பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 19, 2011

மில்லியன் டாலர் பேபீஸ் - ரங்கா

சமீபத்தில் சச்சின் 40 கோடிக்கு கோக்கிடம் ஒப்பந்தம் போட்டார். அதற்கு சில நாட்களுக்கு முன் 42 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போட்டு சச்சினையே பின்னுக்கு தள்ளிவிட்டார் தோனி.

இன்று உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வீரர். வாழ்த்துக்கள்!! ஆனால் மில்லியனர்கள் மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் மட்டும் போதுமா, அடுத்த உலகக் கோப்பையை வெல்ல? இதற்கு நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பைப் போட்டியை பார்த்தோமானால் நட்சத்திர மற்றும் மில்லியனர் ஆட்டக்காரர்களை கொண்ட போர்ச்சுகல், ப்ரான்ஸ், இட்டாலி இதர அணிகள் எல்லாம் மண்ணைக்கவ்வியதே சாட்சி.

அதே சமயம் எந்த அளவு சந்தோஷம் மற்றும் பெருமிதத்துடன் ஸ்பெயின் திரும்பியதோ அதே அளவு பெருமிதத்துடன் திரும்பிய இன்னொரு அணி நியுஜிலாந்து என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். காலிறுதிக்கூட தகுதி பெறாவிட்டாலும் தான் பங்கு பெற்ற எந்தவொரு லீக் ஆட்டத்திலும் தோற்கவில்லை; அதாவது அனைத்துப்போட்டிகளையும் ட்ரா செய்தது. இத்தனைக்கும் இது நியுஜிலாந்திற்கு இரண்டாவது உலகக் கோப்பை அனுபவம்தான் (முதல்முறை 1982-ல்). மேலும் இந்த உலகக்கோப்பையில் அது இடம் பெற்றிருந்த அணியில் அதுதான் டொக்கு அணி்; மற்ற அணிகள் பராகுவே, ஸ்லோவேகியா மற்றும் 2006 உலக சாம்பியன் இத்தாலி. இப்படி பலம் வாய்ந்த அணிகளுடன் ட்ரா செய்ததன் மூலம் மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு unbeatable-ஆக இருந்த ஒரு அணி காலிறுதிக்குத் தகுதி பெறாமல் போனது உலகக்கோப்பை வரலாற்றில் இது நான்கவது முறைதான். நியுஜிலாந்தின் இந்த சாதனைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் கோச் ரிக்கி ஹெர்பேர்ட். ஆனால் இவரின் சம்பளம் வருடத்திற்கு 50,000 நியுஜ் டாலர்கள் மட்டுமே. மற்ற அணி கோச்சுகளின் சம்பளத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இது மிக மிக குறைவு. இத்தாலி போன்ற பணக்கார அணிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் நியு. அணியின் அனைத்து வீரர்கள் மற்றும் கோச்சின் மொத்தை சம்பளத்தை கூட்டினால் கூட ஒரு இத்தாலி வீரரின் சம்பளத்திற்கு ஈடாகாது. சும்மாயிருக்குமா ஐரோப்பாவின் பணக்கார கால்பந்து க்ளப்கள். உடனே மொய்க்க ஆரம்பித்துவிட்டன; குறிப்பாக கோச் ரிக்கி ஹெர்பேர்ட்டை. நியுஜிலாந்துடனான அவரின் ஒப்பந்தமும் உலக கோப்பை வரைதான் இருந்தது. அதனால் இருப்பாரா பறப்பாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியம் அவர் நியுஜிலாந்துடனான ஒப்பந்தத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளார்.

இப்போது முதல் பத்திக்கு மீண்டும் வருவோம். நாம் உலகக் கோப்பையை வெல்ல வெறும் ஸ்டார் பவர் மட்டும் போதுமா? இ.வ., கால்பந்து உலகக் கோப்பையில் ஃபைனல்ஸ் உட்பட பல போட்டிகளின் முடிவை சரியாக கணித்த பால் என்கிற ஆக்டோபஸை கேட்டு சொல்லவும். கொசுறு - பல வல்லுனர்கள் கருப்புக்குதிரையாக பார்க்கும் அணி பாக்கிஸ்தான்.

- ரங்கா

9 Comments:

மாயன் said...

'பால்' எப்பவோ செத்துப்போச்சுங்கன்னா !

Arun said...

பால் என்கிற ஆக்டோபஸ் இறந்து சில மாதங்கள் ஆகின்றன.

Vinoth said...

செத்துபோன பாலின் ஆன்மா சாந்தியடைவதாக...

பேபி said...

’பால்’க்கு பால் ஊற்றிப் பல நாட்கள் ஆகின்றன....ரங்கா

kggouthaman said...

பாலுக்குப் பால் ஊத்தி பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்திய அணியின் வீரர்கள் ஆட்டத்தை உணர்ச்சிபூர்வமாக அணுகாமல், அறிவு & உழைப்பு இவற்றின் மூலம் அணுகவேண்டும். மற்றபடி வீரர்கள் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி சம்பாதித்தாலும் எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை.

momentumcalls said...

another team participated in the football WC which is North Korea.For the first time the matches were transmitted live and they lost 6-1.The players were paraded and beaten

Anonymous said...

இட்லிவடை,
விருந்தினருக்கெல்லாம் இப்போ நேரம் சரியில்லையா ?

பாராட்டைத் தவிர எல்லாம் கிடைக்குதே !!

Anonymous said...

mokkaiyo mokkai post

Kavundamani said...

கருமாந்திரம் புடிச்ச பதிவு!!