பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 25, 2011

எஸ்.வி.சேகர் அவர்களின் பேட்டி

இட்லிவடையில் திரு.எஸ்.வி.சேகர் பேட்டி என்று அறிவித்த உடன் 10 நிமிஷத்துக்கு ஒரு கேள்வி என்று வந்துக்கொண்டு இருந்தது. 1.5 நாளில் கடைசி தேதி முடிவடைந்துவிட்டது என்று அறிவித்தாலும் இன்றும் கேள்விகள் வந்த வண்ணம் உள்ளது.

வந்திருந்த கேள்விகளில் டுப்ளிகேட் கேள்விகள், பர்சனல் கேள்விகளை தவிர்த்து பேட்டிக்கு எஸ்.வி.சேகரை தொடர்பு கொண்ட் போது அவர் எழுதி அனுப்புவது கஷ்டம் ஆடியோ நேர்காணல் என்றால் வசதி என்றார்.

நேற்று முன் தினம் சுமார் 1.5 மணி நேரம் ஒருவர் பேசி ரிகார்ட் செய்தார். ஆனால் பேசி முடித்த பின் சுமார் ஐந்து நிமிடம் தான் ரிகார்ட் ஆகியிருந்தது. தயங்கி தயங்கி எஸ்.வி.சேகரிடம் சொன்ன போது அதற்கு என்ன திரும்பவும் கொடுக்கிறேன் என்றார். ( இத்தனைக்கு அவருக்கு தொண்டை வலி வேற )

அடுத்ததாக யார் பேட்டி எடுப்பது என்று குழம்பிக்கொண்டு இருந்த வேளையில் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டேன் ஆனால் அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். நேற்று பத்ரியிடம் சாட்டில் முடியுமா என்று கேட்டேன். அதற்கு என்ன வீடீயோ இண்டர்வியூவே செய்கிறேன் என்றார். அவருக்கு என் நன்றிகள். கேமரா யார் என்று தெரியவில்லை அவருக்கும் என் ஸ்பெஷல் நன்றி.

இன்று காலை எஸ்.வி.சேகரை தொடர்புகொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. பின் அவரே பத்ரியை அழைத்து, அவர் இருக்கும் பகுதியில் 9 முதல் 5 மணி வரை பவர் கட் என்றும் அதனால் வேறு எங்கு சந்தித்து உரையாடலாம் என்றார். பின்னர் கிழக்கு பதிப்பகம் அலுவலகம் எங்கு உள்ளது என்று கேட்டு அங்கேயே தான் வந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு சுதந்தரப் போராட்டத் தியாகிகள் உண்ணாவிரதம் இருப்பதாகவும் அங்கு அவரைக் கூப்பிடுவதாகவும் அதற்குப் போய்விட்டு வந்து இண்டெர்வியூ தருவதாகவும் அப்டேட் செய்து, இறுதியாக 12.30 மணிக்கு கிழக்கு அலுவலகம் வந்து சேர்ந்து, ஒரு காபியும் இடையில் கொஞ்சமாகத் தண்ணீரும் மட்டும் குடித்துவிட்டு, சுமார் 1.30 மணிநேரம் வரை மொபைல் போனை தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு பேசினார். எந்தக் கேள்வியாக இருந்தாலும் பரவாயில்லை; எவ்வளவு ஹார்ஷாக இருந்தாலும் பரவாயில்லை; பதில் சொல்கிறேன் என்றார். கேள்விகளை தான் ஒருமுறை பார்க்கவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை; பேசுவதை அப்படியே வீடியோவாகப் போடலாம் என்று சொல்லிவிட்டார். தன் கருத்துகளைப் பயமின்றித் தெரிவிப்பதாகவும் இதில் பலவற்றை அவர் சட்டமன்றம், பொதுக்கூட்டங்கள் ஆகிய இடங்களிலும் பேசியிருப்பதாகவும் சொன்னார். எந்தக் கட்டத்திலும் தயங்கவில்லை, யோசிக்கவில்லை, பளிச் என்று பேசினார். பாராட்டவும் தயங்கவில்லை, திட்டவும் தயங்கவில்லை. சுமார் 2.10-க்கு இண்டெர்வியூ முடிந்ததும்தான் தன் போனை எடுத்துப் பார்த்தார். மனைவி சாப்பாட்டுக்காக அழைத்திருந்தார். போகும் வழியில் மயிலை மசாலாவில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் சொல்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

அவரது தொண்டை புண்ணாகியிருக்காது என்று நம்புவோம்!

இனி பேட்டி ....
தொண்டை வலி பாராமல் பேட்டி கொடுத்த எஸ்.வி.சேகர், இட்லிவடைக்கு வீடியோ பேட்டி எடுத்த பத்ரி, இதற்கு முன்பு ஆடியோ பேட்டி எடுத்த அன்பர் அனைவருக்கும் நன்றி.
60 Comments:

Anonymous said...

பேட்டியை புத்தகமாக போடலாம்- 1000 பிரதி ரூ 100 ஒரு பிரதி, அது விற்ற பின், 10000 பிரதி, ஒரு பிரதி ரூ 10 என்று விற்கலாம்.

Baski said...

Excellent.

ARK said...

Honest and practical answers. Wish you all the best in your political career.

Erode Nagaraj... said...

0:48:28 :) :) :)

பத்மநாபன் said...

சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது எஸ்.வி.சேகரின் பேட்டி...ஒரு எம்.எல்.ஏ இவ்வளவு எளிதில் அணுக கூடியவராக இருப்பது அரசியல் ஆச்சர்யம்...

தொண்டை அறுவை சிகிச்சை பெற்ற சூழலில் இவ்வளவு விஸ்தாரமான பேட்டி பாராட்டுக்குரியது.....

Anonymous said...

