பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 27, 2011

இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி - ஜோதிட ரீதியாக ஒரு ஆய்வு.

இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி - ஜோதிட ரீதியாக ஒரு ஆய்வு வழக்கம் போல

இதற்குண்டான Parameters:
இந்திய அணியின் தலைவர் - திரு.தோணியின் ஜாதகம்
இங்கிலாந்து அணியின் தலைவர் - திரு.ஆண்ட்ரூ ஸ்டாராஸ் ஜாதகம்
போட்டி நடைபெறும் நாளன்றைய டாஸ் போடும் நேர ஜாதகம்

(எதற்காக அணித்தலைவர் ஜாதகத்தை எடுத்திருக்கிறேன் என்றால் முற்காலத்திலிருந்தே போரின் போது அந்த படையின் தளபதியின் ஜாதகத்தை வைத்துதான் ஆராய்ச்சி செய்வர். ஆதாரம்: மஹாபாரதம்)

நமது தோணிக்கு ராகு திசையில் புதன் புக்தி. திரு.ஆண்ட்ரூவுக்கு கேது திசையில் சுக்ர புக்தி. போட்டி ஆரம்பிக்கும் நேரத்திற்குரிய லக்னம் மிதுனம்.

தோணியின் லக்னாதிபதி புதன். ஆண்ட்ரூவின் லக்னாதிபதி செவ்வாய். இன்றைய போட்டி ஆரம்பிக்கும் நேர ஜாதகத்தில் இருவருடைய லக்னாதிபதிகளுமே லக்னத்திற்கு 9ம் இடத்தில் உள்ளனர்(பாவக சக்கரத்திலும்). இருவருடைய ஜாதகத்திலுமே இருவரின் பாதகஸ்தானாதிபதிகள் கெட்ட இடத்தினில் அமர்ந்திருக்கின்றனர். போட்டி நடைபெறும் ஜாதகத்திலும் பாதகஸ்தானாதிபதி 4ம் இடத்தில் இருக்கிறார். நல்லது. அடுத்ததாக திசை தோணியின் திசை அவருக்கு செல்வாக்கை கூட்டக் கூடிய திசையாக இருக்கிறது. அதே வேளையில் ஆண்ட்ரூவுக்கு ஞானத்தை கொடுக்க கூடிய திசையாக இருக்கின்றது.
போட்டி ஆரம்பிக்கும் ஜாதகத்திலும் இந்த் போட்டியானது ஞானத்தை இருவருக்குமே கொடுக்கும் போட்டியாக படிப்பினையை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இருவரின் ஜாதகத்திலும் நமக்கு வெற்றியை கணிக்க உதவுவது இருவரின் லக்னாதிபதிகள்தான். தோணியின் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் ஆட்சி. ஆண்ட்ரூவின் ஜாதகத்தில் லக்னாதிபதி நீசம். இதேபோல் ஆராய்ச்சிகள் செய்து போட்டியின் முடிவு.

இந்தியாவா? இங்கிலாந்தா?. இங்கிலாந்தை விட இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம். வாய்ப்பு அதிகம் என்றாலும் போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.- பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
இணையம்: http://kuppuastro.in/
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/


போட்டி முடிந்த பின் யார் ஜெயித்தார்கள் என்று எ.அ.பாலா கணிப்பார் பொறுத்திருங்கள்.

19 Comments:

Anonymous said...

ஜாதகம் கணிப்பவரோட கட்டம் சரியா இல்லைன்னா அவரோட அன்றைய கணிப்பு சரியா இருக்குமான்னு கணிச்சுச் சொல்லுங்க.

kothandapani said...

andavaa crickettukkum josiama
thangalai

Anonymous said...

யோவ் டுபாக்கூர்!
மேட்ச் பாத்துக்கிட்டுதான் இருக்கேன். neck to Neck ஆ! இங்கிலாந்த் டென்ஷனே இல்லாம ஜெயிக்கப் போறாங்க.
இருடி! வந்து கவனிச்சுக்கறேன். கையில சிக்க மாட்டிங்கைறீயளே!

Anonymous said...

தோனியின் லக்னாதிபதி தோனி உச்சா போனபோது நீச்சமடைந்து போனாரா! இந்தியா தோற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி போலி ஜோசியம் சொல்லி பொழப்பு நடத்தறதுக்கு பதில் நீர் சிரைக்கப் போயிருக்கலாம். IP420ல் உம்மை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தள்ளினால்தான் கிரிக்கெட் ரஸிகர்கள் வேதனை அடங்கும்

ஜனகராஜ் said...

யோவ் ஃப்ராடு ஜோசியரே!

எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கா மாதிரி ஒரு ஜாதகம் எழுதி தாங்களேன். நான் சைட்டு அடிக்கற பொண்ணுக்கும் செவ்வா தோஷமாம்.

ஜனகராஜ்

Anonymous said...

match tied

Anonymous said...

யோவ் ஃப்ராடு ஜோசியரே!
match tied.IDLY PLS AVOID THIS POST IN NEXT MATCHS

Anonymous said...

/*
யோவ் டுபாக்கூர்!
மேட்ச் பாத்துக்கிட்டுதான் இருக்கேன். neck to Neck ஆ! இங்கிலாந்த் டென்ஷனே இல்லாம ஜெயிக்கப் போறாங்க.
இருடி! வந்து கவனிச்சுக்கறேன். கையில சிக்க மாட்டிங்கைறீயளே!
*/

யோவ் அனானி உனக்கு உண்மையிலேயே தில்லிருந்தா ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் நாட்டில் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுட்டு இங்க வந்து அந்தாள அடிக்கணும் பிடிக்கணும்னு சொல்ற. உனக்கும் வேற வேலை இல்லை, அந்தாளுக்கும் வேற வேலை இல்லை, இட்லிவடைக்கும் வேற வேலை இல்லை.

