பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 27, 2011

இரண்டு பேட்டிகள்

திருமாவளவன் ஜூவிக்கும் , கலைஞர் குமுதத்துக்கும் சமீபத்தில் கொடுத்த பேட்டி


குமுதம் வார இதழுக்கு (2.3.2011) கலைஞர் அளித்த பேட்டி

குமுதம்: வரப்போகும் தேர்தலில் தி.மு.க.வின் வியூகம் எப்படி இருக்கப் போகிறது?

கலைஞர்: வியூகம் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே சொல்வது வியூக மாக இருக்காதே!

குமுதம்: அய்ந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஒரு ரூபாய் அரிசி, வீடு வழங்கும் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற பல மக்கள்நலத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டன. இந்த நலத் திட்டங்களில் தாங்கள் மிகப் பெரிய சாதனையாகக் கருதுவது எது?

கலைஞர்: உணவு, உடை, உறையுள் என்ற மூன்று வாழ்வாதாரங்களும் மக்களுக்கு நிறைவு செய்யப்படுவதையே பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.

குமுதம்: தாங்கள் பல பொதுத் தேர்தல்களைச் சந்தித்தவர். அப்போதைய தேர்தல்களுக்கும், இப்போதைய தேர்தல் களுக்கும் என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?

கலைஞர்: அப்போதெல்லாம் ஒரு கட்சி மெல்ல மெல்ல வளர்ந்து ஆட்சிக்கு வரவேண்டுமென்ற விருப்பத்துடன் தேர்தல்களைச் சந்திக்கும். ஆனால், இப்போது எடுத்த எடுப்பில் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற தணியாத தாகத்துடன் தேர்தல்களைச் சந்திப் பதைக் காண முடிகிறது.

குமுதம்: எத்தனை எதிர்ப்புகள், சிக்கல்கள் இருந்தாலும் தேர்தல்களை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள். அதற் கான பலம் எங்கிருந்து கிடைக்கிறது?

கலைஞர்: மகாபாரத அர்ச்சுனனின் பலம் வில் பவரில் இருந்ததாகச் சொல் லப்படுகிறது! இந்த மகா சாதாரணமான வனின் பலமும் வில் பவரில் தான் இருக்கிறது.

குமுதம்: தி.மு.க. தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத் திருக்கிறீர்கள்? அவர்களை நினைக்கும் போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் என்ன?

கலைஞர்: என்னைப் போல் ஒருவர் தான் தி.மு. கழகத் தொண்டர் ஆவார். நான் உற்சாகமாக இருக்கும்போது அவரும், அவர் உற்சாகமாக இருக்கும் போது நானும் மாறி மாறி உற்சாகம் பெறுவோம்.

குமுதம்: இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா?

கலைஞர்: பரபரப்பாக பேசப்பட்டு - இப்போது அந்தப் பிரச்சினை பம்பரம் சுற்றி அடங்குவதைப் போல் ஆகி விட்டது!

குமுதம்: மத்தியில் ஆள்வது காங் கிரஸ் - தி.மு.க. கூட்டணி என்றாலும், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இந்தப் பிரச்சினை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனால் கூட்டணிக்குள் பிரச்சினை ஏற்பட்டதா? கைது செய்யப்படுவதற்கு முன் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தார்கள் என்றும் செய்திகள் உலவுகின்றன. அவை உண்மையா?

கலைஞர்: இந்தப் பிரச்சினையில் தொடக்கம் முதல் ஆளும் காங்கிரசும் - அதனுடன் தோழமை கொண்ட தி.மு. கழகமும் நீதி வெல்லும் - நிச்சயம் வென்றிட வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருவதால் - இடையிடையே உலவுகின்ற செய்திகளைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

குமுதம்: வரப்போகும் தேர்தலில் எந்தப் பிரச்சினை மய்யமாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்? உங்கள் பிரச்சாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

கலைஞர்: எங்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கியுள்ள திட்டங்கள் - தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட பணிகள் இவற்றை முன்னிறுத்தி ஏழையெளியோர் வாழ்வில் என்றென்றும் ஒளிவீசிடும் உதயக் கதிராக இருப்போம் என்பதுதான் எமது உறுதி மிக்க பிரச்சாரமாக இருக்கும்.

குமுதம்: உங்கள் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் இறங்கியிருப் பதையும் எதிர்க்கட்சிகள் ஒரு குற்றச் சாற்றாகக் கருதுகின்றனவே?

கலைஞர்: கூண்டோடு குடும்பம் குடும்பமாக திரைப் படத்துறையில் கணவன் - மனைவி, அப்பா - பிள்ளை, மாமன் - மச்சான் என்று எத்தனை பேர் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும் - விவேகமும் பிறக்கும்.

குமுதம்: இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் உங்களுக்கு எதிரான கருத்துகளை சில தமிழர் அமைப்புகள் சொல்லி வருகின்றன. அவற்றுக்கு உங்கள் பதில் என்ன?

கலைஞர்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஈழத் தந்தை செல்வா அவர் களின் காலத்திலிருந்து என் உணர்வு என்ன என்பதையும் - அதற்காக நான் ஆட்சியை இழந்த நிகழ்வையும் வரலாறு சொல்லும்.

குமுதம்: துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பயணித்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறார். அவருடைய அயராத உழைப்பு தமிழக மக்களால் வரவேற்கப்பட் டிருக்கிறது. அந்த உழைப்புக்குத் தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

கலைஞர்: உங்கள் கேள்வியிலேயே விளக்கமான பதிலும் அடங்கியிருக் கிறது. விதைத்தவன் - வியர்வையை நீராகப் பாய்ச்சியவன் - அறுவடையின் போது அமோகமான பலனைக் காண் பான் என்பது உழைப்புக்கு இந்த உலகு தரும் உற்சாகப் பரிசுதானே!

குமுதம்: தென்மாவட்டங்களில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கட்சிப் பணி தி.மு.க.வுக்கு நல்ல பலத்தைத் தந்திருப்பதாகப் பொது மக்களே கூறுகிறார்கள். அவருக்குத் தி.மு.க.வில் மேலும் முக்கிய பொறுப்புகள் தரப்படுமா?

கலைஞர்: தென் மாவட்டங்களில் கழகத்தின் வைரத்தூணாக இருந்து என் இனிய உடன்பிறப்பு தென்னரசு ஆற்றிய பணிகளைத் தான் தம்பி அழகிரிக்கு இப்போது கழகம் தந்துள்ளது. மேலும், முக்கியப் பொறுப்புகளுக்கு அவர் முன்னேறுவார் என்பது என் கணிப்பு.