சேகரோட பேட்டி சுத்த காமெடி. கேட்ட கேள்வி எதுக்குமே நேரடி பதிலில்லை. சன் டிவி பஜன், சோனியாவுக்கு சொம்பு, அழகிரிக்கு அள்ளக்கை, ராகுலிடம் சரணாகதி என்று யார் யாருக்கு பயப்படுகிறார் என்று தெளிவாக காட்டி விட்டார். நடுவில், அனானிமஸாக எழுதாமல் சொந்தப் பேரில் எழுதவேண்டும் என்று இ.வ க்கு குட்டு வேறு. மீனவர் ஓட்டு வேண்டுமே என்று அவர்களைப் பற்றிய செண்டிமெண்ட் யார் இவர் என்பதை தெளிவாக காட்டியது. சங்கர மடத்தை பற்றி சரியான சமயத்தில் வாய் மூடிக்கொண்டிருந்துவிட்டு இப்போது பேசுவது ப்ராமணர் ஓட்டிற்காவே!
இத்தாலிய் சோனியா பற்றிய இவரது உளரல் சமாளிப்பின் உச்சக்கட்டம்.

கடைசியாக ‘கட்சியின் கொள்கைக்கேற்ப நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்’ என்று சொல்லி முடித்தது அல்டிமேட் அட்வான்ஸ் பாவ மன்னிப்பு!

VETRI said...

S.Ve. சேகர் பேசினால் அது சமுகபர்வை .... ராமதாஸ், திருமா பேசினால் அது சாதி வெறி ..

வன்னியர் மரம் வெட்டியாக திரிக்க பட்டார் ... பாபர் மசூதி இடித்த அய்யர் .. அய்யங்கார் தியாகிகளாக போற்ற படுகிறார்கள் ...

கோத்ரா எரிப்புகள் .. கோவை எரிப்புகள் அவர்களின் கோர முகங்கள் ...

jtraja said...

திரு சேகர் மீது எனக்கு எப்போதுமே மதிப்பு உண்டு.
எனது சந்தேகம் : ஆகஸ்ட் மாதம் நித்தியானந்தாவை சந்தித்த பின் தனது தொண்டை வலி சரியானதாக பேட்டி அளித்திருந்தார். ஆனால் இப்போது ஆபரேசன் செய்து குணமாகி இருக்கிறார். (நித்திக்கு இலவச விளம்பரம் அளித்தாரா?). தனிமனித ஒழுக்கத்தை இவர் நித்திக்கு போதிக்கலாம். மக்களை ஏமாற்றுபவன் அயோக்கியன். ஏமாற்றுபவனை நியாயப் படுத்துபவன் யார்?

விக்கி உலகம் said...

thank you idlivadai

eramurukan said...

S.Ve.S has proved he is a gentleman by keeping his word. Pl could you also make available the transcript of the interview? I prefer reading to watching

Krish said...

ரொம்ப அருமையான பேட்டி. சேகரின் பதில்கள் ரொம்ப சென்சிபிலா இருந்தது.

VERY CANDID

ஆவிகள் பற்றிய கருத்துதான் காமெடியா இருந்தது பட் அவருடைய தனிப்பட்ட நம்பிக்கை. இட்ஸ் ஓகே.

Anonymous said...

SVee Sekharee now act like a seasoned politiician. But he is a nice chap. Hope he will get a ticket to contest in Mylapore...All the best dude..

PRESSURE VESSEL, HEATEXCHANGERS said...

pl. put a link for download. he is speaking with his heart which most of the people hiding with their egos.

பா. ரெங்கதுரை said...

எஸ்.வி. சேகரின் நாடகங்கள், கூடிய சீக்கிரம் புத்தக வடிவில் கிடைக்கும் என்ற செய்தியை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

சந்திரமௌளீஸ்வரன் said...

ப்ளாக்கர் உலகத்திலே ஒரு மைல்கல் என சொல்லும் வகைக்கு இட்லி வடையின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. எஸ்.வி சேகரின் கருத்துகளோடு ஒத்துப் போவதும் மாற்றுக் கருத்து கொள்வதும் தனி தனி விருப்பம்.. ஆனாலும் அவரது எளிமை , தானே வலிய வந்து பேட்டிக்கு உட்படுத்திக் கொண்ட டௌன் டு எர்த் பண்பு .. ஹேட்ஸ் ஆஃப் சேகர் ஜி..

பத்ரிக்கு ஒரு சிறப்பு தேங்க்ஸ்.. வீடியோ மிக அருமை.. ஒரு சின்ன விஷயம் சொல்ல வேண்டும்.. காங்கிரஸில் சேர்ந்துட்டாருன்னு சேகருக்கு மைக் தராமல் விட்டுட்டாரா பத்ரி.. சேகரின் குரல் பத்ரியின் குரலுடன் ஒப்பிட்டால் மிகவும் வால்யூம் குறைவு..

அப்பாதுரை said...

சேகரின் வெளிப்படையான பேச்சை ரசிக்கவும் மதிக்கவும் முடிகிறது. "பலனை ஒரு நாள் அனுபவிப்பாங்க" போன்ற சாபங்களைத் தவிர்த்திருக்கலாம்.

பேட்டிக்கு நன்றி. பேட்டி எடுப்பது எப்படி என்று பேட்டி எடுத்தவர் கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாமோ?

கணையாழி said...

சமூக பொருப்புணர்ச்சியை காட்டுகிறது - இட்லிவடைக்கு வாழ்த்துக்கள்!

எளிமையான (ம) அடக்கமான பதில்கள், சட்றே காலம் கடந்து திரு.சேகர் அவர்களை கனிப்போம்.

நன்றி!

Renganathan said...

Pretty good one. I like that atleast he is quite approachable. Though, I am not convinced with some of his answers, but overall he seems to be honest. Well done Sve Shekar.

Thanks,
Renga

R.Gopi said...

பேட்டி நன்றாக உள்ளது...

வாழ்த்துக்கள் இட்லிவடை...

Anonymous said...

