. Well there are good things done by the presrnt CM.
The overall industrial growth, no. of bridges, freebies to poor, pay hike
To employees of various sectors are a few to cite the positive side of thois
Govt. On the negative side are the himalyan 2G scam, interference of his parivars in
Film industry, overall law and order situation etc.,
Tamilnadu people are very clever. They do not want only one family to
Loot them for succestive terms. They are determined to replace Gabbarsingh by
Phoolan Devi

Suresh said...

குரூப் - டி ஒண்ணும் ஆரம்பிக்க சொல்லுங்க..தலைவர் குடும்பம் எல்லாம் தனித்தனியா ஒரு டீம்...எல்லாத்தையும் விட இது தான் காமெடியா இருக்கும்...மேட்ச் பிக்ஸிங் வேற நிறைய நடக்கும் :)
மொக்க"

geeyar said...

ஓட்டு போட வரமாட்டாங், சீட்டு பேரம் பேச வந்திட்டாங்க. இந்த நாய்கள்(காங்கிரஸ்) இந்த தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டும். தென்மாவட்டங்களில் திமுக(அழகிரி) யை ஒதுக்க திட்டம் நடைபெறுகிறது. எங்கள் பகுதியில் அதிமுக ஜேயித்தாலும் பரவாயில்லை திமுக ஓட்டு காங்கிரஸ்க்கு கிடையாது.

Anony8 said...

Please write about the absurd Press QA stmt from Manjal thundu regarding Outstanding State Debts under his reckless Governance.

With 1 Lakh Crore Debts for the state, even if Jaya becomes CM its going to be very very tough for her with this Fiscal sitn, but when she left Govt in 2006 TN was having excess funds.

Shan said...

CBI Officers to PM: Job is very monotonous. We need different cases. Getting bored of Corruption cases, Sir.

Perambalooraan said...

Ilangovan oru nalla manidhar.. Miga perum dhairiyasaali, aanal avarai seyal pada viduvathillai !!!