குமுதம்: உங்கள் புதல்வர்கள் மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் உங் களைப் போலவே சளைக்காத உழைப் பாளிகளாய் இருக்கிறார்கள். அவர்களுக் குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

கலைஞர்: ராமன் - லெட்சுமண னைப் போல் இருங்கள் என்று சொல்ல மாட்டேன்; ராவணன் - கும்பகர்ணனைப் போல வாழுங்கள் என்று சொல்வதுதான் என் அறிவுரையாகும்.

குமுதம்: கனிமொழியும் இப்போது அரசியலில் இருக்கிறார். உங்களுக்கு அவரது அரசியல் பணி பிடித்திருக்கிறதா - கவிதைப் பணி பிடித்திருக்கிறதா?

கலைஞர்: இரண்டு பணிகளின் துணையோடு அவர் ஆற்றும் சமூக நலப் பணி மிகவும் பிடித்திருக்கிறது.

குமுதம்: ஆட்சிப் பணி, கட்சிப் பணி, எழுத்துப் பணி என ஓய்வில்லா வாழ்க் கையை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மனதையும் உடலையும் சோர்வடையாமல் வைத்துக் கொள்ள தாங்கள் கடைப் பிடிக்கும் பழக்கங்கள் என்ன?

கலைஞர்: அதிகாலையில் அய்ந்து மணிக்கெல்லாம் உறக்கம் கலைந்து உதயசூரியனைக் காணுகிறேன் - என் சோர்வு போக்க அது ஒன்று போதாதா?

குமுதம்: எழுபத்தைந்துக்கு மேற் பட்ட திரைப் படங்களில் பணியாற்றியிருக் கிறீர்கள். அப்போதைக்கும் இப்போதைக் கும் திரைப்படத் துறையில் நீங்கள் காணும் வித்தியாசங்கள் என்ன?

கலைஞர்: பொன்னர்-சங்கர் என்ற கொங்குச் சீமை வீரர்களின் கதை விரைவில் திரைப்படமாக வருகிறது; அதைக் காணுங்கள் - வித்தியாசம் புரியும்.

குமுதம்: ஆறாவது முறையாக முதல் வரானால் தமிழக மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் சிந்தித்து வைத்திருக் கிறீர்களா?

கலைஞர்: எந்தத் திட்டமானாலும் அது ஏழையெளியோர் வாழ்வதற்கும் வளம் பெறுவதற்கும் பயன்படும் திட்ட மாகவே இருக்கும்.

குமுதம்: இந்த ஆட்சியில் செய்ய நினைத்து - செய்ய இயலாமல் போன காரியங்கள் உண்டா?

கலைஞர்: மத்தியில் தமிழும் ஆட்சி மொழி - சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழும் பயன்பாட்டு மொழி - மாநில சுயாட்சி - இவை தான் இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கின்ற காரியங்கள்.

குமுதம்: கலைஞர் - சிறுகுறிப்பு வரைக என்று உங்களிடமே கேட்டால், நீங்கள் என்ன எழுதுவீர்கள்?

கலைஞர்: மானமிகு சுயமரியாதைக்காரன் என்று ஏற்கெனவே பதில் அளித்திருக்கிறேனே!

குமுதம்: உங்கள் மேல் சோவுக்கு என்ன கோபம்? கடுமையான தாக்கு தல்களைத் தொடுக்கிறாரே? அ.தி.மு.க., - விஜயகாந்த் கூட்டணி வேண்டும் என்று குரல் கொடுக்கிறாரே?

கலைஞர்: சோ மட்டுமல்ல - யார் என்மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தாலும் - அவர்கள் ஏற்கெனவே என்னைப் பற்றி புகழ்ந்து எழுதியவை களையும், கூறியவைகளையும் நினைத்துக் கொண்டு புதிய தாக்குதல்களைப் புறந்தள்ளிவிடுகிறேன்.

குமுதம்: பழைய தலைமைச் செய லகத்துக்கும், புதிய தலைமைச் செயல கத்துக்கும் என்ன வேறுபாடு காண் கிறீர்கள்?

கலைஞர்: இதுவரையில் பழைய தலைமைச் செயலகத்தில் அமர்ந்து 5 முறை முதலமைச்சர் பணியாற்றியிருக் கிறேன். என் வாழ்க்கைச் சரித்திரத்தில் பழைய தலைமைச் செயலகம் 50 ஆண்டுகளை ஆக்கிரமித்துக் கொண்ட செயலகமாகும். புதிய தலைமைச் செயலகம் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அல்லாமல் நாமே அடித்தளம் வைத்து, நாமே கட்டி முடித்து பூரிப்போடு அமர்ந்திருப்பதை எண்ணும்போது பெருமிதமாக இருக்கிறது.

குமுதம்: இந்த கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்?

கலைஞர்: இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது.

குமுதம்: பா.ம.க.வைத் தொடர்ந்து வேறு கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா?

கலைஞர்: வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

குமுதம்: வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுவீர்கள்?

கலைஞர்: 234 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் (முகத்தில் புன்னகை).

குமுதம்: தேர்தலில் வெற்றி வாய்ப்பு உங்கள் கூட்டணிக்கு எப்படி இருக் கிறது?

கலைஞர்: வெற்றி வாய்ப்பு அமோக மாக இருக்கிறது! (சொல்லும்போதே, கலைஞரின் முகத்தில் அபரிமிதமான மகிழ்ச்சி).

நன்றி: குமுதம் 2-3-2011விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஜூவி பேட்டி

'இந்திய நாட்டின் எம்.பி-யைத் துரத்தி அடிக்கிற அளவுக்கு இலங்கை அரசுக்குத் தைரியம் வந்தது எப்படி?''

''இந்திய அரசைப் பார்த்து அவர்கள் எவ்விதப் பயமும்கொள்ளவில்லை. இந்திய அரசின் 'அடா​வடி செல்லப்பிள்ளை’யாகத்தான் இலங்கை அரசு செயல்படுகிறது. அந்த தைரியத்தில்தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... யாரை வேண்டுமானாலும் தாக்க​லாம் என அட்டூழிய ஆட்டம் போடுகிறது இலங்கை. இந்திய அரசின் எம்.பி-யான என்னையே விரட்டி அடிக்கிறார்கள் என்றால், யார் கொடுக்கும் துணிச்சல் என்பது அப்பட்டமான ஒன்றுதானே!''