எஸ் வி சேகர் நேர்காணல் மிக இயல்பாக நேர்த்தியாக அமைந்திருந்தது.
நம் நாட்டில் தான் தெரியாமல் எது வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் என்று இட்லி வடைப்பதிவர்களை மிக நன்றாக கடிந்து கொண்டிருக்கிறார். சன் தொலைக்காட்சி பற்றிய அவரது கருத்து மிகவும் நடு நிலையானது. ஜெ , சீமான், வை கோ, நெடுமாறன் பற்றிய கருத்துக்கள் நேர்மையாக அமைந்திருந்தன. தமிழ் என சரியாகக்கூட உச்சரிக்கத்தெரியாது " தமிலர் தளைவர் " என்று கேப்டனை மறைமுகமாக தாக்கியிருக்கிறார்.இளைஞன் என்பது தமிழ் வார்த்தை தான். அந்த இடத்தில் சேகர் சற்று குழம்பியது போல் அப்பட்டமாகத்தெரிந்தது. ள-வும் ழ-வும் பிராக்ருததிலிருந்து வந்தவை என தவறாக பொருள்பண்ணியிருப்பதாய்த்தோன்றியது.ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சேகர் (அற்ற குளத்து அரு நீர்ப்பறவை போல்),ஆபத்துக்காலத்தில் கை விட்டது மன்னிக்க முடியாத குற்றம்.பிற சமூகதினர் தங்கள் மதத்தலைவரை இவ்வாறு கை விடுவதில்லை. மீனவர்களுக்கு தமிழக அரசு செய்ய வேண்டியதை சட்ட மன்றத்தில் சேகர் பேசியிருக்கலாமே..! அவர்களும் தானே சேகருக்கு வாக்களித்தனர்?

தனிமனித ஒழுக்கம் பற்றி சேகர் குறிப்பிட்டவை , அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல அனைத்துத்தரப்புக்கும் பொருந்தும். சேகரின் வளர்ச்சிக்கு அவரது பெற்றோரைப் பேணும் நற்குணம் தான் காரணம். கலைராஜன் , சேகரைத்தாக்க முயன்றது கூடப்பரவாயில்லை பிறரைத்துன்பம் செய்ய நினைக்காத பிராமண சமுதாயத்தின் டாக்டர் மைத்ரேயன் அவர்களும் சேகரைத்தாக்க முயன்ற செய்தி " யாரைத்தான் நம்புவதோ " என்றே எண்ணத் தோன்றுகிறது.

இட்லிவடை வலைப்பதிவர்கள் இனியும் ஜெ ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடும் என எதிர்பார்ப்பது உசிதமானது கிடையாது. அவரவர் தொகுதியில் நல்லவர் என ஒருவர் போட்டியிட்டால் அவருக்கு வாக்களிக்கலாம். அவ்வளவுதான். மற்றபடி விஜயகாந்த் வந்தால் மலையைத் தலைகீழாய் மாற்றுவார் என்றோ ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் பொற்காலமாய் அமையும் என்பதோ வெறும் கற்பனையில் தான் நடக்கும். இன்று அய்யாவுக்காக ராசா
ஊழல் செய்து கைதானது போல் பின்னைய காலங்களில் டாக்டர் மைத்ரேயனும் அல்லது சுதீஷும் செய்து மாட்டிகொள்ள மாட்டர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

மிகவும் வெளிப்படையானதாய் அமைந்திருந்தது சேகரின் நேர்காணல். இட்லி வடை உரிமையாளரின் முகத்தையும் காணும் பேறு கிடைத்தது. இவ்வளவு இளைஞரா இட்லி வலை உரிமையாளர் ? விஜய் டி வியின் நீயா நானா நேர்காணலைப்போல் ( வாசகர்களின் கேள்விகளை தானே கேட்பது போல் ) பயப்படாமல் கேள்விகள் கேட்டிருந்திருக்கலாம். அந்த ஒனர்ஷிப் மட்டுமே மிஸ்ஸிங்.

Anonymous said...

வேறெந்த அரசியல்வாதிக்கும் இப்படி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதுக்காக இவ்வளவு பெரிய பேட்டிய எடிட் பண்ணாமல் போட்டிருப்பது அபத்தம். ஒரிஜனல் இட்லி வடை கடைய நல்ல விலைக்கு வித்துட்டு போய்ட்டாரா ?

கானகம் said...

மிக மிக நிதானமான பேச்சு. எஸ்.வி.சேகரின் இன்னொரு முகம் தெரிந்தது இந்தப் பேட்டியின் மூலம், நான் அவரையும் சந்தர்ப்பவாத அரசியல்வாதி என நினைத்திருந்தேன்.

பஸ் டே

இலங்கைப் பிரச்ச்சினை

மீனவர் பிரச்சினை

இந்துக்கள் / பிராமணர்கள் திரைப்படங்களில் விமர்சிக்கப்படுவது குறித்து..

தீராவிட குமப்லகளின் இந்துமத நம்பிக்கைகள் குறித்த இரட்டை வேடம்

இப்படி பல விஷயங்களின் தீர்க்கமான பேச்சு.
அரசியல் நாகரிகம் குறித்த அவரது நிலைப்பாடும் அருமை.

வாழ்த்துக்கள் எஸ்.வி.சேகர்..

இட்லிவடைக்கும், பேட்டியை சாத்தியமாக்கிய பத்ரிக்கும் நன்றி

Anony8 said...

He Won't stay in Cong. 4 a long time or will be kicked out.

Perungulam Ramjothidar said...

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இட்லிவடை.

தங்களது இடைவிடாத உழைப்பு எங்களை மிரள வைக்கிறது. கட்டாயமாக தாங்கள் மேலும் பல பேரை பேட்டி எடுப்பீர்கள் என நம்புகிறோம். எம்முடைய ஆசிர்வாதங்கள் என்றுமே தங்களுக்கு உண்டு.

திரு.எஸ்.வி.சேகர் சீக்கிரமே குணமடைய எல்லாம் வல்ல இறைவனை முழுமனதுடன் பாராட்டுகின்றேன். அவரும் அவரது குடும்பத்தினரும் எல்லா வளமும் நலமும் பெற என்னுடைய ஆசிர்வாதங்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

Venkat said...