Anonymous said...

/*
யோவ் டுபாக்கூர்!
மேட்ச் பாத்துக்கிட்டுதான் இருக்கேன். neck to Neck ஆ! இங்கிலாந்த் டென்ஷனே இல்லாம ஜெயிக்கப் போறாங்க.
இருடி! வந்து கவனிச்சுக்கறேன். கையில சிக்க மாட்டிங்கைறீயளே!
*/

யோவ் அனானி உனக்கு உண்மையிலேயே தில்லிருந்தா ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் நாட்டில் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுட்டு இங்க வந்து அந்தாள அடிக்கணும் பிடிக்கணும்னு சொல்ற. உனக்கும் வேற வேலை இல்லை, அந்தாளுக்கும் வேற வேலை இல்லை, இட்லிவடைக்கும் வேற வேலை இல்லை.

Anonymous said...

இட்லிவடை உனக்கு இருக்குய்யா ஆப்பு கூடிய சீக்கிரமே...

Anonymous said...

டேய் ஜோஸ்யா வாடா வாடா உனக்கு இருக்கு மொத்து...

Nara said...
This comment has been removed by the author.
ரிஷபன்Meena said...

இட்லி வடையில் எழுதற விருந்தினர் யாருக்குமே நேரம் சரியில்லை. இந்த ஜோசியராவது ஒரு முறை இட்லி வடைக்க்ய் வருகிற விருந்தினர் ராசிய கணிச்சு சொல்லியிருக்கலாம்.

சோதிடத்தில எல்லாதையும் கணிக்க முடிந்து விட்டால் வாழ்க்கையில் சுவராஸ்யங்களை நாம் இழக்க வேண்டியிருக்கும்.

பாவம் ஜோஸியருக்கு நேரம் சரியில்லாட்டி யார் கிட்ட போய் கேட்பாரு !

Rajagopalan said...

The Astrology a great science in the past is being misused by many. about 99% of the josiyars have some basic knowledge or no knowledge. They gain importance from the people because of their foolishness. Idlivadai did a grave mistake by promoting one such half baked fraud.

It is high time the magazines and blogs stop such nonsense. Even if someone doesn't believe any of these psuedo josiar's predictions any negative predictions may disturb their thoughts. This is what these fraud josiars are counting on either for money or fame and importance. These people after gaining importance will try to go to the next level like Premananda.
Educated people should expose these frauds and also help others to overcome this Maya.

IdliVadai should take this very seriously and stop these kind of nonsense hereafter

Rajagopalan

Roaming Raman said...

அடடா நண்பர்களே!! ஒரு நகைச்சுவை, நையாண்டி என்றால் பரவா இல்லை!! எதற்காக தனிமனிதரை அனானி என்று கருப்பு முகமூடி அணிந்து கொண்டு தாக்க வேண்டும்? கவனிக்க - ஜோதிடர் புனைப் பெயரில் கூட எழுதவில்லை..மேலும் இக்கட்டுரை எந்தத் தனி மனிதரின் வாழ்வுக்குமான அறிவுரை அல்லது பரிகாரம் அல்லவே!! சம்பவங்களின் ஆர்வம் கூட்டப்பட்டிருக்கிறது அவ்வளவே!! அரசு விளம்பரம் வரா விட்டால் ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை இழப்பு ஏற்படும் என்று பயந்து, அரசுக்கு எதிரான செய்திகளைப் போடாத(மற்றும் உண்மைகளை கூறாத) பத்திரிக்கைகளுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதும் துணிச்சல் யாருக்காவது இருக்கிறதா? இட்லி வடை முதலிலேயே சொன்னது போல , யாரையும் தாக்கும் பின்னூட்டங்கள் வேண்டாமே!! ரோமிங் ராமன்

மஞ்சள் ஜட்டி said...

ஜோசியரே...ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் ஜாதகம் கிடைக்கலியா?? ஒங்க கணிப்பு ஓகே...மேட்ச் டிரா ஆயிட்டுது... அப்படியே மு.க & ஜே ஜாதகத்தை ஆராஞ்சி எலக்ஷன் கணிப்பு குடுங்களேன்??

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

/*
ஜோசியரே...ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் ஜாதகம் கிடைக்கலியா?? ஒங்க கணிப்பு ஓகே...மேட்ச் டிரா ஆயிட்டுது... அப்படியே மு.க & ஜே ஜாதகத்தை ஆராஞ்சி எலக்ஷன் கணிப்பு குடுங்களேன்??
*/

கட்டாயம் கணித்து கொடுப்பேன்.

Anonymous said...

மூத்திர சந்தில் போட்டு கும்மி எடுத்தாலும் நல்லவன்னு சொல்லிட்டாங்களே என்று மறுபடி புறப்படும் வடிவேலுக்கும் இந்த மானம் கெட்ட ஜோசியருக்கும் வித்யாசமே இல்லை. அடுத்த மேட்சுக்கு வாய தொறந்தா கிரிக்கெட் பாலை வச்சு திணிச்சிட வேண்டியதுதான். பாவிங்களா! கிரிக்கெட்டயாவது விட்டு வையுங்கையா!

kggouthaman said...

Neck to neck is the prediction.
And it is a TIE!!
Oh what a coincidence!!