''ஈழ விவகாரத்தின் அத்தனை விதமான கோரங்களுக்கும் காங்கிரஸ் அரசின் உதவி இருப்பதாகச் சொல்லும் நீங்கள், எப்படி இன்னமும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கிறீர்கள்?''

''தமிழக அரசியல் நிலையை அறிந்தவர்களுக்குத்​தான் என் நிலை தெரியும். 18 மாதங்கள் வைகோவை பொடா வழக்கில் உள்ளே தள்ளியவர் ஜெயலலிதா. இன்றைக்கு அம்மையாரின் அணியில்தான் வைகோ இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸோடு முறித்துக்கொண்டு போன பா.ம.க. இப்போது மீண்டும் அதே கூட்டணியில்! அப்படி இருக்க, எங்களுடைய நிலைப்பாட்டை மட்டுமே கேள்விக்குறியாக்குவது எந்த விதத்தில் நியாயம்? அவர்களின் கூட்டணியில் இருக்கிறேன் என்பதற்காக, என் தொண்டையை அறுத்தா எறிந்துவிட முடியும்?''

''நீங்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்துக்கு உரிய பதிலைக்கூட காங்கிரஸ் அரசு சொல்லவில்லையே?''

''பதில் இருந்தால்தானே சொல்வதற்கு? இலங்கைக்கு எல்லா விதங்களிலும் துணையாக இருக்கிறவர்கள் எனக்கு எப்படி விளக்கம் சொல்​வார்கள்? நாங்கள் அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸும் அங்கம் வகிக்கிறது. அதற்காக முகத்தை முறுக்கிக்கொண்டு என்னை வெளியேறச் சொல்கிறீர்களா? என்னை அரசியல் அரங்கில் இருந்தே ஒழித்துக்கட்ட நினைத்த ஜெயலலிதாவோடு நான் சேர முடியுமா? நான் ஒரு பத்திரிகையாளரோடு பழகுகிறேன். அந்தப் பத்திரிகையாளர் ஒரு ரவுடியோடு நட்பு வைத்திருக்கிறார் என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தமிழக அரசியலின் கட்டமைப்புப் புரியாமல் எங்கள் மீது பழி போடுவது கொஞ்சமும் நியாயமற்றது!''

''உங்களுடைய ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தரப்பும் ஆதரவு தெரிவிக்கவில்லையே?''

''யாருடைய ஆதரவும் எங்களுடைய போராட்​டங்களுக்குத் தேவை இல்லை. கொள்கை ரீதியான முன்னெடுப்புகளுக்கு யாருடைய உதவியையோ, ஆதரவையோ நாங்கள் எதிர்​பார்க்கவில்லை. நாங்கள் தி.மு.க-வுடன் பூண்டி​ருப்பது தேர்தல் உறவுதான். எங்களுடைய உணர்வு ரீதியான போராட்டங்களுக்கு தி.மு.க. தரப்பு ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை. எங்களுக்கு அதுவே போதும். முதற்​கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வந்த நான், துணை முதல்வர் ஸ்டாலினிடம், 'பார்வதி அம்மா​ளுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை போகிறேன்’ எனச் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அதற்கு அவர் எவ்வித மறுப்பும் சொல்லவில்லை. தமிழ்த் தேசியம் பேசுபவர்​களே எங்களை விமர்சிக்கும்போது, பிறருடைய ஆதரவை நாங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?''

''தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. கெடுபிடி காட்டுவதன் பின்னணியில் காங்கிரஸின் கைங்கரியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?''

''இப்போது நடப்பது காங்கிரஸ் அரசுதானே... அப்படி என்றால் அரங்கேற்றப்படும் நிகழ்வுகளுக்கு வேறு யார் காரணமாக இருக்க முடியும்?''

''அ.தி.மு.க. தரப்பில் இருந்து உங்களுக்குத் தொடர்ந்து அழைப்பு வருவது உண்மைதானே?''

''எங்களிடம் பேசியவர்களிடம், 'எங்களின் நிர்வாகக் குழுவிலேயே தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதாக முடிவு எடுத்து​விட்டோம். எந்த ஊசலாட்டமும் இல்லாத நிலையில் அணி மாறும் எண்ணமே இல்லை. நாங்கள் தேவையா இல்லையா என்பதை தி.மு.க-தான் தீர்மா​னிக்க வேண்டும். அப்படி ஒரு சூழல் அமைந்தால் பேசலாம்!’ எனத் தெளிவாகச் சொல்லி​விட்டோம்!''

''ஆரம்பம் தொட்டே தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் உங்களை விட்டுவிட்டு, முதல் ஆளாக பா.ம.க-வைக் கூட்டணிக்கு இழுத்து ஸீட் ஒதுக்கீடு செய்தது, உங்களைக் கோபப்​படுத்தவில்லையா?''

''கலைஞரின் சாதுரியம் எத்தகைய சாதிப்புகளை நிகழ்த்தும் என்பதற்கு பா.ம.க-வுக்கு 31 ஸீட்டுகள் ஒதுக்கிய நிகழ்வு ஓர் உதாரணம். அதன் மூலமாக தமிழக அரசியல் அரங்கில் பலருடைய திட்டங்களையும் கலைஞர் தவிடு​பொடியாக்கி இருக்கிறார். விஜயகாந்த் அதிக ஸீட்கள் கேட்டு டிமாண்டைக் கூட்டவும், காங்கிரஸ் அதிக ஸீட்கள் கேட்க முடியாத அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளானதும் கலைஞரின் சாதுரியத்தால்தான். அத​னால் பா.ம.க-வை முதலில் அழைத்ததில் எங்களுக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அதே நேரம் எங்களுக்கான ஸீட் ஒதுக்கீட்டை தி.மு.க. நிச்சயம் நிறைவாகச் செய்யும் என்று முழுமையாக நம்புகிறோம்!''

''சில மாதங்களுக்கு முன்பு உங்களுடைய கட்-அவுட்டுகளை பா.ம.க-வினர் உடைத்த சம்பவங்கள் நடந்தன. இத்தகைய கசப்புகளை எல்லாம் கடந்து எப்படி கூட்டணியில் நீடிக்கப்​போகிறீர்கள்?''

''சமீபத்தில்கூட கடலூர் மாவட்டம் கம்பளிமேடு என்கிற கிராமத்தில் எங்கள் மக்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டு இருக்கிறார். கொலைத் தாக்குதல் நடத்தியவர்களில் பா.ம.க-வினர் மட்டுமல்லாது, இன்ன பிற கட்சியினரும் இருந்திருக்கிறார்கள். எங்களைத் தற்காத்துக்​கொள்ளும் போராட்டத்தையும், எங்களை வலிமைப்படுத்திக்கொள்ளும் உறவையும் சம காலத்தில் பேணவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால், இதை எல்லாம் மனதில்வைத்து நான் கூட்டணியைத் துறக்க முடியுமா?''

''உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்... கூட்டணிக்காக எதையும் சகித்துக்கொள்ளும் நிலையில்தானே நீங்கள் இருக்கிறீர்​கள்?''

''நெருக்கடிகளைச் சமாளித்தபடியே பயணத்தைத் தொடர வேண்டிய நிலையில், எதையும் சகித்துத்தானே ஆகவேண்டும்! சுயத்தை இழக்க வேண்டிய மோசமான களத்தில் நான் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். 'சுயத்தை இழக்கக் கூடாது’ என நினைத்தால் அரசியலே வேண்டாம் என நினைத்து துறவறம் போகத்தான் முடியும். இல்லையேல், பொது நீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு இருக்கும் எங்கள் சமூகத்துக்காக எதிர் நீச்சல் போட வேண்டும். எல்லோரும் கூட்டணிக்காகவும் ஸீட் பேரத்துக்காகவும் ஓடிக்கொண்டு இருக்கையில், ஈழத் தாய்க்கு அஞ்சலி செலுத்த ஓடியவன் நான். என் சுயம் இன்னமும் மிச்சம் இருப்பதன் சாட்சிதான் அந்தக் காட்சி!''

(நன்றி: ஜூவி)

தேர்தல் கூட்டணி என்பது எங்கள் வாக்குகள் உங்களுக்கு; உங்கள் வாக்குகள் எங்களுக்கு என்பதாகும். எங்கள் கொள்கைகள் உங்களுக்கு, உங்கள் கொள்கைகள் எங்களுக்கு என்பதல்ல. - தொல்.திருமாவளவன்

42 Comments:

Anonymous said...

குமுதத்திற்கு கேள்விகளையும் கலைஞரே எழுதித் தந்திருப்பார் போல. குமுதத்தின் ஜால்ரா சத்தத்தில் வாசகர்களின் காது கிழிந்து விடும் போலிருக்கு

SAN said...

IV,
kumudam interview is like Self Q&A of Karunanidhi!!!

Anony8 said...

Delhi should've invited SL HC & condemned the incident. Congress has a very bad policy of DOING POLITICS even in External Affairs. This is very very BAD for India as a Nation.

There are other few Bad precedences by CONgress of using Local politics in External affairs.

1. Supporting Palestine terrorists & other Muslim nations including Pakistan for Muslim Votes.

2. Letting in Millions of Bangla refugees for Votes, which is a HUGE RISK in security, Demography, resources crunch etc.

3. Letting EU to tour Orissa for a so-called violence against Christians which is OUR problem and they've no business on it

4. Not Opposing US for not giving a Visit Visa for Modi, a Democratically Elected CM in a major State, for the sake of attacking him.

5. Supporting SL for killing Prabhakaran as a vengeance for Rajiv's killing and subsequent No action for the Genocide in the Final War.

ராமுடு said...

Ravanan - Kumbakarnan.. What can we expect from them? Only demon's rule.. All questions are neatly framed by MK and answered to Kumudam.. Kumudam became another veeramani, couple of years back...

Anonymous said...

//நான் ஒரு பத்திரிகையாளரோடு பழகுகிறேன். அந்தப் பத்திரிகையாளர் ஒரு ரவுடியோடு நட்பு வைத்திருக்கிறார் என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? //

என்ன செய்வதா? அந்த பத்திரிகையாளரின் நட்பை முறித்துக் கொள்ள வேண்டியதுதானே. அதற்குத் துணிவில்லை என்றால் அந்த பத்திரிகையாளருக்கு இவர் அடிமை அல்லது பயப்படுகிறார், அல்லது வேறு ஏதோ ரகசியத் தொடர்பு வைத்திருக்கிறார், ”பங்கு” பெற்றிருக்கிறார் என்பது பொருள். பத்திரிகையாளர் = காங்கிரஸ், ரவுடி = இலங்கை அரசு.

// எல்லோரும் கூட்டணிக்காகவும் ஸீட் பேரத்துக்காகவும் ஓடிக்கொண்டு இருக்கையில், ஈழத் தாய்க்கு அஞ்சலி செலுத்த ஓடியவன் நான்.//

அந்தப் பம்மாத்து வேலை எதற்கு என்பது தெரியாதா என்ன? பார்வதி அம்மாள் இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டபோது அதை எதிர்த்து இவர் செய்தது என்ன? சும்மா சீன் காட்டுகிறார். இந்தத் தடவை இவருக்கு இருக்கிறது ’ஆப்பு’. அரசியலை தங்களது இன உயர்வுக்காகப் பயன்படுத்தாமல், தங்களது தனிப்பட்ட உயர்வுக்காகப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை இவர் இந்தத் தேர்தலில் உணர்வார்.

இவண்
மானமுள்ள முன்னாள் சிறுத்தை

R.Gopi said...

”தல” கேள்வி-பதில்கள் தலயே அறிவாலய மண்டபத்தில் எழுதி குமுதத்திடம் தந்தது போல் உள்ளதே...

இதை தான் “தல” எப்போதும் நமக்கு நாமே திட்டம் என்பார்...

”தல” திருமாவ வெறுப்பேத்திட்டு இருக்காராம். இதன் பின்னணியில் பாமக இருப்பதாக தகவல்...

தமிழ்மொழி ஆண்டி said...

//ராமன் - லெட்சுமண னைப் போல் இருங்கள் என்று சொல்ல மாட்டேன்; ராவணன் - கும்பகர்ணனைப் போல வாழுங்கள் என்று சொல்வதுதான் என் அறிவுரை//

யார் ராவணன், யார் கும்பகர்ணன் என்று தெளிவாகச் சொன்னால் நலம். ஏனென்றால் அப்போதுதான் இவர்களை வெல்லப் போகும் ராமன் யார், லட்சுமணன் யார் என்பதைத் தீர்மானிக்க முடியும். ஆரியம், திராவிடம் என்று மக்களை ஏமாற்றி, பிற்பட்ட மக்களின் ஒரே தலைவர் தான் தான் என்னும் பொய்யான அடையாளத்தை ஏற்படுத்தி, அவர்களை ஏமாற்றி அதில் குளிர் காய்ந்து முன்னுக்கு வந்தவர் இவர். எம்ஜியார் ஆட்சியில் இவரது ’வில் பவர்’ என்ன ஆனதோ தெரியவில்லை. எதையாவது கேட்டால் நான் சூத்திரன், தமிழன், ஏழை என்று பதில் சொல்லி, பார்ப்பனர், பாப்பாத்தி, பார்ப்பனீயம் என்று திசை திருப்பி ஏமாற்றுபவர்.