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது, சேகருக்கு கை வந்த கலை. முதலமைச்சருக்கு வணக்கம் சொன்னதால் மட்டுமே அதிமுக அவரை விலக்கியதாக சொல்வது நல்ல காமெடி. Many know he has been planted in congress by DMK. எனக்கென்னவோ இந்த episode மொத்தமுமே இ.வ மற்றும் சேகர் குழுவினால் stage manage செய்யப்பட்டதோ என்று தோன்றுகிறது. எத்தனை நாள்தான் இ.வ ஓசியில் ப்ளாக் நடத்திக் கொண்டிருக்க முடியும். நல்ல வியாபார ரீதியிலான முயர்ச்சி. இ.வ க்கு ஒரு சபாஷ்.

சாமக்கோடங்கி said...

ஆவி , சாமி போன்ற நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு சேகர் ஒரு நல்லவராகவே தெரிகிறார்..

எந்தக் கட்சியில் எப்படி ஒட்டிக கொண்டு ஆட்சிக்கு வந்தாலும், தனது தொகுதிக்கு நல்லது செய்தால் ஓகே..

அதுவே ஒவ்வொரு எம்எல்ஏ வும் செய்ய வேண்டியது.. எளிதில் அணுகப் படக் கூடியவராக இருத்தல் நல்லதே..

ஏம்ப்பா. யாராவது மயிலாப்பூர் காரங்க இருந்தா சேகர் சார் என்ன என்ன நல்லது பண்ணி இருக்கார்னு பட்டியல் குடுங்களேன்..

கடைசியில் ஒரு கருத்து: நமது நாட்டின் சாபக்கேடு அரசியல்வாதிகளை வைத்துப் பார்த்தால் இவர் கொஞ்சம் நல்லவராகவே படுகிறார்..

சாமக்கோடங்கி said...

கேள்விகளுக்கு பதில் சொல்ல அவரே ரெடியாக இருக்கிறார்.. பின்ன இவருக்கு என்ன தயக்கம்..???

கடைசியில் கொஞ்சம் ஐஸ் வேறு.. கொஞ்சம் தைரியமாகக் கேட்டிருந்தால் இட்லி வடைக்காகப் பேட்டி எடுத்தமைக்காகப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

கேள்வியை பயந்து கொண்டே வழ வழா கொழகொழா என்று பேசியிருப்பது இவரே கேள்வியை எழுதி வந்து மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்தார்கள் என்று சொல்வதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி இருந்தது.

மற்றபடி அவரின் முன்வந்து செய்த உதவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

சாமக்கோடங்கி said...

பேட்டியின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்..

அவராவது பதிலைக் கொஞ்சம் குறைத்து சொல்லி இருக்கலாம்.

ஆனால், கேள்விகள் நன்றாகவே இருந்தன..

க்ருஷ்ண பாகவதர் said...

சனி மலர்

Congratulations! அல்ப விலைக்கு இ.வ. ஐ acquire செய்த சேகருக்கு வாழ்த்துக்கள். முகப்பில் போட்டிருக்கும் புதிய ஓனரின் படம் உச்சிக்குடுமி விகடனார், தலைப்பாகை துக்ளக் போன்று இல்லாமல் பார்த்தவுடனே சிரிப்பு வரும்படி இருப்பது பாராட்டத்தக்கது என்று சேகர் தன்னைத் தானே பாராட்டி அறிக்கை விடுத்திருக்கிறார். யாருமே அண்டாமல் மூலையில் கிடந்த எனக்கு 1 1/2 மணி வீடியோ பட பேட்டி அளித்து உலக அளவில் சான்ஸ் கொடுத்ததில் இ.வ வை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது அன்றும் அவர் தெரிவித்தார்.

இ.வ ப்ளாக்கை 2G போல first come first served முறையில் இலவசமாக தாரை வார்திருப்பதனால் ஏகப்பட்ட இழப்பு என்று IVG (Idlivadai VaasakarkaL Group)ன் ஆடிட் அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது சரியென்றும், இதில் கையூட்டாக இ.வ ஆசிரியர் பத்ரி‘மயிலை மசாலாவில்’ லஞ்ச் சாப்பிட்டதை CBI ஆராயவேண்டும். auction முறையில் இ.வ. வை விற்றிருந்தால் atleaset நாலு பக்கோடா பொட்டலமாவது கிடைத்திருக்கும். இந்த பேரிழப்பை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மயிலை மசாலா லஞ்சை வாந்தி எடுக்கும் வரை விடமாட்டேன். சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு போடுவேன் என்று சுப்ரமண்ய ஸ்வாமி அறிவித்திருக்கிறார்.

இந்த ஊழலை விசாரிக்க JPC (Jollu Party committe) அமைக்க எல்லா வாசகர்களும் போராடுவோம். அறிவிப்பு வரும்வரை பின்னூட்டமிடும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்திருக்கிறார்.

பின்னூட்டமா போட்டு என்னை கொன்னுடாதீங்க! இட்லி வடை ப்ளாக்கில் யார் எழுதுறாங்க என்பதே எனக்கு தெரியாது. Internet connect செய்வது எப்படி என்று கூட எனக்கு தெரியாது என்று ம.மோ.சி பாணியில் இ.வ ஆசிரியர் பதிலளித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று விஸ்வாமித்ரா எழுத முயன்று கொண்டிருக்கிறார்.
புதிய முதலாளியின் காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாக எழுதுவதால் விஸ்வாமித்ரா மற்றும் க்ருஷ்ண பாகவதருக்கும் சீட்டு கிழிக்கப் படும் அன்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீமான் போராட்டம்!
போராட ஒரு விஷயமும் கிடைக்காததால் internet cut போராட்டம் நடத்தப் போவதாகவும் தமிழ் உணர்வுள்ளவர்கள் கையில் கட்டிங் ப்ளேயருடன் cable post தேடி அலையவேண்டும் என்று சீமான் அறிவித்திருக்கிறார்.

என் வீட்டு internet ஐ கட் செய்ய முயற்சித்தால் அது பலிக்காது. ஏனென்றால் நான் அடுத்த வீட்டு wirelessல்தான் ஓ.சி யில் மங்களம் பாடுகிறேன் என்று சேகர் பதில் சவால் விட்டிருக்கிறார்.

