பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 17, 2011

இட்லிவடையில் எஸ்.வி.சேகர் பேட்டி

வணக்கம்
என் பதில் கிடைத்த 30 நிமிடங்களுக்குள் திரு.க்ருஷ்ண பாகவதர் எழுதிய அநாகரீக கற்பனை நேர்காணலை நீக்கம் செய்த உங்கள் நேர்மைக்கு என் வாழ்த்துக்கள்.
என் கடிதத்தில் உள்ள என் CELL NO. 9841023545 நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
எந்நேரத்திலும் யாரும் தொடர்பு கொள்ளக்கூடிய நேர்மயானவனாகவே இருக்க பிரியப்படுகின்றேன்.
எனக்கு தொண்டையில் சிறு OPARATION சென்ற திங்கள் கிழமை PADHMASREE DR.மோகன்காமேஸ்வரன் செய்துள்ளார். நாளை இரவு வரை பேசக்கூடாது என்று கட்டளை இட்டிருப்பதால் யாவரும் நாளை மறுநாள் முதல் தொடர்பு கொள்ளலாம்.
இட்லி வடை BLOG கிற்கு என்று ஒரு பேட்டி 'எப்படிப்பட்ட கேள்விகளாக' இருந்தாலும் பதிலளிக்க தயாராக இருக்கின்றேன்.
IF GOD BE WITH US.
WHO CAN BE AGAINST US
என்றும் அன்புடன்
எஸ்.வி.சேகர்.
MYLAPOREMLA@GMAIL.COM

அன்புள்ள திரு எஸ்.வி.சேகருக்கு,

இட்லிவடை வாசகர்களுக்கு பேட்டி கொடுக்க முன்வந்த உங்களுக்கு நன்றி. உங்கள் தொண்டை சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்.

வாசகர்கள் தங்கள் கேள்விகளை idlyvadai2007@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது பின்னூட்டமாகவோ அனுப்பலாம். கடைசி தேதி, கடைசி தேதி அன்று முடிவு செய்யப்படும் :-)


நன்றி,
இட்லிவடை

16 Comments:

greatguy said...

Among the millions of Tamils only S V sekar is a VIP you can call him on phone and this guy attends the phone himself.

Most madarasi's are petty minded , will never answer straight or attend you immediately S V sekar is the only exception.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//கடைசி தேதி,கடைசி தேதி அன்று முடிவு செய்யப்படும் :-)//

கடைசி தேதி அறிவித்தவுடன், கேள்வி அனுப்பப் படும் :))

ஹரன்பிரசன்னா said...

சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு தொலைபேசி எண்ணை அழைத்துப் பேசினேன். (இதே எண் தானா என நினைவில்லை.) எஸ் வி சேகர்தான் பேசினார். 10 நிமிடங்கள் பேசினார். தன்னால் இயன்றது, இயலாதது, இணையத்தின் முகமூடித்தன்மையால் விளையும் வில்லங்கங்கள் போன்றவை பற்றிச் சொன்ன நினைவு.

sury said...

மயிலை எம்.எல்.ஏ. திரு.
எஸ்.வீ.. சேகர் இங்கு வந்து ஒரு சீனியர் சிடிசன் எழுதும்
கடிதத்தை படிக்கவும்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

Anonymous said...

//கடைசி தேதி,கடைசி தேதி அன்று முடிவு செய்யப்படும் :-)//

எப்படி, ஸ்பெக்ட்ரம் 2G யில் முடிவெடுத்தார்களே அப்படியா?

Anonymous said...

இ.வ
நல்ல மார்க்கெட்டிங் ஐடியாதான். இப்படியே க்ருஷ்ண பாகவதர உசுப்பேத்தி எல்லா ப்ரபலங்களையும் satire பண்ணச் சொன்னா அவங்க தானாவே வந்து இ.வ ப்ளாக்குல கேள்வி பதில் ஆரம்பிப்பாங்க. ஆமா! அடுத்தது யாரு! காமஹாசனா?