அன்று குலக்கல்வி முறையை (அப்படி அர்த்தத்தில் அது கொண்டுவரப்படவில்லை) எதிர்த்தவர்கள் இன்று அதனை ஆதரித்து சினிமா, அரசியல், பத்திரிகை, ஊடகம் என்று எல்லாவற்றிலும் தங்கள் குல வாரிசுகளை முன்னிறுத்தியிருப்பது இரட்டை வேடம் இல்லையா? ரகசியமாக பாபாவையும், கிருஷ்ணரையும் கும்பிட்டுக் கொண்டு, அனுதினமும் சோதிடம் பார்த்து ’மூவ்’களைச் செய்து கொண்டிருக்கும் இவரா பகுத்தறிவுப் பகலவன்? தமிழ், தமிழ் என்று முழங்கி விட்டு தங்கள் வாரிசுகளுக்கு/பேரன், பேத்திகளுக்கு அந்நிய மொழிகளைப் பயிற்றிவித்திருப்பது துரோகமா, இல்லையா? ல, ள, ழவைக் கூடச் சரியாக உச்சரிக்க முடியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கும் இவரா தமிழர் தலைவர்? ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறந்த போது டெல்லிக்குச் செல்லாமல் வாய் மூடி மௌனியாக இருந்து விட்டு, இப்போது கூட்டணிக்காக டெல்லி வாசல் கதவைத் தட்டிய இவரா தமிழினத் தலைவர்?கேவலமாக இருக்கிறது.

சரி, ’தமிழ், தமிழ்’ என்றும் ’திராவிடம்’, ’திராவிடம்’ என்றும் மேடை தோறும் முழங்குகிறார்களே,’ ‘தமிழ்’ என்பதன் பொருள் என்னவென்று தெரியுமா, இந்தக் கூட்டங்களுக்கு.... போலித் தமிழ்ப்பற்றாளர்கள். போலி தமிழ் உணர்வாளர்கள். மேடை தோறும் ’தமிழ்’ ’தமிழ்’ என்பார்கள். ஆனால் ல, ள, ழவை சரியாக உச்சரிக்கத் தெரியாது. கேட்டால் நாங்கள் ஏழைகள், முதல் தலைமுறையாகத் தமிழ் பயில்பவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் ஒரு பம்மாத்து விளக்கம். சரி, தெரியாமல் கேட்கிறேன், ’ஏழை’ என்பதற்கும் தமிழை சரியாக உச்சரிப்பதற்கும் என்ன அய்யா சம்பந்தம்? வேற்று மொழியையா பேசுகிறார்கள், தமிழைத் தானே? ஏன், அதைப் பேச வரவில்லை. கேட்டால் ஆரியம், பார்ப்பான், மொழி வெறி என்று ஏதாவது பதில் கிடைக்கும். பீகாரிலும், நாட்டின் மற்ற வட பகுதிகளிலும் இதே போன்ற ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் அவர்களது தாய் மொழியை சரியாக உச்சரிக்கிறார்களே அது எப்படி? ஆக, ஒரு மொழியை அக்கறையாகப் பயின்று, ஆர்வத்தோடு சரியாக உச்சரிக்கக் கூட முடியவில்லை, அதற்கு முயலவும் இல்லை. நீங்கள் எல்லம் எப்படி தமிழ் இன உணர்வாளர்கள், காப்பாளர்கள் ஆவீர்கள்? இன்னும் எத்தனை தலைமுறைக்கு ஏழை, சூத்திரன் என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களோ, தெரியவில்லை கேவலமாக இருக்கிறது. சே...


தமிழ்மொழி ஆண்டி

SISHRI said...

//கலைஞர்: ராமன் - லெட்சுமணனைப் போல் இருங்கள் என்று சொல்ல மாட்டேன்; ராவணன் - கும்பகர்ணனைப் போல வாழுங்கள் என்று சொல்வதுதான் என் அறிவுரையாகும்.//

ஆய்வாளர் எஸ்.இராமச்சந்திரன் எழுதிய சத்திரிய இராமனும் பிராம்மண இராவணனும் என்ற ஆய்வுக் கட்டுரையை கருணாநிதி எங்கு படித்திருக்கப் போகிறார்?

Anonymous said...

இட்லி, இது உங்கள் பதில்களுக்காக...

மங்களகரமாக எஸ்.வி.சேகர் பேட்டியிலிருந்தே ஆரம்பிக்கிறேன்

1. அடிக்கடி ஜோதிடம் பற்றி வெளியிடும் இட்லிவடை நாடி ஜோதிடம் பார்த்திருக்கிறதா? ஓலைச்சுவடியில் என்ன வந்தது?

2. எனக்கு இட்லிவடை யார் என்பது சந்தேகம். எஸ்.வி.சேகர் குறிப்பிட்ட ஆவிப் பெண்மணி ’அம்சவேணி கந்தசாமி’ மூலம் பேசிப் பார்த்தால் விடை கிடைக்குமா?

3. உலக் கோப்பையில் ’இந்தியா’வுக்கு என்ன கிடைக்கும்?

4. அடுத்து என்ன ஊழல் பற்றிய செய்தி வரும் இவ நினைக்கிறது?

5. சட்டமன்றத் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்? அடுத்த ’துணை முதல்வர்’ யார்?

6. இட்லிவடைக்கும் கிழக்கிற்கும் என்ன சம்பந்தம்? இட்லிவடையில் வந்ததைத் தொகுத்து கிழக்கு மூலம் புத்தகமாகப் போடும் எண்ணம் இருக்கிறதா?

7. எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து அடுத்து யாருடைய பேட்டியை இவ வெளியிடப் போகிறது? க்ரேசி மோகனா, காத்தாடி ராமமூர்த்தியா, ஒய்.ஜி.மகேந்திரனா அல்லது பா. ராகவனா? (இவர்களுக்குள் என்ன சம்பந்தம், கண்டுபிடியுங்கள்?) அடுத்த பேட்டியிலாவது கேள்விகள் ஒழுங்காகக் கேட்கப்படுமா?

8. இட்லிவடை சென்ற வெளிநாட்டுப் பயணம் குறித்து....

9. எனக்குக் காலையில் எழுந்ததும் தூக்கம், தூக்கமாக வருகிறது, என்ன செய்யலாம்?