இந்த வார சனி மலருடன் இலவச இணப்பாக வாசகர்கள் பார்த்து ஜொள்ளு விடும்படி‘தூள் பக்கோடா’ வண்ணப்படம் இணக்கப் பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

யோகி said...

முழுவதும் நான்... நான்... நான்...

Anonymous said...

என்ன ஜோசியரே!
s.v.சேகர் ஜோசியத்தில் எனக்கு பெரிய நம்பிக்கை என்றதும் ‘ அடடா வசமான பார்ட்டி’ சிக்கிடுச்சேன்னு உருகி வழிந்து எழுதியிருக்கேரே!
அடுத்த ட்ராமா அமைச்சர் நீங்கதான். உங்க ஜாதமே சொல்லுதேன்னு அவுத்துவிடும். வியாபாரம் கொழிக்கும்.. உங்களுக்கு.
இ.வ ப்ளாக்கிலிருந்து ebay, craiglist rangeற்க்கு உயர்ந்திருக்கிறது தெரிகிறது.

RaviSuga said...

S.Ve.Shekar is very bold in his answers and very good to know his thoughts. Thanks to both Shekhar and blog for this fantastic interview.

S Vijayan said...

ஆமை புகுந்த வீடும், சேகர் புகுந்த கட்சியும் உருப்பட்டதில்லை என்று ஜோசியர்கள் சொன்னதால்தான் அவர் அதிமுகவில் இருந்தும், பகுத்தறிவு ? கட்சியான திமுகவும் அவரை ஒதுக்கி விட்டன என்று பேசுகிறார்களே!
அது உண்மையானால் இந்த முறை காங்கிரஸ் அகில இந்திய அளவில் டெப்பாசிட் இழக்குமோ! பொருத்திருந்து பார்ப்போம்!

Anonymous said...

Krishna Bagavathar is being prejudiced...simple. I think Sve.Sekar answered most of the questions appropriately and reasonably rationally. May be it is Krishna Bagavathar whose article was removed upon the reply from Sve. Sekar and it has infuriated the Bagavathar.

Bagavathar Sir, may be you are trying to be sarcastic and want to be a satiric political writer, but the comment you have put is hardly inspiring any humour what so ever. Sve.Sekar man has come out and replied your critique decently in the open. Be magnanimous to admit that you were wronged. Don't spill hatred and predilected notions unnecessarily under the blanket of satiric writing. This country already has enough negative press.

கிரி said...

எஸ் வி சேகர் அவர்கள் பேட்டி ரொம்ப அருமையாக இருந்தது. நடைமுறையை அவர் பிரதிபலித்தது சிறப்பாக இருந்தது. இந்தப்பேட்டி அவர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியிருப்பது உண்மை.

இட்லிவடை மற்றும் பத்ரி அவர்களுக்கு நன்றி

வால்பையன் said...

சோனியா அவரது கணவரின் இழுப்புக்காக பழிவாங்கியது சரிதான் என்ற தோணியில் பேசுகீறாரே!

இந்தியா இலங்கை அரசுக்கு கொடுத்த ஆயுதங்கள் ரேடார் கருவிகள் பற்றி ஏன் ஒன்றுமே யாரும் கேட்கவில்லை, சுயமாக கேள்வி கேட்ட பத்ரி கூடவா அதை மறந்துவிட்டார்!?

Anonymous said...

இட்லி வடை

முதலில் இப்படி ஒரு வெளிப்படையான பேட்டியை ஏற்பாடு செய்து வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. பத்ரியும் மிக அடக்கமாக சேகருக்கு நிறைய இடம் கொடுத்து பேட்டியை நடத்தியுள்ளார். பாராட்டுக்கள்.

எஸ் வி சேகர் தான் காங்கிரசில் சேரப் போவதாக மெயில் அனுப்பிய பொழுது நான் கோபத்தில் ”இட் இஸ் ஷேம் ஆன் யு சேகர் போயும் போயும் ஒரு கிரிமினல் கட்சியிலா சேரப் போகிறீர்கள், இனிமேல் உங்கள் இமெயில் லிஸ்டில் இருந்து என்னை நீக்கி விடுங்கள்” என்று பதில் போட்டிருந்தேன். இப்பொழுது அவரது நிலையையும் புரிந்து கொள்ள முடிகிறது. பொது வாழ்வுக்கு வந்து விட்டு கட்சிப் பாதுகாப்பு இல்லாமல் போனால் அவருக்கு ஆபத்து என்பது புரிகிறது.
இருந்தாலும் அவர் தமிழ் நாட்டு பி ஜே பியில் சேர்ந்து ஒரு பிரச்சாரகரகாக கட்சியை வளர்த்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். காலம் கடந்தாவது அதைச் செயல் படுத்துவார் என்று நம்புகின்றேன். ஏற்கனவே வளர்ந்த ஒரு மோசமான ஊழல் கட்சியில் இவர் சேர்ந்து கொள்வது அவரது நேர்மைக்கும் வெளிப்படையான பேச்சுக்கும் உகந்ததாக இருக்காது. தமிழ் நாட்டுப் பி ஜே பி யில் இவர் எந்த தலமையையும் எதிர்பாராமல் பிரச்சாரம் மட்டுமே செய்திருந்தால் யாரும் இவரது சுதந்திரத்தைத் தடுத்திருக்கப் போவதில்லை. தமிழ் நாட்டு பி ஜே பி க்கு ஒரு வடை போச்சு. எங்கிருந்தாலும் வாழ்க சேகர். அவசரப் பட்டு நான் வெளியிட்ட வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

முன்பு ஒரு முறை பத்ரி பிராமணர்களில் அடி மட்ட ஏழைகளுக்குக் கூட எந்த வித சலுகைகளும் தேவையில்லை என்று அவரது பாணியிலேயே வழக்கம் போலவே எந்த வித அனுபவமும் உண்மை அறிவும் இல்லாமல் உளறிய பொழுது நான் அவருக்கு நீண்ட கடுமையான ஒரு பதிலை பல்வேறு உதாரணங்களுடன் அனுப்பி இருந்தேன். இன்று வரை அதற்கு அவரிடமிருந்து பதில் இல்லையென்றாலும் கூட எஸ் வி சேகர் அதையே மீண்டும் அவர் பாணியில் சொல்லிய பொழுது பத்ரிக்கு நான் சொல்ல வந்தது என்ன என்பது லேசாகவாவது புரிந்திருக்கக் கூடும். எஸ் வி சேகர் சமுதாயத்தில் கீழ்த்தளத்தில் உள்ள சமையல்கார, சவுண்டி ஏழைப் பிராமணர்களுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும். அவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லாத அநாதைகள் அவர்கள்.