அஞ்சா நஞ்சன் said...

நேற்றே கடைசி என்று சொல்லாத வரை சந்தோஷமே ...

Anonymous said...

என்னப்பா இ.வ
ஒரு நாள் முழுசா பின்னூட்டங்களை போடலையே ஒருவேளை சேகர் உபயத்தில் உம்மையும் பாகவதரையும் கம்பி எண்ண வச்சுட்டாங்க போலிருக்குன்னு நெனச்சேன். அடடா! ஜாமீன்ல விட்டுட்டாங்க போலிருக்கே!

vijayaragavan said...

இந்த நேர்மை எத்துனை பேரிடம் இருக்கிறது?
கருணாநிதி? ஜெயலலிதா? ராமதாஸ்?

எனக்குத் தெரிந்து 3 பேர்.
௧. சோ
௨. எஸ்.வீ.சேகர்.
௩. (விஜய) டி.ராஜேந்தர் :)

rbrindha said...

நம் தமிழ் நாட்டில் சில பேரை தவறாக காமெடி பீஸ் நு நினைத்துக் கொண்டிருகிறார்கள்.
சோ, சுப்ரமணியம் சுவாமி , எஸ்.வீ. சேகர். நிறைய போர்டல் ல பார்த்தது உண்டு இவர்களை
பற்றி கேலியாக கமெண்ட்ஸ்-களை. உண்மையாலுமே இவர்கள் எல்லாம் நம்மை விட ஜாஸ்தியாவே
think செய்றவா தான். நம்மை விட bold ஆனவா தான்.
பயணம் படத்தில் வரும் ஹீரோ நிலை தான் மெய் போல.

"""
ஆகவே இங்கே கேட்கிறேன் மன்மோகன் இப்படி ஒரு reply செய்தாரா ?!
"""

க்ருஷ்ண பாகவதர் said...

Dear Sekar

நான் எழுதியதில் சத்தியமாக எந்த வித personal காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மக்கள் பொதுவாக உங்களை பற்றி இப்போது வைத்துள்ள கருத்தையே satire ஆக எழுதினேன். சோ பல வருடங்களுக்கு முன்பு ம.பொ.சி யை பற்றி ‘உண்ட பக்கர மான பக்கர ஹை ஹை’ என்று கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பது போலவும், அவரது துண்டை பிடித்து தொங்குவது போலவும் கார்ட்டூன் போட்டது போலத்தான் இது.
இந்த satire உஙளுக்கு புது உத்வேகத்தை உண்டு பண்ணியிருந்தால் மகிழ்ச்சியே. ஏழை ப்ராமணர் முன்னேற்றத்துக்கு ஏதாவது constructive plan உங்களிடம் இருந்தால் அதை வெளிப்படுத்தவும். convincing ஆக இருந்தால் நானும் மற்ற பலரும் கண்டிப்பாக உங்கள் செயல்பாடுகளுக்கு முடிந்தவரை support செய்வோம் என உறுதி கூறுகிறேன்.

Ramanar.Srini said...

Sir,

I pray to god for your speedy recovery.

IdlyVadai said...

கேள்வி பின்னூட்டங்கள் பிரசுரிக்கவில்லை. அவை தொகுத்து எஸ்.வி.சேகருக்கு அனுப்பபடும். நன்றி.
இட்லிவடை

murali.. said...

//கடைசி தேதி,கடைசி தேதி அன்று முடிவு செய்யப்படும் :-)//

எப்படி, ஸ்பெக்ட்ரம் 2G யில் முடிவெடுத்தார்களே அப்படியா?
...
ரிபீட்டு.. :)

Anonymous said...

தமிழினத்தை அழிக்க வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன வல்லாதிக்க சக்திகள். இனியும் காலம் தாழ்ந்துவிடவில்லை... தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம், என கூறியுள்ளார் சீமான்.

IdlyVadai said...

இத்துடன் கடைசி தேதி முடிந்துவிட்டது. நன்றி