10. மொக்கையாகப் பதிவு போடுவது போல, பொக்கையாக சாரி மொக்கையாகக் கேள்விகள் கேட்பது எப்படி?

அ-நங்கன்

Roaming Raman said...

ஐயா இட்லிவடையாரே! நான் ஒரு கட்டுரை எழுதித் தர்றேன் ... அப்படியே அதை உடைத்து கேள்வி பதிலாக alter பண்ணித்தர முடியுமா?? முடியாதுன்னா சொல்லுங்க ... நான் குமுதம் கிட்ட போய்க்கறேன் !!
-ரோமிங் ராமன்

Gopal said...

Kumudam is an estabilished yellow magazine. So you can ignore karuna's own Q&A s

Vijay said...

ஜால்ரா கேள்விகள் சுய தம்பட்ட பதில்கள். Total waste of time.

Vijay said...

வேணும்போது அர்ஜுனனையெல்லாம் மேற்கோள் காட்டுவாங்க. வேண்டாதபோது ஆரிய மாயைன்னு தூத்துவாங்க. Total hypocriteness.

R. Jagannathan said...

குமுதம் தி.மு.க. பத்திரிகையாகி நாளாகிவிட்டது. கேள்விகளிலேயே பதிலையும் உள்ளடக்கி கேட்பது நகைப்புக்குள்ளாகிறது.

திருமா ‘சுயம் இழந்தேன்’ என்று வாக்குமூலம் செய்து தப்ப முயல்கிறார். அவரும், ராமதாசும் அ.தி.மு.க.வில் இணையும் நாள் தூரத்தில் இல்லை. அதற்கும் பதில் வைத்திருப்பார்கள்.

மஞ்ஜள் கம்மென்ட் ரொம்ப சரி!

-ஜெ.

Anonymous said...

திருமாவின் பேட்டி தொணி நம்ம சாரு நிவேதிதா பேசுர ஸ்டைல் மாதிரியே இல்ல....

“'நீங்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்துக்கு உரிய பதிலைக்கூட காங்கிரஸ் அரசு சொல்லவில்லையே?''

''பதில் இருந்தால்தானே சொல்வதற்கு? இலங்கைக்கு எல்லா விதங்களிலும் துணையாக இருக்கிறவர்கள் எனக்கு எப்படி விளக்கம் சொல்​வார்கள்? நாங்கள் அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸும் அங்கம் வகிக்கிறது. அதற்காக முகத்தை முறுக்கிக்கொண்டு என்னை வெளியேறச் சொல்கிறீர்களா? என்னை அரசியல் அரங்கில் இருந்தே ஒழித்துக்கட்ட நினைத்த ஜெயலலிதாவோடு நான் சேர முடியுமா? நான் ஒரு பத்திரிகையாளரோடு பழகுகிறேன். அந்தப் பத்திரிகையாளர் ஒரு ரவுடியோடு நட்பு வைத்திருக்கிறார் என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தமிழக அரசியலின் கட்டமைப்புப் புரியாமல் எங்கள் மீது பழி போடுவது கொஞ்சமும் நியாயமற்றது!''

கொஞ்சம் கூட வெட்கம் இல்லாதவர்கள். ஆன்மாவை இழந்தவர்கள்.......

Thirumavalavan said...

நாங்க பள்ளதெரு, பரத்தெரு, சக்கிளிதெரு ன்னு எல்லா ஓட்டையும் கலைஞர் அய்யா காலடியில வந்து போடுறோம்.. நீங்களா பாத்து இந்த குருப்புக்கு ஏதாவது போடுங்க...அப்படியே எங்க தெருவுகள்ளே ரெண்டு டாஸ்மாக் தொறந்து பரபபயலுகளை வாழ வைக்கோணும்.

Thirumavalavan said...

நாங்க பள்ளதெரு, பரத்தெரு, சக்கிளிதெரு ன்னு எல்லா ஓட்டையும் கலைஞர் அய்யா காலடியில வந்து போடுறோம்.. நீங்களா பாத்து இந்த குருப்புக்கு ஏதாவது போடுங்க...அப்படியே எங்க தெருவுகள்ளே ரெண்டு டாஸ்மாக் தொறந்து பரபபயலுகளை வாழ வைக்கோணும்.

Anonymous said...

நாங்க பள்ளதெரு, பரத்தெரு, சக்கிளிதெரு ன்னு எல்லா ஓட்டையும் கலைஞர் அய்யா காலடியில வந்து போடுறோம்.. நீங்களா பாத்து இந்த குருப்புக்கு ஏதாவது போடுங்க...அப்படியே எங்க தெருவுகள்ளே ரெண்டு டாஸ்மாக் தொறந்து பரபபயலுகளை வாழ வைக்கோணும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

APPADI YENDRAL KANIMOZHI SOORPANAGAI ALLAVA? EPPODHU YARAL MOOKU ARU PADHA POGIRAR?

கானகம் said...

இன்னுமா இவனுங்க நம்பள நம்புறாய்ங்க.. அது அவனுங்க தலைவிதி.. அப்படினு சொல்லிச் சிரிச்சிட்டிருக்காங்களாம் கருணாநிதி, மரவெட்டி என்ற மாலடிமை மற்றும் திருமா என்ற மானஸ்தனும்..

Anonymous said...

//////நான் ஒரு பத்திரிகையாளரோடு பழகுகிறேன். அந்தப் பத்திரிகையாளர் ஒரு ரவுடியோடு நட்பு வைத்திருக்கிறார் என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? //

என்ன செய்வதா? அந்த பத்திரிகையாளரின் நட்பை முறித்துக் கொள்ள வேண்டியதுதானே.///

அப்படி என்றல் உலகத்தில் யாருடனும் நட்பாக இருக்க முடியாது.
நீங்கள் "உங்கள் நண்பர்களுடைய நண்பர்கள் அனைவரும் காந்தியடிகள் போல" என்று சொன்னால் நீங்கள் முழு பொய்யர்.

Suresh said...

சே..என்ன கொடுமை இது...கருணாநிதிக்கு வயசு ஆனதுனால என்ன பேசுரோமுன்னே தெரியாம பேசுறாரா இல்லை அவருக்கே அவர் ஒரு காமெடி பீஸ்ன்னு தெரிஞ்சு போச்சா?
எனக்கு இந்த பேட்டியை படிக்கும் போது என்னோட பழைய ரெண்டு பதிவுகள் தான் ஞாபகத்தில் வருது...
மொக்க கேள்விஸ் அண்ட் மொக்க பதில்ஸ் – 01
தேவரும் மகனும்

Anonymous said...