பல் விதங்களிலும் இவருக்கு இருக்கும் வெளிப்படையான பேச்சும் அணுகுமுறையும் இன்று தமிழ் நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சிக்காரரிடமும் காண முடியாதது. வை.கோ ஒரு கிறிஸ்துவர் என்ற விஷயத்தை வை கோ பால் சாமி என்றுமே வெளிப்படையாகச் சொன்னது கிடையாது. இவர் போட்டு உடைத்து விட்டார். இனி சைமன், பால் சாமி போன்றோர் பிரிவினைவாதம் பேசும் பொழுதெல்லாம் அது அவர்கள் பேசும் பேச்சா அல்லது மிஷநரிகள் எழுதிக் கொடுத்தும் பேச்சா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களது தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கைகளுக்கும் பின்னால் எந்த சக்தி இருக்கிறது என்பதை வெகு தெளிவாக எஸ் வி சேகர் சொல்லி விட்டார். சபாஷ் சேகர். இன்று தமிழ் நாட்டில் இவ்வளவு வெளிப்படையாகப் பேசும் பிரபலங்கள் இவரும் சுப்ரமணியன் சுவாமியும் மட்டுமே.

இவரது அனைத்து வாதங்களையும் நான் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் பெரும்பான்மையான விளக்கங்களும் நிலைகளும் இவர் மீது பெரும் மதிப்பை உருவாக்குகின்றன. நிச்சயம் இவர் மீது பலருக்கும் இது வரை இருந்த ஒரு வித ஏளனப் பார்வை, அவநம்பிக்கை, தவறான அபிப்ராயம் இந்த நீண்ட தெளிவான பேட்டியின் மூலம் விலகியிருக்கும் என்று நம்புகிறேன்.

இது போலவே சுப்ரமணியன் சுவாமி அவர்களுடனும் ஒரு வெளிப்படையான நீண்ட பேட்டியை இட்லி வடை கொணர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்

இங்கு ஒரு சிலர் நீண்ட பேட்டியைக் கேட்க முடியாது எடிட் பண்ணிப் போடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள். டிவிட்டர் யுக ஆசாமிகள் இவர்கள். இவர்களுக்கு எதையுமே பொறுமையாகப் படிக்கவும், நேரம் செலவழித்து அறிந்து கொள்ளவும் அக்கறையிருப்பதில்லை, பொறுமை இருப்பதில்லை. எல்லாவற்றையுமே உரித்துச் சிறிதாக்கி ஊட்ட வேண்டும் இவர்களுக்கு. எந்த எடிட்டும் பண்ணாமல் வெளியிட்டதனாலேயே இந்த பேட்டி எஸ் வி சேகரின் முழு ஆளுமையை நமக்கு வெளிப்படுத்துகிறது.

ஒரு ஊழல் கட்சியில் ஒரு தேச விரோதத் தலைமையுள்ள கட்சியில் போய் சேர்ந்திருந்தாலும் கூட எஸ் வி சேகர் அவர்கள் தனது நேர்மையையும், கொள்கைகளையும் விட்டுக் கொடுக்காமல் போராடுவார் என்று நம்புவோமாக. அவர் மீண்டும் மைலாப்பூரில் நின்று வெற்றி பெற வாழ்த்துகிறேன். எனக்கு ஓட்டு இல்லாவிட்டாலும் கூட அவருக்கு எனது மனப்பூர்வமான ஆதரவு இந்த பேட்டிக்குப் பின்னால் வலுப்படுகிறது.


நன்றி
ச.திருமலை

Anonymous said...

Thought of seeing S.V.Sekar interview for 3 minutes and move on to times of india paper.Must accept that i was tied for the full interview.............
S.V.sekar gave true spontaneous answers......
of course he diplomatically conveys his regard to a to z of all politicians irrespective of whether good or bad or goonda or powerful.........
but he does not look like an oppurtunist who eats away people votes and people/government money.........
if MLA's and MP's have his nature, his sincerity, his work.....may pass above baseline.....which is what we all indians need........HELL WITH CORRUPTION........
LET E-GOVERNANCE RULE INDIA FULLY IN NEXT 2 YEARS...EVERYWHERE and that will provide everlasting golden period for allindians.....
CONGRATS IDLI VADAI........CAME WITH TASTY CHUTNEY....SAMBAR.....AND UNEXPECTED MILAKA PODI.........
Raj.....

Anonymous said...

I don't think Sekar answered any question in a straight forward manner. Whatever he speaks reflects his beliefs, views about politicians, the community, people.

He is not reflecting what people are thinking about.

Ella side la yum goal podarar. Stalin kku vaazhthu sonnadhu ellam seridhaan. padichavanga ippadithaan behave pannanum, panniyum irukkar.

ivar pechula ellaraiyum kutham solrar. corporation school kattinadhula oozhal nadandhu pochu nnu solrar. Nidhi odhukkum podhu idhaiyum ivar edhir parthu irukka vendum. Nidhi odhukkiyadhodu ivar velai mudindhu vittadhu endru ninaithu vittara?.

If MLA is just a accounts officer to the Govt. I guess Sekar does not have to do this.

I can understand most of what he is speaking. "Dhustargala kanda dhoora po" nngara policya nalla follow panrar.

Anonymous said...

Forgot to ask... Did they republish Devan's "Mythili" in Kizhakku Padhippagam?. When I asked last time they said it's not in stock.

Anonymous said...