\\திருமா என்ற மானஸ்தனும்..//

திருமா தான் மானஸ்தன் பேர்ல எழுதுறாரா? சொல்லவே இல்ல?

IV Rasigan

Anonymous said...

can any one tell me,he do not belive hindu god,then why he mention, aurjunan & kumbakarnan,ravanan?

Anonymous said...

மாதர்கள் மனக்கணக்கில் மகிழ்ச்சிகளை வரவு வைக்க மணிக்கணக்கில் நின்றபடி சுழல்நிதிகள் தந்தவனே! முத்தநிதி சொரிகின்ற முகிலைப்போல்... மகளிர்க்கு மொத்தநிதியும் வழங்கி முன்னேற்றம் ஈந்தவனே!
--
This one was written by Jegathratsakan wishing Stalin for his birthday???

Anonymous said...

'சமீபத்தில்கூட கடலூர் மாவட்டம் கம்பளிமேடு என்கிற கிராமத்தில் எங்கள் மக்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டு இருக்கிறார். கொலைத் தாக்குதல் நடத்தியவர்களில் பா.ம.க-வினர் மட்டுமல்லாது, இன்ன பிற கட்சியினரும் இருந்திருக்கிறார்கள். எங்களைத் தற்காத்துக்​கொள்ளும் போராட்டத்தையும், எங்களை வலிமைப்படுத்திக்கொள்ளும் உறவையும் சம காலத்தில் பேணவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால், இதை எல்லாம் மனதில்வைத்து நான் கூட்டணியைத் துறக்க முடியுமா?''


அப்புறம் எதற்காக துறக்க போகிறீர்கள்?!

மஞ்சள் ஜட்டி said...

இந்த மாதிரி கட்சி நடத்துறதுக்கு, திருமாவளவன் பேசாம சொந்த ஊருக்கு போயி விவசாயம் பாக்கலாம்... இப்படி பிச்சை எடுத்து மானங்கெட்ட பொழப்பு நடத்த வேண்டிய அவசியம் எதுக்கு? அவர் சொல்லிக்கொள்ளும் தலித் மக்களுக்கு என்ன உருப்படியாக செய்திருக்கிறார்? எம்.பி யாக தன தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார்? விடுதலை சிறுத்தைகள் கடை மூட வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை....

Anonymous said...

<< can any one tell me,he do not belive hindu god,then why he mention, aurjunan & kumbakarnan,ravanan? >>>

தெரிந்த ஒன்றைக்கூறி தெரியாத ஒன்றை விளக்குவதே உவமை. உனக்குத்தெரிந்த ஒன்றை ( புராணத்தை வைத்து ) தெரியாததை விளக்கியுள்ளார்.

ஜெயலலிதா , சோ , சுப்ரமணியம் ஸ்வாமி பேட்டி கொடுத்தால் அது நிஜம். கருணாநிதி பேட்டி கொடுத்தால் அது கேள்வி பதிலா ?

ஜெ ஒரு அறிக்கையாவது தானாகவே எழுதியது என்று கூற முடியுமா ? ஸ்கூல் பொண்ணு மாதிரி அடுத்தவன் எழுதிக்கொடுத்ததை எழுதிப்படிப்பதை உங்களில் ஒருவராவது விமர்சித்தது உண்டா ?

ராம சுகந்தன்

Anonymous said...

<<<< மாதர்கள் மனக்கணக்கில் மகிழ்ச்சிகளை வரவு வைக்க மணிக்கணக்கில் நின்றபடி சுழல்நிதிகள் தந்தவனே! முத்தநிதி சொரிகின்ற முகிலைப்போல்... மகளிர்க்கு மொத்தநிதியும் வழங்கி முன்னேற்றம் ஈந்தவனே!
--
This one was written by Jegathratsakan wishing Stalin for his birthday??? >>>>

"கழகத்தின் விருச்சகமே" என்று கூட ஒரு வாழ்த்து போஸ்டர் பார்த்தேன் , கோயம்பேட்டில் ஸ்டாலினை வாழ்த்தி..விருக்ஷமே என்ரு எழுதுவதாய் நினைத்து..! விட்டுத்தள்ளுங்க இந்தப்புகழொலியை எல்லாம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.

ஜெயாப்ரியன் கோயம்பேடு

Anonymous said...

<<<< நாங்க பள்ளதெரு, பரத்தெரு, சக்கிளிதெரு ன்னு எல்லா ஓட்டையும் கலைஞர் அய்யா காலடியில வந்து போடுறோம்.. >>>>

ஏன் இப்படி தரம் தாழ்ந்த விமர்சனங்கள் ; இவை இட்லி வடையில் இடம் பெறலாமா ?

"குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" அல்லவா ?

ஜே பி (ஜெயாப்ரியன்) கோயம்பேடு

Anonymous said...

<< குமுதத்திற்கு கேள்விகளையும் கலைஞரே எழுதித் தந்திருப்பார் போல. குமுதத்தின் ஜால்ரா சத்தத்தில் வாசகர்களின் காது கிழிந்து விடும் போலிருக்கு >>

அப்ப ஜுனியர் விகடனுக்கு கட்டுரை எழுதித்தர்ற்து யார் ஜெயலலிதாவா ? போங்கப்பா பொழப்பப்பாத்துகிட்டு.
கட்டுரை-யை கட்டுரையாக மட்டும் பார்க்கவும்; படிக்கவும்.

Virussika kaanth said...

பெங்களூர்: இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் குறித்து தமிழக, கர்நாடக பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நடந்தது. அதில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக சட்டசபை தேர்தலில் எங்கள் சொந்த பலத்துடனே போட்டியிட விரும்புகிறோம். அவ்வாறு செய்தால், தேர்தலில் இரட்டை இலக்க எண்ணில் நங்கள் வெற்றி பெறுவோம். இதுவரை நாங்கள் கூட்டணி பற்றி யாருடனும் பேசவில்லை.

திமுகவை தோற்கடிப்பது தான் எங்கள் நோக்கம். அதற்காக மற்ற கட்சிகள் ஒன்றாகச் சேர வேண்டும். அவ்வாறு நடந்தால், கூட்டணி குறித்து யோசிக்கலாம். இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்.

நாங்கள் 3வது அணி அமைப்பது குறித்து யோசிக்கவில்லை. இந்த மாதம் 2வது வாரத்தில் நான் தேர்தல் சுற்றுப்பயணத்தை துவங்குகிறேன்.

கிழஞ்சேகுவேரா said...

ஏன் இப்படி தரம் தாழ்ந்த விமர்சனங்கள் ; இவை இட்லி வடையில் இடம் பெறலாமா ?

"குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" அல்லவா ?

ஜே பி (ஜெயாப்ரியன்) கோயம்பேடு


இதிலென்ன தப்பு?? திருமாவளவன் தலித் மக்களை மொத்தமாக மு.க விடம் அடகு வைப்பதை தானே குறிக்கிறது?? உள்ளதை சொன்னால் நோகுகிறதா?

- கிழஞ்சேகுவேரா

Anonymous said...

//நான் ஒரு பத்திரிகையாளரோடு பழகுகிறேன். அந்தப் பத்திரிகையாளர் ஒரு ரவுடியோடு நட்பு வைத்திருக்கிறார் என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? //

திருமா சொல்லும் பத்திரிகையாளர் --சோ... சரி..புரிஞ்சிடுத்து!
ரவுடி --> யார்..? புரிய மாட்டேங்கறதே..!
ஜெயலலிதாவா ? விஜயகாந்தா ?
இல்லை சசிகலாவா?

Anonymous said...

// மேடை தோறும் ’தமிழ்’ ’தமிழ்’ என்பார்கள். ஆனால் ல, ள, ழவை சரியாக உச்சரிக்கத் தெரியாது. கேட்டால் நாங்கள் ஏழைகள், முதல் தலைமுறையாகத் தமிழ் பயில்பவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் ஒரு பம்மாத்து விளக்கம். //

ஏனப்பா விஜய்காந்தை வம்புக்கு இழுக்கிறீங்க ..! அவர் பாட்டுக்கு பேசிட்டுப் போறார்.அவருக்கு தமிள் வராது. மதுரைக்காரய்ங்களுக்கே அப்பிடித்தான்.கன்னடமும் களி தெலுங்கும் நம் தமிழிலிருந்து பிறந்தது தானப்பா ?

இந்த முறை கன்னடத்துச்செல்விக்கும் தெலுங்கு ராயல ஸீமா நாயுடு- காருவுக்கும் ஒரு வாய்ப்புக்கொடுப்போமே !
அண்ணி பிரேமலதா துணை முதல்வராவது உங்களுக்கும் புடிக்கலியா ?

Anonymous said...

//திருமா சொல்லும் பத்திரிகையாளர் --சோ... சரி..புரிஞ்சிடுத்து!//

Thirumavalavan - Cho friendship combination???? unbelievable.... sounds like Gandhi & Godse????

Anonymous said...

ஸ்தாபன காங்கிரஸுக்கு "சோ" வோட் கேட்ட காலத்திலேர்ந்து பிள்ளையாண்டானை நன்னாத் தெரியும். சோ ஆதரிக்கும் கட்சியும் ஆமை புகுந்த
வீடும் அமீனா நுழைஞ்ச வீடும் வெள்ங்கினதா ஸரித்திரம் கிடையாது. இதை ரஜனிகாந்த் நன்னா புரிஞ்சுண்டார்.விஜயகாந்த் மரமண்டைக்கு ஏற மாட்டேன்றது. ஊழலை ஒழிக்கப்போறேன்னுட்டு ஜெயலலிதா கூட சேர்வாரோ இந்த விஜயகாந்த்? கெட்ட நேரம் வந்துட்டா யாரயும் விடாதுன்னோ ?

கொஞ்சம் வெயிட் பண்ணா காங்க்ரஸோட கூட்டு சேரலாமோன்னோ ? பாருங்கோ இதுதான் நடக்கப்போர்றது..!

ஸ்ரீனிவாசன் அரவிந்தன்

Anonymous said...

// இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். //

ஏய் யாரப்பா அது ? இட்லி வடையில் ஜோக்குக்கு தனி செக்ஷன் ( ஜோக் ஜோதிகா )இருக்கரப்போ ப்ளாக்குக்கு நடுவிலே ஜோக்கடிக்கிறது.இடத்தைகாலி பண்ணுங்கப்பா ..! அடுத்த ப்ளாக் பார்த்துபோங்கப்பா !

Anonymous said...

// Thirumavalavan - Cho friendship combination???? unbelievable.... sounds like Gandhi & Godse?? //

தவறான ஒப்பு நோக்கு நண்பரே..!

திருமா இனத்தீவிரவாதியல்லவா. அவரை எப்ப்டி காந்தியோடு ஒப்பிடலாம்.தலித் முன்னேற்றமும் முஸல்மான் ஒற்றுமையும் வேண்டிய திறத்தில் காந்தியாரும் திருமா-வும் ஒன்றாகலாம்.

இந்து தீவிரவாதி கோட்சே-வும் பிற்போக்குவாதி சோ-வும் ஒன்றாகலாம். ஆனால், செய்தது தவறே ஆயினும், கொண்ட கொள்கையில் தடுமாறாத கோட்சே எங்கே , அரசியல் கோமாளி - சோ எங்கே ?

தவறான ஒப்பு நோக்கு நண்பரே..!

Anonymous said...

//கலைஞர்: ராமன் - லெட்சுமண னைப் போல் இருங்கள் என்று சொல்ல மாட்டேன்; ராவணன் - கும்பகர்ணனைப் போல வாழுங்கள் என்று சொல்வதுதான் என் அறிவுரையாகும்.
//
அறிவுரைக்கேற்றபடிதான் இருக்கிறார்கள்.

Anonymous said...

திருமா நடத்துவது மிரட்டல், வழிப்பறி கொள்ளை, அராஜகம், பணம் பிடுங்கல். இதற்கு விடுதலை சிறுத்தைகள் என்ற அரசியல் கட்சி முகமூடி.
யாரிடமாவது பணம் பிடுங்க வேண்டுமென்றால் உடனே அவரது நிலத்தில் அம்பேத்கார் சிலையை வைக்க வேண்டியது. தலித் மக்களை கூட்டிக்கொண்டுவந்து மாலை போடவேண்டியது. அம்பேத்கார் சிலையை அங்கிருந்து எடுக்க வேண்டுமென்றல், அண்ணனுக்கு காசு கொடுக்க வேண்டும். அம்பேத்காரை வைத்து இப்படி ஒரு பொழப்பு!
அம்பேத்கார் இதை கேட்டால் என்ன நினைப்பார் என்பதை நினைத்து சமூக மக்கள் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கின்றனர்.
இந்த மாதிரி செய்யும் விசிக்கு, ஒரு சீட் கூட கிடைக்காது. எழுதி வைத்துகொள்ளுங்கள். திமுக ஓட்டோ பாமக ஓட்டோ விசிக்கு போகும் என்று கனா காண வேண்டாம்.