இட்லி வடை இட்லி வடைன்னு ஒரு மான?ஸ்தன் இருந்தாரே அவர் எங்கப்பா........?

எதுக்குத் தான் பிராமன சாயத்தை இப்படி அள்ளி அள்ளி பூசிக்கிட்டு நிக்குதோ தெர்யலை ?


எனக்கு ஜெயேந்திரர் மேல் தக்கனூண்டு மரியாதை இருந்ததது சேரி இந்துக்களை சென்று பார்த்ததற்காக, ஆனால் அரசியல் கட்சியில் சேர ”பெரியவா” ரெக்மெண்ட் பண்ணினா என்ற போது அட கடவுளே என்றிருந்தது.


மக்கள் சேவை : ஸ்கூல் அட்மிஸனுக்கு லெட்டர் குடுப்பாராம் ?

அமைச்சர் இல்லாத எந்தக் கட்சி எம்.எல்.ஏ வை கூப்பிட்டாலும் இப்படி ஓடி வந்து பேட்டி தருவாங்க .... ஏன்னா அவங்களுக்கு பொழுது போகனுமில்ல....

அதனால இத ஒரு பெரிய விடயமா பார்க்க வேண்டாம்.

க்ருஷ்ண பாகவதர் இந்த பேட்டிய விட உங்க கமெண்ட் ரொம்ப அல்பமா இருக்கு.

kothandapani said...

well planned and executed publicirty to S Ve Sekar Keep it up

Anonymous said...

Mostly he seems like honest. but he wants to justify all his acts, at the same time he can blame others. He should know others will also have reasons to justify. you should not think you are the only person is honest in this politics.

kothandapani said...

well planned and executed publicity to S Ve Sekar. Never thought idly vadai will also fall in line with other media keep it up

momentumcalls said...

My small contribution.Please you can use this.If you want.I claim no credits.

http://www.youtube.com/view_play_list?p=86F584453ED7BDCC

இனியவன் said...

அ.தி.மு.க எனக்கு சீட் கொடுத்தது அனால் மயிலாப்பூர் மக்கள் எனக்கு ஒட்டு போட்டார்கள் - மயிலாப்பூர் மக்கள் உங்கள் ஒரு நபருக்காக ஒட்டு போட்டார்கள் என்றால் 1989 லேயே நீங்கள் MLA ஆகி இருக்க வேண்டுமே..?
அந்த தேர்தலில் நீங்கள் வாங்கிய ஒட்டு மொத்தம் 1600 + தானே..ஆகா இந்த வழ வழ கொழ கொழ பதில்களை விட்டு விட்டு வேறு காரங்களை கூறி இருக்கலாம் ...காதர்-துபாய்

Palanivel Raj G said...

Same S.Ve. Shekar was not able to win in the mylapore constituency when he contested the election as an independent... If the people voted for him he could've won the election without AIADMK symbol... His interview show he is a opportunist in the beginning of the interview when he criticize the person who ask him a question.. If he has guts let him face me individualy for an interview.. I will bring his original face infront of the people.. Let me put a challenge for him.. If he has guts let him contest the election alone this time and let him win the election.. Iam sure he wont get majority.... I request IV not to entertain these kind of comedians in you site...

kasiviswanathan said...

i have already given a comment in the name as heatexchanger,pressurevessels sorry for that now created a new blog in my name, as he said speaking straightly. its a nice interview. previously you have posted his email id and address would pl. post it again..

ராஜரத்தினம் said...

கட்சியின் கொள்கைக்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும் என்று சொன்னதுதான் அவரின் உச்சபட்ச காமெடி. தயாநிதிமாறனையும், ஸ்டாலினையும் திருமணத்திற்கு அழைத்தாரே? ஸ்டாலினை சட்டமன்றத்தில் புகழ்ந்தாரே? இதுதான் அதிமுகவின் கொள்கை என்றுதான் அப்படி செய்தாரோ? அப்புறம் திமுகவிற்கு ஜால்ரா அடித்தகாலத்தில் இது போல திமுக கொள்கைக்கு ஏற்ப ஜெயலலிதாவையோ இல்லை அதிமுகவையோ புகழவில்லையே அது ஏன்?

Anonymous said...

இட்லி வடை மிக்க நன்றி ஃபார் சேகரி பேட்டிக்கு. இது நல்ல பேட்டிதான். ஆனால் முழுமையான பேட்டி என்று சொல்ல முடியவில்லை. சேகரது பதில்களில் ஒருவித சார்புத் தன்மை வெளிப்படுகிறது. அவரது தைரியத்தையும், துணிச்சலையும் பாராட்டுகிறேன். குறிப்பாக முற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அவர் குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் சில பதில்கள் - டி.வி. கொடுக்காததால் பிராமணர்கள் ஓட்டு தி.மு.கவிற்குக் கிடைக்காது. பிராமணர்களினால் தான் சில தொகுதிகளில் தி.மு.க தோற்றது என்பது சரியான வாதமாகப் படவில்லை. அது உண்மையாக (ஒருவேளை) இருந்தாலும் அது குறிப்பிட்ட சமுதாயத்தினர் மேல் மேலும் வெறுப்பையே வளர்க்கும்.

சரி ஒரு கேள்வி, ஒருவன் பிராமண விசுவாசியாய், பிராமணர்களுக்கு நல்லது மட்டும் செய்பவனாக இருந்தால் அவன் செய்யும் மற்ற அடாத செயல்களை மன்னித்து விடலாமா? அது நியாயமா? சேகர் சில அரசியல் மைந்தர்களைப் பற்றி பெருமையாக கூறும் போது அப்படித்தான் இருந்தது. சாரி, சேகர்.

ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது. சேகருக்கு வேறு வழியில்லை. அதனால் காங்கிரஸில் இணைந்திருக்கிறார். ஆனால் காங்கிரஸில் இணைந்ததில் அவருக்கு தடுமாற்றமிருப்பதும் தெரிய வருகிறது. அதுவும் தி.மு.க சேர்த்துக் கொள்ளாததினாலேயே காங்கிரஸிற்கு வர நேர்ந்தது என்பதும் புரிகிறது.

ஒன்று மட்டும் உண்மை. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். காங்கிரஸிலும் சேகர் வெகு நாட்கள் நீடித்திருக்க மாட்டார். அங்கே இருக்கும் கோஷ்டி அரசியலால் அவர் சீக்கிரமே வெளியேறி விடுவார். அல்லது வெளியேற்றப்படுவார்.

கொஞ்ச காலம் பொறுத்திருங்கள் சேகர். நரேந்திர மோடி பா.ஜ.க தலைமை ஏற்கும் போது எல்லாம் விரைவில் மாறும். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.

நம்பிக்கையுடன்
அநங்கன்

சாமக்கோடங்கி said...

//If he has guts let him face me individualy for an interview.. //

சூப்பர் பழனிவேல் ராஜன் அவர்களே..

உங்களிடம் கேள்விகள் இருக்குமாயின், இட்லி வடை அவர்களை இந்தப் பேட்டியினை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

அவருக்கு பதில் சொல்ல எந்த பயமும் இல்லை என்று சொல்கிறாரே.. பெட்டி எடுத்துதான் பார்ப்போமே..

Anonymous said...

மிஸ்டர் சேகர், உங்கள் துணிச்சலுக்கு ஒரு சபாஷ்.

முதலில் எஸ்.வி.சேகர்தான் நையாண்டி அநங்கனாக இருக்குமோ என்று நினைத்தேன். அப்புறம் கிருஷ்ண பாகவதரும் அநங்கனும் ஒரே ஆசாமி என்று கருதினேன். இப்போது ’இட்லிவடை’, ‘அநங்கன்’, ’கிருஷ்ண பாகவதர்’ எல்லோருமே ஒரே ஆள்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது எனக்கு.

ஆனாலும் ஒரு குழப்பம். சேகரை பேட்டியெடுத்த ’பத்ரி’தான் இட்லி வடையா? இல்லை, ’பா.ராகவன்’ என்பவர்தான் அந்த ஆசாமியா? ஒருவேளை ‘சரக்கு மாஸ்டர்’ என்று ’பெருமையாக’க் கூறப்படும் ‘நிழல்கள்’ பிரசன்னவோ? குழப்பமாக இருக்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. ’கிழக்கு’க்கும் ’இட்லிவடை’க்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதை விரைவில் கண்டு பிடிக்கிறேன். கிழக்கு விரைவில் வெளுக்கும்.

மகேஷ்

மயிலை சுரேஷ் said...

சேகர் ஒரு பெரிய சந்தர்ப்பவாதி. க்ருஷ்ண பாகவதர் எழுதியதைப் போல திமுக வாசலில் ரொம்ப நாள் காத்திருந்து ஒன்றும் விழாததாலேயே இப்ப காங்கிரஸுக்கு போயிருக்கிறார். சன் TV கலாநிதியை புகழாமல் இகழ்ந்திருந்தால் இவரது business dealing with that TV would have suffered.அழகிரியை புகழ்ந்தது அவர் கோவிலுக்கு போகிறார் என்பதாலாம். சுத்த பேத்தல். அவரை இகழ்ந்து பேசிவிட்டு மதுரைப் பக்கம் இவர் போக முடியுமா! டப்பா கழண்டுவிடும். சோனியா பற்றிய கேள்விக்கு திணறிப் போய் உளறல். அப்ப ராகுல பத்தி என்ன சொல்லுவீங்க என்று கேட்டது முட்டாள்தனத்தின் உச்சக் கட்டம்.
முன்பு ப்ராமணர்களுக்கு எவ்வளவோ பேர் அல்வா கொடுக்க முயன்றிருக்கிறார்கள். பலிக்கவில்லை! ஏன்னா அவங்க உஷார் பார்ட்டி. சேகரோட அல்வா புளிச்சு போனது. பலிக்கவே பலிக்காது. காங்கிரஸில் வேஷ்ட்டியை கிழித்து அனுப்பின பின் மூக்கில் ப்ளாஸ்த்திரியுடன் BJP வாசலுக்குதான் போவார். அது அவருக்கே தெரியும். அதனால்தான் அந்த கட்சியின் அனுதாபியாகத்தான் முதலில் இருந்தேன் என்று இப்போதே அச்சாரம் போட்டிருக்கிறார்.

Anonymous said...

Sekar talks about "multiple bosses" (sakti) in ADMK. Will he please tell us how many bosses (athikAra maiyam) are there in DMK?

Anonymous said...

S. Ve. Sekar also a Politician. He so far marketed Stage dramas; Now he is trying to be elected as MLA again. Will he be cliked by people of his own constituency? Let's wait and see.

Black said...

I see idlyvadai has added many questions in this interview. S.Ve Shekar interview shows he had not learnt politics yet. His explanation on freedom of speech in congress is interesting. Because congress will easily say its his opinion and not congress party opinion.Karuna and Jaya become MLA and then went on to become chief minister as knew the job very well. I rate this interview as average one. this will definitely affect his political career.
All the best for your political career in different faction of congress.

Kalimiku Ganapathi said...

ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?

அல்லது

வாழும் காமராசர் பொன் ராதாகிருஷ்ணனா?

என்றால்,

பொன்ராதாவுக்கே வாக்களிப்பார்கள் தமிழர்கள். வாழ்க பாஜக.

Anonymous said...

சென்னை: சோனியாவை வசைபாடும் ஜெயலலிதாவுக்கு எஸ் வி சேகர் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லலாமா? என்று கண்டனம் தெரிவித்துள்ளது இளைஞர் காங்கிரஸ்.

seshansrini said...

Sekhar was boasting that he had never removed his poonol in cinema, by saying that he had told the directors to ask Rajini to remove his Rudhraksham.

If anyone had watched the movie manal kayiru, they will know that Sekhar did compromised. Or may be his "upanayanam" took place after this movie!!!!!!!!!!!!!!

Better Sekhar think before saying something.

silverhawks said...

Interview really nice.

similarly take interview with karthick and sarathkumar.

Idlivadai--wikileaks alavuku world famous aavadthu nichayam.